
சிங்கையில் நவீன தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம்
மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் நூல் அறிமுகம்
சிங்கப்பூர் இலக்கிய உலகத்தில் தானும் ஒரு தமிழ் நதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் திரு.பாலு.மணிமாறன். கவிதைகள், சிறுகதைகள் போன்ற படைப்பிலக்கியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர்,தமிழ் உணர்வாளர். இலக்கியப் பணியின் அடுத்த கட்டமாக, தனது தங்கமீன் பதிப்பகத்தினூடாக வளரும் எழுத்தாளர்கள்,கவிஞர்கள், இலக்கியவாதிகளின் படைப்புகளை அச்சேற்றி வருபவர்.
அண்மையில் பிரபல மலேசிய தமிழ் எழுத்தாளர் சை.பீர் முகம்மது அவர்களின் "பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்" என்கிற சிறுகதைத் தொகுப்பை தனது பதிப்பகத்தினூடாக சிங்கையில் வெளியிட முழு முதல் காரணமாயிருந்தார்.
அந்நிகழ்ச்சியினூடாக மலேசிய எழுத்தாளர் இளவல் திரு.கே.பாலமுருகன் அவர்களையும், சிங்கை இலக்கிய உலகுக்கு அறிமுகப் படுத்தும் நிகழ்வாகவே அமைத்திருந்தார்.
அடுத்து நிகழ்ந்த வாசகர் வட்டம் நிகழ்வுக்கு மலேசிய எழுத்தாளர்கள் புண்ணியவான், கே.பாலமுருகன், சாசின் தேவராஜன், நவீன் உள்ளிட்டோர் வந்திருந்து திரு கே.பாலமுருகன் அவர்களின் "அநங்கம்" இலக்கிய சிற்றிதழை சிங்கை இலக்கிய வட்டத்துக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது திரு சாசின் தேவராஜன் அவர்கள் நடத்திவரும் மௌனம் கவிதை சிற்றிதழைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
இது போன்ற நிகழ்வுகளுக்கு, மலேசிய மற்றும் சிங்கை எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாக கவிஞர் திரு.பாலு மணிமாறன் அவர்களும், கவிஞர் திரு பாண்டித்துரை அவர்களும் இருப்பது மனசுக்கு இதமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆறுதலாகவும் இருக்கிறது.
மலேசியாவில், சிங்கையைப் போன்று தமிழ் நூலகங்களை காண்பது அரிது. ஆதலினால், அங்கிருந்து வரும் தமிழ் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் வேட்கையை, மொழியுணர்வை, இன உணர்வை நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறோம். சிங்கையில் எல்லா நூலகங்களிலும் தமிழுக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார்கள். அங் மோ க்யோ போன்ற நூலகங்களிலும், தேசிய நூலகத்திலும் தமிழ் நூல்களை நிறைவாக வைத்திருக்கிறார்கள். அதனால் சிங்கையில் இருப்பவர்களுக்கு தமிழ் நூல்களைப் படிப்பதற்கு எளிதான சூழல் நிலவுகிறது.


அந்தவகையில், சிங்கை தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில், திரு பாலு மணிமாறன் அவர்களின் தங்கமீன் பதிப்பகத்தின் சார்பாக மலேசிய எழுத்தாளர்கள் திரு.சாசின் தேவராஜன் அவர்களின் "அரிதாரம் கலைந்தவன்" சிறுகதைத் தொகுப்பு மற்றும் திரு.கே.பாலமுருகன் அவர்களின் "கடவுள் அலையும் நகரம்" கவிதைத் தொகுப்பு ஆகிய இரண்டு நூல்கள் கருத்தரங்கத்திற்கு பின் அறிமுகம் கண்டன.
நூலாசிரியரே நூலை வெளியிடும் புதிய முயற்சியை காண முடிந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இறைவணக்கம் அல்லது தமிழ்த் தாய் வாழ்த்து பாடப் படவில்லை. நூலைப் பற்றிய ஆய்வு அல்லது விளக்க உரையையும் நூலாசிரியர்களே நிகழ்த்தினார்கள். முதல் நூலாக திரு சாசின் தேவராஜன் எழுதிய "அரிதாரம் கலைந்தவன்" சிறுகதைத் தொகுப்பை அவரே வெளியிட கவிமாலை காப்பாளர் கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அடுத்து திரு.கே.பாலமுருகன் எழுதிய "கடவுள் அலையும் நகரம்" கவிதைத் தொகுப்பை அவரே வெளியிட சிங்கப்பூர் எழுத்தாளர் இராம கண்ணபிரான் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சி நெறியாளராக அருமை நண்பர் கவிஞர் திரு.பாண்டித்துரை அவர்கள் சிறப்பாக பங்காற்றினார்கள்.
நூல் வெளியீட்டுக்கு முன்பு நடைபெற்ற கருத்தரங்கில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் திரு.இராம கண்ணபிரான் மற்றும் திருமதி சித்ரா இரமேஷ் ஆகியோர் நவீன இலக்கியத்தில், நவீனத்துவம், பின் நவீனத்துவம்,யதார்த்தம், மாய யதார்த்தம், கட்டுடைத்தல் போன்ற நவீன படைப்பிலக்கிய கூறுகளை ஆங்கில இலக்கியத்துடன் ஒப்பீடு செய்து சிறப்பான எடுத்துக்காட்டுகளுடன் மேற்கோள்களையும் ஒன்றிணைத்து உரையாற்றியது நிறைவாக இருந்தது. பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று கருதுகிறோம்.
நூல் வெளியீட்டின் தொடர்ச்சியாக அனைவரும் நூல் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நடந்தது. பின்னர் சில மணித்துளிகள் சிற்றுண்டி இடைவேளை, நிறைவடைந்தவுடன், மலேசிய எழுத்தாளர் திரு.சை.பீர் முகம்மது மற்றும் சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன்(சென்னை), எழுத்தாளர் நா.கண்ணன் (ஜெர்மனி) ஆகியோருடன் இலக்கியம் சார்ந்த தொலைபேசி கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் அங்கம் நடைபெற்றது.
விழாவில் கவிஞர் திரு ந.வீ.விசயபாரதி, ஆசியான் கவிஞர் கா.து.மு.இக்பால், பாத்தென்றல் இளமாறன், சிங்கப்பூர் தினமலர் திரு புருஷோத்தமன், திரு பாண்டியராஜன், பிரான்ஸில் இருந்து வந்திருந்த ஈழத்து உடன்பிறப்பு திரு ஸ்ரீரங்கன் (தமிழ் ஒலி வானொலி), பதிவர்கள் கோவி.கண்ணன், முகவை இராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், பல இலக்கிய நிகழ்வுகளின் நான் கண்ட சில பல முகங்களைக் காண இயலவில்லை.
மொத்தத்தில் இந்நிகழ்வை பயனுள்ளதாக ஆக்கிக் கொடுத்த, கவிஞர் திரு பாலு மணிமாறன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.





![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)














24 கருத்துக்கள்:
நல்லா சொன்னிங்க டீட்டெய்லு..!
வாழ்த்துக்கள் தோழரே...
ஏங்கே கொஞ்ச நாளாக ஆளை கானவில்லை?
இப்பயனான நிகழ்வுகள் மேலும் தொடர வாழ்த்துகள்...
நல்ல விடயம் நடந்தேறியிருக்கிறது!
உலகெங்கும் தமிழ் வளர்க்க வாழ்த்துக்கள் தோழரே!
இவ்வளவு நடந்ததா ? நானும் முகவை இராமும் தவறவிட்டோம் :(
தொகுத்தமைக்கு பாராட்டுகள். அடுத்த தடவை பாலு மணிமாறன் அண்ணனிடம் ட்ரீட் வாங்கிடுவோம் !
:)
நம்ம பாண்டி துரை புது கெட்டப்பில் வந்து நிகழ்ச்சி தொகுத்து கலக்கி இருந்தார். அவருக்கு சிறப்பு பாராட்டுகள் !
நல்லது...இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்...
தகவலுக்கு நன்றி. தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் நிகழ்ச்சிகளை தவறாமல் பதிவிடவும்
//இது போன்ற நிகழ்வுகளுக்கு, மலேசிய மற்றும் சிங்கை எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாக கவிஞர் திரு.பாலு மணிமாறன் அவர்களும், கவிஞர் திரு பாண்டித்துரை அவர்களும் இருப்பது மனசுக்கு இதமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆறுதலாகவும் இருக்கிறது.//
நல்ல விடயமாக இருக்கின்றதே... நல்ல தொகுப்பு நண்பரே
வாழ்த்துகள்
அன்பின் ஜோ
நிகழ்வு பற்றி ஒரு பதிவிடவேண்டும் . இன்றுதான் அதற்கான ஆயத்தங்களை செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
உங்களின் பதிவு மகிழ்ச்சியை தருகிறது.
முகவை ராம் இந்த நிகழ்வினை தவறவிட்டது எனக்கு வருந்தமாக இருந்தது. (அவருடைய ஆர்வத்திற்கு கொஞ்சம் இடமளிக்ககூடிய ஒரு நிகழ்வு)
கோவியாருக்கும் என் நன்றி.
வாழ்த்துக்கள் !
அன்பு சகோதரருக்கு ..நன்றி!விரிவான பதிவு...மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பர்கள் கோவி.கண்ணன், முகவை ராம் போன்றவர்களின் வருகை மகிழ்வளித்தது.
இது நவீன இலக்கிய நிகழ்வென்பதால் ஒரு 30 பேர்தான் எதிர்பார்த்தேன். 60பேர் பக்கம் வந்ததில் கொஞ்சம் அதிர்ச்சி.கொஞ்சம் இன்பம்!
ஒரு நதி போல ஓடிக் கொண்டிருப்பது எனக்கும், தம்பி பாண்டித்துரைக்கும் எப்போதுமே அதிக விருப்பம். உங்களைப் போன்றவர்களின் ஆதரவிருப்பதை உணரும்போது... இன்னும் வேகமாக ஓடத் தோன்றுகிறது... ஓடுவோம்!
//கலையரசன் said...
நல்லா சொன்னிங்க டீட்டெய்லு..!
வாழ்த்துக்கள் தோழரே...
ஏங்கே கொஞ்ச நாளாக ஆளை கானவில்லை?//
நன்றி கலையரசன்!
வேலைப்பழு மற்றும் பயிற்சி பட்டறை, அதனால் சிறு இடைவெளி மட்டும்!
//VIKNESHWARAN said...
இப்பயனான நிகழ்வுகள் மேலும் தொடர வாழ்த்துகள்...//
கண்டிப்பாக தொடரும் விக்கி!
//வால்பையன் said...
நல்ல விடயம் நடந்தேறியிருக்கிறது!
உலகெங்கும் தமிழ் வளர்க்க வாழ்த்துக்கள் தோழரே!//
நன்றி வாலு!
தமிழன் உயிரோடு இருந்தால் தான் தமிழ் இருக்கும்.
தமிழ் இருக்கவேண்டும் என்று சொல்வதை விட அதைப் பாதுகாக்க தமிழர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்று சூளுரைப்போம்!
//கோவி.கண்ணன் said...
இவ்வளவு நடந்ததா ? நானும் முகவை இராமும் தவறவிட்டோம் :(
தொகுத்தமைக்கு பாராட்டுகள். அடுத்த தடவை பாலு மணிமாறன் அண்ணனிடம் ட்ரீட் வாங்கிடுவோம் !
:)
//
ம்ம்ம்! கோவியாரே!
பாதியில ஓடி விட்டேரே!
பெங்களூர் மதுர இராமை தமிழ் நாட்டுக்கு அனுப்பிவிட விமான நிலையம் சென்றீர்கள், புரிந்து கொள்கிறோம்!
//கோவி.கண்ணன் said...
நம்ம பாண்டி துரை புது கெட்டப்பில் வந்து நிகழ்ச்சி தொகுத்து கலக்கி இருந்தார். அவருக்கு சிறப்பு பாராட்டுகள் !//
அனைவரும் நீதிபதி பாண்டித்துரையை பாராட்டுவோம். விழா நாயகர்களின் படம் கிடைக்காமல் போயிற்றே!
’டொன்’ லீ said...
நல்லது...இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்...//
நன்றி டொன் லீ !
//உடன்பிறப்பு said...
தகவலுக்கு நன்றி. தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் நிகழ்ச்சிகளை தவறாமல் பதிவிடவும்//
நன்றி உடன்பிறப்பு!
தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கப்பூர் நிகழ்ச்சி மட்டுமல்ல பல தரப்பட்ட பதிவுகளை செய்ய முடிவு செய்திருக்கிறேன்!
//ஆ.ஞானசேகரன் said...
//இது போன்ற நிகழ்வுகளுக்கு, மலேசிய மற்றும் சிங்கை எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாக கவிஞர் திரு.பாலு மணிமாறன் அவர்களும், கவிஞர் திரு பாண்டித்துரை அவர்களும் இருப்பது மனசுக்கு இதமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆறுதலாகவும் இருக்கிறது.//
நல்ல விடயமாக இருக்கின்றதே... நல்ல தொகுப்பு நண்பரே//
கண்டிப்பாக இவர்களின் பணி மகத்தானது!
திகழ்மிளிர் said...
வாழ்த்துகள்//
நன்றி திகழ்மிளிர்!
பாண்டித்துரை said...
அன்பின் ஜோ
நிகழ்வு பற்றி ஒரு பதிவிடவேண்டும் . இன்றுதான் அதற்கான ஆயத்தங்களை செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
உங்களின் பதிவு மகிழ்ச்சியை தருகிறது.
முகவை ராம் இந்த நிகழ்வினை தவறவிட்டது எனக்கு வருந்தமாக இருந்தது. (அவருடைய ஆர்வத்திற்கு கொஞ்சம் இடமளிக்ககூடிய ஒரு நிகழ்வு)
கோவியாருக்கும் என் நன்றி.//
தாங்களும் பதிவு செய்யுங்கள் நீதி பாண்டி!
உங்கள் பணி மகத்தானது, நினைவு கூறத் தக்கது!
சதங்கா (Sathanga) said...
வாழ்த்துக்கள் !//
எல்லா வாழ்த்துகளையும் திரு.பாலு மணிமாறன் அவர்களுக்கும், திரு பாண்டித்துரை அவர்களுக்கும் அனுப்பிவைக்கிறேன்!
பாலு மணிமாறன் said...
அன்பு சகோதரருக்கு ..நன்றி!விரிவான பதிவு...மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பர்கள் கோவி.கண்ணன், முகவை ராம் போன்றவர்களின் வருகை மகிழ்வளித்தது.
இது நவீன இலக்கிய நிகழ்வென்பதால் ஒரு 30 பேர்தான் எதிர்பார்த்தேன். 60பேர் பக்கம் வந்ததில் கொஞ்சம் அதிர்ச்சி.கொஞ்சம் இன்பம்!
ஒரு நதி போல ஓடிக் கொண்டிருப்பது எனக்கும், தம்பி பாண்டித்துரைக்கும் எப்போதுமே அதிக விருப்பம். உங்களைப் போன்றவர்களின் ஆதரவிருப்பதை உணரும்போது... இன்னும் வேகமாக ஓடத் தோன்றுகிறது... ஓடுவோம்!//
தங்கள் தமிழ் பணி பாராட்டத்தக்கது மட்டுமல்ல! போற்றத்தக்கது!
மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!
Post a Comment