Showing posts with label கொள்ளிமலை குப்பு. Show all posts
Showing posts with label கொள்ளிமலை குப்பு. Show all posts

Saturday, July 31, 2010

கொள்ளிமலை குப்பு கருத்துப்படம் 31-07-2010

Thursday, June 24, 2010

கொள்ளிமலை குப்பு - ஆகாச வானி

ஆகாச வானி செய்திகள் வாசிப்பது கொள்ளிமலை குப்புஸ்வாமி. கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெரும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் உணர்வுகளை குழி தோண்டிப் புதைத்து தூண்களை நட்டு தமிழக முதல்வர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் சிறப்பாகத் தொடங்கிவைத்தார்கள்.

தூண்கள் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக மிளிர்வதாகவும், புல் தரைக்கு மஞ்சள் வண்ணம் பூச வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்றும் மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் குறிப்பிட்டார்.

மாநாட்டில், சென்ற ஆண்டு மே மாதம் ஆயிரக்கணக்கான தமிழர்களை கிளிநொச்சியிலும்,முல்லைத்தீவிலும் படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்துக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டாம் என்றும், தற்போதுதான் போராளிகளின் பெயரில் வாழ்த்துக் கடிதம் எழுதி அதை வாசித்து முடித்ததாகவும் தமிழுக்காக விழா எடுத்து தமிழர்களுக்கு காரியம் செய்யும் தமிழக முதல்வர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த வாழ்த்துக்கடித்துக்காக ஈழமக்களை இலங்கை அரசு துன்புறுத்தக்கூடும் என்றும் அதைத் தடுத்து நிறுத்த சட்டசபையைக் கூட்டி “அய்யகோ” தீர்மானம் நிறைவேற்றப் போவதாகவும் அறிவித்தார். இருப்பினும் மழை விட்டும் தூவானம் விடாதது போல் வழக்குரைஞர்களின் உண்ணாநிலை போராட்டம் குளிருக்கு பதிலாக வெப்பத்தைத் தருவதாகவும் குறிப்பிட்டார்.

செம்மொழி மாநாட்டுக்கு ஏறத்தாழ 11000 காவல் துறையினர் உள்ளிட்ட தமிழர்கள் வந்திருந்து சிறப்பித்தாகவும், ரஜினி,கமல் போன்ற முக்கியமான தமிழர்கள் இதுவரை வராதது வருத்தம் அளிப்பதாகவும் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

விழாவிற்கு இலங்கையிலிருந்து தமிழறிஞர் திரு கா.சிவத்தம்பி சக்கர நாற்காலியில் வருகை தந்து ஈழ மக்களின் நிலையை முதல்வருக்கும்,தமிழக மக்களுக்கும் உணர்த்தியதாக மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவிக்கிறார்.

விழாவில் பேசிய தமிழறிஞர் கா.சிவத்தம்பி டாட் காம் என்பதை தமிழில் மாற்ற வேண்டும் என்று வடமொழியில் தெரிவித்தார். எனினும் தமிழுக்கென்று இவ்வுலகில் கலைஞரைத் தவிர வேறு தலைவர் இல்லை என்று சொன்ன அவர் தமிழர்களுக்கு அவர் தலைவர் இல்லை என்பதை சூசகமாகத் தெரிவித்தார்.

தோகா புகழ் முரசொலி மாறன் அரங்கில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில் முரசொலி மாறன் கண்டுபிடித்த ”ஸ்பெக்ட்ரம் பிஸ்தா” இயங்குதள மென் தகடு அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. அங்கு பேசிய முன்னாலைய துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், மாறனை தோகா புகழ் என்று மட்டும் சொல்லி குறைவாக மதிப்பிட முடியாது என்றும், அவர் வாகா வழியாக பாகிஸ்தான் சென்றிருந்தால் வாகா புகழ் என்னும் எல்லையில்லா இலக்கை அடைந்திருப்பார் என்றும் புகழாரம் சூட்டினார்.

இனியவை நாற்பது சிறப்பாக ஊர்வலமாக வந்ததை அனைவரும் ரசித்தனர். கொங்கு மண்டலத்தில் கழகம் கொஞ்சம் பலகீனமாக இருப்பதாகவும்,அதைச் சரிகட்ட இந்த மாநாட்டை நடத்துவதாகவும், பிரியானி சாப்பிட வந்த தோழர் தெரிவித்துவிட்டு இனி நாற்பதும் நமதே என்று முழங்கினார்.

பிரியானி கிடைக்கும் என்று நம்பி வந்த இன்னொரு தோழர் 30 ரூபாய் கொடுக்கத் தயாராக இருந்தும் கூட்டத்தில் முந்தியவர்கள் உண்டு தீர்த்ததால் தன்னை அழைத்து வந்த ஒன்றிய செயலாளரை திட்டி தீர்த்ததாக நமது கோவை செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இத்துடன் இந்தச் செய்திகள் நிறைவடைகின்றன. மீண்டும் செய்திகளின் சாரத்துடன் உங்களை சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் கொள்ளிமலை குப்புஸ்வாமி.





Wednesday, June 23, 2010

கொள்ளிமலை குப்பு சொன்னா தப்பா?

நாட்டு நடப்புகளுக்கு கொள்ளிமலை குப்பு பதில் சொன்னா தப்பா?



தமிழ் கவிஞர்களின் பாடல்கள்தான் சுதந்திர உணர்வைப் பரவச் செய்தன: ஜனாதிபதி பேச்சு

ம்ம்க்கும்...! அது பரவத்தானே செஞ்சுச்சு. தமிழ்க்கவிஞர் கவிதாயினி கனிமொழி போயி ராசபக்சய பாத்ததுனால தான் முள் வேளிக்குள் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நாலே நாளுல சுதந்திரம் கிடச்சுச்சு! இது தெரியாம பேச வந்துட்டீங்ளே தாயீ! எழுதிக் கொடுத்தவர் விட்டுட்டாருங்ளா?


பாடுபட்ட கருணாநிதிக்கு வாழ்த்துகள்: பிரதீபா பட்டீல்

எதுக்கு? குடும்பத்த வளக்க பாடுபட்டத்துக்கா? தமிழன் மரணப்படுக்கையில இருக்குறப்ப அவனுக்கு தமிழ் வளத்து கொடுக்கப் பாடுபட்டதுக்குங்ளா கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங் தாயீ!



9வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
உலகின் முதல் மொழி தமிழ்: கலைஞர் பேச்சு

முதலில் அழியும் இனமும் தமிழ் என்று சொல்லியிருந்தா எடுக்கும்!
அது என்ன ஒம்போது? ஜெயலலிதாவுக்கு புடிச்ச நம்பரா இருக்கே?
நெருபோ கரோஷிமா ஒத்துட்டாராருங்ளா சாமீ?



தமிழ் மொழியை கற்கவில்லையே என்று மகாத்மா காந்தியடிகள் வருந்தினார்: மு.க.ஸ்டாலின் பேச்சு

அட! அந்த கொறைய போக்கத்தான் அவரு பேத்தி நமீதாவுக்கு நாம தமிழ் கத்து கொடுக்குறமே! அப்பரம் என்ன கவலப்பட்டுகிட்டு!
காந்தியும், நமீதாவும் ஒரே மாறித்தான் ஆடை உடுத்துறாங்க. அதுலேருந்து தெரியல காந்தியோட பேத்தின்னு...!?
கவலைய விடுங்க சாமியோவ்!


கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித்தமிழ் விருது

காத்துள்ளபோதே தூத்திக்கனுமுன்னு சும்மாவா சொன்னாங்க. இந்த ஜனாதிபதி அம்மாவ இப்ப கொண்ணாந்ததுக்கு, அவங்க கையாலயும் ஒரு விருது போட்டு வாங்கிக்கிட்டா போவுதுன்னு நினைக்கிறது தெரியுது சாமியோவ்!
நாளை பிறக்கும் குழந்தைகளும்
விருதுடன் பிறக்கட்டும்
நான் காத்திருக்கிறேன்
பெறுவதற்கு
-விடாக்கண்டன்


அப்சலின் கருணை மனுவை மத்திய அரசு நிராகரித்தது

அட! ஒங்களுக்கு எவ்வளவு நாளு சாமி தேவப்படும் இதச் சொல்ல. தண்டிக்கபடுறதுக்கு முன்னால கொலையாளிகள் செத்துக் கொண்டிருக்கிறாங்களே. அவங்கள காப்பாத்தக் கூடாதுங்ளா சாமி?
இயற்கை மரணத்த தடுங்க சாமியோவ்!


அகதிகளில் முகாம்களில் அதிரடி சோதனை

ஏக்கனமே சோதனையோட இருக்குறவங்களுக்கு ஏன்சாமி மாநாடு நடத்தி இன்னும் சோதனைய கொடுக்கிறிய...!


தமிழ் மாநாடு-போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

அட அருமைங்க சாமியோவ்! இதையாவது அறிவிக்கிறீங்களே!
அறிவிக்காம பஸ் கட்டணம் ஏத்துனதுமாறி செஞ்சுடுவீங்களோன்னு பயந்துகிட்டுருந்தோம் சாமியோவ்!


கோவையில் தமிழ் வெள்ளம்!

அப்படியா? அது கேரளாவிருந்து வந்த முல்லை-பெரியாத்து தண்ணியா இருக்கபோவுது! அது இப்ப கோவையிலயும் பாயுதுங்ளா சாமியோவ்!?
எதுக்கும் செம்மொழிப்பாட்ட இயக்குன கெளதம் வாசுதேவ மேனனைக் கேட்டு உருதிப்படுத்திக்கிறேஞ்சாமியோவ்!


கோவை மாநாட்டில் எங்கும் திமுக கொடிகள் இல்லை!

அடிபொடிகளைத் தவுரன்னு சேத்துச் சொல்லுங்க சாமியோவ்! உங்களுக்கே கொடியில்லாத திமுக மாநாடுன்னு தெரிய ஆரம்பிச்சுடுச்சுங்ளா? ஏன் கொங்கு தேசத்துல கட்சி கொஞ்சம் வீக்கா இருக்குங்ளா! நடத்துங்..!






Friday, June 11, 2010

நாட்டு நடப்புகள் - விமர்சிக்கும் கொள்ளிமலை குப்பு

செய்தி: தமிழகம் தடை நீங்கியது: குடிஅரசு தொகுதிகள் வெளியீடு

கொள்ளிமலை குப்பு :
விடுதலை ஆசிரியர்
கி.வீரமணியிடமிருந்து
விடுதலை பெற்ற
குடியரசு
......................................

செய்தி:கட்டடம் கட்ட உள்ளாட்சிகளின் அதிகாரம் அதிகரிப்பு
கொள்ளிமலை குப்பு : கட்டடம் கட்ட மட்டும் தானுங்ளா சாமி? கட்டம் கட்ட எதேனும் அதிகாரம் உண்டுங்ளா?
......................................

செய்தி:செம்மொழி மாநாடு:போலீசாருக்கு கோவையில் பயிற்சி
கொள்ளிமலை குப்பு : கோவையில் பயிற்சிங்ளா சாமி? இலங்கை போலீசாருக்கு கொடுத்த அதே எடத்துல கொடுங்க சாமியோவ்!. மாநாடே அவங்க செஞ்ச இனப்படுகொலைய மறைக்கத் தானுங்ளே!
......................................

செய்தி:செம்மொழி மாநாடு: மானிய விலையில் உணவு
கொள்ளிமலை குப்பு : ஓட்டு வாங்க மட்டும் பிரீயா பிரியாணி தர்றீங்களே சாமீ! இதுக்கு மட்டும் காசு கொடுக்கனுங்ளா! புரியலீங்ளே!
......................................

செய்தி:திமுகவை எவராலும் வீழ்த்த முடியாது: கலைஞர்
கொள்ளிமலை குப்பு : கண்டிப்பாங்க! புள்ளங்க, பேரப்புள்ளங்களத் தவுரன்னு சொல்லாம சொல்றது புரியுதுங் சாமியோவ்!
......................................

செய்தி:பள்ளியில் ஆபாச பட சர்ச்சை: 3 பேர் கைது
கொள்ளிமலை குப்பு : அய்யோ பாவம் அந்த மூனு பேரு! பேசாம டாக்டர் பிரகாச பள்ளிக்க(ல்)லவி இயக்குனராப் போடலாங்ளே சாமி!
......................................

செய்தி:குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
கொள்ளிமலை குப்பு : பேசாம நீங்க கொட நாட்டுக்கு விமான நிலையம் வேண்டி போராடலாங் சாமியோய்! புண்ணியமாப்போவும்!
......................................

செய்தி:தனியார் பள்ளிகளை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம்: ஜி.கே.மணி
கொள்ளிமலை குப்பு : ஒரு ராச்சிய சபா சீட்டுக்கு பாவம் தனியார் பள்ளிகளை எதுக்குறீங்களே சாமீ! உங்களுக்கு எதும் சொந்தமா பள்ளிகள் இல்லன்னு தெரியுதுங்ளே!
......................................

செய்தி:செம்மொழி மாநாடு: கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை
கொள்ளிமலை குப்பு : ராசபக்சே செய்த போர்க்குற்றத்த மறைக்க கிட்டத்தட்ட 500 கோடியில மாநாடு, இதுல புள்ளையளுக்கு மூனு நாளு லீவா?
......................................

செய்தி:MGR தொண்டர்களை ஜெ. மதிப்பதில்லை: சந்திரன்
கொள்ளிமலை குப்பு : இப்படி சொல்லிக்கிட்டே இருத்தா எப்படிங் சாமீ? பேசாம எம்.ஜி.ஆரை அப்பவும்,இப்பவும்,எப்பவும் மதிக்கும் கலைஞர் கிட்ட போயிருங்ளேன்!!
......................................

செய்தி:பெரியார் எழுத்து மற்றும் பேச்சுகளை வெளியிட தடை கிடையாது: கி.வீரமணி
கொள்ளிமலை குப்பு : அதத்தானே கோர்ட் சொன்னிச்சு! அதயே நீங்களும் சொல்றியளே! அப்பறம் எதுக்குங் சாமி கோர்ட்டுக்கு போனிய?
......................................

கலைஞர் பேத்தி கட்டிய அன்னதான கூடம்
கொள்ளிமலை குப்பு : ஊருக்கு உபதேசம் செய்துட்டு, நீங்க துட்டு போட்டு கோவிலுக்கு மண்டபம் கட்டுறியளே! பேஷா செய்யுங்க தாயி!
......................................

பெரியாரின் குடிஅரசு தொகுதிகள் நாளை வெளியீடு
கொள்ளிமலை குப்பு : கி.வீரமணி சாமி கிட்டருந்து விடுதலை கிடைச்சுட்டுங்ளே! அப்ப குடியரசை பிரகடனம் பண்ணுங் சாமியோவ்!
......................................

செய்தி:அதிமுகவில் சேர திமுகவினர் தயாராக இருக்கிறார்கள் :ஜெ.
கொள்ளிமலை குப்பு : கேப்பையில நெய் வர்றதுல்லீங்ளே தாயி!?
......................................

செய்தி:விஞ்ஞானி பைக் சிக்கியது: விஞ்ஞானி எங்கே?
கொள்ளிமலை குப்பு : பைக்கு்ல போற அளவுக்கு அணு விஞ்ஞானிய வச்சிருந்த இந்தி’யாவ கோர்ட்டுக்கு இழுப்போம் வாங்க சாமியோவ்! சை கிந்தியா!
......................................





Thursday, December 17, 2009

கொள்ளிமலை குப்பு கருத்துப்படம் - 17-12-2009














Friday, August 21, 2009

திருமதி ஜெயலலிதா - கருணாநிதி விளக்கம் - கொள்ளிமலை குப்பு கேள்வி

அண்மையில் தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் ஒரு பேட்டியின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைப்
பற்றி குறிப்பிடும் போது திருமதி என்று உரைத்திருந்தார். அது சரியா தவறா என்கிற குருட்டு விவாதத்திற்கு செல்வது அறிவு ஜீவிகளுக்கும்
உளவியல் வல்லுநர்களுக்கும் உகந்ததாக இருக்குமேயொழிய என்னைப்(கொள்ளிமலை குப்பு) போன்றவர்களுக்கு அது உகந்ததும் இல்லை, அதில்
ஆர்வமும் இல்லை.

திருமதி ஜெயலலிதா என்ற கருணாநிதியின் விளிப்பிற்கு, அடைந்தால் தமிழ் நாடு இல்லையேல் கொடநாடு என்ற கொள்கையுடைய கொள்கைத் தங்கம்
பொன்மனச்செல்வி, சிந்தனைச் செல்வி, தங்கத்தாரகை, பீனிக்குசு பறவை, தங்கத்தலைவி, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்து அண்மையில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதுசமயம், கொள்ளிமலை குப்புவாகிய நான், அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்று சூழுரைத்த கொள்கைத் தங்கம், முத்தமிழ் அறிஞர்,
தமிழினத் தலைவர், தொல்காப்பிய பூங்கா, வாழும் வள்ளுவன், டாக்டர் கலைஞர். மு.கருணாநிதி அவர்களை சந்திக்காத போது, கேட்காத கேள்விக்கு,
அளிக்காத பதிலை இங்கு தருகிறேன்.


கேள்வி: கொள்ளிமலை குப்பு:
வணக்கம் ஐயா, கும்ப்புடுறேனுங்க... நான் கொள்ளிமலை குப்புங்க... கொள்ளிமலையில இருந்து வர்றேங்க...

அண்மையில் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவரை, செல்வி ஜெயலலிதா, ஜெயலலிதா அம்மையார் அல்லது ”அந்த” அம்மையார் என்று கூட குறிப்பிடாமல் திருமதி.ஜெயலலிதா என்று குறிப்பிட்டது ஏனுங்க சாமி...?

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமியோவ்...!


பதில்: கலைஞர் மு.கருணாநிதி
தமிழ் தெரியாத, புரியாத, அறியாத, விளங்காத தரிகெட்டவர்களின் புலம்பலுக்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை. இனம் இனத்தோடு சேரும் என்னும், நாம்( நான் என்றால் உதடுகள் ஒட்டாது) விரும்பும் சொற்றொடருக்கிணங்க, கொள்ளிமலை குப்பு அவர்களுக்கு பதிலளிப்பதில் பெருமிதம்
கொள்கிறேன். மலைசாதி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக நானும் கழகமும் எவ்வாறெல்லாம் போராடினோம் என்பதை இந்த நேரத்திலே நினைவு கூர்கிறேன்.

இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன். சிலருக்கு கேள்விகள் கேட்பது எளிது, சிலருக்கு பதிலளிப்பது எளிது.
எனக்கு இரண்டுமே தண்ணி பட்ட பாடு. கேள்விகளை வேள்விகளாகக் கருதுபவன் நான்!

திருமதி என்று நான் குறிப்பிட்டதை தவறாகப் புரிந்து கொண்ட தமிழறியா குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாக நினைத்து என்னுடைய பதிலைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு - எங்கள் தலைவன் அண்ணா சொல்லிக் கொடுத்த பாடம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு - எங்கள் தலைவனின் மதியுரை. இது கூட தெரியாமல் எங்கள் தலைவரின் பெயரைச் சுமந்து கொண்டு கட்சி நடத்துவது கேலிக்கூத்து.

திருமதிக்கு வருகிறேன்.

திரு என்றால் அழகு, மதி என்றால் அறிவு. அழகையும் அறிவையும் ஒருங்கே பெற்ற பெண்மணி என்றல்லவா நான் சொல்ல
வந்தேன். அதை தவறாக பயன்படுத்தியதாக கூக்குரலிட்டால் அவர் பொருள் தெரியாதவராகிவிடுகிறார். தமிழ் தெரியாவராகிறார்.

இன்னும் சொல்லப் போனால், வேறொரு பொருளிலும் குறிப்பிட்டேன். எனக்கு சிலேடை வரும் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியதில்லை. எனது கவிதைகள் என்னைப் பற்றி கூறும்.

திரு என்றால் அழகு, மதி என்றால் நிலா. நிலாவைப் போன்ற அழகை உடைய அழகு
நிலா என்று சொல்லாமல் சுறுக்கமாக திருமதி என்று குறிப்பிட்டிருக்கிறேன் அவ்வளவுதானே!?

இன்னும் நிறைய வகைகளில் பொருள் கொள்ளலாம். திரு என்றால் மேன்மை பொருந்திய, மதி என்றால் அறிவுடையார். அதனால் அவர் மேன்மை பொருந்திய அறிவுடையார் என்று நான் சொன்னதாகத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும்!?

திரு என்றால் விழி, மதி என்றால் நிலா. நிலவை ஒத்த விழிகளைக் கொண்ட அழகிய பெண்மணி என்றல்லவா பொருள் கொள்ள வேண்டும்!?

திருமதி என்பவர் திருமகள் ஆவார். அதனால் அவரை செல்வத்துக்குத் தலைவியாக உருவகப் படுத்தி இருப்பதாகத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும்!?

திரு என்றால் நன்மை, மதி என்றால் அறிவு. நன்மை பயக்கக் கூடிய அறிவுக்குச் சொந்தக்காரர் என்றுதானே அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்!?

திரு என்றால் மாண்பு. மாண்புமிக்க, மதிப்புமிக்க பெண்மணி என்றாவது அவர் பொருள் கொண்டிருக்க வேண்டும்!?

திரு என்றால் தலை, மதி என்றால் நெற்றியிலே நிறைமதியைப் போல வீற்றிருக்கும் குங்குமம். அந்த திலகத்தை அல்லவா குறிப்பிட்டேன். அதில் மக்கள் திலகம்,தங்கத் தலைவன், சத்துணவு கண்ட சரித்திர நாயகன், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், டாக்டர். எம்.ஜி.ஆர் நிறைமதியப் போல் ஒளி வீசுகிறார் என்றல்லவா புகழ்ந்துரைத்தேன். அதைத் தவறாகப் புரிந்து கொண்டது ஏனோ......!?

இதனால் நான் ஆற்றொணாத்துயரடைந்தேன்.

அடலேறுகளை அமைதி காக்கச் செய்தேன்.

உடன்பிறப்புகளை ஓய்வாய் இருக்கச் சொன்னேன்.

தொண்டர்களை துயரமின்றி இருக்கச் சொன்னேன்.

கழகக் கண்மணிகளை கலவரம் இன்றி நிலவரம் அறியச் சொன்னேன்.

எல்லா துயரத்தையும் நானே தாங்கிக் கொள்கிறேன். எனக்குத் தானே என் தலைவன் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகக் கொடுத்தான்.

நன்றி கொள்ளிமலை குப்பு!

மீண்டும் சந்திப்போம்!! சிந்திப்போம்!!!

Friday, August 14, 2009

விக்கிரமணிய சாமியிடம் கொள்ளிமலை குப்பு சரமாரி கேள்வி-பதில்

அண்மைய காலங்களில் மதிப்பிற்குரிய கொள்ளிமலை குப்பு ஐயா அவர்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து
வருவது அனைவரும் அறிந்ததே. கொள்ளிமலை குப்பு அவர்களின் நீண்ட கால ஆசை திரு விக்கிரமணிய சாமியை சந்திக்க வேண்டும்
என்பது தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த ஆசையும் இப்போது நிறைவேறிவிட்டது.
இதை ஒரு செவ்வியாகவே நிகழ்த்திய கொள்ளிமலை குப்பு அவர்களுக்கு நன்றி!

கொள்ளிமலை குப்பு அவர்களின் அனுமதியோடு இங்கு அதனைத் தருகிறேன்.

கொள்ளிமலை குப்பு: வணக்கம்ங்க சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : யாருய்யா நீ? உன்னை யாருய்யா உள்ள விட்டது? யூ டோண்ட் ஹேவ் மேன்னர்ஸ்? என்ன தைரியம் இருந்தா என் பேர சொல்லிக் கூப்பிடுவே?
உன்ன சுப்ரீம் கோர்ட் வரைக்கும் இழுப்பேன். என்னை யாருன்னு நெனைச்ச நீ?

கொள்ளிமலை குப்பு: ஐயோ சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : திருப்பியும் என் பேரசொல்ற உனக்கு அறிவுல்ல? நீ பெரிய ஆளா?
எதுலடா வந்த?

கொள்ளிமலை குப்பு: நான் எல்லோரையும் சாமின்னு கூப்புடுறது என் பழக்கம் சாமியோவ். கோவிக்காதீங்க சாமியொவ்! நான் பழய சைக்கிள்ல தானுங்க சாமி வந்தன்.


விக்கிரமணிய சாமி : நெற்ய இண்டியன் கவர்மண்டை கவுத்தவன் இந்த சுவாமி, உன் ஓட்டை சைக்கிளை கவுக்க எவ்ளோ நேரம் ஆவும்.


கொள்ளிமலை குப்பு: ஏன் சாமி என் பாவத்துல விழுவுறிய... நான் எழை சாமி...

விக்கிரமணிய சாமி : ஏழையாடா நீ... ஏழையா இருந்தா குளிக்கக் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டுல சொல்லி இருக்காளா? நீ நல்ல என்விரான்மெண்ட
நாசமாக்கிட்ட... இவாள எல்லாம் ஏன் உள்ள விடுறேள்.

கொள்ளிமலை குப்பு: நான் செவனேன்னு கிடக்குறேன் சாமி, நான் கவர்மெண்டை எல்லாம் நாசமாக்க மாட்டேன் சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : டேய்... டேய்... டேய்... டேய்... அது என்னடா சைக்கில்ல துப்பாக்கி, நீ ஸ்ரீலங்காலற்ந்து வற்றியா, தமில் காரனா? நீ தீவிரவாதியா தான் இருப்பே...
நான் யாருன்னு நினைச்சே. மாஜீவ் காந்தியே நான் சொன்னா கை கட்டி நிப்பா... சிஆர்பிஎப் -காரங்கள கால் பண்றன். இங்க வர்ணாநிதி போலீஸ்
நான் சொன்னா கேக்க மாட்டா!? இங்க லா அண்ட் ஆர்டரே இல்லயே... நம்ம உயிரை எடுத்துடுவா போலருக்கு... அந்தம்மாகிட்ட சொல்லிட்டேன்
இதான் நல்ல நேரம் லா அண்ட் ஆர்டர் இல்லைன்னு சொல்லி வர்ணாநிதி ஆட்சிய கலைச்சு தாரேன்ன்னு. அவா எங்க நான் சொன்னா கேக்குறா...

கொள்ளிமலை குப்பு: ஏன் சாமி பொழம்புறிய... நான் கொண்டுவந்தது குருவி சுடுற துப்பாக்கிதாங்க... கவர் மண்டு அனுமதியோட லைசன்சும் வச்சுருக்கேன்ங்க.

விக்கிரமணிய சாமி : பெர்மிஸ்ஸன் இல்லாம உள்ள நுழஞ்சிட்டே... உன்னை ட்ரெஸ் பாஸ் கேஸ்ல உள்ள தள்ளலாம். பாவன்னு விடுறேன். தரையில உக்கார்.

கொள்ளிமலை குப்பு: நன்றிங்க சாமியொவ்! உங்கள்ட்ட பேட்டி..........

விக்கிரமணிய சாமி : உங்கிட்டேர்ந்து பெட்டியா? ஐ அம் டூயிங் இட் இன் ஸ்டேட்ஸ் லெவல். மைண்ட் இட்.

கொள்ளிமலை குப்பு: பெட்டி இல்லைங்க சாமி. பேட்டிங்கோ... எனக்கு இன்கிலீசு தெரியாதுங்க சாமி கொஞ்சம் தமிழ்ல பேசுங்களேன் சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : நீ பட்டிக்காடுன்னு பாத்தா தெர்யுது. உனக்கெல்லாம் படிக்கிறதுக்கு என்ன கேடு.

கொள்ளிமலை குப்பு: கேடு இல்லீங்கோ... எனக்கு வீடும் இல்லை. வாசலும் இல்லைங்க சாமியோவ். ஏழை வேறங்லா எப்படிங்க எடம் கிடைக்கும்.

விக்கிரமணிய சாமி : உனக்கெல்லாம் தான் ரிசர்வேசன் வாங்கி வச்சுருக்காளே அவாளுகிட்ட போய் அழு. ஏன் இங்க வந்து என் கழுத்தருக்கிற.

கொள்ளிமலை குப்பு: சர்வேங்லா சாமி. நாங்க இருக்கிறது கொள்ளிமலை சாமி. அதை சர்வே பண்ணி அளந்து எழைக்கு கொடுக்குறது நிறைய இடர்பாடுகள்
இருக்குன்னு மொதல்வர் விலைஞர் சொல்லி இருக்கிறாருங்கோ. இருந்தாலும் இருக்குறத்த பிரிச்சு கா குழி இருந்தாலும், முடிந்தவரை மீதம் இருந்தால், கொஞ்சமாச்சும் தர்றேன்னு கண்டிசனா சொல்லி இருக்காருங்கோ.

விக்கிரமணிய சாமி : அவா குடுக்குற வரைக்கும் நீ நம்பிகிட்டு இரு. ஓட்டு போட்டியா? முடிஞ்சுது விடு.

கொள்ளிமலை குப்பு: உங்க கிட்ட கேள்வி கேக்கலாமுன்னு வந்திருக்கேன் சாமியோவ்.

விக்கிரமணிய சாமி : என் கிட்ட ஆக்ஸ்போடு யுனிவெர்சிட்டி புரபசரே சந்தேகம் கேப்பான். நீ என்னத்த கேக்கப் போற கேளு.

கொள்ளிமலை குப்பு: திடீர் திடீர்னு காணாம போய்ர்றியளே எங்க போறீங்க சாமி?

விக்கிரமணிய சாமி : அறிவாளிங்கள பல இடத்துல கூப்புடுவா... என்னை இஸ்ரேல்ல அழைக்கிறா! அமெரிக்க யுனிவெர்சிட்டில செமினார் எடுக்கக் கூப்பிடுறா! நம்ம டெல்லிக்காரா கூப்பிடுறா...
ஸ்ரீலங்கா காரா கூப்புடுரா,அவாடெல்லாம் கொடுக்குறா. அவாளுக்கெல்லாம் தெர்யுது நம்ம வால்யூ. இவாளுக்கு தான் தெரியமாட்டேங்குது.

கொள்ளிமலை குப்பு: இவ்வளவு சுத்துறீங்களே... உங்க சொந்த ஊரு எதுங்க சாமியோவ்?

விக்கிரமணிய சாமி : என் நேட்டிவ் மத்ரைக்கு பக்கத்துல இருக்குற சோளவந்தான். ஆனா இந்தியாவில் ஒரு அகில இந்திய கட்சியின் தலைவர். எத்தனை பிரதமர்களை,
முதல்வர்களை உர்வாக்கி இருக்கேன் தெரியுமா? உனக்கெல்லாம் எங்க தெரியபோவுது. என் தலைவிதி உங்கிட்ட பேஷுரேன்.

கொள்ளிமலை குப்பு: நீங்க ஆளவந்தான்னு தெரியும். ஆனா சோளவந்தான்னு இப்ப தான் தெரிஞ்சுது. உங்க கட்சியில நீங்க பிந்திரலேகா அம்மா
தவுத்து எத்தனை உறுப்பினர்கள் சாமியோவ்?

விக்கிரமணிய சாமி : இதே மூணு பேராச்சே, அப்ப ஆந்திராவுக்கும் ஒரு தலைவர நியமிச்சிர வேண்டியதுதான்.

கொள்ளிமலை குப்பு: ரெண்டு பேருன்னு( நீங்க, சந்திரலேகா அம்மா) தானே சொன்னேன் சாமி. நீங்க மூணு பேருங்கிறியளே?

விக்கிரமணிய சாமி : அம்மான்னு சொன்னியோன்னோ அதோட மூணு கணக்கு ஆவுது.

கொள்ளிமலை குப்பு: சரிங்க சாமி... உங்களுக்கு எதோ பற்றாக்குறையா இருக்குற மாதிரி தெரியுது.

விக்கிரமணிய சாமி : எனக்கு என்னடா கொரைச்சல். பில் விளிண்டன் பொண்டாட்டிக்கே பதவி வாங்கிக் கொடுத்தவன் நான், போனியாவுக்கு
பிரதமர் பதவிய கையில கொண்டு போய் கொடுத்தேன். நான் கொடுத்த சீதேவிய வேண்டானுட்டா... மூ...தேவி! வர்ணாநிதி ஆட்சிய கலைச்சு இவாளுக்கு மொத மந்திரி
பதவி வாங்கி கொடுத்தேன். இவாளெல்லாம் நம்மல எங்க மதிக்கிறா?

கொள்ளிமலை குப்பு: உங்கள மதிக்கிறத்த பத்தி பேசும் போது இன்னொன்னு ஞாபகத்துக்கு வருது சாமியோவ். உங்களுக்கு அதிகமாக கோர்ட்டுலதான் மருவாதி கிடைக்கிதுன்னு பேசிக்கிறாங்களே உண்மையா?

விக்கிரமணிய சாமி : இட்ஸ் ட்ரு. இங்க இருக்குற ஜட்ஜுகள்,லீடிங் லாயர்ஸ் எல்லாம் நம்மள்ட்ட லா கத்துண்டவா தான். அதனால அவாள்ட்ட எப்பவும் நமக்கு மர்யாத இர்க்கு.

கொள்ளிமலை குப்பு: கோர்ட்டுல வதிமுக மகளிர் அணி காரவங்கள பாத்திருக்கீங்களா?

விக்கிரமணிய சாமி : அவா உருப்புட மாட்டா. உண்ட வீட்டுக்கு இரண்டவம் பண்றவா... சுபிட்சமா வாழமாட்டா...


பேட்டி தொடரும்...

Thursday, August 6, 2009

தேர்தல் கமிசனுக்கு கொள்ளிமலை குப்புவின் பரிந்துரைகள்

அண்மைய காலங்களில் தேர்தல் கமிசனின் நடவடிக்கைகளை உற்று நோக்கிய கொள்ளிமலை குப்பு, சில பரிந்துரைகள் செய்ய முன்வந்துள்ளார்.


தேர்தல் கமிசனுக்கு கொள்ளிமலை குப்புவின் பரிந்துரைகள்.



1. இடைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு, மக்களை எப்படி விலைக்கு வங்குவது என்பது பற்றி தேர்தல் கமிசனில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டு பயிற்சியளிக்கலாம். பயிற்சி அளிக்கும் அதிகாரிகள் மூத்த அமைச்சர்களிடம் பணியாற்றி பழமும் திண்று கொட்டையும் போட்டவர்களாக இருக்க வேண்டும். பயிற்சி அளிக்கப்பட்ட அரசியல் வியாதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்தல் கமிசன் அதிகாரிகளுக்கு தொழிலின் பெயருக்கு ஏற்றவாறு கமிசன் வழங்கலாம்.

2. மக்களை விலைக்கு வாங்கும் நெளிவு சுழிவான பணியில் எதிர்கட்சிகளுக்கு விலைக்கழிவு கொடுத்து ஊக்கப்படுத்தலாம். அதுவே அவர்கள் ஆளும்கட்சியானபிறகு வட்டியும் முதலுமாய்க் கொடுத்து மக்களின் வயிறு வளர்ப்பது போல் பாசாங்கு செய்து தன் வயிறு வளர்த்துக் கொள்ள ஏதுவாக அமையும். இடைத்தேர்தலில் வழங்கும் அளவுக்கு பொதுத்தேர்தலின் போது மக்களுக்கு பணம் வழங்கினால் அரசியல் வாதிகளில் குடி குன்னகுடிக்குப் போய் விடும் என்பதையும், வெற்றி பெற்ற பிறகு அதிக சிரத்தை எடுத்து கொள்ளை அடிக்க வேண்டிவரும் என்பதையும், அதனால் அடுத்த தேர்தலில் வெற்றி அதிக பணம் கொடுத்தால் தான் கிடைக்கும் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டவேண்டும்.

3. கல்யாண(திருமண) மண்டபங்களை மொத்தமாக இரண்டுமாத லீசுக்கு எடுத்து மக்களை மாக்களாக அடைத்து வைக்க அரசியல் கட்சிகளுக்கு உதவலாம். அடிய புடிய,வெட்டுக்குத்து நடக்கும் போது காயப்பட்டு தீண்டப்படாமல் கிடக்கும் அப்பாவி தொண்டர்களை தொண்டுள்ளம் கொண்ட தேர்தல் கமிசன் மருத்துவமனையில் சேர்க்கலாம்.

4. இராமனாதபுரம்,விருதுநகர்,சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தலை குனிந்தபடி செல்லும் செம்மறி ஆடுகளை மொத்தமாக கீதாரிகளிடமிருந்து வாங்கி அரசியல் வாதிகளிடம் விற்பனை செய்யலாம். பிரபல மசாலா நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளி கோரி, பெரும் அரசியல் புள்ளிகளுக்கு மொத்தமாக பிரியானி மசாலா பார்சல் செய்து அனுப்பலாம்.

5. பிரபல நடிகர், நடிகைகளின் இரண்டு மாத கால் சீட்டைப் பெற்று, அரசியல் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கலாம். நடிகர், நடிகைகள் போதவில்லை என்றால் அரசியல் வாதிகளுக்கு நடிகர், நடிகையாக வேசம் போட வைக்கலாம். அதற்காக குறுகிய கால டாக்டர் பட்டங்களை வழங்க திரைப்படக் கல்லூரிக்கு பரிந்துரைக்கலாம்.

6. பிரபல மின்னியல் நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளி கோரி மொத்தமாக டார்ச் லைட் வாங்கி அரசியல் கட்சிகளின் கிளைக் கழகங்களுக்கு அனுப்பலாம். தேர்தல் சமையத்தில் இரவு நேரங்களில் பணப் பட்டுவாடா செய்ய உதவியாக இருக்கும்.(கரண்ட் தான் இருக்காதே)

7. அரசியல் கட்சிகளின் பிரச்சார கூட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஒரு பெரும் தொகையை லஞ்சமாக மின்சாரவாரிய அதிகாரிகளுக்கு தேர்தல் கமிசன் தனது கருவூலத்தில் இருந்து கொடுக்கலாம்.

8. கட் அவுட்டுகள்,பிலக்ஸ் போர்டுகள், கண் கவர் மின் விளக்குகள், பந்தல், தார் படுதா,மைக்கு செட்டு, பிரியானி - லட்டு-ஜாங்கிரி போடும் சமயல் மேஸ்திரி போன்றவற்றை மொத்தமாக தேர்தல் கமிசன் மன்னார்குடியில் இருந்து வரவழைத்து உதவி செய்யலாம்.

9. தேர்தல் நாளன்று கொடுக்கப் படும் லட்டில் இருக்கும் மூக்குத்தியை உரசிப்பார்க்க பொற்க்கொல்லர்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கலாம். அவர்களைக் கண்கானிக்க காவல் துறை அதிகாரிகளை நியமிக்கலாம். அவர்களிடம் இருந்து மூக்குத்திகளை பாதுகாக்க மத்திய ரிசர்வ் படை, அவர்களிடம் இருந்து பாதுகாக்க தனியார் செக்க்யூரிட்டி, அவர்களிடமிருந்து பாதுகாக்க இராணுவம், அவர்களிடம் இருந்து பாதுகாக்க ரஜினிகாந்த் சொன்ன மாதிரி கடவுள் இருந்தா கூப்பிடலாம். அப்படி இல்லாத பட்சதில் அவன் அவன் எடுத்து சாப்பிடட்டும் என்று வேடிக்கை பாக்கலாம். அதான தேர்தல் கமிசனோட வாடிக்கை (ஜாப் ஸ்கோப்பு).

10. முக்கிய தலைவர் தோல்வியுரும் நிலையில், ஓட்டு எண்ணிக்கையை நிறுத்திவைத்துவிட்டு மேலிடத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கலாம். உத்தரவு வந்தவுடன் தோல்வி அடைந்த தலைவரை வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம். பிற்காலத்தில் சுயசரிதை எழுதும் போது நடந்த உண்மையை போட்டுடைத்து, புத்தக விற்பனையை பெருக்கலாம்.




Monday, May 11, 2009

தியாகத் திருவிளக்கு சோனியா -கலைஞர் புகழாரம், கொள்ளிமலை குப்பு கேள்வி பதில்



சென்னை தீவுத்திடலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
முன்பெல்லாம் திமுக கோஷமாக வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று இருந்தது. இப்பொழுது நம்முடைய சோனியா அவர்கள், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று நல்லாட்சி நடத்துவற்கு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு வழிகாட்டிய அமைந்துள்ள சூழ்நிலையில், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அந்த வாசகம் மாற்றப்பட்டு, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதற்கு பதிலாக அது அந்தக் காலம். வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது இது இந்தக் காலம்.


என்ன கொடுமை பாருங்க! அடிமைத்தளையை எதிர்த்து பன்னிரண்டு வயதில் கொடி பிடித்த தலைவர் சொன்னதா இது? ஐயகோ!


நம்முடைய அருமை அம்மையார், தியாக திருவிளக்கு சோனியா காந்தி அவர்களை நான் தியாக திருவிளக்கு என்று அடைமொழி கொடுத்து கூறுவதற்கு காரணம் உலகரிந்த உண்மை. நாடறிந்த செய்தி, நல்லோர் புரிந்துகொண்ட விவகாரம், அவரை பிரதமராக பொறுப்பேற்க வருக வருக என்று ராஷ்டீரிய பவன் அழைத்தபோது, நான் வரமறுக்கிறேன் என்று அந்த பதவியை தியாகம் செய்தவர் நம்முடைய சோனியா அவர்கள்.


அப்துல் கலாம் முடியாதுன்னுட்டார். அதனால ஒரு சோளக்கொல்லை பொம்மையை காவலுக்கு வச்சுட்டு இவங்க மேயுறாங்க(கொள்ளை). அதுதானே உண்மை!? இதுல வெள்ளி குத்துவெளக்கு எங்க வந்துச்சு? இத்தாலிய பெண்மணி இந்திய பிரதமர் பதவி வேண்டானுட்டா அது தியாகமா?நம்ம கொள்ளிமலை குப்பு இத்தாலிய அதிபர் பதவிய வேண்டானுட்டா அவர் தியாகியா!?வடநாட்டுல சிலபேரு தியாகின்னே பேரு வச்சுருக்காங்க. அந்தமாரி தியாகியா இருக்குமோ!? புரியல!?



அவருக்கு இணையாக தலைமையை சொல்ல முடியாத அளவில், வந்த பதவி, கதவை தட்டிய பதவி, காலடியிலே வந்து விழுந்த பதவி இது வேண்டாம் என்று நான் மக்களுக்கு சேவை செய்கிறேன் என் கட்சியின் மூலமாக என்று தேர்ந்தெடுத்துக்கொண்ட அந்த சொக்கத் தங்கத்தை வரவேற்று மகிழ்கிறேன்.

ஆமாமா அந்த அன்னைக்கு இணையா யாரும் இந்தியாவுல தகுதியானவுக இல்ல.என்ன கொடுமை ஐயா இது!?


அடடடடா! சொக்கத்தங்கமுன்னு சொல்லி விசயகாந்துக்கு வேற இலவச வெளம்பரம் கொடுக்குறாரே தலைவர்! ஓட்டெல்லாம் அங்க போயிறப் போவுதே!?


நான் வடக்கு வழங்குகிறது என்று சொன்னேன். பாராளுமன்ற தேர்தல் என்றால், வடக்கை நோக்கி, டெல்லியை நோக்கி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள் பிரதிநிதிகளும், கட்சியினரும் தங்களது தேர்தல் அறிக்கைகள் மூலமாக தேவைகளை உணர்த்துவார்கள். அப்படி உணர்த்தப்பட்ட தேவைகள் பல நிறைவு செய்யப்படாமலே போயின என்றாலும் கூட, ஒரு சிலவற்றை இங்கே சொல்கிறேன்.


அது உண்மைதான்!நாம சொல்றத்த விட மக்கள் சொன்னா மகிழ்வா இருக்குமுல்ல!



56,664 கோடி ரூபாய் தமிழகம் எங்கும் சாலைகள், மேம்பாலங்கள், துறைமுகப் பணிகள் வழங்கியிருக்கிறார்கள். 14,600 கோடி ரூபாய் சென்னை நகருக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கும், 2,427 கோடி ரூபாய்க்கு சேது சமுத்திட்டத்தை அனுமதித்துவிட்டுதான் இங்கே வந்திருக்கிறார்கள். ஒகேனக்கல் திட்டம், சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றிக்கு நிதி ஒதுக்கீடு, 50 பைசா செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி, தேசிய மோட்டடார் வாகன ஆராய்ச்சி கட்டமைப்பு மையம், சென்னைக்கு அருகில் கடல்சார் பல்கலைக்கழகம், தமிழ் செம்மொழி நிறைவேற்றம், சென்னையில் தமிழ் செம்மொழி நிறுவனம், திருச்சியில் இந்திய வேளாண்மை கல்வி நிறுவனம், மாணவர்களுக்கு கல்வி கடன், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், பொடா சட்டம் ரத்து ஆகியவற்றை தமிழகத்துக்கு செய்துவிட்டுதான் இங்கே வந்திருக்கிறார்கள்.


ஈழத் தமிழினப் படுகொலையும் சேத்துக்குவோமே!

ஆமா ஒகனேக்கல் திட்டம் கர்நாடக தேர்தலுக்கப்புறம் அன்னை நிறைவேத்துவாங்கன்னு சொன்னேளே, அது என்னாச்சு!? அதை இப்ப ஞாபகமூட்டலாமா?ஓ! அது சட்டமன்ற தேர்தல் இல்லியோ? நாடாளுமன்ற தேர்தலா? மன்னிக்கவும! அப்ப ஓ.கே தான்!


இவ்வளவும் சொன்னால், இங்கே உள்ள சிலர் இது நாடாளுமன்றத்திற்கு நடைபெறுகின்ற தேர்தல்தானே, திட்டங்களைப் பற்றித்தானே பேசவேண்டும் என்ற நிலையை மறந்துவிட்டு, திசைதிருப்பும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறார்கள்.


அப்படியா!ஈழத்தில் இந்தியா செய்யும் இரத்தக் களரி விளையாட்டைக் காட்டி திசை திருப்புறாங்க போலருக்கு!


இப்பொழுது மிகப்பெரிய பிரச்சனை. ஈழப்பிரச்சனை.

தாங்களும் அந்த பக்கமா திசை திருப்பித்தான் பாக்குறிய! தேர்தல வேற இப்ப வச்சுத் தொலைஞ்சுட்டாங்க!
அந்த தாயி தமிழ் ஈழம் பெற்றுத் தருவேன் என்று சொன்னதுக்கப்புறம், தாங்களும் தமிழீழம் பெறுவதற்கு முயற்சி செய்வேன்ன்னு சொன்னீர்களே!? அதுக்கு என்ன பொருள் சாமியோவ்!


நான் 3.11.07 அன்று தமிழ்ச்செல்வன் என்ற இலங்கையிலே பாலசிங்கத்தினுடைய ஆலோகனாக இருந்த ஒரு வாலிபரின் மறைவுக்காக ஒரு இரங்கல் பா எழுதினேன். இது 4.11.2007 அன்று பத்திரிகைகளில் வெளி வந்தது. உடனடியாக நம்முடைய தமிழகத்தினுடைய பிரதான எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) ஒரு அறிக்கை வெளியிடுகின்றார்.


ஜெயலலிதா இனவுணர்வு இல்லாதவராயிற்றே!



விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கருணாநிதி அஞ்சல் கவிதை இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். பிரபாகரன் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு, ஒரு முதல்வர் அவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற ஒருவர் இனியும் ஒரு நிமிடம் கூட முதல்வராக நீடிக்க தகுதி இல்லை.
தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இரங்கல் பா எழுதியதற்காக கருணாநிதி முதலமைச்சராக ஒரு நிமிடம் கூட நீடிக்க தகுதியில்லை. அந்த உரிமையை கருணாநிதி இழந்துவிட்டார். அவர் தலைமையில் இருக்கும் திமுக ஆட்சியும் அந்த உரிமையை இழந்துவிட்டது. எனவே மத்திய அரசு உடனடியாக கருணாநிதியின் தலைமையிலான இந்த மைனாரிட்டி திமுக அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நீங்க எப்ப ஆட்சிக்கு வந்தாலும், அதை எப்படியாவது கலைச்சுப்புடனும்னு நிக்குதே அந்த தாயி! இது தகுமா? நியாயமா? நல்ல விடயங்களுக்கு கொள்கைகளை மாற்றிக் கொள்ளலாம்.பூமி தட்டையாக இருந்ததாக முதலில் சொன்னார்கள். பின்னர் உருண்டை என நிரூபிக்கப் பட்டபிறகு ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல் விதிகள் காலத்தால் மாறும். காலத்தின் கட்டாயமும் கூட.


அவர்தான் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திய அந்த எதிர்க்கட்சித் தலைவர்தான் இன்று தமிழ் ஈழம் பெற்று தருவேன் என்று குறிப்பிடுகிறார். என்னுடைய ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். அதே தமிழ் ஈழத்திற்காக போராடுகிறார் என்றால் இது எவ்வளவு வேடிக்கை, வினோதம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
சோனியா அவர்களும், பிரதமர் அவர்களும் இலங்கை பிரச்சனை பற்றி பேசவில்லை என்று சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியிலே ராகுல்காந்தி வார்த்தைக்கு வார்த்தை இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்று சொன்னார். நேற்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங், வரிக்கு வரி இலங்கையிலே போர் நின்று அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். ஜனநாயக வழியிலே இலங்கை பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அங்கு வாழுகின்ற இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை கிடைத்திட வேண்டும் என்று சொன்னார்கள்.

சொல்லுறாங்க, நல்லது செய்ய மாட்டேங்குறாங்களே சாமி! கெடுதல் இல்ல செய்யுறாங்க. ஏட்டு சொரைக்கா கறிக்கு ஒதவுங்க்லா சாமி?


இதுவெல்லாம் சரி சோனியா காந்தி சொன்னார்களா என்று கேட்டார்கள். 31.3.2009 அன்று அம்மையார்கள் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள். நான் பதிலுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. தேவைப்பட்டால் சொல்லுகிறேன். அது என் பழக்கமும் இல்லை.
பாம்பு கடித்தது என்பதற்காக, நாம் திரும்பவும் பாம்பை கடித்துவிட கூடாது என்பதை சொல்லி விடைபெறுகிறேன்.


உங்களுக்கு எழுதிய கடிதத்தில் போர் நிக்குமா? படுகொலை தடுக்கப் படுமா? கடிதம் மற்றும் தந்திகளின் முக்கியத்துவத்தை மக்கள் அறிவார்கள். அதனால் அனைவரும் அன்னை சோனியாவுக்கு ஓட்டு போடுவாங்க என்று நம்புறேங்க சாமியோவ்!



நன்றி: கொள்ளிமலை குப்பு

Friday, May 8, 2009

காங்கிரஸ் சுதர்சனத்திடம் கொள்ளிமலை குப்பு சரமாரி கேள்வி பதில்


ராமர் பாலத்தைக் காப்போம் என கூறி வரும் அதிமுக மதச்சார்பற்ற கட்சி அல்ல.
உங்க மத சார்பின்மையை நினைச்சு நாடே சிரிக்குது சாமியோவ்!
நீங்க இன சார்பின்மையும் கடை பிடிப்பதாகக் கேள்விப் படுறோம். அதான்...! தமிழின சார்பின்மை.

அக்கட்சியுடன் உறவு வைப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சொல்லவில்லை என்று தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார்.

அப்படியா?
நிறைய வாசியுங்கள்!
சுய நினைவோடு தான் சொல்றேளா? இல்ல உங்களுக்கு செலக்டிவ் அம்னீசியாவா?

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று மிகத் தெளிவாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கண்டிப்பா வெற்றிபெறும். வரும் உள்ளாட்சி தேர்தலிளில் காங்கிரசை உள்ளடக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி எதிர்க்கட்சிகளைத் தோற்கடித்து 40 கவுன்சிலர்களை வென்றெடுக்கும் என்பது திண்ணம். வேட்பாளர்கள் தங்களது சொந்த செல்வாக்கால் வெற்றி பெறுவார்கள். காங்கிரசால் அல்ல. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இதை வட நாட்டுக்காரன் ராகுல் சொன்னா நம்புவிய. நீங்க தமிழ் நாட்டுக் காரர் தானே உங்களுக்குத் தெரியாதா? இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியளா?
பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியபோதுதான், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கிறது என்று குறிப்பிட்டாரே தவிர, அ.தி.மு.க.வுடன் உறவு வைப்போம் என்று சொல்லவில்லை.
நீங்க யாரோடு வேணும்னாலும் உறவு வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன கணக்கா இருக்கு . ஆப்ட்ரால் நீங்க அரசியல் பிழைப்பு தானே நடத்துரிய!? உங்க கதவு திறந்து தான் இருக்கும்.

அதிமுக மதச்சார்பற்ற கட்சி என்று சொல்கிறார்கள். ராமர் பாலத்தை பாதுகாப்போம், சேது சமுத்திர திட்டத்தை நிறுத்துவோம் என்று ஜெயலலிதா கூறிவருகிறார். இதில் இருந்தே அ.தி.மு.க. மதசார்பற்ற கட்சி இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
உண்மையில் நீங்கதான் சாமி மத சார்புள்ள கட்சி. எங்களுக்கு செலெக்டிவ் அம்னீசியா கிடையாது. காங்கிரஸ் ஆட்சியில் நரசிமராவ் தலைமையில் எஸ்.பி.சவான் முன்னிலையில் பாபர் மசூதி இடிக்கப் பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை மறைக்காதீர்கள். பா.ச.க ஆட்சியில் பாபர் மசூதியும் இடிக்கப் படவில்லை. ராமர் கோவிலும் கட்டப் படவில்லை. இப்ப சொல்லுங்க யார் மதசார்புள்ளவர்கள்?அப்படியும் நாங்கள் மதசார்பற்றவர் என்று சொல்லிக் கொள்கிறீர்களா? ஏற்றுக் கொள்கிறோம். நீங்க கையாலாகாதவர்கள் என்று நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். பாபர் மசூதி இடிக்கப் படுவதை உங்களால் தடுக்க முடியவில்லையே?. உங்களால் முடியாது. உங்களுக்கு ஆட்சியெல்லாம் லாயக்கு பட்டு வராது சாமியோவ்!?

16 ஆண்டு பிரதமராக இருந்த நேருவுக்கே டெல்லியில் சொந்தமாக வீடு கிடையாது. இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராஜீவ்காந்திக்கும் டெல்லியில் சொந்த வீடு கிடையாது. சோனியா காந்தி அரசு வீட்டில் தான் இருக்கிறார்.
அவரது சொத்து கணக்கும் வெளியிடப்பட்டது.
அப்படியா?
நீங்கெல்லாம் ரொம்ப ஏழை என்று எங்கெளுக்கெல்லாம் தெரியும். பாவம் நீங்கள். அதை எங்க கையில சொல்லாதீங்க. சொல்லும் போது நீங்க வெக்கப் படுறது தெரியுது.
நீங்க சொல்றபடி நீங்க எல்லாம் தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தில் அரசாங்கத்து சொத்தில் தான் வாழுறிய! ஒத்துக்கிட்டதுக்கு நன்றி சாமியோவ்!

ஆனால், அதிமுக. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ, தேர்தல் பிரசாரத்தின்போது, எனக்கு எதுவும் இல்லை என்று கூறிவருகிறார். அவரது சொத்து கணக்கு எவ்வளவு என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
இதைக் கூட மக்களுக்கு எடுத்துச் சொல்ல உங்களுக்கு அலுப்பா? அதையும் மக்கள் தான் கண்டு பிடிக்கனுமா? இவ்வளவு அலுப்புப் படும் உங்களுக்கு எதுக்கு பதவி? மக்கள் பணி? பேசாம வூட்டாண்ட இருங்க சாமியோவ்!

அ.தி.மு.க.வில் வலுவான பிரசாரக்காரர்கள் இல்லை. அதனால், சினிமாக்காரர்களை வாடகைக்கு பிடித்து பிரசாரத்தில் ஈடுபடவைக்கிறார்கள்.
ஆமாமா! நீங்க சொல்றது சரிதான். காங்கிரசில் கூட நீங்க தொண்டர்களை வாடகைக்குதானே எடுக்குரிய! உங்கள்ட்ட ஏது தொண்டர்கள்?

அது மக்களிடம் எடுபடாது. தமிழர்கள் புத்திசாலிகள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
கண்டிப்பா! தமிழர்கள் நல்லா தெரிஞ்சு வச்சுருக்காங்க! நீங்க பண்ணுன இனப் படுகொலையையும்,துரோகத்தையும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 5 ஆண்டு கால சாதனைகளையும், தி.மு.க.வின் 3 ஆண்டுகால சாதனைகளையும் மனதில் வைத்து மக்கள் வாக்களிப்பார்கள் என்றார் சுதர்சனம்.
ஆம்...! நல்ல சாதனைகள் எல்லாம் மனசுல நிக்குது,
இலங்கை இனப் படுகொலை.
பீகார் கலவரம்,
மகாராட்டிர கலவரம்,
அசாம் கலவரம்

கர்நாடக கலவரம் பிளஸ் காவிரி துரோகம்.
பெரியாறு துரோகம்
ஒகனேக்கல் துரோகம்

அணு ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்தது,

இலங்கை அரசுடன் கள்ள உறவு கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்துக்குத் துரோகம்.

இப்படி நிறைய இருக்கு சாமியோவ்!



நன்றி: கொள்ளிமலை குப்பு



Sunday, April 5, 2009

அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிடும் அறிவிப்புகள் - நகைச்சுவை

அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிடும் அறிவிப்புகள் - நகைச்சுவை

ஒவ்வொருவராக வெளியிட்ட அறிவிப்புகளை கொள்ளிமலை குப்பு அவர்கள் தருகிறார்கள்.

அத்வானி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் தலைநகரை புதுதில்லியிலிருந்து அயோத்திக்கு மாற்றுவோம். இந்தியாவில் கோக்கக் கோலா போற்ற அந்நிய குளிர்பானங்களை தடை செய்து விட்டு அதே கோவில்(கோவில்ன்னா எங்களுக்கு இஷ்டமில்லையா) ஆரம்பிக்கும் கோமிய பானம் எங்கும் கிடைக்கச் செய்வோம்.

சோனியா

இத்தாலிய உணவான பிஸ்ஸாவை இந்தியர்களுக்குச் சாப்பிடக்கொடுத்து அதனால் வரும் உள்நாட்டுச் செலவாணியை இத்தாலிய வங்கிக்கு மட்டுமல்லாது ஸ்விஸ் வங்கிக்கும் தலவாணி தலவாணியாக கட்டி அனுப்பிவைப்போம். பழசை ஞாபக மூட்டுவதால், போர்ப்ஸ் இதழை இந்தியாவில் தடை செய்வோம்.

மாயாவதி

முதல் கட்டப் பணியாக உத்திர பிரதேசத்தை வாங்கி விட்டேன். இனி இந்தியாதான் எனது இலக்கு. தொழிலில் முதல் போட்டாத்தான் வேலைக்கு ஆகும் என்கிறபடியால், அனைத்து மாநிலங்களுக்கும் பணமூட்டைகளை அனுப்பிவைத்திருக்கிறேன்.

ஜோதிபாசு

என்னுடைய வாழ்நாள் கனவு பிரதமர் பதவி, எனது வயது வேகமாக ஆவதை நினைத்து வேதனைப்படுகிறேன். தேர்தல் முடிந்ததும் மூற்றாவது அணி முப்பது சில்லுகளாகப் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது.

தேவகௌடா

எனக்கு பிரதமர் பதவி தேவை என்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்துவிட்டு வந்தேன். நிச்சயம் கிடைக்கும். எனது சின்னம் ராசியானது இரட்டை நாக்கு.

கருணாநிதி

எங்களை வெற்றிபெற வைத்தால் நாங்கள் அரசு ஊழியருடைய ஓய்வு பெறும் வயதை 58 -ல் இருந்து 98 -க்கு மாற்றுவோம், இருப்பினும் வாரிசுகள் உள்ளவர்களுக்கு இதிலிருந்து விதி விலக்கும் அளிக்கப் படும். ராமர் பாலம் அறுபது சதம் வேலை முடிந்து விட்டதால் ஏவ்வ்வ்தும் முடியாத வேலை இருந்தால் உயர்ரக தொலைநோக்கியை நாசாவில் இருந்து வாங்கி கோர்ட் உத்தரவிட்டால் உற்று நோக்கி மறு டெண்டர் அறிவித்து எங்கள் இலக்கை அடைவோம்.

ஜெயலலிதா

புரட்சித்தலைவி தங்கத் தாரகை டாக்டர் ஜெ .ஜெயலலிதா என்று ஒரு தெருவுக்கு அமெரிக்காவில் பெயர் சூட்டி இருக்கிறார்கள். அந்தத் தெருவின் வாஸ்து சரியில்லாத காரணத்தால் அதை சரி செய்ய பணிக்கரிடம் பணியை ஒப்படைத்திருக்கிறோம். சென்னையின் இதயம் போன்ற பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையைக் கட்ட இருக்கிறோம். அதில் குனிந்து குனிந்து இடுப்பு கடுத்த எங்கள் கட்சித் தலைவர்களை சேர்த்து சிகிச்சை வழங்கலாம் என்பது திட்டம்.

Saturday, April 4, 2009

திமுக வேட்பாளர்கள்!

திமுக வேட்பாளர்கள்!

வடசென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன் (மாணவர், வயசு கம்மிதானுங்க)

தென்சென்னை- வெற்றியழகன் (பேராசிரியரின் பேரன்)

மத்திய சென்னை- தயாநிதிமாறன் (கலைஞரின் பேரன்)

ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு (இராமர் பாலம் புகழ்)

திருவண்ணாமலை- ஸ்ரீதர் (நகரசபை தலைவர்)

நீலகிரி-ஆ.ராசா (இவர் ச்பெக்டாக்கில் போடுவதில்லை)

பொள்ளாச்சி- வி.பி. சந்திரசேகரன் அல்லது க.ரா.சுப்பையா (எந்த எலநி வெல பொரும்னு தெரியல!? )

நாமக்கல்- கே.பி.ராமலிங்கம் ( ஜெயலலிதாவை அடித்தவர்)

கிருஷ்ணகிரி- சுகவனம் (ஜெயலலிதாவைத் (தோற்)கடித்தவர்

தர்மபுரி- மனோகர் (எந்த மனநிலையில் நிக்கிறாரோ?)

கள்ளக்குறிச்சி- வேங்கடபதி(சட்டை பண்ணாத சட்ட அமைச்சர்) அல்லது ஆதிசங்கர் (எம்பி)

நாகை-ஏ.கே.எஸ்.விஜயன் (விஜயமுள்ளவர்)

தஞ்சை- பழனிமாணிக்கம் (கப்டனையே ரைடு பண்ணுனவர்)

கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன் (காங்கிரஸ் காரங்க என்ன பண்ணுவாங்களோ?)

மதுரை- மு.க.அழகிரி.(கலைஞரின் மகன் -நீதிக் கட்சியைச் சேர்ந்த அஞ்சாநெஞ்சன் அல்ல)

இவர்களெல்லாம் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என்று கொள்ளிமலை குப்பு நம்புகிறார்.

ஆகாச வாணி ஆத்தாவீட்டு...!

ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது கொள்ளிமலை குப்பு,
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தொடர்ந்து.........................................................................................!!! மத்திய காங்கிரஸ் அரசை வலியுறுத்தப் போவதாக, திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் திரு.மு.கருணாநிதி, தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், எம்.பி சீட்டு கேட்கும் தொண்டர்களுக்கும், கீழ்மட்டத் தலைவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார். குடும்பத்தவர்களுக்குப் போதுமான எம்.பி தொகுதிகளைப்பிரித்துக் கொடுக்கமுடியாமல் ஆற்றொணாத் துயர் அடைவதாக சூசகமாகத் தெரிவித்தார்.

மதிமுகவில் இருந்து வந்த கண்ணப்பன் காரோட்டிகளைக் கவனித்துக் கொள்வார் என்றும், எல்.கணேசன் உடன்பிறப்புகளிடையே தேர்தலின் போது ஏற்படும் உராய்வுகளைப் பலப்படுத்துவார் என்றும் தெரிவித்தார். மேலும் கூறுகையில் செஞ்சி இராமச்சந்திரன் வஞ்சிக்கப்படுவார் என்றும், கம்பம் செல்வேந்திரன் கொடிக்கம்பங்களைத் தொண்டர்களுக்கு வழங்குவார் என்றும், இவர்களுக்கெல்லாம் அண்ணாவிடம் இரவல் பெற்ற தனது இதயத்தில் கண்டிப்பாக இடம் உண்டு என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.

இதனிடையே புதுதில்லியில்,
பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரும், முன்னாலைய துணைப் பிரதமருமான திரு. எல்.கே.அத்வானி, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது, இந்தியாவின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுதந்திர தினம் ஆகஸ்டு 15 -க்கு பதிலாக சரஸ்வதி பூஜை அன்று கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலங்களின் உடைந்த பாகங்களைக் கொண்டு கரசேவை செய்து ராமர் பாலத்தை உயர்த்திக் கட்டுவோம் என்றும் சூளுரைத்தார். முதுகில் இராமர் இட்ட கோட்டுடன் திரியும் அணில்களை பிடிப்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வோம் என்று உறுதிபட கூறினார்.

இத்துடன் இந்தச் செய்திகள் முடிவடைந்தன. மீண்டும் அடுத்த செய்திகளின் சாரத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெற்றுக் கொள்வது உங்கள் கொள்ளிமலை குப்பு.




Monday, October 20, 2008

முதல்வர் பதவி -விஜயகாந்திடம் கொள்ளிமலை குப்புவின் சரமாரி கேள்விகள்!



முதல்வர் பதவிக்குப் போட்டியிடுபவர்களிடம் கொள்ளிமலை குப்புவின் கேள்விகள் -3


தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவதற்கு பலர் முயற்சி செய்கிற இந்த நேரத்தில், அவர்கள் அனைவரிடமும் கொள்ளிமலை குப்பு என்பவர் கேள்வி கேட்க விரும்புகிறார்.

இதோ கொள்ளிமலை குப்பு அவர்கள்!

வணக்கமுங்க! கும்புடுறேனுங்க சாமியோவ்!! நான் தான் கொள்ளிமலை குப்புங்க! நானும் உங்க சாதி தானுங்க. எனக்கும் மொதலமைச்ச்சரா வர ஆசைதானுங்க. ஆனா வரமுயாதுன்னு சொல்ராங்கங்க. ஏன்னு கேட்டா உன்கிட்ட என்ன இருக்குன்னு பல்லு மேல நாக்க போட்டு கேக்குராங்கங்கோ!

பொரச்சிக்கலைஞர் , கேப்புட்டேன் , கருப்பு எம்.ஜி.ஆர் இப்புடி மக்கள் உங்களை பலவாரா அழைக்கிறாங்க சாமி. நானும் அப்படியே கும்புட்டுகுறேனுங்கோ! உங்க கட்சி 2011-ல் ஆச்சிக்கு வருமுன்னு கண்டிஷனா சொல்லி போட்டீங்க சாமி. நீங்க தான் மொதலமைக்சர்னும் சொல்லி கிட்டு வாறீங்க. நல்லதுங்க சாமி. உங்க கிட்ட நல்லா கிட்ட புடிச்சு நாலு கேள்வி கேக்கலாமுன்னு வந்திருக்கேன் சாமி இந்த குப்பு!

1) கட்சி ஆரம்பிச்ச்சத்துலேர்ந்து கேக்குறேங்க சாமி. கொஞ்சம் கோவிக்காதீங்க சாமியோவ்! நீங்க கட்சி ஆரம்பிச்சப்ப நாள் நட்சத்திரம், இடம், பேரு, கொடி எல்லாம் ஒரு சாமியார் கிட்ட கேட்டு தானேங்க செஞ்சீங்க. ஆச்சிக்கு வந்தா நீங்க மொதலமைச்ச்சர். ஆனா, அந்த சாமியார் தானுங்களே ஆட்சியை நடத்துவாரு?

2) சாமி உங்களை மாதிரி எல்லா அரசியல் வாதிகளும் கட்சி ஆரம்பிக்கிறது, மொதல் மாநாடு எல்லாம் மதுரையில நடத்துறீங்க சாமியோவ்! சந்தோசப் படுரோமுங்க. ஆனா இந்த கம்பெனி கிம்பெனின்கிரான்களே, அதான் சாமி தொழிலு, அதை மட்டும் வேற ஊருக்கு கொண்டு போறீங்களே இது நாயமா சாமி. நீங்க எப்படின்னு சொல்லுங்க சாமியோவ்?

3) கிந்தி படிக்க சொல்றீங்க சாமி. வாஸ்தவந்தான் சாமியோவ்! நம்ம புள்ளைங்க என்னதான் கிந்தி படிச்சாலும். வடநாட்டுக்காரங்க மதராசின்னு ஒதுக்கி வைக்கிறாங்களே, அதை மாத்துறத்துக்கு என்ன திட்டம் வச்சிருக்கீங்க சாமி? பிரதமராவுற திட்டம் இருக்கா சாமி?

4) அரசியலில் பழமும் தின்னு கொட்டையும் போட்ட அய்யா, பண்ணு ரொட்டியாரை பக்கத்துல வச்சுருக்கீங்க. சந்தொஷமுங்கோ. ஆனா இளைஞர் அணிக்கு மாப்பிள்ளைய போட்டுடீங்களே! இது சரியா சாமி? பொஞ்சாதிய உங்க கச்சியில முன்னிருத்துறீங்களே, இப்புடி பன்றத்துனாலே, என் சாதிக்காரன் எல்லாம் கேப்புட்டன் சாமியும் குடுப்பத்ததான் கொண்டார்ராருன்னு சொல்றாங்க சாமியோவ்! ஏன் சாமி வேற ஆள் இல்லீங்களா தமிழ் நாட்டுல?

5) ரேஷன் பொருளை வீட்டுக்கு கொண்டு வந்து தருவேன்னு சொன்னீங்க. நல்ல திட்டமுங்க. ஆனா, ரேஷன் கடையில இப்ப இருக்குற கியூவக் கொரைச்சாக் கூட கும்புடுவோமுங்கோ! ராத்திரி நேரத்துல ரேஷன் பொருள் போட்டீங்கன்னா, நாங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து வாங்குறதுக்கு சௌரியப்படும் சாமியோவ். ஏதாவது திட்டம் இருக்குங்களா?

6) பொறுப்பான அரசியல் கச்சிக்கு தலைவரா இருக்கீங்க சாமி. உங்க சிநேகிதனா இருந்தாலும் பொது எடத்துல போட்டு அடிக்கலாங்களா?

7) உங்கப் புள்ளைக்கெல்லாம் பேரு வச்சீங்க, ஆனா தமிழர்களைக் கொள்ளும் இலங்கை- சிங்கள அரசுக்கு, இந்தியா ராணுவ உதவி மற்றும் தொழில் நுப்ப ஒதவி எல்லாம் செய்யுதே. அதை ஏங்க கண்டிச்சு போராட்டம் நடத்தலே? (பேரு வச்சியே சோறு வச்சியான்னு விவேக் கேட்டது தான் சாமி நாபகத்துக்கு வருது) காங்கிரஸ் கூட கூட்டணி வைக்க போறீங்களா சாமி? அப்ப நீங்களும் ஈழப்பிரச்சனையில் அரசியல் தான் செய்றீங்களா சாமி?

8) கலைஞரைத் அதிகமாகத் தாக்கிப் பேசுறீங்க சாமி. ஆனா அந்த ஆச்சியை மட்டும் ஒண்ணுமே சொல்ல மாட்டீங்கிறீங்களே? அப்ப அந்த ஆச்சியோட ஆச்சி நல்லா இருந்திச்சுன்னு சொல்ல வர்றீங்களா சாமி? இல்ல பண்ணுருட்டி அய்யா அந்த ஆச்சியைப் பத்தி சொல்லிப் பயமூர்த்திட்டாங்களா??

9) சாமி! நீங்க பொது வாழ்வுல இருக்கீங்க சாமியோவ்! நீங்க காலேஜெல்லாம் வச்சுருக்கீங்கன்னு சொல்றாங்க. அதுல என் சாதி ஏழைப் புள்ளைங்க படிக்க காசு இல்லாம சீட்டு கொடுப்பீங்களா சாமி?

10) நீங்க நெறைய படத்துல நேர்மையான காவல்துறை அதிகாரியா நடிக்கிறீங்க. நீங்க ஆச்சிக்கு வந்தால் காவல் துறையில ஊழலே இருக்காதா சாமி. அதுக்கு என்ன திட்டம் சாமி வச்சு இருக்கீங்க? அப்பாவிகளை தண்டிச்சுட்டு, குற்றவாளிகளை விடுவிக்கும் பல காவல் துறை அதிகாரிங்களை என்ன பண்ண போறீங்க சாமி?

11) சாமி! நீங்க அந்த மவராசன் எம்.ஜி.யார் வேனை வங்கி ஓட்டுறதால நீங்க கருப்பு எம்.ஜி.யாருங்களா? நீங்க ஏன் காமராஜர் எம்.ஜி.ஆர் கலந்த ஆட்சியைக் கொண்டு வருவேன்கிறீங்க? ஏன் விசயகாந்து ஆச்சியைக் கொண்டுவந்தா என்ன? எம்.ஜி.ஆர் அண்ணாயிசம்னு சொன்ன மாதிரி, நீங்க குழப்புறீங்களே? அப்பத்தான் உங்களை எம்.ஜி.ஆர்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறீங்களா?

12) தமிழ்க்குடிதாங்கி அய்யாவோட இடத்துல போய் செயிச்சீங்க சாமி! ஏன் சாமி அந்த கலைஞர் அய்யாவையும்,அந்த செயலலிதா ஆச்சியையும் பாக்குற மாதிரி ஆயிடுமேன்னுதானே சட்டசபைக்கு போவ மாட்டேங்கிறீங்க?

13) குடி குடியைக் கெடுக்கும்னு சொல்லுவாங்க சாமி. உங்கள்ட்ட அத பத்தி கேக்க வேண்டாம்னு நினைக்கிறேன் சாமி! கேப்டன் சாமி நீங்க ஆச்சிக்கு வந்தா டாஸ்மாக் தொரப்பீங்களா? இல்ல மூடுவீங்களா? வெக்கப்படாம சொல்லுங்க சாமியோவ்!

14) சாமி! நம்ம குப்பாயி அக்கா மவன் கைப்புள்ள வடுவேலு உங்களை எதுத்து நின்னு செயிப்பேன்னு சொல்றாருங்க. அப்படி அவரு செயிச்சிட்டாருன்னா நீங்க அறைசியல்ல இருப்பீங்களா இல்ல போய்டுவீங்களா?

இன்னும் நிறையா கேக்கனும்னு நினைச்சேன். நீங்க ஆட்சிக்கு வந்தா! கேக்குறேங்க. அதனால் உங்களிடம் இதுவரைக்கும் கேள்வி கேட்டது போதும்னு நினைக்கிறேங்க. கேள்வி பத்தலைன்னு கோவிக்காதீங்க சாமியோவ்.

நாலு கேள்வி கேக்குறேன்னு சொல்லிபுட்டு பதினாழு கேள்வி கேட்டதுக்கு, மன்னித்துக் கொள்ளுங்க சாமியோவ்.நான் இன்னும், கலைஞர் சாமி, ஜெயலலிதா ஆச்சி, எல்லோரையும் கேள்வி கேட்கனுங்க சாமியோவ். வரட்டுங்களா சாமி! நன்றிங்க சாமி!

Thursday, October 2, 2008

முதல்வர் பதவி - இராமதாசு அய்யாவிடம் கொள்ளிமலை குப்புவின் கேள்விகள்!


முதல்வர் பதவிக்குப் போட்டியிடுபவர்களிடம் கொள்ளிமலை குப்புவின் கேள்விகள் -2

தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவதற்கு பலர் முயற்சி செய்கிற இந்த நேரத்தில், அவர்கள் அனைவரிடமும் கொள்ளிமலை குப்பு என்பவர் கேள்வி கேட்க விரும்புகிறார்.

இதோ கொள்ளிமலை குப்பு அவர்கள்!

வணக்கமுங்க! கும்புடுறேனுங்க சாமியோவ்!! நான் தான் கொள்ளிமலை குப்புங்க! நானும் உங்க சாதி தானுங்க. எனக்கும் மொதலமைச்ச்சரா வர ஆசைதானுங்க. ஆனா வரமுயாதுன்னு சொல்ராங்கங்க. ஏன்னு கேட்டா உன்கிட்ட என்ன இருக்குன்னு பல்லு மேல நாக்க போட்டு கேக்குராங்கங்கோ!

சமூக நீதிப் போராளி, தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் திரு இராமதாசு அய்யா அவர்களே வணக்கமுங்க. உங்க கட்சி 2011-ல ஆட்சிக்கு வரும்னு சொல்லி இருக்கீங்க. உங்ககிட்ட நாலு கேள்வி கேக்கனும்னு நினைக்கிறேங்க.

1)உங்க கட்சி 2011-ல ஆட்சிக்கு வரும்னு சொல்லி இருக்கீங்க. உங்க ஆட்சியில் தலைமைச் செயலகம்(செயின்ட் ஜார்ஜ் கோட்டை) சென்னையில் இருக்குமுங்களா? இல்ல திண்டிவனத்துல(கோட்டைதான், என்ன கோட்டைனு சனங்க தான் சொல்லணும்) கட்டுறீங்களா?

2)நீங்க சமூக நீதிப் போராளிங்க சாமியோவ். சமூகங்கிறது எல்லா சாதிகளையும் உள்ளடக்கியது. இல்லைன்னு சொல்லமுடியுங்களா? அப்ப ஒரு சாதிக்கு மட்டும் நிறைய நன்மைகளை எதிர்பார்ப்பது சரிங்களா? எல்லா மக்களும் நிம்மதியா வாழனுமுங்களே? அது தானே சமூக நீதி?

3)ஐந்தாம் வகுப்பு வரைத் தமிழைப் பயிற்று மொழியாக வைக்கனும்னு சொல்றீங்க சாமி. ஆனா உங்க குடுப்பத்து பிள்ளைகளை இந்தியும் ஆங்கிலமும் படிக்க வைக்கிறீங்க அப்படின்னு சொல்றாங்களே. அது உண்மையா? ஊருக்கு உபதேசம் செய்றது முன்னாடி நம்ம குடுப்பத்தையும் பாக்கலாங்களே?

4) எங்களுக்கு காடு தானுங்க வாழ்க்கை. பசுமைத்தாயகம்னு ஒன்னு ஆரம்பிச்சு மரம் வளப்போம்னு சொல்லி எங்க வயித்தில பால வாத்தீங்க அய்யா. ஆனா, 80-களில் ரோட்டில மரத்த வெட்டி போட்டது யாருங்க சாமியோவ்? இல்ல முன்னாடி மரம் வெட்டுனத்துக்கு இப்ப பரிகாரம் தேடுறீங்களா அய்யா?

5) திருமாவளவனொடு நட்பு பாராட்டுறீங்க. ஆனா, அவங்க கட்சிக்காரங்களும் உங்க கட்சிக்காரங்களும் அவ்வப்போது அடித்துக் கொள்கிறார்களே? இதைத் திருமாவோடு சேர்ந்து தடுத்து நிறுத்தலாமே?

6)"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" என்று வள்ளுவர் சாமி சொன்னது போல் சிறந்த இடிப்பாறையாக அரசுக்கு இருக்குறீங்க. மகிழ்ச்சி அடையுரோமுங்க சாமியோவ். நீங்க சட்ட,நாடளுமற்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். உங்க கட்சி ஆட்சிக்கு வந்தா கோ.க.மணிதானே முதலமைச்சர்? ஆளை மாத்த மாட்டீங்களே?

7) தனித்தமிழை, பொங்குதமிழை ஊக்கு விக்கிறீங்க(எங்களை மாதிரி! நாங்களும் ஊக்கு விக்கிறவங்க தான் சாமியோவ்). நல்லதுங்க. தனித் தமிழ் நாட்டை ஊக்கு விக்கிறீங்களா? இல்லை தமிழ் நாட்டையே...!?

8)நீங்க நடிகர்களை எதுக்குறீங்களா? இல்லை நடிப்புத்தொழிலையே எதுக்குறீங்களா? காந்துகளை(விஷய கந்து, ரசினி காந்து) கண்டு கொள்ளுங்கள். ஏன் அவர்களிடம் காண்டு கொல்றீங்க?

9)ஈழத்தமிழர்களை ஆதரிப்பதாகச் சொல்கிறீங்க. ஆனா, அவங்களை அழிக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கும் இந்திய மத்திய அரிசில் இடம்பெற்றுக் கொண்டு(சின்னையா மத்திய சுகாதார அமைச்சரா இருக்காருங்களே) வாய் மூடி மொனியாக இருப்பது ஏன்? சோனியாவிடம் எதிர்ப்பைக் காட்டாமல், நடு ரோட்டில காட்டுனா என்னங்க சாமி நடக்கும்?

10)விஷய காந்தை பயங்கரமாகத் தாக்குறீங்க. ஆனா அவரு உங்க கோட்டை விருதாலத்துல கொடி ஏத்திட்டாருங்களே? அவரைத் தோற்கடிக்க சரத்குமாரை நாடும் எண்ணம் உள்ளதா?(வடிவேலு கூட தயாராத்தான் அய்யா இருக்கார், ஆனா முதல்வர் பதவி கேக்குறார் பரவால்லையா?)

11) கொஞ்ச நாளைக்கு கலைஞர் அய்யாவை பாராட்டுறீங்க, பின்னாடி எதிர்குறீங்க, அதேமாதிரி ஜெயலலிதா அம்மாவை அன்புச் சகோதரிங்கிறீங்க. பின்னாடி எதுக்கிறீங்க. மூன்றவதா விஷய காந்தை இப்படி செய்யமாட்டீங்கன்னு என்ன நிச்ச்சயங்க சாமி.

12) நடிகர் ரசினி சாமியோட படம் பாபாவை போடவிடாம தடுத்தீர்கள் சாமியோவ். அதுக்கு என்ன காரணங்க சாமி. அது இருக்கட்டும். பண்பாட்டுச் சீரழிவை தொடர்ந்து கிராமம் தோறும் கலைவிழா என்ற பெயரில் நடத்திக் கொண்டு இருப்போரை தடுக்கும் உத்தேசம் இருக்கிறதா? காலை 11 மணி காட்சிகளில் பொங்கி வழியும் இளைஞர் கூட்டங்களை தடுக்கும் உத்தேசம் இருக்குங்களா சாமி?


இன்னும் நிறையா கேக்கனும்னு நினைச்சேன். நீங்க ஆட்சிக்கு வந்தா! கேக்குறேங்க. அதனால் உங்களிடம் இதுவரைக்கும் கேள்வி கேட்டது போதும்னு நினைக்கிறேங்க. கேள்வி பத்தலைன்னு கோவிக்காதீங்க சாமியோவ்.

நாலு கேள்வி கேக்குறேன்னு சொல்லிபுட்டு பன்னெண்டு கேள்வி கேட்டதுக்கு, மன்னித்துக் கொள்ளுங்க சாமியோவ்.நான் இன்னும், கலைஞர் சாமி, ஜெயலலிதா ஆச்சி, விசயகாந்து சாமி, எல்லோரையும் கேள்வி கேட்கனுங்க சாமியோவ். வரட்டுங்களா சாமி! நன்றிங்க சாமி!

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை