Thursday, February 19, 2009

பிளாஷ் நியூஸ்:உயர் நீதி மன்றத்தில் போலீஸ், வழக்கறிஞர்கள் மோதல் -நீதிபதி படுகாயம்.

உயர் நீதி மன்றத்தில் போலீஸ், வழக்கறிஞர்கள் மோதல் -நீதிபதி படுகாயம்.

பிளாஷ் நியூஸ் :
உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி விவகாரத்தில் வழக்கறிஞர்களைக் கைது செய்ய வந்த காவல் துறையினருடன், வழக்கறிஞர்கள் மோதியதால் இரு தரப்பினரும் பலத்த காயமடைந்தனர். நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் பலத்த காயமடைந்தார். ஒரு பத்திரிக்கையாளரின் கார் தீக்கிரையாக்கப் பட்டது.

ஐயகோ! ஒன்னு கூடிட்டாங்களே!! - மக்கள் பாவம்டா!!!

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திமுக திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவோடு சேர்த்து குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், அவரைக் காப்பாற்றவே இந்த வழக்கை திமுக வாபஸ் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானவோது ஏகப்பட்ட ஊழல் வழக்குகளில சிக்கினார் ஜெயலலிதா. கூடவே அவரது அமைச்சர்களும் சிக்கினர். அதில் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கிய வழக்கில் கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் செல்வகணபதிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டனர். அப்போது தான் கோவை விவசாயக் கல்லூரி மாணவிகளின் பஸ் தர்மபுரி அருகே அதிமுகவினரால் எரிக்கப்பட்டது. இதில் அப்பாவி மாணவிகள் எரிந்து சாம்பலாயினர். இதில் குற்றம் சாட்டப்பட்ட படுபாவிகளைக் காக்க அதிமுக தீவிரமாக முயன்றது.

ஆனால், இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜெயலலிதாவும் செல்வகணபதியும் விடுதலையாயினர். கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஜெயலலிதா, செல்கணபதியின் இந்த விடுதலையை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரலில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இந் நிலையில் சமீபத்தில் செல்வகணபதி திமுகவில் இணைந்துவிட்டார்.

இந் நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக திமுக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிபதி அரிஜித் பசாயத், நீதிபதி பாண்டா அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது திமுக சார்பில் ஆஜரான சண்முகசுந்தரம், இந்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரினார்.

இதையடுத்து மனுவை வாபஸ் பெற நீதிபதிகள் அனுமதித்தனர். இதன்மூலம் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா தப்பியுள்ளார்.

ஊர அடிச்சு ஒலையில போட்டு திங்கறதவிட நீங்க பிச்சை எடுத்து திங்கலாம்டா!
பாவண்டா அந்த பச்சை மண்ணுவ! உங்க சோத்துலையா மண்ணள்ளி போட்டுச்சு!
படுபாவியளா! நீங்க திருந்தவே மாட்டியளா!

Wednesday, February 18, 2009

கலைஞரால் மட்டுமே முடியும் - ரஜினியால் முடியாது

2009-10ம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை நேற்றைய தினம் நிதி அமைச்சர் அன்பழகனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வணிகர்களும் பொதுமக்கள் பிரதிநிதிகளும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினர் நிதி நிலை அறிக்கை படிக்கப்பட்டபோது சட்டமன்றத்தையே புறக்கணித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் அதற்கான காரணத்தை விளக்கி ஒரு அறிக்கையும் கொடுத்துள்ளார்கள்.

அந்த அறிக்கையில் "மைனாரிட்டி திமுக அரசால்'' என்று மூன்றாண்டு காலமாக தொடர்ந்து பாடி வரும் பல்லவியையே இதிலும் பாடியிருக்கிறார்கள். மூன்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு அரசை, அதிமுக இவ்வாறு மைனாரிட்டி திமுக அரசு என்று சொல்லுகின்ற வரையில் கழகத்தின் சார்பில் அதிமுகவைப் பற்றி குறிப்பிடும் போது ''ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக'' என்றே சொல்லலாம்.

''ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக'' சார்பில் தரப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பாக இலங்கை ராணுவத்தால் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை திமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும், போர் நிறுத்தம் ஏற்பட எந்த விதமான உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்காமல் கண் துடைப்பு நாடகம் நடத்தி வருகிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் ''ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக'' தலைவி ஜெயலலிதா கடந்த மாதம் 17ம் தேதியன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம், போர் நடைபெறும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. எங்கே போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்'' என்று இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசியது, அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதாவின் இந்தக் குற்றச்சாட்டு சரியல்ல என்று அவர்கள் அணியிலே உள்ள தோழர் தா.பாண்டியனே மறுநாள் அறிக்கை விடுத்தார்.

இப்படியெல்லாம் இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசிய ஜெயலலிதாவின் கட்சியினர் தான் இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பிரமாண்டமான மனிதச் சங்கிலியை நடத்தி, சட்டமன்றத்திலே 3 முறை தீர்மானம் தீட்டி, டெல்லி சென்று அனைத்துக் கட்சியினரும் பிரதமரைச் சந்தித்து போரை நிறுத்த கோரிக்கை வைத்து, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பச் செய்ய, இலங்கை அரசையே 48 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்யச் செய்து, இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரண நிதி திரட்டி, அந்த நிதியிலிருந்து உணவுப் பண்டங்களையும், உடைகளையும், மருந்துகளையும் வாங்கி செஞ்சிலுவை சங்கம் மூலமாக இலங்கைக்கு அனுப்பி, அவை அங்கே முறையாக அவர்களுக்குக் கிடைக்கச் செய்து, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்றதொரு அமைப்பையும், நீதியரசர்களைக் கொண்ட அதன் துணை அமைப்பையும் ஏற்படுத்தி இன்றளவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நாம் நாடகம் நடத்துகிறோமாம்.

அம்மையார் 3 மாத காலமாக ஓய்வெடுத்து விட்டு, அரசு சார்பிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளிலே மட்டுமல்லாமல், அவர்களுடைய அணியிலே இருக்கின்ற கட்சியினர் நடத்திய உண்ணாவிரதம் போன்ற நிகழ்ச்சிகளிலே கூட கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டு, இன்று தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தன்னை கைவிட்டு விடுவார்களோ என்பதற்காக திடீரென்று போர் நிறுத்தம் செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்காமல் நாடகமாடுவதாக அறிக்கை விடுத்து விட்டு நிதிநிலை அறிக்கையை புறக்கணிக்கச் செய்துள்ளார்.

அதிமுக ஆட்சியிலே ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் என்று சிரிப்பாய் சிரித்த நிலை மறந்து போய், தற்போது எதையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் தலை விரித்து ஆடுகிறது என்று அறிக்கையிலே கூறியிருக்கிறார்கள்.

ஒருவேளை அந்த அறிக்கையைத் தயாரித்தவர் கிண்டலாக "ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக இப்போது அறிக்கை என்ற பெயரால் தலை விரித்து ஆடுகிறது'' என்று எழுதியிருக்கிறாரோ என்னவோ?.

மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. கழக அரசின் சாதனைகளை அன்றாடம் அனுபவித்து வரும் தமிழ்நாட்டு மக்கள் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டனவா என்பதை தெளிவாக அறிவார்கள்.

ஒரேயொரு உதாரணம் மட்டும் கூற வேண்டும யானால் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று வாக்குறுதி அளித்தோம். ஆனால் தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று வழங்கி வருகிறோம். நாட்டு மக்களுக்கு இது தெரியாதா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கலைஞர் அவர்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள்.



இப்போதையை உடனடித் தேவை, இலங்கை தமிழ் மக்களுக்கு உரிமை. அதுக்காக கலைஞர் தமிழகத்தில் பேரவை அமைத்து போராடி, கூட்டம் போட்டு பேசுவதை கொச்சைப் படுத்தாதீர்கள். ஈழமக்களின் கண்ணீரும், இரத்தமும் மயிலை மாங்கொல்லை மற்றும் திலகர் திடல் கூட்டங்களால் துடைக்கப்படும்.
 
அதுவரையில் ஈழத்தில் தமிழினம் துடைக்கப் படாமல் இருக்க வேண்டுமே?

Sunday, February 15, 2009

ஈழம்!,அம்மா!,அன்னை! மற்றும் வெண்ணை!




அம்மாவும்,அன்னையும்!
தமிழ் மக்களுக்குத் தாளிக்கப் பயன்படுத்தப் படும் வெண்ணையும்!




ஈழம்! - அம்மா! - அன்னை! - வெண்ணை!

Saturday, February 14, 2009

தேடிப் பிடி(த்)தேன் தமிழை! - வழக்கொழிந்த சொற்கள்

தேடிப் பிடி(த்)தேன் தமிழை! - வழக்கொழிந்த சொற்கள்



வழக்கொழிந்த சொற்கள் என்னும் தொடர் பதிவில் ஐக்கியப்படுத்தி என்னையும் அந்த ஜோதியில் கலக்க வைத்தது வேறு யாரும் அல்ல, ஒரு வண்ணத்துப் பூச்சி. இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பல பரிணாமங்கள் இருக்கும் என்று கருதுகிறேன். இதுவரை இது போன்ற வண்ணத்துப் பூச்சியை நான் பாத்ததில்லை. ஆம், இந்த வண்ணத்துப் பூச்சியைக் கூட நான் பார்த்ததில்லை. சிங்கப்பூரில் இருக்கும் இந்த வண்ணத்துப் பூச்சியின் வலைப்பூக்களை அவ்வப்போது மேய்ந்த பாவத்திற்காக இங்கு பரிகாரம் தேட வந்திருக்கிறேன். பெரிய தாமரைப் பூவில் தடுக்கி விழாமல், சிறு தும்பைப் பூவில் கூட துயரத்தையோ, துள்ளலையோ, துடிப்பையோ அடுக்கி வைக்கும் பாங்குடைய வண்ணத்துப் பூச்சி இது. தனக்குத் தரிக்கின்ற சிந்தனையை வலி உணர்ந்து அழகாகப் பிரசவிக்கும் தாய் போன்றது. இந்த வண்ணத்துப் பூச்சி புகழுடன் திகழ்வதில் மகிழ்வே! மிளிர்வது ஒன்றும் வியப்பல்ல. வண்ணத்துப் பூச்சிக்கு பெயர் சூட்டப் பட்டிருந்தாலும், மீண்டும் பெயர் சூட்டுகிறேன் திகழ்மிளிர்! இந்த வண்ணத்துப் பூச்சி தனி ஆளு இல்ல. இவரின் வலைப்பூக்களை கண்டு களியுங்கள். இவரோடு வண்ணத்துப் பூச்சிகள் ஏராளம்.


