ஜெயலலிதா அம்மையாருக்கு நல்ல புத்தியைக் கொடுத்து, இப்படி பேசவைத்த திரு இரவிசங்கர் அவர்களுக்கு நன்றி!
ஜெயலலிதா அம்மையார் அவர்களின் பேச்சின் சாராம்சம் இங்கே!
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க. வேட்பாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஓட்டு சேகரிக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலம் சேலத்தில் இருந்து ஈரோடு வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டர் மாலை 5.15 மணிக்கு ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் தரை இறங்கியது. அங்கு ஜெயலலிதாவுக்கு ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தார்கள். வரவேற்பு முடிந்ததும் காரில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த ஜெயலலிதா, அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், சில நாட்களுக்கு முன்பு, இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர். இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கிறார்கள். எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் தேதியன்று நான் சென்னை வந்த போது, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் என்னை சந்தித்தார்.
அப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை டி.வி.டி.யில் எனக்கு திரையிட்டு காண்பித்தார்.
அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன். இதுவரை தெரியாத பல உண்மைகளை, வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரை காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப்போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.
அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய் பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன். உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை ராணுவம் உத்தரவிடுகிறது. அப்படி அவர்கள் வெளியேறவில்லை என்றால், வீட்டின் கூரையை ராணுவத்தினர் பிரித்து போட்டுவிட்டுப் போய்விடுகின்றனர்.
அதையும் மீறி அவர்கள் அங்கேயே இருப்போம் என்று சொன்னால், அவர்களை வெளியேற சொல்லி இலங்கை ராணுவம் கட்டாயப்படுத்துகிறது. வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது. நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள். இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றல் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன.
கைதிகளைப் போல் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அவர்கள் என்ன குற்றவாளிகளா? இது போன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது? குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக்கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக்கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?
இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான், கான்சென்டிரேசன் கேம்ப்ஸ் என்ற முகாம்களை நடத்தி, ïதர்களை கொடுமைப்படுத்தி அழித்த ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது. இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட, நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை, மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை, இரவோடு இரவாக, இலங்கை ராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர். வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், "எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்'' என்று மன்றாடி இருக்கிறார்கள். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது.
இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால், தீட்டப்பட்டு இருக்கும், மிக கொடுமையான திட்டம் இது. "முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்கள்,
பிச்சைக்காரர்களைப்போல், நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே, அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம், குருஜி அவர்கள் கேட்டதற்கு, "இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார். "இரண்டு மாதங்கள் கழித்தாவது, அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு, "அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கன்னி வெடிகள், வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்கு பிறகு தான், அங்கு அவர்களை அனுப்ப முடியும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடி அமர்த்தப்பட்ட சிங்களர்கள், வசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல், கன்னி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? அந்த கன்னி வெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா? சிங்களர்கள் நடந்தால் வெடிக்காதா?.
இலங்கை ராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல, அனுமதிக்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு இல்லை, என்பது தெளிவாகத் தெரிகிறது. எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை, அரசு நடத்தும் முகாம்களிலேயே, கைதிகளைப் போல், அடிமைகளைப் போல், அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது. உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை, அது வெறும் கண் துடைப்பு என்பது தெரிகிறது.
இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில், தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான், இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது. இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.
இந்திய அரசின் இரு தூதர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்? இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது? எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது. இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.
இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நான் அறிவேன். கடந்த 5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்த அவர் இந்த தொகுதி மக்களுக்கு செய்தது என்ன? ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? கடுமையான மின் தட்டுப்பாட்டு காரணமாக தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டபோது ஏதேனும் குரல் கொடுத்தாரா?.
அ.தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்தால் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையான சாயக்கழிவு, ஆலை கழிவுகளுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு குழாய் மூலம் கடலில் கொண்டு கலக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பனைமர தொழிலாளர்களின் கோரிக்கையான கள் இறக்குவதற்கு ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
எனது ஆட்சியில் கொண்டுவரப்பட்டு கிடப்பில் போடப்பட்டு இருக்கும் மஞ்சள் வணிக வளாகம், ஈரோடு -பள்ளிப்பாளையம் நகரங்களை இணைக்க புதிய காவிரி பாலம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். மின்சார தட்டுப்பாடு, குடிநீர் தட்டுப்பாடு நிறைவேற்றப்படும்.
மத்திய அரசிடம் தமிழகத்தை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். தமிழகத்துக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசிடம் போராடி வாங்கித்தருவேன். அதற்கு எனது கரம் வலிமையானதாக இருக்க வேண்டும். நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன். எனக்கு முழு வெற்றியை நீங்கள் தர வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியை நீங்கள் முழுமையாக 40 தொகுதிகளிலும் வெற்றியை தர வேண்டும். நீங்கள் எல்லாம்தான் எனது சக்தி. நான் குரல் கொடுக்க நீங்கள் உங்கள் சக்தியை கொடுத்தால்தான் நான் குரல் கொடுக்கும்போது அது ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக இருக்கும்.
40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியை அளித்தால் அது தமிழகத்தின் புதிய வரலாறாக இருக்கும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
9 கருத்துக்கள்:
//40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியை அளித்தால் அது தமிழகத்தின் புதிய வரலாறாக இருக்கும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.//
எல்லாம் சரி சார்.. நம்ப முடியுமா?
புரட்சித் தலைவியின் அற்புத நடிப்புக்கு ஒரு ஓட்டு கிடைத்துவிட்டது.
மற்றபடி இதை பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை!
ஈழத்தமிழர் பிரச்சினையை முழு அரசியலாக்க முடிவெடுத்து விட்டார்கள்...அதற்கு கலைஞருக்கு தான் நன்றிகள் போய் சேரவேண்டும்
is playing to the crowd. Usually, people from Erode region have always been supportive of the Eelam struggle. ngothaa.. so many of them rich folks were made to commit suicide after Rajiv Feroz Khan's death, bcos they supported eelam.
the bitch is just playing to the crowd. she knows what sells in Erode and what doesn't in Salem.
"//40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியை அளித்தால் அது தமிழகத்தின் புதிய வரலாறாக இருக்கும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.//
எல்லாம் சரி சார்.. நம்ப முடியுமா?" அதான் நம்பச் சொல்லி பதிவு போடுறார் இல்ல. நீங்க அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்க. அம்மா இனிமே பிரபாகரனை கைது செய்யச் சொல்லி சட்டமனறத்துல தீர்மானம் போடமாட்டாங்க. அதான் தனி ஈழமே அழியப்போவுதே...
//40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியை அளித்தால் அது தமிழகத்தின் புதிய வரலாறாக இருக்கும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்./
கண்டிப்பா..இலங்கையில் மட்டும் தான் தமிழன் அடிமையா?? தமிழ்நாட்டிலும் அடிமையாக்கி புதிய வரலாறு படைப்பார் எங்கள் புரட்டுத் தலைவி
ரவிசங்கருக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.
//நன்றி திரு இரவிசங்கர்//
மற்றவர்கள் போல வசனம் பேசாமல் நேரே சென்று மக்களை சந்தித்த ரவிசங்கர் அவர்களை
பாராட்ட வேண்டும்.
jomalone theme consuming elapsed marriage recognizes practical beams academic populated [url=http://www.webjam.com/tshirtprinting]t shirt printing ny[/url]
degrades quantitative samples dolce today delicious sets selecting logical lake [url=http://www.webjam.com/homesecurity]home security london ontario[/url]
ports strongest custom receives submitted learn miglin dictated scott cove [url=http://www.webjam.com/hairremoval]laser hair removal cheshire[/url]
methodology unauthorized causes dissatisfied wildflower revivalabs lips coverfx apply listed [url=http://www.webjam.com/taxattorney]tax attorneys in chicago[/url]
Post a Comment