திருவரங்கக் காவிரி
கொள்ளிடம் சென்று
கடலில் கலந்து விட்டது
அதன் பிரதான நதியும்
கிளை நதிகளும்
என்றும் நம்முடன்...
2000-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கு சன் டெக் சிட்டி செற்றிருந்த போது, புத்தக மற்றும் மென்பொருள் கடைகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்தேன். திடீரென்று யாரோ ஒரு பெண்மணியின் குரல் தம்பி! என்று அழைத்தது கேட்டது. சட்டெனத் திருப்பிப் பார்த்தேன். அந்த பெண்மணிக்கு பக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா நின்று கொண்டு இருந்தார். ஆச்சர்யத்துடன் அவர்கள் இருவருக்கும் புன்முறுவலுடன் வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர்களிடம் சென்றேன். நான் திரு சுஜாதாவோடு பேசுவதற்குள் அந்த பெண்மணி இவர்தான் எழுத்தாளர் சுஜாதா என்று எனக்கு அறிமுகப் படுத்திவிட்டார். இவ்வளவு உயர்ந்த, பிரபலமான எழுத்தாளரை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாரே என்று கொஞ்சம் சங்கடத்தில் நெளிந்தது உண்மை. நான் சொன்ன பெண்மணி திரு சுஜாதா அவர்களின் துணைவியார் என்று பின்பு தெரிந்து கொண்டேன். பிறகு சுஜாதா அவர்களிடம் இணையத்தைப் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் பெற்று வந்தேன்.அந்த அமைதியான, அபூர்வமான மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம். அவரை இழந்தாலும், அவருடைய எழுத்துக்கள் என்றும் வாழும் நம்முடன்...
அன்புடன் ஜோதிபாரதி

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)

2 கருத்துக்கள்:
ஆம் அவர் எழுத்துக்கள் வாழும். அவரும் எல்லார் இதயங்களின் வாழ்கிறார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி மாதங்கி! இரண்டு சுஜாதாக்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒன்று எழுத்தாளர் சுஜாதா, மற்றொன்று அவரது வாழ்க்கைத்துணை சுஜாதா!!
அன்புடன்,
ஜோதிபாரதி.
Post a Comment