Friday, January 2, 2009

வீழ்ந்தது கிளிநொச்சி மட்டுமல்ல தமிழினத் தலைவரும் தான்!

வீழ்ந்தது கிளிநொச்சி மட்டுமல்ல தமிழினத் தலைவரும் தான்!


ஈழத்தின் மீது சிறிலங்க இராணுவத்தின் தொடர் தாக்குதல், விமானங்களின் குண்டுமழை,கடற்ப்படைகளின் கவிழ்ப்புக் கண், அதற்கு இந்திய கடற்ப்படையின் ஒத்துழைப்பு. இந்திய உளவுத்துறையின் உதவி, இந்தியா,பாகிஸ்தான்,சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆயுதங்கள், இந்திய இராணுவ தொழில் நுட்பவியலாளர்களின் ராடார் மற்றும் அதி நவீன கருவிகளின் கழுகுக் கண், இந்திய இராணுவ தொழில் நுட்ப வல்லுனர்களின் மேலான ஆலோசனைகள். எப்படித்தாக்குவது, எப்படி முறியடிப்பது, இந்திய இராணுவ அதிகாரிகளின் சிங்கள இராணுவத் திறன் ஆய்வு, இலக்கு நிர்ணயம்(Target), நேர கால அவதானிப்பு(Timeframe)..................,

இதற்கிடையே இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தின் முதல் அமைச்சர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் இந்திய மத்திய அரசுக்கான அறைகூவல்(ஜெயலலிதா மற்றும் தா.பாண்டியன் உதிர்த்த முத்துக்களைத் தொடர்ந்து தமிழ் சொத்து என்னுடையது என்ற நோக்குடன்), இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும், இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி செய்யக் கூடாது, அப்படி செய்தால் தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள்,

தமிழினத் தலைவர் விதித்த கெடு முடிவதற்குள், மத்திய அரசின் மன நிலை தெரிவதற்குள், முதல் ராஜினாமா கடிதம் கனிமொழி கருணாநிதியிடம் இருந்து பெற்றுக் கொள்ளப் படுகிறது. கனிமொழியோடு பதவி ஏற்றுக் கொண்ட இன்னொரு ராஜ்யசபா எம்பியான திருச்சி சிவாவிடமிருந்து வாங்கப் படவில்லை, இரண்டு மூன்று நாட்கள் கனிமொழி ராஜினாமாவை பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. தமிழினத் தலைவரின் மகளுக்கு எவ்வளவு தியாக உணர்வு, சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார், மற்ற திமுக எம்பிக்கள் பின்னர் ராஜினாமா கடிதம் கொடுத்தது கடலில் கரைத்த பெருங்காயம், இதற்கிடையில் இலங்கை அரசின் ஆலோசகர் (மகிந்தையின் தம்பி) தில்லி வருகை, சந்திப்புகள்


தமிழினத் தலைவர் விதித்த கெடு முடிகிறது(அதாவது நீலிக் கண்ணீர் விட்டாயிற்று). அப்போது கண் துடைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லவா, அதற்காக வந்தவர்தான் பிரணாப் முகர்ஜி, வந்தவர் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அதற்குப் பரிகாரமாக மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம், மத்திய அரசுக்கு எங்களால் எந்த ஆபத்தும் வராது போன்ற உத்திரவாதங்களை தமிழினத் தலைவரிடமிருந்து பெற்றுச் செல்கிறார், மற்ற கட்சித் தலைவர்களை கலந்தாலோசிக்கவில்லை, தமிழ் இன உணர்வாளர்களின் நெருக்கடி தொடர்கிறது, தமிழினத் தலைவர் ஈழத்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவோம் என்கிறார், வழங்கப்பட்டது, அதில் கொஞ்சம் இலங்கை இராணுவத்தால் சேதப் படுத்தப் பட்டது. மனிதச் சங்கிலி என்றார், செய்தாகிவிட்டது, ஊருக்கு தந்தியடிங்கோ டாக்டருக்கு சொல்லிவிடுங்கோ அப்படின்னார், செய்தாகிவிட்டது.

இதற்கிடையில் இலங்கை சிங்கள அரசின் சனாதிபதி மகிந்த இராசபக்ஷே இந்தியா வருகிறார். பிரதமரைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது, இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி இந்தியப் பிரதமர் என்னிடம் எதுவும் பேசவில்லை என்று வெளிப்படையான உண்மையைச் சொல்கிறார்.


பாழாய்ப் போன தமிழ் உணர்வாளர்கள் தமிழினத் தலைவரைக் கேள்வி மேல் கேள்வி கேட்க, மீண்டும் உணர்வு பெருக்கெடுத்து கண்கள் பனித்து அனைத்துக் கட்சிகளுக்கு அழைப்பு, போர்வைகளைப் போத்திக் கொண்டு நடுவண் அமைச்சரை சந்திக்க சிறு குறு கட்சித் தலைவர்களுடன் தில்லி பயணம், நடுவண் அமைச்சரை சந்தித்து பேசுகிறார், என்ன பேசினார்? எதற்குப் பேசினார்? என்ன நடந்தது?


தமிழ் உணர்வாளர்களின் தொடர் நெருக்கடியால், இந்த சந்திப்பின் போது தமிழினத் தலைவர் பிரதம அமைச்சரிடம் வைத்த பிரதான கோரிக்கை, இந்திய வெளியுறவு அமைச்சர் பெரியவர் பிரணாப் முகர்ஜியை சிங்கள அரசாங்கத்திடன் தூதாக அனுப்ப வேண்டும் என்பது தான். என்ன அஜெண்டா என்பது அரசியல் வல்லுனர்களுக்கே வெளிச்சம். அஜெண்டா இல்லாமல் தூது செல்ல விரும்பாமல், பதிலும் சொல்லாமல் மழுப்பி விட்டார் பிரணாப் முகர்ஜி, இடையே ஓர் ஆள் விட்டார் தமிழினத் தலைவர், மசியவில்லை, அவர் என்ன சாதாரண ஆளா? இந்திரா அமைச்சரவையிலேயே இருந்தவராயிற்றே? நான்கு பிரதமர்களைப் பார்த்தவராயிற்றே! இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையே இவர்தானே ரிசர்வ் வங்கி கவர்னர் ஆக்கினார். ஆக, தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் கோரிக்கைகள் யாவும் கண்டுகொள்ளப் படவில்லை. பதில் இல்லாமல் நிராகரிக்கப் பட்டன. இவரின் குரலுக்கு, கோரிக்கைக்கு மதிப்பில்லை என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?

கிளிநொச்சி வீழும் வரை பொறுத்திருங்கள் தமிழினத் தலைவரே என்று பிரணாப் மொகர்ஜி சொல்லி இருப்பாரோ? யார் கண்டார்?

வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ஆனால் தமிழினத் தலைவர் பட்டம்!

46 கருத்துக்கள்:

Namakkal Shibi said...

:(

தேவன் said...

நெஞ்சை நோக்கி வரும் கத்தி ஜெயலலிதா என்றால், முதுகை நோக்கிவரும் கத்தி கலைஞ்ஞர். பதவி் ஆசை எந்தக்கேவலத்தையும் செய்விக்கும் கொடியநோய் என்பதை உலகம் கலைஞ்ஞர்வாயி்லாக அறிந்து கொள்ளட்டும்.

பின்னூட்டம் பெரியசாமி.. said...

தமிழீழம் மலர்வதை தமிழினத் தலைவர் எனச் சொல்லப் படுபவர் தனது கபட அரசியலால் தள்ளிப் போட்டுள்ளார். அதனைத் தடுக்க எத்தனை நயவஞ்சகர்கள் வந்தாலும் முடியாது.
நிச்சயம் ஒருநாள் தமிழீழம் மலரத்தான் போகிறது.
அதனைப் பார்க்க தமிழினத் தலைவர் என்று சொல்லப் படுபவர் நெடுநாள்கள் வாழ்ந்து, பார்த்து மகிழ(?) வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Anonymous said...

// தேவன் said...
நெஞ்சை நோக்கி வரும் கத்தி ஜெயலலிதா என்றால், முதுகை நோக்கிவரும் கத்தி கலைஞ்ஞர். பதவி் ஆசை எந்தக்கேவலத்தையும் செய்விக்கும் கொடியநோய் என்பதை உலகம் கலைஞ்ஞர்வாயி்லாக அறிந்து கொள்ளட்டும்.\\

யூ மீன் எதிரி அண்ட் துரோகி???

யூ ஆர் கரெக்ட்!

பாலு மணிமாறன் said...

It is very, very sad day for World Tamils. But it was expected when we came to know that many countries of the world are supporting Srilankan army (Including India).

In a way, it has put Srilanka in a delicate psition too. NOW the Srilanakan governemnt has to show the world that they really care about Srilankan Tamils by providing and treating them in equal terms.

But they can't wipe off Tigers and Tigers may restore to different strategies. If i am not wrong, Tigers know this will be the fate as on Today'situation and have put up the resistance as thier pride won't let them go without a fight.

From now on, world will watch 3 things keenly:

1. What Srilankan government is going to do for Srilankan Tamils?

2. What Tigers will do?

3. What india and its politicians will do?

But, shame on you Kalinjar - you have let down your 'rathathin rathangal"

கோவி.கண்ணன் said...

//வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ஆனால் தமிழினத் தலைவர் பட்டம்!//

தமிழினத் தலைவர் பட்டம் தானே அதை காங்கிரஸ் "கை"த்த(ட்)டிகள் கொடுப்பார்கள்

ஜோதிபாரதி said...

//
Namakkal Shibi said...
:(
//


வருகைக்கு நன்றி திரு நாமக்கல் சிபி!

ஜோதிபாரதி said...

//தேவன் said...
நெஞ்சை நோக்கி வரும் கத்தி ஜெயலலிதா என்றால், முதுகை நோக்கிவரும் கத்தி கலைஞ்ஞர். பதவி் ஆசை எந்தக்கேவலத்தையும் செய்விக்கும் கொடியநோய் என்பதை உலகம் கலைஞ்ஞர்வாயி்லாக அறிந்து கொள்ளட்டும்.//


தேவன், தாங்கள் சொல்வது மிகச்சரியான வாக்கு! புரிந்து கொண்டு தமிழக மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.
புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஜோதிபாரதி said...

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
தமிழீழம் மலர்வதை தமிழினத் தலைவர் எனச் சொல்லப் படுபவர் தனது கபட அரசியலால் தள்ளிப் போட்டுள்ளார். அதனைத் தடுக்க எத்தனை நயவஞ்சகர்கள் வந்தாலும் முடியாது.
நிச்சயம் ஒருநாள் தமிழீழம் மலரத்தான் போகிறது.
அதனைப் பார்க்க தமிழினத் தலைவர் என்று சொல்லப் படுபவர் நெடுநாள்கள் வாழ்ந்து, பார்த்து மகிழ(?) வேண்டும் என வாழ்த்துகிறேன்.//

தங்கள் நம்பிக்கை போல் எனக்கும் நம்பிக்கை உண்டு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பின்னூட்டம் பெரியசாமி.

ஜோதிபாரதி said...

//Anonymous said...
// தேவன் said...
நெஞ்சை நோக்கி வரும் கத்தி ஜெயலலிதா என்றால், முதுகை நோக்கிவரும் கத்தி கலைஞ்ஞர். பதவி் ஆசை எந்தக்கேவலத்தையும் செய்விக்கும் கொடியநோய் என்பதை உலகம் கலைஞ்ஞர்வாயி்லாக அறிந்து கொள்ளட்டும்.\\

யூ மீன் எதிரி அண்ட் துரோகி???

யூ ஆர் கரெக்ட்!
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பெயரிலி.

ஓர்மைகள் said...

ஆமாம் உண்மைதான் கருணாநிதிக்கும் ராமதாசுக்கும் இந்த துரோகத்தில் சம அளவு பங்குண்டு.
http://mathilukal.blogspot.com/2009/01/blog-post_02.html

ஜோதிபாரதி said...

//பாலு மணிமாறன் said...
It is very, very sad day for World Tamils. But it was expected when we came to know that many countries of the world are supporting Srilankan army (Including India).

In a way, it has put Srilanka in a delicate psition too. NOW the Srilanakan governemnt has to show the world that they really care about Srilankan Tamils by providing and treating them in equal terms.

But they can't wipe off Tigers and Tigers may restore to different strategies. If i am not wrong, Tigers know this will be the fate as on Today'situation and have put up the resistance as thier pride won't let them go without a fight.

From now on, world will watch 3 things keenly:

1. What Srilankan government is going to do for Srilankan Tamils?

2. What Tigers will do?

3. What india and its politicians will do?

But, shame on you Kalinjar - you have let down your 'rathathin rathangal"
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பாலு மணிமாறன்!
அனைத்துலக சமூகத்துக்கு, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை சம மாக நடத்திக் காட்ட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே!
எனென்றால் அனைத்துலக சமூகத்து பார்வையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரையும் வன்னி பகுதியிலிருந்து வெளியேற்றியது இதே அரசுதான். அதை எந்த அனைத்துலக நாடும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.(இந்தியாவைக் கணக்கில் சேர்க்க வேண்டியதில்லை, இருந்தாலும் இந்தியா உட்பட). தொடர்ந்து இலங்கை அரசை ஆதரித்து அங்கீகரித்துக் கொண்டுதான் இருந்தன. அவர்களின் வெற்றிக் களிப்பும், வாண வேடிக்கைகளும், சிங்கக்(சிங்களக்) கொடி சேனைகளின் அணிவகுப்பும் எந்தனை நாளைக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். கைத்தாச்சியா விட்ட தமிழகத் எம்பிக்கள் மற்றும் அவர்களின் தலைவர்களை நினைத்தால், ஆற்றாமையும், கோபமும் தான் கொப்பளிக்கிறது. என்ன செய்வது?

ஜோதிபாரதி said...

// கோவி.கண்ணன் said...
//வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ஆனால் தமிழினத் தலைவர் பட்டம்!//

தமிழினத் தலைவர் பட்டம் தானே அதை காங்கிரஸ் "கை"த்த(ட்)டிகள் கொடுப்பார்கள்
//

இனி ஒட்டாத பட்டத்தை ஒட்டி வைத்துக் கொள்வதில் ஆனந்தம் இருக்காது. காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் துடைக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. தொடர்ந்து எதாவது கழுதை சவாரி செய்து வேண்டுமானால் பிழைத்துக் கொள்ளலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.கோவி.

SanJaiGan:-Dhi said...

என்ன ஜோதி சார் இது?.. நிகழ்வுகளின் அடிப்படையில் புதிய அலசல் பதிவாக இருக்கும் என்று வந்தேன். நடந்த நிகழ்வுகளை மட்டும் சுருக்கமாக பதிவு செய்து ஏமாத்திட்டிங்களே.. :(

...கோவியாரே.. ஏன் இந்த கொலை வேறி?.. ஏன் பொதுவாக காங்கிரஸ்காரன் என சொல்றிங்க? தமிழினத் தலைவர் பட்டத்தக் கொடுத்த அல்லக் கைகளை தைரியம் இருந்தா திட்ட வேண்டியது தானே.. :) அன்றைய அல்லக் கைகள் எல்லாம் இன்றைய யோக்கிய சீலர்கள். தமிழினத் தலைவர் பட்ட்ம் கொடுத்த கும்பலுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கைத்த(ட்)டிகளா? :)) நல்லா சோக்கடிக்கிரிங்க போங்க.. :)

இப்போ எல்லாம் பார்ப்பனர்கள போரடிச்சிட்டாங்க போல.. காங்கிரஸ்காரங்களை புடிச்சிக்கிட்டிங்க.. புது ட்ரெண்ட்? :))
நடத்துங்க ந்டத்துங்க.. :))

ஜோதிபாரதி said...

//ஓர்மைகள் said...
ஆமாம் உண்மைதான் கருணாநிதிக்கும் ராமதாசுக்கும் இந்த துரோகத்தில் சம அளவு பங்குண்டு.
http://mathilukal.blogspot.com/2009/01/blog-post_02.html
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீங்கள் சொல்வது சரிதான்!!
உங்கள் கட்டுரையையும் படித்தேன்.

ஜோதிபாரதி said...

// SanJaiGan:-Dhi said...
என்ன ஜோதி சார் இது?.. நிகழ்வுகளின் அடிப்படையில் புதிய அலசல் பதிவாக இருக்கும் என்று வந்தேன். நடந்த நிகழ்வுகளை மட்டும் சுருக்கமாக பதிவு செய்து ஏமாத்திட்டிங்களே.. :(

...கோவியாரே.. ஏன் இந்த கொலை வேறி?.. ஏன் பொதுவாக காங்கிரஸ்காரன் என சொல்றிங்க? தமிழினத் தலைவர் பட்டத்தக் கொடுத்த அல்லக் கைகளை தைரியம் இருந்தா திட்ட வேண்டியது தானே.. :) அன்றைய அல்லக் கைகள் எல்லாம் இன்றைய யோக்கிய சீலர்கள். தமிழினத் தலைவர் பட்ட்ம் கொடுத்த கும்பலுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கைத்த(ட்)டிகளா? :)) நல்லா சோக்கடிக்கிரிங்க போங்க.. :)

இப்போ எல்லாம் பார்ப்பனர்கள போரடிச்சிட்டாங்க போல.. காங்கிரஸ்காரங்களை புடிச்சிக்கிட்டிங்க.. புது ட்ரெண்ட்? :))
நடத்துங்க ந்டத்துங்க.. :))
//

திரு.சஞ்சய்,
எழுதிய விடயங்களே திரும்பத் திரும்ப பக்கம் பக்கமாக எழுதுவது முதல் பத்தியையும், இறுதிப் பத்தியையும் படிப்பவர்களை ஊக்கப் படுத்துவதாகவே அமையும்.

மற்றபடி சிறிலங்காப் படை முழு மூச்சாக ஈழ மக்களின் மீது குண்டு வீசி அழித்துக்கொண்டு வன்னிப் பிரதேசம் நோக்கி முன்னேறியதில் இந்திய அரசின் பங்கு யாராலும் மறுக்க முடியாதது. இந்திய அரசு என்கிறபோது அது தற்போது காங்கிரஸ் அரசைக் குறிக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? அதனால் காங்கிரஸ் அரசின் மீது தமிழ் மக்கள் வெறுப்படைவதில் ஒன்றும் ஆச்சர்யம் இருக்க முடியாது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

கோவி.கண்ணன் said...

//இப்போ எல்லாம் பார்ப்பனர்கள போரடிச்சிட்டாங்க போல.. காங்கிரஸ்காரங்களை புடிச்சிக்கிட்டிங்க.. புது ட்ரெண்ட்? :))
நடத்துங்க ந்டத்துங்க.. :))
//

புது ட்ரெண்ட் எல்லாம் இல்லை, பார்பனர்கள் போரடித்தால் பண்ணையார்கள் கட்சி பெரியார் காலத்தில் இருந்தே இருக்கும் நடைமுறைதான் :)

Suresh Kumar said...

வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ஆனால் தமிழினத் தலைவர் பட்டம்! ///////


அது அப்பவே போயிடிச்சே

ஜோதிபாரதி said...

//Suresh Kumar said...
வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ஆனால் தமிழினத் தலைவர் பட்டம்! ///////


அது அப்பவே போயிடிச்சே//

ஆம்! நீங்கள் சொல்வது சரியே!
அது நம்மைப் போன்றவர்களுக்கு முன்னமே தெரிந்து விட்டது. இன்னும் தெரியாதவர்களுக்கு தெரிய வேண்டுமே! அதனால் தான் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. சுரேஷ் குமார்.

ஜோதிபாரதி said...

//புது ட்ரெண்ட் எல்லாம் இல்லை, பார்பனர்கள் போரடித்தால் பண்ணையார்கள் கட்சி பெரியார் காலத்தில் இருந்தே இருக்கும் நடைமுறைதான் :)//

பண்ணையார் என்றால் மூப்பனார், வாண்டையார் போன்றவர்களைத் தான் தஞ்சைப் பகுதியில் சொல்வார்கள், இவர்களைத் தவிர்த்தும் காங்கிரசில் பண்ணையார்கள் இருக்கிறார்களா?

Anonymous said...

இப்போ எல்லாம் பார்ப்பனர்கள போரடிச்சிட்டாங்க போல.. காங்கிரஸ்காரங்களை புடிச்சிக்கிட்டிங்க.. புது ட்ரெண்ட்? :))
நடத்துங்க ந்டத்துங்க.. :))


காங்கிரஸ்காரனும் பாப்பான் தானே, கூடுதலா இத்தாலி டிரேட் மார்க் இருக்கு. கவலைப்பட வேண்டாம்.

கோவி.கண்ணன் said...

//பண்ணையார் என்றால் மூப்பனார், வாண்டையார் போன்றவர்களைத் தான் தஞ்சைப் பகுதியில் சொல்வார்கள், இவர்களைத் தவிர்த்தும் காங்கிரசில் பண்ணையார்கள் இருக்கிறார்களா?//

ஸ்ரீலஸ்ரீ யூசூப் பால்ராஜ் ஐயங்காரிடம் கேட்டால் விளக்கமாக சொற்பொழிவு ஆற்றுவார்

Sen said...

As you said,the last line of the article will be a reality!!!I thought that India is just
helping SL army by giving radar's
and technical assistance..but that is not the case,India is directly involved in this genocide on SL tamils.The sad truth is that it is
doing so by using indian tamils tax money.

It condemns Israel on Gaza offensive,but involves itself directly on the genocide of tamils in its neighbouring country.
Ithu ellam entha ooru nyayam..???

Actually Manmohan Singh should also be brought in front of genocide war tribunal along with rajapakse and co.

Intha ulagathula nyayamnu onnu irukka...??

Anonymous said...

சோனியா அம்மையை யாரும் திட்டக்கூடாது. இந்தியா தலைமை இன்றி தவித்தபோது தன்னலம் கருதாது இந்தியாவை வழிநடத்த சம்மதிக்க வைக்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பட்ட துன்பம் சொல்லி மாளாது.
இன்று இந்தியா கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்பதற்கு அன்னையும் அவர்களது குடும்பமும் தான் காரணம்.

சிறிலங்காவின் வெற்றிக்கு சோனியா, தமிழ்நாடு காங்கிரஸ், நாரயணன், இந்து ராம் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானதாகும். அவர்களை தன்மானமுள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்ககூடாது. நன்றி செலுத்த வேண்டும்.


காங்கிரஸ் ஆதரவுப் பேரவை.

Anonymous said...

டோண்டு சார் ! வாங்க!!! கருத்துச் சொல்லுங்க.

ஜோதிபாரதி said...

//Anonymous said...
இப்போ எல்லாம் பார்ப்பனர்கள போரடிச்சிட்டாங்க போல.. காங்கிரஸ்காரங்களை புடிச்சிக்கிட்டிங்க.. புது ட்ரெண்ட்? :))
நடத்துங்க ந்டத்துங்க.. :))


காங்கிரஸ்காரனும் பாப்பான் தானே, கூடுதலா இத்தாலி டிரேட் மார்க் இருக்கு. கவலைப்பட வேண்டாம்//

பெயரிலி அவர்களே,
தங்களுடைய கருத்தில் ஒரு சில வார்த்தைகள் நான் பயன்படுத்த விரும்பாதது. யாரையும் புண் படுத்தியிருந்தால், வருந்துகிறேன்.

ஜோதிபாரதி said...

// கோவி.கண்ணன் said...
//பண்ணையார் என்றால் மூப்பனார், வாண்டையார் போன்றவர்களைத் தான் தஞ்சைப் பகுதியில் சொல்வார்கள், இவர்களைத் தவிர்த்தும் காங்கிரசில் பண்ணையார்கள் இருக்கிறார்களா?//

ஸ்ரீலஸ்ரீ யூசூப் பால்ராஜ் ஐயங்காரிடம் கேட்டால் விளக்கமாக சொற்பொழிவு ஆற்றுவார்//

கோவியாரே,
பதிவர் சந்திப்பிற்கு வந்த யோசப்பை கேட்டுவைத்திருக்கலாமே, விட்டாயிற்றே!

ஜோதிபாரதி said...

//Sen said...
As you said,the last line of the article will be a reality!!!I thought that India is just
helping SL army by giving radar's
and technical assistance..but that is not the case,India is directly involved in this genocide on SL tamils.The sad truth is that it is
doing so by using indian tamils tax money.

It condemns Israel on Gaza offensive,but involves itself directly on the genocide of tamils in its neighbouring country.
Ithu ellam entha ooru nyayam..???

Actually Manmohan Singh should also be brought in front of genocide war tribunal along with rajapakse and co.

Intha ulagathula nyayamnu onnu irukka...??//


நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியான கருத்து. உங்கள் ஆதங்கம் நியாயமானதே! அதே ஆதங்கம் எனக்கும் உண்டு. வருகைக்கும் கருத்துக்கும் ன்றி திரு சென்.

ஜோதிபாரதி said...

//Anonymous said...
சோனியா அம்மையை யாரும் திட்டக்கூடாது. இந்தியா தலைமை இன்றி தவித்தபோது தன்னலம் கருதாது இந்தியாவை வழிநடத்த சம்மதிக்க வைக்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பட்ட துன்பம் சொல்லி மாளாது.
இன்று இந்தியா கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்பதற்கு அன்னையும் அவர்களது குடும்பமும் தான் காரணம்.

சிறிலங்காவின் வெற்றிக்கு சோனியா, தமிழ்நாடு காங்கிரஸ், நாரயணன், இந்து ராம் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானதாகும். அவர்களை தன்மானமுள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்ககூடாது. நன்றி செலுத்த வேண்டும்.


காங்கிரஸ் ஆதரவுப் பேரவை.//

இதற்கு பெரிதாக நான் என்ன பதில் சொல்லிவிட முடியும்?

ஜோதிபாரதி said...

//Anonymous said...
டோண்டு சார் ! வாங்க!!! கருத்துச் சொல்லுங்க.//



இன்னொரு பதிவரை இங்கு அழைப்பது தேவை இல்லாதது.

திகழ்மிளிர் said...

வார்த்தைகள் இல்லை
மனத்தில் பயம் பரவுகிறது
நல்லது நடக்கவேண்டும்
தலைவர்கள் என்றும்
தமிழர்கள் என்றும் சொல்லும் பொழுது
தலைகுனிய வேண்டியுள்ளது
ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு

ஜோதிபாரதி said...

//திகழ்மிளிர் said...
வார்த்தைகள் இல்லை
மனத்தில் பயம் பரவுகிறது
நல்லது நடக்கவேண்டும்
தலைவர்கள் என்றும்
தமிழர்கள் என்றும் சொல்லும் பொழுது
தலைகுனிய வேண்டியுள்ளது
ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு//

அன்பின் திகழ்மிளிர்,
தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்!
வருகைக்கு நன்றி!!

Anonymous said...

தமிழர்கள் என்றும் சொல்லும் பொழுது
தலைகுனிய வேண்டியுள்ளது
ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு

J

ஸ்வாதி said...

ஈழத் தமிழரை பொறுத்தவரை ஒரே ஒரு எதிரி தான். அது இலங்கை அரசு. ஆனால் நிறையத் துரோகிகள் கலைஞர் உட்பட....

ஜோதிபாரதி said...

//ஸ்வாதி said...
ஈழத் தமிழரை பொறுத்தவரை ஒரே ஒரு எதிரி தான். அது இலங்கை அரசு. ஆனால் நிறையத் துரோகிகள் கலைஞர் உட்பட....
//

அன்பின் சகோதரி ஸ்வாதி,
தங்கள் பகிர்வுக்கு நன்றி, ஈழத்தமிழர்களின் துயர் தான் தொடர்ந்து வேதனையை அளிக்கிறது.

அதிரை ஜமால் said...

\\வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ஆனால் தமிழினத் தலைவர் பட்டம்! \\

நல்ல கேள்வி ...

அதிரை ஜமால் said...

பதிலும் அறிந்ததே ...

ஜோதிபாரதி said...

//அதிரை ஜமால் said...
\\வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ஆனால் தமிழினத் தலைவர் பட்டம்! \\

நல்ல கேள்வி ...//

//அதிரை ஜமால் said...
பதிலும் அறிந்ததே ...//




அன்பின் ஜமால்,
தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி! விடை இல்லாத மர்மங்கள் நிறைந்தது, அது நம் மறதியைப் பொருத்தது.

ஸ்ரீதர் said...

தமிழின துரோகிகளுக்கு காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.துரோகம் செய்த துரோகிகளின் மனசாட்சியே அவர்களை கொல்லும்.

Anonymous said...

தமிளினத்துரோகிகள் புலிதலைவரும் புலி கும்பலுமதான்

Anonymous said...

I don't know if Prabhakaran can be termed Tamil leader or whatever, but one thing,

"Prabakaran is the definition for huMAN within Tamils."

And then there are others that that walk around with the same anatomic formation, but nothing else:-) Like the anonymous buddy below. He rose against decades of discrimination against the hands of those that were full of inferiority complex.

"It's not that we die that matters, but how we die."

Among millions of Tamil men who swallow any sense of courage or righteousness, he made an army of fighters who an army 1000 times stronger couldn't defeat for 3 decades. The world knows that the Eelam Tamils are right, but as we see everywhere, when is 'right or wrong' the question. Justice is a illusional theory.

Anyhow, the so-called Indian Tamils, or leaders are just jokers, as quoted by Sinhalese. After all, Indian Tamils-ukku thaneerukke vakkilla.

So called Indian brothers and sisters are refusing the one biggest necessity of life to our first Indian, then Tamils Tamilnadu. Well, I guess we and the rest of the Indians know the guts of them. Andhra, Karnataka, Kerala... see how the politicians and general public view Tamilnadu. If the fishermen who have been dying in the hands of Sinhalese bullets had been anything other than Tamil, say a Telugu, Kannadiga or Malayalee, there would have been havoc. But of course, Tamil lives is nothing to all, including the upper class Tamils who don't suffer the daily grind of living in poverty and injustice. I am proud, that at least, the LTTE fought against injustice.

No, Karunanidhi has not fallen. The entire Tamil race has fallen. In the face of the rest and in the face of young Tamils.

How long injustice will win, I don't know. But time will come, to give answers. And who knows who is going to pay the price for it. I laugh at the congress party and DMK. By the way congress, you have asked for Prabhakaran after capture. I ask you, can you please gather and send all the LPKF members to Tamil Eelam? After all, you want revenge for one death. What about the death of 10,000 Eelam Tamils by the LPKF? What do you think is fair justice for Eelam Tamils?

-kajan

ஜோதிபாரதி said...

//ஸ்ரீதர் said...
தமிழின துரோகிகளுக்கு காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.துரோகம் செய்த துரோகிகளின் மனசாட்சியே அவர்களை கொல்லும்.//


ஏனிந்த சாபமெல்லாம் ஸ்ரீதர்?

ஜோதிபாரதி said...

//Anonymous said...
தமிளினத்துரோகிகள் புலிதலைவரும் புலி கும்பலுமதான்//



பெயரிலி அவர்கள் எதை நினைத்து சொல்கிறார் என்பதை விளக்காமல் மொட்டத் தாத்தா குட்டையில விழுத்தமாதிரி சொல்லிட்டு போறார். போகட்டும்.

ஜோதிபாரதி said...

//Anonymous said...
I don't know if Prabhakaran can be termed Tamil leader or whatever, but one thing,

"Prabakaran is the definition for huMAN within Tamils."

And then there are others that that walk around with the same anatomic formation, but nothing else:-) Like the anonymous buddy below. He rose against decades of discrimination against the hands of those that were full of inferiority complex.

"It's not that we die that matters, but how we die."

Among millions of Tamil men who swallow any sense of courage or righteousness, he made an army of fighters who an army 1000 times stronger couldn't defeat for 3 decades. The world knows that the Eelam Tamils are right, but as we see everywhere, when is 'right or wrong' the question. Justice is a illusional theory.

Anyhow, the so-called Indian Tamils, or leaders are just jokers, as quoted by Sinhalese. After all, Indian Tamils-ukku thaneerukke vakkilla.

So called Indian brothers and sisters are refusing the one biggest necessity of life to our first Indian, then Tamils Tamilnadu. Well, I guess we and the rest of the Indians know the guts of them. Andhra, Karnataka, Kerala... see how the politicians and general public view Tamilnadu. If the fishermen who have been dying in the hands of Sinhalese bullets had been anything other than Tamil, say a Telugu, Kannadiga or Malayalee, there would have been havoc. But of course, Tamil lives is nothing to all, including the upper class Tamils who don't suffer the daily grind of living in poverty and injustice. I am proud, that at least, the LTTE fought against injustice.

No, Karunanidhi has not fallen. The entire Tamil race has fallen. In the face of the rest and in the face of young Tamils.

How long injustice will win, I don't know. But time will come, to give answers. And who knows who is going to pay the price for it. I laugh at the congress party and DMK. By the way congress, you have asked for Prabhakaran after capture. I ask you, can you please gather and send all the LPKF members to Tamil Eelam? After all, you want revenge for one death. What about the death of 10,000 Eelam Tamils by the LPKF? What do you think is fair justice for Eelam Tamils?

-kajan//


திரு கஜன்,
தங்கள் வருகைக்கு நன்றி!
பல்வேறு கோணத்தில் அலசி தங்களுடைய மறுமொழியை பதிவு செய்திருக்கிறீர்கள்.
தரமான மேற்கோள்., சிந்தனை, உணர்வு.

அகரம்.அமுதா said...

\\வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! //

இந்த நம்பிக்கைக் கோட்டை என்னுள் சிலநாட்களாகவே தகர்ந்து வருகிறது. காலந்தான் பதில்சொல்லவேண்டும்

ஜோதிபாரதி said...

//அகரம்.அமுதா said...

\\வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! //

இந்த நம்பிக்கைக் கோட்டை என்னுள் சிலநாட்களாகவே தகர்ந்து வருகிறது. காலந்தான் பதில்சொல்லவேண்டும்//

திரு அகரம் அமுதா,
தங்களுடைய நிலை தான் எனக்கும்.
நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், மகிழ்ச்சி அளிக்கவில்லை.

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை