Tuesday, March 31, 2009

திமுகவின் புதிய பிரச்சார பீரங்கிகள் இரண்டு

திமுகவின் புதிய பிரச்சார பீரங்கிகள் இரண்டு
இரட்டைத் தொடையும், தயிர் வடையும்

கலைஞருக்கும் ஜெயம் தான் பிடிக்கும் போலிருக்கு
அதான் ஜெயமான காலண்டரை வாங்கியிருக்கிறார்!



இட ஒதுக்கீடு என்ற போர்வையில் ஒழி(ளி)ந்து கொண்டுவந்த திரு எஸ்.வி.சேகர் அதையே கலைஞருக்குப் போர்த்துகிறார் போலும்!
காங்கிரஸ்ல சேர்ந்துட்டு இங்க ஏன் வந்தார்?








தமிழில் குறள் வெண்பா வடிக்க வந்திருக்கும் குயில் ரம்பா!

இரட்டைத் தொடை எடுத்து செய்யுட்பா ஆடை தொடுப்பது திண்ணம்

பின் குறிப்பு
இரட்டைத் தொடை :செய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்டைத் தொடை எனப்படும். எனினும் இச் சொல் எல்லா இடங்களிலும் ஒரே பொருளிலேயே வரவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு பொருள்களிலும் வரலாம்.


படித்ததில் பிடித்தது, நெஞ்ச வர்ணக் கிளி -தபூ சங்கர்

படித்ததில் பிடித்தது, நெஞ்ச வர்ணக் கிளி -தபூ சங்கர்

அண்மையில் படித்த தபூ சங்கரின் நெஞ்ச வர்ணக் கிளி
கவிதைத் தொகுப்பில் எனக்கு பிடித்த சில காதல் கவிதைகள்



உன்னை நேரில் பார்த்து
எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன
அதனால் என்ன
உன்னை நினைத்துப் பார்த்து
ஒரு நொடி கூட ஆகவில்லையே

*************************************

நீ அப்போது குடியிருந்த வீட்டை
ஒருமுறை இப்போது நான் பார்த்தேன்
பாவம்
என்னை மாதிரி உன் ஞாபகத்தோடு
இன்பமாய் வாழத் தெரியவில்லை அதற்கு

*************************************

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்

*************************************

ஒரு குழந்தையைப்போல
உன் அப்பாவிடம் நீ
கொஞ்சி விளையாடியதை
நான் பார்த்ததும்
நாக்கைக் கடித்துக்கொண்டு
முகத்தைத் திருப்பிக்கொண்டாய்
எனக்கும் உன் அப்பாவுக்கும்
தெரியாமல்.
அதை நினைக்கும் போதெல்லாம்
நான்
முகத்தைத் திருப்பிக்கொண்டு
நாக்கைக் கடித்துக் கொள்கிறேன்
யாருக்கும் தெரியாமல்

*************************************

உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்

*************************************











அதிமுகவுக்கு வாக்களித்தால் சோ வச்சது தான் சட்டம்!?

துக்ளக் சோ அவர்களிடம் ஆசி பெறும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா



அதிமுகவுக்கு வாக்களித்தால் ஈழப்பிரச்சனையில் சோ வச்சது தான் சட்டம்!?

சோவின்
கருத்து பிரதானமாக எழுத்துக் கொள்ளப் பட்டு அமுல் படுத்தப்படும்!?


சரி
!? தவறு!?

-கொள்ளிமலை குப்பு






Monday, March 30, 2009

தமிழீழத்துக்கு கலைஞர் ஆதரவு, அடைந்தால் மகிழ்ச்சி

தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

இந்த தேர்தலில் எதிர்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். திமுகவும் காங்கிரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்கும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடெறாது.

இந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், இது தவிர்த்து மற்ற பிரச்சனைகள் குறித்தும் அண்ணா வகுத்து தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொற்பொழிவாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ய முற்படுவார்கள். அவற்றை முறியடிக்கும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். தமிழ் ஈழத்தை திமுக ஏற்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயல்கிறார்கள்.

ஜனநாயக ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.





மக்களை திசைதிருப்பவே ஈழப்பிரச்சனை

மக்களை திசைதிருப்பவே ஈழப்பிரச்சனை

மக்களை திசை திருப்புவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஈழப்பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கலைஞர், திமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்த தேர்தலில் மக்களை திசைதிருப்புவதற்காக ஈழப்பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன என்றும் குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டை சரி என்று ஏற்றுக் கொண்ட திரு கொள்ளிமலை குப்பு கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பிய "கட் கட" தந்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்!

அப்பட்டமான உண்மை!

தாங்களும் அதையே பின் பற்றுவது

வேதனையான உண்மை!

படிக்காத மக்களில் பலருக்கு இந்த நாடகங்கள் தெரியவில்லையே தவிர

மற்றவர்களுக்கு நன்கு புலப்படுகிறது.

கே கே





விஜய டி.ராஜேந்தர் என்ன செய்வார்?

இது நடக்குமோ?

தனித்தமிழ்
ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் வரும் மக்களைத் தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளதாக லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

லட்சிய திமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். தனித்தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் லட்சிய திமுக கூட்டணி அமைக்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எதுவும் சொல்ல வேண்டியது இல்லை!
எல்லோரும் போங்க!!
விலை?






தனது கட்சியை மறந்து விசயகாந்த் புலம்பல்!

துறவி என்று சொல்லிக் கொள்ளும் ஜெ.வுக்கு பதவி எதற்கு? என்று விஜயகாந்த் கேட்டார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மணிக்கு தூத்துக்குடி தேமுதிக வேட்பாளர் எம்.எஸ்.சுந்தரை ஆதரித்து செய்துங்கநல்லூரில் பிரசாரம் செய்தார்.
ராமதாசு நின்னா ரோபோ, மூப்பனார் நின்னா என்னவோ?
அப்போது அவர் பேசுகையில், மூப்பனார் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் சொல்லை நான் கேட்டிருப்பேன். ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்த ஒரு தலைவர் ஜெயலலிதா அருகில் ரோபோ மாதிரி நிற்கிறார். அதை டிவியில் காட்டுகிறார்கள். அந்த அளவுக்கு எல்லாம் நான் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது முக்கியமல்ல. மக்களாட்சியை கொண்டு வருவோம். மக்களின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று எனது வேட்பாளரை அறிவிக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. எனக்கு பின்னால் அவர்கள் பிரசாரத்திற்கு வருவார்கள். எதை நம்ப வேண்டும், எதை நம்பக் கூடாது என்று உங்களுக்கு தெரியும்.

ஜெயலலிதா தன்னை ஒரு துறவி என்று கூறுகிறார். அப்படியானால் அவருக்கு பதவி எதற்கு? வீட்டுக்குப் போக வேண்டியதுதானே? டாஸ்மாக் ஊழலுக்கு பிள்ளையார்சுழி போட்டவர் ஜெயலலிதாதான். எனது வேட்பாளர்கள் படித்தவர்கள். அவர்கள் தவறு செய்தால் நானே அடிப்பேன். தமிழக மக்கள் சொல்பவரே பிரதமராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் வளம் பெறும் என்றார்.
**********

புரியுது விசயகாந்து ஐயா,
உங்க கட்சி திராவிட கட்சி இல்லையா?

அப்ப ஏன் உங்க கட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் வைத்தீர்கள்?
உங்களை நீங்களே வசை பாடுவது உங்களுக்கே நல்லா இருக்கா?
கொஞ்சம் பார்த்து செய்யுங்க!



