பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா இருவரும் தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவர்கள் இருவரும் கருணாநிதியுடன் கேட்டுக் கொண்டனர். அதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட முதல்- அமைச்சர் கருணாநிதி, ஈழத்தில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்களுக்காக என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், நீங்கள் (கருணாநிதி) உண்ணாவிரதம் இருக்கும் தகவல் கொழும்பு நகரை எட்டி விட்டது. இலங்கையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மீண்டும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதில் அளித்த முதல்- அமைச்சர் கருணாநிதி, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். அதில் ஒரு தீர்வு ஏற்படும் வரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.
முதல்- அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் தொடங்கு முன் உருக்கத்துடன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் சார்பாக இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களை பாதுகாக்க, காப்பாற்ற நான் உண்ணாவிரதத்தினை மேற்கொள்கிறேன்.
நேற்று வரையிலே நம்பிக்கை தருகின்ற அளவிற்கு இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும் என்ற நிலை, அதுமாறி, விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்த பிறகும், நாங்கள் அதை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு கூறிய காரணத்தால், நேற்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து ஒளிப் பேழைகளிலோ அல்லது வானொலியிலோ, பத்திரிகைக் செய்திகளிலோ செய்திகளை எதிர்பார்த்து இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய முன் வராத காரணத்தால், என்னையே நான் அர்ப்பணித்துக்கொள்ள, நம்முடைய தமிழர்களுக்காக என் உயிரையும் வழங்க, இலங்கை அரசு வாங்கிய பலிகளிலே ஒரு பலியாக நானும் அமைய, அடையாளபூர்வமாக எல்லாத் தமிழர்களின் சார்பாக இந்த உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கின்றேன்.
நான் ஒருவன் அதற்காக என்னையே பலி கொடுக்க தீர்மானித்திருக்கின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
*****************************************************************************
முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை அறிந்து தி.மு.க. தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன்பு குவிந்தனர். அவர்கள் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கோஷ மிட்டபடி இருந்தனர். தொண்டர்கள் அமர துணி பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டன.
காலை 8.45 மணியளவில் டாக்டர்கள் குழு ஒன்று வந்து முதல்- அமைச்சர் கருணாநிதி உடல்நிலையை பரிசோதித்தது. வழக்க மாக காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாத் திரை சாப்பிடகூட முதல்- அமைச்சர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
அந்த சமயத்தில் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி வந்தார். அவர் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் உண்ணா விரதத்தை கை விடுமாறு கேட்டுக் கொண்டார்.
பிறகு அவர் நிருபர்களிடம் பேசுகையில், நீங்கள் (கருணாநிதி) உங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கான போராட்டத்தை வேறு விதமாக நடத்தலாம். நீங்கள் உத்தரவிடுங்கள், அதை நாங்கள் முன்நின்று நடத்துகிறோம் என்றார்.
காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், ஜி.கே.வாசன், ஞானதேசிகன் ஆகி யோரும் முதல்-அமைச் சர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினார்கள்.
காலை 6 மணி முதல் 9.20 மணி வரை அவர் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். 9.15 மணிக்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் உள்ளிட்ட டாக்டர்கள் குழு, முதல்- அமைச்சர் கருணாநிதி உடல்நிலையை பரிசோதித்தனர். இதையடுத்து மரக்கட்டில் ஒன்று கொண்டு வரப்பட்டது.
நீண்ட நேரம் அமர்ந்திருந் தால் முதுகுவலி வரும். எனவே கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண் டனர். அதை ஏற்று 9.30 மணியளவில் முதல்- அமைச்சர் கருணாநிதி கட்டி லில் படுத்தார்.
அவர் அருகில் தயாளு அம்மாளும், ராஜாத்தி அம் மாளும், அமைச்சர் ஆற் காடு வீராசாமியும் அமர்ந் திருந்தனர். பல்வேறு கட்சித் தலைவர்கள், மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
********************************************************************************
முதல்-அமைச்சர் கருணாநிதி உண்ணா விரதத்தை முடிக்கும் முன்பு வாசித்த அறிக்கை வருமாறு:-
1924ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 3ஆம் நாள் முத்துவேலர் என்கிற இசைத் தமிழ் தந்தைக்கும் - அஞ்சுகம் என்கிற அன்னைக்கும் திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, குவா குவா என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பிய அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து-பொருள்களைக் களவாடிய போது - அவர்களிலே யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தமிழ் என்கிற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது.
அதை உச்சரிப்பதற்கு - உயர்த்துவதற்கு - உலக மொழிகளில் - செம்மொழிகளில் ஒன்றாக ஆக்குவதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டுமென்று தமிழன்னை கருதினாள் போலும்! அதனால் நான் ஊர்ந்து தவழ்ந்து வளர்ந்து 13ஆம் வயதிலேயே தமிழ் எழுதவும் - கட்டுரைகள் தீட்டவும் - கதைகள் புனையவும் கற்கண்டு தமிழ் எனக்கு உதவிற்று. அந்நாளில் தான் 1938ஆம் ஆண்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் தமிழ்ப்புலவர் பெருமக்கள் தமிழ்க்காத்திடும் போரில் குதித்த வரலாறு தோன்றிற்று. அந்த வரலாற்றில் ஒரு துளியாக நான் இருந்தேன். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்களே, அப்படி இன்று கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நல் இதயங்களின் வாழ்த்துகளைப் பெறுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன்.
இந்த வளர்ச்சியும், வலிமையும் எதற்காக பயன்பட வேண்டும்? என் தமிழைக்காக்கவும் - என் தமிழர் எங்கெல்லாம் அல்லல் படுகின்றாரோ அவர்களைக்காக்கவும் - பயன்படாத இந்த உடல் இருந்து என்ன பயன்? உயிர் இருந்து தான் என்ன பயன்?
உடலில், முதுகில் அறுவை சிகிச்சை ஆயிற்றே, இந்த நிலையில் இலங்கைத்தமிழர்களுக்காக இப்படி ஒரு உண்ணா நோன்பு போராட்டம் என்றால் உடல் என்னவாகும்? உயிர் என்னவாகும்? எங்களுக்கு நீங்கள் வேண்டும் என்றெல்லாம் என் தமிழர்கள், என் உடன் பிறப்புகள் முழக்கமிடுகிறார்கள்; வேண்டுகிறார்கள்.
ஆமாம், அவர்களுக்கு நான் வேண்டும் - எனக்கு அவர்கள் வேண்டும் - என் தமிழ் வேண்டும் - என் தமிழன் காலமெல்லாம் நலமாக வாழ வேண்டும். அவனை அல்லலோ, அவதியோ அண்டவும் கூடாது. தமிழனுக்கு ஒரு காயம் என்றால், அந்தக் காயம் என் உள்ளத்தில் ஆகாய மளவு பரவி நிற்கிறது.
அதனால் தான் இலங்கையிலே வாடிக்கொண்டிருக்கின்ற - மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களை - தமிழ்த் தாய்களை - தமிழ்ச்சகோதரிகளை - தமிழ் மழலைகளை காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்தோடு வாடினேன், வதங்கினேன்.
நேற்றிரவெல்லாம் கண் விழித்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன்.
பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் சொன்னார்கள். நல்லதே நடக்கும் என்று தான் உறுதியளித்தார்கள்.
அதிகாலை 4 மணி வரையில் தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச்செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது.
அதற்குப்பிறகு 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து உண்ணா நோன்பைத்தொடங்கினேன்.
இதன் விளைவாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது என்பதோடு, இனி இலங்கை ராணுவம் இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் அளிக்கப்பயன் படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
*******************************************************************************
இலங்கையில் வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் விடுதலைப்புலிகளை அழிப்பதாக போரைக் காரணமாக காட்டி அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசி அழித்து வருகிறது.
இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்தது.
சட்டசபையில் தீர்மானம், மனிதச் சங்கிலிப்போராட்டம், வேலை நிறுத்தம் என்று பல வழிகளில் தி.மு.க. தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. என்றாலும் சிங்கள அரசு பிடிவாதமாக போரை நிறுத்த மறுத்து விட்டது. 2 சிறப்பு தூதர்கள் சென்று பேசிய பிறகும் இலங்கை அதிபர் ராஜபக்சே அசைந்து கொடுக்கவில்லை.
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்வதாக தன்னிச்சையாக அறிவித்தனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஓரிரவு பொறுத்து இருந்து பார்ப்போம் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.
இந்த நிலையில் இன்று காலை முதல்- அமைச்சர் கருணாநிதி திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். காலை 6.10 மணிக்கு அவர் காரில் தன்னந்தனியாக புறப்பட்டார். மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்த அவர் இலங்கையில் தமிழர்களை காப்பாற்ற உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
அண்ணா சமாதி நுழைவு வாயில் அருகே வலது புறத்தில் அவர் தன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உண்ணாவிரதம் இருந்தார். முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கை அவர் குடும்பத்தினர், தி.மு.க. மூத்த தலைவர்கள் யாருக்கும் தெரியாது.
தலைவர் திடீரென உண்ணாவிரதம் இருக்கிறார் என்று தகவல்கள் பறந்தன. இதையடுத்து கனிமொழி எம்.பி. அண்ணா நினைவிடத்துக்கு விரைந்து வந்தார். அவரைத் தொடர்ந்து தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, தயாநிதிமாறன் ஆகியோரும் அங்கு வந்தனர்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, மேயர் மா.சுப்பிரமணியன், வட சென்னை மாவட்ட செய லாளர் வி.எஸ்.பாபு, வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங் கோவன், தென்சென்னை வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி, வசந்திஸ்டான்லி, சற்குண பாண்டியன், இந்திர குமாரி உள்பட தி.மு.க. தொண்டர்கள் அண்ணாநினைவிடத்தில் குவிந்தனர். தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் அண்ணா நினைவிடத்தில் ஆங்காங்கே அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
முதல்- அமைச்சர் கருணாநிதி திடீரென உண்ணாவிரதம் இருக்கும் தகவல் அறிந்ததும் பிரதமர் மன்மோகன்சிங், கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் போன் மூலம் முதல்-அமைச்சர் கருணாநிதியை தொடர்பு கொண்டு பேசினார்.
உண்ணாவிரதத்தை கைவிட கேட்டுக்கொண்டார். ஆனால் முதல்- அமைச்சர் கருணாநிதி அதை ஏற்கவில்லை.
இதற்கிடையே முதல்வர் உண்ணாவிரதத்தை அறிந்து தி.மு.க. தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன்பு குவிந்தனர். அவர்கள் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கோஷமிட்டபடி இருந்தனர்.
காலை 8.45 மணியளவில் டாக்டர்கள் குழு ஒன்று வந்து முதல்- அமைச்சர் கருணாநிதி உடல்நிலையை பரிசோதித்தது. வழக்கமாக காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாத்திரை சாப்பிடகூட முதல்- அமைச்சர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
அந்த சமயத்தில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வந்தார். அவர் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் உண்ணாவிரதத்தை கை விடுமாறு கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், ஜி.கே.வாசன், ஞானதேசிகன் ஆகியோரும் முதல்- அமைச்சர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினார்கள்.
பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தில் குமரி அனந்தனும் கலந்து கொண்டார்.
காலை 6 மணி முதல் 9.20 மணி வரை சுமார் 3 1/2 மணி நேரம் அவர் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். 9.15 மணிக்கு முதல்வரின் பிரத்யேக டாக்டர் கோபால், இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் உள்ளிட்ட டாக்டர்கள் குழு, முதல்- அமைச்சர் கருணாநிதி உடல் நிலையை பரிசோதித்தனர்.
நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் முதுகுவலி வரும். எனவே கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று 9.30 மணியளவில் முதல்- அமைச்சர் கருணாநிதி கட்டிலில் படுத்தார்.
அவர் அருகில் தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், அமைச்சர் ஆற்காடு வீராசாமி அமர்ந்திருந்தனர். பல்வேறு கட்சித் தலைவர்கள், நடிகர்- நடிகைகள், தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. உண்ணாவிரதத்தையொட்டி, அண்ணா நினைவிடம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
நேரம் செல்ல, செல்ல அண்ணா நினைவிடம் நோக்கி வரும் தி.மு.க. தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு இலங்கையில் போர் நிறுத்தப்பட்டுவிட்ட தகவல் போன் மூலம் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து மதியம் 12.30 மணிக்கு அவர் அறிக்கை ஒன்றை படித்தார். இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக அதில் கருணாநிதி கூறினார்.
இதனால் தனது உண்ணாவிரதத்தை முடித்து கொள்வதாக முதல்- அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். 12.40 மணிக்கு அவர் அண்ணா நினைவிடத்தில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
முதல்- அமைச்சர் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தால் இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர். அகதிகள் முகாம்களில் தவித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
தாங்கள் அமர்ந்து கொண்டு அமைச்சரவை சகாக்களை மட்டும் உண்ணா விரதத்தில் அமர வைத்திருக்கலாமே!
வயதான காலத்தில் உண்ணா நோன்பிருந்து தமிழர்களுக்காக கஷ்டப் படுவது வேதனை அளிக்கிறது.
இதுவரை ஈழத்தில் மரித்த குழந்தைகள், உடல் உறுப்புக்களை இழந்த குழந்தைகளுக்கு ஏதேனும் பதில் வைத்திருந்தால் சொல்லுங்களேன்!
13 கருத்துக்கள்:
இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றும் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும் என்றே கூறியதாகவும் கூறியது. இதை போர் நிறுத்தம் என்று சில மிடையங்கள் தவறான, அவதூறான, விசமனத்தனமான செய்தி வெளியிட்டுள்ளன என்றும் கூறியது.
//இதை நான்கைந்து மாதத்திற்கு முன்பு செய்திருந்தீர்கள் என்றால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாமே ஐயா!//
அப்ப எனக்குன்னு என்ன மதிப்பு..
உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.
கருணாநிதி யின் துரோகங்கள் மாற்று நாடகங்களாக ஈழப்பிரச்சினை யை அவர் கையாள்கிறார்.
கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஈழபிரச்சினையில் உற்று பார்த்தல், எப்பெப்போலுதேல்லாம் அம்மையார் ஈழபிரச்சனையை பேசுகிறாரோ அப்பொழுது அவரின் பேச்சு அல்லது செய்திக்கு எதிராய் கருணாநிதியும் எதாவது ஒன்று எதாவது ஒன்று செய்வார்.
இதன் நோக்கம் அரசியல் பரப்புரை சமன் வேலை . அம்மையாரின் செய்தியை இங்கே காணுங்கள் .
அவர் ஒன்று செய்கிறார் நான் ஒன்று செய்து விட்டேன் அவ்வளவுதான் .
* எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருக்கலாம் - ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்து .
* அரசை நடுதுபவரே உண்ணாவிரம் இருந்தால் . அந்த உண்ணாவிரதம் யாரின் பார்வைக்கு ? . மத்திய அரசின் பார்வைக்கு என்றால் இவரது திமுக கட்சியும் மத்திய அரசி ஒரு அங்கம் தானே ? பின் ஏன் இந்த உண்ணாவிரதம் சென்னையிலும் நெல்லையிலும் உள்ள தமிழர்களை நோகியா உண்ணாவிரதம்? அவர்கள் இலங்கை சென்று போரை நிருதுவார்கள அல்லது அவர்களால் முடியுமா? ஒரு பக்கம் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராய் வேலைபார்த்த மாணவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராய் பரப்புரை செய்த தோழர்களை கைது செய்தது கருணாநிதி அரசு . இங்கே செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/news/latest/tamil_likes_arrested.html
http://www.mdmkonline.com/news/latest/29703007298029903021298629922980302129803007299330212965.html
* மறுநாளே தாம் உண்ணாவிரதம என்கிறார் . எதை நம்புவது அல்லது அவரின் உண்மையான நோக்கம் என்ன .? தமிழர்கள் இழிச்சவாயர்கள ?
இந்த செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/article/avoid_congress__dmk/pc_and_srilanka_minister_in_same_statement.html
* இன்னும் இரண்டு நாளில் போரை முடிவுக்கு கொண்டுவருவதென்று கருணாநிதி , சிதம்பரம் , மன்மோகன் சிங்க் , ராஜ p அக்ஷே ஆகியோர் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள் . எனென்றால் போரை நடத்துவது இந்த கூட்டணிதான் .
அவர்களின் நாடக இருதிகட்டம்தான் இந்த உண்ணாவிரதம் என்று என்ன தோன்றுகிறது .
* அடுத்து இந்த செய்தியும் கருணாநிதியின் தூக்கத்தை கெடுத்து விட்டது .
http://www.mdmkonline.com/news/latest/295129942969302129653016_29703014298530212993301529853021.html
* எனென்றால் விடுதலைபுலிகளை சர்வாதிகாரிகள் மற்றும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற தோரணையில் கருணாநிதியின் பேச்சு இருந்தது .
இந்த செய்தியையும் பாருங்கள்
* நான் சொல்வதை மத்திய அரசு கேட்கவில்லை என்று கருணாநிதி சொன்னால் அது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்குகளில் ஒன்றாகும் . ஏனென்றால் மத்திய அல்லது மாநில அரசாங்கம் நல்ல புரிதலில் உள்ளது . இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டுகொடுதுகொண்டிருக்கின்றன , இந்த இரு அரசாங்கம் இணைந்து மூன்றாவதாய் இலங்கை அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து போரை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதுவே உண்மை .
* நேற்று அமெரிக்கன் அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுதுவிட்டது
* அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம் கொடுத்துவிட்டது . இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது .
* போரை நாம்தான் நடுதுகிறோம் என்பதை உலகம் பகிரங்கமாய் உணரதொடங்கிவிட்டது . இந்த நிலைமையில் இந்த ஈழ போர் விஷயத்தை அப்படியே பூசி மொழுகி அமுக்கவேண்டும் .
* ஆகவே இன்னும் நிச்சயம் போர் இரண்டு நாளில் நிற்கும் . அதற்குள் தமிழர்கள் குறைத்து பத்தாயிரம் பேர்களை கொள்ளுவார்கள் . அதற்குத்தான் இலங்கை அனுமதி கேட்டுள்ளது இந்தியாவிடம் .
* இடையில் இங்கே இந்தியாவில் கருணாநிதி , மன்மோகன் , சிதம்பரம் சோனியா கூட்டணியின் நாடகம் . தேர்தலுக்காக .
* ஒரே ஒரு சந்தோசம் , இன்னும் சிறுது நாளில் ( இரண்டொரு நாளில் ) இலங்கையும் போர் நிறத்த செய்தியை அறிவிக்கும் என்பதுதான் அது எஅர்கனவே முடிவானதுதான் .
* வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க அவர்களது கூட்டணியின் ஈழப்பற்று .
http://www.mdmkonline.com/news/latest/india_directly_supporting_sla.html
- தோழர் .
எப்படி "கருணா"நிதி போலவே கூசாமல் பொய் கூறுகிறீகள். கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்காமல் கண்ணை திறந்து பாருங்கள் நீங்கள் அம்மணமாய் நிப்பதை உலகமே வேடிக்கை பார்க்கிறது.
போர்நிறுத்தம் அறிவிக்கவில்லை இந்திய ஊடகங்கள் மாற்றி சொல்லிவிட்டன என இலங்கை அரசு அறிவித்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டது நண்பரே . மற்றும் வழக்கம் போல் இன்றும் விமான தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கிறது
எப்ப பொணத்தை எடுப்பார்களாம்...சமாதி எங்கே கடற்கரையிலா..இல்லை குவளையிலா..
போர் நிறுத்தம் செயல்முறைபடுத்தப்பட்டால் கலைஞருக்கு எனது நன்றி.
இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை.
http://www.defence.lk/new.asp?fname=20090427_08
ஏமாத்திட்டோம்னு கலைஞரும் சிதம்பரமும் கும்மி அடிக்கிறாமாதிரி இருக்கு.
இது ஒரு ஏமாற்று வேலை என்றாலும் .... ஒரு நிமிடம் மானுடம் சிந்திக்க வைக்கும்.. ஆனால் இன்றும் தாக்குதல் தொடர்கின்றது..
கலைஞர் ஒரு சிறந்த நடிகருன்னு அவரோட கடைசி நாட்கள் வரை நிரூபிக்க வேண்டி கட்டாயம்... !! பாவம் அவர் ரொம்ப நல்லவரு.....!! விரைவில் அவருக்கு ஆஸ்கர் துறையினர் அவார்ட் அறிவிக்க போகிறார்களாம்... !! வாழ்த்துக்கள் கலைஞர் ஐயா....!!!!
வன்னிய ஒற்றுமை ஓங்குக
http://tamilnational.com/news-flash/821-situation-report-apr28.html
Post a Comment