ஐயகோ! இது அரசியல் வாதிகள் மட்டும் பயன்படுத்தக் கூடிய மொழி அல்லது வார்த்தை அல்ல. ஒரு தடங்கலை ஏற்படுத்தும் வார்த்தையாக இருந்தாலும். இப்போதைய தமிழ் பேச்சு வழக்கு மற்றும் வட்டார வழக்குகளை உற்று கவனித்தால், பல்வேறு மொழிகளை உள்ளிருத்தி நம் தாய்த்தமிழை விரட்டிக் கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரியும்.

பிரதான ஊடகமாகிய தொலைக் காட்சி தமிழைப் பிய்த்து தின்று கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அந்தப் பணியை செவ்வனே செய்ய ஒரு சில பண்பலை வானொலிகளும், தமிழை விட்டேனா பார் என்று எழுந்திருக்கிறார்கள். கிடக்கட்டும் அவர்களின் பணி. மெல்லத் தமிழினி சாகும் என்று தமிழ் ஆர்வலர்களும், உணர்வாளர்களும் வெந்து தணிந்து கொண்டிருக்கும் போது வலைப்பூக்கள் தமிழுக்கு சாமரம் வீசத் தொடங்கியது, இதனால் அனைவரும் தமிழைப் பயன்படுத்தி எழுத, அதனை மற்றவர்கள் படித்து பாராட்ட, வாசிப்பு பெருக, சிறந்த படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என்கிற மனநிலை உருவாக இந்த வகையில் வலை தளங்களில் தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது. திரட்டிகளை நடத்தும் தமிழ் அன்பர்களின் பணி அனைவராலும் பாராட்டத்தக்க ஒன்று என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம். இந்த சூழல் மெல்லத் தமிழினி சாகும் என்ற சாபத்தில் இருந்து மெல்லத் தமிழினிதாகும் என்று நமக்கு நாமே முரசு கொட்ட வைக்கிறது என்றால் அது மிகையாகது.

எனினும் பேச்சு வழக்குகளில் நாம் இன்னும் கலவி தான் செய்துகொண்டிருக்கிறோம் என்பது நிதர்சன உண்மை.

ஒரு திரைப்படத்தில் தொடக்கத்தில் ஒவ்வொரு பங்களிப்பாளர்களின் பெயர்களையும் போட்டு விட்டு இறுதியாக கதை,வசனம்,டைரக்ஷன் என்று போட்டு ஒருவருடைய பெயரைப் குறிப்பிடுவார்கள். அதில் கதை என்பது மட்டும் தான் தமிழ், வசனம் என்பது வடமொழி, டைரக்ஷன் என்பது ஆங்கிலம். வசனம் என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் உரையாடல். கலைஞரை வசனகர்த்தா என்று சொல்வோரை நாமெல்லாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டாமா? டைரக்ஷன் என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் இயக்கம். பாதிக்கும் மேற்பட்டவர்கள் இயக்கம் என்றுதான் பயன் படுத்துகிறார்கள். நாயகன் என்பதற்கு தலைவன் என்று தமிழிலும், ஹீரோ என்று ஆங்கிலத்திலும் பயன்படுத்தலாம். நாயகன் என்பது வடமொழி. வில்லன் என்பதை ஆங்கிலத்திலும் தமிழிலும் வில்லன் என்றே கொள்ளலாம். விரும்பினால் தீயோன் என்று கூட சொல்லலாம்.

தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகங்களை, மெகா தொடர் என்று சொல்கிறோம், இதை நெடுந்தொடர் என்று தமிழில் சொல்லலாம்.


அடுத்தபடியாக சாப்பாட்டுக்கு வருவோம், (நாம் எப்பவும் நெடுந்தொடர் எல்லாம் முடிந்தவுடன் தான் சாப்பாட்டுக்கு வருவோம்). சாப்பாடு வைக்கும் பொழுது சாதம் போதுமா இன்னும் கொஞ்சம் வைக்கவா? என்று கேட்போம் அல்லவா? சாதம் என்ற சொல்லை எதோ மரியாதையாகச் சொல்வதாக எடுத்துக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன். அது இல்லை! அது சோறு என்னும் தமிழ்ச் சொல்லை மரிக்க வைத்துக் கொணர்ந்த மாற்றுச் சொல். சோறு என்று பயன்படுத்தினால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடாது.

சோற்றுக்குப் பக்கத்தில் வைக்கப் படுவதை சைடு டிஷ் என்று இப்போதெல்லாம் ஆங்கில மோகத்தில் சொல்வது உண்டு. சிலர் தொட்டுக்க என்று சொல்வார்கள், சிலர் கூட்டு என்பார்கள், சிலர் கூட்டுக்கறி என்பார்கள், தமிழில் மேங்கறி என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். எங்கள் இல்லத்தில் கூட இதைதான் பயன் படுத்துகிறோம்.

உணவு வகைகளில் மற்ற சொற்கள் எல்லாம் பெரும்பாலும் தமிழில் தான் பயன் படுத்துகிறோம் என்று நினைக்கிறேன், காலை உணவை சிற்றுண்டி என்று சொல்பவர்கள் எத்தனை பேர்?


காலையில் குறைவான உணவையே உட்கொள்ள வேண்டும் என்கிற அறிவியல் நுட்பத்தை தாங்கிவருகிற சொல்லாக இருப்பதால் இதையே பயன்படுத்தலாம்.

சிற்றுண்டி என்பது குறைவான அளவு உணவு உண்பது. செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று வள்ளுவர் சொன்னது சிற்றுண்டியாகத் தான் இருக்கும்.

