Friday, June 11, 2010
நாட்டு நடப்புகள் - விமர்சிக்கும் கொள்ளிமலை குப்பு
கொள்ளிமலை குப்பு :
விடுதலை ஆசிரியர்
கி.வீரமணியிடமிருந்து
விடுதலை பெற்ற
குடியரசு
......................................
செய்தி:கட்டடம் கட்ட உள்ளாட்சிகளின் அதிகாரம் அதிகரிப்பு
கொள்ளிமலை குப்பு : கட்டடம் கட்ட மட்டும் தானுங்ளா சாமி? கட்டம் கட்ட எதேனும் அதிகாரம் உண்டுங்ளா?
......................................
செய்தி:செம்மொழி மாநாடு:போலீசாருக்கு கோவையில் பயிற்சி
கொள்ளிமலை குப்பு : கோவையில் பயிற்சிங்ளா சாமி? இலங்கை போலீசாருக்கு கொடுத்த அதே எடத்துல கொடுங்க சாமியோவ்!. மாநாடே அவங்க செஞ்ச இனப்படுகொலைய மறைக்கத் தானுங்ளே!
......................................
செய்தி:செம்மொழி மாநாடு: மானிய விலையில் உணவு
கொள்ளிமலை குப்பு : ஓட்டு வாங்க மட்டும் பிரீயா பிரியாணி தர்றீங்களே சாமீ! இதுக்கு மட்டும் காசு கொடுக்கனுங்ளா! புரியலீங்ளே!
......................................
செய்தி:திமுகவை எவராலும் வீழ்த்த முடியாது: கலைஞர்
கொள்ளிமலை குப்பு : கண்டிப்பாங்க! புள்ளங்க, பேரப்புள்ளங்களத் தவுரன்னு சொல்லாம சொல்றது புரியுதுங் சாமியோவ்!
......................................
செய்தி:பள்ளியில் ஆபாச பட சர்ச்சை: 3 பேர் கைது
கொள்ளிமலை குப்பு : அய்யோ பாவம் அந்த மூனு பேரு! பேசாம டாக்டர் பிரகாச பள்ளிக்க(ல்)லவி இயக்குனராப் போடலாங்ளே சாமி!
......................................
செய்தி:குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
கொள்ளிமலை குப்பு : பேசாம நீங்க கொட நாட்டுக்கு விமான நிலையம் வேண்டி போராடலாங் சாமியோய்! புண்ணியமாப்போவும்!
......................................
செய்தி:தனியார் பள்ளிகளை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம்: ஜி.கே.மணி
கொள்ளிமலை குப்பு : ஒரு ராச்சிய சபா சீட்டுக்கு பாவம் தனியார் பள்ளிகளை எதுக்குறீங்களே சாமீ! உங்களுக்கு எதும் சொந்தமா பள்ளிகள் இல்லன்னு தெரியுதுங்ளே!
......................................
செய்தி:செம்மொழி மாநாடு: கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை
கொள்ளிமலை குப்பு : ராசபக்சே செய்த போர்க்குற்றத்த மறைக்க கிட்டத்தட்ட 500 கோடியில மாநாடு, இதுல புள்ளையளுக்கு மூனு நாளு லீவா?
......................................
செய்தி:MGR தொண்டர்களை ஜெ. மதிப்பதில்லை: சந்திரன்
கொள்ளிமலை குப்பு : இப்படி சொல்லிக்கிட்டே இருத்தா எப்படிங் சாமீ? பேசாம எம்.ஜி.ஆரை அப்பவும்,இப்பவும்,எப்பவும் மதிக்கும் கலைஞர் கிட்ட போயிருங்ளேன்!!
......................................
செய்தி:பெரியார் எழுத்து மற்றும் பேச்சுகளை வெளியிட தடை கிடையாது: கி.வீரமணி
கொள்ளிமலை குப்பு : அதத்தானே கோர்ட் சொன்னிச்சு! அதயே நீங்களும் சொல்றியளே! அப்பறம் எதுக்குங் சாமி கோர்ட்டுக்கு போனிய?
......................................
கலைஞர் பேத்தி கட்டிய அன்னதான கூடம்
கொள்ளிமலை குப்பு : ஊருக்கு உபதேசம் செய்துட்டு, நீங்க துட்டு போட்டு கோவிலுக்கு மண்டபம் கட்டுறியளே! பேஷா செய்யுங்க தாயி!
......................................
பெரியாரின் குடிஅரசு தொகுதிகள் நாளை வெளியீடு
கொள்ளிமலை குப்பு : கி.வீரமணி சாமி கிட்டருந்து விடுதலை கிடைச்சுட்டுங்ளே! அப்ப குடியரசை பிரகடனம் பண்ணுங் சாமியோவ்!
......................................
செய்தி:அதிமுகவில் சேர திமுகவினர் தயாராக இருக்கிறார்கள் :ஜெ.
கொள்ளிமலை குப்பு : கேப்பையில நெய் வர்றதுல்லீங்ளே தாயி!?
......................................
செய்தி:விஞ்ஞானி பைக் சிக்கியது: விஞ்ஞானி எங்கே?
கொள்ளிமலை குப்பு : பைக்கு்ல போற அளவுக்கு அணு விஞ்ஞானிய வச்சிருந்த இந்தி’யாவ கோர்ட்டுக்கு இழுப்போம் வாங்க சாமியோவ்! சை கிந்தியா!
......................................
Monday, June 7, 2010
கழிவிரக்கமும் நுகர்ச்சியும்
கடித்த கொசுக்கள்
தாக்கப்பட்டு குருதி தெறித்து
உயிர் விட்டு குப்பையாகிக் கிடந்தன
நவீன குப்பையில்
சீத்துப் பொறுக்கியதில்
சில புழுக்கள் கிட்டின
பழைய முடுக்கில்
எறும்புகள் விட்டுவைத்த
பருக்கைகளும் அரிசித்துண்டுகளும்
ஆறுதல் படுத்தின
நான் விலை கொடுத்து வாங்கிய
தொகுப்புகள் வீண் போகவில்லை
பி.கு: பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்
Monday, May 31, 2010
நானும் கவியும் - புனைவல்ல உண்மை
இரண்டகம்
அழுகியோ
கனிந்தோ
அணில் குடைந்தோ
பிஞ்சிலே பழுத்தோ
நல்ல விலை கிடைத்தாலோ
பொத்தென்று விழும்
காம்பழுகிய பழம்
அழகிய நகை
நரி மிரட்டலைத் தாண்டி
நடுநடுவே தொங்காமல் மிளிரும்
குறு நகை
இருட்டடிப்பு
பார்வை ஈர்க்கவில்லை
பழுதுமில்லை
ஒலியில் மட்டும்
ஒளியைச் சுமந்து
முகவரியைத் தேடும்
கருங்குயில்
மூளைச்சலவை
சரியான சாவியிட்டால்
கள்வனுக்கும் கட்டுப்படும்
கதவு
சமூக நீதி
வரிசையாக
நிற்க வைக்கப்பட்ட
சாதித் தலைகளில்
எதிலும் கொம்பில்லாததால்
எல்லாம்
ஒன்றெனப்பட்டது
Saturday, August 8, 2009
என்னைக் கவர்ந்த மொட்டுகள்
அழுகியோ
கனிந்தோ
பிஞ்சிலே பழுத்தோ
நல்ல விலை கிடைத்தாலோ
அணில் குடைந்து
காம்பு அழுகிய பழம்
பொத்தென்று விழும்
குழந்தையின் புன்னகை
நரி மிரட்டலை
தாண்டி
நடு நடுவே
வந்து செல்லும்
குறு நகை
விண்மீன்கள்
ஆகாய தோட்டத்தில்
அள்ளித் தெளிக்கப்பட்ட
மினுக்கட்டாம்பூச்சிகள்
ஆதவன் மறையும் வரை
அண்டி இருந்துவிட்டு
இரவில்
இரவலாகக் காட்டும்
இன்முகம்
கருங்குயில்
பார்வை
ஈர்க்கவில்லை
பார்வையில்
பழுதுமில்லை
இனிய குரலால்
முகவரியைத் தேடும்
கருங்குயில்
Saturday, August 1, 2009
அடிமை வாசம்
முள் வேலிக்குள்
விடுதலையை சுவாசிக்கும்
நீங்கள்
புரட்சிப் பூக்கள்
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும்
எங்கள் வாசம்
அடிமை
Saturday, April 25, 2009
கலைஞர் பேட்டி-சொல்லிக் கேட்கவில்லை,இருப்பினும் நல்லதே நடக்கும்

அப்போது இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டியது தொடர்பாக இந்திய தூதர்கள் இலங்கை சென்று வந்தது பற்றி முதலமைச்சர் கருணாநிதியிடம் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் விவரமாக எடுத்துக் கூறினார்.
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்த பதில்களும்:
மத்திய மந்திரி சிதம்பரம் தெரிவித்த செய்தி உங்களுக்கு திருப்தி அளித்துள்ளதா?
திருப்தி அளிக்கிறது. நல்லதே நடக்கும் என்று நம்புவதாகச் சொன்னார். நானும் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.
வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கையிலே தமிழர்கள் பாதிப்பதாகத் தான் சொன்னதாகவும், போர் நிறுத்தம் பற்றி சொல்லவில்லை என்றும் ஒரு சிலர் கூறுகிறார்களே?
அப்படி யார் சொன்னது? தமிழர்கள் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது. ஆகவே, போரை நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார்கள். டெல்லியில் அறிக்கையே கொடுத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையில் நாங்கள் போர் நிறுத்தத்தை வற்புறுத்தி இருக்கிறோம் என்றே சொல்லியிருக்கிறார்கள்.
போர் நிறுத்தம் வேண்டும் என்று இந்திய அரசு பலமுறை கேட்டிருக்கிறது. ஆனால், அதை இலஙëகை அரசு கேட்கவில்லை. இந்தமுறை இலங்கை அரசு கேட்கும் என்று நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
நம்புகிறோம். அந்த நம்பிக்கை தனக்கும் இருப்பதாக இப்போது என்னிடம் தொலைபேசியில் பேசிய பிரதமரும் தெரிவித்தார். சிதம்பரம் எல்லா விஷயங்களையும் சொல்லியிருப்பாரே என்று கேட்டார். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
இலங்கை தமிழர் பிரச்சினை உங்களுடைய வெற்றியைத் தேர்தலிலே பாதிக்குமா?
நாங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தான் நேற்று தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்தோம். தேர்தலை மனதிலே கொண்டு செயல்பட்டவர்கள் யார் என்றும், அந்தப் பணிகளை ஆற்றியவர்கள் யார் என்றும் உங்களுக்குத் தெரியும். அதே நேரத்தில் இலங்கை தமிழர்களுக்காக நேற்று வேலைநிறுத்தம் செய்தவர்கள் யார் என்றும் உங்களுக்கே தெரியும்.
இலங்கையில் உள்ள அமைச்சர்கள் அவர்களுடைய நாட்டில் நடக்கும் பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது என்றும், அது மட்டுமல்ல, மற்ற நாடுகளும், தலையிடக்கூடாது என்றும், இது அவர்களுடைய நாட்டில் நடக்கும் தீவிரவாதம் என்று சொல்கிறார்களே?
சீனா என்ற கம்யூனிஸ்டு நாடு இருக்கிறதே, அது ஐ.நா. சபையிலேயே இப்பிரச்சினையை எடுக்கக்கூடாது என்றும், பேசக்கூடாது என்றும், இது தீவிரவாதம் என்றும், தீவிரவாதத்தை அடக்கியே தீர வேண்டும் என்றும் கம்யூனிஸ்டு ஆட்சி நடத்துகிற சீனா நாடு சொல்லி இருக்கிறது. இங்கேயுள்ள கம்யூனிஸ்டுகள் இலங்கை தமிழர்களுக்காக போராடுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
பெண்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே?
நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவர்களை கேட்டுக்கொண்டோம். எவ்வளவு கெஞ்சினோம். கேட்கவில்லை. உண்ணாவிரதமிருந்த ஐந்து பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆனதால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருக்கிறோம். மற்றவர்கள் தொடர் உண்ணாவிரதத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள்
கொள்ளிமலை குப்பு: ஓரளவுக்கு நல்லா புரியுதுங்க சாமியோவ்!
Thursday, April 23, 2009
தேர்தல், தமிழீழம் - கலைஞர் கருணாநிதியின் உணர்வுமிக்க கவிதை
உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றும் வாடினோம்
செல்வா காலம் முதல் சிங்களர் ஆதிக்கம் வீழ்த்த பரணி பாடினோம்
சிறைச்சாலை, சிம்மாசனம் இழப்பு என்று சித்ரவதை கண்டு வாடினோம்
ஈழ விடுதலைப் போருக்கு இந்திரா காந்தியும் ராஜீவும் இணக்கம் தந்தனர்
இந்தியாவில் மலைமுகடு, வன வனாந்தரங்களில் பாசறை அமைத்து
இடையறாப் பயிற்சியும் வழங்கி ஈழ விடுதலைப் போராளிகளாக்கினர் அந்த
விடுதலைத் தளகர்த்தர்க்கிடையே விரிசல் விரிசல் என்று வேறுபட்டு நின்று;
ஆளுக்கொரு ஆயுதம் ஏந்தி அவர்களை அவர்களே அழித்துக் கொண்டனர்
பிரித்தாளும் சூழ்ச்சியிலே பிரிட்டிஷாரையும் வெல்லுகின்ற
சிங்களத்து வெறியர்களால் சீரழிந்து போனதய்யா
சிங்கத் தமிழினத்தின் ஒற்றுமை
அதனாலே அங்கும் சகோதர யுத்தம்
அவர்களை ஆதரிக்கும் இங்கும் அந்தோ; அதே யுத்தம்
இரு தரப்பிலும் இக்குற்றம் சுமத்தி
இனியும் நாம் சும்மா இருக்க இயலாமல்
இனத்தால் தமிழர் புல் பூண்டும் அறவே செதுக்கப்படாமல் காப்பதற்கே
இன்றோர் வேலை நிறுத்த அறப்போரில் ஈடுபட அனைவரையும் அழைத்தோம்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி போர் நிறுத்த தீர்மானமுடன்
இந்திய அரசின் அமைச்சரவையும் கூடி அதே கருத்தை அறிவித்தமை கண்டோம்
இன்னும் இன்னும் வேகமாக நம் குரலை உயர்த்தி நடுவணரசை
முன்னுக்குத் தள்ளி முடிப்போம் இலங்கைப் போரை என்றால்
இங்குள்ள சில பேர் தடையாக இருந்து இராவணனுக்கு தம்பியாக
இழிதகை விபீஷணன் பாத்திரம் ஏற்கலாமா? இந்தத்
துரோகிகளின் சேட்டையினால் தூய தமிழினம் தோற்கலாமா?
கபட நாடகமென்று கதைப்போர் ஒலியை நம் காதுகளில் ஏற்கலாமா?
அதனாலே
அன்றும் என்றும் இன உணர்வு மிகுந்த தமிழரெல்லாம்
ஒன்றாய்க் கூடுவோம்! வென்றே தீருவோம்.
கொள்ளிமலை குப்பு : தேர்தலிலா?
நன்றி: கலைஞர் கருணாநிதி
Thursday, April 16, 2009
நமக்கு வியர்க்காததை மறந்த கவிஞர் வைரமுத்து

கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது.
இவ்விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட வைரமுத்து பெற்றுக்கொண்டார்.
வைரமுத்து பேசும்போது, ‘’இந்த மேடையில் ஈழப்பிரச்சனையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது. ஆனால் என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது.
உலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை.
உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது. அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது அமெரிக்கா’’ என்று ஆவேசப்பட்டார்.
நன்றி: நக்கீரன் செய்தி
ஐயா, தமிழ் கவிஞன் என்ற வகையில் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கும் அப்படித்தான்!
உலக நாடுகள் கண்டித்தன. பட்சே கேட்கவில்லை. நல்லாத்தான் இருக்கு உங்கள் பேச்சும் வாதமும்!
தெற்காசியாவின் தலைவன் என்று பீத்திக்கொள்ளும் உங்கள் நாடு கண்டித்ததா, அதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. உங்கள் நாடு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று குறைந்த பட்சம் உங்களுக்குத் தெரியுமா? உங்கள் தமிழ் நாடு, நீங்கள் விருப்பும் தலைவர் என்ன சொல்கிறார், செய்கிறார் அதைத் தொடாமல் பேசினால் எந்தவகையான அம்னீசியா உங்களுக்கு? நமக்கே வியர்க்கவில்லை என்றால் உலக நாடுகளுக்கு ஏன் வியர்க்கப் போகிறது?
Saturday, April 11, 2009
இறைமை பேசும் இயந்திரங்களுக்கு, விளக்குகிறார் கிருஷ்ணய்யர்

இவரைப் பற்றிய சிறு அறிமுகம்:
சட்ட நிபுணர்
முன்னாள் நீதிபதி.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனை எதிர்த்து குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.
மனித உரிமை ஆர்வலர்.
இனி இலங்கை இனப் படுகொலையைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்,
ஒரு
மனித உரிமையாளன் என்ற வகையில் மிகப் பாரியளவில் மனித உயிர் அழிவுகளுக்கும், சொத்தழிவுகளுக்கும் காரணமாக இருக்கும் இலங்கை அரசாங்கத்தினையோ அல்லது விடுதலைப் புலிகளையோ சார்ந்து நான் இந்த அறிக்கையிடலை மேற்கொள்ளவில்லை.
நன்றி:ஜிடிஎன்
கடைக்கோடியில் ஈழக்கனல்
விச குண்டுகளால்
வித்தாகிறது
மறம் உரமாகிக்
கொண்டிருக்கிறது
உறவுப் பாலமின்றி
ஊண் உறக்கமின்றி
ஊடுருவித் தாக்கும்
குண்டுகளால்
உடைந்த தேகத்தை
ஊதிக் கொள்கிறார்கள்
அதுதானே மருந்து?!
இரத்தப் போக்கிற்கு
என்ன செய்வார்கள்?!
மரித்த குழந்தைகள்
மாளாத் துயரைக்
கொடுக்கின்றன
இவர்கள் வேறு
வயிற்றில் மண்ணள்ளிப்
போடுகிறார்கள்
துக்கத்தில் இருக்கும்
மக்களை
துயரத்தில் ஆழ்த்தும்
இந்திய அரச வாதம்
இலங்கைக்கு
ஆயுதம் அனுப்பி விட்டு
அப் பிராணி வேடம்
பூண்டு
அருவியாய் கண்ணீருடன்
பாவம்
தேர்தல் வந்து விட்டதால்
மக்களைத் தேடிவந்து
தேம்பித் தேம்பி அழுகிறது
ஓட்டுக்காக!
காலணியே அணிந்திராத
கடைக்கோடி தமிழன்
நாலடியில் போய் நிற்கிறான்
செருப்புக் கடையில்
வரிசைபிடித்து...!
Friday, April 10, 2009
கலைஞர் பேச்சும், கலங்கிய மனமும்

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தக்கோரி சென்னையில் திமுக சார்பில் தமிழர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி, மன்றோ சிலையில் தொடங்கி, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது. பேரணியை பார்வையிட்டு முடிந்த பிறகு, இங்கு வந்த முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது.
இலங்கை அரசே! போரை நிறுத்து! என்று வலியுறுத்தி முழக்கமிட்டு லட்சக்கணக்கிலே பேரணியாக வந்த இந்த நிகழ்ச்சிக்கு நான் தலைமையேற்கின்ற வாய்ப்புப் பெற்றதை மகிழ்ச்சியாகக் கருதவில்லை - இருந்தாலும் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு உரையாற்றி இருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு உரையாற்றியவர்கள் எல்லாம் வழிசொல், வழிசொல் என்று எனக்கு ஆணையிட்டு இருக்கிறார்கள். எவ்வழியை நான் கண்டுப்பிடித்து சொல்வதென்று புரியாத நிலையில் குழம்பித் தவிக்கிறேன். ஏனென்றால், ஏறத்தாழ 50 அல்லது 60 ஆண்டு காலமாக, இந்த பிரச்சனை, அறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோருடைய காலத்தில் இருந்து ஈடுபடுத்தி கொண்டவன் என்ற முறையில் ஒவ்வொரு காலத்திலும் இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமைகளை கண்டிக்கும் நிலையிலும் - அங்கே விழுகின்ற தமிழர்களுடைய பிணங்களைப் பார்த்து, கண்ணீர் உகுக்கின்ற நிலையிலும், இலங்கையோடு எனக்கு தொடர்பு உண்டு.
இலங்கைக்கு நான் செல்வதற்கு அங்கேயிருந்த அரசுகள் தடை விதித்தபோதும், இலங்கையில் தமிழர்களுக்கு காவலர்களாக, தூதவர்களாக இருக்கின்ற நண்பர்களுக்கெல்லாம் நான் தோழனாக இருக்கிறேன். அந்த வகையில் இலங்கை பிரச்சனை எனக்கு புதிய பிரச்சனை அல்ல. நானும் பேராசிரியரும் இந்த இலங்கை பிரச்சனைக்கு எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்தோம் என்று இங்கே திருமாவளவன் குறிப்பிட்டார். ஆனால், இப்போது சிலபேர் ஏன் இலங்கை பிரச்சனைக்காக ஆட்சியை துறக்க கூடாது என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். ஆட்சியை துறக்காமல் இருப்பதற்கு காரணம் - எனக்காக துறக்காமல் இல்லை - கேட்பவர்களுக்காகத்தான் ஆட்சியை நான் துறக்காமால் இருக்கிறேன்.
நான் மாநில ஆட்சியை துறந்து, மத்திய அரசு, நேரடியாக தமிழகத்தை ஆளுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்குமேயானால் - குடியரசு தலைவருடைய ஆட்சி நேரடியாக ஏற்பட்டிருக்குமேயானால் இவர்கள் பேசுகின்ற பேச்சுகளுக்கு - இறையாண்மைக்கு விரோதமாக - திருமதி சோனியா காந்தியை இழித்தும் பழித்தும் பேசுகின்ற இந்த பேச்சுகளுக்கு எத்தனை ஆண்டுக்காலம் சிறைத்தண்டனை கிடைத்திருக்கும் என்பதையெல்லாம் நான் எண்ணிப் பார்கிறேன். எனவே இவர்களை காபாற்றுவதற்காகத்தான் நான் ஆட்சியை இழக்கவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இது ஒரு நிலை, இன்னொரு நிலை - இன்றைக்கு செத்து சுண்ணாம்பாக ஆகிகொன்டிருக்கிறார்களே, நச்சு புகை குண்டுகளை வெடித்து நம்முடைய இனத்தை அழிகின்றார்களே, இன்னும் இதை பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்று புலம்புவது எனக்கு புரிகிறது. அந்த புலம்பலின் தாத்பரியம் என்னைபோல் எல்லோருக்கும் இருப்பதையும் நான் உணருகிறேன்.
தமிழ் ஈழத்தின் தந்தை என்று புகழப்படுகிற மறைந்த செல்வநாயகம், 1974 -ம் ஆண்டு வாக்கில் தமிழகத்துக்கு வந்தார். அவரை நான் சந்தித்து எங்களால் இயன்ற உதவியை தமிழர்களுக்கு, தமிழ் ஈழத்திற்கு செய்வோம் என்று குறிப்பிட்டேன். பெரியாரிடம் சென்று, அதே விவரங்களை எடுத்துச் சொல்லி எங்களுக்கு உதவிட வேண்டுமென்று சொன்ன போது பெரியார் - நீங்களும் அடிமைகளாக இருக்கிறீர்கள், நாங்களும் அடிமைகளாக இருக்கிறோம், ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன உதவ முடியும் என்று சொன்னார். அது இன்றைக்கும் உண்மையாக இருக்கின்றது. நான் அந்த நிலையில் தான் இருக்கிறேன். நான் மாத்திரமல்ல, நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.
இன்றைக்கு உலக நாடுகள் எல்லாம் இலங்கையிலே போர் நிறுத்தபட வேண்டுமென்று உரக்க ஒலிக்கின்றன. நம்முடைய இந்திய பேரரசும் நம்முடைய குரலை மதித்து போரை நிறுத்த வேண்டுமென்று கேட்கிறது. அந்த குரல் இன்றைக்கு சோனியா காந்தியின் குரலாக ஒலிக்கிறது.
நாம் விரும்புவது - திருமாவளவன் போன்றவர்கள் விரும்புவது - அது திருமதி இந்திரா காந்தியின் குரலாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். மாமியாரின் குரலை மருமகள் பின்பற்ற வேண்டுமானால் - மற்ற நாடுகளின் நிலைமைகளை - மாமியார் காலத்திலேயே இருந்த உலக நிலவரம் - இன்று மருமகள் காலத்திலேயே இருக்கின்ற உலக நிலவரத்தையெல்லம் எண்ணிப்பார்த்து தான் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் எண்ணிப்பார்க்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் - விரைவில் எண்ணிப் பார்த்து முடிவு செய்து - எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று எனக்கு அவர் இளையவராக இருந்தாலும் கூட - "எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே" என்று சோனியா காந்தியை பார்த்து உங்கள் சார்பாக நான் கேட்டுகொள்கிறேன்.
இந்த போரில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் - ஒரு வேளை - ஏற்படாவிட்டால் - ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் என்ன முடிவாக இருக்கும்? அது இங்கே சட்டமன்றத்திலே சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாரே, அந்தத் தீர்மானத்தை போல பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிப்பதாக இருக்கும்.
இதைத்தான் ஜெயலலிதா, முதலமைச்சராக இருந்த போது தீர்மானமாக முன்மொழிந்து அதை நிறைவேற்றினார்கள். இந்த போரின் முடிவு நமக்கு தோல்வியாக இருந்தால் - பிரபாகரன் தலைமையிலே உள்ள புலிகளுக்கு தோல்வியாக இருந்தால் - ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானப்படி இங்கே பிரபாகரனை அழைத்து வந்து தண்டனை கொடுக்க வேண்டும். நான் இப்போதும் கேட்கிறேன். ராஜபக்சேவுக்கு சொல்கிறேன். சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள்.
இந்திய சரித்திரத்தில் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, அக்ரோணி கணக்கிலே சைனியங்களையெல்லாம் அழித்து பல நாடுகளை கவர்ந்து - பல பூமிகளை தன்னுடைய காலடியிலே போட்டு மிதித்து வந்த போது - போரஸ் மன்னன் எதிர்ப்பை துச்சமாக கருதி 'போரஸ்' என்று அழைக்கப்பட்ட புருஷோத்தமனை வென்றபோது - பெருந்தன்மையோடு கேட்டான் - உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று - அந்த நிலையிலும் போரஸ் மன்னன், "என்னை ஒரு மன்னனை போல் நடத்த வேண்டும்" என்று சொன்னான். அவனுடைய பெருந்தன்மைக்கு - அலெக்சாண்டர், போரஸ் மன்னனின் வீரத்தை பாராட்டி, தனக்கு நிகராக - தனக்கு சமமாக ஒரு மன்னனாக உட்காரவைத்தான்.
போரின் முடிவு எப்படியிருந்தாலும் - ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும் - நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன் - போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும் - பிரபாகரன் தோல்வியுருத்தாலும் - போரஸ் மன்னனை அலெக்சாண்டர் நடத்தியதைபோல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்.
இது தனிப்பட்ட ஒரு பிரபாகரனுக்கு சொல்லபடுவதல்ல - கடந்த காலத்திலேயே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மத்திய அரசு அண்மையிலே வெளியிட்ட கருத்துக்கள் - பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தானாலும், குடியரசு தலைவர் வெளியிட்ட கருத்தானாலும், அதைத்தொடர்ந்து சோனியா காந்தி வெளியிட்ட கருத்தானாலும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட கருத்தானாலும் - இந்த கருத்துக்கள் எல்லாம் தமிழர்களை - தமிழ் மக்களை சம அதிகாரம் கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலே சம சுதந்திரம் கொடுத்து அவர்களை நடத்த வேண்டும் என்ற கருத்துத்தான் - அந்த கருத்தின் அடிப்படையில் என்ன முடிவானாலும் அந்த முடிவை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ராஜபக்சே நடந்து கொள்வாரேயானால், சரித்திரம் அவரை மன்னிக்காது.
சரித்திர பள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் தான் அவர் தள்ளப்படுவார். அதைஞாபகத்திலே வைத்துக் கொண்டு தமிழன், தன்மானம் உள்ள தமிழனாக - தமிழன் தாரணி போற்றும் தமிழனாக சுயமரியாதை உள்ள தமிழனாக வாழ எங்களை அனுமதியுங்கள் என்று வீரசபத முழக்கமிட்டு பேரணியில் கலந்து கொண்ட லட்சோப லட்சம் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Thursday, April 9, 2009
அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - எஸ்.எஸ்.சந்திரன், ராஜகண்ணப்பன்
1. திருவள்ளூர் (தனி) : ஆர்.ராஜன்
2. தென்சென்னை : ராசேந்திரன்
3. மத்திய சென்னை : எஸ்.எஸ்.சந்திரன்
4. காஞ்சிபுரம் (தனி) : டாக்டர் ராமகிருஷ்ணன்
5. வேலூர் : எல்.கே.எம்.பி. வாசு
6. கிருஷ்ணகிரி : நஞ்ஜேகவுடு
7. ஆரணி : முக்கூர் சுப்பிரமணியன்
8. விழுப்புரம் (தனி) : பெ.முருகன்
9. சேலம் : செம்மலை
10. நாமக்கல் : வைரம் தமிழரசி
11. திருப்பூர் : சி.சிவசாமி
12. பொள்ளாச்சி : கே.சுகுமார்
13. திண்டுக்கல் : பி.பாலசுப்ரமணி
14. கரூர் : மு.தம்பிதுரை
15. திருச்சி : ப.குமார்
16. பெரம்பலூர் : மருதை ராஜ்
17. கடலூர் : எம்.சி.சம்பத்
18. மயிலாடுதுறை : ஓ.எஸ்.மணியன்
19. சிவகங்கை : ராஜகண்ணப்பன்
20. தேனி : தங்க தமிழ்ச்செல்வன்
21. ராமநாதபுரம் : வ. சத்தியமூர்த்தி
22. தூத்துக்குடி : சிந்தியா பாண்டியன்
23. நெல்லை : கே.அண்ணாமலை
ம.தி.மு.க போட்டியிடும் தொகுதிகள் நான்கும்!!!
1. விருதுநகர்
2. ஈரோடு
3. நீலகிரி (தனி)
4. தஞ்சாவூர்
ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்

(சென்ற ஆண்டு எழுதிய கட்டுரை - மீள் பதிவு!)
ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் அவர்கள் தன்னிச்சையாக சொந்த முயற்சியில் முன்னெடுத்துச் செல்லும் அளவில் தான் தற்போது இருக்கிறது. உலக அளவில் எந்த நாட்டிலிருந்தும் அதிகாரப்பூர்வ ஆதரவோ உதவியோ இன்றி சிங்கள இனவெறியை எதிர்த்து ஈழத் தமிழ் மக்கள் போராடிவருகிறார்கள்.
இலங்கையில் உள்ள சில ஊடகங்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆதரித்து உதவியும் வருகிறார்கள். பொதுவாகவே தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள்,பத்திரிக்கைகள் இலங்கைப் பிரச்சனைக்கு பெரிதாக முக்கியத்துவம்
கொடுப்பதில்லை. அவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை இன்னும் காரணம் காட்டிக் கொண்டு ஈழத்தமிழர்களை இன்னும் வஞ்சித்துக் கொண்டு வருவதாகவே கருதவேண்டியிருக்கிறது. இதனால் தமிழக மக்களுக்கு இலங்கைத் தீவில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத நிலையே இன்னும் நீடிக்கிறது.
ஈழ மக்கள் இந்தியாவிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படும்போது இந்தியா அதை அனைத்துலக சமூகத்துக்கு கொண்டுசெல்லவில்லையே? சார்க் அளவில் கூட அதை கொண்டு செல்ல தயங்குவது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.
இந்தியாவின் தலைமைத்துவ பதவிகளில் வழமை போல் வட நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் போது தமிழர்கள் என்ன செய்யமுடியும் என்ற கேள்வி தமிழக மக்களில் ஒரு சாராரிடம் இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த நாற்பது எம்.பிக்களை(புதுச்சேரியுடன்) நாம் தேர்ந்தெடுத்துஅனுப்பியிருக்கிறோம்
அவர்களின் ஆதரவுடன் தான் இன்று மத்திய அரசு ஆட்சியில் இருக்கிறது. இந்த நாற்பது எம்.பிக்களும் மத்திய அரசை வற்புறுத்தினால் மத்திய அரசுக்கு வேறு வழியில்லை.
இலங்கை அரசுக்கு சரியான கண்டனத்தை சரியான தருணத்தில் தெரிவிக்க வேண்டிவரும் என்று அதற்கான பதிலையும் அவர்களே தருகிறார்கள். முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார விவகாரக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு போன்ற மத்திய அமைச்சர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அமைச்சரவையில் பங்கு வகிக்கிறார்கள் ஏன் முடியாது என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.
தமிழர்களாக இருந்தாலும் காங்கிரஸ்காரர்கள் ஈழ விடுதலைப் போராளிகளை கொள்கை அளவில் எதிர்த்து வருகிறார்கள். அ.தி.மு.க வும் கொள்கை அளவில் எதிர்க்கிறது. ஆனால் ஈழத்தமிழர்களை ஆதரிக்கிறேன் என்று அதன் தலைவி தெரிவிக்கிறார். அவர்களின் போராட்டத்தை யார் முன்னெடுத்துச் செல்வது என்ற கருத்தை ஒருபோதும் முன்வைத்ததில்லை. அ.தி.மு.க வுக்கு தில்லி மேல்சபையில் மட்டும் உறுப்பினர்கள் உண்டு. கம்யுனிஸ்ட் கட்சியினரும், பாரதிய சனதா கட்சியினரும் தெளிவான கருத்தை இதுவரை வைத்ததில்லை.
மற்ற தமிழக அரசியல் கட்சிகளான தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, வி.சி.க, தே.மு.தி.க
போன்ற கட்சிகளும் பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கி.வீரமணி போன்றோர்களும் ஆதரிப்பதாகத்தான் தெரிகிறது. இருந்தாலும் திரு தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர், இத்தனை விடுதலைப் புலி ஆதரவாளரைக் கைது செய்திருக்கிறேன் என்று கணக்கு சொல்கிற அளவில் தான் அவரின் ஆதரவு இருக்கிறது. இது ஒரு முரண்பாடாகவும் உறுத்தலாகவும் தெரிகிறது.
தமிழகத்தில் சிங்கள இனவாத காவல்துறைக்கு பயிற்சி அளிக்கப்பட்டதை அறிந்த ஒவ்வொரு ஈழத்தமிழனும், உணர்வுள்ள தமிழகத் தமிழனும் துடிதுடித்துப் போனது உண்மை. அவர்கள் மனதில் எழுந்த கேள்வி இது தமிழக உள்துறையை தனது பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வருக்குத் தெரியாமல் நடந்ததா என்பதுதான். மத்திய அரசால் மறைமுகமாகக் கையெழுத்திடப்பட்ட ராணுவ ஒப்பந்தத்தை, ராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்ட பின்னும் அதைத் தமிழக முதல்வரும், மற்ற தமிழக அரசியல் தலைவர்களும் தடுக்காது ஏன்? அது
ஈழத் தமிழர்களை அழிப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தம் அல்லவா? சமீபத்தில் மத்திய அரசு சிங்கள அரசின் ராணுவத் தளபதிக்கு ராஜ மரியாதை அளித்தது ஏன்? போன்ற கேள்விகளும் எழுகின்றன.
வைகோ அவர்கள் ஈழத்தமிழருக்காகப் போராடி பேசி வருபவர். இவர் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்திருந்தாலும், ஈழப்பிரச்சனையில் கொள்கைப்பிடிப்புடன் இன்றளவும் இருந்து வருகிறார். ஒன்றை மட்டும் நினைக்கத் தோன்றுகிறது தி.மு.கவும், பா.ம.கவும் வாயை மூடிக்கொண்டு மௌனியாக இருப்பதற்கு அமைச்சர் பதவி போய்விடும் என்ற காரணமாகவும் இருக்கலாம். தமிழக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டுவிட்டால் தமிழக அரசு கவிழ்ந்துவிடும் என்ற நிலைப்பாடாகவே தெரிகிறது.
சமீபத்தில் சிங்கள அரசு ஈழத்தமிழர்களை நிர்வாணப் படுத்தி குப்பைவண்டியில்
ஏற்றிக் கொண்டு சென்றதே அதை அனைத்துலக சமூகம் வன்மையாகக் கண்டித்த போது, இந்தியா மட்டும் வாய் மூடி மௌனியாக இருந்தது ஏன்? இதே சிங்கள அரசின் ராணுவ வீரன் தான் அணிவகுப்பு மரியாதையின் போது முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியை முதுகில் அடித்து அவமானப் படுத்தினான். கண்துடைப்பாக சில ஆண்டுகள் சிறைக்குப்(ராஜ மரியாதையுடன் நடத்தப்பட்ட்டான்) பின் பெரிய தியாகியாகி அரசியல்வாதியாகிவிட்டான். இது இப்போது இந்திய அரசை நடத்திக் கொண்டு இருக்கும் இராஜீவின் துணைவியார் சோனியா காந்திக்கு தெரியுமோ என்னவோ? அப்படி தெரியாவிட்டால் அதை இந்த தமிழக அரசியல் வாதிகள் கொண்டு செல்ல வேண்டாமா?
வட இந்திய அரசியல் தலைவர்களையும், மத்திய அரசின் சில முக்கிய அதிகாரிகளையும், இந்தியாவின் முக்கியமான பத்திரிக்கையாளர்களையும், ஏன் சில தமிழக தலைவர்களையும் கூட சிங்கள அரசு தன் வலையில் வீழ்த்தி அவர்களுக்கு விருந்தளித்து, பட்டங்களும் பரிசுகளும் வழங்கி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படத் தூண்டுவதை அறிந்து ஈழமக்கள் வேதனை அடைகிறார்கள்.
ஈழத்தமிழருக்க்காகத் திரட்டிய மருந்து மற்றும் உணவுப் பொருட்களைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக அனுப்பத் தவறியது ஏன்? அதற்கு வற்புறுத்தாமல் அதை திரட்டிய திரு பழ.நெடுமாறன் அவர்களைக் கைது செய்தார்கள். இது ஏன்? இதனால் மனித நேயமும், மனித உரிமைகளும் மரித்துப் போய்விட்டதாகவே ஈழமக்கள் கருதுகிறார்கள். இந்திய அரசாங்கம் சிங்கள அரசை நட்பு நாடாக வைத்திருக்கும் வரை, தமிழக அரசியல்
வாதிகளின் ஆவேசப் பேச்சுகளால் ஈழத்தமிழர்களுக்கு ஒன்றும் பெரிதாக நன்மை
விளைந்திடப் போவதில்லை என்பது நன்றாகப் புலப்படுகிறது.
தமிழ் இனத்தைக் காப்பாற்றுங்கள் - கலைஞர் உருக்கம்

தமிழ் இனத்தைக் காப்பாற்றுங்கள் - கலைஞர் உருக்கம்
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரை மாபெரும் தமிழர் பேரணி நடக்கிறது.
இலங்கை தீவில் துடித்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தை காப்பாற்ற இந்த பேரணியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரையில் என்னுடைய தலைமையில் இலங்கை அரசை போரை நிறுத்தும்படி கோரி மாபெரும் தமிழர் பேரணி ஒன்றினை கட்சி வேறுபாடின்றி நடத்திட முடிவு செய்து, அது பற்றிய விளம்பரங்கள் வெளிவந்துள்ளன.
1983 ம் ஆண்டு ஜுலை திங்களில் இது போன்றதொரு சூழ்நிலை இலங்கையிலே ஏற்பட்டு தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது ஜுலை 27 ந் தேதி பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் பேரணி நடைபெறும் என்று அறிவித்தேன். 24 மணி நேர அறிவிப்பில் பல லட்சம் மக்கள் திரண்ட அந்த மகத்தான பேரணி நடைபெற்றது.
தற்போது கடந்த ஓராண்டு காலமாக இலங்கை தமிழர்கள் மாண்டு மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக தாய்த் தமிழகம் தொடர்ந்து மத்திய அரசின் உதவியோடு பல வகைகளிலும் குரல் கொடுத்து வருகிறது.
அனைத்து கட்சி கூட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரத போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரவையிலே கண்டன தீர்மானங்கள், பிரதமரிடம் சந்திப்பு, முறையீடு மனுக்கள், மகஜர்கள் தற்போது பேரணி அறிவித்திருக்கிறோம். இலங்கை தமிழனுக்காக நமது நலனைத் துச்சமாக கருதி, நம்மையே வருத்திக்கொண்டு அறப்போரில் ஈடுபடுவதே நமக்கு இருக்கும் ஒரே வழி!
அந்த வழி, அண்ணா வழி, அறவழி, அமைதி வழி. அந்த வழியிலே இலங்கை அரசைச் சிந்திக்கவைத்திட நாம் நடத்தவுள்ள பேரணியிலே உன்னைச் சந்திக்கக் காத்திருப்பேன், புறப்பட்டிருப்பாய் இந்நேரம்.
மாலை 4 மணி மன்றோ சிலை அருகில்! நீ கலை உலகத்திலே இருக்கிற தம்பியானாலும் கல்வி கூடங்களில் இருக்கின்ற தம்பியானாலும் ஆலைகளில், அலுவலகங்களில் பணியாற்றும் தம்பியானாலும் வேறுயாரானாலும் தமிழன் என்றால் தன் தசையாடும் உணர்வோடு தணலில் புழுப்போல் இலங்கை தீவில் துடித்துக் கொண்டிருக்கும் தமிழ் இனத்தைக் காப்பாற்ற இந்த பேரணியில் கலந்துகொள்! இது தமிழர் பேரணி! தமிழ் இனத்திற்காக குரல் கொடுக்கின்ற பேரணி! என்று கூறியுள்ளார்.
ஐயகோ! தாங்கலையே!!
Friday, April 3, 2009
காங்கிரசிடம் திருமாவளவன் வருத்தம் தெரிவித்தாரா?

இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கடுமையாக தாக்கிப் பேசியதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகளுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, காங்கிரஸ் கட்சி குறித்தும் மத்திய அரசு குறித்தும் இலங்கைப் பிரச்னை தொடர்பாகத் தாக்கிப் பேசியதற்காக திருமாவளவன், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததார்.
அந்த சம்பவங்களை மறந்து விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்டோம். அந்த கட்சி எங்களுடன் கூட்டணியில் உள்ளது. எனவே, அவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது. கூட்டணியில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை. திருமாவளவனை கூட்டணியில் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எங்கள் கூட்டணி வெற்றி பெற நாங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றுவோம் என்றார் தங்கபாலு.
கொல்லிமலை குப்பு : ஐயகோ! வாங்க, எல்லாரும் வருசையா நின்னு பண்ணையார் க(வு)ச்சி காரவுக கிட்ட மாப்பு (வருத்தம்) தெரிவிச்சுக்குங்க.
முத்துக்குமாரின் மரண அறிக்கையைப் படிக்க இங்கு சொடுக்கவும்
முத்துக்குமார் -மானமுள்ள தமிழன் பூசிய கரி!
Friday, March 20, 2009
அரசியல் துணுக்குகள் = சாக்கடைப் புழுக்கள் -1
ஈழத்தமிழர்களுக்காக
உயிரிழக்கும்
ஒவ்வொரு தாய்த்தமிழகத்து
தமிழனின் உயிரும்
விலை மதிப்பற்றது
இருப்பினும்
அவர்கள் ஏழைகள்
ஒரு விலை
வைத்துக் கொடுக்கிறோம்
தேர்தல் வந்துவிட்டால்
ஒரு பணக்காரக் கட்சியிடம்
நாங்கள்
விலை போய் விடுவோம்!
முதுகெலும்பைத் தேடி
எனக்கு முதுகெலும்பில்லை
சொல்கிறார்கள்
நான் நம்பவில்லை
தேடினேன்
தேடிக்கொண்டே இருந்தேன்
நான் வெறுக்கும்
ராமச்சந்திரா மருத்துவச் சாலைக்குக் கூட
சென்று தேடினேன்
இன்னும் முதுகெலும்பில்லை
என்றே சொல்கிறார்கள்
21 மருத்துவர்(கூட்டுத் தொகை மூன்று) கண்காணிப்பில்
அறுவைச்சிகிச்சை செய்து கொண்டேன்
எனக்கும் மருத்துவர்களுக்கும் தெரிவது
ஏன் மக்களுக்குத் தெரியவில்லை என்று
எனக்குத் தெரியவில்லை!
ரிங் மாஸ்டர்
நான் நடித்து
வேலை வாங்கியதில்லை
ஆனால்,
அடித்து வேலை வாங்கியிருக்கிறேன்
அது பிடித்துப் போய் தான்
என்னிடம்
பொதுவுடைமை வாதிகள்
புல்லரித்துப் போயிருக்கிறார்கள்
தொழிற்சங்க வாதிகளும்
தொங்குகிறார்கள்
நான் என்ன செய்வது
தொங்கல் தாத்தாவின் (எஸ்.டி.எஸ்)
இடத்தை நிரப்ப
ஆள் வேண்டாமா?
உதிர்ந்த ரோமங்கள்
நான், எனது கட்சியை விட்டு
பிரிந்து சென்றவர்களை
உதிர்ந்த ரோமங்கள்
என்று கண்ணியமாக
அழைப்பதுண்டு
அவர்களைப் போன்று
விரசமாக உதிர்ந்த மயிர்கள் என்று
அழைக்க நா கூசுகிறது
வாய்ஸ் கிடைக்குமா?
நான் என்றால்
ரசினி அவர்களைப் போல்
உதடுகள் ஒட்டாது (இவ்வளவு கேட்டும் ஒரு குரல் கொடுக்க மாட்டேனுட்டார்)
நாம் என்றால்
தம்பி கமலகாசனைப் போல
உதடுகள் ஒட்டும்.
பி.கு :)கலைமாமணி குடுத்தாலும் ஒட்டாது போலிருக்கே! முன்னமே தெரிஞ்சிருந்தா மனோரமாவுக்கு கலைமாரமாமணி விருது உருவாக்கிக் கொடுத்திருப்பேனே!
அம்மாவின் ஆணை
நான் வெ.கொ அல்ல
அவர் ஆளும் கட்சியின்
அனல் கக்கும் பேச்சாளர்
நான் வை.கோ
அம்மாவிற்கு அடிபணிந்து
பாத பூசையில்
அனலைக் கக்க முடியாமல்
கரிதாரம்
பூசிக்கொண்டிருக்கிறேன்
மதில் மேல் பூனை
நான் பால் குடிப்பதில்லை
தேர்தல் அறிவித்தாலும்
கூட்டணி வைக்க
அடம் பிடிப்பேன்
தனியாக நிற்கும் தைரியம்
எனக்கு வந்ததில்லை, வராது
என்னை அழைப்பார்கள்
பசையுள்ளவர்கள்
நம்பிக்கை இருக்கிறது
ஈரம், காரம் எல்லாம்
நான் பார்ப்பதில்லை
பாரம் நிறைவாய் வந்தால்
சோரம் போய் விடுவேன்
காகிதச் சிறுத்தை
தேர்தல் வந்து விட்டால்
சேதாரம் எங்களுக்கு
கூலி எங்கள் கூட்டணி தலைமைக்கு
வேண்டா வெறுப்பாக நிக்கிறேன்
இதயத்தில் இடம் கொடுத்தாலும்
ஏற்றுக் கொள்வேன்
இல்லையென்றால் தேசிய
பாதுக்காப்பின் மீது
அவர்களுக்கு அக்கறை வந்துவிடும்.
அதனால் நானும்
தேர்தல் மழையில
இந்த கூட்டணி கொட்டகைக்குள்
ஒழுகுனாலும்
ஒட்டிக்கிறேன்!
நாடா தொகுதி
நான் தொகுதிகளை
நாடியதில்லை
நாடா தொகுதிகளை
எனக்கு
அள்ளித்தரும் பா.ச.க வை
இன்று முதல்
பாசக்கார சனங்களின் கட்சி
என்று அழைக்கச் சொல்லியிருக்கிறேன்
எங்கள் கட்சியில்
சித்தி இருப்பதால்(புத்தி இருக்கா சாமி)
விநாயக பெருமானின்(கணேசன்)
அனுக்கிரகம் உண்டு என்று
பா.ச.க சொல்கிறது.
வட மொழி - தமிழ் மொழி
பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்
அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்
அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது
அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை
அகந்தை - இறுமாப்பு,செருக்கு
அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்
அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு
அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்
அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை
அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை
அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்
அக்கணம் - அப்பொழுது,அந்நொடி
அக்கரம் - எழுத்து
அட்சரம் - அழிவில்லாதது
அக்கியாணி - அறிவிலான்
அஞ்ஞானி - புல்லறிவாளன்
அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி
அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு
அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை
அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி
அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்
அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு
அங்குலம் - விறக்கட்டை,விரலளவு
அசத்தை,அசத்தியம் - பொய்
அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்
அசரீரி - வானொலி,உருவற்றது
அசித்து - பயனின்மை
அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை
அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை
அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்
அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்
அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்
அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்
அஞ்சிட்டம் - கதிரவன்
அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது
அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்
அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது
அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்
அட்டபந்தனம் - எண்புறக்கட்டு
அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்
அதமம் - கீழ்மை,கடைத்திரம்
அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்
அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்
அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்
அதிகாலம் - விடியற்காலம்
அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை
அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்
அநந்தகோடி - எண்ணத்தொலையாதன
அநந்தம் - அளவின்மை,முடிவில்லது
அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்
அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை
அநீதி - முறைகேடு
அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்
அநுசரணை - சார்பு,சார்பு நிலை
அநுசிதம் - பொய்,தகாதது
அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி
அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை
அனுமானப் புரமானம் - கருதலளவை
அநேகர் - பலர்
அந்தகன் - அழிப்போன்,குருடன்
அந்தகாரம் - இருள்,அறியாமை
அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்
அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை
அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்
அந்தி - முடிவு,மாலைக்காலம்
அந்திய கிரியை - இறுதிச் சடங்கு
அந்நியர் - பிறர்,அயலார்
அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்
அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்
அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு
அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு
அபிதானம் - பெயர்
அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்
அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு
அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு
அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்
அபேச்சை -அவா,விருப்பம்
அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை
அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி
அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று
அமரத்துவம் - அழிவின்மை
அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்
அந்நியர் - பிறர்,அயலார்
அதிகம் - மிகுதி,அளவின்மை
அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை
அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்
அம்பாரம் - குவியல்
அயோக்கியம் - தகுதியினமை,தகாதது
அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்
அரணியம் - காடு
அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு
அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி
அருவம் - உருவின்மை,அழகின்மை
அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு
அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்
அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு
அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை
அவகீர்த்தி - இழிவு,புகழின்மை
அவக்கியாதி - வசை,இகழ்ச்சி
அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு
அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை
அவதரித்தல் - பிறத்தல்
அவதாரம் - பிறப்பு,இறங்குகை
அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை
அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை
அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை
அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு
அவயவம்,அவையவம் - உறுப்பு
அவலன் - உடற்குறையன்,வீணன்
அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,
அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு
அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்
அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை
அனுதாபம் - இரக்கம்
அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு
அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை
அனேகம் - பல,எல்லாம்
அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை
அன்னம் - சோறு,உணவு,அடிசில்
அன்னியன் - பிறர்,அயலார்
அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்
ஆகம் -உடல்,மார்பு
ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி
ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்
ஆகாய விமானம் - வான ஊர்தி
ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு
ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்
ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்
ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி
ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு
ஆச சங்கை -ஐயம்
ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா
ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு
ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு
ஆசீர்வாதம் - வாழ்த்துரை
ஆசுவாசம் - இளைப்பாறுகை
ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு
ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது
ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்
ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை
ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை
ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்
ஆஞ்ஞை -ஆணை,கட்டளை
ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு
ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு
ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்
அந்நியர் - பிறர்,அயலார்
ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்
ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு
ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்
ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு
ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்
ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு
ஆத்துமா,ஆன்மா - உயிர்
ஆந்ந்தம் - இன்பம்
ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்
ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்
ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி
அபூர்வம் - வினைப்பயன்
ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்
ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு
ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு
ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்
ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்
ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு
ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்
ஆரணியம்,ஆரண்ணியம் - காடு
ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்
ஆரம்பம் - தொடக்கம்
ஆரம்பித்தல் - தொடங்கல்
ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்
ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்
ஆரோக்கியம் - நலம்,நோயின்மை
ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்
ஆரோபித்தல் - ஏற்றுதல்
ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்
ஆர்மோனியம் - இசைக்கருவி
ஆர்வம் - அன்பு,விருப்பம்
ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்
ஆலகம்- நெல்லிமரம்
ஆலம் - நஞ்சு
ஆலயம் - கோயில்
ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்
ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி
ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை
ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு
ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்
ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்
ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு
ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்
ஆன்மா - உயிர்
இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு
இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்
இச்சகம் - முகமன்
இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை
இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை
இட்டசித்தி - விருப்பப்பேறு
இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்
இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்
இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை
இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை
இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்
இந்து - நிலா,திங்கள்,அம்புலி
இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை
இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்
இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை
இரசாயனம் - பொருளியைபு
இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு
இரட்சை - காப்பு
இரணம்,ரணம் - புண்
இரதம்,ரதம் - தேர்
இரத்தம் - குருதி,செந்நீர்
இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி
இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்
இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு
இராகு - கருங்கோள்
இராக்கதர் - அரக்கர்
இராசசூயம் - அரசர் வேள்வி
இராசா - அரையன்,மன்னன்,அரசன்
இராச்சியம் - நாடு,அரசியல்
இராத்திரி - இரவு,கங்குல்
இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி
இதய கமலம் - நெஞ்சத்தாமரை
இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு
இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்
இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்
இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்
இலங்கணம் - பட்டினி
இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை
இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை
இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்
இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு
இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை
இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு
இலீலை,லீலை - விளையாட்டு
யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு
உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை
உஷ்ணம் - வெப்பம்,சூடு
உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு
உசிதன் - தக்கோன்
உச்சம் - உயர்ச்சி,சிறப்பு
உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்
உச்சரிப்பு - எழுத்தோசை
உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்
உச்சி - மேடு,முகடு
உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்
உதயன் - பகலோன்
உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று
உத்தமம் - உண்மை,மேன்மை
உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை
உத்தரவு - கட்டளை
உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்
உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய
உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்
உபதேசம் - அருண்மொழி,அறிவுரை
உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு
உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்
உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்
உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்
உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது
உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி
உருசி,ருசி - சுவை
உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி
உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்
உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு
உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி
உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு
உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்
ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு
ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு
எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி
எந்திரம் - பொறி
எமன் - கூற்றுவன்,மறலி
ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை
ஏகம் - ஒன்று,தனிமை
ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு
ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்
ஏடணை,ஏஷணை - விருப்பம்
ஐது,ஹேது - காரணம்
ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை
ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு
ஐதீகம்,ஐதிகம் - உலகுரை
ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்
ஓமம்,ஹோமம் - வேள்வி
ஒளடதம்,ஒளஷதம்- மருந்து
களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்
கடகம் - கைவளை,வளையம்
கடம் - கடம்,யானைக்கதுப்பு
கடாட்சித்தல் - அருளல்
கடாரம் - கொப்பரை,தேங்காய்
கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி
கடிகை - நாழிகை,தாழ்க்கோல்
கடினசித்தம் - வன்னெஞ்சம்
கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை
கடூரம்,கொடூரம் - கொடுமை
கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்
கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது
கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்
கணிகை - பொதுமகள்
கணிசம் - அளவு,மேம்பாடு
கணிதம் - கணக்கு
கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து
கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு
கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது
கதலி - வாழை
கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை
கனகம்,கநகம் - பொன்
கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை
கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை
கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்
கந்மம்,கருமம் - தொழில்,வினை
கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு
கபாலம் - தலையோடு,மண்டையோடு
கபோதி - குருடன்
கப்பம் - இறை
கமண்டலம் - நீர்க்குடுவை
கமலம் - தாமரை,நீர்
கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு
கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை
கரகம் - வட்டில்,நீர்க்குடுவை
கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்
கரணம் - கருவி,ஐம்பொறி
கரம் - கை
கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்
கருணை - அருள்,இரக்கம்
கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்
கர்ப்பவதி - சூலி
கர்ப்பாசயம் - கருப்பை
கர்வம் - செருக்கு,இறுமாப்பு
கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை
கலி - வறுமை,துன்பம்
கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி
கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்
கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்
கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்
கவி - செய்யுள்,புலவன்,பாட்டு
கவுளி,கெளளி - பல்லி
களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்
கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து
கனம் - சுமை,பளு,பளுவு
காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்
கசாயம்,கஷாயம் - காவி
காஞ்சிரம் - எட்டி மரம்
காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி
காதகன் - கொலையாளி
காயசித்தி - நீடுவாழ்ப் பேறு
காயம் - உடல்,யாக்கை,வான்
காரிய கர்த்தா - வினைமுதல்வன்
காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்
கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை
கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு
கிஸ்தி - திறை,வரி
கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்
கிரகஸ்தம் - இல்லற நிலை
கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு
கிரணம் - ஒளி,கதிர்
கிரந்தம் - நூல்,எழுத்து
கிரமம் - ஒழுங்கு,முறைமை
கிரயம் - விலை
கிராதன் - குறவன்,வேட்டுவன்
கிரி - மலை,பன்றி
கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு
கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு
கிரீடம் - முடி
கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை
கிலம் - கழிவு,அழிவு,சிறுமை
கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்
கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு
கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா
கீலகம் - ஆணி,பொருத்து
குஞ்சரம் - யானை
குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்
குணஷ்டை - தொல்லை,துன்பம்
குதர்க்கம் - அழிவழக்கு
குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு
குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்
குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்
கும்பம் - குடம்
குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை
குரோதம் - உட்பகை
குலாலன் - குயவன்
குலிசம் - வேற்படை
குன்மம் - சூலை,வயிற்று வலி
கேதம் - துன்பம்,இடர்,குற்றம்
கேவலம் - சிறுமை,தனிமை
கோகிலம் - குயில்
கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை
கோஷ்டி - கூட்டம்
கோடி - நூறு நூறாயிரம்
கோதண்டம் - வில்
கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்
கெளரவம் - மேன்மை,பெருமை
சக - கூட,உடன்
சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை
சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்
சகமார்க்கம் - தோழமை நெறி
சகலம் - எல்லாம்
சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு
சகா - தோழன்,துணை
சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு
சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை
சகி,சகீ - தோழி
சகிதம் - உடன்
சகுணம் - குணத்தோடு கூடியது
சகுந்தம் - கழுகு,பறவை
சகுனம் - குறி
சகோதரம் - உடன்பிறப்பு
சகோதரி - உடன்பிறந்தாள்
சக்கரம் - உருளை,வட்டம்
சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி
சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்
சங்கிதை - தொகுதி,வரலாறு
சடுதி,சடிதி - விரைவு
சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு
சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு
சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று
சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு
சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்
சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை
சதகோடி - நூறு கோடி
சதசு - அவை
சதம் - நூறு நிலை
சதானந்தம் - இடையறா வின்பம்
சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி
சந்தகம் - எப்பொழுதும்
சந்தானம் - வழி,வழித்தொடர்பு
சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்
சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்
சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்
சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து
சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்தேகம் - ஐயம்,ஐயுறவு
சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு
சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்
சந்நியாசம் - துறவு,துறவறம்
சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்
சபம்,ஜெபம் - உருவேற்றல்
சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா
சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்
சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்
சமஷ்டி - தொகுதி,எல்லாம்
சமதை - ஒப்பு
சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்
சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்
சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை
சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை
சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை
சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்
சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை
சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்
சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது
சமாராதனை - உளநிறைவு
சமி,ஷமி - பொறு
சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி
சமீபம் - அருகு,அணமை,மருங்கு
சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்
சமுதாயம் - குமுகம்,கூட்டம்
சமுத்திரம் - கடல்
சமை,ஷமை - பொறுமை
சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி
சம்பத்து - செல்வம்,பொருள்
சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்
சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை
சம்பு ரேட்சணம் - தெளித்தல்
சம்பூரணம் - நிறைவு
சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு
சம்ரஷணை - பாதுகாப்பு
சயம்,ஜெயம் - வெற்றி
சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி
சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்
சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்
சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்,யாக்கை,மெய்
சருமம்,சர்மம் - தோல்
சர்ப்பம் - பாம்பு
சர்வகலாசாலை -
பல்கழைக் கழகம்சலதளம்- அரசமரம்
சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு
சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை
சல்லாபம் - உரையாடல்
சவம் - பிணம்
சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்
சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு
செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்
சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை
சற்குணம் - நல்லியல்பு
சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு
சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை
சாகரம் - கடல்
சாகுபடி - பயிர் செய்தல்
சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்
சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை













