எனக்கு யாரையும் நூறு விழுக்காடு பிடிப்பதில்லை நூறு விழுக்காடு பிடிக்காமலும் இருப்பதில்லை. அப்படி நூறு விழுக்காடு இவரை எனக்குப் பிடிக்கும் என்று சொல்கிறவர்களை, இவர்கள் ஒப்பனையாகத்தான் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியும்.
தலைவர்
எனக்கு பிடித்த தலைவர்கள் இருவரின் மறைவும் இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.
மற்றவர்களைப் பார்ப்போம்.
பிடித்ததும், பிடிக்காததும்
மன்மோகன் சிங் :
பிடித்தது: இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி செயல்பட்டவர்.
பிடிக்காதது: அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறேன் என்று இந்தியாவை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிடம் அடகு வைத்தது. நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சோனியா சொன்னால் தலையாட்டுவது. பேசாம சோள கொல்லையில நின்னா காக்கா, குருவி, நரி எதும் வராது. இரை(றை)யாண்மை மேம்படும். இலங்கை இனப்படுகொலைக்கு பொய் சொல்லிக்கொண்டே ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து அந்த கோர நிகழ்வுகளுக்குக் காரணகர்த்தாவாக இருந்தது.
கருணாநிதி :
பிடித்தது: வசனங்களில் தனது தமிழ் வல்லமையைத் தமிழ் உலகுக்குக் காட்டி தமிழ் மக்களின் இதயத்தில், அண்ணாவின் இரவல் இதயத்துடன் குடிபுகுந்தவர், கட்டுடைக்க முடியாதத் தொண்டர்களைக் கொண்ட கவிஞர்.
பிடிக்காதது: ”அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” அன்றைய முழக்கம், இன்று ”வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது”. கழகம் எனது குடும்பம் என்று சொல்லிச் சொல்லியே தனது குடும்பத்தை கழகமாக்கியது. பெரியார்,அண்ணா என்றால் என்னா என்று கேட்கும் அளவில் அவர்களது கொள்கைகளை மதிப்பது. இனமானக் காவலர் என்று சொல்லிக்கொண்டே ஒர் இனம் அழிக்கப்படும்போது, அதற்கு மத்திய அரசு செய்த எல்லா உதவிகளுக்கும் உறுதுணையாக இருந்தது. தனக்குச் சொந்தமான ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வராமல் இருட்டடிப்பு செய்தது. ஒட்டுமொத்தமாக துடைத்தொழிக்கப்படும் வரை அனைவரையும் பொறுத்திருக்கச் சொன்னது. உண்ணாவிரத நாடகம், மருத்துவச்சாலை நாடகம், ஈழமக்களின் ரணம் ஆறாமல் இருக்கும் போது அம்மக்களையும் சேர்த்துகொண்டு உலகத் தமிழ் மாநாடு நடத்தி ஈழமக்களின் அவலத்தை இருட்டடிக்க முயல்வது. இப்போது செம்மொழி மாநாட்டுக்காக தமிழக அகதிகள் முகாம்களுக்கு தனது சகாக்களை அத்தி பூத்தார்போல் அனுப்பும் நாடகம். இன்னும் நிறைய சொல்ல முடியும்.
ஜெயலலிதா :
பிடித்தது: உறுதியான நிலைப்பாடு, காவிரி நீர் பிரச்சனையில் பிரதமர் நரசிமராவ் தலைமையில் நடந்த முதல்வர்கள் கூட்டத்திலிருந்து கருத்துக்கள் ஒவ்வாதபோது வெளி நடப்பு செய்தது, அதன் பலனாக உடனே காவிரியில் உடனடி நிவாரணமாக தண்ணீர் திறக்க ராவ் உத்தரவிட்டது. தமிழோ,ஆங்கிலமோ ஒரளவுக்குத் தூய்மையாகப் பேசுவது.
