Thursday, May 20, 2010
நாம் தமிழர் - சீமான் பெரிய இவரா?
2005-ம் ஆண்டில் அருமை அண்ணன் கவிமாலை கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் மூன்று கவிதைத் தொகுப்புகள் சிங்கப்பூரில் வெளியீடு கண்டன. அந்த நிழ்ச்சிக்கான அழைப்பிதழை என்னிடம் கொடுக்கும் போது நான் கேட்ட கேள்வி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. என்னண்ணே திரைப்பட இயக்குநரைப் போய் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு அழைத்திருக்கிறீர்கள். உகந்தவராக இருப்பாரா? என்று கேட்டதற்கு, அவர், சீமான் கவிதை ஆர்வலர், தமிழின உணர்வாளர், சிறப்பாக பேசக்கூடியவர் என்றெல்லாம் சொன்னார். நான் அப்போது அறை மனதுடன் தலையாட்டி வைத்துவிட்டு ஒரு வினாவோடு விடைபெற்று வீட்டுக்குச் சென்றேன்.
விழா நாளன்று குடும்பத்துடன் விழாவிற்கு சென்றோம். அப்போது வெகு சிலரே அரங்கத்தில் இருந்தனர். அண்ணன் இளங்கோ அவர்களிடம் ”சீமான் வந்துவிட்டாரா” என்று கேட்டேன். ஆம். வந்துவிட்டார். இதோ அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்கள் சம்பிரதாயம் எல்லாம் பார்க்கக் கூடியவர் இல்லை. அவரே வந்திடுவார் என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சி பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சிறிது நேரத்தில் சீமானை அழைத்து வந்ததனர். ஒர் இளைஞராக இருக்கிறாரே, ஒரு பண்பட்ட கவிஞரின் மூன்று கவிதைத் தொகுப்புகளாக அமைந்துள்ள நூல்களை வெளியிட இவரைப் போய் அழைத்திருக்கிறார்களே? இன்னும் என் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை.
விழாவின் நிறைவில் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய திரு.சீமான், தனக்கிட்ட பணிக்கு உகந்தவராக உறுதிப்படுத்திய பின்னரே உரையை நிறைவு செய்தார். எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை தவிடு பொடியாக்கி விட்டே அமர்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அரங்கு நிறைந்த, நிரம்பி வழிந்த நிலையில் வியக்கும் வண்ணம் அவரது உரை சிறப்பாக அமைந்தது. நாட்டுப்புற பாடல்களை நயமாக பாடும் தன்மை, கிராமங்களில் கொட்டிக்கிடக்கும் கவிதைத் துளிகளை எடுத்துக் காட்டிய பாங்கு, தமிழர் அடையாளம், தனித்தமிழ் முயற்சி என்று முற்றிலும் வேறுபட்ட அழகான உணர்வுமிக்க உரையாக அமைந்தது. அவரது உரையில் எனக்கு உடன்பாடில்லாத சிலவும் உண்டு. பதர் விசமல்ல அதை தள்ளி வைத்து விடலாம் என்கிற அரிய நோக்கில் நெல் மணிகளை மட்டும் அறுவடை செய்வது எனது அணுகுமுறை. அந்த வகையில் திரு.சீமான் அவர்களை உற்று நோக்கத் தொடங்கினேன். இன்று வரை பல்வேறு படிப்பினைகளை பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் பெற்றிருப்பார் என்று ஆணித்தரமாக நம்புகிறேன். பட்டால் தான் புத்தி வரும் என்னும் சொல்லாடலுக்கு மாற்று என்கிற பகுத்தறிவு நிலையை உணர்ந்தவருக்குக்குக் கூட இந்த நிலையா என்பதை அறியும் போது கொஞ்சம் முரண்பாடாகத் தெரியலாம். இருப்பினும் நம்ப வைத்து கழுத்தறுக்கும் புதிய(நவீன) பாணியில் தலைவர்கள் தங்களது செயல்களினூடாக செதுக்கிய ஒருவர்தான் திரு.சீமான் என்றால் அது மிகையாகாது.
இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து பல்வேறு இடங்களில் உரையாற்றி, தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களில் வாழும் தமிழர்களுக்கு உண்மை நிலையை, ஈழத்தில் நடந்த கோரத்தை யாருக்கும் சோரம் போகாமல், புரியும் வண்ணம் எடுத்து சொன்ன வகையில் திரு.சீமான் தனித்து நிற்கிறார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு உண்மை, அவர் தனித்து விடப்பட்டிருக்கிறார் என்பதும். இப்படிப்பட்ட இளைஞனை இராசேந்திர சோழனுக்கு பிறகு வந்த ஒரே தமிழ் வீரன், தமிழ் தேசிய தலைவர் அவர்கள் அழைத்து, பார்த்துப் பேசியிருக்கிறார். உண்மையான உணர்வார்களை உண்மையான போராளி இனங்கண்டு கொள்வதில் ஒன்றும் ஐயமில்லை.
ஈழப்போர் தோல்வியில் முடிந்தது மட்டும் நமது பின்னடைவல்ல. அதை விட கொடுமையானது பண, அதிகார முதலைகளிடம், ஆட்சியாளர்களிடம் காட்டிக்கொடுப்பது, அயலாரிடம் விலை போவது இதை நன்கு உணர்ந்திருப்பார் சீமான் என்று மட்டும் நம்புகிறேன். பண்டைய ஒட்டுமொத்த இந்தியா-இலங்கை நாடுகளை ஆண்ட நம் பாட்டன் இராசேந்திர சோழன் செய்த தவறுக்கு நாம் இப்போது பிரயசித்தம் தேடிக்கொண்டிருக்கிறோம். அவன் அன்று தமிழை ஆட்சிமொழியாக்கி இருந்தால் இன்று நாம் சிங்களனிடமோ, இத்தாலியைச் சேர்ந்த அண்டோனியா மொய்னாவிடமோ அஞ்சிக் கொண்டு கெஞ்ச வேண்டியதில்லை. அன்று கங்கை வெள்ளப்பெருக்கின் போது யானைகளை குறுக்கே நிறுத்தி அதில் படை நடத்தி வெற்றி கொண்ட கங்கை கொண்ட சோழன் இராசேந்திரன், கங்கையையும் காவிரியையும் இணைத்திருந்தால் இன்று நாம் கன்னடரிடம் தண்ணீருக்குப் போராட வேண்டியதில்லை. அன்று தனித்தமிழை ஊக்குவித்திருந்தால், இன்றும் நாம் வடமொழி கலப்பின்றி தமிழ் பேசுவோம். இவ்வளவு பெரிய தமிழ் மாமன்னன் செய்யத்தவறியதை சொல்லிச் சொல்லி நாம் வருந்துவதை விட, நாம் தமிழர், நாம் இனி என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கிற நிலையில் இருக்கிறோம். அந்தவகையில் திராவிட என்கிற சொல்லாடலுடன் கட்சி நடத்தும் இன்றைய திராவிட கட்சிகள் கேரளத்தையும்,கர்னாடகத்தையும்,ஆந்திரத்தையும் எதிர்த்து அரசியல் நடத்தும் போது மிகவும் வேடிக்கையாக இருக்கும். திராவிட மொழிகளில் இவர்களின் மொழிகளும் அடக்கம் என்பதை அறியாதவர்களா நம் திராவிட கட்சியினர். திராவிட இனங்கள் யாவை? திராவிட நிலப்பகுதிகள் எவை எவை? திராவிட மொழிகள் எவை? திராவிடர்கள் எல்லோரும் இன்றைய கால கட்டத்தில் ஒரே குடையின் கீழ் வருகிறார்களா? தமிழர்கள் யார்? என்று பல்வேறு கேள்விகளை நாம் சுமக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தேசிய பிரச்சனைகளில் ஓட்டு நிறைந்திருக்கும் மாநிலத்துக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் கட்சியான, காந்தியாரால் விடுதலைக்குப் பின்னர் கலைக்கப் பரிந்துரைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி ஒரு புறம். அதையும் தாண்டி மதத்தின் பெயரால்,சாதியின் பெயரால் தமிழர்களை கூறுபோட்டு விற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் இருக்க, இன்றைய பிரியானியிச கொள்கையுடனும்,காந்தி நோட்டில் நோட்டம் பார்க்கும் தற்கால சனநாயகத்தில், திரு சீமான், தனது நாம் தமிழர் கட்சியினூடாக தமிழர்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதே ஒவ்வொரு தமிழரின் எதிர்பார்ப்பும்.
வட மொழி - தமிழ் மொழி
பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்
அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்
அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது
அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை
அகந்தை - இறுமாப்பு,செருக்கு
அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்
அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு
அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்
அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை
அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை
அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்
அக்கணம் - அப்பொழுது,அந்நொடி
அக்கரம் - எழுத்து
அட்சரம் - அழிவில்லாதது
அக்கியாணி - அறிவிலான்
அஞ்ஞானி - புல்லறிவாளன்
அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி
அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு
அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை
அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி
அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்
அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு
அங்குலம் - விறக்கட்டை,விரலளவு
அசத்தை,அசத்தியம் - பொய்
அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்
அசரீரி - வானொலி,உருவற்றது
அசித்து - பயனின்மை
அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை
அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை
அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்
அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்
அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்
அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்
அஞ்சிட்டம் - கதிரவன்
அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது
அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்
அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது
அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்
அட்டபந்தனம் - எண்புறக்கட்டு
அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்
அதமம் - கீழ்மை,கடைத்திரம்
அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்
அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்
அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்
அதிகாலம் - விடியற்காலம்
அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை
அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்
அநந்தகோடி - எண்ணத்தொலையாதன
அநந்தம் - அளவின்மை,முடிவில்லது
அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்
அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை
அநீதி - முறைகேடு
அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்
அநுசரணை - சார்பு,சார்பு நிலை
அநுசிதம் - பொய்,தகாதது
அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி
அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை
அனுமானப் புரமானம் - கருதலளவை
அநேகர் - பலர்
அந்தகன் - அழிப்போன்,குருடன்
அந்தகாரம் - இருள்,அறியாமை
அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்
அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை
அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்
அந்தி - முடிவு,மாலைக்காலம்
அந்திய கிரியை - இறுதிச் சடங்கு
அந்நியர் - பிறர்,அயலார்
அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்
அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்
அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு
அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு
அபிதானம் - பெயர்
அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்
அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு
அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு
அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்
அபேச்சை -அவா,விருப்பம்
அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை
அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி
அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று
அமரத்துவம் - அழிவின்மை
அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்
அந்நியர் - பிறர்,அயலார்
அதிகம் - மிகுதி,அளவின்மை
அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை
அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்
அம்பாரம் - குவியல்
அயோக்கியம் - தகுதியினமை,தகாதது
அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்
அரணியம் - காடு
அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு
அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி
அருவம் - உருவின்மை,அழகின்மை
அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு
அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்
அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு
அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை
அவகீர்த்தி - இழிவு,புகழின்மை
அவக்கியாதி - வசை,இகழ்ச்சி
அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு
அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை
அவதரித்தல் - பிறத்தல்
அவதாரம் - பிறப்பு,இறங்குகை
அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை
அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை
அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை
அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு
அவயவம்,அவையவம் - உறுப்பு
அவலன் - உடற்குறையன்,வீணன்
அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,
அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு
அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்
அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை
அனுதாபம் - இரக்கம்
அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு
அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை
அனேகம் - பல,எல்லாம்
அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை
அன்னம் - சோறு,உணவு,அடிசில்
அன்னியன் - பிறர்,அயலார்
அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்
ஆகம் -உடல்,மார்பு
ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி
ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்
ஆகாய விமானம் - வான ஊர்தி
ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு
ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்
ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்
ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி
ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு
ஆச சங்கை -ஐயம்
ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா
ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு
ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு
ஆசீர்வாதம் - வாழ்த்துரை
ஆசுவாசம் - இளைப்பாறுகை
ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு
ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது
ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்
ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை
ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை
ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்
ஆஞ்ஞை -ஆணை,கட்டளை
ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு
ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு
ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்
அந்நியர் - பிறர்,அயலார்
ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்
ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு
ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்
ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு
ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்
ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு
ஆத்துமா,ஆன்மா - உயிர்
ஆந்ந்தம் - இன்பம்
ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்
ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்
ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி
அபூர்வம் - வினைப்பயன்
ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்
ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு
ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு
ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்
ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்
ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு
ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்
ஆரணியம்,ஆரண்ணியம் - காடு
ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்
ஆரம்பம் - தொடக்கம்
ஆரம்பித்தல் - தொடங்கல்
ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்
ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்
ஆரோக்கியம் - நலம்,நோயின்மை
ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்
ஆரோபித்தல் - ஏற்றுதல்
ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்
ஆர்மோனியம் - இசைக்கருவி
ஆர்வம் - அன்பு,விருப்பம்
ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்
ஆலகம்- நெல்லிமரம்
ஆலம் - நஞ்சு
ஆலயம் - கோயில்
ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்
ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி
ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை
ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு
ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்
ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்
ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு
ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்
ஆன்மா - உயிர்
இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு
இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்
இச்சகம் - முகமன்
இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை
இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை
இட்டசித்தி - விருப்பப்பேறு
இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்
இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்
இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை
இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை
இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்
இந்து - நிலா,திங்கள்,அம்புலி
இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை
இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்
இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை
இரசாயனம் - பொருளியைபு
இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு
இரட்சை - காப்பு
இரணம்,ரணம் - புண்
இரதம்,ரதம் - தேர்
இரத்தம் - குருதி,செந்நீர்
இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி
இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்
இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு
இராகு - கருங்கோள்
இராக்கதர் - அரக்கர்
இராசசூயம் - அரசர் வேள்வி
இராசா - அரையன்,மன்னன்,அரசன்
இராச்சியம் - நாடு,அரசியல்
இராத்திரி - இரவு,கங்குல்
இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி
இதய கமலம் - நெஞ்சத்தாமரை
இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு
இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்
இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்
இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்
இலங்கணம் - பட்டினி
இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை
இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை
இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்
இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு
இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை
இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு
இலீலை,லீலை - விளையாட்டு
யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு
உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை
உஷ்ணம் - வெப்பம்,சூடு
உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு
உசிதன் - தக்கோன்
உச்சம் - உயர்ச்சி,சிறப்பு
உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்
உச்சரிப்பு - எழுத்தோசை
உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்
உச்சி - மேடு,முகடு
உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்
உதயன் - பகலோன்
உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று
உத்தமம் - உண்மை,மேன்மை
உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை
உத்தரவு - கட்டளை
உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்
உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய
உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்
உபதேசம் - அருண்மொழி,அறிவுரை
உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு
உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்
உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்
உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்
உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது
உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி
உருசி,ருசி - சுவை
உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி
உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்
உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு
உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி
உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு
உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்
ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு
ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு
எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி
எந்திரம் - பொறி
எமன் - கூற்றுவன்,மறலி
ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை
ஏகம் - ஒன்று,தனிமை
ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு
ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்
ஏடணை,ஏஷணை - விருப்பம்
ஐது,ஹேது - காரணம்
ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை
ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு
ஐதீகம்,ஐதிகம் - உலகுரை
ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்
ஓமம்,ஹோமம் - வேள்வி
ஒளடதம்,ஒளஷதம்- மருந்து
களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்
கடகம் - கைவளை,வளையம்
கடம் - கடம்,யானைக்கதுப்பு
கடாட்சித்தல் - அருளல்
கடாரம் - கொப்பரை,தேங்காய்
கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி
கடிகை - நாழிகை,தாழ்க்கோல்
கடினசித்தம் - வன்னெஞ்சம்
கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை
கடூரம்,கொடூரம் - கொடுமை
கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்
கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது
கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்
கணிகை - பொதுமகள்
கணிசம் - அளவு,மேம்பாடு
கணிதம் - கணக்கு
கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து
கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு
கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது
கதலி - வாழை
கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை
கனகம்,கநகம் - பொன்
கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை
கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை
கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்
கந்மம்,கருமம் - தொழில்,வினை
கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு
கபாலம் - தலையோடு,மண்டையோடு
கபோதி - குருடன்
கப்பம் - இறை
கமண்டலம் - நீர்க்குடுவை
கமலம் - தாமரை,நீர்
கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு
கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை
கரகம் - வட்டில்,நீர்க்குடுவை
கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்
கரணம் - கருவி,ஐம்பொறி
கரம் - கை
கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்
கருணை - அருள்,இரக்கம்
கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்
கர்ப்பவதி - சூலி
கர்ப்பாசயம் - கருப்பை
கர்வம் - செருக்கு,இறுமாப்பு
கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை
கலி - வறுமை,துன்பம்
கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி
கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்
கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்
கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்
கவி - செய்யுள்,புலவன்,பாட்டு
கவுளி,கெளளி - பல்லி
களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்
கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து
கனம் - சுமை,பளு,பளுவு
காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்
கசாயம்,கஷாயம் - காவி
காஞ்சிரம் - எட்டி மரம்
காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி
காதகன் - கொலையாளி
காயசித்தி - நீடுவாழ்ப் பேறு
காயம் - உடல்,யாக்கை,வான்
காரிய கர்த்தா - வினைமுதல்வன்
காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்
கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை
கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு
கிஸ்தி - திறை,வரி
கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்
கிரகஸ்தம் - இல்லற நிலை
கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு
கிரணம் - ஒளி,கதிர்
கிரந்தம் - நூல்,எழுத்து
கிரமம் - ஒழுங்கு,முறைமை
கிரயம் - விலை
கிராதன் - குறவன்,வேட்டுவன்
கிரி - மலை,பன்றி
கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு
கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு
கிரீடம் - முடி
கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை
கிலம் - கழிவு,அழிவு,சிறுமை
கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்
கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு
கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா
கீலகம் - ஆணி,பொருத்து
குஞ்சரம் - யானை
குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்
குணஷ்டை - தொல்லை,துன்பம்
குதர்க்கம் - அழிவழக்கு
குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு
குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்
குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்
கும்பம் - குடம்
குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை
குரோதம் - உட்பகை
குலாலன் - குயவன்
குலிசம் - வேற்படை
குன்மம் - சூலை,வயிற்று வலி
கேதம் - துன்பம்,இடர்,குற்றம்
கேவலம் - சிறுமை,தனிமை
கோகிலம் - குயில்
கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை
கோஷ்டி - கூட்டம்
கோடி - நூறு நூறாயிரம்
கோதண்டம் - வில்
கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்
கெளரவம் - மேன்மை,பெருமை
சக - கூட,உடன்
சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை
சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்
சகமார்க்கம் - தோழமை நெறி
சகலம் - எல்லாம்
சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு
சகா - தோழன்,துணை
சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு
சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை
சகி,சகீ - தோழி
சகிதம் - உடன்
சகுணம் - குணத்தோடு கூடியது
சகுந்தம் - கழுகு,பறவை
சகுனம் - குறி
சகோதரம் - உடன்பிறப்பு
சகோதரி - உடன்பிறந்தாள்
சக்கரம் - உருளை,வட்டம்
சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி
சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்
சங்கிதை - தொகுதி,வரலாறு
சடுதி,சடிதி - விரைவு
சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு
சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு
சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று
சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு
சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்
சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை
சதகோடி - நூறு கோடி
சதசு - அவை
சதம் - நூறு நிலை
சதானந்தம் - இடையறா வின்பம்
சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி
சந்தகம் - எப்பொழுதும்
சந்தானம் - வழி,வழித்தொடர்பு
சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்
சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்
சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்
சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து
சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்தேகம் - ஐயம்,ஐயுறவு
சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு
சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்
சந்நியாசம் - துறவு,துறவறம்
சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்
சபம்,ஜெபம் - உருவேற்றல்
சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா
சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்
சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்
சமஷ்டி - தொகுதி,எல்லாம்
சமதை - ஒப்பு
சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்
சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்
சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை
சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை
சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை
சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்
சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை
சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்
சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது
சமாராதனை - உளநிறைவு
சமி,ஷமி - பொறு
சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி
சமீபம் - அருகு,அணமை,மருங்கு
சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்
சமுதாயம் - குமுகம்,கூட்டம்
சமுத்திரம் - கடல்
சமை,ஷமை - பொறுமை
சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி
சம்பத்து - செல்வம்,பொருள்
சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்
சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை
சம்பு ரேட்சணம் - தெளித்தல்
சம்பூரணம் - நிறைவு
சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு
சம்ரஷணை - பாதுகாப்பு
சயம்,ஜெயம் - வெற்றி
சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி
சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்
சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்
சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்,யாக்கை,மெய்
சருமம்,சர்மம் - தோல்
சர்ப்பம் - பாம்பு
சர்வகலாசாலை -
பல்கழைக் கழகம்சலதளம்- அரசமரம்
சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு
சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை
சல்லாபம் - உரையாடல்
சவம் - பிணம்
சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்
சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு
செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்
சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை
சற்குணம் - நல்லியல்பு
சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு
சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை
சாகரம் - கடல்
சாகுபடி - பயிர் செய்தல்
சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்
சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை
14 கருத்துக்கள்:
உண்மையிலேயே சீமான் ஒரு தமிழ் தேசிய உணர்வு மிக்க இளைஞன். அவருடன் சந்திக்கும் வாய்ப்பு 2008 முற்பகுதியில் கிடைத்தது. அவர் எல்லாளன் திரைப்படம் எடுப்பதற்காக தலைவரின் வேண்டுகோளிற்கிணங்க கிளிநொச்சி வந்திருந்தார். அன்றையதினம் நானும் தமிழாக்க படம் ஒன்றுக்காக குரல் கொடுப்பதற்காக கலையகதில் இருந்தேன். அப்போது அங்கே வந்திருந்த அவருடன் எனக்கு கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. எமது தமிழ் மக்களின் ஆரம்பகால போராட்ட அர்ப்பணிப்புகளை கேட்டு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவருடைய இந்த புது முயற்சி ஈழத்தமிழர்களுக்கும் உதவி புரிதலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பது எமது அவா...
திருமாவளவன் பார்ட் 2
தலைப்பைப் பார்த்த உடன் நான் நினைத்தேன் அவரை ஒரு பிடி பிடிக்க போறீங்கள் என்று....!! உண்மைதான் அவரை சிறையில் அடைத்தது கூட, அவரால் பெரியளவில் மாற்றம் வந்து விடும் என்றுதான். காரணம், வாக்காளப் பெருமக்களை பேச்சாலே மாற்றக்கூடிய வல்லமை சீமானிடம் இருந்தது. இருக்கிறது. இருக்கும்.
தமிழன் தாயகத்திலிருந்து said...
உண்மையிலேயே சீமான் ஒரு தமிழ் தேசிய உணர்வு மிக்க இளைஞன். அவருடன் சந்திக்கும் வாய்ப்பு 2008 முற்பகுதியில் கிடைத்தது. அவர் எல்லாளன் திரைப்படம் எடுப்பதற்காக தலைவரின் வேண்டுகோளிற்கிணங்க கிளிநொச்சி வந்திருந்தார். அன்றையதினம் நானும் தமிழாக்க படம் ஒன்றுக்காக குரல் கொடுப்பதற்காக கலையகதில் இருந்தேன். அப்போது அங்கே வந்திருந்த அவருடன் எனக்கு கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. எமது தமிழ் மக்களின் ஆரம்பகால போராட்ட அர்ப்பணிப்புகளை கேட்டு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவருடைய இந்த புது முயற்சி ஈழத்தமிழர்களுக்கும் உதவி புரிதலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பது எமது அவா...
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
புதிய தகவல், தெரிந்து கொள்ள முடிந்தது.
நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கும் என்று நம்புவோம்!
தமிழன் தாயகத்திலிருந்து said...
உண்மையிலேயே சீமான் ஒரு தமிழ் தேசிய உணர்வு மிக்க இளைஞன். அவருடன் சந்திக்கும் வாய்ப்பு 2008 முற்பகுதியில் கிடைத்தது. அவர் எல்லாளன் திரைப்படம் எடுப்பதற்காக தலைவரின் வேண்டுகோளிற்கிணங்க கிளிநொச்சி வந்திருந்தார். அன்றையதினம் நானும் தமிழாக்க படம் ஒன்றுக்காக குரல் கொடுப்பதற்காக கலையகதில் இருந்தேன். அப்போது அங்கே வந்திருந்த அவருடன் எனக்கு கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. எமது தமிழ் மக்களின் ஆரம்பகால போராட்ட அர்ப்பணிப்புகளை கேட்டு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவருடைய இந்த புது முயற்சி ஈழத்தமிழர்களுக்கும் உதவி புரிதலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பது எமது அவா...
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
புதிய தகவல், தெரிந்து கொள்ள முடிந்தது.
நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கும் என்று நம்புவோம்!
SanjaiGandhi™ said...
திருமாவளவன் பார்ட் 2
//
அப்படியா சஞ்சய்?
இருந்துட்டு போகட்டும்.
திருமாவளவன் மீது இங்கு யாரும் வெறுப்பை உமிழவில்லை!
பிடிக்காத அன்று ஒதுங்கி வரும் திராணியை எல்லா தமிழருக்கும் கொடுத்து விட்டால், பிரியானி குஞ்சுகளுக்கும்,கட்சி அடிமைகளுக்கும் வேலை இருக்காது!
SanjaiGandhi™ said...
திருமாவளவன் பார்ட் 2
//
அப்படியா சஞ்சய்?
இருந்துட்டு போகட்டும்.
திருமாவளவன் மீது இங்கு யாரும் வெறுப்பை உமிழவில்லை!
பிடிக்காத அன்று ஒதுங்கி வரும் திராணியை எல்லா தமிழருக்கும் கொடுத்து விட்டால், பிரியானி குஞ்சுகளுக்கும்,கட்சி அடிமைகளுக்கும் வேலை இருக்காது!
கதியால் said...
தலைப்பைப் பார்த்த உடன் நான் நினைத்தேன் அவரை ஒரு பிடி பிடிக்க போறீங்கள் என்று....!! உண்மைதான் அவரை சிறையில் அடைத்தது கூட, அவரால் பெரியளவில் மாற்றம் வந்து விடும் என்றுதான். காரணம், வாக்காளப் பெருமக்களை பேச்சாலே மாற்றக்கூடிய வல்லமை சீமானிடம் இருந்தது. இருக்கிறது. இருக்கும்.//
அப்படியா சொல்றியள்!
பிரியானி அடிமைகளும்,கட்சி அடிமைகளும் தங்களது அடிமை சாசனத்தை எப்போது திரும்பப் பெறுகிறார்களோ அன்று தான் சீமான் போன்ற ஆட்கள் வெற்றி பெற முடியும்! அது வரையில் ஒரு சக்தியாக இருக்கட்டுமே!
கதியால் said...
தலைப்பைப் பார்த்த உடன் நான் நினைத்தேன் அவரை ஒரு பிடி பிடிக்க போறீங்கள் என்று....!! உண்மைதான் அவரை சிறையில் அடைத்தது கூட, அவரால் பெரியளவில் மாற்றம் வந்து விடும் என்றுதான். காரணம், வாக்காளப் பெருமக்களை பேச்சாலே மாற்றக்கூடிய வல்லமை சீமானிடம் இருந்தது. இருக்கிறது. இருக்கும்.//
அப்படியா சொல்றியள்!
பிரியானி அடிமைகளும்,கட்சி அடிமைகளும் தங்களது அடிமை சாசனத்தை எப்போது திரும்பப் பெறுகிறார்களோ அன்று தான் சீமான் போன்ற ஆட்கள் வெற்றி பெற முடியும்! அது வரையில் ஒரு சக்தியாக இருக்கட்டுமே!
நல்ல பதிவு.உணர்வு மிக்க ஒரு தமிழன் என்றால் அது சீமான் தான்.
தமிழன் மாறனும் தமிழனின் தலைஎழுத்து மாற்றப்படவேண்டும்.
அதற்காக எமது பங்களிப்பை செய்வோம்.
இனியொரு விதி செய்வோம்......விதியினை மாற்றும் விதி செய்வோம்.
Vijithan said...
நல்ல பதிவு.உணர்வு மிக்க ஒரு தமிழன் என்றால் அது சீமான் தான்.
//
கருத்துக்கு நன்றி ஐயா!
Vijithan said...
நல்ல பதிவு.உணர்வு மிக்க ஒரு தமிழன் என்றால் அது சீமான் தான்.
//
கருத்துக்கு நன்றி ஐயா!
Sri said...
தமிழன் மாறனும் தமிழனின் தலைஎழுத்து மாற்றப்படவேண்டும்.
அதற்காக எமது பங்களிப்பை செய்வோம்.
இனியொரு விதி செய்வோம்......விதியினை மாற்றும் விதி செய்வோம்.
//
கருத்துக்கு நன்றி ஐயா!
Sri said...
தமிழன் மாறனும் தமிழனின் தலைஎழுத்து மாற்றப்படவேண்டும்.
அதற்காக எமது பங்களிப்பை செய்வோம்.
இனியொரு விதி செய்வோம்......விதியினை மாற்றும் விதி செய்வோம்.
//
கருத்துக்கு நன்றி ஐயா!
ஜோதிபாரதி,
நிச்சயம் இன்றைக்கு இருக்ககூடியவர்களில்
சீமான் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார்.
நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை அளிப்பார்.
அன்புடன்
மறத்தமிழன்
மறத்தமிழன் said...
ஜோதிபாரதி,
நிச்சயம் இன்றைக்கு இருக்ககூடியவர்களில்
சீமான் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார்.
நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை அளிப்பார்.
அன்புடன்
மறத்தமிழன்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
மறத்தமிழன் said...
ஜோதிபாரதி,
நிச்சயம் இன்றைக்கு இருக்ககூடியவர்களில்
சீமான் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார்.
நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை அளிப்பார்.
அன்புடன்
மறத்தமிழன்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சீமான் ஈழத் தமிழர்கள் விசயத்தில் உணர்வு பூர்வமாக செயல்படுவார் என்றுதான் நினைத்தேன்.ஆனால் ஜீனியர் விகடனில் வந்த செய்தி இவரும் சுயநலவாதி அரசியல்வாதிகள் போல் தான் என்று தோன்றிகிறது.அந்த செய்தி இலங்கையில் நடந்த விழாவில் ஹிரித்திக் ரோஷனை விட தமிழ் சினிமா உலகத்தினரை படுகேவலமாக விமர்சித்தவர் விவேக் ஓபராய். ஆனால், ஹிரித்திக் ரோஷனுக்கு எதிராகக் கூவிக் குரல் கொடுத்து, அவருடைய படங்களை சென்னையில் திரையிடக் கூடாது என விரட்டிய 'நாம் தமிழர்' இயக்கத் தலைவர் சீமான், விவேக் ஓபராய்க்கு எதிராக அசைவதாக இல்லை. ஓபராய் நடித்து ராம் கோபால் வர்மா இயக்கிய 'ரத்தச் சரித்ரா' படத்தில் சூர்யாவுக்கும் ஒரு ரோல் ஒதுக்கப்பட்டு, படமும் ரிலீஸுக்கு ரெடி. ஆனால், அந்தப் படம்பற்றி கேட்டால், 'கிரீஸ்' போட்ட சக்கரமாகச் சத்தம் இல்லாமல் நழுவுகிறார் சீமான்! காரணம்? ''அடுத்த படத்துக்கு சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டுக் காத்திருக்கிறார்...'' என்கிறார்கள். தமிழா... உங்க டக்கு இவ்வளவுதானா?
உண்மையில் சீமானை நகையாடுபவர்கள் படிக்கவேண்டிய கட்டுரை.
Post a Comment