Tuesday, February 5, 2008
இது என்னுடைய வேலையல்ல! அதற்கு வேறு ஆள் பாருங்கள்!!
தாங்கள், அலுவலகத்திலோ அல்லது வேறு இடத்திலோ வேலை செய்பவராக இருந்தால், தாங்கள் வேலை செய்யும் இடத்தில் பல தரப்பட்ட ஊழியர்களைக் கண்டிருப்பீர்கள். அவர்களில் சிலரைப் பற்றி இப்போது சிந்திக்கலாமே.
அ) முதலாமவர், இவர் தனது வேலை வரம்பு உள்ளடக்கத்திற்குள்ளேயே(Job Scope Responsiblity) வேலை செய்பவர். அதைத் தாண்டி ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டார். மாய்ந்து மாய்ந்து வேலை செய்யும் தனது சக ஊழியர்களைக் கின்டலும், கேலியும் செய்வார். Hello! Work Smart!! என்று அடிக்கடி சொல்வது வழக்கம். யாராவது உதவி கேட்டால், இது எனது வேலை வரம்பிற்குள் வரவில்லை என்று சொல்லி விடுவது வழக்கம். இதனால் நிறைய புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்து விடுகிறார். இவர்களில் சிலர் புத்திசாலியாகக் கூட இருப்பதுண்டு. ஆனாலும் தனது தட்டிக் கழிக்கும் குணத்தால் இவர்கள் தனது வேலையில் இலக்கை அடைய முடியாமல் பின்தங்கி விடுகிறார்கள். ஆமை, முயல் கதையில் இவர்கள் முயலைப் போன்றவர்கள்.
ஆ) இரண்டாமவர், தனது வேலை வரம்பையும் தாண்டி வேலை செய்யக் கூடியவர்கள். புதிய புதிய விடயங்களையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இவர்களிடத்தில் உண்டு. மேலதிகாரி சொல்லும் வேலைகளுக்கு காரணத்துடன் மறுமொழியுடன் நன்மை,தீமைகளை விளக்கிச் சொல்லக்கூடியவர்கள். எளிதில் கற்றுக்கொள்ளும் ஆற்றலும் இவர்களிடத்தில் உண்டு. ஆகையால், இவர்களுடைய அறிவுத்திறன், அனுபவம் இவர்களிடம் இருக்கும் Positive Attitude, ஆகியவை மற்றவர்கள் மெச்சும் படி அமைந்துவிடுகிறது. நிதானமாக, தவறிழைக்காமல் வேலை செய்யும் வழக்கம் உடையவர்கள். வேலைகளை வெற்றிகரமாக முடித்து மேலதிகாரியிடம் நல்ல பெயரைத் தட்டிச் செல்வார்கள். இவர்கள் கொஞ்சம் ஆமை போல் இருந்தாலும் தனது இலக்கை அடைந்து, தனது அலுவலகத்தில் பிரகாசமாக எல்லோருக்கும் தெரிவார்கள்.
இ) மூன்றாமவர், இவர்கள் மேலதிகாரி எந்த வேலை கொடுத்தாலும் மாய்ந்து மாய்ந்து செய்யக்கூடியவர்கள். நன்மை தீமைகளை எடுத்துரைக்கும் பக்குவம் கிடையாது. இவர்கள் மேலதிகாரிக்குக் கொஞ்சம் பயப்படக்கூடியவர்கள். அவசரம் அவசரமாக எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வார்கள். நிறைய தவறுகளை செய்வார்கள். வேலைகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் மற்றவர் உதவியை நாட வேண்டிய சூழ்நிலையும் வரலாம். மற்றவர்கள் வந்ததும் வேலை முடிந்து, மேலதிகாரியிடம் மற்றவர்கள் நல்லபெயரை தட்டிச்செல்வதும் உண்டு. தாமதம், மற்றவர் உதவி நாடுதல், எந்த வேலையையும் உருப்படியாக முடிக்காதது ஆகியவற்றால் மேலதிகாரியிடம் திட்டு வாங்க நேரிடலாம். மொத்தத்தில் தனது இலக்கே தெரியாமல் பயணம் செய்ததால், தத்தளித்துக்கொண்டு தோல்வியே அடைவார்கள்.
இன்னும் சில வகைகளைப் பற்றி இன்னொரு சமயத்தில் சிந்திக்கலாம்.
அன்புடன் ஜோதிபாரதி
Wednesday, December 26, 2007
அம்பானியின் அனுபவ மொழிகள் -அறிவுக்களஞ்சியம்
அம்பானியின் அனுபவ மொழிகள் - அறிவுக்களஞ்சியம் சிந்தனையாளனாக,கட்டுரையாளனாக இருந்து கொண்டு சாதிப்பது பற்றிச் சொல்வது, எழுதுவதுவேறு. சாதித்து விட்டு வெற்றியின் ரகசியத்தைப் பற்றி, சாதனை பற்றிச் சொல்வது வேறு. இரண்டாமவரை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை. நடைமுறைக்கு ஒத்து வருமா என்று தர்க்கவாதம் செய்ய வேண்டியதில்லை. திருபாய் அம்பானியைப் போல் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பணக்காரர்களில் ஒருவராய் வாழ்ந்து சாதித்த ஒருவரின் அனுபவ மொழிகளைப் படிப்பது மட்டுமல்ல பின்பற்றவும் முடிந்தால் வெற்றிகள் தானாக நம்மைத் தேடி வராதா என்ன?
Dhirubhai Ambani Quotes :-
- True entrepreneurship comes only from risk-taking. Pursue your goal, even in the face of difficulties. Convert difficulties in to opportunities. Keep your morale high, in spite of setbacks. At the end you are bound to succeed.
- My advice to young entrepreneurs is not to accept defeat in the face of odds. Challenge negative forces with hope, self-confidence and conviction. I believe that ambition and initiative will ultimately triumph.The success of the young entrepreneur will be the key to India's transformation in the new millennium.
- The secret of Reliance's success was to have ambition and to know the minds of men.
- Growth has no limit at Reliance. I keep revising my vision. Only when you dream it you can do it.
- The problem with Indians is that we have lost the habit of thinking big!
- We must always go for the best. Do not compromise on quality. Reject if it is not the best -- not only the best in India, but globally.
- If India wants to be a great nation, we must have courage to trust. This is my sincere belief.
- All we have to do is to break the shackles that chain the energies of our people, and India's economy will record a quantum leap and move into a new, higher orbit of growth, competitiveness and productivity.
- For those who dare to dream, there is a whole world to win! I am deaf to the word 'NO.'
- I give least importance to being Number one. I consider myself to be fortunate in this position and would like to contribute to nation building in some way.
- Does making money excite me? No, but I have to make money for my shareholders. What excites me is achievement, doing something difficult. In this room extraordinary things must happen.
- Think big, think fast, think ahead. Ideas are no one's monopoly.
- Our dreams have to be bigger. Our ambitions higher. Our commitment deeper. And our efforts greater. This is my dream for Reliance and forIndia.
- I consider myself a path finder. I have been excavating the jungle and making the road for others to walk. I like to be the first in everything I do.
- Give the youth a proper environment. Motivate them. Extend them the support they need. Each one of them has infinite source of energy. They will deliver.
- You do not require an invitation to make profits.
- If you work with determination and with perfection, success will follow. Between my past, the present and the future, there is one common factor: Relationship and Trust. This is the foundation of our growth.
- We bet on people. Meeting the deadlines is not good enough, beating the deadlines is my expectation.
- Don't give up, courage is my conviction.
- We cannot change our rulers, but we can change the way they rule us.
- Roll up your sleeves and help. You and your team share the same DNA.
- Be a safety net for your team.
- Always be the silent benefactor. Don't tom-tom about how you helped someone.
- Dream big, but dream with your eyes open. Leave the professional alone!
- Change your orbit, constantly! Money is not a product by itself, it is a by-product, so don't chase it.
Courtesy -N.Ganesan
அம்பானியின் வெற்றிக்கு காரணம் அவர் பயணித்த பாதை, அவர் வகுத்துக்கொண்ட வரையறை! அப்பப்பா!! எத்தனை அறிவுபூர்வமாக இருக்கிறது. வெற்றி என்பது சாதாரணமாக எல்லோருக்கும் கிடைத்து விடாது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. அவர் இவ்வளவு படிப்பினைகளை பெற எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்? தனது வெற்றியின் ரகசியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு உயர்ந்து இருக்கிறார்.அன்புடன் ஜோதிபாரதி
Thursday, November 29, 2007
வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு 10 கட்டளை! * மாணவர்களுக்கு அப்துல் கலாம் யோசனை
முன்னேற்றத்திற்கு 10 கட்டளைகளைப் பின்பற்றலாம் என்று யோசனையும் கூறினார். சென்னை மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கான `தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. சென்னை மாநகரில் உள்ள 36 மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில், `தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். `தினமலர்' வெளியீட்டாளர் இரா.லட்சுமிபதி, `தினமலர்' பங்குதாரர் இரா.ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:
`தினமலர்' நடத்தும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, மிகவும் நல்ல நிகழ்ச்சி. உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதற்காக `தினமலர்' குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்; மாணவர்களையும் வாழ்த்துகிறேன். இன்றைய நிகழ்ச்சியில், `இன்றைய இளைய சமுதாயம் வருங்காலத்தைப் பற்றி பயமே இல்லாமல் வாழ வேண்டும்' என்பதே என் கருத்து மூலமாகும். உங்களை காணும் போது பல காட்சிகளைப் பார்த்தேன். ஒரு காட்சியில் 20 வயதிற்குள்ளே இருக்கும் அனைத்து இளைஞர்களையும் பார்க்கிறேன். உங்களுடைய மலர்ந்த முகங்களைப் பார்க்கிறேன். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கல்வியினால், கல்விப் பயனால் உங்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாக திகழ, பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாக திகழ, நாட்டிற்கு நல்ல குடிமகனாக திகழ வாழ்த்துகிறேன். இந்தியா 2020ல் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே நம் நாட்டின் குறிக்கோள். வளமான நாடு என்றால், பொருளாதாரம் வளமிக்க, நுாறு கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நாட்டின் லட்சியம். வேலை இல்லை என்ற நிலை மாறி, நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்கு தேவை. இளைய சமுதாயம், எண்ண எழுச்சியுள்ள இளைய சமுதாயம் நாட்டின் அரும் பெரும் செல்வமாகும். 2020ல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை சமீபத்தில் நான் பார்லிமென்ட்டில் பேசும் போது தெரிவித்திருந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் சிந்தனை ஒன்றுபட்டால், செயல் ஒன்றுபட்டால் லட்சியம் நிறைவேறும். 10 கட்டளைகளைப் பின்பற்றினால் லட்சியம் நிறைவேறும்.
1)கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
2)சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லாருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
3)விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
4)பண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
5)விஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லுனர்களும், தொழில் முதலீட்டாளர்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு இடமாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
6)அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் தரமான மருத்துவ வசதி கிடைக்கக்கூடிய நாடாக மாற்ற வேண்டும்.
7)ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
8)வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
9)இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீடுநடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
10)உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக் கூடிய தலைவர்களை பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும். மன எழுச்சி அடைந்துள்ள 54 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க, நமது இளைய தலைமுறை எழுச்சி பெற வேண்டும். கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால், அது மாணவர்களின் படைப்புத் திறனையும், ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
சிறுவனாக இருந்த போது நானும் பயந்தேன்!:
விழாவில் கலாம் பேசும் போது குறிப்பிட்டதாவது: உங்களைப் போல் நான் சிறுவனாக இருக்கும் போது, என் மனதில் பல பயங்கள் தோன்றின. எனது கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற கேள்வி எழுந்தது. நான் ராமநாதபுரம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற போது, அங்கு மாணவர்கள் அருமையான உடைகளை அணிந்து, ஆங்கிலத்தில் பேசியதைக் கண்டேன். அவர்கள் குழுவில் என்னை சேர்ப்பார்களா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.
ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்ததும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்குமா, இன்ஜினியரிங் கல்லூரியில் சேர முடியுமா? என்ற எண்ணங்கள் என்னை வாட்டி எடுத்தன. பத்தாம் வகுப்பில் சென்றவுடன், இந்த எண்ணங்கள் என்னை விட்டு மறைந்து விட்டன. காரணம், எனக்கு கிடைத்த அருமையான பொக்கிஷம் என் ஆசிரியர். அந்த ஆசிரியர், நல்ல லட்சியத்தைக் கொடுத்தார்; நல்ல லட்சியத்தைக் கற்பித்தார். எனது புதிய லட்சியம் ஆரம்பித்தது. இவ்வாறு கலாம் குறிப்பிட்டார்.
இப்படியும் நல்ல மனிதர்கள்:
பழைய நிகழ்ச்சி ஒன்றை நினைவு கூர்ந்து கலாம் பேசியதாவது:
`தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியை பார்த்ததும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நான் ஜனாதிபதியாக இருந்தபோது, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்தேன். நான் பயணித்த விமானத்தில், பத்திரிகையாளர்களும் வந்தனர். இரா.கிருஷ்ணமூர்த்தியும் வந்திருந்தார். விமானத்தில் நான் பேட்டி கொடுத்தேன். பத்திரிகையாளர்கள் மிகவும் கடினமான கேள்விகளை எல்லாம் கேட்டனர். `எப்போதாவது நல்ல மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா?' என்று கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கேள்வி கேட்டார். அதற்கு, அப்போது என்னால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக வந்தபோது, ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை பதிலாக கூறுகிறேன்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் அப்போது மூர் மார்க்கெட் இருந்தது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பழைய புத்தகங்களை வாங்குவதற்காக நான் அங்கு செல்வேன். ஒரு நாள் திடீரென்று நீ ராமேஸ்வரம் வர வேண்டும் என்று தகவல் வந்தது. அப்போது, அங்கு புயல் வீசிக் கொண்டிருந்தது. ராமேஸ்வரம் செல்வதற்கு கையில் என்னிடம் பணம் இல்லை. அப்போது நான் எம்.ஐ.டி.,யில் படித்துக் கொண்டிருந்தேன். எம்.ஐ.டி., தலைவர் மற்றும் துணைவேந்தராக லட்சுமணசாமி முதலியார் இருந்தார். அவர் எனக்கு பரிசாக கொடுத்த ஒரு புத்தகத்தை (ஸ்ட்ரென்த் ஆப் மெட்டீரியல்) வைத்திருந்தேன். அதன் விலை 200 ரூபாய்.அந்த புத்தகத்தை மூர் மார்க்கெட்டில் உள்ள கடையில் கொடுத்து, விவரத்தை கூறி, பணம் கிடைக்குமா என்று கேட்டேன். கடைக்காரரும் புத்தகத்தை வாங்கிக் கொண்டு நுாறு ரூபாய் கொடுத்தார். புத்தகத்தை கூர்ந்து பார்த்த கடைக்காரர், `துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியார் கையெழுத்து இருக்கிறதே! இது மிகவும் நல்ல புத்தகம். அதை உனக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். எனவே, புத்தகத்தை விற்க மாட்டேன். உனக்கு எப்போது கல்வி உதவித் தொகை கிடைக்கிறதோ, அப்போது வந்து பணத்தை திருப்பி கொடுத்து விட்டு புத்தகத்தை வாங்கிச் செல்' என்றார். அவர் பெயர் தட்சிணாமூர்த்தி; மிகவும் நல்ல மனிதர். பிறகு மூன்று மாதம் கழித்து நூறு ரூபாயை கொடுத்து விட்டு மீண்டும் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். இப்படியும் நல்ல மனிதர் இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டேன். தேவை ஏற்படும்போது உதவி செய்வது தான் நல்ல குணம்.
நன்றி-தினமலர்
வட மொழி - தமிழ் மொழி
பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்
அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்
அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது
அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை
அகந்தை - இறுமாப்பு,செருக்கு
அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்
அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு
அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்
அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை
அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை
அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்
அக்கணம் - அப்பொழுது,அந்நொடி
அக்கரம் - எழுத்து
அட்சரம் - அழிவில்லாதது
அக்கியாணி - அறிவிலான்
அஞ்ஞானி - புல்லறிவாளன்
அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி
அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு
அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை
அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி
அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்
அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு
அங்குலம் - விறக்கட்டை,விரலளவு
அசத்தை,அசத்தியம் - பொய்
அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்
அசரீரி - வானொலி,உருவற்றது
அசித்து - பயனின்மை
அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை
அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை
அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்
அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்
அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்
அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்
அஞ்சிட்டம் - கதிரவன்
அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது
அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்
அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது
அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்
அட்டபந்தனம் - எண்புறக்கட்டு
அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்
அதமம் - கீழ்மை,கடைத்திரம்
அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்
அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்
அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்
அதிகாலம் - விடியற்காலம்
அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை
அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்
அநந்தகோடி - எண்ணத்தொலையாதன
அநந்தம் - அளவின்மை,முடிவில்லது
அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்
அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை
அநீதி - முறைகேடு
அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்
அநுசரணை - சார்பு,சார்பு நிலை
அநுசிதம் - பொய்,தகாதது
அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி
அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை
அனுமானப் புரமானம் - கருதலளவை
அநேகர் - பலர்
அந்தகன் - அழிப்போன்,குருடன்
அந்தகாரம் - இருள்,அறியாமை
அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்
அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை
அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்
அந்தி - முடிவு,மாலைக்காலம்
அந்திய கிரியை - இறுதிச் சடங்கு
அந்நியர் - பிறர்,அயலார்
அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்
அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்
அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு
அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு
அபிதானம் - பெயர்
அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்
அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு
அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு
அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்
அபேச்சை -அவா,விருப்பம்
அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை
அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி
அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று
அமரத்துவம் - அழிவின்மை
அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்
அந்நியர் - பிறர்,அயலார்
அதிகம் - மிகுதி,அளவின்மை
அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை
அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்
அம்பாரம் - குவியல்
அயோக்கியம் - தகுதியினமை,தகாதது
அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்
அரணியம் - காடு
அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு
அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி
அருவம் - உருவின்மை,அழகின்மை
அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு
அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்
அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு
அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை
அவகீர்த்தி - இழிவு,புகழின்மை
அவக்கியாதி - வசை,இகழ்ச்சி
அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு
அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை
அவதரித்தல் - பிறத்தல்
அவதாரம் - பிறப்பு,இறங்குகை
அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை
அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை
அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை
அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு
அவயவம்,அவையவம் - உறுப்பு
அவலன் - உடற்குறையன்,வீணன்
அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,
அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு
அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்
அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை
அனுதாபம் - இரக்கம்
அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு
அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை
அனேகம் - பல,எல்லாம்
அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை
அன்னம் - சோறு,உணவு,அடிசில்
அன்னியன் - பிறர்,அயலார்
அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்
ஆகம் -உடல்,மார்பு
ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி
ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்
ஆகாய விமானம் - வான ஊர்தி
ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு
ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்
ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்
ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி
ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு
ஆச சங்கை -ஐயம்
ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா
ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு
ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு
ஆசீர்வாதம் - வாழ்த்துரை
ஆசுவாசம் - இளைப்பாறுகை
ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு
ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது
ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்
ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை
ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை
ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்
ஆஞ்ஞை -ஆணை,கட்டளை
ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு
ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு
ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்
அந்நியர் - பிறர்,அயலார்
ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்
ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு
ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்
ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு
ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்
ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு
ஆத்துமா,ஆன்மா - உயிர்
ஆந்ந்தம் - இன்பம்
ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்
ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்
ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி
அபூர்வம் - வினைப்பயன்
ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்
ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு
ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு
ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்
ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்
ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு
ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்
ஆரணியம்,ஆரண்ணியம் - காடு
ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்
ஆரம்பம் - தொடக்கம்
ஆரம்பித்தல் - தொடங்கல்
ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்
ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்
ஆரோக்கியம் - நலம்,நோயின்மை
ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்
ஆரோபித்தல் - ஏற்றுதல்
ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்
ஆர்மோனியம் - இசைக்கருவி
ஆர்வம் - அன்பு,விருப்பம்
ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்
ஆலகம்- நெல்லிமரம்
ஆலம் - நஞ்சு
ஆலயம் - கோயில்
ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்
ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி
ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை
ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு
ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்
ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்
ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு
ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்
ஆன்மா - உயிர்
இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு
இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்
இச்சகம் - முகமன்
இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை
இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை
இட்டசித்தி - விருப்பப்பேறு
இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்
இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்
இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை
இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை
இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்
இந்து - நிலா,திங்கள்,அம்புலி
இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை
இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்
இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை
இரசாயனம் - பொருளியைபு
இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு
இரட்சை - காப்பு
இரணம்,ரணம் - புண்
இரதம்,ரதம் - தேர்
இரத்தம் - குருதி,செந்நீர்
இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி
இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்
இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு
இராகு - கருங்கோள்
இராக்கதர் - அரக்கர்
இராசசூயம் - அரசர் வேள்வி
இராசா - அரையன்,மன்னன்,அரசன்
இராச்சியம் - நாடு,அரசியல்
இராத்திரி - இரவு,கங்குல்
இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி
இதய கமலம் - நெஞ்சத்தாமரை
இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு
இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்
இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்
இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்
இலங்கணம் - பட்டினி
இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை
இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை
இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்
இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு
இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை
இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு
இலீலை,லீலை - விளையாட்டு
யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு
உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை
உஷ்ணம் - வெப்பம்,சூடு
உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு
உசிதன் - தக்கோன்
உச்சம் - உயர்ச்சி,சிறப்பு
உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்
உச்சரிப்பு - எழுத்தோசை
உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்
உச்சி - மேடு,முகடு
உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்
உதயன் - பகலோன்
உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று
உத்தமம் - உண்மை,மேன்மை
உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை
உத்தரவு - கட்டளை
உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்
உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய
உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்
உபதேசம் - அருண்மொழி,அறிவுரை
உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு
உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்
உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்
உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்
உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது
உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி
உருசி,ருசி - சுவை
உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி
உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்
உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு
உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி
உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு
உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்
ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு
ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு
எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி
எந்திரம் - பொறி
எமன் - கூற்றுவன்,மறலி
ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை
ஏகம் - ஒன்று,தனிமை
ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு
ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்
ஏடணை,ஏஷணை - விருப்பம்
ஐது,ஹேது - காரணம்
ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை
ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு
ஐதீகம்,ஐதிகம் - உலகுரை
ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்
ஓமம்,ஹோமம் - வேள்வி
ஒளடதம்,ஒளஷதம்- மருந்து
களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்
கடகம் - கைவளை,வளையம்
கடம் - கடம்,யானைக்கதுப்பு
கடாட்சித்தல் - அருளல்
கடாரம் - கொப்பரை,தேங்காய்
கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி
கடிகை - நாழிகை,தாழ்க்கோல்
கடினசித்தம் - வன்னெஞ்சம்
கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை
கடூரம்,கொடூரம் - கொடுமை
கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்
கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது
கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்
கணிகை - பொதுமகள்
கணிசம் - அளவு,மேம்பாடு
கணிதம் - கணக்கு
கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து
கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு
கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது
கதலி - வாழை
கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை
கனகம்,கநகம் - பொன்
கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை
கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை
கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்
கந்மம்,கருமம் - தொழில்,வினை
கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு
கபாலம் - தலையோடு,மண்டையோடு
கபோதி - குருடன்
கப்பம் - இறை
கமண்டலம் - நீர்க்குடுவை
கமலம் - தாமரை,நீர்
கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு
கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை
கரகம் - வட்டில்,நீர்க்குடுவை
கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்
கரணம் - கருவி,ஐம்பொறி
கரம் - கை
கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்
கருணை - அருள்,இரக்கம்
கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்
கர்ப்பவதி - சூலி
கர்ப்பாசயம் - கருப்பை
கர்வம் - செருக்கு,இறுமாப்பு
கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை
கலி - வறுமை,துன்பம்
கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி
கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்
கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்
கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்
கவி - செய்யுள்,புலவன்,பாட்டு
கவுளி,கெளளி - பல்லி
களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்
கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து
கனம் - சுமை,பளு,பளுவு
காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்
கசாயம்,கஷாயம் - காவி
காஞ்சிரம் - எட்டி மரம்
காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி
காதகன் - கொலையாளி
காயசித்தி - நீடுவாழ்ப் பேறு
காயம் - உடல்,யாக்கை,வான்
காரிய கர்த்தா - வினைமுதல்வன்
காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்
கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை
கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு
கிஸ்தி - திறை,வரி
கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்
கிரகஸ்தம் - இல்லற நிலை
கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு
கிரணம் - ஒளி,கதிர்
கிரந்தம் - நூல்,எழுத்து
கிரமம் - ஒழுங்கு,முறைமை
கிரயம் - விலை
கிராதன் - குறவன்,வேட்டுவன்
கிரி - மலை,பன்றி
கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு
கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு
கிரீடம் - முடி
கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை
கிலம் - கழிவு,அழிவு,சிறுமை
கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்
கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு
கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா
கீலகம் - ஆணி,பொருத்து
குஞ்சரம் - யானை
குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்
குணஷ்டை - தொல்லை,துன்பம்
குதர்க்கம் - அழிவழக்கு
குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு
குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்
குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்
கும்பம் - குடம்
குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை
குரோதம் - உட்பகை
குலாலன் - குயவன்
குலிசம் - வேற்படை
குன்மம் - சூலை,வயிற்று வலி
கேதம் - துன்பம்,இடர்,குற்றம்
கேவலம் - சிறுமை,தனிமை
கோகிலம் - குயில்
கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை
கோஷ்டி - கூட்டம்
கோடி - நூறு நூறாயிரம்
கோதண்டம் - வில்
கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்
கெளரவம் - மேன்மை,பெருமை
சக - கூட,உடன்
சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை
சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்
சகமார்க்கம் - தோழமை நெறி
சகலம் - எல்லாம்
சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு
சகா - தோழன்,துணை
சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு
சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை
சகி,சகீ - தோழி
சகிதம் - உடன்
சகுணம் - குணத்தோடு கூடியது
சகுந்தம் - கழுகு,பறவை
சகுனம் - குறி
சகோதரம் - உடன்பிறப்பு
சகோதரி - உடன்பிறந்தாள்
சக்கரம் - உருளை,வட்டம்
சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி
சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்
சங்கிதை - தொகுதி,வரலாறு
சடுதி,சடிதி - விரைவு
சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு
சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு
சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று
சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு
சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்
சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை
சதகோடி - நூறு கோடி
சதசு - அவை
சதம் - நூறு நிலை
சதானந்தம் - இடையறா வின்பம்
சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி
சந்தகம் - எப்பொழுதும்
சந்தானம் - வழி,வழித்தொடர்பு
சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்
சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்
சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்
சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து
சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்தேகம் - ஐயம்,ஐயுறவு
சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு
சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்
சந்நியாசம் - துறவு,துறவறம்
சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்
சபம்,ஜெபம் - உருவேற்றல்
சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா
சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்
சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்
சமஷ்டி - தொகுதி,எல்லாம்
சமதை - ஒப்பு
சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்
சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்
சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை
சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை
சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை
சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்
சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை
சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்
சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது
சமாராதனை - உளநிறைவு
சமி,ஷமி - பொறு
சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி
சமீபம் - அருகு,அணமை,மருங்கு
சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்
சமுதாயம் - குமுகம்,கூட்டம்
சமுத்திரம் - கடல்
சமை,ஷமை - பொறுமை
சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி
சம்பத்து - செல்வம்,பொருள்
சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்
சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை
சம்பு ரேட்சணம் - தெளித்தல்
சம்பூரணம் - நிறைவு
சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு
சம்ரஷணை - பாதுகாப்பு
சயம்,ஜெயம் - வெற்றி
சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி
சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்
சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்
சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்,யாக்கை,மெய்
சருமம்,சர்மம் - தோல்
சர்ப்பம் - பாம்பு
சர்வகலாசாலை -
பல்கழைக் கழகம்சலதளம்- அரசமரம்
சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு
சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை
சல்லாபம் - உரையாடல்
சவம் - பிணம்
சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்
சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு
செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்
சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை
சற்குணம் - நல்லியல்பு
சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு
சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை
சாகரம் - கடல்
சாகுபடி - பயிர் செய்தல்
சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்
சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை












