Thursday, December 17, 2009

கொள்ளிமலை குப்பு கருத்துப்படம் - 17-12-2009














Friday, December 11, 2009

மண்ணாங்கட்டி பைரமுத்து நடத்திய தமிழக தலைவர்களின் கவியரங்கம்

மிகப் பெரிய தலைவர்களை கவியரங்கத்திற்கு கவிஞர் மண்ணாங்கட்டி பைரமுத்து அழைத்திருந்தார்.


அதில் கலந்து கொண்ட தலைவர்கள் எளிமையான சில கவிதைகளை முத்தாய்ப்பாகச் சொல்லி கவியரங்கத்தை வரலாறு காணாதப் கவியரங்கமாக மாற்றினர்.

இதோ கவியரங்கம்....

கவிஞர் என்.வரதராசன்

கேரளா மேற்கு வங்கம் சீனா ரஷ்யா
என் தாய் வீடு

தமிழ்நாடு இந்தியா
என் தாய்நாடு

நாடு நலம் பெற
வீடு வளம் பெற வேண்டும்


கவிஞர் மரு.இராமதாசு

மம்மியைப் பார்க்கும் போதே
கலையழகு தெரியும்

உடன் பிறப்பைப் பார்க்கும் போதே
உடன் பிறவாதது ஞாபகம் வரும்

பாபாவையும் பிடிக்காமல் தூக்க வேணும்
பங்காருவையும் தான்

ராச்சியத்தை ஆள
ராச்சிய சபை போதும்

பூச்சியத்தை ஆள
கூட்டணி வைத்தது போதும்


கவிஞர் தா.பாண்டியன்

அம்மா
பேசும் அழகே தமிழ் விழி

நீ பேசாதிருந்தாலும்
போயாஸ் தோட்டம் தான் என் வழி

பாரதி கண்ட வழுதி
நின்னை பாராட்டி நான் எழுதி

பச்சைத் தமிழன் நான்
நீயும் தான்

செங்கொடி எனக்கெதற்கு
சபரிமலை பஞ்சாமிர்தம்மும்
நேந்திரம் பழமும்
முல்லைப் பெரியாறு வழக்கு
வரும் போது மட்டும்
வாய்க்குள் வழுக்குகிறது

வைகோ
பொய்க்கோ
ஹைக்கு


கவிஞர் தொல்.திருமாவளவன்

நின்னைத் தமிழ் என்றேன்
தவறு
நீதான் தமிழ்

நின்னைச் சரணடைந்தேன்
நின் புகழ் போற்றினேன்
உள்ளுக்குள் மனதைத் தேற்றினேன்

எப்போது விடுவாய் என் மக்களை
நம்பிக்கையுடன்
நினக்கு சாமரம் வீசினேன்

வீசிக்கொண்டெ இருக்கிறேன்
இன்னும் நீ விடவில்லை

நீயும் போற்க்குணமுள்ள போராளி
உனக்குத் தேவை அடி
மைகள் என்று மட்டும் அறிந்து கொண்டேன்.


கவிஞர் கே.வி.தங்கபாலு

முகவர் நான் அன்று
முகவரி கொடுக்கிறேன் பலர்க்கு இன்று

அம்மா என் கொள்கை
அன்னை என்பது அதன் பொருள்

இத்தாலி வேண்டும் என்றால்
எத்தாலி போனால் என்ன என்பது
என் மதி நுட்பம்

கல்லூரியால் ஊரித்திளைத்தேன்
கனியாகிப் படைத்தேன் இக்கவித்தேன்

கோஷ்டிகளை ஒருங்கிணைக்க
எனது கோஷ்டிக்கு அழப்பு அனுப்புறேன்

சை கிந்த்!


கவிஞர் ஜெ.ஜெயலலிதா

கச்சத்தீவைத் தாரை வார்த்து
கொச்சையாக கவிபாடும்
இச்சைச் செல்வர்

உச்சம் எனக்கருதி
எச்சத்திற்காசைப்பட்டு
மிச்சம் மீதி இல்லாமல்
இனத்தை அடகு வைக்கும்
மிராசுதார்

எண்பத்தாறு வயதிலும்
மைனராக
செய்யும் மைனாரிட்டி ஆட்சி

எப்போது விடியும்
ஒரே குளிர்
நல்ல தூக்கம்
ஊட்டி கொட நாட்டில்...!



கவிஞர் வைகோ

பொடா தடா
நான் பார்க்காததாடா

அம்மா என்றால் அன்பு
அதுவே என்றன் பண்பு
போயஸ் அழைப்பும்
எனது விழிப்பும்
சந்திக்கும் நேரம் ஒன்று

ஆளும் கட்சி சந்திக்கு
வரும் நேரம் உண்டு

ஈழம் என்னும் ஈர நிலத்தை
காயவிட்ட கயவர்களின் சூதை
வெல்வோம்


கவிஞர் மு.கருணாநிதி

தமிழை விற்றேன்
தமிழனைப் பெற்றேன்
தமிழனை விற்றேன்
தமிழை வாழ வைக்கிறேன்









Friday, November 6, 2009

பிடித்ததும், பீடித்ததும் -எனது பார்வையில்

பிடித்தவர்கள், பிடிக்காதவர்களை பற்றிய தொடர் பதிவுக்கு அன்பின் நண்பர் ஜீவன் என்கிற தமிழ் அமுதன் அழைத்திருந்தார். இது ஒரு போட்டு வாங்கும் செயலாகவோ அல்லது மல்டி லெவெல் மார்க்கெட்டிங் என்றோ எடுத்துக்கொள்ளாமல், நம்மையும் மதித்து அழைப்பு அனுப்பியவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் எனது பதிவில் பிடித்தவர்களையும்,பீடித்தவர்களையும்(பிடிக்காதவர்களையும்) எனது பார்வையில் தர முயன்றிருக்கிறேன்.

எனக்கு யாரையும் நூறு விழுக்காடு பிடிப்பதில்லை நூறு விழுக்காடு பிடிக்காமலும் இருப்பதில்லை. அப்படி நூறு விழுக்காடு இவரை எனக்குப் பிடிக்கும் என்று சொல்கிறவர்களை, இவர்கள் ஒப்பனையாகத்தான் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியும்.


தலைவர்

எனக்கு பிடித்த தலைவர்கள் இருவரின் மறைவும் இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.
மற்றவர்களைப் பார்ப்போம்.

பிடித்ததும், பிடிக்காததும்

மன்மோகன் சிங் :

பிடித்தது: இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி செயல்பட்டவர்.

பிடிக்காதது: அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறேன் என்று இந்தியாவை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிடம் அடகு வைத்தது. நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சோனியா சொன்னால் தலையாட்டுவது. பேசாம சோள கொல்லையில நின்னா காக்கா, குருவி, நரி எதும் வராது. இரை(றை)யாண்மை மேம்படும். இலங்கை இனப்படுகொலைக்கு பொய் சொல்லிக்கொண்டே ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து அந்த கோர நிகழ்வுகளுக்குக் காரணகர்த்தாவாக இருந்தது.

கருணாநிதி :

பிடித்தது: வசனங்களில் தனது தமிழ் வல்லமையைத் தமிழ் உலகுக்குக் காட்டி தமிழ் மக்களின் இதயத்தில், அண்ணாவின் இரவல் இதயத்துடன் குடிபுகுந்தவர், கட்டுடைக்க முடியாதத் தொண்டர்களைக் கொண்ட கவிஞர்.

பிடிக்காதது: ”அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” அன்றைய முழக்கம், இன்று ”வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது”. கழகம் எனது குடும்பம் என்று சொல்லிச் சொல்லியே தனது குடும்பத்தை கழகமாக்கியது. பெரியார்,அண்ணா என்றால் என்னா என்று கேட்கும் அளவில் அவர்களது கொள்கைகளை மதிப்பது. இனமானக் காவலர் என்று சொல்லிக்கொண்டே ஒர் இனம் அழிக்கப்படும்போது, அதற்கு மத்திய அரசு செய்த எல்லா உதவிகளுக்கும் உறுதுணையாக இருந்தது. தனக்குச் சொந்தமான ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வராமல் இருட்டடிப்பு செய்தது. ஒட்டுமொத்தமாக துடைத்தொழிக்கப்படும் வரை அனைவரையும் பொறுத்திருக்கச் சொன்னது. உண்ணாவிரத நாடகம், மருத்துவச்சாலை நாடகம், ஈழமக்களின் ரணம் ஆறாமல் இருக்கும் போது அம்மக்களையும் சேர்த்துகொண்டு உலகத் தமிழ் மாநாடு நடத்தி ஈழமக்களின் அவலத்தை இருட்டடிக்க முயல்வது. இப்போது செம்மொழி மாநாட்டுக்காக தமிழக அகதிகள் முகாம்களுக்கு தனது சகாக்களை அத்தி பூத்தார்போல் அனுப்பும் நாடகம். இன்னும் நிறைய சொல்ல முடியும்.


ஜெயலலிதா :

பிடித்தது: உறுதியான நிலைப்பாடு, காவிரி நீர் பிரச்சனையில் பிரதமர் நரசிமராவ் தலைமையில் நடந்த முதல்வர்கள் கூட்டத்திலிருந்து கருத்துக்கள் ஒவ்வாதபோது வெளி நடப்பு செய்தது, அதன் பலனாக உடனே காவிரியில் உடனடி நிவாரணமாக தண்ணீர் திறக்க ராவ் உத்தரவிட்டது. தமிழோ,ஆங்கிலமோ ஒரளவுக்குத் தூய்மையாகப் பேசுவது.

பிடிக்காதது: அடைந்தால் தமிழ் நாடு இல்லையேல் கொட நாடு என்கிற உப்பு சப்பில்லா நிலை. கழகம் எனது குடும்பம் என்று சொல்லிச் சொல்லியே கழகத்தை இன்னொரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. தடா,போடா என்ற சட்டங்களைப் பயன்படுத்தி தனக்கு பிடிக்காத தலைவர்களை சிறையில் தள்ளியது. மூத்த தலைவர்களை மண்டியிட வைத்து மாரியாத்தா ஆசி கொடுப்பது போல் நின்றுகொள்வது. தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்று தேர்தல் நேரத்தில் சூளுரைத்துவிட்டு, தேர்தலுக்குப் பின் கொட நாடு பங்களாவில் குடிபுகுந்தது. ஈழமக்களைப் பற்றி தேர்தலுக்கு முன் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசிவிட்டு தேர்தல் முடிந்ததும் அது பற்றி வாய்திறக்காமல் இருப்பது. வளர்ப்பு மகனுக்கு ஆடம்பரமாகத் திருமணம் நடத்தி வைத்தது.

நடிகர்

பிடித்தவர் : கமலகாசன்,நாசர்,ரகுவரன்,பிரகாஷ்ராஜ்,கவுண்டமணி,விவேக்

பிடிக்காதவர் : பிரசாந்த்,ஜெயம் ரவி, சிம்பு,அஜித்


நடிகை

பிடித்தவர் : கே.ஆர்.விஜயா,ஸ்ரீதேவி,நயன்(9)தாரா,திரி(3)சா,தமன்னா(நடிப்பை மட்டும் சொல்லவில்லை)

பிடிக்காதவர் : சந்தியா,பிரியாமணி,மஞ்சுளா,ஸ்ரீபிரியா


பாடகர்

பிடித்தவர் : கே.ஜே.ஜேசுதாஸ்,ஹரிகரன்,டி.எம்.செளந்தர்ராஜன்,கார்த்திக்

பிடிக்காதவர் : அப்படி சொல்வதற்கு யாருமில்லை.


பாடகி

பிடித்தவர் : எஸ் .ஜானகி,சுவர்ணலதா,கவிதா சுப்பிரமணியம், சாதனா சர்க்கம்

பிடிக்காதவர் : அப்படி சொல்வதற்கு யாருமில்லை.


இயக்குநர்

பிடித்தவர் : மணிரத்னம்,பாலா,அமீர்,சீமான்,பாலுமகேந்திரா

பிடிக்காதவர் : ராஜ்கபூர்,இராம நாராயணன்,


கவிஞர்

பிடித்தவர் : வைரமுத்து,பாலா,மு.மேத்தா,சிற்பி,சுரதா,கு.க.சண்முகம்,புகாரி

பிடிக்காதவர் : வைரமுத்து(துரோகிகளைத் தெரிந்தும் வாழ்த்துப்பா பாடியே வாழப் பழகியதற்கு) , மற்ற பின் நவீனத்துவம் என்கிற பெயரில் தன்னுள் இருக்கும் வக்கிரத்தை பொதுவில் வைத்து பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒரு சிலரை.


இசைஅமைப்பாளர்

பிடித்தவர் : ஏ.ஆர்.இரகுமான்,இளையராஜா,வித்யாசாகர்,விஜய் ஆண்டனி,யுவன் சங்கர் ராஜா

பிடிக்காதவர் : யாரையும் பிடிக்காது என்று ஒதுக்கி வைக்கும் நிலையில் குறிப்பிட முடியவில்லை. இளையராஜா போன்ற கொஞ்சம் தலைக்கணம் உள்ளவர்களைப் பிடிப்பதில்லை. தமிழ் பாடகர்களுக்கு வாய்ப்பளிக்காமல் கேரளம்,ஆந்திரா மற்றும் வட இந்தியாவில் பாடகர்களை தேடியதில் கொஞ்சம் வருத்தமும் உண்டு.


எழுத்தாளர்

பிடித்தவர் : சுஜாதா,எஸ்.இராமகிருஷ்ணன்,பட்டுக்கோட்டை பிரபாகர்(எங்க ஊர்க்காரர் ஆச்சே),ஜெயமோகன்(இவர்களது எழுத்து பிடிக்கும். கொள்கை மற்றும் நிலைப்பாடு அல்ல)

பிடிக்காதவர் : சாரு நிவேதிதா(கொள்கை மற்றும் தலைக்கணத்துக்கு)


பேச்சாளர்

பிடித்தவர் : தமிழ்க்குடிமகன்,வைகோ,சுகி சிவம்,சரஸ்வதி இராமனாதன்,தமிழருவி சிவகுமாரன்,தமிழருவி மணியன், இளசை எஸ்.சுந்தரம்,உவமைக் கவிஞர் சுரதா, வலம்புரி ஜான், பேராசிரியர் சோ.சத்தியசீலன், மன்சூர்,டாக்டர் செல்வகணபதி.

பிடிக்காதவர் : அவர்களே, அவர்களே என்று ஆரம்பித்து பேச்சை முடிக்கக் காத்திருக்கும் அரசியல் வியாதிகள். கழகங்களின் தலைமைக் கழக சிறப்புப் பேச்சாளர்களின் விரசமானப் பேச்சு. அதுதான் கழகங்களின் சிறப்பு.

இதே போன்ற பதிவினைத் தொடர நான் அழைக்கும் பதிவர்கள்

1) கோவி.கண்ணன்
2) சஞ்சய் காந்தி
3) ஜோ
4) குழலி
5) முகவை மைந்தன்

அவர்களும் சிறப்பு செய்வார்கள் என்கிற நம்பிக்கையுடன்,

அன்பன்,

அத்திவெட்டி ஜோதிபாரதி

”உண்மையைச் சொல்வேன்; நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது எனக்கு”







Saturday, October 31, 2009

சிங்கப்பூர் கவிஞர் பாண்டித்துரைக்கு வாழ்த்துகள்!




சிங்கப்பூர் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத அங்கம், “ நாம்” இலக்கிய இதழின் ஆசிரியர், அண்மையில் “தனி” குறும்படத்தைத் தயாரித்து அளித்தவர், சிங்கப்பூர் கவிமாலை கவிஞர், நம் சக பதிவர், நண்பர் நீதிபதி பாண்டித்துரை அவர்கள் சிங்கப்பூர் அரசாங்கத்தால் வழங்கப்படும் தங்கமுனை பேனா விருது வழங்கும் விழாவில் மூன்றாம் பரிசை(சிங்கப்பூர் வெள்ளிகள் - இரண்டாயிரம் ரொக்கம்) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்கிறோம். அவருடைய இலக்கியப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துவோம்.


அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.







Thursday, October 22, 2009

"தனி" குறும்படம் வெளியீடு - அழைப்பிதழ்




எதிர்வரும் 24.10.2009 சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு சிங்கப்பூர் ஆங்மோகியோ நூலகத்தில் "தனி" குறும்படம் வெளியீடு காண்கிறது. அதுசமயம் கல்லூரி,தம்பி திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். அனைவரும் வருக!


அன்புடன் அழைப்பது

பாண்டித்துரை 82377006

அறிவுநிதி 90356113







இலங்கை பேராசிரியர் தமிழருவி த.சிவகுமாரன் சிங்கப்பூர் வருகை - தொடர் சொற்பொழிவு



அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அருமை உடன்பிறப்பு, வவுனியா தமிழ்ச் சங்கத் தலைவர், தமிழர் தேசிய கல்லூரி பேராசிரியர் தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் சிங்கப்பூர் வந்திருக்கிறார்கள். ஒரு வாரகாலத்திற்கு கந்தனின் கனியமுதம் தொடர் பேருரையாக,
சிங்கப்பூர் சிலோன் சாலை செண்பக விநாயகர் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சுவைபட உரை நிகழ்த்துகிறார்கள்.
அனைவரும் வருக! தமிழ்த்தேன் பருக!!


அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.








Friday, October 16, 2009

கருணாநிதி,அனுரா-யார் சொல்வது உண்மை அல்லது யார் சொல்வது பொய்?

15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை மறுகுடியேற்றம் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா கூறியுள்ளார்.

இலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் குழு தமிழகம் திரும்பியதும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தங்களது அறிக்கையைக் கொடுத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி, 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை வியாழக்கிழமை முதல் மேற்கொள்ளப் போவதாக இலங்கைத் தரப்பு தெரிவித்துள்ளதாகவும், மற்றவர்கள் படிப்படியாக மறு குடியமர்த்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று அமைச்சர் யாபாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. அரசின் கொள்கைப்படி, தமிழர்கள் கெளரவத்துடன் மறுகுடியமர்த்தப்படுவர் என்று மட்டும் தெரிவித்தார்.

இதில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் சொல்வது உண்மையா?அல்லது இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா சொல்வது உண்மையா?

அல்லது இரண்டும் பொய்யா?

நன்றி: தட்ஸ்தமிழ்.

எண்ணச் சிதறலில் தீபாவலி - ஈழமக்கள்




மாற்றுத்துணியில்லா
மண்ணின் மைந்தர்கள்
மறத்தை உரமாக்கி
மங்கிப் போன ஓவியங்கள்
பருக்கைகளுக்கு பகலிரவாய்
காத்திருக்கும் காவியங்கள்
குடி நீருக்கு
குடங்களுடன் மட்டுமல்ல
குற்றுயிருடன் விழிப்பு
குளிப்பதற்கு பிறவிப் பெருங்கடல்
இருந்தால் நீந்த முடியும்
அயலார் வருகையும்
வழமையான வினாக்களும்
தொடரும் கனாக்களும்
வேடிக்கை பார்க்க
வீணர்களின் வருகை
கிளிகளைக் கூண்டில் அடைத்து
ஆடச் சொல்லும் அவலம்
தினம் தினம் காணாமல் போகும்
உறவுகளால் மனவதை
பால் இல்லாப் பாலகர்கள்
பகலவன் வந்துபோவதை பார்த்து
பசியாற முடியுமா?
வல்லாருக்கு வாய் பிளக்கும்
வல்லாதிக்க வரைவுத்திட்டம்
இல்லாருக்கு இறங்குமா?
சொல்லார் சுயமாய்
உண்மை உரைப்பின்
உடுக்கை பறக்குமே
உயிர் போகும் வரை
பிழைத்துக்கொள்ள
உரிமை மறுப்பதேனோ?
வருகைக்காக ஏங்கும்
மண்புழுக்கள் எலிகள் நண்டுகள்
எருதுகள் எங்கோ?
பசுவின் பாலிற்கு ஏங்கும்
பாலகர்கள் செய்த பாவம்தான் என்ன?
மரித்துப்போன மனிதம்
மறுமுறை பிறக்கும் என்ற நம்பிக்கை
ஆள் அரவம் இல்லாத
குட்டிச்சுவர்கள்
வெளிச்சத்திற்காக
ஏக்கத்துடன்
முட்கம்பி வேலிக்குள் வாடும்
முல்லை மலர்கள்
தொடுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட
தீபாவலி








Saturday, October 10, 2009

முத்து வரிகளில் சொட்டு விடும் கண்ணீர்த் துளிகள்


எழுதாத வரிகள்

எழுதாதக் கவிதைகளை
கண்ணீரால்

இரட்டை வரிகளில் எழுதும்

உதிரும் கவிதைகள்

உதிரக் கவிதைகள்


அன்றும் இன்றும்

அன்று

எனக்கு நடக்க முடியாத போது

வேலி தாண்டிய

கண்ணுக்குட்டியை

பிடித்து கொண்டு வந்து கொடுத்தது

எங்கள் கறுப்பு நாய்

இன்று

எனக்கு கண் தெரியவில்லை

படுக்கையில் நான்

வெத்துலாக்குப் பொட்டி வேண்டும் எனக்கு

எலே நடுளவனே

இந்த வெத்துலாக்கு பொட்டிய

எடுத்துத் தாடா என்றேன்

நான் பக்கத்து வீட்டுப்பையன்

என்கிறான் பேரன்




ஆக்கிரமிப்பு

நம்ம அருணாச்சலம்

சீன மொழி கற்றுக்கொண்டிருக்கிறான்

வாருங்கள் நாம்

சிங்கள மொழியைக் கற்றுக்கொள்வோம்
அன்னை மொழி தவிர்த்து

அண்டை மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால்

அடிமை சாசனம் எனும் ஆசனம் உறுதியாம்

சென்னை டு திருப்தி எம்.பி எக்ஸ்பிரஸ் இலங்கை பயணம்




இலங்கைக்கு பயணம் செய்யும்
இன உணர்வுத் தங்கங்களே
வழி மாறி
திருப்பதிக்குச் சென்று
மொட்டை போட்டுக்கொண்டு
வந்து விடாதீர்கள்
நீங்கள் வரலாற்றுப் பிழை
மட்டுமல்ல
எழுத்துபிழையும் செய்வீர்கள்
”ப” உங்களுக்குப் பிடித்தமானதுதான்
அதற்காக அதை எடுத்துக்கொண்டு
இறுதியாக திருப்தி
என்று சொல்லிவிடாதீர்கள்
உங்களைக் கோமாளிகள் என்றதை
மனதில் நிறுத்துங்கள்
மனிதம் மரிப்பதை
நின்று பாருங்கள்
நிறுத்துப்பாருங்கள்
உண்மை பேசுங்கள்
நன்மை செய்யுங்கள்
உங்களுக்கு ரத்தினக்கம்பளம்
கூட விரிக்கப்படலாம்
அது உங்களை வீழ்த்தும் வலை
சிங்கள ரத்னா
கூட கொடுக்கப்படலாம்
அது உங்கள் சிறை
விருந்து
கூட வைக்கப்படலாம்
அது உங்களுக்கு மருந்து
தமிழே
நீ வாழவேண்டுமானால்
தமிழனை வாழ விடு

Wednesday, September 30, 2009

நவீனத்துவ ஓட்டை




நவீன கவிதைகளில்
பின் நவீனத்துவம்
தலைப்பில்
அழகான சொற்பொழிவு
நிகழ்த்திய கவிஞர்
முன் வரிசையில்
உரை
நன்றென உரைத்து
நலமா என்றேன்
நலமென்ற கவிஞர்
நலம் விரும்பி
பின்
குழந்தைக்கு என்ன பெயர்
சூட்டியிருக்கிறாய் என்றார்
நவீன் என்றேன்
தமிழ்ப் பெயர் வைக்கவில்லையா
கடிந்து கொண்டார்
தனக்குரிய இயல்புடன்







Tuesday, September 22, 2009

நாராயணனின் தம்பி - நக்கலைப் பாருங்கள்




விமானத்தில் சாதாரண வகுப்பை மாட்டு தொழுவ வகுப்பு என்று கூறிய மத்திய மந்திரி சசிதரூர் மீது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. இதனால் அவரது மந்திரி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கை பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி சசிதரூர், ``இனிமேல் விமானத்தில் மாட்டு தொழுவத்தில் புனித பசுக்களுடன் பயணம் செய்ய வேண்டியதுதான்'' என்று கிண்டலாக கூறினார்.

விமானத்தில் சாதாரண வகுப்பை மாட்டு தொழுவம் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ``சாதாரண வகுப்பு பயணத்தை மாட்டு தொழுவ பயணம் என்று சசிதரூர் கூறி இருப்பதை ஏற்க இயலாது'' என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. கூறினார்.


சசிதரூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வற்புறுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறுகையில்; சசிதரூர் கூறிய வார்த்தைகள் துரதிருஷ்டமானது என்றும் அவரிடம் இருந்து அப்படிப்பட்ட வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். அத்துடன், பிரதமர் அல்லது கட்சி மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்காமல் மத்திய மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அசோக் கெலாட் கூறினார்.

சசிதரூர் அரசு பயணமாக தற்போது லைபீரியா நாட்டுக்கு சென்று உள்ளார். தனக்கு எதிர்ப்பு வலுத்து வருவதை தொடர்ந்து, விமானத்தில் உள்ள சாதாரண வகுப்பை மாட்டு தொழுவம் என்று கூறியதற்காக அவர் மன்னிப்பு கேட்டு உள்ளார்.
இதற்கிடையே, இந்த பிரச்சினை பற்றியும், சசிதரூர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறி இருப்பது பற்றியும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரியிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில்; சசிதரூர் தெரிவித்த கருத்துக்கு இதுபோன்று எதிர்ப்புகள் வருவது இயற்கையானதுதான் என்றும், அவரது கருத்துக்கு காங்கிரஸ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருக்கிறது என்றும் கூறினார். சசிதரூர் மீது காங்கிரஸ் கட்சி உரிய நேரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நிருபர், ராகுல் காந்தி தென்இந்தியாவுக்கு சென்ற போது அவரது விமான பயணத்துக்கு கூடுதல் செலவானதாக கூறப்படுவதை குறிப்பிட்டு, சிக்கன நடவடிக்கையில் வெவ்வேறு தலைவர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனிஷ் திவாரி; ராகுல் காந்தி போன்ற முக்கியமான தலைவர்கள் பயணம் செய்யும் போது அவர்களுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது என்றார்.
-செய்தி மலர்
இந்தாளை எல்லாம் ஐ. நா தலைமைச் செயலாளர் பதவிக்குப் பரிந்துரைத்த எங்கள் இந்தியாவை என்ன வெண்ட்ரு சொல்வேன்!
ஏன் இப்ப இருப்பவர் தங்கமான்னு கேட்பது காதில் விழுகிறது!
இந்தியா என்பது வேளாண்மையை(இறையாண்மையை அல்ல விவசாயத்தை) , கால் நடைகளை(ஆடு மாடுகளை) நம்பியிருக்கும் நாடு. அந்தத் தொழுவத்துல தானே இந்த வெண்ட்ரு இருக்கு.
-இவன், மாட்டுக்காரன்(கவ் பாய்) கொள்ளிமலை குப்பு!

Saturday, September 19, 2009

காங்கிரசுக்கு உயிர் கொடுக்க திருநாவுக்கரசர்


சு.திருநாவுக்கரசர், தமிழக அரசியலில் ஒரு சில திருப்புமுனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார் என்றால் அது மிகையாகாது. 1977 -முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து தனது தொகுதிக்கு(அறந்தாங்கி) சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயர் எடுத்திருக்கும் ஓர் அபூர்வமான அரசியல்வாதி என்றே சொல்லலாம்.

1977 -முதல் முறையே துணை சபாநாயகர், மாநில தொழில் அமைச்சர், உணவு அமைச்சர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி, மத்திய தொலை தொடர்புத் துறை இணை அமைச்சர், ராஜ்யசபை உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்புகளில் இருந்து திறமப்பட பணியாற்றியவர். இவர் மீது சில விமர்சனங்களும் உண்டு. அதையும் தாண்டி ஓரளவிற்கு நல்ல அரசியல்வாதி என்று பெயரெடுத்துக் கொண்டிருப்பவர்.

எம்.ஜி.ஆர் இளைஞர் அணித் தலைவர் பதவி எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டு பணியாற்றினார். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர் இரண்டாம் இடத்தில் இருந்த நாவலர் இரா.நெடுஞ்செழியனை முதல்வர் பதவிக்கு வரவிடக்கூடாது என்கிற நோக்கத்திலும், ஜானகி எம்.ஜி.ஆர் முதல்வராக வந்தால் தான் நினைத்தை நடத்தலாம் என்கிற நோக்கத்திலும் திரு.இராம.வீரப்பன் அவர்கள் எம்.எல்.ஏக்களை ஜானகிக்கு ஆதரவாக வைட்டமின் சி யுடன் கடத்திய போது திரு. திருநாவுக்கரசு அவர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களை தடுத்துவைத்துத் தக்கவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திருநாவுக்கரசரோடு தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் என்பதை அனைவரும் அறிவர். இவர்கள் இருவரையும் அப்போது இரட்டையர்கள் என்று அழைப்பார்கள்.

பெரும்பான்மையான வைட்டமின் சி மாத்திரைகளை இராம வீரப்பன் கோஷ்டி வைத்திருந்ததால் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களை மயங்க வைக்க முடிந்தது. வீரப்பன் கோஷ்டியும் ஜெயலலிதா கோஷ்டியும் வைட்டமின் சி மாத்திரை பெட்டியோடு மோதியதால் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நடமாடும் பல்கலைக்கழகம் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அணி அடையாளம் தெரியாமல் போய் ஜெயலலிதா கோஷ்டியுடன் சேர்ந்து கொள்ளும் அவல நிலைக்கு ஆளானது அனைவருக்கும் தெரியும்.

அண்ணாவிற்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், இறுதியாக ஜெயலலிதாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நிலைக்கு ஆளானார். அவருக்கு திமுகவில் சேரும் எண்ணம் ஒரு போதும் வந்ததில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் அவரை பகிரங்கமாக எதிர்த்து, அதனால் எம்.ஜி.ஆரிடமே பகைத்துக் கொண்டு அதிமுகவை விட்டு வெளியேறி நமது கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த எஸ்.டி.எஸ்,மற்றும் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அவருக்காக தமிழகமெங்கும் ஆதரவு திரட்டினார்கள்.

இந்த சூழ்நிலையில் கே.எ.கிருஷ்ணசாமி,க.இராசாராம்,ப.உ.சண்முகம் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ஜானகி அம்மாளுக்கு உறுதுணையாக இருந்து அவரை முதலமைச்சராக்கி மகிழ்ந்தார்கள். ஒரு மாதம் கூட நீடிக்க விடாமல் ஜானகி அம்மையாரின் ஆட்சியை முதுகில் குத்தி வீட்டுக்கு அனுப்பிய பெருமை அப்போதைய காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும்.

இந்த நிலையில் திருநாவுக்கரசர், சாத்தூர் இராமச்சந்திரன் உள்ளிட்ட அப்போதைய இளம் தலைவர்கள் ஜெயலலிதாவை தமிழகம் எங்கும் அழைத்துச் சென்று கூட்டங்கள் போட்டு பிற்காலத்தில் தமிழகத்திற்கு ஜெயலலிதா முதல்வராக ஒரு காரணமாக அமைந்து விட்டார்கள் . ஆனால் ஜெயலலிதா முதல்வராகும் தருணத்தில் திரு. திருநாவுக்கரசர் அவர்களை அதிமுகவை விட்டு நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்ய சபையில் ஈழத் தமிழர்களுக்காக, இலங்கையில் மீறப்படும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தமிழகத் தலைவர்களுள் முக்கியமானவர் திரு.திருநாவுக்கரசர். இன்று ஈழத்தமிழர்களின் படுகொலையையும், அவர்கள் மீதான மனித உரிமை மீறலையும் திட்டமிட்டு நிறைவேற்றிவிட்டு, அதாவது இதை நிகழ்த்த சிங்கள அரசுக்கு எல்லா வகையிலும் உடந்தையாய் இருந்து உதவிகள் செய்துவிட்டு, மூன்று இலட்சம் ஈழத் தமிழர்களை முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்து, வீடு,வாசல், சொத்து, நில புலன்களை இழந்து நிற்கதியாக நிற்க வைத்து ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி வேடிக்கை பார்க்கும் இந்திய தேசிய காங்கிரசில் சேரப்போகிறார் என்கிற செய்தி வேதனை அளித்தாலும், இவரை வைத்து தமிழகத்தில் பிழைப்பு நடத்தத் துடிக்கும் காங்கிரஸ், ஏன் எம் தமிழர்களுக்கு நல்ல பொழுது விடியவிட்டு பிழைப்பை தொடரக்கூடாது அல்லது மாறு வேடம் போட்டு பிழைப்பு நடத்துவதற்கு பதிலாக வேறு ஏதும் செய்து பிழைத்தால் என்ன?
காங்கிரஸ்காரர்களின் அழைப்பை ஏற்று திரு திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்தால், அவரும் சராசரி அரசியல் பிழைப்புவாதிகளின் வரிசையில் சேர்ந்து கொள்கிறார் என்பது திண்ணம்.

Saturday, September 5, 2009

Connecting People = Connecting India?

இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் கிராமங்கள் எந்த தொலை தொடர்பு வசதியும் இல்லாமல் இருக்கிறது. இந்த குறையை போக்கும் வகையில் இஸ்ரோ புதிய செயற்கோளை வடிவமைத்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் கிராமங்கள் தகவல் தொடர்பு வலையில் இணைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
நமது நாட்டில் 6 லட்சத்துக்கும் மேலான கிராமங்கள் இருக்கிறது. இதில் சுமார் 50 ஆயிரம் கிராமங்கள் தொலை தொடர்பு வசதியில்லாமல் இருக்கிறது. இந்த கிராமங்களை இணைக்க புதிய செயற்கோள் ஒன்றை வடிவமைத்து வருகிறோம். இது இன்னும் இரண்டரை ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்படும்.

சந்திரயான் 1 திட்டத்தில் சில பிரச்சனைகள் இருப்பதை நாங்கள் முன்கூட்டியே கணித்திருந்தேம். இதனால் முக்கிய சோதனைகளை விரைவாகவே முடித்துவிட்டோம். நாங்கள் திட்டமிட்டவற்றில் 95 சதவீத தகவல்களை பெற்று விட்டோம்.

தற்போது அந்த தகவல்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதற்கு இன்னும் 6 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்றார்.

அருமையான விடயம்!

நல்ல செய்தி!

ஆனால்,
சாலைகள் இல்லாமல் கிராமங்களில் திடீர் உடல் நலக்குறைவாலோ,பாம்புகடித்தோ, மற்ற விஷத் தீண்டல்களினாலோ எந்தனை உயிர்கள் மரித்துப் போகின்றன.

முதலில் எல்லா கிராமங்களையும் நல்ல சாலைகளைக் கொண்டு இணையுங்க சாமியோவ்!

அதுக்கப்புறம் மக்களைக் கனெக்ட்/கரெக்ட் பண்ணி கலெக்ட் பண்ணலாம்.





Thursday, September 3, 2009

தமிழக பள்ளி-கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை ஏன்?

முதலில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின் அகால மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அகால மரணமடைந்திருப்பதையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் நாளை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை இதோ.,

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளைய தினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர பள்ளி-கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை விடுவதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

தமிழக பள்ளி-கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை ஏன்?


புதசெவி (புரியல தயவு செய்து விளக்கவும்)

(Copyrights Reserved : TBCD)

Saturday, August 29, 2009

இதைத் தட்டிக் கேட்க தமிழகத்தில் யார் உளர்?



இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.

திரிகோணமலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கப்பலை கோத்தபயா ராஜபக்சே தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், எஸ்.எல்.என்.எஸ். சயுரலா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலை வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையால், இரு நாடுகளின் உறவுகளும் மேம்படும் என்றார்.

இந்திய கடலோரக் காவல் படை இந்தக் கப்பலை விக்ரஹா என்ற பெயரில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்தது. மும்பையில் இந்தக் கப்பல் கட்டப்பட்டது. இதன் நீளம் 74.10 மீட்டராகும். அகலம் 11.4 மீட்டர். அதிகபட்சம் 21.5 நாட்ஸ் வேகத்தில் இது போகக் கூடியது.

கடல் கண்காணிப்பு ரேடார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இலங்கைப் போரில் இந்தியா பெருமளவில் உதவிகள் செய்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதை நியாயப்படுத்துவது போல பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜுவும் பேசியிருந்தார். இந்த நிலையில் இலங்கைக் கடற்படைக்கு நவீன ரோந்துக் கப்பலை இந்தியா வழங்கியுள்ளது.

இந்தக் கப்பலை வைத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கவும் தயங்க மாட்டார்கள் என்பது திண்ணம்.



இதைத் தட்டிக் கேட்க தமிழகத்தில் யார் உளர்?


நாதியத்த இனத்திற்கு

நரிகள் உதவின

பிணங்கள் மிச்சம்



நற்றமிழர் - அடிமை நாற்றம்

உன்னை நிர்வாணப்
படுத்திச் சுடுகிறார்கள்
என்னுறவே
உருக்குலைந்து
விட்டாய்
நிலை குலையாமல்
உனக்காக நாங்கள்
இங்கு எவ்வளவு காலம்
மௌன விரதம் இருப்போம்
மூஞ்சிக் கூடும்
மூக்குச் சரடும்
போடப்பட்ட உறவுகள்
விடுதலைக்குப் பின்னும்
அஞ்சடி அரசியல்
அடிமைகளாய்
வியர்த்தாலும்
துடைக்க முடியாமல்
நாற்றத்துடன்
நற்றமிழர்


இந்த கொடுமையைப் பாருங்கள் மனிதம் போற்றும் மானிடர்களே!

Friday, August 28, 2009

துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உறுப்பு தானமும், பொறுப்பும்







உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு இயக்க துவக்க விழாவுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார். அவரது மனைவி துர்கா குத்து விளக்கேற்றி இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.
பின்னர் துர்கா, தனது வாழ்க்கைக்கு பின் தனது உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக அறிவித்து அதற்கான உறுதிமொழிப் பத்திரம் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

அவரைத் தொடர்ந்து ஸ்டாலினும், தனது உடல் உறுப்புக்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

இவர்களைத் தொடர்ந்து 1,500 பேர் உறுப்புகள் தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரங்களில் கையெழுத்திட்டனர்.

விழாவில் பேசிய ஸ்டாலின் ,

உடல் உறுப்புகளை தானம் செய்வது இன்று நேற்றல்ல கடந்த கால வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. மன்னர்கள், நாயன்மார்கள் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

கண்ணப்ப நாயனார் தனது இரண்டு கண்களையும் தானமாக வழங்கியதாக புராணம் கூறுகிறது.

இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக ஒருவர் உடலில் உள்ள உறுப்புகளை எடுத்து வேறு ஒருவருக்கு பொருத்தி உயிர் வாழ வைக்கும் சம்பவங்கள் பெருகி வருகின்றன.

2008 செப்டம்பர் மாதம் திருக்கழுகுன்றத்தை சேர்ந்த ஹிதேந்திரனுக்கு சாலை விபத்தில் மூளை சாவு ஏற்பட்டது. அவரது இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெங்களூரில் உள்ள ஒரு சிறுமிக்கு பொருத்தப்பட்டது. சென்னை டாக்டர்களின் இந்த சாதனையை மறக்க முடியாது. அவரது பெற்றோரின் நற்செயலை நான் நேரில் பாராட்டினேன்.

அதே போல எல்.ஐ.சி. கிளை மேலாளர் ராமகிருஷ்ணன் மகள் சுகன்யாவுக்கு சாலை விபத்தில் மூளை சாவு ஏற்பட்டது. அவரது கண்கள், சிறு நீரகம் உள்பட 7 உறுப்புகள் எடுக்கப்பட்டு தேவையானர்களுக்கு பொருத்தப்பட்டது.

இது போல திருச்சியை சேர்ந்த வைத்தியநாதன் மகன் நிர்மல்குமாரின் இரண்டு சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல், அகற்றப்பட்டு பலருக்கு பொருத்தப்பட்டது. இப்படி பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.

உறுப்புகளை பலர் தானம் செய்ய முன் வந்தாலும் எப்படி வழங்குவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த இயக்கம் பயன்படும் என்றார்.

நல்ல முயற்சி, முன்னுதாரணம்.

துணை முதல்வரும், வருங்கால முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களைப் பின்பற்றி அனைத்து அரசியல்வாதிகளும், தங்கள் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தால் மகிழ்வைக் கொடுக்கும்.



Wednesday, August 26, 2009

எங்கள் பாரதி - இது என்ன வேசம்?


Saturday, August 22, 2009

இந்திய அணு நீர்மூழ்கிக் கப்பலில் இத்தாலிய தேசியக் கொடி?






இந்திய தேசியக் கொடி









இத்தாலிய தேசியக் கொடி







இந்திய அணு நீர்மூழ்கிக் கப்பல்?




உண்மையான
இந்திய அணு நீர்மூழ்கிக்கப்பல் இப்படித்தான் இருக்கும்




INS Arihant-India's nuclear submarine


Class and type: Arihant Class

Type:
SSBN

Displacement:
5,500 – 6,500 tons
Length:
104m (341.2ft)
Beam:
15m (49.2ft)
Draft:
9m (29.5ft)
Propulsion: PWR using 40% enriched uranium fuel (80MW); one turbine (47,000hp/70MW); one shaft; one 7-bladed, high-skew propeller.
Speed:
12-15 (surfaced) 30-34 (submerged).
Range:
unlimited except by food supplies

Test depth:
300 m (984.2ft).
Complement:
100

Sensors and
processing systems: USHUS Sonar

Armament:
Torpedoes: 6 21" (533mm) torpedo tubes
Total capacity (torpedoes, and missiles): 30 weapons
SLBM - 12 launch tubes (each with 2.4 meter diameter)
12 x K15 SLBM (3 in each launch tube)
4 x Agni III (SLBM)(Under development)
Torpedoes and Mines


Friday, August 21, 2009

கொலைவெறி கவுஜைகள் - ஏனெனக்கு பிடிக்கும்...! ஏனெனக்கு பிடிக்கும்...!

கதவு

சரியான

சாவியிட்டதால்

கள்வனுக்கும்

கட்டுப்பட்ட

கதவு



சமூக நீதி

வரிசையாக

நிற்க வைக்கப்பட்ட

சாதித் தலைகளில்

எதிலும் கொம்பில்லாததால்

எல்லாம்

ஒன்றெனப்பட்டது



மூக்கு

உயிருக்கு

உள் வாங்கும் காற்றை

தூசி தட்டி

தடுத்து

தூய்மைப்படுத்தும்

பயிர்த் தோட்டம்





திருமதி ஜெயலலிதா - கருணாநிதி விளக்கம் - கொள்ளிமலை குப்பு கேள்வி

அண்மையில் தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் ஒரு பேட்டியின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைப்
பற்றி குறிப்பிடும் போது திருமதி என்று உரைத்திருந்தார். அது சரியா தவறா என்கிற குருட்டு விவாதத்திற்கு செல்வது அறிவு ஜீவிகளுக்கும்
உளவியல் வல்லுநர்களுக்கும் உகந்ததாக இருக்குமேயொழிய என்னைப்(கொள்ளிமலை குப்பு) போன்றவர்களுக்கு அது உகந்ததும் இல்லை, அதில்
ஆர்வமும் இல்லை.

திருமதி ஜெயலலிதா என்ற கருணாநிதியின் விளிப்பிற்கு, அடைந்தால் தமிழ் நாடு இல்லையேல் கொடநாடு என்ற கொள்கையுடைய கொள்கைத் தங்கம்
பொன்மனச்செல்வி, சிந்தனைச் செல்வி, தங்கத்தாரகை, பீனிக்குசு பறவை, தங்கத்தலைவி, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்து அண்மையில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதுசமயம், கொள்ளிமலை குப்புவாகிய நான், அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்று சூழுரைத்த கொள்கைத் தங்கம், முத்தமிழ் அறிஞர்,
தமிழினத் தலைவர், தொல்காப்பிய பூங்கா, வாழும் வள்ளுவன், டாக்டர் கலைஞர். மு.கருணாநிதி அவர்களை சந்திக்காத போது, கேட்காத கேள்விக்கு,
அளிக்காத பதிலை இங்கு தருகிறேன்.


கேள்வி: கொள்ளிமலை குப்பு:
வணக்கம் ஐயா, கும்ப்புடுறேனுங்க... நான் கொள்ளிமலை குப்புங்க... கொள்ளிமலையில இருந்து வர்றேங்க...

அண்மையில் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவரை, செல்வி ஜெயலலிதா, ஜெயலலிதா அம்மையார் அல்லது ”அந்த” அம்மையார் என்று கூட குறிப்பிடாமல் திருமதி.ஜெயலலிதா என்று குறிப்பிட்டது ஏனுங்க சாமி...?

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமியோவ்...!


பதில்: கலைஞர் மு.கருணாநிதி
தமிழ் தெரியாத, புரியாத, அறியாத, விளங்காத தரிகெட்டவர்களின் புலம்பலுக்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை. இனம் இனத்தோடு சேரும் என்னும், நாம்( நான் என்றால் உதடுகள் ஒட்டாது) விரும்பும் சொற்றொடருக்கிணங்க, கொள்ளிமலை குப்பு அவர்களுக்கு பதிலளிப்பதில் பெருமிதம்
கொள்கிறேன். மலைசாதி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக நானும் கழகமும் எவ்வாறெல்லாம் போராடினோம் என்பதை இந்த நேரத்திலே நினைவு கூர்கிறேன்.

இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன். சிலருக்கு கேள்விகள் கேட்பது எளிது, சிலருக்கு பதிலளிப்பது எளிது.
எனக்கு இரண்டுமே தண்ணி பட்ட பாடு. கேள்விகளை வேள்விகளாகக் கருதுபவன் நான்!

திருமதி என்று நான் குறிப்பிட்டதை தவறாகப் புரிந்து கொண்ட தமிழறியா குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாக நினைத்து என்னுடைய பதிலைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு - எங்கள் தலைவன் அண்ணா சொல்லிக் கொடுத்த பாடம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு - எங்கள் தலைவனின் மதியுரை. இது கூட தெரியாமல் எங்கள் தலைவரின் பெயரைச் சுமந்து கொண்டு கட்சி நடத்துவது கேலிக்கூத்து.

திருமதிக்கு வருகிறேன்.

திரு என்றால் அழகு, மதி என்றால் அறிவு. அழகையும் அறிவையும் ஒருங்கே பெற்ற பெண்மணி என்றல்லவா நான் சொல்ல
வந்தேன். அதை தவறாக பயன்படுத்தியதாக கூக்குரலிட்டால் அவர் பொருள் தெரியாதவராகிவிடுகிறார். தமிழ் தெரியாவராகிறார்.

இன்னும் சொல்லப் போனால், வேறொரு பொருளிலும் குறிப்பிட்டேன். எனக்கு சிலேடை வரும் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியதில்லை. எனது கவிதைகள் என்னைப் பற்றி கூறும்.

திரு என்றால் அழகு, மதி என்றால் நிலா. நிலாவைப் போன்ற அழகை உடைய அழகு
நிலா என்று சொல்லாமல் சுறுக்கமாக திருமதி என்று குறிப்பிட்டிருக்கிறேன் அவ்வளவுதானே!?

இன்னும் நிறைய வகைகளில் பொருள் கொள்ளலாம். திரு என்றால் மேன்மை பொருந்திய, மதி என்றால் அறிவுடையார். அதனால் அவர் மேன்மை பொருந்திய அறிவுடையார் என்று நான் சொன்னதாகத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும்!?

திரு என்றால் விழி, மதி என்றால் நிலா. நிலவை ஒத்த விழிகளைக் கொண்ட அழகிய பெண்மணி என்றல்லவா பொருள் கொள்ள வேண்டும்!?

திருமதி என்பவர் திருமகள் ஆவார். அதனால் அவரை செல்வத்துக்குத் தலைவியாக உருவகப் படுத்தி இருப்பதாகத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும்!?

திரு என்றால் நன்மை, மதி என்றால் அறிவு. நன்மை பயக்கக் கூடிய அறிவுக்குச் சொந்தக்காரர் என்றுதானே அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்!?

திரு என்றால் மாண்பு. மாண்புமிக்க, மதிப்புமிக்க பெண்மணி என்றாவது அவர் பொருள் கொண்டிருக்க வேண்டும்!?

திரு என்றால் தலை, மதி என்றால் நெற்றியிலே நிறைமதியைப் போல வீற்றிருக்கும் குங்குமம். அந்த திலகத்தை அல்லவா குறிப்பிட்டேன். அதில் மக்கள் திலகம்,தங்கத் தலைவன், சத்துணவு கண்ட சரித்திர நாயகன், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், டாக்டர். எம்.ஜி.ஆர் நிறைமதியப் போல் ஒளி வீசுகிறார் என்றல்லவா புகழ்ந்துரைத்தேன். அதைத் தவறாகப் புரிந்து கொண்டது ஏனோ......!?

இதனால் நான் ஆற்றொணாத்துயரடைந்தேன்.

அடலேறுகளை அமைதி காக்கச் செய்தேன்.

உடன்பிறப்புகளை ஓய்வாய் இருக்கச் சொன்னேன்.

தொண்டர்களை துயரமின்றி இருக்கச் சொன்னேன்.

கழகக் கண்மணிகளை கலவரம் இன்றி நிலவரம் அறியச் சொன்னேன்.

எல்லா துயரத்தையும் நானே தாங்கிக் கொள்கிறேன். எனக்குத் தானே என் தலைவன் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகக் கொடுத்தான்.

நன்றி கொள்ளிமலை குப்பு!

மீண்டும் சந்திப்போம்!! சிந்திப்போம்!!!

Saturday, August 15, 2009

சுதந்திரம் யாருக்கு? - பிணங்கள்

தேசியக் கொடி

ஏற்றி வைத்த பிரதமர்

கண்ணாடிப் பெட்டிக்குள்

சமத்துவம்

சகோதரத்துவம்

சமதர்மம்

நாட்டுப்பற்று

வெளிப்பட்டது

ஒலிபெருக்கியில்

கைதட்டல்

விண்ணைப் பிளந்தது

அப்பாவி மக்களின் நெஞ்சை

தீவிரவாதிகளின் துப்பாக்கி ரவைகள்

பிளந்திருந்த தருணத்தில்

கண்ணாடிப் பெட்டிக்குள்

பிணங்கள்





Friday, August 14, 2009

எனக்குப் பிடித்த முத்துகள்

தெப்பம்

கொழு கொம்பில்லாமல்

வெள்ளத்துக்குள்

தவிக்கும்

வீடிழந்த மக்கள்

தண்ணீர் பாய்ச்சப்பட்ட

கோயில் குளத்தில்

தேனிலவுக்குக் காத்திருக்கிறது

தெப்பம்




கறவை மாடு

வத்தல்

போடப்பட்ட

கன்றுக் குட்டி

புண்ணாக்குக்காக

பால் கறந்தது

பசுமாடு




சோத்துமணி

ஓயாது

ஓடி உழைத்து

சோறு போட்டது

கடிகாரம்





விக்கிரமணிய சாமியிடம் கொள்ளிமலை குப்பு சரமாரி கேள்வி-பதில்

அண்மைய காலங்களில் மதிப்பிற்குரிய கொள்ளிமலை குப்பு ஐயா அவர்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து
வருவது அனைவரும் அறிந்ததே. கொள்ளிமலை குப்பு அவர்களின் நீண்ட கால ஆசை திரு விக்கிரமணிய சாமியை சந்திக்க வேண்டும்
என்பது தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த ஆசையும் இப்போது நிறைவேறிவிட்டது.
இதை ஒரு செவ்வியாகவே நிகழ்த்திய கொள்ளிமலை குப்பு அவர்களுக்கு நன்றி!

கொள்ளிமலை குப்பு அவர்களின் அனுமதியோடு இங்கு அதனைத் தருகிறேன்.

கொள்ளிமலை குப்பு: வணக்கம்ங்க சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : யாருய்யா நீ? உன்னை யாருய்யா உள்ள விட்டது? யூ டோண்ட் ஹேவ் மேன்னர்ஸ்? என்ன தைரியம் இருந்தா என் பேர சொல்லிக் கூப்பிடுவே?
உன்ன சுப்ரீம் கோர்ட் வரைக்கும் இழுப்பேன். என்னை யாருன்னு நெனைச்ச நீ?

கொள்ளிமலை குப்பு: ஐயோ சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : திருப்பியும் என் பேரசொல்ற உனக்கு அறிவுல்ல? நீ பெரிய ஆளா?
எதுலடா வந்த?

கொள்ளிமலை குப்பு: நான் எல்லோரையும் சாமின்னு கூப்புடுறது என் பழக்கம் சாமியோவ். கோவிக்காதீங்க சாமியொவ்! நான் பழய சைக்கிள்ல தானுங்க சாமி வந்தன்.


விக்கிரமணிய சாமி : நெற்ய இண்டியன் கவர்மண்டை கவுத்தவன் இந்த சுவாமி, உன் ஓட்டை சைக்கிளை கவுக்க எவ்ளோ நேரம் ஆவும்.


கொள்ளிமலை குப்பு: ஏன் சாமி என் பாவத்துல விழுவுறிய... நான் எழை சாமி...

விக்கிரமணிய சாமி : ஏழையாடா நீ... ஏழையா இருந்தா குளிக்கக் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டுல சொல்லி இருக்காளா? நீ நல்ல என்விரான்மெண்ட
நாசமாக்கிட்ட... இவாள எல்லாம் ஏன் உள்ள விடுறேள்.

கொள்ளிமலை குப்பு: நான் செவனேன்னு கிடக்குறேன் சாமி, நான் கவர்மெண்டை எல்லாம் நாசமாக்க மாட்டேன் சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : டேய்... டேய்... டேய்... டேய்... அது என்னடா சைக்கில்ல துப்பாக்கி, நீ ஸ்ரீலங்காலற்ந்து வற்றியா, தமில் காரனா? நீ தீவிரவாதியா தான் இருப்பே...
நான் யாருன்னு நினைச்சே. மாஜீவ் காந்தியே நான் சொன்னா கை கட்டி நிப்பா... சிஆர்பிஎப் -காரங்கள கால் பண்றன். இங்க வர்ணாநிதி போலீஸ்
நான் சொன்னா கேக்க மாட்டா!? இங்க லா அண்ட் ஆர்டரே இல்லயே... நம்ம உயிரை எடுத்துடுவா போலருக்கு... அந்தம்மாகிட்ட சொல்லிட்டேன்
இதான் நல்ல நேரம் லா அண்ட் ஆர்டர் இல்லைன்னு சொல்லி வர்ணாநிதி ஆட்சிய கலைச்சு தாரேன்ன்னு. அவா எங்க நான் சொன்னா கேக்குறா...

கொள்ளிமலை குப்பு: ஏன் சாமி பொழம்புறிய... நான் கொண்டுவந்தது குருவி சுடுற துப்பாக்கிதாங்க... கவர் மண்டு அனுமதியோட லைசன்சும் வச்சுருக்கேன்ங்க.

விக்கிரமணிய சாமி : பெர்மிஸ்ஸன் இல்லாம உள்ள நுழஞ்சிட்டே... உன்னை ட்ரெஸ் பாஸ் கேஸ்ல உள்ள தள்ளலாம். பாவன்னு விடுறேன். தரையில உக்கார்.

கொள்ளிமலை குப்பு: நன்றிங்க சாமியொவ்! உங்கள்ட்ட பேட்டி..........

விக்கிரமணிய சாமி : உங்கிட்டேர்ந்து பெட்டியா? ஐ அம் டூயிங் இட் இன் ஸ்டேட்ஸ் லெவல். மைண்ட் இட்.

கொள்ளிமலை குப்பு: பெட்டி இல்லைங்க சாமி. பேட்டிங்கோ... எனக்கு இன்கிலீசு தெரியாதுங்க சாமி கொஞ்சம் தமிழ்ல பேசுங்களேன் சாமியோவ்!

விக்கிரமணிய சாமி : நீ பட்டிக்காடுன்னு பாத்தா தெர்யுது. உனக்கெல்லாம் படிக்கிறதுக்கு என்ன கேடு.

கொள்ளிமலை குப்பு: கேடு இல்லீங்கோ... எனக்கு வீடும் இல்லை. வாசலும் இல்லைங்க சாமியோவ். ஏழை வேறங்லா எப்படிங்க எடம் கிடைக்கும்.

விக்கிரமணிய சாமி : உனக்கெல்லாம் தான் ரிசர்வேசன் வாங்கி வச்சுருக்காளே அவாளுகிட்ட போய் அழு. ஏன் இங்க வந்து என் கழுத்தருக்கிற.

கொள்ளிமலை குப்பு: சர்வேங்லா சாமி. நாங்க இருக்கிறது கொள்ளிமலை சாமி. அதை சர்வே பண்ணி அளந்து எழைக்கு கொடுக்குறது நிறைய இடர்பாடுகள்
இருக்குன்னு மொதல்வர் விலைஞர் சொல்லி இருக்கிறாருங்கோ. இருந்தாலும் இருக்குறத்த பிரிச்சு கா குழி இருந்தாலும், முடிந்தவரை மீதம் இருந்தால், கொஞ்சமாச்சும் தர்றேன்னு கண்டிசனா சொல்லி இருக்காருங்கோ.

விக்கிரமணிய சாமி : அவா குடுக்குற வரைக்கும் நீ நம்பிகிட்டு இரு. ஓட்டு போட்டியா? முடிஞ்சுது விடு.

கொள்ளிமலை குப்பு: உங்க கிட்ட கேள்வி கேக்கலாமுன்னு வந்திருக்கேன் சாமியோவ்.

விக்கிரமணிய சாமி : என் கிட்ட ஆக்ஸ்போடு யுனிவெர்சிட்டி புரபசரே சந்தேகம் கேப்பான். நீ என்னத்த கேக்கப் போற கேளு.

கொள்ளிமலை குப்பு: திடீர் திடீர்னு காணாம போய்ர்றியளே எங்க போறீங்க சாமி?

விக்கிரமணிய சாமி : அறிவாளிங்கள பல இடத்துல கூப்புடுவா... என்னை இஸ்ரேல்ல அழைக்கிறா! அமெரிக்க யுனிவெர்சிட்டில செமினார் எடுக்கக் கூப்பிடுறா! நம்ம டெல்லிக்காரா கூப்பிடுறா...
ஸ்ரீலங்கா காரா கூப்புடுரா,அவாடெல்லாம் கொடுக்குறா. அவாளுக்கெல்லாம் தெர்யுது நம்ம வால்யூ. இவாளுக்கு தான் தெரியமாட்டேங்குது.

கொள்ளிமலை குப்பு: இவ்வளவு சுத்துறீங்களே... உங்க சொந்த ஊரு எதுங்க சாமியோவ்?

விக்கிரமணிய சாமி : என் நேட்டிவ் மத்ரைக்கு பக்கத்துல இருக்குற சோளவந்தான். ஆனா இந்தியாவில் ஒரு அகில இந்திய கட்சியின் தலைவர். எத்தனை பிரதமர்களை,
முதல்வர்களை உர்வாக்கி இருக்கேன் தெரியுமா? உனக்கெல்லாம் எங்க தெரியபோவுது. என் தலைவிதி உங்கிட்ட பேஷுரேன்.

கொள்ளிமலை குப்பு: நீங்க ஆளவந்தான்னு தெரியும். ஆனா சோளவந்தான்னு இப்ப தான் தெரிஞ்சுது. உங்க கட்சியில நீங்க பிந்திரலேகா அம்மா
தவுத்து எத்தனை உறுப்பினர்கள் சாமியோவ்?

விக்கிரமணிய சாமி : இதே மூணு பேராச்சே, அப்ப ஆந்திராவுக்கும் ஒரு தலைவர நியமிச்சிர வேண்டியதுதான்.

கொள்ளிமலை குப்பு: ரெண்டு பேருன்னு( நீங்க, சந்திரலேகா அம்மா) தானே சொன்னேன் சாமி. நீங்க மூணு பேருங்கிறியளே?

விக்கிரமணிய சாமி : அம்மான்னு சொன்னியோன்னோ அதோட மூணு கணக்கு ஆவுது.

கொள்ளிமலை குப்பு: சரிங்க சாமி... உங்களுக்கு எதோ பற்றாக்குறையா இருக்குற மாதிரி தெரியுது.

விக்கிரமணிய சாமி : எனக்கு என்னடா கொரைச்சல். பில் விளிண்டன் பொண்டாட்டிக்கே பதவி வாங்கிக் கொடுத்தவன் நான், போனியாவுக்கு
பிரதமர் பதவிய கையில கொண்டு போய் கொடுத்தேன். நான் கொடுத்த சீதேவிய வேண்டானுட்டா... மூ...தேவி! வர்ணாநிதி ஆட்சிய கலைச்சு இவாளுக்கு மொத மந்திரி
பதவி வாங்கி கொடுத்தேன். இவாளெல்லாம் நம்மல எங்க மதிக்கிறா?

கொள்ளிமலை குப்பு: உங்கள மதிக்கிறத்த பத்தி பேசும் போது இன்னொன்னு ஞாபகத்துக்கு வருது சாமியோவ். உங்களுக்கு அதிகமாக கோர்ட்டுலதான் மருவாதி கிடைக்கிதுன்னு பேசிக்கிறாங்களே உண்மையா?

விக்கிரமணிய சாமி : இட்ஸ் ட்ரு. இங்க இருக்குற ஜட்ஜுகள்,லீடிங் லாயர்ஸ் எல்லாம் நம்மள்ட்ட லா கத்துண்டவா தான். அதனால அவாள்ட்ட எப்பவும் நமக்கு மர்யாத இர்க்கு.

கொள்ளிமலை குப்பு: கோர்ட்டுல வதிமுக மகளிர் அணி காரவங்கள பாத்திருக்கீங்களா?

விக்கிரமணிய சாமி : அவா உருப்புட மாட்டா. உண்ட வீட்டுக்கு இரண்டவம் பண்றவா... சுபிட்சமா வாழமாட்டா...


பேட்டி தொடரும்...

Monday, August 10, 2009

திருமதி ஜெயலலிதா - இது எப்படி இருக்கு?

திருமதி ஜெயலலிதா - கருணா நிதி அழைக்கிறார்!

முதல்-அமைச்சர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி:- பன்றி காய்ச்சலுக்கு சென்னையிலும் சிறுவன் ஒருவன் இறந்துள்ளான். இந்திய அளவில் பிரதமர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அதுபோல் அமைக்கப்படுமா?

பதில்:- நாளைய தினம் இங்கேயும் மருத்துவ துறையினருடன் கலந்து பேசி தடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்ய உயர் மட்டக்கூட்டம் நடக்கிறது.

கேள்வி:- இந்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா?

பதில்:- ஆமாம்.

கேள்வி:- பன்றி காய்ச்சலில் சிறுவன் இறந்ததால் பள்ளிகள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு உங்கள் ஆலோசனை என்ன?

பதில்:- எது எது சாத்தியக்கூறோ, அதெல்லாம் கூட்டத்தில் விரிவாக பேசி முடிவு செய்யப்படும்.

கேள்வி:- கிங் இன்ஸ்டிடியூட்டில் பன்றி காய்ச்சல் நோய் பரிசோதனைக்கான வசதி இல்லை என்று கூறப்படுகிறதே?

பதில்:- நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றியும் விரிவாக ஆலோசிப்போம்.

கேள்வி:- எம்.எல்.ஏ.க்களுக்கு நிலம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டுக்கு சென்று உள்ளார்களே?

பதில்:- எம்.எல்.ஏ.க்கள் இனாமாக நிலம் கேட்கவில்லை. வீடு கட்டுவதற்கு இடம் கேட்கிறார்கள். இதைப் பற்றி சட்டசபையில் சொல்லும்போது பரிசீலிப்பதாக சொன்னோம். கடந்த மாதம் 22-ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் இது பற்றி யோசனை செய்தோம்.

ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் மற்றும் காங்கிரஸ் நண்பர்கள் சிலர் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக வலியுறுத்தி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் தருவதாக உறுதி அளிக்கவும் இல்லை. தந்து விடவும் இல்லை. ஒருவேளை தந்தாலும் கூட அதற்குரிய நியாயமான விலையை பெற்று கொண்டுதான் தருவதாக இருக்கும். இனாமாக தருவதாக இல்லை.

கேள்வி:- கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களே?

பதில்:- கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் சிலர்தான் எதிர்த்து அறிக்கை வெளியிடுவதையும் கூட்டங்களில் பேசுவதையும் தங்களுடைய பணியாக கொண்டு இருக்கிறார்கள். அரசாங்கத்தின் வீடுகளையோ, நிலத்தையோ குறைந்த வாடகைக்கு பெற்றுக்கொண்டிருக்கிற கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் யார்-யார் என்ற விவரம் என்னிடம் உள்ளது. அதை வெளியிட நான் விரும்பவில்லை.

கேள்வி:- பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பில் முக்கியத்துவம் உண்டா? ஒகேனக்கல் பிரச்சினை பற்றி பேசினீர்களா?

பதில்:- ஒகேனக்கல் பிரச்சினையோ அல்லது வேறு பிரச்சினையோ பேரமாக வைத்து அங்கு திருவள்ளுவர் சிலையையும், இங்கு சர்வக்ஞர் சிலையையும் திறக்கவில்லை. இரு மாநிலங்கள் இடையே உருவாக வேண்டிய, நிலைக்க வேண்டிய ஒற்றுமையை- நட்புணர்வின் அடிப்படையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது. 13-ந்தேதி சென்னை அயனாவரத்தில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்படுகிறது.

கேள்வி:- சிலை திறப்பின் மூலம் இருமாநில உறவும் வலுப்படும் என்ற நம்பிக்கை உள்ளதா?.

பதில்:- நம்பிக்கையை நோக்கிதான் முன்னேற வேண்டும்.

கேள்வி:- பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு எதிர்க்கட்சி தலைவரையும் அழைத்து இருந்தார்கள். இங்கும் அப்படி அழைப்பீர்களா?

பதில்:- கூப்பிடாமல் இருக்கமாட்டோம். கூப்பிட்டால் என்ன பதில் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியும். கட்சி தலைவர் கலந்து கொள்ள வேண்டிய பல நிகழ்வுகளில் கூப்பிட்டு இருக்கிறோம். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது அனைத்து கட்சி கூட்டங்களுக்கு தலைமை செயலாளர்தான் கடிதம் எழுதுவார். தி.மு.க. ஆட்சியில் அனைத்து கட்சிக்கூட்டம் நடத்தும் போதெல்லாம் முதல்- அமைச்சரே கடிதம் எழுதி அழைத்து இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் வராதது மட்டுமல்ல கபட நாடகம் என்று ஒரு சொற்றொடரை வாடிக்கையாக வைத்துள்ளார். அதைத்தான் பதிலாக தருவார்.

கேள்வி:- ஒகேனக்கல் பிரச்சினையில் தற்போதைய நிலை என்ன?

பதில்:- ஏற்கனவே கர்நாடக முதல்- மந்திரி பேசியுள்ளார். அது பற்றிய கருத்தை தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ளோம். எல்லாம் சுமூகமாக முடியும்.

கேள்வி:- தமிழக அமைச்சரவையில் மாற்றம் உண்டா?

பதில்:- இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

கேள்வி:- இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு பணி நடப்பது பற்றி வெவ் வேறு விதமான தகவல் வருகிறதே?

பதில்:- ஏதோ ஒரு சாமியார் தப்பா சொல்லிக் கொண்டு இருக்கிறார். அதை கேட்டு ஏமாறாதீர்கள்.

கேள்வி:- வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்பதை நிரூபிக்க டெல்லியில் நடந்த கூட்டத்தில் இங்குள்ள கட்சிகள் செல்லவில்லையே?

பதில்:- போய் பார்த்தால் அவர்களும் எங்கள் கருத்தைதான் சொல்வார்கள். எனவேதான் தயங்குகிறார்கள். ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைவதற்கும் இதே வாக்குப்பதிவு எந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் முற்றம் கோணலாக இல்லை.

கேள்வி:- இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு பணி திருப்தியாக இருக்கிறதா?

பதில்:- இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் வேகமாக நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. அதில் ஏதேனும் சந்தேகம் வந்தால் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். நேற்றோடு நாலு முறை இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. 4-வது முறையாக ரூ.15 கோடி மதிப்பில் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசும் அனுப்பி உள்ளது.

கேள்வி:- திருச்சியில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பில் ஒரு அமைச்சர் நிலம் பாதிக்கப்படும் என்பதால் ஏரியின் வழியாக அமைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளதே?

பதில்:- அப்படி குற்றச்சாட்டு இருந்தால் ஆராயப்படும். இது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- சத்துணவு பணியாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்களே?

பதில்:- சத்துணவு பணியாளர்கள் பகுதி நேர ஊழியர்கள்தான். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் பகுதி நேர ஊழியர்களாக வந்துவிட்டு அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சியிலும் பகுதி நேர ஊழியர்களாக ஊதியம் பெற்று விட்டு இப்போது நாங்கள் பகுதி நேர ஊழியர்களாக இருப்போம் முழு நேர ஊதியமும் வேண்டும் என்றால் எப்படி பொருந்தும். இருந்தாலும் சத்துணவு பணியாளர்களுக்கு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இரண்டு, மூன்று முறை ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாரோ சிலர் தூண்டி விடுவதால் தேவையற்ற போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். நடுநிலை யோடு எண்ணிப்பார்க்க வேண்டும்.

கேள்வி:- ஜெயலலிதாவை திருமதி என்று குறிப்பிட்டீர்களே?

பதில்:- அவர் தி.மு.க. அரசை மைனாரிட்டி அரசு என்று சொல்வதில்லையா. அப்படி சொல்லும் வரை திருமதி என்று சொல்வேன்.


கேள்வி:- பால் கொள்முதல் விலையில் மாற்றம் உண்டா?

பதில்:- தேர்தல்.

கேள்வி:- துணை நகரம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவீர்களா?

பதில்:- முயற்சிக்கப்படும்.

கேள்வி:- பாதுகாப்பு காரணங்களுக்காக சர்வக்ஞர் சிலை திறப்பு விழா இடம் மாற்றப்படுவதாக கூறப்படுகிறதே?

பதில்:- இல்லை. அதே இடத்தில்தான் சிலை திறக்கப்படுகிறது. சிலை திறக்கும் இடத்தில் நிகழ்ச்சியை வைத்தால் இடம் போதாது என்பதால் பக்கத்தில் ஒரு விளையாட்டு மைதானத்தை பார்த்து வந்துள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.









Saturday, August 8, 2009

பெங்களூரு திருவள்ளுவர் சிலை-அறுவடையின் அறிகுறிகளும்,உணர்வாயுதமும்



கடந்த 18 ஆண்டுகளாக கர்நாடக தமிழர்களின் கனவாக இருந்து வந்த பெங்களூர் திருவள்ளுவர் சிலை நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னட அமைப்புகள் சிலவற்றின் எதிர்ப்பு காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ள கன்னட ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா, கன்னட சளுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் உள்ள பூங்காப் பகுதியில், தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அப்போதைய முதல்வர் பங்காரப்பா சிலையைத் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டு விழாவுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டது.

ஆனால், விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக புலிகேசி கன்னட சங்கம் என்ற அமைப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில், இடைக்காலத் தடை வாங்கி விட்டது. அதன் பின்னர் சிலையைத் திறக்க வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.

சிலையை சாக்குத் துணியால் மூடிவைத்து விட்டனர். இந் நிலையில் தற்போதைய கர்நாடக முதல்வர் எதியூரப்பா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியால், திருவள்ளுவர் சிலைக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

இந் நிலையில் திருவள்ளுவரின் சிலையை முதல்வர் கருணாநிதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். இதற்கான விழா அல்சூர் ஏரிக்கரையில் இருக்கும் ஆர்.பி.ஏ.என்.எம். பள்ளித் திடலில் நடக்கிறது.

விழாவுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா தலைமை தாங்குகிறார்.
கர்நாடக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, சிவாஜி நகர் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க், பெங்களூர் மத்திய தொகுதி எம்.பி. மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்தச் சிலை திறப்புக்கு முழு முயற்சி எடுத்த எதியூரப்பாவுக்கு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை முழு ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் கன்னட அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளும் முழு ஆதரவு அளித்துள்ளனர். ஆனால், நாராயண கெளடா, வாட்டாள் நாகராஜ், பிரவீன் ஷெட்டி ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்ட கன்னட அமைப்புகள் இந்த சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சிலை திறப்பை எதிர்த்து இவர்களில் சிலர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதோடு, இரு மாநில உறவைக் கெடுக்க முயல வேண்டாம் என்று இவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தது.

இந் நிலையில் நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்த நாராயண கெளடாவை நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இன்று காலை பந்த் ஏற்பாடுகள் குறித்து சென்னராயபட்டணத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்த வாட்டாள் நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

இந்த இருவரோடு சேர்த்து நூற்றுக்கணக்கான அவர்களது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாளைய பந்த் அடையாளப்பூர்வமாகவே இருக்குமே தவிர முழு அளவில் இருக்காது என்று தெரிகிறது.

விழா சிறப்பாக நடைபெறும் பொருட்டு பெங்களூர் மற்றும் கர்நாடகம் முழுவதும் தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பந்த் நடத்துவதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், கர்நாடகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூர் நகரின் முக்கியப் பகுதிகள் அனைத்திலும், கூடுதல் போலீஸார் பாதுகாப்புப்புப் பணியில் ஈடுபடுத்ப்பட்டுள்ளனர். நகரின் மையப் பகுதியான சிவாஜி நகரில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மகடி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு குறித்து பெங்களூர் காவல் துறை ஆணையர் சங்கர் பித்ரி கூறுகையில், கன்னட அமைப்புகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தலாம். அதேசமயம், போக்குவரத்தை சீர்குலைக்கவோ அல்லது வன்முறையில் ஈடுபடவோ முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாளைய விழாவைத் தொடர்ந்து வரும் 13ம் தேதி சென்னை அயனாவரத்தில் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கவிஞர் சர்வக்னாவின் சிலை திறக்கப்படுகிறது. கர்நாடக முதல்வர் எதியூரப்பா சிலையைத் திறந்து வைக்கிறார்.

இது தேவையா?

இதன் விளைவு எப்படி இருக்கும்?

எவ்வளவு நாளைக்கு பெங்களூரு திருவள்ளுவர் சிலையைக் கட்டிக் காப்பார்கள்?

அம்பேத்கார் சிலையையும், தேவர் சிலையையும் வைத்து அரங்கேறிய கலவரங்களில் நாம் பெற்ற படிப்பினை என்ன?

திருவள்ளுவர் சிலையால் அங்குள்ள தமிழர்களுக்கு இனி ஏற்படப் போகும் நன்மைகள் என்னென்ன?

கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?








என்னைக் கவர்ந்த மொட்டுகள்

துரோகம்

அழுகியோ

கனிந்தோ

பிஞ்சிலே பழுத்தோ

நல்ல விலை கிடைத்தாலோ

அணில் குடைந்து

காம்பு அழுகிய பழம்

பொத்தென்று விழும்



குழந்தையின் புன்னகை

நரி மிரட்டலை

தாண்டி

நடு நடுவே

வந்து செல்லும்

குறு நகை



விண்மீன்கள்

ஆகாய தோட்டத்தில்

அள்ளித் தெளிக்கப்பட்ட

மினுக்கட்டாம்பூச்சிகள்

ஆதவன் மறையும் வரை

அண்டி இருந்துவிட்டு

இரவில்

இரவலாகக் காட்டும்

இன்முகம்



கருங்குயில்

பார்வை

ஈர்க்கவில்லை

பார்வையில்

பழுதுமில்லை

இனிய குரலால்

முகவரியைத் தேடும்

கருங்குயில்





Thursday, August 6, 2009

காரியவாதி கலைஞருக்கு பூச்சியம் தந்த கேப் டன்

தி.மு.க. அரசு ஏதாவது நல்ல காரியம் செய்துள்ளதா? என்று விஜயகாந்த் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.


இது குறித்து முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துகள், காரியங்களை வீரியமாக எடுத்துரைக்கின்றன.

தி.மு.க.வின் மூன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு "ஒரு மதிப்பெண் கூட போட முடியாது. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தி.மு.க. அரசுக்குப் பூஜ்ஜியம் மதிப்பெண் தான் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு கேப் டன் விஜயகாந்த் நிருபர்களை திருப்பி என்ன கேட்டார் தெரியுமா?

இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள்'' என்று கேப் டன் விஜயகாந்த் ஒரு எதிர் கேள்வியையே பதிலாக நிருபர்களுக்குச் சொல்லியிருக்கிறார்.

அவரது கேள்விகளுக்கு பொதுவாக நீங்கள் பதில் சொல்வதில்லையென்ற போதிலும், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவு படுத்தவாவது என்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கலாம் அல்லவா என்று நிருபர்கள் கேட்டால்?

அதற்கு முதல்வர் கருணா நிதி அவர்களின் பதில் இதுவாக இருந்தது.

கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சி அமைந்தபோதெல்லாம் ஆற்றிய பணிகள் சிலவற்றை மட்டும் இந்த விளக்கத்தில் தருகிறேன். அவை நல்ல காரியங்களா அல்லவா என்பதை மக்களே கூறட்டும்.


பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தியது.


தமிழ் பேசும் முஸ்லிம்களை போலவே உருது பேசும் முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். கொங்கு வேளாளர் சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.


வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப் பட்டோர்க்கு தனியாக 20 விழுக்காடு இடஒதுக்கீடு. பழங்குடியினர்க்கு தனியாக ஒரு விழுக்காடு.

மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.


தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும்; வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி. "மெட்ராஸ்'' என்பதற்கு "சென்னை'' என்ற பெயர்.


சாதிப்பூசல்களை அகற்ற பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம். உருது அகாடமி. சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகம்.


சென்னை திரைப்பட நகருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பெயர். தென் குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது. தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என 1. 2. 2008 அன்று சட்டம் இயற்றப்பட்டு
தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட எல்லாக் குடும்பங்களுக்கும் இலவச சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான பொருள்கள் வழங்கப் பட்டது


காமராஜர் பிறந்த நாள் "கல்வி வளர்ச்சி நாள்'' என்று சட்டமியற்றப்பட்டு, பள்ளிகளில் கல்வி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது.


அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர ஆதிதிராவிடர்க்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மத சுதந்திரம் பேண - கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிடச் சட்டம்அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம். விதவைகளுக்கு மறுமண உதவித்திட்டம்.


கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க நிதி உதவி. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு. 10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்கீழ் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 896 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 299 கோடியே 83 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது;



ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 லட்சத்து 78 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு 487 கோடியே 56 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது; ஆனால் தே.மு.தி.க. தலைவர் தனது பேட்டியில் ஒரு கர்ப்பிணிக்குக் கூட உரிய உதவியைச் செய்யவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.


தமிழ், ஆங்கிலம் மட்டுமே என்ற இரு மொழித் திட்டம். பனிரண்டாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப்பாடமென சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்தது - நூறாண்டுக் கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு.

தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 10, 12ஆம் வகுப்புகளின் அரசுத் தேர்வு கட்டணங்களும் ரத்து. தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை, விருதுகள் வழங்குதல் - பரிவுத் தொகைகள் வழங்குதல். பேருந்துகள் நாட்டுடைமை. போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்.


1500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைக ளோடு இணைக்க இணைப்புச் சாலைகள் திட்டம். புகுமுக வகுப்பு வரையில் அனைவருக்கும் இலவசக் கல்வி. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நிதி ஒதுக்கும் திட்டம். சென்னை நகரில் ஒன்பது மாநகராட்சி மேம்பாலங்கள். 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.


தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் 343 பாலங்கள் 214 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன; ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்; சென்னையில் உலகத் தரத்திலான 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில நூலகம்; 400 கோடி ரூபாய் செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம்;



100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்காத் திட்டம்; சென்னை மாநகர் குடிநீர் பற்றாக் குறையை முற்றிலும் தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப் படவுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்;


1330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்; 630 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம். மதுரவாயலிலிருந்து சென்னைத் துறைமுகத்திற்கு 1,650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தித்திற்குரிய பணிகள் 8.1.2009 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.


கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மூன்று புதிய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2006-க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர் ஆகிய 7 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்.



மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கம்.

அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தமிழக அரசின் சார்பில் புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்க முடிவு செய்து, அதன்படி திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன.


இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ள தே.மு.தி.க. தலைவருக்கு இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.








உன்னை மடிக்க வேண்டும் - மடிப்புக் கலை

உன்னை மடிக்க வேண்டும்
மடிக்க வேண்டும் என்று நான்
மல்லாந்து படுத்து
கணக்குப் போட்டேன்

கிடைப்பாயா
கிடைக்க மாட்டாயா
ஏங்கினேன்
ஏமாற மனமில்லை
தொலைக்காட்சியைப் பார்த்தால்
உன் ஞாபகம்
கண்ணாடி பார்த்தால் நீ
என் முன்னாடி

பேருந்து நிறுத்ததில்
உன்னை எண்ணி
பேருந்தைத் தவரவிட்டேன்
உன்னை விட மனமில்லை
ஏங்கினேன்

மடிசாரில் உன்னழகு
என்னை மடித்தது
உனக்கெப்படி
தெரியாமல் போயிற்று

இந்த ஏழைக்கு நீயா
தூக்கம் துறந்தேன்
தொலைபேசினேன்
உன்னைத் தெரிந்தவர்களிடம்
உன் குணத்தைக் கேட்டறிந்தேன்
பணக்காரர்களுக்கு மட்டும்
கிடைக்கும் பகட்டோ நீ என
பதறினேன்

உன்னிடம் பேச முடியாது
தெரிந்தே ஆசைப்பட்டேன்
கனவுகளில்
உன்னைக் கட்டியணைத்தேன்
மடியில் அமர்த்தி
மயங்கினேன்
தொட்டேன் தூரிகையால்
உன்னில் உன்னை வரைந்தேன்

உன்னைக் கட்டிக் கொண்டு
அழ முடியாது
அறிவேன்
சோகங்களைச் சொல்லி
சுமை இறக்கி வைக்கலாம்
இல்லையா

உன் வெட்டும் முகமும்
வேகமும் தான்
எனக்குப்பிடித்த பித்து

குயில் போல பாடுகிறாயாம்
சொல்கிறார்கள்
நான் கேட்க வேண்டும்
மயில் போல ஆடும் உன்னை
என் மடியமர்த்திப் பார்க்க வேண்டும்
என் மடி கனி நீயே
என் மடி கணினியே



தேர்தல் கமிசனுக்கு கொள்ளிமலை குப்புவின் பரிந்துரைகள்

அண்மைய காலங்களில் தேர்தல் கமிசனின் நடவடிக்கைகளை உற்று நோக்கிய கொள்ளிமலை குப்பு, சில பரிந்துரைகள் செய்ய முன்வந்துள்ளார்.


தேர்தல் கமிசனுக்கு கொள்ளிமலை குப்புவின் பரிந்துரைகள்.



1. இடைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு, மக்களை எப்படி விலைக்கு வங்குவது என்பது பற்றி தேர்தல் கமிசனில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டு பயிற்சியளிக்கலாம். பயிற்சி அளிக்கும் அதிகாரிகள் மூத்த அமைச்சர்களிடம் பணியாற்றி பழமும் திண்று கொட்டையும் போட்டவர்களாக இருக்க வேண்டும். பயிற்சி அளிக்கப்பட்ட அரசியல் வியாதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்தல் கமிசன் அதிகாரிகளுக்கு தொழிலின் பெயருக்கு ஏற்றவாறு கமிசன் வழங்கலாம்.

2. மக்களை விலைக்கு வாங்கும் நெளிவு சுழிவான பணியில் எதிர்கட்சிகளுக்கு விலைக்கழிவு கொடுத்து ஊக்கப்படுத்தலாம். அதுவே அவர்கள் ஆளும்கட்சியானபிறகு வட்டியும் முதலுமாய்க் கொடுத்து மக்களின் வயிறு வளர்ப்பது போல் பாசாங்கு செய்து தன் வயிறு வளர்த்துக் கொள்ள ஏதுவாக அமையும். இடைத்தேர்தலில் வழங்கும் அளவுக்கு பொதுத்தேர்தலின் போது மக்களுக்கு பணம் வழங்கினால் அரசியல் வாதிகளில் குடி குன்னகுடிக்குப் போய் விடும் என்பதையும், வெற்றி பெற்ற பிறகு அதிக சிரத்தை எடுத்து கொள்ளை அடிக்க வேண்டிவரும் என்பதையும், அதனால் அடுத்த தேர்தலில் வெற்றி அதிக பணம் கொடுத்தால் தான் கிடைக்கும் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டவேண்டும்.

3. கல்யாண(திருமண) மண்டபங்களை மொத்தமாக இரண்டுமாத லீசுக்கு எடுத்து மக்களை மாக்களாக அடைத்து வைக்க அரசியல் கட்சிகளுக்கு உதவலாம். அடிய புடிய,வெட்டுக்குத்து நடக்கும் போது காயப்பட்டு தீண்டப்படாமல் கிடக்கும் அப்பாவி தொண்டர்களை தொண்டுள்ளம் கொண்ட தேர்தல் கமிசன் மருத்துவமனையில் சேர்க்கலாம்.

4. இராமனாதபுரம்,விருதுநகர்,சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தலை குனிந்தபடி செல்லும் செம்மறி ஆடுகளை மொத்தமாக கீதாரிகளிடமிருந்து வாங்கி அரசியல் வாதிகளிடம் விற்பனை செய்யலாம். பிரபல மசாலா நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளி கோரி, பெரும் அரசியல் புள்ளிகளுக்கு மொத்தமாக பிரியானி மசாலா பார்சல் செய்து அனுப்பலாம்.

5. பிரபல நடிகர், நடிகைகளின் இரண்டு மாத கால் சீட்டைப் பெற்று, அரசியல் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கலாம். நடிகர், நடிகைகள் போதவில்லை என்றால் அரசியல் வாதிகளுக்கு நடிகர், நடிகையாக வேசம் போட வைக்கலாம். அதற்காக குறுகிய கால டாக்டர் பட்டங்களை வழங்க திரைப்படக் கல்லூரிக்கு பரிந்துரைக்கலாம்.

6. பிரபல மின்னியல் நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளி கோரி மொத்தமாக டார்ச் லைட் வாங்கி அரசியல் கட்சிகளின் கிளைக் கழகங்களுக்கு அனுப்பலாம். தேர்தல் சமையத்தில் இரவு நேரங்களில் பணப் பட்டுவாடா செய்ய உதவியாக இருக்கும்.(கரண்ட் தான் இருக்காதே)

7. அரசியல் கட்சிகளின் பிரச்சார கூட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஒரு பெரும் தொகையை லஞ்சமாக மின்சாரவாரிய அதிகாரிகளுக்கு தேர்தல் கமிசன் தனது கருவூலத்தில் இருந்து கொடுக்கலாம்.

8. கட் அவுட்டுகள்,பிலக்ஸ் போர்டுகள், கண் கவர் மின் விளக்குகள், பந்தல், தார் படுதா,மைக்கு செட்டு, பிரியானி - லட்டு-ஜாங்கிரி போடும் சமயல் மேஸ்திரி போன்றவற்றை மொத்தமாக தேர்தல் கமிசன் மன்னார்குடியில் இருந்து வரவழைத்து உதவி செய்யலாம்.

9. தேர்தல் நாளன்று கொடுக்கப் படும் லட்டில் இருக்கும் மூக்குத்தியை உரசிப்பார்க்க பொற்க்கொல்லர்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கலாம். அவர்களைக் கண்கானிக்க காவல் துறை அதிகாரிகளை நியமிக்கலாம். அவர்களிடம் இருந்து மூக்குத்திகளை பாதுகாக்க மத்திய ரிசர்வ் படை, அவர்களிடம் இருந்து பாதுகாக்க தனியார் செக்க்யூரிட்டி, அவர்களிடமிருந்து பாதுகாக்க இராணுவம், அவர்களிடம் இருந்து பாதுகாக்க ரஜினிகாந்த் சொன்ன மாதிரி கடவுள் இருந்தா கூப்பிடலாம். அப்படி இல்லாத பட்சதில் அவன் அவன் எடுத்து சாப்பிடட்டும் என்று வேடிக்கை பாக்கலாம். அதான தேர்தல் கமிசனோட வாடிக்கை (ஜாப் ஸ்கோப்பு).

10. முக்கிய தலைவர் தோல்வியுரும் நிலையில், ஓட்டு எண்ணிக்கையை நிறுத்திவைத்துவிட்டு மேலிடத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கலாம். உத்தரவு வந்தவுடன் தோல்வி அடைந்த தலைவரை வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம். பிற்காலத்தில் சுயசரிதை எழுதும் போது நடந்த உண்மையை போட்டுடைத்து, புத்தக விற்பனையை பெருக்கலாம்.




Monday, August 3, 2009

டாக்டர் மு.க.ஸ்டாலின் = கவிஞர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் - ஓயாது உழைப்பவர், செயல் வீரர், துணை முதல்வர், தி.மு.க துணைப் பொதுச் செயலாளர், இளைஞர் அணி செயலாளர்,முன்னாள் சென்னை மேயர், அவசர நிலை பிரகடனத்தின் போது மிசாவில் அடைபட்டு துன்புற்றவர் என்று தான் அனைவருக்கும் தெரியும். அவருடைய பல்வேறு பரிணாமங்களில் தமிழக மக்களுக்கு தெரியாதவை எண்ணிலடங்காதவை(திராவிட இயக்க பரிணாமம் அல்ல).

1990 -களின் தொடர் நாடகங்களில் நடித்திருப்பவர். சிறந்த கிரிக்கெட் வீரர். அண்மையில் தமிழகத்தின் மிகச் சிறந்த பல்கலைக் கழகமாம் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டத்தை பெற்றிருக்கிறார். இதுவே அவர் பெரும் முதல் டாக்டர் பட்டம் என்று ஊடகங்கள் பொய்யுரைக்கின்றன. அவர் முதலில் பெற்ற டாக்டர் பட்டம் ஐரிஷ் பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கோ முதல்வர் பதவி கிட்டிய பிறகு தான் டாக்டர் பட்டம் கிட்டியது. அதுவும் எளிதாகக் கிடைத்துவிட வில்லை. நிற்க.

கலைஞர் மு.கருணாநிதி ஒரு கவிஞரும் கூட, கவிதையையே உரையாடலாக எழுதும் திறன் அவருக்கு இளம் வயதிலேயே உண்டு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கவிஞர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அவர் எழுதிய கவிதையைத் தருகிறேன். படித்துப் பாருங்கள் உடன்பிறப்புகளே...{சகோதர,சகோதரிகளே}

அப்பா வணக்கம் அவசரப் படவேண்டாம்

எப் பா வணக்கம் என இயம்புகிறேன் கேளுங்கள்

வாழ்வியலை நெறிப்படுத்தும் வள்ளுவரின் சொத்தப்பா

ஏழிசையின் நலம் வழங்கும் இளங்கோவின் சந்தப்பா

நாடெங்கும் நம் தமிழர் நரம்பெல்லாம் இரும்பாக்கிப்

பாடல் பொழிந்து வைத்த பாவேந்தன் உணர்ச்சிப்பா

வெண்பா விருத்தப்பா விரைந்து வரும் அகவற்பா

பண்படுத்தும் ஆசிரியப்பா என்று பா தொடுத்து

நமக்கே விழிப்புணர்ச்சி நல்கிட நம் கழகத்தின்

தமிழ்க் கவிஞர் கூட்டமிங்கே தரப்போகும் எழுச்சிப்பா

அப் பா வணக்கம் தான் அனைவருக்கும் சொன்னேன்

அப்பா வணக்கம் தான் நான் சொன்னேன்

தப்பா? மணக்கட்டும் தமிழ்ப்பா வணங்குகிறேன்

இளைஞர்களை வரவேற்கும் இயக்கம் இது இன்றைக்கோ

இளைஞரணி உம்மையெல்லாம் இனிதே வரவேற்கிறது

வாழைக்கும் கன்றாக வளராமல்; ஆலமரம்

வீழாமல் தாங்கும் விழுதாக விளங்குங்கள்

என்றார் நம் தலைவர்...





Saturday, August 1, 2009

குருவை மிஞ்சிய குழந்தை - மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

செங்கப்படுத்தான் காட்டில்
எழுந்த
செங்கொடி

பொதுவுடைமை
பா வடித்த
புரட்சியாளன்

உள்ளம்
கொள்ளை கொள்ளும்
ஒளிப்பாவலன்

சிரிக்கவும் வைத்து
சிந்திக்கவும் வைத்த
சீனா கல்கண்டு
நின் பாட்டு

பாத்துகள்களை
அணுவாக்கிய
ஞானி

பாவேந்தனின்
படைத்தலைவன் நீ

எழுதியது
எளிய நடை
இலக்கியம்

நடையின்
அழகோ
நறுந்தேன்

நின் பாக்கொடை
பைந்தமிழ்க் குடை

அலுக்காத
நின் பாட்டு
வெளுக்கும்

இழையோடும்
கிராமத்து நதியல்ல
தென்றல் தவழும்
ஓடை

புரையுடிய
புற்று நீக்கப் பிறந்த
புடம் போட்ட
தங்கம் நீ

குருவை மிஞ்சிய
குழந்தை நீ
குறுகிய காலத்தில்
உனை
இழந்தோமே






அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பாட்டுக் கோட்டையாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் விழா, தமிழ் கடல் திரு. நெல்லை கண்ணன் அவர்களின் சிறப்புரையோடு வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. அது சமயம் வெளியிடப்பட்ட சிறப்புமலரான “கழனிக்கல்வி மலரில்” வெளிவந்த எனது பாச்சரம்.







நன்றி: கழனிக்கல்வி மலர்

அடிமை வாசம்

மின்சார

முள் வேலிக்குள்

விடுதலையை சுவாசிக்கும்

நீங்கள்

புரட்சிப் பூக்கள்

சுதந்திரக் காற்றை

சுவாசிக்கும்

எங்கள் வாசம்

அடிமை





Thursday, July 30, 2009

ஏறா முட்டில் ஏறிய ஏழை

வ(ரி)றியவன்
வரிந்து கட்டிக்கொண்டு
பிழைத்தேன்
வெதும்பினேன்
வேலை இல்லை
குழி நிலத்தில்
குடியிருந்தேன்
நன் செய் உண்டு
புண் செய் இல்லை
வரிந்து கொண்டேன்
வாழ்க்கையைத் தேடினேன்
வரி பிடித்தேன்
வக்கணையாய்
வயிற்றைக் கழுவிக்கொண்டேன்
வால் பிடிக்க
ஆள் பிடித்தேன்
வரி கட்டும்
வளர்ச்சி கண்டேன்
கட்டுவதில்லை
ஏ(ன்) மாற்றுகிறேன்
போடுகிறேன்
நன் செய் தொலைந்தது
புண் செய் மட்டும்
வந்து நிற்கிறது
புரையோடிப்போய்





Thursday, July 23, 2009

முகவரி இல்லாதவன்

வீட்டை விட்டு வெளியேறி

பெற்றுக் கொண்டான்

தனது முகவரியை

தன்னை அடிமை என்றான்

அயலார்க்கு

தமிழை வரி விடாமல்

ஒப்பித்துக் காட்டி

தான் தோன்றிய

தமிழன் என்றான்

நெறி சொலும் நிலையில்

கரியினைப் பூசிக்கொண்ட

கனியன் அவன்

விழாதிருப்பதற்கு

விழா எடுப்பான்

முகவரி இல்லாதவன்


Saturday, June 20, 2009

பாலாற்றில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - துரைமுருகன் அதிர்ச்சி


பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு 15 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்திருப்பது அதிர்ச்சியும் ஆத்திரமும் அளிப்பதாக உள்ளது என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ஜெய்ராம் ரமேஷை நானே நேரில் சந்தித்து அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்துவேன் என்றார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சண்முகவேலு,

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு 15 நாளில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். தமிழக அரசு உடனே மத்திய அரசுடன் பேசி இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த துரைமுருகன் கூறுகையில்,

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் அறிவிப்பை ஆந்திர அரசு வெளியிட்டதுமே தமிழக அரசு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

மத்திய அரசு இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசி இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் [^] ஆலோசனை வழங்கியது. அதன் அடிப்படையில் மத்திய நீர்வள ஆணையமும் இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசியது.

இரு மாநிலங்களும் புள்ளி விவரங்களை தந்துள்ளோம். இது தவிர ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய தமிழ்நாட்டிலிருந்து ஒரு பொறியாளரை கேட்டார்கள். தமிழக அரசும் அவரை நியமனம் செய்திருக்கிறது. இந் நிலையில் பாலாற்றில் அணை கட்டுவதற்கான எந்த பணிகளையும் செய்யக்கூடாது என்று மத்திய நீர்வள ஆணையம் உத்தர விட்டுள்ளது. வழக்கு [^]ம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆனால் ஆந்திர மாநில அரசு அணை கட்டுவதற்கு 15 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்திருப்பது எனக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் அளிப்பதாக உள்ளது.

இந்த அமைச்சர் தமிழகத்தையும் நன்கு அறிந்தவர். அவரிடம் அணை பற்றிய விவரங்களை முழுமையாக தெரிவித்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். ஒருவேளை தெரிந்திருந்தும் அவர் இந்த முடிவுக்கு வந்திருந்தால் அவரை நானே நேரில் சந்தித்து நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவேன்.

அவரிடம் தமிழக அரசின் சார்பில் உண்மை நிலவரங்களை தெரிவித்து அணைக்கு அனுமதி வழங்குவது உகந்ததல்ல என்று தெரியப்படுத்துவேன் என்றார் துரைமுருகன்.

விட்டுக் கொடுத்துவிட்டு போராடுவதே தமிழர்களின் சிறப்பு!
தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழன் தான்!

Friday, June 19, 2009

தலையில்லாக் கோழிகள் - தலைவர்களே வாருங்கள்

தலைவர்களே வாருங்கள்
தமிழர்களைத் தரித்திரமாக்கி
சரித்திரம் எழுதலாம்
அதனை வாசிப்பதற்கு
வடக்கத்தியானை அழைக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
தனித்தமிழில் எழுதலாம்
அவர்களை படிக்கப் பழக்கலாம்
அடிமைத் தமிழரின்
பிரியாணிக்குக் கொடுக்கும்
பணத்தை மிச்சப் படுத்தி வைக்கலாம்

நீங்கள் எழுதும்
தமிழ் நூல்களை
அவர்களுக்குக் கொடுத்துவிட்டு
எடுத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
அடிமைகள் இல்லாத
நாட்டை உருவாக்க முனைந்து
அடிமையாக வாழலாம்

தலைவர்களே வாருங்கள்
தினந்தோறும்
தமிழ் பிணங்கள் விழுகின்றன
சிவலோக பதவிக்குப் பிறகும்
பதவியைத் தேடலாம்

தலைவர்களே வாருங்கள்
தொண்டைக் குழியைத் தாண்டிவிட்டால்
உண்ணும் அறுசுவை உணவும்
அருவெறுக்கத்தக்க மலமாகிப் போகும்
நாவால் சுவைத்துப் பிழைக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
பிணத்திடம் காசுகள் தலை வணங்கும்
பணம் வேறு வழியில் போகும்
அண்டாது
நடை பிணமாக இருந்து
பிழைத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
நடைபிணங்களை நாடாள
அழைப்போம்
அடிமைகளை அரசாள
கூப்பாடு போடுவோம்

தலைவர்களே வாருங்கள்
வேற்று கிரக
மனிதருக்கும் தமிழ்
கற்றுக் கொடுக்கலாம்

தமிழன் அழிந்த பின்னும்
பிழைத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
கல்லறைகள் உடைக்கப் பட்டதை
காவியமாக எழுதலாம்
கழிசடைத் தமிழன்
கடைசிவரை இருப்பான்
படிக்கச் சொல்லலாம்
வயிற்றுப் பிழைப்புக்கு ஆகும்

தலைவர்களே வாருங்கள்
புல் பூண்டு மண் மரம் மட்டை
எல்லாம் அழிந்தாலும்
மனிதன் பிறப்பான் என்ற
நம்பிக்கையோடு இருக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
பிழைப்பு நடத்தலாம்
கல்தோன்றி மண்தோன்றா
காலம் மீண்டும் வரும்
முதலில் தமிழன் பிறந்தால்
அவனிடம் தமிழை
விற்றுத் தீர்க்கலாம்






Tuesday, June 16, 2009

மலேசியா - சிங்கப்பூருக்கு இடையே நவீன தமிழ் பாலம்




சிங்கையில் நவீன தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம்

மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் நூல் அறிமுகம்

சிங்கப்பூர் இலக்கிய உலகத்தில் தானும் ஒரு தமிழ் நதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் திரு.பாலு.மணிமாறன். கவிதைகள், சிறுகதைகள் போன்ற படைப்பிலக்கியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர்,தமிழ் உணர்வாளர். இலக்கியப் பணியின் அடுத்த கட்டமாக, தனது தங்கமீன் பதிப்பகத்தினூடாக வளரும் எழுத்தாளர்கள்,கவிஞர்கள், இலக்கியவாதிகளின் படைப்புகளை அச்சேற்றி வருபவர்.

அண்மையில் பிரபல மலேசிய தமிழ் எழுத்தாளர் சை.பீர் முகம்மது அவர்களின் "பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்" என்கிற சிறுகதைத் தொகுப்பை தனது பதிப்பகத்தினூடாக சிங்கையில் வெளியிட முழு முதல் காரணமாயிருந்தார்.
அந்நிகழ்ச்சியினூடாக மலேசிய எழுத்தாளர் இளவல் திரு.கே.பாலமுருகன் அவர்களையும், சிங்கை இலக்கிய உலகுக்கு அறிமுகப் படுத்தும் நிகழ்வாகவே அமைத்திருந்தார்.

அடுத்து நிகழ்ந்த வாசகர் வட்டம் நிகழ்வுக்கு மலேசிய எழுத்தாளர்கள் புண்ணியவான், கே.பாலமுருகன், சாசின் தேவராஜன், நவீன் உள்ளிட்டோர் வந்திருந்து திரு கே.பாலமுருகன் அவர்களின் "அநங்கம்" இலக்கிய சிற்றிதழை சிங்கை இலக்கிய வட்டத்துக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது திரு சாசின் தேவராஜன் அவர்கள் நடத்திவரும் மௌனம் கவிதை சிற்றிதழைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

இது போன்ற நிகழ்வுகளுக்கு, மலேசிய மற்றும் சிங்கை எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாக கவிஞர் திரு.பாலு மணிமாறன் அவர்களும், கவிஞர் திரு பாண்டித்துரை அவர்களும் இருப்பது மனசுக்கு இதமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆறுதலாகவும் இருக்கிறது.

மலேசியாவில், சிங்கையைப் போன்று தமிழ் நூலகங்களை காண்பது அரிது. ஆதலினால், அங்கிருந்து வரும் தமிழ் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் வேட்கையை, மொழியுணர்வை, இன உணர்வை நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறோம். சிங்கையில் எல்லா நூலகங்களிலும் தமிழுக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார்கள். அங் மோ க்யோ போன்ற நூலகங்களிலும், தேசிய நூலகத்திலும் தமிழ் நூல்களை நிறைவாக வைத்திருக்கிறார்கள். அதனால் சிங்கையில் இருப்பவர்களுக்கு தமிழ் நூல்களைப் படிப்பதற்கு எளிதான சூழல் நிலவுகிறது.


அந்தவகையில், சிங்கை தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில், திரு பாலு மணிமாறன் அவர்களின் தங்கமீன் பதிப்பகத்தின் சார்பாக மலேசிய எழுத்தாளர்கள் திரு.சாசின் தேவராஜன் அவர்களின் "அரிதாரம் கலைந்தவன்" சிறுகதைத் தொகுப்பு மற்றும் திரு.கே.பாலமுருகன் அவர்களின் "கடவுள் அலையும் நகரம்" கவிதைத் தொகுப்பு ஆகிய இரண்டு நூல்கள் கருத்தரங்கத்திற்கு பின் அறிமுகம் கண்டன.

நூலாசிரியரே நூலை வெளியிடும் புதிய முயற்சியை காண முடிந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இறைவணக்கம் அல்லது தமிழ்த் தாய் வாழ்த்து பாடப் படவில்லை. நூலைப் பற்றிய ஆய்வு அல்லது விளக்க உரையையும் நூலாசிரியர்களே நிகழ்த்தினார்கள். முதல் நூலாக திரு சாசின் தேவராஜன் எழுதிய "அரிதாரம் கலைந்தவன்" சிறுகதைத் தொகுப்பை அவரே வெளியிட கவிமாலை காப்பாளர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அடுத்து திரு.கே.பாலமுருகன் எழுதிய "கடவுள் அலையும் நகரம்" கவிதைத் தொகுப்பை அவரே வெளியிட சிங்கப்பூர் எழுத்தாளர் இராம கண்ணபிரான் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சி நெறியாளராக அருமை நண்பர் கவிஞர் திரு.பாண்டித்துரை அவர்கள் சிறப்பாக பங்காற்றினார்கள்.

நூல் வெளியீட்டுக்கு முன்பு நடைபெற்ற கருத்தரங்கில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் திரு.இராம கண்ணபிரான் மற்றும் திருமதி சித்ரா இரமேஷ் ஆகியோர் நவீன இலக்கியத்தில், நவீனத்துவம், பின் நவீனத்துவம்,யதார்த்தம், மாய யதார்த்தம், கட்டுடைத்தல் போன்ற நவீன படைப்பிலக்கிய கூறுகளை ஆங்கில இலக்கியத்துடன் ஒப்பீடு செய்து சிறப்பான எடுத்துக்காட்டுகளுடன் மேற்கோள்களையும் ஒன்றிணைத்து உரையாற்றியது நிறைவாக இருந்தது. பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று கருதுகிறோம்.

நூல் வெளியீட்டின் தொடர்ச்சியாக அனைவரும் நூல் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நடந்தது. பின்னர் சில மணித்துளிகள் சிற்றுண்டி இடைவேளை, நிறைவடைந்தவுடன், மலேசிய எழுத்தாளர் திரு.சை.பீர் முகம்மது மற்றும் சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன்(சென்னை), எழுத்தாளர் நா.கண்ணன் (ஜெர்மனி) ஆகியோருடன் இலக்கியம் சார்ந்த தொலைபேசி கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் அங்கம் நடைபெற்றது.

விழாவில் கவிஞர் திரு ந.வீ.விசயபாரதி, ஆசியான் கவிஞர் கா.து.மு.இக்பால், பாத்தென்றல் இளமாறன், சிங்கப்பூர் தினமலர் திரு புருஷோத்தமன், திரு பாண்டியராஜன், பிரான்ஸில் இருந்து வந்திருந்த ஈழத்து உடன்பிறப்பு திரு ஸ்ரீரங்கன் (தமிழ் ஒலி வானொலி), பதிவர்கள் கோவி.கண்ணன், முகவை இராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், பல இலக்கிய நிகழ்வுகளின் நான் கண்ட சில பல முகங்களைக் காண இயலவில்லை.

மொத்தத்தில் இந்நிகழ்வை பயனுள்ளதாக ஆக்கிக் கொடுத்த, கவிஞர் திரு பாலு மணிமாறன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை