Thursday, May 7, 2009

பொய் பிரச்சாரத்தை நம்பாதீர்கள் - உடன்பிறப்புகளுக்கு கலைஞர் அறிவுரை

உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அபாயகரமான முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு ஆளாகி பிழைத்துக்கொண்டேன். இப்போது மீண்டும் இரண்டாவது கண்டம். இந்த கண்டத்திலும் உனை காணுகின்ற வாய்ப்பை மீண்டும் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

காரணம் நான் உன்னோடு இல்லாவிட்டாலும், நான் இருப்பதைப்போல எண்ணிக்கொண்டு நீ பணியாற்றுவாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பது ஓர் உயிர். அது போகப்போவது ஒரு முறை. ஆனால் அது நல்ல காரியத்துக்காக போகட்டுமே என்ற அண்ணாவின் பொன்மொழியை இருதயத்திலே தாங்கி இத்தனை ஆண்டு காலமாக பணியாற்றி வருகின்றவன் நான்.

தேர்தல் நாள் நெருங்கி விட்டது. தேர்தல் பணிகளில் நம்முடைய திமுக தோழர்களும், காங்கிரஸ் நண்பர்களும், அதேபோல விடுதலைச் சிறுத்தைகளும் பம்பரம்போல் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இவற்றை கேட்கும்போது மருத்துவமனையில் இருக்கும் எனக்கு மருந்தாக இருக்கிறது. அந்த மருந்தை தொடர்ந்து எனக்கு அளித்துக்கொண்டிருப்பாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாம் இலங்கையிலே வாழுகின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம்.
அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்பதை என்னை நம்பு என்னை மறவாதே நான் உன்னோடு என்றைக்கும் இருக்கின்றவன், எங்களுக்காக நீ, உங்களுக்காக நான் என்பதை மறந்துவிடாமல் இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம்.

யார் என்ன பொய் உரைத்தாலும், எத்தகைய பித்தலாட்ட பேச்சுக்களில் இறங்கினாலும், அவைகளையெல்லாம் நம்பாதே என்னுடைய அன்புக்கும் பண்புக்குரிய பேராசிரியர்களும், மூத்த வழக்கறிஞர்களும், மூத்த தமிழரிஞர்களும் வெளியிட்டுள்ள அறிக்கைகளை பார்த்து நடந்துகொள் என்று கேட்டு விடைபெறுகிறேன் என்று கூறினார்.


நன்றி:நக்கீரன்




Wednesday, May 6, 2009

சென்னையைத் தவிர்த்த அன்னையும் வெண்ணைகளும்


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சென்னை, புதுச்சேரி பிரசார பொதுக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டன.இத் தகவலை காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்தும் இன்று நடக்கவிருந்த பிரசாரக் கூட்டங்களில் பேச சோனியா திட்டமிட்டிருந்தார்.ஆனால், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதால் சென்னை கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டவும் சில அமைப்புகள் திட்டமிட்டிருந்தன.

திரையுலகினரும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்த இருந்தனர்.இந் நிலையில் சோனியா தனது ‌சென்னை, புதுச்சசேரி பிரசாரக் கூட்டங்களை திடீரென ரத்து செய்துள்ளார். இத் தகவலை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் உறுதி செய்தார்.

முன்னதாக சோனியா காந்தியின் வருகையையொட்டி புதுச்சேரியிலும், சென்னையிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை வர இருந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்லவும் அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் திரும்பி தீவுத்திடல் அருகே உள்ள ஐ.என்.எஸ். ஹெலிபேட் தளத்தில் இறங்கவும்,அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் தீவுத் திடல் மேடைக்கு வந்து தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.

தீவுத் திடலில் இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், பூவை ஜெகன்மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பேச இருந்தனர்.

இந் நிலையில் முதுகு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதி இன்று தான் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார்.எனவே அவரால் சோனியா காந்தி கூட்டத்திற்கு வர முடியாத நிலை உள்ளதாக காங்கிரசிடம் திமுக தரப்பு தெரிவித்தது.

இந் நிலையில் சோனியா காந்தியே தனது கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்.முன்னதா சோனியா காந்தியின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேடை அமைக்கும் பணி தொடங்கியதுமே தீவுத்திடல் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

செக்போஸ்ட் அமைக்கப்பட்டு தீவுத்திடலுக்குள் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.வெடிகுண்டு நிபுணர்கள் தீவுத்திடல் முழுவதும் சோதனை செய்து வந்தனர். மோப்பநாய்களும் மைதானம் முழுவதும் வலம் வந்து கொண்டே இருந்தன. ஏராளமான போலீசாரும், சிறப்பு பாதுகாப்பு படையினரும் தீவுத்திடலில் குவிக்கப்பட்டிருந்தனர்.


குற்றம் செய்த மனசு குறுகுறு என்றிருக்கு போலும்!?

கருணாநிதி மிகச் சிறந்த நடிகர்


இலங்கைப் பிரச்சனையில் உண்ணாவிரத நாடகம் நடத்தியதன் மூலம் முதல்வர் கருணாநிதி மிகச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து தாம்பரம் அருகே பிரச்சாரம் செய்த ராமதாஸ் பேசுகையில்,

திமுக அரசிடம் மது ஒழிப்பு நடவடிக்கை வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அரசு ஒரு மணி நேரம் மட்டும் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்தது. கல்விக்கூடங்களை தனியார்மயமாக்கிய அரசு மதுக்கடைகளை மட்டும் அரசுடமையாக்கியுள்ளது.

திமுக வேட்பாளர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள். டி.ஆர்.பாலு கப்பல் முதலாளி ஆவார். எங்கள் கட்சி வேட்பாளர்கள் சாதாரண பொறுப்பில் இருந்து மேல்நிலைக்கு வந்தவர்கள்.

தனி ஈழம் அமைத்துத் தருவதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் இதற்கு கருணாநிதி தனி ஈழம் எப்படி அமையும் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்தால் தனி ஈழம் உருவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை பிரச்சனை குறித்து கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காலையில் டிபன் சாப்பிட்டு முடித்துவிட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்வதற்காக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். தனது உண்ணாவிரத போராட்டத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிரந்தரமாக ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், அன்றைய தினமே 142 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

உண்ணாவிரதம் நடத்தி நாடகமாடியதன் மூலம் கருணாநிதி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார் என்றார் ராமதாஸ்.

நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, May 4, 2009

இந்தியா போர்நிறுத்தம் செய்யச் சொல்லவில்லை - கோத்தாபய ராஜபக்ஷே சொல்கிறார்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தவில்லை என்று அந் நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளரும் அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோதபய மீண்டும் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் கடந்த மாதம் இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். அதிபருடன் அவர்கள் பேச்சு நடத்தினர். அவருடன் நடத்திய பேச்சு குறித்து விவரம் எதுவும் அப்போது தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு கோதபய பேட்டி அளித்துள்ளார்.

அதில், கூட்டணிக் கட்சியான திமுகவின் நிர்பந்தம் காரணமாகவே இந்திய அரசு இலங்கைக்கு நெருக்குதல் அளித்து வருவதாக செய்திகள் வெளியாவது குறித்த கேளிவிக்கு பதிலளித்த அவர்,

சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் எங்களை வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தினர்

விடுதலைப் புலிகள் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் எவ்வித நெருக்குதலும் தரவில்லை. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவே அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

போர் பகுதியிலிருந்து, அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகள் இருவரும் அப்போது திருப்தி தெரிவித்தனர். மேலும் இந்தியா சார்பில் நிவாரண உதவியாக ரூ.200 கோடி அளிக்கப்படும் என்று உறுதியளித்தனர் என்றார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகளும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டே போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் அளிக்கின்றன. புலம்பெயர்ந்த மக்கள் அளிக்கும் நிதியை அந்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்கின்றன. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள் என்றார் கோதபய.

இதன்மூலம் நாராயணன், மேனன் ஆகியோரை வைத்துக் கொண்டு மத்திய அரசு போர் நிறுத்த விஷயத்தில் தமிழகத்தை ஏமாற்றி வருவது மீண்டும் தெள்ளத் தெளிவாகிறது.


நன்றி: தட்ஸ் தமிழ்

அழையா விருந்தாளி சோனியா - வரவேற்பு பா




இங்கு தொடங்கிவிட்டது

அக்கினி நட்சத்திரம்

வேனல் சூடு கனல்

வெந்து போய் விடும்

நீர் மட்டும்

கிடைக்கும் உனக்கு

கானல் நீர்

வேர் அறுக்கலாம் நீ

ஆணி இருக்கும் அப்படியே

கள்ள உறவாடலாம் நீ

கவனமாக இரு

சுண்ணாம்பை கண்ணில்

வைத்துப் பார்க்கச் சொல்கிறாய்

எரிகிறது

இந்தியா ஆங்கிலக் காலணிதான்

ஒரு காலத்தில்

இங்கு எளிய மக்களும் உண்டு

இமெல்டா மார்கோஸ்களும் உண்டு

சந்திப்பதற்கு முன்

சிந்தித்துக் கொள்

நாதியத்தவர்களிடம் வருவதை விட

பாதியில் போய் விடலாம் போ

உனக்கு கம்பளம் விரிப்பவர்கள்

கிம்பளம் வாங்கியதை

மறந்துவிடு

அவர்களை எங்களிடம் இருந்து

பிரிக்காதே

உனக்கு இரத்த வாடை வேண்டுமா

வங்கக் கரையோரம் வந்து நில்

கொத்துக் கொத்தாக

பிணங்களைப் பார்க்க வேண்டுமா

இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும்

திருப்தியில்லை என்றால்

திரும்பவும் எங்களிடம் வா

வாக்களித்து

வெற்றி பெற வைக்கிறோம்

ஆனால் பாவம்

உனக்கு மூலம்

ஆட்சிக் கட்டிலில்

அமர முடியாது

உனது கட்சிக்கு

நிர்மூலம்

தமிழகத்தில்

விழலுக்கு நீர்

இறைக்க வேண்டாம்

நீரும் வீண் விழலைப்போல்

இரண்டுக்கும் தோல்விதான்

எங்களுக்கு நீ

அழையா விருந்தாளியல்ல

பிழையான மருந்து










Sunday, May 3, 2009

கருணாநிதி வேதனை - தமிழ் நெஞ்சில் தைத்த ஆணிகள், இரத்தம் வழியும் காயங்கள்



இலங்கை பிரச்சனை தொடர்பாக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருக்கிறார், அதை இங்கு தருகிறேன்

‘’விடியலுக்கு முன்பே திருச்சியிலிருந்து எழுதுகிறேன் இந்தக் கடிதம்- அந்த ஏப்ரல் 27 அதிகாலை ஐந்து மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து விட்டேன்.

அதுவரையில் நான் தூங்கிக் கொண்டிருந்தால் அல்லவா; எழுந்து உட்கார்ந்தேன் என்று சொல்ல முடியும். இரவு முழுவதும்தான் உறக்கம் கிடையாதே! இரவு 10 மணி அளவில் தொலைபேசி மணி அடித்தது. தம்பி கவிப்பேரரசு பேசினார்.

இலங்கையிலிருந்து ஏதாவது செய்தி உண்டா என்று கேட்டார். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்-இந்தப் பதிலுடன் நிறுத்தி விட்டேன். மீண்டும் இரண்டொரு செய்தியாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

நல்ல சேதியையே எதிர்பார்ப்போம் என்று ப.சிதம்பரம் சந்திப்புக்குப் பிறகு; நல்லதே நடக்குமென நம்புவோம் என்றீர்களே; அது என்ன ஆயிற்று? என்பதே தொடர்ந்து கேள்விகளாக ஒலிக்கத் தொடங்கின. இன்று ஓர் இரவு பொறுத்திருந்து பார்ப்போம் என்றேன்.

என் மனோநிலை இரவு உணவு எடுத்துக் கொள்ள இடந்தரவில்லை. சுருண்டு கொண்டு படுத்தேன். என் அவசர அவசிய உதவிகளுக்காக என்னுடன் இருந்த மருத்துவ நண்பர் ஜம்பு என் முகத்தைப் பார்த்து விட்டு; என்ன தலைவரே; இன்று காலை முதல் ஏதோ கவலையில் இருக்கிறீர்கள்? என்று கேட்டபோது "ஒன்றுமில்லை ஜம்பு- உடல் நிலையைப் பற்றிய வேதனைதான் என்று கூறி சமாளித்துக் கொண்டேன்.

ஆனால் என் காதுகளில் கடந்த காலத்தில் என்னுடன் நேச பாசத்துடன் பழகிய நண்பர்கள் சிலர் பொதுமேடைகளில் என்னைப் பற்றிப் புழுதி வாரித் தூற்றுகின்ற அந்த ஒலி முழக்கம்; ஓராயிரம் உளி கொண்டு தாக்குவது போலிருந்தது.

தமிழ்ப்பால் குடித்து வளர்ந்து, 13-ஆம் வயதிலேயே எனக்கும் என் போன்ற இளைஞர்கள் சிலருக்கும், தமிழ் வேல் வடித்துக் கொடுத்து;ஓடி வந்த கட்டாய இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!

வாருங்கள் எல்லோரும் இன உணர்வுப் போருக்குச் சென்றிடுவோம் வந்திருக்கும் இந்தித் திணிப்பை விரட்டித் திரும்பிடுவோம் என்று நான் இயற்றிய பாடலை நாள்தோறும், திருவாரூர் தெருக்களில் குழு முழக்கமாக (கோரஸ் பாட்டு) இசைத்துக் கொண்டு, புலி, வில், கயல் பொறித்த கொடிகளைத் தோளில் தாங்கி- இந்தி ஆசிரியரால் அடிபட்டு விரட்டப்பட்டு, அல்லற்பட்ட அந்தக் காலத்திலிருந்து பெரியாரின் பிள்ளையாக அண்ணாவின் தம்பியாக வளர்ந்து விட்ட எனக்கு;

அவர்கள் வழங்கிய வலிமையும், உறுதியும், வாய்மையும் எப்படி என்னை விட்டு அகன்று விடும்? பாலப் பருவம் கடந்தும் பல தடவை;

எனக்குப் பாலுடன் கலந்தூட்டிய என் தமிழுக்காக அளவிட முடியா அடக்கு முறைகளைத் தாங்கியிருக்கிறேன். பாதி இரவில் என்னைக் கைது செய்து, பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில்- மதுரை ராணுவ முகாமில் நான் நெஞ்சு வலியால் துடித்தபோது- சிகிச்சையளித்து, அந்த இரவோடு இரவாக பாளைச்சிறையில் கொண்டு போய்- அங்கே 24 கொட்டடிகள் காலியாக இருக்க - ஒரே ஒரு கொட்டடியில் என்னைத் தன்னந்தனியாக அடைத்து வைத்தார்கள்.

ரெயில் ஓட்டியவர் ஒருக்கணம் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருந்தால்-நானும், முல்லை சத்தியும், கஸ்தூரிராஜும், குழந்தைவேலனும், குமாரவேலனும் கல்லக்குடியில் தண்ட வாளத்தில் தசைக்குன்றுகளாகத்தான் காட்சியளித்திருப்போம்.

தமிழ்காத்திடத் தண்டவாளத்தில் தலை வைத்தமைக்காக அரியலூர் நீதிபதி அளித்த தண்டனை ஆறு மாதக் கடுங்காவல்.

இலங்கையில் 1956-ல் தந்தை செல்வா தொடங்கிய தமிழர் சமஉரிமைக் கானப் போராட்டத்திற்கு ஆதரவளித்து அண்ணா முன்னிலையில் சிதம்பரம் பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து, அதைப் பொன்னம்பலனார் வழிமொழிந்திட- அதனையொட்டி நான் செய்த அறப்போர் முழக்கம் இன்னமும் எல்லோரின் செவிகளிலும் எதிரொலித்துக் கொண்டு தானே இருக்கிறது?


1983-ல் குட்டிமணியைக் குருடாக்கி கொன்று குவித்தபோதும்-ஜெகன், தங்கதுரை போன்றோர் செத்தொழிந்த போதும்- அரை நாள் அறிவிப்பில் சென்னை குலுங்கிட ஆறு லட்சம் பேர் நடத்திய அணிவகுப்புக்குத் தலைமை தாங்கியதும்- அகில இந்தியத் தலைவர்கள் வாஜ்பய், என்.டி.ராமராவ், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங்,

ராச்சையா போன்றவர்களை மதுரை டெசோ மாநாட்டுக்கு அழைத்து, தமிழ் ஈழம் மலர்வதற்கு வலியுறுத்தியதும்- அதனைத் தொடர்ந்து போராளிகளுக்குள் ஏற்பட்ட பூசல்களால்; சபாரத்தினம் முதல் சமரச சன்மார்க்க சீலராம் அருமை நண்பர் அமிர்தலிங்கனார் வரையில் சவங்களாக்கப்பட்டதும்- இந்தத் தமிழ் நெஞ்சில் ஆணிகள் கொண்டு அடித்து இன்னமும் ரத்தம் வழியும் காயங்கள் அல்லவா?

இந்தியாவின் ஈடற்ற இளந் தலைவர் ராஜீவ் காந்தியை வீழ்த்தி சின்னாபின்னப்படுத்திய பிறகும் - அதற்கு முன்பே சட்டமன்றப் பதவிகளை இலங்கைப் பிரச்சினைக்காகத் துறந்த எனக்கும், எனதருமைப் பேராசிரியருக்கும் எத்தகைய துயரம் ஏற்பட்டு எங்களைத் துவள வைத்தது என்பதை யார் அறிவார்?

வெறுக்கத்தக்கதும்-வேண்டத் தகாததுமான இத்தனை கொடுமைகளுக்கும் "விடுதலைப் போர்'' என்று பெயரிட்டு அழைத்தாலும்-இலங்கையில் விடுதலைப் போர்- இங்கேயிருந்து ஆதரவு தரும் தமிழர்களுக்கு கெடுதலை உருவாக்கும் காரியமன்றோ செய்கின்றார்; களத்தில் நிற்போரிடம் கள்ள உறவு வைத்துக் கொண்டு!’’என்று குறிப்பிட்டுள்ளார்.

Saturday, May 2, 2009

கொடுமையை நிறுத்துங்கடா, பாவிகளா!

துயரத்தில் இருக்கும் ஈழத் தமிழரை துடைத்தொழிக்க வஞ்சக இந்திய காங்கிரஸ் அரசு, கள்ளத்தனமாக அனுப்பி வந்த ராணுவத் தளவாடங்களை இப்போதெல்லாம் வெளிப்படையாக அனுப்பத் தொடங்கிவிட்டது. 80 லாரிகளில் இலங்கைக்கு அனுப்புவதற்காக கொச்சி துறைமுகத்துக்கு அனுப்பப் பட்ட ஆயுதங்களை பவானி அருகே பொதுமக்கள் வழி மறித்திருக்கிறார்கள்.

உணர்வுள்ள ஒரே திராவிடர்கழகம் பெரியார் திராவிடர் கழகம் தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறது. அதன் தலைவர்களில் ஒருவரான திரு இராமகிருட்டிணன் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டிருக்கின்றனர். சன் தொலைக் காட்சியின் செய்தியாளரும், மற்ற செய்தியாளர்களும் தாக்கப் பட்டிருக்கின்றனர்.

இது பற்றிய செய்தி.

தமிழுக்காக உயிர் வைத்திருக்கிறேன் - கலைஞர் சொல்கிறார்




தமிழுக்கு ஏதாவது நேரிட்டால் அதைக் காப்பாற்ற இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
லோக்சபா திமுக தேர்தல் பிரசாரத்தை முதல்வர் கருணாநிதி திருச்சியில் நேற்று நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் தொடங்கினார். இக்கூட்டத்தில் மே தின கொண்டாட்ட கூட்டமும் நடந்தது.


ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்பாக முதல்வர் கருணாநிதி பேசுகையில், அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்பு பேசிய திருமாவளவன் விட்ட முழக்கம் விரைவில் பாராளுமன்றத்தில் கேட்கும். அவருடன் சேர்த்து சாருபாலா தொண்டைமான் முழக்கமும் கேட்கும்.
மதநல்லிணக்க அரசு அமைய வேண்டும்...
நாடு வளர்ச்சி பெற மத்தியில் மத நல்லிணக்க, மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும். டெல்லியிலும், சென்னையிலும் அமைய இருக்கும் அரசு எந்த மதத்தையும் சாராத, எந்த மதத்திற்கும் தனி சலுகைகளை அளிக்காத மதச்சார்பற்ற அரசு அமையும். இந்த கூட்டணியில் மத நல்லிணக்க கட்சிகள் உள்ளன.


இன்று நான் திருச்சிக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. பிப்ரவரி 11ம்நாள் இங்கு வரக்கூடிய அளவுக்கு உயிரோடு இருக்க மாட்டேன் என்று மருத்துவர்கள் கூறினர். அன்று மருத்துவர்கள் கூடி கலந்தாலோசித்து இரண்டு வழிகள்தான் உள்ளது என்று என்னிடம் கூறினர். முதுகில் ஏற்பட்ட வலிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் உங்களுக்கு 85 வயதாகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்தால் வெற்றி அல்லது ஆயுள் முடிவுதான் ஏற்படும். இதில் எதை தேர்வு செய்யப்போகிறீர்கள் என்று கேட்டனர். குடும்பத்தினர் அழுது புலம்பினர்.


அறுவை சிகிச்சையால் வரும் முடிவுக்கு தயார் என்று கூறினேன். அவை முடிந்து இரண்டு மாத காலம் ஆகியும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறேன். இன்றும் 3 மருத்துவர்களை என்னுடன் அழைத்து வந்துள்ளேன்.

மருத்துவக் குழுவிலும் மத நல்லிணக்கம்...
அவர்களில் சமீர் என்று முஸ்லீம், சார்லஸ் என்று கிறிஸ்தவர், கோபால் என்ற இந்து பிராமணரும் அடங்குவர். மருத்துவக் குழுவிலும் மதநல்லிணக்கத்தை எதிர்பார்த்தேன்.
இந்த சிகிச்சையை நாட்டின் முன்னேற்றத்துக்கு அளிக்கவும் இதுபோன்ற மதநல்லிணக்கம் வர வேண்டும் என்பது என் ஆசை.
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அண்ணா என்னை நிற்க சொன்னார். அப்போது முதன் முதலாக விவசாயிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டேன். 1953ல் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டு 6 மாதம் சிறை சென்றேன். அப்போது என்னுடன் முல்லை சக்தி, கஸ்தூரி ராஜா, குமாரவேலு, கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது ஏற்பட்ட வியாதிதான் இதுவரைடிக்கிறது. என்னை தமிழ் தொண்டனாக ஆக்கியது இந்த திருச்சிதான்.
இருவர் தீக்குளித்து மாண்டனர். சரித்திரம் படைத்தவர்கள் இந்த திருச்சியை சேர்ந்தவர்கள். அன்பில் தர்மலிங்கம், எம்.எஸ்.மணி, அழகுமுத்து காமாட்சி ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது காமாட்சியை ஒரு பெண் என தவறாக நினைத்து பத்திரிகையில் செய்தி வெளியிட்டனர். அவர் பெயர் காமாட்சி நாதன் என்பது அதன் பிறகு தான் தெரிந்தது.
திருச்சியில் கிடைத்த இணை பிரியாத நண்பர்கள் இப்போது இல்லை. அவர்கள் இல்லாமல் நான் மட்டுமே இருக்கிறேன். தமிழுக்கு ஆபத்து வந்தால் அந்தத் தமிழை காப்பாற்றுவதற்காக இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது என்று கருதுகிறேன்.
அறுவைச் சிகிச்சை முடிந்து 2 மாதமாகி விட்டது. டாக்டர்கள் சுற்றுப்பயணம் செய்யக் கூடாது என்றார்கள். ஏன் என்றேன். மீண்டும் கோளாறு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றார்கள். இருப்பது ஒரு உயிர், போகப்போவது ஒரு முறை. அது நல்லதுக்காக நல்லவர்களை காப்பாற்றுவதற்காக போகட்டும் என்று அண்ணா கூறினார். அவர் கூறியபடி என்னை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். குளித்தலையில் இருந்த காலத்தில் இருந்து சொல்லி வருகிறேன்.
இப்போது 85 வயதிலும் சொல்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சகோதரன், உங்கள் சொந்தக்காரன், இந்த மேதினக் கூட்டத்துக்கு வந்திருக்கிறேன். எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. வாழும் காலத்தில் என்ன பணியாற்றினோம் என்பதுதான் முக்கியம். தமிழ் இனத்தை வளர்த்தவர்களை மறக்க மாட்டேன்.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருக்குவளை என்ற ஊரில் பிறந்தவன். எனது தந்தை என்னை உங்களிடம் ஒப்படைத்துள்ளார். நான் உங்களுக்கு வேலைக்காரனாகவும், பணியாளனாகவும், தொண்டனாகவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
13 வயதில் எழுத ஆரம்பித்தேன். பரிணாம வளர்ச்சியில் திராவிட நாடு திராவிடர்க்கே என்று எழுதினேன். அண்ணா இதைக் கவனித்து, உனது இளமைக் காலத்தை வீணாக்கிக் கொள்ளாதே, ஒழுங்காகப் படி என்று சொன்னார். அவர் படியென்று சொன்னதையும் ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழுக்காக உழைத்தேன். பாளை சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது, அண்ணா, தன்னை வென்றார் தரணியை வெல்வார் என்று என்னைப் பற்றி எழுதினார்.
நான் இன்று உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கும் காட்சியைக் காண அண்ணா இங்கு இல்லை. அவர் இருந்திருந்தால் அறப்போர் வழியை மேலும் எனக்கு வகுத்துத் தந்திருப்பார்.
அண்ணா வழியில் அயராது உழைப்பேன். இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கத்தை திருச்சியில் நான் முழங்கினேன். அந்த முழக்கத்தின் அடிப்படையில் இந்த இயக்கம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நம்முடைய வேட்பாளர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். உரிமைக்குரல் கொடுக்க வேண்டும்.
என்னை நன்றாக திட்டுங்கள்..
என்னைப் பற்றியும், என்குடும்பத்தைப் பற்றியும் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் பழித்து பேசுகிறார்கள். மரத்தின் அடியில் மாட்டு சாணத்தை கொட்டினால் அது எருவாக மாறி மரம் நன்றாக வளரும். அதேபோல் என் மீது போடப்படும் பழிகள், எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது. என்னை நன்றாக திட்டுங்கள். அதை நான் எருவாக மாற்றிக் கொள்கிறேன்.
டாக்டர் ராமதாஸ் என்னை நாடகம் ஆடி என்று கூறுகிறார். ஆமாம், நானும் அண்ணாவும் உதயசூரியன், காகிதப்பூ போன்ற நாடகங்களை ஆடினோம். அப்படி நாடகம் ஆடிதான் கட்சியை வளர்த்தோம். அவர் பணத்திற்காகவும், பதவிக்காகவும் நாடகம் ஆடிவருகின்றனர்.
திருமாவளவன் எனது சொந்தக்காரர். அவருக்கும் கொள்கை உடன்பாடு உள்ளது. என் வீட்டுப் பெண் அவர் வீட்டிலும், அவர் வீட்டுப் பெண் என் வீட்டிலும் உள்ளது போல் சம்மந்தி உறவு.
இங்கு உள்ள நாம் அனைவரும் மதத்தாலும், மொழியாலும் ஒன்றாக உள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் சின்னம் உதயசூரியன், காங்கிரஸ் சின்னம் கை, விடுதலை சிறுத்தைகள் சின்னம் நட்சத்திரம். வானத்தில் சூரியன் இருக்கும், நட்சத்திரமும் இருக்கும்.
இதனை கை சுட்டிக்காட்டுவதுபோல நமது சின்னங்கள் பொருத்தமாக இருக்கிறது. இந்த மூன்று சின்னங்களுக்கும் உங்கள் வாக்குகளை அளித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன் என்றார் கருணாநிதி.


நன்றி:தட்ஸ்தமிழ்



தமிழன் உயிரோடு இருந்தால் தானே தமிழைக் காப்பாற்ற முடியும்!?


தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டால், தமிழை யார்

காப்பாற்றுவார்?!


அதனால்,


தமிழனை முதலில் காப்பாற்றுங்கள், தமிழ் காப்பாற்றப்படும், கவலை கொள்ள வேண்டாம்.







காங்கிரசுக்கு ஆப்பு வைக்கும் திரையுலகம்


"காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில், தமிழின விரோதிகளை அடையாளம் காட்டுவதற்காக திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் பிரசார பொதுக் கூட்டம் நடத்தவுள்ளோம்,'' என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறினார்.

தமிழர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழர் விரோத சக்தியாக வளர்ந்துள்ள அரசியல் சக்திகளை அடையாளம் காட்டவும் திரையுலக தமிழ் இன உணர்வாளர்கள் இன்று ஒன்றுபட்டுள்ளோம். எந்தவித அதிகாரப் பங்கீடோ, அரசியல் ஆதாயமோ இல்லாமல், ஓர் இன விழிப்புணர்வை தமிழக மக்களிடம் கொண்டு வரும் நோக்கத்தில், தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் பிரசார பொதுக் கூட்டம் நடத்த உள்ளோம்.

இலங்கையில் போர் நிறுத்தம் என்பது பொய். ஆறு மாத காலமாக தமிழகத்தில் பேரணி, உண்ணாவிரதம் மேற்கொண்டும், பல உயிர்பலிகள் கொடுத்தும் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. அவர்கள் தான் நடத்துகிறார்களோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.இந்த விஷயத்தில் தமிழக அரசு, சூழ்நிலைக் கைதியாக உள்ளது. ஆகையால் தமிழின விரோதிகளை, தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில், பிரசார பொதுக் கூட்டம் நடத்தவுள்ளோம்.

எங்களது பிரசார பயணம், காஞ்சிபுரம் அண்ணா சிலையில் துவங்கி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, கடலூர் எனத் தொடர்ந்து, வரும் 11ம் தேதி புதுச்சேரியில் முடிவடைகிறது.இப்பிரசார கூட்டத்தில் இயக்குனர்கள் சீமான், செல்வமணி, சேரன், அமீர், சுந்தரராஜன், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீண்காந்த், மனோஜ்குமார், நடிகர்கள் மணிவண்ணன், வடிவேலு, கவிஞர்கள் அறிவுமதி, சிநேகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழர்கள் அல்லாத பிற இனத்தவர்களும் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்கு சோனியா வரும்பட்சத்தில், என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வோம்.இவ்வாறு பாரதிராஜா கூறினார்.திரையுலகத்தினர் அறிவித்துள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., அணி சார்பில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடுகிறது.

திமுக ஜெயிச்சா யார் ஆட்சியமைக்க சப்போர்ட் பண்ணும்?
பார தீய சனதா கட்சிக்கா?
இல்லை
(போலி) மதசார்பின்மை கட்சி என்று புகழ் பரப்பும் காங்கிரஸ் கட்சிக்கா? (காங்கிரஸ் ஆட்சியில் தான் பாபர் மசூதியை இடிக்க விட்டார்கள்)
இல்லை
மூன்றாவது அணிக்கா?



Friday, May 1, 2009

இனப்படுகொலை நடத்தியது நாங்கள் தான், பிரணாப் ஒப்புதல் வாக்குமூலம்

சிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு
பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,
கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும், தமிழக அரசியல்வாதிகளும் கூறிவந்தனர்.
ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான எ.கே.அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.
இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்தபடி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது. தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா, சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது. இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
சிங்கள அரசாங்கம் எங்களது நண்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுறுத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயுத உதவிகள் வழங்கி வந்தோம்.
இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயுதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.
நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்க ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரை வழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கும் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிர நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடக்கூடாது?
இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரணாப் முகர்ஜி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.

பிரணாப் முகர்ஜி ஐயா!

உங்களுக்கு ஒரு பூ..................................................................................!


உங்கள நம்பிகிட்டு ஜால்சாப்பு பண்ணுனவங்களுக்கு

ஓர் ஆயிரம்

பூ..................................................................................!


இந்த வெண்ணைகளை இந்தத் தேர்தலில்

திண்ணையை விட்டு காலி செய்யுங்கள்!


பொய் சொல்லிப் பிழைப்பவர்களுக்கு போசனம்

கிடைக்காது என்பது எங்கள் தமிழ் பழமொழி!

ஓட்டுக்காக போர்நிறுத்தம்

செய்தேன் என்று பேசும்

வெக்கங்கெட்டவர்களை

என்னவென்று சொல்வது..........?









வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை