தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் செண்டாங்க்காடு என்ற கிராமத்தில் பிறந்து, பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பைத் தொடர்ந்தார். இவர் படித்த இந்த பள்ளியில் தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் நாவலர் இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன் ஆகியோரும், முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமனும் படித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவராக இருக்கும்போதே நீதிகட்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். பள்ளி படிப்பை முடித்த திரு எஸ்.டி.எஸ் அவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ எனப்படும் பொறியியல் பட்டமேற்படிப்புக்காக சேர்ந்தார்.
1947 -ல் அண்ணாமலை பல்கலைக்கழக உணவு விடுதியில் பெரியார் பிறந்த நாள் கொண்டடியதற்க்காக பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டவர். மாணவப் பருவத்திலேயே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அன்பையும் பாராட்டையும் பெற்றார்.
1951-ல் அரசு அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வகுப்புவாரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மாணவப் பருவத்திலேயே போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
1955-ல் தமிழர்கள் வாழும் பகுதியான தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியவை கேரளாவுடன் இணைக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். அப்போது திராவிட மாணவர் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக இருந்தார்.
1957-1967 மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல மாநாடுகளை நடத்தி மாணவர்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வுகளை ஏற்படுத்தியவர். மாணவர் பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களின் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றவர்.
1965-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.
திராவிட இயக்கத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவர் கே. ஏ. மதியழகன். அவர் அப்பொழுது (1972) தமிழக சட்டசபையில் சபாநாயகராக இருந்தார். “தி.மு.க.வில் கருணாநிதியின் கை ஓங்குவதையும் தி.மு.க ஆட்சியில் தவறுகள் பெருகிக் கொண்டிருப்பதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.சபாநாயகர் பதவி வகிக்கும் மதியழகனும் எம்.ஜி.ஆரின் இயக்கத்தை ஆதரிக்கத் தொடங்கினால், தம் நிலைமை மிகவும் பலவீனமாகிவிடும் என்று முதல்வர் கருணாநிதி அஞ்சினார். ஆகவே அவர், தி. மு. க. வில் இருந்த எஸ். டி. சோமசுந்தரம் எம். பி. யை சபாநாயகர் மதியழகனிடம் அனுப்பி அவரைச் சரிக்கட்டும்படி கேட்டுக்கொண்டார்.ஆனால், எஸ். டி. எஸ். அவர்களையே சரிக்கட்டி எம்.ஜி.ஆரோடு சேரும்படி செய்துவிட்டார், மதியழகன்.இதை தனதுநூல் ஒன்றில் கருணாநிதி வருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கிறார். இதுவே எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு திருப்புமுனையாக, அடித்தளமாக அமைந்தது.
1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க ஆரம்பித்தபோது, அவருடன் தோளோடு தோள் நின்று அவருக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனை வழங்கினார். அவரால் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவர்.
எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கும் போது அவருக்கு துணை நின்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், முனுஆதி, குழ.செல்லையா, எஸ்.ஆர்.இராதா, கே.சௌந்தரராசன், இரா.மோகனரங்கம், ஜேப்பியார், என்.எஸ்.இளங்கோ, எம்.கே.கதாதரன், முசிறிப்புத்தன் ஆகியோர்கள். மற்ற தலைவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை கண்டு பின்பு தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு எஸ்.டி.எஸ் அவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள், புதுவை மாநில பொதுத் தேர்தல்கள் ஆகியவற்றில் தேர்தல் பணிக்குழு தலைவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டு திறம்பட பணியாற்றி வெற்றிக்காக பாடுபட்டவர்.
அப்போதைய ஆளும் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஏற்படுத்தப்பட்ட போராட்ட நடவடிக்கை குழுவுக்கு தலைவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர்.
1973 ஆம் ஆண்டு அக்டோபரில், மாஸ்கோவில் உலக சமாதானக் கழக மாநாடு நிகழவிருந்தது. அதில் கலந்துகொள்ளும்படியும் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு வந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் அந்த மாநாட்டுக்குத் தம் பிரதிநிதியாக அமைப்புச் செயாலாளர் கே.ஏ.கே., எஸ்.டி.எஸ். ஆகியோரை அனுப்பி வைத்தார்.
அ.தி.மு.கவின் பிரச்சார செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார்.
தந்தை பெரியார் சிலை அமைப்பு குழுவின் தலைவராகவும், பெரியார் சிலை திறப்பு வரவேற்புகுழு தலைவராகவும் எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர்.
1967-1978 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். மூன்று முறை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு முறையே முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன், மதுக்கூர் ஜமீன்தார் கிருஷ்ணசாமி கோபாலர், திரு. எல்.கணேசன் ஆகியோரை தோற்க்கடித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலாவதாக தேர்ந்த்தேடுக்கப்பட்ட எம்.பியும் இவரேயாவார்.
1978-1980 சட்ட மேலவை உறுப்பினர். சட்ட மன்ற தலைவர். எம்.பியாக இருந்த திரு.எஸ்.டி.எஸ் அவர்களை தமிழக சட்ட மேல்சபை உறுப்பினராக்கி, அமைச்சராக்கி தன்னுடன் வைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர் என்றால் அவர்மீது எவ்வளவு பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்திருப்பார். திரு எம்.ஜி.ஆர். அவர்கள், திரு எஸ்.டி.எஸ் மீது எவ்வளவு பற்றும், நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதையும், இலங்கை பிரச்சனையை கையாள எம்.ஜி.ஆருக்கு எவ்வகையில் உதவினார் என்பதையும். முன்னாள் தமிழக காவல் துறை தலைவர் (டி.ஜி.பி) திரு கே. மோகன்தாஸ் அவர்கள் தனது Dr MGR-The Man and The Myth என்ற நூலில் தெளிவாக குறிப்பிடுகிறார்.
1980 சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திரு ஏ.ஆர். மாரிமுத்து அவர்களை தோற்க்கடித்தார்.
1978-1984 வருவாய்த்துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சருக்கு என்னை போன்றவர்களின் பாராட்டு மட்டுமே வருவாய் என்று எம்.ஜி.ஆரால் புகழாரம் சூட்டப்பட்டவர்.
எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் கிராமங்களில் இருந்த மணியகாரர் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்து, கிராம முறையை மாற்றி அமைத்து செம்மையாக்கினார். இந்தியாவின் மற்ற மாநில முதல்வர்களின் பாராட்டையும் பெற்றார். திரு பரத்வாஜ் அவர்கள் தனது ஆளுமை- கர்ணம், மணியம் பற்றிய கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டிருந்தார். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு ஏற்ப்பட வேண்டும் என்று விரும்பியவர். அப்பிரச்சனையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிறந்த ஆலோசகராக திகழ்ந்தார். இலங்கையில் 1983 இனப்படுகொலை நடந்தபோது மனம் கொதித்து தனது எதிர்ப்பை கருப்பு சட்டை போராட்டங்கள் மூலம் தெரிவித்தவர்.
"போர்வாள்" என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.
இவரது வழியை பின்பற்றி அரசியலில் சுடர் விட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், முன்னாள் கொறடா துரை.கோவிந்தராஜன், முன்னாள் அமைச்சர்கள் வெள்ளூர் வீராச்சாமி, அழகு திருநாவுக்கரசு, ஆர்.வைத்தியலிங்கம், அ.மா.பரமசிவன், வ.சத்தியமூர்த்தி, முன்னாள் வாரியத்தலைவர் கு.தங்கமுத்து, துரை. திருஞானம், முன்னாள் எம்பிக்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா, ஓ. எஸ்.மணியன், இரா.சாமிநாதன், கொற்கை மதியழகன், கே.முஸ்தபா கமால், மன்னை சு.ஞானசேகரன், அத்தி.கோ.இராமலிங்கம், ஏ.முகைதீன் மரைக்காயர், வி.அழகிரிசாமி, சிங்குராசு, த.கர்ணன், வி.ஆர்.கே.பழனியப்பன் மற்றும் பலர்.
1983-ல் பட்டுக்கோட்டை பகுதியில் தொழில் நுட்ப கல்லூரியை நிறுவி ஏழைகள் தொழில் கல்வி படிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்தார்.
1984-ல் திருச்சியில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்திற்கிடையே நமது கழகம் என்ற கட்சியை தொடக்கி பிரகடனப்படுத்தினார்.
1985-ல் இலங்கைத்தமிழருக்காக மதுரையில் மிகப்பெரிய எழுச்சி பேரணியை நடத்தி இரயில் மறியல் போராட்டத்தின் மூலம் சிறை சென்றவர்.
1987-ல் எம்.ஜி.ஆர் அவர்களின் அழைப்பை ஏற்று அ.இ.அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
1987-ல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் பணியாற்றினார்.
1991 சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தி.மு.கவைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர் திரு எஸ்.என்.எம்.உபயத்துல்லா அவர்களை தோற்க்கடித்தார்.
1991-1996 சட்டப்பேரவை உறுப்பினர், வருவாய்த்துறை அமைச்சர்.
1995-ல் எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டை தஞ்சாவூரில் நடத்திக்காட்டி அனைவரின் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியவரானார்.
சுற்றுச்சாலை, இரயிவே மேம்பாலம், புதிய பேருந்து நிலையம் போன்றவற்றை தஞ்சாவூருக்கு ஏற்ப்படுத்தி கொடுத்தார்.
தமிழின படுகொலை, காவேரித் தாய்க்கு கருணாநிதி செய்த கேடுகள், இலங்கை இனப்படுகொலை பற்றி இந்திய பிரதமருக்கு எஸ்.டி.எஸ்ஸின் பத்து கோரிக்கைகள், மதுவிலக்கு கொள்கையில் தமிழக முதல்வர்கள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். .
தடகள விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். பள்ளியிலும், அண்ணாமலை பல்கலைகழகத்திலும் ஓட்டபந்தயத்தில் தொடர்ந்து முதல் இடத்தை பெற்றுவந்தார்.
பொதுமக்கள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் அனைவராலும் "பாசமிகு எஸ்.டி.எஸ்" என்று அழைக்கப்பட்டவர்.
ஆயிரக்கணக்கான சுயமரியாதை தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்து சுயமரியாதை சுடராக விளங்கியவர்.
மிகவும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லாதபோது சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்தார்.
ரஷ்யா,ஜப்பான்,ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயணித்துள்ளார்.
பிறந்தது : 25.02.1923 மறைந்தது : 06.12.2001
பாசமிகு அய்யா எஸ்.டி.எஸ் அவர்களைப்பற்றி எழுத வேண்டும் என்பது எனது ஆவல். ஏனோ அவரது மறைவு யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் இறந்ததாலோ என்னவோ? அவரை சந்திக்கிற வாய்ப்பு எனக்கு சிலமுறை கிட்டியதை பெரும் பேராக நினைக்கிறேன். இன்று அவரது நினைவு நாள் அல்லவா அதனால் அவரைப் பற்றிய கட்டுரையை வெளியிடுவது சிறப்பாக அமையும் என்று வெளியிடுகிறேன். இதையே அவருக்கு எனது 6-ம் ஆண்டு நினைவுநாள் கண்ணீர் அஞ்சலியாக்குகிறேன்.
அன்புடன் ஜோதிபாரதி
10 கருத்துக்கள்:
ஒரு பகுத்தறிவு வாதியை பற்றி அழகான கட்டுரையை வெளியிட்டு இருக்கிறீர்கள். எஸ்.டி.எஸ் அவர்களைப்பற்றி நிறைய விடயங்களை சுருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். மனியகாரர்களை நீக்கிவிட்டு VAO -வை கொண்டு வந்தது எஸ்.டி.எஸ் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் சொல்வதை போல் அவர் ஹீரோதான்.
வருகைக்கு நன்றி திரு மதியழகன் அவர்களே,
எஸ்.டி.எஸ் அவர்கள் சிறந்த நிர்வாகியாகவும், அண்ணா, பெரியார்காலத்தில் சிறந்தசமூக நீதிப் போராளியாகவும், கருணாநிதி காலத்தில் சிறந்த நாடளுமன்றவாதியாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் சிறந்த கிங் மேக்கராகவும் திகழ்ந்தார்.

நல்ல பதிவு அத்திவெட்டி ஜோதிபாரதி அவர்களே
முரளிகண்ணன் said...
நல்ல பதிவு அத்திவெட்டி ஜோதிபாரதி அவர்களே//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.முரளிகண்ணன்!
முரளிகண்ணன் said...
நல்ல பதிவு அத்திவெட்டி ஜோதிபாரதி அவர்களே//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.முரளிகண்ணன்!
இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியவர்களில் ஒருவர்..,
நல்ல செய்தி தொகுப்பு. தன்னுடைய தள்ளாத வயதிலும் புரட்சி தலைவிக்காக Foot boradல் தொங்கி சாகசம் செய்து பயணம் செய்து ஓட்டு சேகரித்து சாதனை படைத்துள்ளார்
SUREஷ் (பழனியிலிருந்து) said...
இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியவர்களில் ஒருவர்..,//
தெரிந்து கொள்வதில் தவறேதும் இல்லை.
வருகைக்கு நன்றி திரு சுரேஷ்!
SUREஷ் (பழனியிலிருந்து) said...
இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியவர்களில் ஒருவர்..,//
தெரிந்து கொள்வதில் தவறேதும் இல்லை.
வருகைக்கு நன்றி திரு சுரேஷ்!
சதுக்க பூதம் said...
நல்ல செய்தி தொகுப்பு. தன்னுடைய தள்ளாத வயதிலும் புரட்சி தலைவிக்காக Foot boradல் தொங்கி சாகசம் செய்து பயணம் செய்து ஓட்டு சேகரித்து சாதனை படைத்துள்ளார்
//
நன்றி சதுக்க பூதம்,
நிச்சயமாக...
அவரை எஸ்.டி.எஸ் என்பதைவிட தொங்கல் மந்திரி என்றால் மக்கள் எளிதாக தெரிந்துவைத்திருந்தார்கள். அவரிடம் இருந்த பாசிடிவான விடயங்களை மட்டும் இங்கு பகிர்ந்தோம். சருக்கல்கள் அவருக்கும் இருந்தன.

மிகவும் தற்செயலாக இந்த தளத்திற்கு வந்தேன். மதியழகன் எஸ் டி எஸ் இருவருடனும் மிகவும் நெருங்கிப் பழகியவன் என்பதால் அவர்கள் பெயரைக் கண்டதும் படிக்கலாம் என்று வந்தேன்.
மதியழகன் அடிப்படையில் குழந்தை உள்ளம் படைத்தவர். நல்ல எண்ணம் கொண்டவர். சூது வாது தெரியாது. தி.மு.க. வின் சட்ட திட்டங்களே அவரது நோட்டுப் புத்தகத்தில்தான் எழுதப்பட்டன. கட்சியில் பெரும் தலைவராக வருவார் என எதிர்பார்ப்பு இருந்தது. தி.மு.க வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக மாணவர் அணிக்குத் தலைமை ஏற்றிருந்தவர்.அண்ணாவின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்றபின் கருணாநிதி ஆட்சிக்கு வரத் துணை நின்று அவராலேயே பெயரைக் கெடுத்துக் கொண்டு அரசியல் வாழ்க்கையைத் தமது பலவீனத்தால் கெடுத்துக் கொண்டார். என் மீது மிகவும் பாசமாக இருந்தவர். இதேபோல் எஸ் டி எஸ்ஸும் மிக நல்ல மனிதர். கட்சி ஈடுபாடு காரணமாகவே படிப்பில் கவனம் செலுத்தாமல் தேர்வுகளில் தோற்றுக் கொண்டே இருந்தவர். படி, படி என்று அண்ணாவால் கட்டாயப் படுத்தப்பட்டவர். நாங்கள் அனைவரும் அண்ணாவிடம் அவர் தொடங்க விருந்த ஹோம் லேன்ட் ஆங்கில வார இதழுக்கு சிதம்பரத்தில் ரூ 10 ஆயிரம் நிதி திரட்டி அண்ணாவிடம் கொடுத்தோம். அன்று அது ஒரு பெரிய தொகை! நான் அந்த இதழுக்கு நிறைய சந்தாக்கள் திரட்டி அனுப்பி வைத்தேன். அண்ணா எனக்கு நன்றி தெரிவித்து ஓர் அஞ்சலட்டையில் கடிதம் எழுதினார். எஸ்.டி.எஸ். நேர்மையான மனிதர். லஞ்சம் வாங்கியதில்லை. அவர் சில மாதங்கள் சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு நாளிதழ் நடத்தி இழப்பு தாங்காமல் அதை நிறுத்த வேண்டியதாயிற்று அப்போது தனது சொத்தை விற்று அனைவர் கணக்கையும் ஒழுங்காக முடித்து வைத்தார். எனக்குத் தெரிந்து திமு.க. வில் எஸ் டி எஸ் அளவுக்கு நாணயமாக நடந்து கொண்டவர்களைக் கண்டதில்லை. க. ராஜாராம், இரா. செழியன் ஆகியோரும் கைகளில் கறைபடாதவர்களே. எஸ்.டி.எஸ். அரசியலில் நேர்மையைக் கடைப் பிடித்தவர். எனவேதான் எம் ஜி ஆர் காலத்திலேயே ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து விலகி நமது கழகம் என ஆரம்பித்துக் கண்டன ஊர்வலமும் நடத்தினார். கடைசி காலத்தில் அவரும் வேனில் தொத்திச் சென்று அனாவசியமாகப் பெயரைக் கெடுத்துக் கொண்டார். மதி, சோமு இருவருமே அண்ணாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த நல்ல மனிதர்கள். ஆனால் தம்மைத் தாமே கெடுத்துக் கொண்டார்கள். எஸ் டி எஸ் ஏன் அப்படித் தன் மரியாதையைக் கெடுத்துக் கொண்டார் என்று எனக்குப் புரியவே இல்லை. ஏனிப்படி நடந்துகொண்டீர்கள் என்று கடுமையாக நான் கேட்டபோது தலை குனிந்து தெரியவில்லை என்றார். ஏனெனில் அவர் பட்டம் பதவிகளுக்காக அலைந்தவர் அல்ல. தி.மு.க.வில் இப்படிப் பல நல்லவர்கள் அன்று இல்லாமல் இல்லை.
-மலர்மன்னன்

Post a Comment