வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

Tuesday, June 9, 2009

கோவி.கண்ணனும், நையாண்டியும் - சிக்கலின் நான்

முன்னணி பதிவர்களான திரு கோவி.கண்ணன் அவர்களும், திரு நையாண்டி நைனா அவர்களும் இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் என்னையும் மாட்டி விட்டிருக்கிறார்கள். எல்லாம் போட்டு வாங்குறதுக்குன்னு மட்டும் நல்லா தெரியுது.

படிக்கிறவங்க கண்ணுல இரத்தக்கண்ணீர் வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கோவி.கண்ணன் மற்றும் நையாண்டி நைனா என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை!

முன்னணி கலைஞரான கலைஞர் மு.கருணாநிதி போன்றவர்கள் திரு மோகன் கந்தசாமி போன்றவர்களுக்கு செவ்வி வழங்கியிருக்கும் போது என்னுடைய செவ்வி பின்னணி செவ்வியாக மட்டுமே பார்க்கப் படும் என்பது திண்ணம்.

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
இந்தக் கேள்வியெல்லாம் சாதனை பண்ணுனவங்க கிட்ட கேக்கணும். சோதனை பண்ணுறவங்களுக்கிட்ட கேட்கக்கூடாது.
என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்(அவருடைய தமிழ் பற்று). குழந்தையாக இருக்கும் போது என் தாய் சுப்பிரமணிய பாரதி என்றழைத்து மகிழ்ந்தார். பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன். உச்சரிப்புப் பிழை பொருட்பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நல்ல நோக்கத்தில்...! மற்றபடி யாரையும் சோதிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குக் கிடையாது.

2.கடைசியாக அழுதது எப்போது..?
இப்போதெல்லாம் மரத்துப் போன இதயங்களை உடையவர்களைக் கண்டு என் கண்கள் கூட அழ மறுத்துவிடுகின்றன, மனம் மட்டும் அழுகையை நிறுத்தாத போது...!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
கையெழுத்து அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். எழுதும் போது ரசித்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.(கையெழுத்து நல்லா இருந்தா தலைஎழுத்து நல்லா இருக்காது போன்ற உரையாடல்களை நம்புவதில்லை)

4.பிடித்த மதிய உணவு..
எல்லா சைவ உணவுகளையும் விரும்பி சாப்பிடுவேன். பரங்கிக்காய் மட்டும் பிடிக்காது.அசைவ உணவுகளில், நண்டு வறுவல் பிடிக்கும், இறால், விரா மீன், வாளை மீன் பிடிக்கும். மட்டன் பிடிக்கும், நம் தமிழகத்தில் மட்டும் தான். சிங்கையில்ஆட்டுக்கறி( மட்டன்) சாப்பிட அவ்வளவாக பிடிப்பதில்லை. சிங்கையில் ஒரு குறிப்பிட்ட உணவகங்களில் ஆட்டுக்கறி நன்றாக இருக்கும்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்கிற படியால், சீன உணவில் லக்சா, பிஷ் சூப், பிஷ் பால் நூடுல்ஸ் இன்னபிற உணவு வகைகள் பிடித்தமானது.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
என்னைப் பார்த்தவுடன் பழக வேண்டும் போல் இருக்கிறது என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் தான் நானும்...! வாங்க பழகலாம் என்னும் பிளாஸ்டிக் பழக்கம் எனக்கு ஒத்து வராது.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடலும் அருவியும் எங்க வீட்டுக்கு பக்கத்துல இல்லை. எனக்குப் பிடித்தாலும் அதனால் எனக்கு பெரிய பலன் ஒன்றும் இல்லை. சுற்றுலா சென்றால் அருவியில் குளிக்கத்தான் பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..
முகத்தை, கண்ணைப் பார்த்து பேசுவதே முறையாகும். அதுதான் எனக்கும் பிடிக்கும். மண்ணைப் பார்த்து பேசும் பெண்ணானாலும் கண்ணைப் பார்க்கவே விரும்புவேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது: ஓரளவுக்கு உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பது, முடிந்தவரை அதைக் காப்பாற்றி வருவது.
எழும்பூரில் காத்திருப்பவரிடம், நான் இந்தா வந்துடுவேன் சைதாபேட்டை வந்துட்டேன் என்று தாம்பரத்தில் இருந்து கொண்டு சொல்வது எனக்குப் பிடிக்காது.
பிடிக்காதது: ஒன்பது வேலைகளை ஆற போட்டுவிட்டு பத்தாவது வேலை வந்தவுடன் அதனையும் சேர்த்து சோறு, தூக்கம் எதுவும் பாராது ஒரே மூச்சில் முடிக்க நினைப்பது.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
பிடித்த விசயம் : நாம் மறந்த பலவற்றை ஞாபகம் வைத்திருப்பது. நோட்டு புத்தகம் வாங்குற செலவு மிச்சம்.
பிடிக்காத விசயம் : நாம் தெரிவிக்கும் கருத்துகளை பெரும்பாலும் ஆமோதிப்பது.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?

ஒரு சில மனிதர்களுடன் வாழும் வாய்ப்பு கிட்டியிருப்பதால் அந்த வருத்தம் இதுவரை ஏற்படவில்லை. இருப்பினும் நம் உறவுகள் அனைவரையும் விட்டுவிட்டு சிங்கை போன்ற இயந்திர உலகில் வாழ்வதற்கு யாருக்குத் தான் பிடிக்கும்.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
இந்த கேள்வியை கேட்டவர் என்னை காதலிக்க விரும்புகிறாரா? நான் திராவிட பாரம்பர்யத்தில் வந்த மஞ்சள் சட்டையும் போடவில்லை, அண்ணாயிசத்தை குழைத்த பச்சை கலர் சிங்குஜாவும் இல்லை. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..
பாட்டா? என் பாட்டையே நீங்க கேட்பீங்களா என்று தெரியவில்லை. இதுல நான் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் வேறா?

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
தொடர்ந்து தட்டச்சு மட்டும் செய்வதால், பேனாவாக ஆனால் எனக்கு இரண்டு வேலைதான். இருப்பினும் பேனாக்களிடம் ஏன் நிற வெறி காட்ட வேண்டும் என்பது எனது கேள்வி. தொடர்ந்து நிறம் சம்பந்தப் பட்ட கேள்விகளையே கேட்டுக் கொண்டு வருவதால், கேள்விகளைக் கேட்டவர் நிற வெறியுடையவரோ என சந்தேகிக்கிறேன்.

14.பிடித்த மணம்..
தமிழ் வாசம் வீசும் மணம் மட்டுமல்ல மானமும், மனமும் கூட பிடிக்கும்.

15.நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..
"டொன் லீ" சிவா தயாளன் - எமது ஈழத்து உறவு, நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்.
"நிஜமா நல்லவன்" பாரதி - கவிதைகள் எழுதுவார், பின்னூட்டங்களின் பின்னிப் பெடலெடுப்பவர், வாசிப்பு தேடல் உடையவர்.
"பித்தன்" விஜய் - மேன்மையான சீரிய கருத்துகளை கூரிய சொற்களால் கட்டமைப்பார். வாசிப்பை நேசிப்பாய் கொண்டவர்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..
இதை அனுப்பிய திரு கோவியார் எண்ணற்ற பதிவுகள் எழுதியுள்ளதால் எதை விடுப்பது எதைத் தொடுப்பது என்று தெரியவில்லை. கோவி கண்ணன் அவர்களின் பெரும்பாலான பதிவுகள் பிடித்தவையே!

இன்னொரு பதிவரான திரு நையாண்டி நைனா அவர்களின் பதிவுகளும் பெயருக்கேற்றாற்போல் நகைச்சுவை ததும்ப இருக்கிறது. பெரும்பாலான இவரது பதிவுகளும் எனக்கு பிடித்தவையே!

17.பிடித்த விளையாட்டு...
கிரிக்கெட் என்னும் பணக்கார விளையாட்டு அல்ல.

18) கண்ணாடி அணிபவரா?
ஏன் வயது 40 ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்களா? இல்லை.

19).எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...

இயல்பான, நகைச்சுவைகளை உள்ளடக்கிய படமும் பிடிக்கும். பிரமாண்டமும் பிடிக்கும். ஏன் உங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையா? அதற்கான கருத்துக் கணிப்பு போல் தெரிகிறதே, அதான் கேட்டேன்.

20.கடைசியாக பார்த்த படம்..
இப்போது ஏதும் பார்க்க வில்லை. சென்ற ஆண்டு பார்த்தது சேரனின் மாயக்கண்ணாடி. நீங்க படம் எடுக்கனும்னு நினைத்தால் சேரனை வைத்து எடுங்கள் அல்லது சீமானை வைத்து எடுங்கள்.

21.பிடித்த பருவ காலம்...
தை - அதுதான் தமிழனின் திருநாள் தொடங்கும் மாதம், அறுவடை செய்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் காலம்..

22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? - க.ப.அறவாணன் எழுதியது பலருக்கு பயன் படாத புத்தகம், எனக்காவது பயன்படுகிறதா என்று பார்ப்போம் என்ற ஒரே நம்பிக்கையோடு படிக்கிறேன்.

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
கணக்கு பண்ணி மாற்றுகிற நிரந்தர வேலையெல்லாம் கிடையாது. பெரும்பாலும் குழந்தைகளின் படங்களை போடுவது உண்டு. தற்போது போட்டிருப்பது என் மகன் நரேன் அவர்கள் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பாரதியார் வேடமிட்ட படம்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
பிடித்த சத்தம் : அழகின் சிரிப்பு
பிடிக்காதது: அவசர வேலையாக இருக்கும் போது தெரிந்தே நம்மை அழைக்கும் சத்தம்.

25.வீட்டை விட்டு சென்ற அதிகபட்ச தொலைவு ?
சிங்கப்பூர் - மலேசியா

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
தனித் திறமைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இனிமேல் இருப்பதாக யாரவது சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
ஓரிடத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டால் அது இயற்கை என்று கூறிவிட்டு, இன்னொரு இடத்தில் வெறும் தாக்குதலுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் தன்மையும் போக்கும்.

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
சாத்தான் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாததால், நம்பிக்கை உள்ளவர்களிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தால் நலம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..
நான் போன இடங்களில் குற்றாலம் பிடித்தது.

30.எப்படி இருக்கணும்னு ஆசை..
எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லாத நிலை வேண்டும் என்று நினைக்கிறேன். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
சமைப்பது - அது இல்லை என்றால் வேலைக்கு ஆகாது.
அவர்கள் இருக்கும் போது சமைக்க விரும்பினால் அவர்கள் சமைக்க விடுவதில்லை. நாம் சமைப்பது பிடிக்கவில்லை என்று சொல்வதுமில்லை. நன்றாக இருக்கிறது என்று மட்டும் கிளி பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
காஞ்சி காம கோடி பீடாதிபதி போன்ற ஆட்கள் சொன்னா நம்புவீங்க. நான் சொன்னா நம்புவியளா? இருந்தாலும் சொல்றேன்,
கட்டுமரம்! வாழ்க்கை என்பது ஓடம் என்று சொல்வார்கள். நம்பாதீர்கள்.








31 கருத்துக்கள்:

’டொன்’ லீ said...

நன்றி...:-)

’டொன்’ லீ said...

//என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்

பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன்
//

அப்படியா...:-)))

’டொன்’ லீ said...

//சிங்கையில்ஆட்டுக்கறி( மட்டன்) சாப்பிட அவ்வளவாக பிடிப்பதில்லை.
//

நான் இலங்கையில் இருக்கும் வரை ஆடு சாப்பிட்டதே இல்லை..யாழ்ப்பாணத்தில் ஆட்டுகறி பிரபலம்..ஆனால் ஆடு பாவம் என்று சாப்பிடுவதில்லை :-(((

சிங்கை வந்து தான் மட்டன் ஒரு பிடி பிடிக்கிறன் :-)))

கோவி.கண்ணன் said...

கலக்கலான பதில்கள் வெளிச்சபதிவரே !

வால்பையன் said...

நீங்களுமா?

இது காமெடியா தெரியலையா!

நையாண்டி நைனா said...

நன்றி.
அனைத்தும் நல்லா இருந்தது.

திகழ்மிளிர் said...

/படிக்கிறவங்க கண்ணுல இரத்தக்கண்ணீர் வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கோவி.கண்ணன் மற்றும் நையாண்டி நைனா என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை!//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

திகழ்மிளிர் said...

/என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்(அவருடைய தமிழ் பற்று). குழந்தையாக இருக்கும் போது என் தாய் சுப்பிரமணிய பாரதி என்றழைத்து மகிழ்ந்தார். பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன். உச்சரிப்புப் பிழை பொருட்பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நல்ல நோக்கத்தில்...! மற்றபடி யாரையும் சோதிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குக் கிடையாது./

:))))))))))))))

திகழ்மிளிர் said...

/மண்ணைப் பார்த்து பேசும் பெண்ணானாலும் கண்ணைப் பார்க்கவே விரும்புவேன்.
/

வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

திகழ்மிளிர் said...

/ஒரு சில மனிதர்களுடன் வாழும் வாய்ப்பு கிட்டியிருப்பதால் அந்த வருத்தம் இதுவரை ஏற்படவில்லை. இருப்பினும் நம் உறவுகள் அனைவரையும் விட்டுவிட்டு சிங்கை போன்ற இயந்திர உலகில் வாழ்வதற்கு யாருக்குத் தான் பிடிக்கும். /

சரியாகச் சொன்னீர்கள்

திகழ்மிளிர் said...

/18) கண்ணாடி அணிபவரா?
ஏன் வயது 40 ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்களா? இல்லை. /

உண்மையாக இல்லீங்க

திகழ்மிளிர் said...

/தனித் திறமைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இனிமேல் இருப்பதாக யாரவது சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை./

இது தான் வேண்டாம் என்பது

தன்னடக்கம்

திகழ்மிளிர் said...

/30.எப்படி இருக்கணும்னு ஆசை..
எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லாத நிலை வேண்டும் என்று நினைக்கிறேன். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து./

அருமை

திகழ்மிளிர் said...

/32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
காஞ்சி காம கோடி பீடாதிபதி போன்ற ஆட்கள் சொன்னா நம்புவீங்க. நான் சொன்னா நம்புவியளா? இருந்தாலும் சொல்றேன்,
கட்டுமரம்! வாழ்க்கை என்பது ஓடம் என்று சொல்வார்கள். நம்பாதீர்கள்./

நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

பித்தன் said...

அணைத்து பதிலிலும் சோதியின் தனித்தன்மை தெரிகின்றது.

***

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.. ஏற்கனவே எழுதிட்டேன்

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/06/blog-post.html

T.V.Radhakrishnan said...

பதில்கள் நச்..

வேடிக்கை மனிதன் said...

ரொம்ப யோசிச்சு பதில் சொன்ன மாதிரி தெரியுது.
எல்லா பதில்களும் சிறப்பாக இருந்தது

ஆ.ஞானசேகரன் said...

பதில்கள் கலக்கலாதான் இருக்கு

ஜோதிபாரதி said...

//’டொன்’ லீ said...
//என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்

பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன்
//

அப்படியா...:-)))//

நன்றி டொன் லீ!

அப்படியே தான்!

ஜோதிபாரதி said...

//’டொன்’ லீ said...
//சிங்கையில்ஆட்டுக்கறி( மட்டன்) சாப்பிட அவ்வளவாக பிடிப்பதில்லை.
//

நான் இலங்கையில் இருக்கும் வரை ஆடு சாப்பிட்டதே இல்லை..யாழ்ப்பாணத்தில் ஆட்டுகறி பிரபலம்..ஆனால் ஆடு பாவம் என்று சாப்பிடுவதில்லை :-(((

சிங்கை வந்து தான் மட்டன் ஒரு பிடி பிடிக்கிறன் :-)))//

சகுந்தலாவுலையும், காந்தியிலையும் கொஞ்சம் வாய்க்கு எனமா இருக்கும்.

ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன் said...
கலக்கலான பதில்கள் வெளிச்சபதிவரே !//


நன்றி மூத்த பதிவரே!

ஜோதிபாரதி said...

வால்பையன் said...
நீங்களுமா?

இது காமெடியா தெரியலையா!//


காமெடியா தெரிஞ்சா நல்லதுதானே வாலு!
சீரியஸா தெரிஞ்சா கோவியாரையும்,நையாண்டியையும் கவனிச்சு பின்னர் விட்டுவிடுங்கள்.
பாவம் அவர்கள் என் நண்பர்கள்!

ஜோதிபாரதி said...

//நையாண்டி நைனா said...
நன்றி.
அனைத்தும் நல்லா இருந்தது.//


எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் நையாண்டி ஐயா!

ஜோதிபாரதி said...

திகழ்மிளிர் said...
/படிக்கிறவங்க கண்ணுல இரத்தக்கண்ணீர் வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கோவி.கண்ணன் மற்றும் நையாண்டி நைனா என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை!//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்////



திகழ்! ம்ம்ம்ம்ம்!!

ஜோதிபாரதி said...

திகழ்மிளிர் said...
/32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
காஞ்சி காம கோடி பீடாதிபதி போன்ற ஆட்கள் சொன்னா நம்புவீங்க. நான் சொன்னா நம்புவியளா? இருந்தாலும் சொல்றேன்,
கட்டுமரம்! வாழ்க்கை என்பது ஓடம் என்று சொல்வார்கள். நம்பாதீர்கள்./

நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்//


கருத்துகளுக்கு நன்றி திகழ்!

நாடோடி இலக்கியன் said...

எல்லா பதில்களுமே அருமை.

சில பதில்கள் நகைச்சுவையாகச் சொல்லப் பட்டிருந்தாலும் அதன் பின்னால் இருக்கும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பாராட்டத்தக்கது.

ஜோதிபாரதி said...

//பித்தன் said...
அணைத்து பதிலிலும் சோதியின் தனித்தன்மை தெரிகின்றது.

***

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.. ஏற்கனவே எழுதிட்டேன்

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/06/blog-post.html//

நன்றி விஜய்! உங்கள் பதிவும் அருமையாக வந்திருக்கிறது!

ஜோதிபாரதி said...

T.V.Radhakrishnan said...
பதில்கள் நச்..//


நன்றி டி.வி.ஆர் ஐயா!

ஜோதிபாரதி said...

//வேடிக்கை மனிதன் said...
ரொம்ப யோசிச்சு பதில் சொன்ன மாதிரி தெரியுது.
எல்லா பதில்களும் சிறப்பாக இருந்தது//


ரொம்பவெல்லாம் யோசிக்கலை!
யோசிக்கிற அளவுக்கெல்லாம் பெரிய அறிவு ஜீவி அல்ல!
கேட்டதுக்கு பதில் சொன்னோம் அவ்வளவுதான்!
கருத்துக்கு நன்றி!

ஜோதிபாரதி said...

ஆ.ஞானசேகரன் said...
பதில்கள் கலக்கலாதான் இருக்கு//


நன்றி ஞானம்!

ஜோதிபாரதி said...

நாடோடி இலக்கியன் said...
எல்லா பதில்களுமே அருமை.

சில பதில்கள் நகைச்சுவையாகச் சொல்லப் பட்டிருந்தாலும் அதன் பின்னால் இருக்கும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பாராட்டத்தக்கது.//

கருத்துக்கு நன்றி நாடோடி இலக்கியன்!