படம் உதவி : கோவியார்




Friday, March 27, 2009

கீரை

கீரை பிடிக்கும்
உரம்
இரும்புச்சத்து

பிடிக்காது
கிள்ளுக்கீரை







Thursday, March 26, 2009

திமுகவுக்கு வைரமுத்து, பா.விஜய் பிரச்சாரம் செய்யலாம்!?

முதல்வர் கருணாநிதி கட்டளையிட்டால் திமுகவுக்கு பிரசாரம் செய்வேன் என்று கவிஞர் பா.விஜய் கூறியுள்ளார்.

ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10ஆம் வகுப்பு படிக்கும்போதே கவிதை எழுத ஆரம்பித்த நான், பாக்கியராஜ் நடித்த ஞானப்பழம் என்ற படத்தின் மூலம் சினிமா பாடல் எழுத ஆரம்பித்தேன்.

தற்போது வள்ளுவனுடன் பேசுகிறேன் என்ற கவிதை தொகுப்பு எழுதியுள்ளேன். இதில் வள்ளுவரின் 80 குறள்களுக்கு புதுக்கவிதை மூலம் விளக்கம் அளித்துள்ளேன். இந்த கவிதை தொகுப்பு விரைவில் வெளியிடப்படும். ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது தமிழனுக்குள் முளைத்த இசைக்கு உலகம் சூட்டிய மகுடம் ஆஸ்கார் என்று கூறலாம் என்றார்.

மேலும் பேசிய அவர், நான் அரசியலில் நுழைவது குறித்து எதுவும் கூற முடியாது. எனினும் முதல்வர் கருணாநிதி கட்டளையிட்டால் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன் என்றார். (நன்றி:நக்கீரன்)

தமிழ், தமிழன், கவிதை, இலக்கியம் என்ற அடையாளத்துடன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யலாம். ஏன்...? காவிய கவிஞர் வாலி கூட பிரச்சாரம் செய்யலாம்?!




விருந்தும், மருந்தும் -2

இருபத்து இரண்டு கறியுடன்
வடை பாயாசமும் சேர்ந்து கொண்டது
விருந்தில்

எதை எடுப்பது, எதை விடுப்பது
திக்கு முக்காடித்
திணறல்

நிறைவாக,
தாம்பூலம்
எச்சில் துப்பிவிட்டு
வந்தமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில்

அம்மா...! தாயி...! சோறு
இருந்தா போடுங்களேன்
செவியில் விழுந்தது கெஞ்சல்

போயிட்டு அப்புறம் வாய்யா
என்ற கத்தலுடன் முடியாமல்,

வந்தா பழைய கஞ்சி இருந்தா
ஊத்திவிடு

என்ற குசுகுசுப்போடு
முடிவுற்றது
விருந்து.

Saturday, March 21, 2009

அடப் போங்க சார் நீங்க...!

கச்சத்தீவு பகுதியை புனித பகுதியாக இலங்கை அறிவித்திருப்பது தன்னிச்சையானது, கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே நமக்கு உரிமையான கச்சத்தீவு பகுதியை புனிதப் பகுதியாக அறிவிக்க இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இப்பிரச்சினையை இலங்கையில் உள்ள எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவும் எழுப்பியுள்ளது. பாரம்பரிய ரீதியாகவும், வரலாற்று அடிப்படையிலும், ஆவணங்கள் அடிப்படையிலும் இந்தியா சொந்தமான கச்சத் தீவை புனித பகுதியாக இலங்கை அரசு அறிவிக்கக் கூறுவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

இந்தியாவை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பு குறித்து பேசுவது பன்னாட்டு சட்டங்களுக்கு முரணானது என்று கூறியுள்ளார் வைகோ.

இந்தியா, இலங்கைக்கு இடையில் இருக்கும் தீவு பகுதி கச்சத்தீவு. 1974ல் இது இந்திய அரசால் இலங்கைக்கு விட்டுகொடுக்கப்பட்டது. இங்கு அதிக மீன்கள் கிடைப்பதால் தமிழகம் மற்றும் இலங்கை பகுதியில் இருந்து இங்கு அதிக மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது உண்டு.

சமீபகாலமாக ஈழ பிரச்சினை காரணமாக இங்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுகின்றனர். இதையடுத்து கச்சத்தீவு பகுதி மீண்டும் இந்தியாவுடன் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பகுதியை புனித இடமாக அறிவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இங்குள்ள ஒரே கட்டிடமான புனித அந்தோணியர் ஆலயத்தை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆலயத்துக்கு ராமநாதபுரம் மற்றும் இலங்கையின் மன்னார் பகுதியில் இருந்து ஆட்கள் வந்து செல்கின்றனர். மற்ற நேரங்களில் இந்த தீவு மீனவர்கள் வலையை காயப்போடும் ஒரு இடமாகவே இருந்து வருகிறது.

நன்றி:தட்ஸ் தமிழ்

கருணாநிதி எச்சரிக்கைக் கடிதம் - பிடித்த வரிகள்

நான் ஆட்சிப் பொறுப்பிலோ-பதவிப் பொறுப்பிலோ இருந்து புரிந்த சாதனைகளை விட - அவை என் புகழ் பாடும் கல்வெட்டுகள் என்பதை விட - நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.உள்ளார்.

இது குறித்து கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:
அடித்தட்டு மக்களையும், விவசாயப்பெருங்குடி மக்களையும், நடுத்தர மக்களையும்-அவர்களுள் குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிட மக்கள் ஆகியோரும் அணி அணியாகச்சேர்ந்து திராவிடர் கழகம் திக்கெட்டும் கொள்கைபரப்பிய அந்தக் கால கட்டத்தில், 1949-ம் ஆண்டில் பிரளயம் ஒன்று வந்தது போல் இயக்கத்தில் ஒரு பிளவு வந்தது.

பெரியார் தலைமையில் திராவிடர் கழகமும், அண்ணாவின் வழி காட்டுதலில் திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட தமிழ் மக்களுக்கு இரட்டைக் குழல் துப்பாக்கியாக அமைந்து-சமுதாய முற்போக்குப் பணியை; திராவிடர் கழகமும் - சமுதாயம் முற்போக்கு அடைய அரசியல் துணையும் தேவையென்ற வகையில்; திராவிட முன்னேற்றக் கழகமும்-நிலைகள் எடுத்து இயங்கின.

திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் சிந்தனையோட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை லட்சியங்களையும்-சாதி சமய வேறுபாடற்றதுமான சமுதாய நலத் திட்டங்களை சட்டங்களாக்குவதற்கும்-எல்லோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும்-திராவிடர் கழகத்தின் பிரச்சாரமெனும் பெரும் தொண்டு ஒரு புறம் இருந்தாலும், அந்தத் தொண்டினைச் செயல்வடிவம் கொடுத்து சட்ட ரீதியாக ஆக்குவதற்கு தி.மு.கழகம் ஆட்சி மன்றங்களுக்கு சென்றால் என்ன என்ற கேள்வியெழுந்து அது விரிவாக கழகத்தின் அமைப்புகளிலே விவாதிக்கப்பட்ட போது தான் 1956-ம் ஆண்டு திருச்சியில் தி.மு.க. மாநில மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் குழுமியிருக்கிற கழகத்தினரிடத்தில் நாம் ஆட்சி மன்றங்களுக்குச் செல்லலாமா? வேண்டாமா? என்பதை வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்வோம் என்று அண்ணா கூறியதற்கிணங்க அந்த மாநாட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மிகப் பெரும்பாலான வாக்குகள் தி.மு.க.; தனது லட்சியங்களையும் சமூக முன்னேற்றத்திற்கான கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு தேர்தலில் நின்று ஆட்சி மன்றங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற அளவில் தேர்தலுக்கு நிற்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துப்படி தேர்தலிலே நின்று வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பிலும் அமர்ந்த காரணத்தால் தான் பெண் உரிமைக்கான தீர்மானங்களைப் போல-புரட்சிகரமான தீர்மானங்களை-சட்டங்களாக ஆக்க முடிந்தது என்கிற போது-அரசியல்-தேர்தல்-ஆட்சிப் பொறுப்பு- இவை சமுதாய முன்னேற்றத்திற்கானதும், சமத்துவ நெறிகளைக் கடைப்பிடிக்கக் கூடியதுமான தீர்மானங்களுக்கு உயிர் கொடுக்கும் சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.

உடன்பிறப்பே, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அண்ணா இல்லத்தில் மாடி தாழ்வாரத்தில் அண்ணாவும், நாவலர் நெடுஞ்செழியனும், நானும், பேராசிரியர் அன்பழகனாரும், அமைப்புச் செயலாளர் என்.வி. நடராசனும் மற்றும் கழக முன்னணியினரும் ஆவலோடு அமர்ந்திருக்கிறோம். எதற்காக அந்த ஆவல் தெரியுமா?

1967-ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அன்று பிற்பகலில் இருந்து வானொலி மூலமாக வெளியிடப்பட்டன. பிற்பகல் 3 மணி அளவில் மொத்தம் எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 50 தொகுதிகளில் தி.மு. கழகம் வெற்றி பெற்றது என்று வானொலி அறிவித்தது. அடுத்து எந்த தொகுதி, யாருக்கு வெற்றி என்று அறிவதிலே தான் எங்களுடைய கவனம் எல்லாம் இருந்தது. 50 என்ற எண்ணிக்கைக்கு பிறகு 60, 70, 80, 100 என்று கழக வேட்பாளர்களின் வெற்றிச் செய்திகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அண்ணாவோடு அமர்ந்திருந்த எங்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. நுங்கம்பாக்கம் தெருக்களில் எல்லாம் கழகத்தினர் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்தனர். 100 பேர் வெற்றி என்றிருந்த கணக்கு- 101 என்றும், 102 என்றும் பெருகத் தொடங்கியது.

எல்லோருடைய முகத்திலும் "பளீர்'' சிரிப்பு. அண்ணா முகம் மாத்திரம் வாடியிருந்தது. நாங்கள் கேட்டோம் அண்ணாவைப் பார்த்து. "என்ன அண்ணா? வெற்றி செய்திகள் வரவர நாங்கள் எல்லாம் மகிழ்ந்து கொண்டாடுகிறோம். நீங்கள் மாத்திரம் சோகமாக இருக்கிறீர்களே'' என்று கேட்டோம். அதற்கு அண்ணா சற்று தழுதழுத்த குரலிலே சொன்னார். "நாம் பெற்ற வெற்றி 100 பேர் என்ற அளவில் நின்றிருந்தால் ஒரு பலமான எதிர்க்கட்சியாக இருந்து- சட்டமன்றத்திலே செயல்பட்டு-மேலும் நம்முடைய கழகத்தை வலிவும் பொலிவும் உள்ளதாக ஆக்கியிருக்கலாம். 100-க்கு மேல் போய் விட்டது. ஆட்சி வந்து விட்டால் கழகத்தை எப்படி காப்பாற்ற போகிறோமோ என்ற சிந்தனை தான் என் சோகத்திற்குக் காரணம்'' என்று சொன்னார்.

எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது அண்ணாவின் நிலை. பரிசு சீட்டில் திடீரென்று ஆயிரமோ, பத்தாயிரமோ கிடைத்தால்-அது கிடைத்தவன் எப்படி துள்ளிக் குதித்து என்னென்ன செலவு செய்யலாம் என்று "டாம்பீகமாக'' கனவுகளைக் காண்பானோ-அது போன்று கழகமும் இருந்து விடக் கூடாதே என்பது தான் அண்ணாவுக்கு ஏற்பட்ட கவலை. அந்தக் கவலை அண்ணாவிற்கு ஏற்படாமல் நாங்கள் எல்லாம் துணை நிற்போம் என்று அவருக்கு உறுதி அளித்த பிறகு தான் 1967-ல் கிடைத்த அந்த வெற்றி மலரின் இதழை முகர்ந்து பார்க்க முனைந்தார்.

அவர் அன்று அடைந்த கவலையின் எதிரொலி போல- சில மாதங்களுக்கெல்லாம் தஞ்சை கீழ்வெண்மணியில் நடைபெற்ற நிகழ்ச்சி அமைந்து அவர் கண்களைக் குளமாக்கியது. உடனடியாக அங்கே செல்லுமாறு அண்ணா என்னையும், அமைச்சராக இருந்த சத்தியவாணி முத்துவையும், மன்னையையும் பணித்தார். அதற்கடுத்து-இரண்டாண்டு கால அவருடைய ஆட்சியிலே தான் பஸ் தொழிலாளர்கள்-மாணவர்கள் கலவரம். மாணவர் விடுதிக்கு அண்ணாவே நேராகச் சென்றார். என்னையும், அமைச்சர் கோவிந்தசாமியையும் கிளர்ச்சி நடக்கும் இடத்திற்கே அனுப்பினார். அமைதியை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும், அவர் பட்டபாடுகளும் இன்றைக்கும் என் கண் முன்னால் காட்சிகளாக நிற்கின்றன.

இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு- அவரை நம்மிடமிருந்து பிரிக்க யாராலும் இயலாது என்று நாம் இறுமாந்திருந்த நேரத்தில்-"இதோ, நான் இருக்கிறேன், அந்தக் காரியத்தைச் செய்ய'' என்று ஒரு கொடிய நோய் அவரைப் பற்றிக் கொண்டு - உள்ளத்தால் அல்ல, உடலால் அவரை நம்மிடமிருந்து பிரித்தது.

அவருக்குப் பிறகு அவர் ஏற்றிருந்த பொறுப்பு என் தோளில் சுமத்தப்பட்டது. அந்தப் பொறுப்பை ஏற்கும்போதும் சரி, இன்றைக்கும் சரி-அதன் பின் தேர்தல் முடிவுகள் வரும்போதெல்லாம் அண்ணா சொன்னாரே- "நாம் பெற்ற வெற்றி 100 பேர் என்ற அளவில் நின்றிருந்தால் ஒரு பலமான எதிர்க் கட்சியாக இருந்து-சட்டமன்றத்திலே செயல்பட்டு-மேலும் நம்முடைய கழகத்தை வலிவும் பொலிவும் உள்ளதாக ஆக்கியிருக்கலாம். 100-க்கு மேல் போய் விட்டது. ஆட்சி வந்து விட்டால் கழகத்தை எப்படி காப்பாற்ற போகிறோமோ என்ற சிந்தனை தான் என் சோகத்திற்குக் காரணம்''- என்ற அந்த வாசகம் தான் என் இதயத்தின் அடித்தளத்தில் பதிந்து என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

அண்ணாவிற்குப் பிறகு- அவர் வழியில் ஆட்சி நடத்தி வந்த நான்-முதல் சோதனையாக சென்னை மாநகராட்சி மன்றத்தில் "மஸ்டர் ரோல்'' என்ற ஒரு பயங்கரமான பூதத்தைச் சந்தித்து- அதை விரட்டியடிக்க வேண்டிய நிலையில் ஆட்சி சக்கரத்தை சுழற்ற வேண்டியவன் ஆனேன்.

சட்டமன்றத்தில் ஒரு நாள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சென்னை மாநகராட்சி மன்றத்தில் "மஸ்டர் ரோல்'' ஊழல் என்று ஆரம்பித்தது தான் தாமதம் - நான் உடனே எழுந்து "எனக்கு அந்த ஊழலைப் பற்றித் தெரியும்;'' என்று கூறியதோடு-அதிலே ஈடுபட்டவர்கள் யார் யார் என்பதும்-அவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் அவர்களைக் கொட்டியே தீரும் என்பதையும் எடுத்துரைத்து-நானே அப்போதே மேலும் அறிவித்தேன்.

சென்னை மாநகராட்சி மன்றம் உடனடியாகக் கலைக்கப்படும்-மஸ்டர் ரோல் ஊழலில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் - எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - அவர்கள் ஆளுங்கட்சி ஆனாலும், எதிர்க் கட்சி ஆனாலும்- என் ஆருயிர் நண்பர் ஆனாலும் - அல்லாதவரானாலும் தண்டிக்கப்படுவார்கள் - என்றுரைத்தேன்.

அதற்கேற்ப மாநகராட்சி மன்றத்தில் மேயராக இருந்தவர்கள், முக்கிய புள்ளிகளாக இருந்த உறுப்பினர்கள் -பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 25 பேர் அந்த ஊழலில் சிக்கியவர்கள் அன்று கண்டு பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கூண்டிலே ஏற்றப்பட்டனர். இந்தப் பாரபட்சமற்ற நடவடிக்கைகளை புகழ்ந்து அந்த வழக்கை நடத்திய ஒரு பெரிய போலீஸ் அதிகாரி பின்னாளில் ஒரு பத்திரிகையில் நான் தயவு தாட்சண்யமின்றி எடுத்த நடவடிக்கையை பாராட்டி எழுதினார்.

அதைப் போல தஞ்சை கூட்டுறவு மத்திய வங்கியில் என்னுடைய ஆருயிர் நண்பர், இளமைக்கால நண்பர், வழக்கறிஞர், கழகத்தின் அந்தப் பகுதியைக் கட்டிக் காத்த தூண் போன்றவர் கையாடல் செய்தார் என்ற குற்றச்சாட்டை விசாரித்து அவரை கைது செய்யவும், அவருடைய வழக்கறிஞர் பதவியே பறிபோகவுமான நிலை நான் எடுத்த நடவடிக்கையால் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

நான் ஆட்சிப் பொறுப்பிலோ-பதவிப் பொறுப்பிலோ இருந்து புரிந்த சாதனைகளை விட - அவை என் புகழ் பாடும் கல்வெட்டுகள் என்பதை விட - நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்பது தான் என் சாதனைகளை விளக்கும் கல் வெட்டுகளை விட - உயர்ந்த கல் வெட்டாகும்.

இப்போது பதவிகளில் இருப்போரும்-பதவி பெற விழைவோரும்- யார் தலைமையிலே இயங்குகிற இயக்கத்தின் கீழ் நாம் பணி புரிய வேண்டும் என்பதை நினைவிலே அழுத்தமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் தொடக்க காலத்திலிருந்து இன்றைக்கும் தொடர் வெற்றி பெற தொண்டூழியம் செய்ய தோள் தட்டிப் புறப்படும் கழகத்தினர் அனைவருக்கும் ஒரு மானசீக அறிவுரையாகவே இந்த மடல் தீட்டியுள்ளேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Friday, March 20, 2009

வாழ்க்கைப் பயணத்தில்...!

ஆழ்ந்து படிக்கும்
ஐம்பது வயது
ஐரோப்பிய ஆடவர்

குறுந்தகவலில்
குறுகுறுப்பு
எழுத்து மீட்டலில்
புன்னகை பரிமாற்றத்துடன்
மஞ்சள் இளம் சிட்டு

கையடக்க விளையாட்டு
நிலையத்தில்
மெய் மறந்த
பதினெட்டு வயது மொட்டு
இலக்கை நோக்கி
ஐந்து அங்குலத் திரையில்

இந்த வேலை கிடைத்துவிடும்
நம்பிக்கையில்
சான்றிதழ்களை அடுக்கும்
இளைஞன்

அவசர கதியில்
ஆங்கில நாளிதழை
புரட்டும்
சீன ஆடவர்

இரவு வேலை செய்யும்
இளைஞனிடம்
இரக்கம் காட்டாத உறக்கம்

கைப்பையை நோட்டமிட்டு
ஒப்பனைப் பெட்டியை
ஒய்யாரமாய் எடுத்து
கூர்மையான கண்களின் இமை
தீட்டுகிறாள் இன்னும்
வண்ணமாய்
வாயைக் கூட
விட்டு வைக்கவில்லை -இந்த
வன தேவதை

தொடருந்து நிலையத்தில்
பயண அட்டை ஏற்றும்
இடத்திற்கு அருகில்
காத்திருக்கும் காதலியை
சந்திக்க
படியில்லாத தொடருந்தில்
தொலைபேசியில்
தொங்கிக் கொண்டு

பொதுப் போக்குவரத்தில்
போக்கு வரத்து தெரியாமல்
சிற்றின்பக் கடலில்
சில்மிசத்துடன்
தோணியாய்
வருடிக்கொண்டே
வடிகாலாக்கும்
வண்ணமிகு இணை

வேலை முடித்து விட்டு
வேகமாய் வந்து
அவசர கதியில்
நாளிதழ் வாங்கி,
சுருட்டி வைத்துகொண்டு
தொடருந்தில் ஏறி
குளிரூட்டிக்குள் வியர்வையைத்
தணிக்கும் தமிழகத்து இளைஞன்

பிலிப்பைன்ஸ் பெண்ணிடம்
மணந்து கொள்வதாய்
சாளரமில்லாத தொடருந்தில்
வாக்குறுதிகளை அள்ளி வீசும்
வங்க தேசத்து இளைஞன்

அறிவிப்புகளை அச்சு பிசகாமல்
திரும்பச் சொல்லும்
ஐந்து வயது குழந்தை

செல்பேசியில்
தொடர்ந்து கதைத்த இளைஞன்
தவறவிட்ட நிறுத்தத்தை அடைய
அடுத்தத் தொடருந்தைத் தேடி
அவசர கோலத்தில்

பிராமின் இருக்கைப்பட்டையில்
சிறை பட்டு திமிறி அழும்
குழந்தையை
ஆப்பாட்டும் தாய்

எப்போது நிறுத்தம் போய்
சேரப்போகிறோம்
ஏங்கித் துடிக்கும்
வெற்றி விரல்களுடன்
கரிய பற்களும்,
வெளுத்த உதடுகளும்

ஒவ்வொரு நிறுத்தத்திலும்
சாக்கு ஓட்டைகளிலிருந்து
நெல்லிச் சிதறலாய்
உதிர்ந்து கொண்டே வரும் பயணிகள்

முடியாத பயணத்தின்
இறுதியில் ஏறிக்கொண்டார்கள்
புதிய பயணிகள்
உறுதியாக...!

அரசியல் துணுக்குகள் = சாக்கடைப் புழுக்கள் -1

தமிழின உணர்வாளர்கள்!?(அரசியல் தலைவர்கள் மட்டும்)

ஈழத்தமிழர்களுக்காக
உயிரிழக்கும்
ஒவ்வொரு தாய்த்தமிழகத்து
தமிழனின் உயிரும்
விலை மதிப்பற்றது
இருப்பினும்
அவர்கள் ஏழைகள்
ஒரு விலை
வைத்துக் கொடுக்கிறோம்
தேர்தல் வந்துவிட்டால்
ஒரு பணக்காரக் கட்சியிடம்
நாங்கள்
விலை போய் விடுவோம்!

முதுகெலும்பைத் தேடி

எனக்கு முதுகெலும்பில்லை
சொல்கிறார்கள்
நான் நம்பவில்லை
தேடினேன்
தேடிக்கொண்டே இருந்தேன்
நான் வெறுக்கும்
ராமச்சந்திரா மருத்துவச் சாலைக்குக் கூட
சென்று தேடினேன்
இன்னும் முதுகெலும்பில்லை
என்றே சொல்கிறார்கள்
21 மருத்துவர்(கூட்டுத் தொகை மூன்று) கண்காணிப்பில்
அறுவைச்சிகிச்சை செய்து கொண்டேன்
எனக்கும் மருத்துவர்களுக்கும் தெரிவது
ஏன் மக்களுக்குத் தெரியவில்லை என்று
எனக்குத் தெரியவில்லை!


ரிங் மாஸ்டர்

நான் நடித்து
வேலை வாங்கியதில்லை
ஆனால்,
அடித்து வேலை வாங்கியிருக்கிறேன்
அது பிடித்துப் போய் தான்
என்னிடம்
பொதுவுடைமை வாதிகள்
புல்லரித்துப் போயிருக்கிறார்கள்
தொழிற்சங்க வாதிகளும்
தொங்குகிறார்கள்
நான் என்ன செய்வது
தொங்கல் தாத்தாவின் (எஸ்.டி.எஸ்)
இடத்தை நிரப்ப
ஆள் வேண்டாமா?


உதிர்ந்த ரோமங்கள்

நான், எனது கட்சியை விட்டு
பிரிந்து சென்றவர்களை
உதிர்ந்த ரோமங்கள்
என்று கண்ணியமாக
அழைப்பதுண்டு
அவர்களைப் போன்று
விரசமாக உதிர்ந்த மயிர்கள் என்று
அழைக்க நா கூசுகிறது


வாய்ஸ் கிடைக்குமா?

நான் என்றால்
ரசினி அவர்களைப் போல்
உதடுகள் ஒட்டாது (இவ்வளவு கேட்டும் ஒரு குரல் கொடுக்க மாட்டேனுட்டார்)
நாம் என்றால்
தம்பி கமலகாசனைப் போல
உதடுகள் ஒட்டும்.

பி.கு :)கலைமாமணி குடுத்தாலும் ஒட்டாது போலிருக்கே! முன்னமே தெரிஞ்சிருந்தா மனோரமாவுக்கு கலைமாரமாமணி விருது உருவாக்கிக் கொடுத்திருப்பேனே!


அம்மாவின் ஆணை

நான் வெ.கொ அல்ல
அவர் ஆளும் கட்சியின்
அனல் கக்கும் பேச்சாளர்
நான் வை.கோ
அம்மாவிற்கு அடிபணிந்து
பாத பூசையில்
அனலைக் கக்க முடியாமல்
கரிதாரம்
பூசிக்கொண்டிருக்கிறேன்


மதில் மேல் பூனை

நான் பால் குடிப்பதில்லை
தேர்தல் அறிவித்தாலும்
கூட்டணி வைக்க
அடம் பிடிப்பேன்
தனியாக நிற்கும் தைரியம்
எனக்கு வந்ததில்லை, வராது
என்னை அழைப்பார்கள்
பசையுள்ளவர்கள்
நம்பிக்கை இருக்கிறது
ஈரம், காரம் எல்லாம்
நான் பார்ப்பதில்லை
பாரம் நிறைவாய் வந்தால்
சோரம் போய் விடுவேன்


காகிதச் சிறுத்தை

தேர்தல் வந்து விட்டால்
சேதாரம் எங்களுக்கு
கூலி எங்கள் கூட்டணி தலைமைக்கு
வேண்டா வெறுப்பாக நிக்கிறேன்
இதயத்தில் இடம் கொடுத்தாலும்
ஏற்றுக் கொள்வேன்
இல்லையென்றால் தேசிய
பாதுக்காப்பின் மீது
அவர்களுக்கு அக்கறை வந்துவிடும்.
அதனால் நானும்
தேர்தல் மழையில
இந்த கூட்டணி கொட்டகைக்குள்
ஒழுகுனாலும்
ஒட்டிக்கிறேன்!


நாடா தொகுதி

நான் தொகுதிகளை
நாடியதில்லை
நாடா தொகுதிகளை
எனக்கு
அள்ளித்தரும் பா.. வை
இன்று முதல்
பாசக்கார சனங்களின் கட்சி
என்று அழைக்கச் சொல்லியிருக்கிறேன்
எங்கள் கட்சியில்
சித்தி இருப்பதால்(புத்தி இருக்கா சாமி)
விநாயக பெருமானின்(கணேசன்)
அனுக்கிரகம் உண்டு என்று
பா.. சொல்கிறது.

Thursday, March 19, 2009

இலக்கியவாதியுடன் சந்திப்பு...!

இலக்கிய வாதி கேட்டார்
என்ன செய்கிறீர்கள்?

வேலை நேரம் போக, தமிழார்வத்தால்
படிக்கிறேன்
அவ்வப்போது எழுதுகிறேன் என்றேன்

தாங்கள் எழுதுவது மகிழ்ச்சி தருகிறது
சொன்னார்கள்

பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களின்
பெயர்களைக் குறிப்பிட்டு, வாசித்திருக்கிறீர்களா?
கேட்டார்கள்

ஒரு சில தவிர,
இல்லை என்றேன்

ஆங்கிலக் கவிதை ஒற்றை
தமிழில் குறிப்பிட்டு,
நன்று என்றார்கள்

படித்ததில்லை
என்றேன்

பிரபலமில்லாத ஒரு கவிஞரின்
கவிதைத் தொகுப்பைப் பற்றி
கேட்டார்கள்

தெரியாது
என்றேன்

பின் நவீனத்துவம் தெரியுமா?
கேட்டார்கள்

புரிதல் இருக்கிறது
சொன்னேன்

முறைப்படி தமிழ் கற்றவரா நீங்கள்?
கேட்டார்கள்

இல்லை
பள்ளியில் படித்ததோடு சரி என்றேன்

நான் எழுதியவற்றை படிக்கச் சொன்னேன்

மூடி வைத்து விட்டு பின்னர்
படிப்பதாகச் சொன்னார்கள்

படித்தீர்களா? தொலைபேசியில்
கேட்டேன்

இன்னும் படிக்கவில்லை
என்றார்கள்

நிறைவாக,
நீங்கள் நிறைய வாசியுங்கள்
சொன்னார்கள்


Wednesday, March 18, 2009

ஆணாதிக்க சொற்களுக்கு ஆப்பு!

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு, திருமதி உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண், பெண் பேதத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இந்த வார்த்தைகளை இனிமேல் உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம பாலின மொழி என்ற தலைப்பில் கையேடு ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், பெண் உறுப்பினர்களை முழுப் பெயரையும் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என முக்கியமாக கூறப்பட்டுள்ளது.

மேலும், 'sportsmen' என்ற வார்த்தைக்குப் பதில் இனிமேல், 'athletes' என்று அழைக்க வேண்டும். அதேபோல அரசியல்வாதிகளை குறிப்பிடுவதாக இருந்தால், 'statesmen' என்ற வார்த்தைக்குப் பதில் 'political leaders' எனக் கூப்பிட வேண்டுமாம்.

அதேபோல 'man-made' என்ற பதத்திற்குப் பதில் 'synthetic' அல்லது 'artificial' என்று கூற வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், fireman, airhostess, headmaster, policeman, salesman, manageress, cinema usherette, male nurse ஆகிய பதங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 'waiter', 'waitress' ஆகிய பதங்களுக்கு பொதுவான வார்த்தை இந்த கையேட்டில் பரிந்துரைக்கப்படவில்லை.

பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஸ்டிராஸ்பர்க் நகரங்களில் நடந்த நிகழ்ச்சியி்ல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 785 உறுப்பினர்களுக்கும் இந்த கையேட்டை, நாடாளுமன்ற செயலாளர் ஹரோல்ட் ரோமர் வழங்கினார்.

இந்த புதிய உத்தரவுக்கு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. ஸ்டுருவான் ஸ்டீவன்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எங்களது பாஷை ஆங்கிலம். அதில் எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று எங்களுக்கே கற்றுத் தருகிறார்கள். இது முட்டாள்தனமாக இருக்கிறது என்றார்.

அதேபோல பிலிப் பிராட்பார்ன் என்ற எம்.பி, மக்களின் வரிப்பணத்தை வீணடித்து விட்டனர். எனது பாஷைய எனது இஷ்டப்படிதான் நான் பேசுவேன். இதில் உள்ள ஒரு மாற்றத்தைக் கூட நான் பின்பற்ற மாட்டேன். எனது பாஷையை எப்படி பேச வேண்டும் என எனக்கு யாரும் ஆலோசனை சொல்ல முடியாது என்றார் காட்டமாக.

இதை விட முக்கியமாக மேடம் என்ற சொல்லைப் பயன்படுத்தவும் இந்த கையேடு தடை செய்கிறது.

மின்வெட்டு அமைச்சரின் சொல்வெட்டு சொலவடை



மூக்கறுந்து போன மூளி- அலங்காரி- நாக்கறுந்து தொங்குகின்ற நரி-நாலாந்தரப் பெண்-மகுடம் பறி கொடுத்த மாயராணி- செப்படி வித்தை மாமி- மலம்- வேஷக்காரி- தெருப்பொறுக்கி- நாய்க்கொழுப்பு- பூதகி- நாய்- திமிங்கலம் போன்ற வார்த்தைகளால் ஜெயலலிதாவை முதல்வர் கருணாநிதி விமர்சித்தே இல்லை. இவையெல்லாம் ஜெயலலிதாவே கூறிக்கொண்டுள்ள ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா 14ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வழக்கறிஞர்கள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி கேள்வி கேட்டதாகவும், அதற்கெல்லாம் முதல்வர் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

மின்வெட்டு பிரச்சினை குறித்து ஜெயலலிதா எழுதாத நாள் இல்லை. அமைச்சர் என்ற நிலையில் பலமுறை அதற்கெல்லாம் நான் விளக்கமளித்துவிட்டேன். அதையெல்லாம் படிக்காமல் பதில் அளிக்கவில்லை என்கிறார் ஜெயலலிதா. இதோ விளக்கமான பதில்:

ஜெயலலிதா அறிக்கையில் மின்சார உற்பத்தியை பெருக்க கழக அரசு எதுவும் செய்யவில்லை என்றும், மின்துறை அமைச்சர், முதல்வர் கருணாநிதிக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருப்பதாகவும் தனக்கே உரிய 'அரசியல் நாகரீகத்தோடு' சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து படிக்க...

நன்றி: தட்ஸ் தமிழ்

Monday, March 16, 2009

நாங்கள் இனமானத் தலைவர்கள்


நாங்கள் இனமானத் தலைவர்கள்


மொழிப்போர்
தியாகிகள் நாங்கள்

இனமான உணர்வு கொண்டவர்கள்

மொழியுணர்வை ஊட்டி
வாழ்ந்து கொண்டிப்பவர்கள்

பொதுவுடைமை நெறி போற்றி
பொதுவுடைமையில் வாழ்கிறோம்

அடைந்தால் திராவிட நாடு
இல்லையேல் சுடு காடு
எங்கள் கொள்கையாக இருந்தது

ஈழ மக்கள்
எங்கள் தொப்புள் கொடி உறவு

தனி ஈழமே
எங்கள் கொள்கை

ஈழத்தில் எத்தனை உயிர் போனாலும்
கண்ணீர் வடிக்கிறோம், கதறுகிறோம்
கவிதைகளும் எழுதுகிறோம்

மேடைதோறும்
வாய் கிழிய, வயிறெரிய,
நெஞ்சு வலிக்கப் பேசுகிறோம்

அனைத்துலகுக்குத் தெரியாமல்
அணைத்து வைக்கிறோம்

வெளி உலகுக்குத் தெரியாமல்
வீரியப்படுகிறோம்

வேற்று மொழிக்காரர்களிடம்
வெளிப்படுத்தக் கூசுகிறோம்

எங்கள் இருப்பைக் காட்டி
இருப்பு வைத்துக் கொள்கிறோம்

இன்னுயிர் நீத்த இனமான உறவுகளை
ஓடோடிப்போய் பார்த்துக் கதறுகிறோம்

பேருந்து உடைப்பதில் இருந்து
பாடை வரை செய்கிறோம்

ஈழத்தில் பட்டினிச் சாவு
நாங்கள் பசியாறிக் கொள்கிறோம்

கூட்டணி தர்மம் செய்கிறோம்

தேர்தல் வந்துவிட்டது
எங்கள் கொள்கைகளை கொஞ்சம்
மூட்டை கட்டி வைக்கிறோம்
பா(வா)டைக்குள்
நாங்கள் நுழைந்து விடவில்லை

நுழைந்தது எங்கள்
திராவிடமும், இனமான உணர்வும் மட்டுமே...!

Monday, March 9, 2009

புரட்சித்தலைவி அம்மா - இது எங்கள் கனவா? தாங்கள் தானா சொல்கிறீர்கள்?




இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற 'தமிழர் நாடு' வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜெயலலிதா பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். கடந்த ஆண்டு இந்திய அரசு ராணுவ உதவி செய்வதாகவும், ஆயுதங்கள் வழங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன. இதை மத்திய அரசு மறுக்கவில்லை. இந்திய பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் இலங்கை சென்றதாகவும் கூறப்பட்டது. அதையும் மத்திய அரசு மறுக்கவில்லை, திமுகவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மத்தியில் அங்கம் வகிக்கும் திமுக மந்திரிகள் ராஜினாமா செய்வதாக மிரட்டிக் கூட பார்க்கவில்லை. இதுபற்றி கேள்வி கேட்ட என்னை கருணாநிதி கேலி செய்கிறார். இது முழுக்க முழுக்க மத்திய அரசு சம்பந்தப்பட்டது. இது கூட ஜெயலலிதாவுக்கு தெரியவில்லையே என்றார்.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு ஹரியானா மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிநவீன சாதனங்களை வைத்து இலங்கை வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்திய அரசு ஒப்புதலுடன் தான் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இலங்கை இனப் படுகொலை மத்திய அரசின் முழு ஒத்துழைப்போடு நடக்கிறது. இந்த இனப் படுகொலையில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும் பெரும் பங்குண்டு. சட்டசபையில் தீர்மானம் போட்டதாக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி. தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்கிறார். கருணாநிதியின் பாசாங்கு தீர்மானங்களை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?.

ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு ராணுவ உதவிகள் வழங்குவது வழக்கமான நடைமுறைதான். ஆனால் இந்தியா வழங்கும் ஆயுத உதவியும், பயிற்சியும் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இலங்கைக்கு வழங்கப்படும் முழு ஆயுத பலத்தையும் அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். இலங்கை ராணுவம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறலாம். ஆனால் அங்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்த்தால் புலிகள், போராளிகள் தவிர அப்பாவி மக்களும் பலியாவது தெரிய வருகிறது..

இந்தியா வழங்கிய துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அப்பாவி தமிழர்களை கொலை செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இலங்கைப் பிரச்சினையில் திமுக அரசும், மத்திய அரசும் செயல்பட்டு வரும் விதத்தைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

இலங்கையில் அவதிப்பட்டு வரும், அல்லல்பட்டு வரும் அங்குள்ள தமிழர்கள் குறித்து கருணாநிதிக்கு அக்கறை இல்லை. இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என்று அவரிடம் கேட்டால், மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு மாநில முதல்வரால், என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார் கருணாநிதி.

தமிழகத்தைச் சேர்ந்த 10 மத்திய மந்திரிகள் உள்ளனர். அவர்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் என்ற பிரம்மாஸ்திரத்தை கருணாநிதி பயன்படுத்தமாட்டார். அறிக்கை மட்டும் விடுவார்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம். ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இலங்கை அதிபருடன் நம் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று நான் கருணாநிதிக்கு ஆலோசனை கூறினேன். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்றார். பின்னர் பிரதமரை வற்புறுத்த, மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதையும் செய்யத் தயார் என்று அறிவித்தார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் ராஜினாமா கடிதங்களைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கோ, அல்லது மாநிலங்களவைத் தலைவருக்கோ அக்கடிதங்களை அனுப்பவில்லை. அதற்கு பதிலாக அவர் நிர்ணயித்த கெடுவான கடைசி தேதியை முடிவுக்கு வரவிட்டு, பின்னர் அந்த ராஜினாமா கடிதங்களை தானே கிழித்து போட்டு விட்டார்.

இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கருணாநிதி தலைமையில் நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.

எனவே கருணாநிதியின் முழு ஆசி மற்றும் தூண்டுதலின்பேரில்தான் இருவரும் பேசினர். அதுவே அவர்களை சிக்கலில் மாட்டி விட்டு விட்டது.

பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சீமான் மீண்டும் கைது செய்யப்பட்டார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உண்மையி்ல் சீமான் என்ன மாதிரியெல்லாம் பேசினாரோ அதையே கருணாநிதியும் பேசியுள்ளார். அவர் என்னென்ன வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தினாரோ அதையெல்லாம் கருணாநிதியும் பயன்படுத்தியுள்ளார்.

எந்த வார்த்தைகள் அவர்களை இன்று சிக்கலில் மாட்டிவிட்டதோ, அவை யாவும் கருணாநிதியின் ஆசியும் ஒப்புதலும் பெற்றவை தான்.

ஆனால் சீமானுக்கு மட்டும் சிறைத் தண்டனை. ஆனால் கருணாநிதியோ தலைமை பீடத்தில் அமர்ந்து கொண்டு அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.


இன்று நாம் உண்ணாவிரதம் இருப்பதினால், பசியினால் வாடும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப்போவதில்லை. இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் ஒரு அடையாளமே. இந்த உண்ணாவிரதத்தின் மூலம், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பதையும், இது போன்ற சம்பவங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கிற விதம், தமிழக மக்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது என்பதையும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம்.

ஒரு அசட்டு தைரியத்தில் திமுகவும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்துள்ளன. வரும் தேர்தலில் மக்கள் இந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டப் போகிறார்கள் என்றார் ஜெயலலிதா.

நன்றி: தட்ஸ்தமில்

Sunday, March 8, 2009

ஈழத்தமிழர்கள் - அத்வானியைப் போல் கருத்து கொண்ட அகில இந்தியத் தலைவர் வேறு யார்?



தமிழகத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய திரு அத்வானி, ஈழத்தமிழர்கள் படும் துயரம், இழப்பு எல்லாம் தாய்த்தமிழகத்து மக்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை தான் உணர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அண்மையில் புதுதில்லியில் வைகோ நடத்திய உண்ணா நோன்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்வானி தெரிவித்த கருத்துகள்!

இலங்கையிலும், மலேசியாவிலும் வாழும் தமிழர்களுக்காக கவலைப்படும் தமிழ் மக்களை பாராட்டுகிறேன். இலங்கை தமிழர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு சிந்தித்து கூட பார்க்கவில்லை. தமிழகத்தில் உள்ள மக்கள் தங்களது சகோதரர்கள் படும் துன்பத்தை பார்த்து படும் கவலைகளை என்னால் உணரமுடிகிறது.

தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் டில்லியில் வந்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசு உணர்வே இல்லாமல் செயலாற்றி வருவதாக அப்போதே நான் குற்றம் சாட்டினேன்.

கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாட்டையும், அதற்கு முன் 6 ஆண்டுகால வாஜ்பாய் அரசின் செயல்பாட்டையும் மக்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

இது மன்மோகன்சிங் அரசு அல்ல. சோனியா காந்தியின் அரசு. மன்மோகன்சிங்கிடம் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அதிகாரம் கிடையாது. ஆனால் சோனியாகாந்தியிடம் அதிகாரம் இருக்கிறது. பொறுப்பு இல்லை. எனவே இந்த இரண்டு ஆட்சிகளையும் மக்கள் எடை போட்டு பார்க்க வேண்டும்.

பாஜக, காங்கிரஸ் இல்லாமல் எந்த அரசும் உருப்பட முடியாது. இருதுருவ அரசியல் நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. எனவே மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லை. காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாட்டால் விலைவாசி உயர்ந்துள்ளது.

நமது கவலை!

ஒரு குட்டையில் ஊறின மட்டைகளைவிட(அது துர்நாற்றம் எடுத்து நாளாகிவிட்டது), ஊறாத மட்டை(பா..) பின்னப்படுகிறதா? அல்லது நிறைச்சல் (கவர் பண்ணி ஏமாற்றுகிறார்களா?)பிடிக்கப் படுகிறதா? இவருடைய கூற்றை நம்பலாமா? இவர் ஆட்சிக்கு வந்தால் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுமா? இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும்.






எழுஞாயிறு - திருமாவளவனுடன் சந்திப்பு


படம் அனுப்பிவைத்த கவிஞர் அகரம்.அமுதா அவர்களுக்கு நன்றி

திருமாவளவன், தெரியாத தமிழ் உறவுகள் இவ்வுலகில் உண்டோ? ஆயிரம் துக்கங்களை சுமந்து உணர்ச்சிகளை உள்ளிருத்திய பக்குவப்பட்ட இளைஞர். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர். திருமணமாகாத இளைஞர்.
ஈழத்தில் விழும் ஒவ்வொரு இடியையும் இந்திய நாட்டில் பிறந்ததால், தமிழனாகப் பிறந்ததால், தன் நெஞ்சில் பாரமாகச் சுமந்து கொண்டிருப்பவர். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் முக்கிய பங்காற்றக் கூடியவர்.

ஈழத்தமிழர்களின் துயரத்தைத் தாங்கமுடியாமல், ஆற்றொணாத் துயரத்தால், ஆற்றாமையால், தீக்குளித்து அனுதினமும் உயிர் விட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இன உணர்வாளர்களையும், உணர்ச்சிக் கொந்தளிப்பில் கோபக்கனல் தெறிக்க எரிந்து கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களையும் பார்த்து வேதனையில் வெந்து தனிந்திருப்பவர் திரு திருமாவளவன். அவர் சிங்கை வருகிறார் சந்திக்கலாம் என்று புலவர் பாண்டித்துரை தெரிவித்திருந்தார். போர்க்குணமுள்ள அந்த இளைஞனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருந்தது.

அது இன்று(07.03.2009) நிறைவேறியது. ஏறத்தாழ 35 நிமிட சிற்றுரை நிகழ்த்தினார். பின்னர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மனம் சளைக்காமல், முகம் சுழிக்காமல் பதில் சொல்லும் பாங்கு, சில சர்ச்சைக்குரிய கேள்விகளையும் லாவகமாகக் கையாண்ட விதம், தலைமைத்துவ பண்பு அவரிடம் நிரம்ப இருப்பதாகக் காட்டிக் கொடுத்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள், அது அவரது முகத்தில் தெரிந்தது. சோகமாகவே காணப்பட்டார். நம் உறவுகளின் இழப்பு அவரின் மனசை வெகுவாகப் பாதித்திருக்க வேண்டும்.

தற்போதைய அரசியல் நிலவரத்தை துல்லியமாகப் பகிர்ந்து கொண்ட திரு.திருமாவளவன், அவர் உண்ணா நோன்பிருந்த போது அவரது கட்சிக்காரர்கள் 360 பேர் கைது செய்யப் பாட்டதாகவும், அதில் பத்து பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப் பட்டதாகவும், பலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டிருப்பதாகவும், இந்த செய்தியெல்லாம் வெளி உலகுக்குத் தெரியாமல் இருட்டடிக்கப் படுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசியலில், நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, இதுவரைக்கும் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் அனைவரும் ஏன் தனியாக ஒரு கூட்டணி அமைத்துப் போட்டியிடக் கூடாது? ஏன் கருணாநிதியிடமும், ஜெயலலிதாவிடமும் கூட்டணி வைக்க வேண்டும் என்று கேட்டதற்கு, அதில் உள்ள சிரமங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஈழ ஆதரவு தலைவர்களை ஒரு இடத்தில் கூட்டுவதே மிகப்பெரிய செயற்கரிய செயல் என்பதை அவர் எடுத்துக்காட்டிய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காட்டின. தனது கட்சியினர் நடத்திய கிராமம் தோறும் ஈழ விழிப்புணர்வு நடைபயண முழக்கத்தைப் பற்றி பகிர்ந்தார்.

பல்வேறு கேள்விகளையும், அதற்கு திருமாவளவனின் பதில்களையும் பகிர இயலவில்லை. இருப்பினும், கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த அன்பு உடன்பிறப்பு திரு திருமாவளவனுக்கு நன்றி!

Friday, March 6, 2009

ஐயா சாமி! இலங்கைப் போரை ஒத்தி வைத்தால் ஆகாதா? வேண்டிக்குங்க அன்னையிடம்!!

ஐயகோ! ஐயகோ!! பாருடாய்யா நீலிக் கண்ணீர் வடிக்கிறத!

தேர்தல் நேரத்தில் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டாம். விஷப்பரீட்டையில் ஈடுபடுவதற்கு பதிலாக அதை ஒரு மாதம் ஒத்திவைக்கலாம். இதனால் எந்த நஷ்டமும் வந்து விடாது என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 16 முதல் மே 13 வரை நடைபெறும் என அறிவித்தது. இதே சமயத்தில் ஐபிஎல் சார்பில் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடப்பதாக இருக்கிறது.

இதையடுத்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கேட்டுகொண்டார். ஆனால், தொடரை மொத்தமாக தள்ளிவைக்க முடியாது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன் 48 மணி நேரத்துக்கு போட்டிகள் இல்லாமல் பார்த்து கொள்கிறோம் என ஐபிஎல் தலைவர் லலித் மோடி அறிவித்தார்.

இந்நிலையில் கிரிக்கெட் பிரியரான முதல்வர் கருணாநிதி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் ஐபிஎல் டுவென்டி-20 தொடரை நடத்தும் விஷப்பரீட்சையில் ஈடுபடக் கூடாது. கிரிக்கெட் உலகப் புகழ் பெற்ற விளையாட்டு. அதில் பங்கேற்கும் வீரர்களின் உயிர்கள் மட்டுமல்ல, அதைக் காண வரும் லட்சக்கணக்கான பொதுமக்களின் உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை.

இந்த நேரத்தில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலும் நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் இந்த தொடரை ஒரு மாதத்துக்கு தள்ளி வைத்து நடத்துவதால் எந்த நட்டமும் யாருக்கும் ஏற்பட்டுவிடாது.

அந்தந்த மாநில காவல்துறை தலைவரிடமிருந்து பாதுகாப்புக்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை மந்திரி தெரிவித்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் மாநிலங்கள் மாத்திரமல்ல, இந்திய அளவில் அச்சுறுத்தல் இருக்கும்போது இந்த விஷப் பரிட்சையில் ஈடுபடக்கூடாது என்பதே என் கருத்தாகும்.

நடைபெற்ற பின் வருந்துவதை விட வரும் முன் காப்பதே சால சிறந்ததாகும் என்றார் கருணாநிதி.

ஐயா சாமி! இலங்கைப் போரை ஒத்தி வைத்தால் ஆகாதா? வேண்டிக்குங்க அன்னையிடம்!!


அன்னையும் பிதாவும்(சோனியா+காந்தி) முன்னரி(முன் எச்செரிக்கையுள்ள நரி) தெய்வம்!



கிளம்பிட்டாங்கைய்யா! கிளம்பிட்டாங்கையா!!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலித்தா நேற்று, இலங்கை தமிழர்களுக்காக வரும் 10ம் தேதி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.

10 ம் தேதி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதற்கு போலீசார் அனுமது மறுத்துள்ளதால் உண்ணாவிரத தேதியை மாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் அதிமுக சார்பில் 10-ந் தேதி உண்ணாவிரதம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மேற்படி உண்ணாவிரத அறப்போராட்டம் 9-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வைகோ, தா.பாண்டியன், என்.வரதராஜன் உட்பட பல்வேறு அரசியல் தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் உண்ணாவிரத போராட்டத்தை வரவேற்றுள்ளனர்.

கிளம்பிட்டாங்கைய்யா! கிளம்பிட்டாங்கையா!

இதுக்குத் தானா இத்தனை நாள் காத்திருந்திய!!

கூட்டணி! கூத்தணி!! கூத்தணி!!!

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை