வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

Thursday, May 28, 2009

பொறுப்புள்ள தமிழக முதல்வரின் பதில் என்ன?

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ராஜபக்சே அரசு பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது. நிராயுதபாணிகளாகத் தப்பியோடிய தமிழர்களை குண்டுவீசி தாக்கி படுகொலை செய்திருக்கிறது.

இந்தக் குற்றத்திற்காக ராஜபக்சே மீதும், அவரது சகாக்கள் மீதும் போர்க் குற்ற வழக்குத் தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு திரண்டு வருகிறது.

அதற்கு முதல் படியாக ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான விசாரணை தொடங்கியிருக்கிறது. கொலை வெறி பிடித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், தென்அமெரிக்க நாடுகளும் உலக அரங்கில் அணி திரண்டு நிற்கின்றன.

ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் நடக்கும் விசாரணையை முடக்கிப் போட்டுவிட வேண்டும் என்று இலங்கை பகீரத முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நமது பகை நாடுகளுடன் இந்தியாவும் கைகோர்த்துக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது.

இத்தகைய விசாரணை இப்போது தேவையில்லை என்கிற அளவுக்கு மனித உரிமை மன்றத்தின் முதல் நாள் விசாரணையில் இந்தியா வாதிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சே அரசின் துரோகத்திற்கு இந்தியா துணை போகக் கூடாது என்று உலகத் தமிழர்களெல்லாம் குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்கு வலிமை சேர்க்கும் வகையில், ஓங்கி குரல் எழுப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதலமைச்சருக்கு இருக்கிறது.

இலங்கை இறையாண்மை மிக்க நாடு; அதன் உள்விவகாரங்களில் தலையிடுவதன் மூலம், அதன் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதிக்கப்பட்டுவிடும் என்று இந்தியப் பேரரசு தொடர்ந்து சொல்லி வருவதை தமிழகத்தின் முதலமைச்சரும், எதிரொலித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.


ஈழத் தமிழர்களை ஈவு இறக்கமின்றிக் கொன்று குவித்தது தவறு என விசாரணை நடத்த வேண்டும் என்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும் என்றால், அதற்கு காரணமான போருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவியிருப்பது உள்விவகாரங்களில், தலையிட்டதற்கு ஒப்பாகாதா?


இந்தியா எங்களுக்கு உதவி வந்திருக்கிறது என்று இலங்கைத் தலைவர்கள் பலரும், பலமுறை பகிரங்கமாகவே அறிவித்து நன்றி தெரிவித்து வந்திருக்கிறார்கள். இன்றளவும் இது மறுக்கப்படவில்லை.

இனப் படுகொலைக்கு எதிரான விசாரணையை ஆதரிப்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது என்றால், அதற்கு உதவி இருப்பதும், உள்விவகாரங்களில் தலையிட்டதற்கு ஒப்பானதுதான் என்று இந்திய அரசுக்கு உணர்த்த தமிழகத்தின் முதலமைச்சருக்குத் தைரியம் இல்லாமல் போனது ஏன்?

மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை முடக்கிப் போட இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சி தமிழர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் நம்புகிறார்கள்;

தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களின் எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டு இலங்கைக்குத் துணை நிற்க வேண்டாம் என்று கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிற முதலமைச்சர், இப்போது ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரிந்து விட்டதற்குப் பின்னர் என்ன பரிகாரம் காணப்போகிறார்?’’ என்று தெரிவித்துள்ளார்.

இதை வெளியிட்டவரின் நம்பகத் தன்மை, கேள்வி கேட்கும் அருகதை போன்ற கேள்விகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு கொஞ்சம் சிந்தித்தால் உண்மை விளங்கும். இதற்கு பொறுப்புள்ள தமிழக அரசும் முதல்வரும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?




6 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

இதற்கு தமிழக அரசும், 'குடும்ப' பொறுப்புள்ள முதல்வரும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

- என்று முடித்திருக்க வேண்டும்

கலையரசன் said...

பதில் எல்லாம் சொல்ல மாட்டானுங்க தலைவா!
நாமதான் இங்க கத்திக்கிட்டு இருக்கோம்!

Suresh Kumar said...

பொறுப்புள்ள தமிழக முதல்வரின் பதில் என்ன?////////


அவரு பொறுப்பானவரா இருந்தால் தானே சொல்வாரு தல

நையாண்டி நைனா said...

/*
இந்திய அரசுக்கு உணர்த்த தமிழகத்தின் முதலமைச்சருக்குத் தைரியம் இல்லாமல் போனது ஏன்?
*/

40௦ பக்க நோட்டு இருக்கும்போதே கட்டுரை எழுத முடியாதவரை பார்த்து, இப்ப ரயிலு டிக்கட்டும் கெடைக்காமே பஸ் டிக்கட்டு மட்டும் வச்சிருக்குரவரை பார்த்து கேக்குரியலே...

nagaindian said...

Tamil Nadu MPs should not participate the Central Govt. Ministries List.

podhigai thendral said...

இத்தனை காபினெட் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து நினைத்ததை சாதித்துக்காட்டினார்.இவர் பிடிவாதத்தில் பாதியளவு இலங்கை பிரச்சினையில் காட்டியிருந்தால் எதாவது நடந்திருக்குமோ ?..
அவர் எப்படி செய்வார் அவர் குடும்பம் நன்னா இருக்குல்ல.......குடும்பத்திற்கு என்ன வேணாலும் செய்வார் ,இலங்கை பிரச்சினைக்கு தந்தி அடிப்பார்.குடும்பபிரசினைக்கு ப்ளைட் பிடித்து செல்வார்.!
அண்ணே இவரைபத்தி பேசினாலே கண்ணைகட்டுதுன்னே!