பிடிக்காதது: அடைந்தால் தமிழ் நாடு இல்லையேல் கொட நாடு என்கிற உப்பு சப்பில்லா நிலை. கழகம் எனது குடும்பம் என்று சொல்லிச் சொல்லியே கழகத்தை இன்னொரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. தடா,போடா என்ற சட்டங்களைப் பயன்படுத்தி தனக்கு பிடிக்காத தலைவர்களை சிறையில் தள்ளியது. மூத்த தலைவர்களை மண்டியிட வைத்து மாரியாத்தா ஆசி கொடுப்பது போல் நின்றுகொள்வது. தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்று தேர்தல் நேரத்தில் சூளுரைத்துவிட்டு, தேர்தலுக்குப் பின் கொட நாடு பங்களாவில் குடிபுகுந்தது. ஈழமக்களைப் பற்றி தேர்தலுக்கு முன் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசிவிட்டு தேர்தல் முடிந்ததும் அது பற்றி வாய்திறக்காமல் இருப்பது. வளர்ப்பு மகனுக்கு ஆடம்பரமாகத் திருமணம் நடத்தி வைத்தது.
நடிகர்
பிடித்தவர் : கமலகாசன்,நாசர்,ரகுவரன்,பிரகாஷ்ராஜ்,கவுண்டமணி,விவேக்
பிடிக்காதவர் : பிரசாந்த்,ஜெயம் ரவி, சிம்பு,அஜித்
நடிகை
பிடித்தவர் : கே.ஆர்.விஜயா,ஸ்ரீதேவி,நயன்(9)தாரா,திரி(3)சா,தமன்னா(நடிப்பை மட்டும் சொல்லவில்லை)
பிடிக்காதவர் : சந்தியா,பிரியாமணி,மஞ்சுளா,ஸ்ரீபிரியா
பாடகர்
பிடித்தவர் : கே.ஜே.ஜேசுதாஸ்,ஹரிகரன்,டி.எம்.செளந்தர்ராஜன்,கார்த்திக்
பிடிக்காதவர் : அப்படி சொல்வதற்கு யாருமில்லை.
பாடகி
பிடித்தவர் : எஸ் .ஜானகி,சுவர்ணலதா,கவிதா சுப்பிரமணியம், சாதனா சர்க்கம்
பிடிக்காதவர் : அப்படி சொல்வதற்கு யாருமில்லை.
இயக்குநர்
பிடித்தவர் : மணிரத்னம்,பாலா,அமீர்,சீமான்,பாலுமகேந்திரா
பிடிக்காதவர் : ராஜ்கபூர்,இராம நாராயணன்,
கவிஞர்
பிடித்தவர் : வைரமுத்து,பாலா,மு.மேத்தா,சிற்பி,சுரதா,கு.க.சண்முகம்,புகாரி
பிடிக்காதவர் : வைரமுத்து(துரோகிகளைத் தெரிந்தும் வாழ்த்துப்பா பாடியே வாழப் பழகியதற்கு) , மற்ற பின் நவீனத்துவம் என்கிற பெயரில் தன்னுள் இருக்கும் வக்கிரத்தை பொதுவில் வைத்து பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒரு சிலரை.
இசைஅமைப்பாளர்
பிடித்தவர் : ஏ.ஆர்.இரகுமான்,இளையராஜா,வித்யாசாகர்,விஜய் ஆண்டனி,யுவன் சங்கர் ராஜா
பிடிக்காதவர் : யாரையும் பிடிக்காது என்று ஒதுக்கி வைக்கும் நிலையில் குறிப்பிட முடியவில்லை. இளையராஜா போன்ற கொஞ்சம் தலைக்கணம் உள்ளவர்களைப் பிடிப்பதில்லை. தமிழ் பாடகர்களுக்கு வாய்ப்பளிக்காமல் கேரளம்,ஆந்திரா மற்றும் வட இந்தியாவில் பாடகர்களை தேடியதில் கொஞ்சம் வருத்தமும் உண்டு.
எழுத்தாளர்
பிடித்தவர் : சுஜாதா,எஸ்.இராமகிருஷ்ணன்,பட்டுக்கோட்டை பிரபாகர்(எங்க ஊர்க்காரர் ஆச்சே),ஜெயமோகன்(இவர்களது எழுத்து பிடிக்கும். கொள்கை மற்றும் நிலைப்பாடு அல்ல)
பிடிக்காதவர் : சாரு நிவேதிதா(கொள்கை மற்றும் தலைக்கணத்துக்கு)
பேச்சாளர்
பிடித்தவர் : தமிழ்க்குடிமகன்,வைகோ,சுகி சிவம்,சரஸ்வதி இராமனாதன்,தமிழருவி சிவகுமாரன்,தமிழருவி மணியன், இளசை எஸ்.சுந்தரம்,உவமைக் கவிஞர் சுரதா, வலம்புரி ஜான், பேராசிரியர் சோ.சத்தியசீலன், மன்சூர்,டாக்டர் செல்வகணபதி.
பிடிக்காதவர் : அவர்களே, அவர்களே என்று ஆரம்பித்து பேச்சை முடிக்கக் காத்திருக்கும் அரசியல் வியாதிகள். கழகங்களின் தலைமைக் கழக சிறப்புப் பேச்சாளர்களின் விரசமானப் பேச்சு. அதுதான் கழகங்களின் சிறப்பு.
இதே போன்ற பதிவினைத் தொடர நான் அழைக்கும் பதிவர்கள்
1) கோவி.கண்ணன்
2) சஞ்சய் காந்தி
3) ஜோ
4) குழலி
5) முகவை மைந்தன்
அவர்களும் சிறப்பு செய்வார்கள் என்கிற நம்பிக்கையுடன்,
அன்பன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி
”உண்மையைச் சொல்வேன்; நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது எனக்கு”

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)

36 கருத்துக்கள்:
உங்களைப்பற்றியும்.. உங்கள் எண்ணங்களைப்பற்றியும் அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சிங்க....
//”உண்மையைச் சொல்வேன்; நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது எனக்கு”//
நல்லா இருந்த்து, பாட்டும்
//சாரு நிவேதிதா(கொள்கை//
அது என்ன சாரு நிவேதிதாவின் கொள்கை கொஞ்சம் சொல்லுங்களேன் ;)
அன்புடன்
சிங்கை நாதன்
singainathan said...
//சாரு நிவேதிதா(கொள்கை//
அது என்ன சாரு நிவேதிதாவின் கொள்கை கொஞ்சம் சொல்லுங்களேன் ;)
அன்புடன்
சிங்கை நாதன்//
அது நான் செய்த இமாலயத் தவறு.(அதுக்கு கூட தமிழ் நாட்டுல நமக்கு எடுத்துக்காட்டு கிடையாது)
தமிழர் என்கிற இனத்தின் அகரமுதலியில் இருந்து கொள்கை எனும் சொல்லை நீக்கும் வரை போராடுவோம் என்று சூளுரைக்கிறேன்!

நிலைப்பாடு என்று கூட மாற்ற முடியாது. கொள்கையையே தூக்குவது தான் நல்லது. எடுத்துடுறேன்!

விளையாட்டாய் இந்த தொடர் பதிவை எண்ணாமல் பதில்கள் சில தகவல்களோடு தந்து இருக்கிறீர்கள்..பொருப்பா முடித்திருக்கிறீர்கள் தந்த பணியை.... நல்லாயிருக்கு பாரதி....
கலக்கலா சொல்லியிருக்கிங்க தல!
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)
உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.
-:)
அருமையா எழுதிருக்கிங்க...
அருமையான பதில்கள்
அண்ணே ஒரு பிடி பிடிச்சிட்டீங்க
பிரசாந்த், சிம்பு
இந்த இரண்டு பேரை கேட்டாலே ...
உங்க ஸ்டைலில் பதிவு .....!!
அசத்தல்..!
நன்றி ...!;)
ஆ.ஞானசேகரன் said...
உங்களைப்பற்றியும்.. உங்கள் எண்ணங்களைப்பற்றியும் அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சிங்க....
//
நன்றி ஞானம்!
வருகைக்கு!!
ஆ.ஞானசேகரன் said...
உங்களைப்பற்றியும்.. உங்கள் எண்ணங்களைப்பற்றியும் அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சிங்க....
//
நன்றி ஞானம்!
வருகைக்கு!!
அப்பாவி முரு said...
//”உண்மையைச் சொல்வேன்; நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது எனக்கு”//
நல்லா இருந்த்து, பாட்டும்
//
நன்றி முரு!
எந்தப் பாட்டு!!
நான் பாடியதா?
அப்பாவி முரு said...
//”உண்மையைச் சொல்வேன்; நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது எனக்கு”//
நல்லா இருந்த்து, பாட்டும்
//
நன்றி முரு!
எந்தப் பாட்டு!!
நான் பாடியதா?
தமிழரசி said...
விளையாட்டாய் இந்த தொடர் பதிவை எண்ணாமல் பதில்கள் சில தகவல்களோடு தந்து இருக்கிறீர்கள்..பொருப்பா முடித்திருக்கிறீர்கள் தந்த பணியை.... நல்லாயிருக்கு பாரதி....
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிஞர் தமிழ்!

வால்பையன் said...
கலக்கலா சொல்லியிருக்கிங்க தல!
//
நன்றி வால்!
வால்பையன் said...
கலக்கலா சொல்லியிருக்கிங்க தல!
//
நன்றி வால்!
SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)
உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.//
எவ்வளவு தாளிச்சுப் போட்டாலும் அவர்களுக்கு கொழுப்பு கொஞ்சம் நிறைய ஏறுதேயொழிய குறைந்த பாடில்லை.
பதிவுக்கப்புறம் தான் கவனித்தேன் தங்கள் பதிவை....!
நன்றி சஞ்சய்!

ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)
//
நன்றி பித்தன் சுவாமிகள்!
ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)
//
நன்றி பித்தன் சுவாமிகள்!
Mrs.Menagasathia said...
அருமையா எழுதிருக்கிங்க...
//
நன்றி மேனகா சத்யா!
Mrs.Menagasathia said...
அருமையா எழுதிருக்கிங்க...
//
நன்றி மேனகா சத்யா!
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பதில்கள்
//
நன்றி ஸ்டார்ஜன்!
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பதில்கள்
//
நன்றி ஸ்டார்ஜன்!
நசரேயன் said...
அண்ணே ஒரு பிடி பிடிச்சிட்டீங்க
//
அப்படீங்கிறீங்க...!?
நன்றி நசரேயன்!
நசரேயன் said...
அண்ணே ஒரு பிடி பிடிச்சிட்டீங்க
//
அப்படீங்கிறீங்க...!?
நன்றி நசரேயன்!
நட்புடன் ஜமால் said...
பிரசாந்த், சிம்பு
இந்த இரண்டு பேரை கேட்டாலே ...
//
உங்களுக்கும் அவங்க மேல கோவமா?
அவ்வ்வ்வ்!
நன்றி ஜமால் அண்ணே!
நட்புடன் ஜமால் said...
பிரசாந்த், சிம்பு
இந்த இரண்டு பேரை கேட்டாலே ...
//
உங்களுக்கும் அவங்க மேல கோவமா?
அவ்வ்வ்வ்!
நன்றி ஜமால் அண்ணே!
ஜீவன் said...
உங்க ஸ்டைலில் பதிவு .....!!
அசத்தல்..!
நன்றி ...!;)
//
நன்றி ஜீவன்!
ஜீவன் said...
உங்க ஸ்டைலில் பதிவு .....!!
அசத்தல்..!
நன்றி ...!;)
//
நன்றி ஜீவன்!
அன்பான நண்பர் திரு ஜோதி,
எல்லாம் சரிதான் சார், திரு கோவி அவர்களை கூபிட்டீங்க இல்ல, அவரு போடுவதற்குள், அவர் சார்பில் கொஞ்சம், அவருக்கு பிடிக்காதவை சிலது மட்டும்
வீட்டு சமாச்சாரம்:
பிடிக்காதது
குப்பைத்தொட்ட்டி -
அவரு எழுதுவதெல்லாம் கடைசியாக இங்கேதான் போவதால்
வெளி சமாச்சாரம்
காத்தாடி
அவரு உடரதோட மேல போகுதில்ல!
நாட்டு சமாசாரம்:
நல்லது -
கெட்டது நடக்கலைன்னா காரணத்த கண்டுபிடிச்சிட்டேன்னு கண்டபடி விளக்கம் கொடுக்க முடியாதில்ல!
காட்டு சமாசாரம்:
காட்டு கொசு
நீங்களே சொல்லுங்களேன் ஏன் பிடிக்காதுன்னு - சின்ன கிளூ - அதன் கடி பயங்கரமா
இருக்குமாம்!
நன்றி
அருமை
நோ ஐயா,
ஏன் இப்படி?
நோ ஐயா,
ஏன் இப்படி?
T.V.Radhakrishnan said...
அருமை
//
நன்றி டிவிஆர் ஐயா!
T.V.Radhakrishnan said...
அருமை
//
நன்றி டிவிஆர் ஐயா!
மிக ரசித்தேன்.
//எனக்கு பிடித்த தலைவர்கள் இருவரின் மறைவும் இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.
மற்றவர்களைப் பார்ப்போம்.//
//இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி செயல்பட்டவர்.
பிடிக்காதது: அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறேன் என்று இந்தியாவை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிடம் அடகு வைத்தது. நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சோனியா சொன்னால் தலையாட்டுவது. பேசாம சோள கொல்லையில நின்னா காக்கா, குருவி, நரி எதும் வராது. இரை(றை)யாண்மை மேம்படும். இலங்கை இனப்படுகொலைக்கு பொய் சொல்லிக்கொண்டே ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து அந்த கோர நிகழ்வுகளுக்குக் காரணகர்த்தாவாக இருந்தது.//
// ”அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” அன்றைய முழக்கம், இன்று ”வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது”. கழகம் எனது குடும்பம் என்று சொல்லிச் சொல்லியே தனது குடும்பத்தை கழகமாக்கியது. பெரியார்,அண்ணா என்றால் என்னா என்று கேட்கும் அளவில் அவர்களது கொள்கைகளை மதிப்பது. இனமானக் காவலர் என்று சொல்லிக்கொண்டே ஒர் இனம் அழிக்கப்படும்போது, அதற்கு மத்திய அரசு செய்த எல்லா உதவிகளுக்கும் உறுதுணையாக இருந்தது. தனக்குச் சொந்தமான ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வராமல் இருட்டடிப்பு செய்தது. ஒட்டுமொத்தமாக துடைத்தொழிக்கப்படும் வரை அனைவரையும் பொறுத்திருக்கச் சொன்னது. உண்ணாவிரத நாடகம், மருத்துவச்சாலை நாடகம், ஈழமக்களின் ரணம் ஆறாமல் இருக்கும் போது அம்மக்களையும் சேர்த்துகொண்டு உலகத் தமிழ் மாநாடு நடத்தி ஈழமக்களின் அவலத்தை இருட்டடிக்க முயல்வது. இப்போது செம்மொழி மாநாட்டுக்காக தமிழக அகதிகள் முகாம்களுக்கு தனது சகாக்களை அத்தி பூத்தார்போல் அனுப்பும் நாடகம். இன்னும் நிறைய சொல்ல முடியும்//
தங்களின் மனவோட்டம் எனக்கு தங்களின் மீது புதிய மரியாதையை ஏற்படுத்துகிறது. இந்த பதி மனிதர்களையும் புரிந்துக்கொள்ள் உதவுகிறது.
நன்றி...தொடர்க.
அண்ணா தங்களைச் சந்திக்க விரைவில் சிங்கை வருகின்றேன்
:)
சி. கருணாகரசு said...
மிக ரசித்தேன்.
தங்களின் மனவோட்டம் எனக்கு தங்களின் மீது புதிய ம�//
நன்றி நண்பரே!
சி. கருணாகரசு said...
மிக ரசித்தேன்.
தங்களின் மனவோட்டம் எனக்கு தங்களின் மீது புதிய ம�//
நன்றி நண்பரே!
எம்.எம்.அப்துல்லா said...
அண்ணா தங்களைச் சந்திக்க விரைவில் சிங்கை வருகின்றேன்
:)
//
அப்து அண்ணே!
கண்டிப்பாக!!
வாருங்கள் சந்திப்போம்!!!
ஆவலோடு இருக்கிறோம்!
எம்.எம்.அப்துல்லா said...
அண்ணா தங்களைச் சந்திக்க விரைவில் சிங்கை வருகின்றேன்
:)
//
அப்து அண்ணே!
கண்டிப்பாக!!
வாருங்கள் சந்திப்போம்!!!
ஆவலோடு இருக்கிறோம்!
Post a Comment