நாஸ்தா, பிரேக் பாஸ்ட் போன்ற சொற்களுக்கு நிரந்தர விடுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும். மாலை நான்கு மணிக்கு சிறிய அளவில் வடை போன்ற உணவு எடுத்துக் கொண்டாலும் சிற்றுண்டி என்றே சொல்லலாம். ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் பேசுகிறவர்களிடம் புலமையோடு பேசினால் நன்றாக இருக்கும், பாராட்டப் படுவோம்.

சர்க்கார் என்னும் வட சொல்லுக்கு அரசாங்கம் என்னும் தமிழ்ச் சொல் இருக்கும் போது சில தமிழ் அரசியல்வாதிகளே சர்க்கார் என்று பயன்படுத்துவதைப் பார்த்துத் திகைக்க வேண்டியுள்ளது.

சிங்கையில் வசிப்பதால் சிங்கப்பூர் வட்டார வழக்குகளில் சிலவற்றை கொஞ்சம் தொட்டுச் செல்லலாம் என்று நினைக்கிறேன்.

காப்பி என்ற ஆங்கில சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக குளம்பி என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாம். கொட்டை வடிநீர், கோப்பி என்று பயமுறுத்த வேண்டியதில்லை. எளிதான சொற்கள் தமிழில் மலிந்து கிடக்கும் போது அதையே பயன்படுத்தலாம்.


டீ என்பதை தேநீர் என்ற அழகானத் தமிழ்ச் சொல் இருக்கிறது அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். தே, தே தண்ணி, சா, சாயி போன்ற சொற்களை பயன் படுத்த வேண்டியதில்லை. இன்னொரு செய்தி தேநீருக்கு சீன மொழியான மாண்டரினில் சா என்று சொல்லுவார்கள்.

கார் என்பதற்கு மகிழுந்து என்னும் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்திப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் பிளசர் கார் என்று சொல்வது வழக்கம். இங்கு பயன்படுத்தப் படும் சொல் காடி. காடி என்பது இந்தி சொல், அது மலாய் மொழியிலும் அவ்வாறே வழங்கப்படுகிறது. நமக்கென்று தமிழ்ச் சொல் இருக்கும் போது அதைப் பயன் படுத்துவானேன்.

இந்த வேலையைச் சின்னாங்கா செய்யலாம் என்று சொல்வார்கள். எளிதாக செய்யலாம் என்று எளிதாக தமிழில் சொல்வதை விட்டுவிட்டு....!

இந்த வேலையை சீலாப்பா செஞ்சுட்டேன் லா! என்று சொல்லுவார்கள். லா என்பது சிவில் லாவோ, கிரிமினல் லாவோ, கம்பெனி லாவோ அல்லது ஷகிலாவோ அல்ல. சிங்கப்பூர் மலேசியாவில் பேசும் போது இறுதியில் சார் அல்லது ஐயாவிற்கு பதிலாக சேர்க்கப்படும் வட்டார வழக்கு. சீலாப்பா என்பதற்கு பதிலாக தவறாக என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாம்.

இந்த சாமானைப் கொஞ்ச நேரம் பிஞ்சான் பண்ணிக்கிறேன் லா! என்பார்கள். அதற்குப் பதிலாக இந்தப் பொருளை கொஞ்ச நேரம் இரவல் பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லலாம். சாமான் என்பது வட சொல், பிஞ்சான் என்பது மலாய் சொல்.

உங்களுக்கு பதவி உயர்வு கிடைச்சதுக்கு எனக்கு பிலாஞ்சா பண்ணுங்க லா என்பார்கள்.

பிலாஞ்சா என்னும் மலாய் சொல்லுக்குப் பதில் விருந்து என்னும் தமிழ்ச் சொல்லைப் பயன் படுத்தலாம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். வேறொரு வாய்ப்பில் மற்ற சொற்களைப் பற்றி சிந்திக்கலாம்.

வழக்கொழிந்த சொற்கள் என்ற தலைப்பில் அழகிய தமிழ் இடுகைகளை இடுவதற்கு நான் அழைக்கும் உறவுகள்,

1) நட்புடன் ஜமால்

2) கோவி.கண்ணன்

3) தூயா

4) வெண்பூ

5) முகவை மைந்தன்

6) டொன் லீ

7) பாரி அரசு

8) எம்.எம்.அப்துல்லா(புதுகை அப்துல்லா)

9) நீதிபதி பாண்டித்துரை

10) ஜோசப் பால்ராஜ்

11) சுரேஷ் குமார்

12) டி.வி.இராதாகிருஷ்ணன்

13) ஜோ

14) கிஷோர்

15) ஜெகதீசன்

16) இறக்குவானை நிர்ஷன்

17) கிரி

18) வால்ப்பையன்

19) இளையமதி

20) விக்னேசுவரன்


அனைவருக்கும் நன்றி!

Wednesday, February 11, 2009

கலைஞரின் வேதனை நமக்குப் புரிகிறது...!

திமுக ஆட்சியிலே இருந்த போது இலங்கைத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என்று கூறுவோர், ஆட்சியில் இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக திமுக என்ன செய்தது என்பதை எண்ணிப் பார்த்து விளக்க வேண்டும். இதை மறந்து விட்டு எதிர்க்கட்சி என்றால் போராட்டம் - ஆட்சி என்றால் அடங்கிப் போவது என்று தி.மு.க. செயல்படுவதாகக் கூறுவது நியாயமா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருப்பதை தவிர்த்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே என்று நீங்கள் எழுதிய பிறகும் உங்களைத் தாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு சிலர் செயல்பட்டும், பேராசிரியருடன் தாங்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதால் என்ன விளைவு ஏற்பட்டுவிட்டது, ஒட்டுமொத்தமாக விலகினால்தான் ஏற்படும் என்பதைப் போல ஒரு தலைவர் அறிக்கை விடுத்திருக்கிறாரே?

பதில்: அவர் ஒரு முடிவுக்கு வந்து பேசுகிறார். நாம் என்ன செய்ய முடியும்? சட்டசபையில் தீர்மானத்திற்கு பதில் அளித்து நான் பேசும்போதே, கழகம் ஆட்சியை விட்டு விலகினால், தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றுதான் கூறியுள்ளேன். இப்போதும் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகினால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள், ஏன் ஈழத் தந்தை செல்வாவின் திருமகன் சந்திரஹாசன் உள்பட "பதவியை விட்டு விலகி விடாதீர்கள்'' என்று சொல்கிறார்களே, அவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் மீது பற்று இல்லாதவர்களா?

கேள்வி: தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்றும், இலங்கைத் தமிழர் நலனைப் புறக்கணித்து வந்திருக்கிறது என்றும் ஒருவர் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?

பதில்: தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தது என்று கேட்ட கேள்விக்குத்தான் நான் நினைவில் இருந்தவரையில் பட்டியல் கொடுத்திருந்தேன். அப்போது ஆட்சியில் இருந்தகாலம், எதிர்கட்சியாக இருந்த காலம் என்றெல்லாம் பிரித்துப்பார்க்கவில்லை. ஆனால் ஆட்சியில் இருந்த போது தி.மு.க. எதையும் செய்யவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

- 1976-ம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கப்பட்டதற்கு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு செயல்பட்டதும் ஒரு காரணம் என்று இந்திராகாந்தியே 15.2.1976 கடற்கரை கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

- 1991-ம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கப்பட்ட போதும், கழக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது என்றே காரணம் கூறப்பட்டது.

- 1989-ம் ஆண்டு நான் டெல்லியில் பிரதமர் ராஜீவ்காந்தியை சந்தித்த போது, தமிழ்நாடு இல்லத்திற்கு வெளிவிவகாரத்துறை நட்வர்சிங்கை அனுப்பி இலங்கை பிரச்சினை குறித்து பல்வேறு விளக்கங்களை அளிக்க செய்தார். தொடர்ந்து பிரதமர் ராஜீவ்காந்தியிடம் பேசிய போது இலங்கைக்கு என்னுடன், மாறனையும், வைகோவையும் அனுப்பி வைப்பதாக கூறியதும் கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போதுதான்.

- 11.6.89 அன்றும் 29.6.89 அன்றும் திருச்சியில் நிருபர்களிடம் பேசும் போது, ஈழத் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்பட முறையான பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும் என்றும், அதற்கான முயற்சிகளில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்றும் நான் கூறியதும், தி.மு.க. ஆட்சியிலே இருந்த போதுதான்.

- 5.11.1989 அன்று திருச்சியில் பிரதமர் ராஜீவ்காந்தி பேசிய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கடந்த பல மாதங்களாக ஒத்துழைப்பு வழங்கி வரும் தி.மு.க. அரசுக்கும், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியதும் கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போதுதான்.

- 1989-ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பி, பிரதமராக இருந்த வி.பி.சிங்கோடு பேசி, அவரது யோசனையின் பேரில் சென்னையில் துறைமுகம் விருந்தினர் விடுதியில், பல நாட்கள் பல்வேறு போராளிக் குழுவினரை நான் சந்தித்து பேசியது கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான்.

- அதே டிசம்பர் திங்கள் இறுதியில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து வழக்கறிஞர் சந்திரஹாசன், க.சச்சிதானந்தன், ஈழவேந்தன், வெ.பேரம்பலம், எஸ்.சிவசுப்ரமணியம், எஸ்.சிவானந்தம், க.சிவநாயகன், ர.பத்மநாபன், த.அருணாசலம், ஞானகணேசன், பி.ஆனந்தராஜா, நீதுவான் சிவானந்தன் ஆகியோர் என்னை என் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்ததும் கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான்.

- 7.1.90 அன்று ஈராஸ் பிரிவை சேர்ந்த பாலகுமார், சங்கர், முகிலன் ஆகியோரும் அதற்கு மறுநாள் இலங்கையில் உள்ள இந்திய தூதர் மல்ஹோத்ராவும், அதற்கடுத்த நாள் ஈ.பி.ஆர்.எல்.எப். பிரிவை சேர்ந்த வரதராசபெருமாள், யோக சங்கரி, சந்தன் ஆகியோரும் என்னைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தது, கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போதுதான்.

- இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் முழுவதும் தனித்தனியாக போராளிகளின் பல்வேறு குழுக்களை நான் சந்தித்து பேசி, அந்த விவரங்களையெல்லாம் அப்போது பிரதமர் வி.பி.சிங்கிடம் எடுத்து விளக்கியதெல்லாம் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோதுதான்.

- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நான் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி "இந்து'' பத்திரிகையாளர் டி.எஸ்.சுப்பிரமணியம் 3.3.90 அன்று எழுதும்போது, கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளை தொடங்கிய போது போராளிகளுக்கும் அரசுக்கும் இடையே இருந்த பகைமை உணர்வு தற்போது இல்லை என்றும் தமிழ் போராளி இளைஞர்கள் பலியாவது தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றும் கருணாநிதி கடைபிடித்த வெட்ட வெளிச்சமான ராஜதந்திர அணுகுமுறையே காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

- இந்திய அமைதிப்படை திரும்பிய போது முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் வரவேற்கச் செல்லாதது குறித்து பேரவையில் 30.3.1990 அன்று கேள்வியெழுப்பப்பட்டபோது, இலங்கையில் இந்திய ராணுவத்தினரும், தமிழர்களும் பலியாகக் காரணமாக இருந்த இந்திய அரசின் செயலைக் கண்டித்தே நான் வரவேற்கச் செல்லவில்லை என்று பதில் அளித்தது, கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போதுதான்.

- இலங்கைப் பிரச்சினை குறித்து 90-ம் ஆண்டு ஜுன் திங்கள் 18, 19 ஆகிய நாட்களில் பிரதமர் வி.பி. சிங்கிடம் நான் பேசியதைத் தொடர்ந்து 19-ம் தேதி மாலையில் பிரதமர் இல்லத்தில் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் மற்ற மாநில முதல் மந்திரிகளான ஜோதிபாசு, நாயனார், பிஜு பட்நாயக், மகந்தா, சாந்தகுமார், பண்டாரி, டி. ராமச்சந்திரன், மத்திய மந்திரிகளான அருண் நேரு, முப்தி மகமது சயீத், முரசொலிமாறன், குருபாதசாமி, தினேஷ் கோசுவாமி, உபேந்திரா, உன்னிகிருஷ்ணா, மற்றும் அத்வானி, ஈ.எம்.எஸ்., வாஜ்பாய், சிட்டபாசு, சாமர் முகர்ஜி, இந்திரஜித் குப்தா, பரூக்கி ஆகியோர் கலந்து கொண்டனர். நீண்ட நேரம் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அவர்களிடம் நான் விளக்கியது, கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான்.

- இவையெல்லாம் தி.மு.கழக அரசின் செயல்பாடுகள்தானே, போராட்டம் நடத்தவில்லையே என்று கேட்கலாம். ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் போராட வேண்டிய அளவிற்கு நிலைமைகள் இல்லை.

இருந்தாலும் 90-ம் ஆண்டு ஜுலை திங்களில் அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்படுகின்றனர் என்ற செய்தி வந்ததும் தி.மு.கழகம் போராடாமல் இருந்து விடவில்லை என்பதற்குச் சான்று, 12.7.1990 அன்று நடைபெற்ற கழக நிர்வாகக் குழு கூட்டத்தில் 20.7.1990 அன்று ஈழத் தமிழர்களுக்காக ஒரு நாள் முழு அடைப்பும், பொது வேலை நிறுத்தமும் நடத்துவதென்று முடிவெடுத்து, அவ்வாறே நடத்தப்பட்டது.

- தொடர்ந்து 23.8.1990 அன்று முரசொலி மாறன் தலைமையில் வைகோ, தா. கிருட்டிணன், மிசா கணேசன், ஜே.எஸ்.ராஜு, முகமது சகி, ஜி.வெங்கட்ராமன், நாமக்கல் வீரப்பன் ஆகிய கழக உறுப்பினர்கள் பிரதமர் வி.பி.சிங்கை சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

- 3.12.1990 அன்று பிரதமர் சந்திரசேகரை சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நீண்ட நேரம் விளக்கிக் கூறினேன்.

- ஆனாலும் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு அதிகரிக்க கழக ஆட்சி அனுமதித்து விட்டதாக அபாண்டமாகக் காரணம் கூறி, 142 சட்டமன்ற உறுப்பினர்களை தி.மு.கழகம் கொண்டிருந்த நிலையிலும் - ஆளுநர் பர்னாலா அவர்களை டெல்லிக்கே அழைத்து, மத்திய உள் துறை இணை மந்திரியாக இருந்த சுபோத் காந்த் சகாய் போன்றவர்கள் தமிழக அரசுக்கு எதிராக அறிக்கை கொடுக்க வலியுறுத்தியும் அவர் ஏற்றுக் கொள்ளாத நிலையில் பிரதமர் சந்திரசேகர், குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் மூலம் "அதர்வைஸ்'' என்ற விதியை முதன் முதலாகப் பயன்படுத்தி கழக ஆட்சியே கலைக்கப்பட்டது.

- இப்போதும் கூட, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் என்றும் மனிதச் சங்கிலி என்றும், பேரவையிலே தீர்மானம் என்றும், பிரதமருடன் டெல்லி சென்று சந்திப்பு என்றும் கழகம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் எல்லாம் தற்போது ஆட்சியிலே இருக்கின்ற நிலையிலேதான் என்பதையும் அரசியல் செறிவுடையார் யாரும் மறுக்க முடியாது.

இவையெல்லாம் கழகம் ஆட்சியிலே இருந்த போது இலங்கைத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதற்கான அடையாளங்களா என்பதை அவர்கள்தான் எண்ணிப்பார்த்து விளக்க வேண்டும். ஆனால் இதை அவர்கள் மறந்து விட்டு எதிர்க்கட்சி என்றால் போராட்டம் - ஆட்சி என்றால் அடங்கிப் போவது என்று தி.மு.க. செயல்படுவதாகக் கூறியிருப்பது நியாயமா?

கேள்வி: இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்று நீங்கள் வேண்டுகோள் விடுத்தீர்கள். ஆனால் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் இங்குள்ள தமிழர்கள், குறிப்பாக காங்கிரஸ் போன்ற கட்சிக்காரர்கள் தாக்கப்படுவதும், அந்தக் கட்சியினரின் அலுவலகங்கள் சூறையாடப் படுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே?

பதில்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என்று கூறிக் கொண்டு இங்குள்ள தமிழர்களைத் தாக்குபவர்களை - உங்களைப் போன்றவர்கள் அடையாளம் கண்டுகொண்டால் போதும். அப்படிப்பட்ட செயல்களை நான் கண்டிக்கிறேன். தயவு செய்து நீங்கள் இதற்காக சட்டத்தை கையில் எடுக்காமல், காவல் துறையினரிடம் புகார் செய்வதே நல்லது.


கேள்வி: தி.மு.கழக செயற்குழு தீர்மானத்தில் இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும்மென்பதில் உறுதியாக இல்லை என்று சொல்வதைப் பற்றி?

பதில்: செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தின் முன் பகுதியிலேயே போர் நிறுத்தம் பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருந்தாலும் - இறுதியாக முடிக்கும் போது - "அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதியான நிலை தோன்றவும்'' என்ற வாசகங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆனால் தீர்மானத்தில் "போர் நிறுத்தம்'' பற்றியே வாசகங்கள் இல்லை என்பதைப் போல பேசுகிறார்கள். பொய்யைத்தான் பேசுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பேசுபவர்களிடம் நாம் என்ன செய்ய முடியும்? என்று தெரிவித்துள்ளார்.

கலைஞரின் வேதனை நமக்குப் புரிகிறது...!
நம்ம வேதனை தான்...!



Monday, February 9, 2009

பள்ளம்-உள்ளம்,எகனை-மொகனை, கலைஞர் உருக்கம்

பள்ளம்-உள்ளம்,எகனை-மொகனை, கலைஞர் உருக்கம்

தாங்கொணா வலியுடன் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நான் தொலைக்காட்சி செய்திகளில் இலங்கை தமிழர் உரிமைப் போர் குறித்து; நமது தமிழகத்தில் கட்சிகள் இரு பிரிவாக நின்று குரல் கொடுப்பதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

பத்துக்கு மேற்பட்ட டாக்டர்களின் மேற்பார்வையுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, தாங்கொணா வலியுடன் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நான் தொலைக்காட்சி செய்திகளில் இலங்கை தமிழர் உரிமைப் போர் குறித்து; நமது தமிழகத்தில் கட்சிகள் இரு பிரிவாக நின்று குரல் கொடுப்பதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

அந்த பேரணிகளிலும், கூட்டங்களிலும் நானும் கலந்துகொள்ள முடியாமல் உடல் நலிவுக்கு ஆளாகியிருக்கிறேனே என்ற கவலை என்னை வாட்டுவதை விட; நான் 2 நாளைக்கு முன்பு; ``ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே!'' என்ற தலைப்பில் எல்லா கட்சிகளிலும் உள்ள உடன்பிறப்புகளுக்கும் விடுவித்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியது மட்டுமல்ல; பிறிதோர் அணியின் கூட்டங்களில் பேசியோரும், பேட்டி கொடுத்தோரும் என்னை மிக இழிவுபடுத்தித் தூற்றியிருக்கிறார்கள்.அதனால் எனக்கு அணுவளவு வருத்தமும் இல்லை. அவர்கள் பேசுவது அவர்கள் மனச்சாட்சிக்கே சரியென்று பட்டால் அதில் எனக்கு மகிழ்ச்சி தான்.என்னையும், இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் முன்னணியினரையும்; இப்படி ஒரு சிலர் தூற்றுகிறார்கள், மேடையில் நின்று நமது அணுகுமுறையை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதற்காக, இந்தப் பேரவையில் உள்ள யாரும் அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை; பதில் சொல்ல வேண்டாம் என்றும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - அண்ணாவின் அறிவுரை இது! இன்றைய நிலையில் என் உடல் தாங்குகிறதோ - இல்லையோ; உள்ளம் தாங்கித் தானே ஆக வேண்டும் - இலங்கை தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இதற்கிடையே திமுக அமைத்த பேரவையில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கலந்து கொண்டார். இந்தப் பேரவையில் காங்கிரசும் இடம்பெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்திருக்கிறார். பேரவையின் தலைவர் மானமிகு கி.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதுகெலும்பு, பரிணாமமும்.......!

இந்தியாவின் முதுகெலும்பு, பரிணாமமும்.......!



தமிழினத்துக்கு இடப்படும் நாமமும்!

Sunday, February 8, 2009

சிங்கப்பூரில் தைப்பூசம் -படங்கள்

சிங்கப்பூரில் தைப்பூசம் -படங்கள்





சிங்கப்பூரில் பல இடங்களில் முருகன் கோவில்கள் இருந்தாலும், டேங்க் சாலை முருகன் கோயில் தைப்பூசத்திற்கு புகழ் பெற்றது. தமிழகத்தில் பழனி முருகன் கோவில், இலங்கையில் கண்டி கதிர்காமர் ஆலயம், மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில் போற்ற இடங்களில் தைப்பூசம் கொண்டாடப் படுவது போல் இங்கும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இந்த ஆலயம் 1859 -ம் ஆண்டு புலம்பெயந்த தமிழர்களால் இங்கு நிறுவப்பட்டது. குறிப்பாக நாட்டுக் கோட்டை செட்டியார் குமுகாயத்தால் நிறுவப்பட்டதாக அறிகிறோம்.



சமய நிகழ்வுகள் மட்டுமல்லாமல் இலக்கியம்,சமூகம் சார்ந்த நிகழ்வுகளும் இங்கு நடைபெறுவது உண்டு.

தைப்பூசத்தன்று குட்டி இந்தியா எனப்படும் சிராங்கூன் சாலை சீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து காவடிகள்,பால் குடங்கள் புறப்பட்டு டேங்க் சாலை முருகன் கோவிலுக்கு வருவது வழக்கம்.



சிங்கை அரசாங்கம் சாலையின் ஒரு பகுதியை காவடி,பால்குடம் மற்றும் பக்தர்கள் செல்வதற்காக தடுத்துவைத்து அழகாகவும் அமைதியாகவும், தைப்பூச நிகழ்வை பலத்த பாதுகாப்புகளோடு சிறப்பாக நடத்துகிறது. காவல் துறையினரும், தன்னார்வத் தொண்டர்களும் சிறப்பாக தங்கள் பணிகளைச் செய்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்



சிங்கையில் இந்தியர்கள், தமிழர்களுக்கு தீபாவளிக்கு ஒரு நாள் விடுமுறை. தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டாகிய பொங்கல் திருநாளுக்கு விடுமுறை கிடையாது. இங்குள்ள மற்ற இனத்தவர்களுக்கு பொங்கலைப் பற்றி ஒன்றும் தெரியாது. குட்டி இந்தியாவான தேக்காவில் மட்டும் பொங்கல் கலை கட்டி இருக்கும். இளைய தலைமுறையினர்(தமிழர்கள்) அவ்வளவாக பொங்கல் கொண்டாடுவதில்லை. சிலர் அம்மா வீட்டுக்குச் செல்வதாகக் கூறுவார்கள். அப்போது நமக்கு அடுத்த தலைமுறை பற்றிய சிந்தனைதான் வரும். மற்ற இனத்தவர்களுக்கு(சீனர்,மலாய்) தீபாவளியும், தைப்பூசம் மட்டுமே தெரியும். கட்டுமானத்துறை மற்றும் கப்பல் பட்டறைகளில் பணிபுரியும் தமிழர்களில் பெருபாலானவர்களுக்கு அவர்களின் முதலாளிகளே இன்று விடுமுறை எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். சிலர் இதற்கு விதிவிலக்கு.


கோவிலில் உள்ள மண்டபத்தில் பத்தாயிரம் பேருக்கு மத்திய உணவு ஏற்பாடு செய்திருப்பதாக அறிந்தேன். இந்த வருடம் தைப்பூசம் ஞாயிறு அன்று வந்திருப்பதால் அதிக கூட்டம் கூடும் என்று எதிர் பார்ப்பதாக விழாக் குழுவினர்கள் தெரிவிக்கிறார்கள்.


சிங்கை போன்ற நாடுகளில் பொங்கலுக்கு விடுமுறை மற்றும் பெரிய கொண்டாட்டங்கள் இல்லாத பட்சத்தில் தைப்பூசத்தை சிறப்பாகக் கொண்டாடுவது தமிழர்களின் அடையாளத்தையும், முகவரியையும் எப்போதும் தன்னகத்தே வைத்திருக்க உதவும் என்று கருதுகிறேன்.





Friday, February 6, 2009

முத்துக்குமார் -மானமுள்ள தமிழன் பூசிய கரி!

முத்துக்குமார் -மானமுள்ள தமிழன் சிந்திய முத்துக்கள்!

தம்பி முத்துக்குமரா!




ஆற்றாமையால் தன்னை

அழித்துக் கொண்ட
முத்துக்குமார் தமிழினத்தின் முத்து
வெந்த உடலில் இருந்த கரி
தமிழக
நரி அரசியல்வாதிகளின் முகத்தில்
பூசப்பட்ட கரி
அரசியல்வாதிகளே
கரியை மட்டும் உங்கள்
முகத்தில் பூசவில்லை
நெறியையும் விட்டுச் சென்றிருக்கிறான்
அவன் மக்களில் ஒருவன்
நீங்கள் மாக்களில் ஒன்று
வேறுபாட்டில்
வெட்கித் தலைகுனித்து
இழுக்கு வந்ததற்குப் பின்
அழுக்கு தேய்க்க
நலுக்கிக் குலுக்கி வரும்
அரசியல் வியாபாரிகளே
உங்கள் வியாபாரத்தை
வேறு இடத்தில்
வைத்துக் கொள்ளுங்கள்.
மக்களிடம் வந்து
மாய்ந்து போவீர்கள் -பாவம்
நீங்கள் மாறவேண்டாம்
வராதீர்கள்.
மாளாத்துயரில் ஆழ்த்தி
மீளாத் துயில் கொண்டவனே
உன் பெயரை உச்சரிக்காத
தமிழ் உதடுகள் உண்டோ?
நீ வரலாறு
உன்னைப் படிக்கக்
கொடுத்துவிட்டு
பல்லக்கில் ஏறி இருக்கிறாய்.
உன் உயிரற்ற உடல்
பிணமல்ல தமிழ் மணம்
நீ இறந்தாலும்
அரசியல்வாதிகளை மட்டும்
அண்ட விடாதே
அவர்கள்
அண்டிப் பிழைத்தே
பழகி விட்டார்கள்
நீ மரிக்க வில்லை -மாறாக
ஒவ்வொரு தமிழனின்
இதயத்திலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!
இனமான தமிழன் முத்துக்குமார் விட்டுச்சென்ற நெறி!
பக்கம் 1


பக்கம் 2

பக்கம் 3

பக்கம் 4

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை