Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Saturday, May 15, 2010

புரட்சி நடிகையான குஷ்பு! -ஆட்சியைப் பிடிப்பாரா?




திலகவதி அம்மா இந்தப்பக்கம் திர்ம்பி நம்பள பாத்தா கொஞ்சம் எளக்கியம் கத்துக்கலாம். கலிஞர்ட்ட அரிசியல் பண்ணனுனா அது தேவப்படுமே!



இந்தப்படத்த சேஃபா வச்சிக்குவேன் பின்னால நான் மொதல்வரா வரத்துக்கு ஒதவும். இதை பிலக்ஸ் போடுலையும், கட்டவ்ட்லயும் போட்டு ஓட்டு வாங்கிர்லாம்!









தலைவரே, பூம்புகார் படத்த நீங்க எகைன் எடுத்தீங்கன்னா அதுல நான் தான் ஆக்ட் பண்ணுவேன். கண்ணகி ரோலுக்கு சரியா இருப்பேனா? நீங்க தான் சொல்லனும். எம்.ஜி.ஆருக்கு கொடுத்தமாரி எனக்கும் புரட்சி நடிகை என்ற பட்டம் கொடுத்தா புண்ணியமாப்போவும்.





தளபதி நீங்களும் ஆக்ட் பண்ணலாமே! தலயிலேர்ந்து இளைய தளபதி வரிக்கும் ஆக்ட் பண்றப்ப நீங் பண்ணக்கூடாதா?





செம்மொழி மானாடு மயிலாடு வர்றத்துனால தான் திருமா செகப்பு சர்ட் போட்டிருக்காரு. இந்த புக்க நீங்களே வச்சுக்குங்க கொஞ்சம் தமிள் கத்துகிட்டு அப்பரம் வாங்கிக்கிறேன்.





கற்பு என்றால் நினைவுக்கு வருவது குஷ்பு! திருமணத்திற்கு முன்பு பாதுகாப்பான உறவு கொள்வதில் தவறேதும் இல்லை என்னும் ஆலோசனையை இளைய தலைமுறையினருக்கு வழங்கியவர்.


இதனை, இந்த வேதவாக்கை ஆலோசனையாக வழங்கியதைக் காரணம் காட்டி விசமிகளால் தன் மீது நீதிமன்றதில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து அண்மையில் விடுதலை பெற்று சமூக நீதி காத்த வீராங்கனையாக, பெரியாரியம் கற்க திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களைச் சந்தித்து நேற்று(14.05.10) தன்னை தி.மு.கழகத்தில் இணைத்துக்கொண்டார்.




பின் குறிப்பு:

குஷ்பு திராவிட இனத்தைச் சேர்ந்தவர். நமீதாவும் தான்!

மாராத்தியர்களும், கூர்ச்சரதினரும் இனத்தால் திராவிடர்களே!

மொழியால் அவர்கள் ஆரியராக இருக்கக் காரணம், அவர்களுடைய மொழியை சமஸ்கிருதம் முக்கால்வாசி விழுங்கியதால் தான்!

:)

Thursday, August 6, 2009

காரியவாதி கலைஞருக்கு பூச்சியம் தந்த கேப் டன்

தி.மு.க. அரசு ஏதாவது நல்ல காரியம் செய்துள்ளதா? என்று விஜயகாந்த் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.


இது குறித்து முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துகள், காரியங்களை வீரியமாக எடுத்துரைக்கின்றன.

தி.மு.க.வின் மூன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு "ஒரு மதிப்பெண் கூட போட முடியாது. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தி.மு.க. அரசுக்குப் பூஜ்ஜியம் மதிப்பெண் தான் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு கேப் டன் விஜயகாந்த் நிருபர்களை திருப்பி என்ன கேட்டார் தெரியுமா?

இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள்'' என்று கேப் டன் விஜயகாந்த் ஒரு எதிர் கேள்வியையே பதிலாக நிருபர்களுக்குச் சொல்லியிருக்கிறார்.

அவரது கேள்விகளுக்கு பொதுவாக நீங்கள் பதில் சொல்வதில்லையென்ற போதிலும், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவு படுத்தவாவது என்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கலாம் அல்லவா என்று நிருபர்கள் கேட்டால்?

அதற்கு முதல்வர் கருணா நிதி அவர்களின் பதில் இதுவாக இருந்தது.

கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சி அமைந்தபோதெல்லாம் ஆற்றிய பணிகள் சிலவற்றை மட்டும் இந்த விளக்கத்தில் தருகிறேன். அவை நல்ல காரியங்களா அல்லவா என்பதை மக்களே கூறட்டும்.


பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தியது.


தமிழ் பேசும் முஸ்லிம்களை போலவே உருது பேசும் முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். கொங்கு வேளாளர் சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.


வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப் பட்டோர்க்கு தனியாக 20 விழுக்காடு இடஒதுக்கீடு. பழங்குடியினர்க்கு தனியாக ஒரு விழுக்காடு.

மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.


தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும்; வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி. "மெட்ராஸ்'' என்பதற்கு "சென்னை'' என்ற பெயர்.


சாதிப்பூசல்களை அகற்ற பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம். உருது அகாடமி. சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகம்.


சென்னை திரைப்பட நகருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பெயர். தென் குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது. தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என 1. 2. 2008 அன்று சட்டம் இயற்றப்பட்டு
தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட எல்லாக் குடும்பங்களுக்கும் இலவச சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான பொருள்கள் வழங்கப் பட்டது


காமராஜர் பிறந்த நாள் "கல்வி வளர்ச்சி நாள்'' என்று சட்டமியற்றப்பட்டு, பள்ளிகளில் கல்வி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது.


அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர ஆதிதிராவிடர்க்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மத சுதந்திரம் பேண - கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிடச் சட்டம்அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம். விதவைகளுக்கு மறுமண உதவித்திட்டம்.


கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க நிதி உதவி. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு. 10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்கீழ் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 896 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 299 கோடியே 83 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது;



ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 லட்சத்து 78 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு 487 கோடியே 56 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது; ஆனால் தே.மு.தி.க. தலைவர் தனது பேட்டியில் ஒரு கர்ப்பிணிக்குக் கூட உரிய உதவியைச் செய்யவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.


தமிழ், ஆங்கிலம் மட்டுமே என்ற இரு மொழித் திட்டம். பனிரண்டாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப்பாடமென சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்தது - நூறாண்டுக் கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு.

தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 10, 12ஆம் வகுப்புகளின் அரசுத் தேர்வு கட்டணங்களும் ரத்து. தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை, விருதுகள் வழங்குதல் - பரிவுத் தொகைகள் வழங்குதல். பேருந்துகள் நாட்டுடைமை. போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்.


1500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைக ளோடு இணைக்க இணைப்புச் சாலைகள் திட்டம். புகுமுக வகுப்பு வரையில் அனைவருக்கும் இலவசக் கல்வி. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நிதி ஒதுக்கும் திட்டம். சென்னை நகரில் ஒன்பது மாநகராட்சி மேம்பாலங்கள். 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.


தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் 343 பாலங்கள் 214 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன; ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்; சென்னையில் உலகத் தரத்திலான 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில நூலகம்; 400 கோடி ரூபாய் செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம்;



100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்காத் திட்டம்; சென்னை மாநகர் குடிநீர் பற்றாக் குறையை முற்றிலும் தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப் படவுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்;


1330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்; 630 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம். மதுரவாயலிலிருந்து சென்னைத் துறைமுகத்திற்கு 1,650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தித்திற்குரிய பணிகள் 8.1.2009 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.


கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மூன்று புதிய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2006-க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர் ஆகிய 7 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்.



மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கம்.

அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தமிழக அரசின் சார்பில் புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்க முடிவு செய்து, அதன்படி திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன.


இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ள தே.மு.தி.க. தலைவருக்கு இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.








Monday, May 11, 2009

தியாகத் திருவிளக்கு சோனியா -கலைஞர் புகழாரம், கொள்ளிமலை குப்பு கேள்வி பதில்



சென்னை தீவுத்திடலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
முன்பெல்லாம் திமுக கோஷமாக வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று இருந்தது. இப்பொழுது நம்முடைய சோனியா அவர்கள், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று நல்லாட்சி நடத்துவற்கு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு வழிகாட்டிய அமைந்துள்ள சூழ்நிலையில், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அந்த வாசகம் மாற்றப்பட்டு, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதற்கு பதிலாக அது அந்தக் காலம். வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது இது இந்தக் காலம்.


என்ன கொடுமை பாருங்க! அடிமைத்தளையை எதிர்த்து பன்னிரண்டு வயதில் கொடி பிடித்த தலைவர் சொன்னதா இது? ஐயகோ!


நம்முடைய அருமை அம்மையார், தியாக திருவிளக்கு சோனியா காந்தி அவர்களை நான் தியாக திருவிளக்கு என்று அடைமொழி கொடுத்து கூறுவதற்கு காரணம் உலகரிந்த உண்மை. நாடறிந்த செய்தி, நல்லோர் புரிந்துகொண்ட விவகாரம், அவரை பிரதமராக பொறுப்பேற்க வருக வருக என்று ராஷ்டீரிய பவன் அழைத்தபோது, நான் வரமறுக்கிறேன் என்று அந்த பதவியை தியாகம் செய்தவர் நம்முடைய சோனியா அவர்கள்.


அப்துல் கலாம் முடியாதுன்னுட்டார். அதனால ஒரு சோளக்கொல்லை பொம்மையை காவலுக்கு வச்சுட்டு இவங்க மேயுறாங்க(கொள்ளை). அதுதானே உண்மை!? இதுல வெள்ளி குத்துவெளக்கு எங்க வந்துச்சு? இத்தாலிய பெண்மணி இந்திய பிரதமர் பதவி வேண்டானுட்டா அது தியாகமா?நம்ம கொள்ளிமலை குப்பு இத்தாலிய அதிபர் பதவிய வேண்டானுட்டா அவர் தியாகியா!?வடநாட்டுல சிலபேரு தியாகின்னே பேரு வச்சுருக்காங்க. அந்தமாரி தியாகியா இருக்குமோ!? புரியல!?



அவருக்கு இணையாக தலைமையை சொல்ல முடியாத அளவில், வந்த பதவி, கதவை தட்டிய பதவி, காலடியிலே வந்து விழுந்த பதவி இது வேண்டாம் என்று நான் மக்களுக்கு சேவை செய்கிறேன் என் கட்சியின் மூலமாக என்று தேர்ந்தெடுத்துக்கொண்ட அந்த சொக்கத் தங்கத்தை வரவேற்று மகிழ்கிறேன்.

ஆமாமா அந்த அன்னைக்கு இணையா யாரும் இந்தியாவுல தகுதியானவுக இல்ல.என்ன கொடுமை ஐயா இது!?


அடடடடா! சொக்கத்தங்கமுன்னு சொல்லி விசயகாந்துக்கு வேற இலவச வெளம்பரம் கொடுக்குறாரே தலைவர்! ஓட்டெல்லாம் அங்க போயிறப் போவுதே!?


நான் வடக்கு வழங்குகிறது என்று சொன்னேன். பாராளுமன்ற தேர்தல் என்றால், வடக்கை நோக்கி, டெல்லியை நோக்கி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள் பிரதிநிதிகளும், கட்சியினரும் தங்களது தேர்தல் அறிக்கைகள் மூலமாக தேவைகளை உணர்த்துவார்கள். அப்படி உணர்த்தப்பட்ட தேவைகள் பல நிறைவு செய்யப்படாமலே போயின என்றாலும் கூட, ஒரு சிலவற்றை இங்கே சொல்கிறேன்.


அது உண்மைதான்!நாம சொல்றத்த விட மக்கள் சொன்னா மகிழ்வா இருக்குமுல்ல!



56,664 கோடி ரூபாய் தமிழகம் எங்கும் சாலைகள், மேம்பாலங்கள், துறைமுகப் பணிகள் வழங்கியிருக்கிறார்கள். 14,600 கோடி ரூபாய் சென்னை நகருக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கும், 2,427 கோடி ரூபாய்க்கு சேது சமுத்திட்டத்தை அனுமதித்துவிட்டுதான் இங்கே வந்திருக்கிறார்கள். ஒகேனக்கல் திட்டம், சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றிக்கு நிதி ஒதுக்கீடு, 50 பைசா செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி, தேசிய மோட்டடார் வாகன ஆராய்ச்சி கட்டமைப்பு மையம், சென்னைக்கு அருகில் கடல்சார் பல்கலைக்கழகம், தமிழ் செம்மொழி நிறைவேற்றம், சென்னையில் தமிழ் செம்மொழி நிறுவனம், திருச்சியில் இந்திய வேளாண்மை கல்வி நிறுவனம், மாணவர்களுக்கு கல்வி கடன், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், பொடா சட்டம் ரத்து ஆகியவற்றை தமிழகத்துக்கு செய்துவிட்டுதான் இங்கே வந்திருக்கிறார்கள்.


ஈழத் தமிழினப் படுகொலையும் சேத்துக்குவோமே!

ஆமா ஒகனேக்கல் திட்டம் கர்நாடக தேர்தலுக்கப்புறம் அன்னை நிறைவேத்துவாங்கன்னு சொன்னேளே, அது என்னாச்சு!? அதை இப்ப ஞாபகமூட்டலாமா?ஓ! அது சட்டமன்ற தேர்தல் இல்லியோ? நாடாளுமன்ற தேர்தலா? மன்னிக்கவும! அப்ப ஓ.கே தான்!


இவ்வளவும் சொன்னால், இங்கே உள்ள சிலர் இது நாடாளுமன்றத்திற்கு நடைபெறுகின்ற தேர்தல்தானே, திட்டங்களைப் பற்றித்தானே பேசவேண்டும் என்ற நிலையை மறந்துவிட்டு, திசைதிருப்பும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறார்கள்.


அப்படியா!ஈழத்தில் இந்தியா செய்யும் இரத்தக் களரி விளையாட்டைக் காட்டி திசை திருப்புறாங்க போலருக்கு!


இப்பொழுது மிகப்பெரிய பிரச்சனை. ஈழப்பிரச்சனை.

தாங்களும் அந்த பக்கமா திசை திருப்பித்தான் பாக்குறிய! தேர்தல வேற இப்ப வச்சுத் தொலைஞ்சுட்டாங்க!
அந்த தாயி தமிழ் ஈழம் பெற்றுத் தருவேன் என்று சொன்னதுக்கப்புறம், தாங்களும் தமிழீழம் பெறுவதற்கு முயற்சி செய்வேன்ன்னு சொன்னீர்களே!? அதுக்கு என்ன பொருள் சாமியோவ்!


நான் 3.11.07 அன்று தமிழ்ச்செல்வன் என்ற இலங்கையிலே பாலசிங்கத்தினுடைய ஆலோகனாக இருந்த ஒரு வாலிபரின் மறைவுக்காக ஒரு இரங்கல் பா எழுதினேன். இது 4.11.2007 அன்று பத்திரிகைகளில் வெளி வந்தது. உடனடியாக நம்முடைய தமிழகத்தினுடைய பிரதான எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) ஒரு அறிக்கை வெளியிடுகின்றார்.


ஜெயலலிதா இனவுணர்வு இல்லாதவராயிற்றே!



விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கருணாநிதி அஞ்சல் கவிதை இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். பிரபாகரன் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு, ஒரு முதல்வர் அவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற ஒருவர் இனியும் ஒரு நிமிடம் கூட முதல்வராக நீடிக்க தகுதி இல்லை.
தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இரங்கல் பா எழுதியதற்காக கருணாநிதி முதலமைச்சராக ஒரு நிமிடம் கூட நீடிக்க தகுதியில்லை. அந்த உரிமையை கருணாநிதி இழந்துவிட்டார். அவர் தலைமையில் இருக்கும் திமுக ஆட்சியும் அந்த உரிமையை இழந்துவிட்டது. எனவே மத்திய அரசு உடனடியாக கருணாநிதியின் தலைமையிலான இந்த மைனாரிட்டி திமுக அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நீங்க எப்ப ஆட்சிக்கு வந்தாலும், அதை எப்படியாவது கலைச்சுப்புடனும்னு நிக்குதே அந்த தாயி! இது தகுமா? நியாயமா? நல்ல விடயங்களுக்கு கொள்கைகளை மாற்றிக் கொள்ளலாம்.பூமி தட்டையாக இருந்ததாக முதலில் சொன்னார்கள். பின்னர் உருண்டை என நிரூபிக்கப் பட்டபிறகு ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல் விதிகள் காலத்தால் மாறும். காலத்தின் கட்டாயமும் கூட.


அவர்தான் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திய அந்த எதிர்க்கட்சித் தலைவர்தான் இன்று தமிழ் ஈழம் பெற்று தருவேன் என்று குறிப்பிடுகிறார். என்னுடைய ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். அதே தமிழ் ஈழத்திற்காக போராடுகிறார் என்றால் இது எவ்வளவு வேடிக்கை, வினோதம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
சோனியா அவர்களும், பிரதமர் அவர்களும் இலங்கை பிரச்சனை பற்றி பேசவில்லை என்று சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியிலே ராகுல்காந்தி வார்த்தைக்கு வார்த்தை இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்று சொன்னார். நேற்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங், வரிக்கு வரி இலங்கையிலே போர் நின்று அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். ஜனநாயக வழியிலே இலங்கை பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அங்கு வாழுகின்ற இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை கிடைத்திட வேண்டும் என்று சொன்னார்கள்.

சொல்லுறாங்க, நல்லது செய்ய மாட்டேங்குறாங்களே சாமி! கெடுதல் இல்ல செய்யுறாங்க. ஏட்டு சொரைக்கா கறிக்கு ஒதவுங்க்லா சாமி?


இதுவெல்லாம் சரி சோனியா காந்தி சொன்னார்களா என்று கேட்டார்கள். 31.3.2009 அன்று அம்மையார்கள் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள். நான் பதிலுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. தேவைப்பட்டால் சொல்லுகிறேன். அது என் பழக்கமும் இல்லை.
பாம்பு கடித்தது என்பதற்காக, நாம் திரும்பவும் பாம்பை கடித்துவிட கூடாது என்பதை சொல்லி விடைபெறுகிறேன்.


உங்களுக்கு எழுதிய கடிதத்தில் போர் நிக்குமா? படுகொலை தடுக்கப் படுமா? கடிதம் மற்றும் தந்திகளின் முக்கியத்துவத்தை மக்கள் அறிவார்கள். அதனால் அனைவரும் அன்னை சோனியாவுக்கு ஓட்டு போடுவாங்க என்று நம்புறேங்க சாமியோவ்!



நன்றி: கொள்ளிமலை குப்பு

Thursday, May 7, 2009

பொய் பிரச்சாரத்தை நம்பாதீர்கள் - உடன்பிறப்புகளுக்கு கலைஞர் அறிவுரை

உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அபாயகரமான முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு ஆளாகி பிழைத்துக்கொண்டேன். இப்போது மீண்டும் இரண்டாவது கண்டம். இந்த கண்டத்திலும் உனை காணுகின்ற வாய்ப்பை மீண்டும் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

காரணம் நான் உன்னோடு இல்லாவிட்டாலும், நான் இருப்பதைப்போல எண்ணிக்கொண்டு நீ பணியாற்றுவாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பது ஓர் உயிர். அது போகப்போவது ஒரு முறை. ஆனால் அது நல்ல காரியத்துக்காக போகட்டுமே என்ற அண்ணாவின் பொன்மொழியை இருதயத்திலே தாங்கி இத்தனை ஆண்டு காலமாக பணியாற்றி வருகின்றவன் நான்.

தேர்தல் நாள் நெருங்கி விட்டது. தேர்தல் பணிகளில் நம்முடைய திமுக தோழர்களும், காங்கிரஸ் நண்பர்களும், அதேபோல விடுதலைச் சிறுத்தைகளும் பம்பரம்போல் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இவற்றை கேட்கும்போது மருத்துவமனையில் இருக்கும் எனக்கு மருந்தாக இருக்கிறது. அந்த மருந்தை தொடர்ந்து எனக்கு அளித்துக்கொண்டிருப்பாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாம் இலங்கையிலே வாழுகின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம்.
அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்பதை என்னை நம்பு என்னை மறவாதே நான் உன்னோடு என்றைக்கும் இருக்கின்றவன், எங்களுக்காக நீ, உங்களுக்காக நான் என்பதை மறந்துவிடாமல் இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம்.

யார் என்ன பொய் உரைத்தாலும், எத்தகைய பித்தலாட்ட பேச்சுக்களில் இறங்கினாலும், அவைகளையெல்லாம் நம்பாதே என்னுடைய அன்புக்கும் பண்புக்குரிய பேராசிரியர்களும், மூத்த வழக்கறிஞர்களும், மூத்த தமிழரிஞர்களும் வெளியிட்டுள்ள அறிக்கைகளை பார்த்து நடந்துகொள் என்று கேட்டு விடைபெறுகிறேன் என்று கூறினார்.


நன்றி:நக்கீரன்




Monday, April 27, 2009

தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞருக்கு நன்றி!

இலங்கையில் போரை நிறுத்தக்கோரி முதல்- அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரம் இருக்கும் தகவல் காலை 6.30 மணிக்கெல்லாம் இந்தியா முழுக்க பரவியது.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா இருவரும் தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவர்கள் இருவரும் கருணாநிதியுடன் கேட்டுக் கொண்டனர். அதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட முதல்- அமைச்சர் கருணாநிதி, ஈழத்தில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்களுக்காக என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்கிறேன் என்றார்.

இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், நீங்கள் (கருணாநிதி) உண்ணாவிரதம் இருக்கும் தகவல் கொழும்பு நகரை எட்டி விட்டது. இலங்கையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மீண்டும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதில் அளித்த முதல்- அமைச்சர் கருணாநிதி, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். அதில் ஒரு தீர்வு ஏற்படும் வரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.

முதல்- அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் தொடங்கு முன் உருக்கத்துடன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


தமிழ்நாட்டு மக்களின் சார்பாக இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களை பாதுகாக்க, காப்பாற்ற நான் உண்ணாவிரதத்தினை மேற்கொள்கிறேன்.

நேற்று வரையிலே நம்பிக்கை தருகின்ற அளவிற்கு இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும் என்ற நிலை, அதுமாறி, விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்த பிறகும், நாங்கள் அதை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு கூறிய காரணத்தால், நேற்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து ஒளிப் பேழைகளிலோ அல்லது வானொலியிலோ, பத்திரிகைக் செய்திகளிலோ செய்திகளை எதிர்பார்த்து இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய முன் வராத காரணத்தால், என்னையே நான் அர்ப்பணித்துக்கொள்ள, நம்முடைய தமிழர்களுக்காக என் உயிரையும் வழங்க, இலங்கை அரசு வாங்கிய பலிகளிலே ஒரு பலியாக நானும் அமைய, அடையாளபூர்வமாக எல்லாத் தமிழர்களின் சார்பாக இந்த உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கின்றேன்.

நான் ஒருவன் அதற்காக என்னையே பலி கொடுக்க தீர்மானித்திருக்கின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

*****************************************************************************



முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை அறிந்து தி.மு.க. தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன்பு குவிந்தனர். அவர்கள் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கோஷ மிட்டபடி இருந்தனர். தொண்டர்கள் அமர துணி பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டன.

காலை 8.45 மணியளவில் டாக்டர்கள் குழு ஒன்று வந்து முதல்- அமைச்சர் கருணாநிதி உடல்நிலையை பரிசோதித்தது. வழக்க மாக காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாத் திரை சாப்பிடகூட முதல்- அமைச்சர் கருணாநிதி மறுத்துவிட்டார்.

அந்த சமயத்தில் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி வந்தார். அவர் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் உண்ணா விரதத்தை கை விடுமாறு கேட்டுக் கொண்டார்.

பிறகு அவர் நிருபர்களிடம் பேசுகையில், நீங்கள் (கருணாநிதி) உங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கான போராட்டத்தை வேறு விதமாக நடத்தலாம். நீங்கள் உத்தரவிடுங்கள், அதை நாங்கள் முன்நின்று நடத்துகிறோம் என்றார்.

காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், ஜி.கே.வாசன், ஞானதேசிகன் ஆகி யோரும் முதல்-அமைச் சர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினார்கள்.

காலை 6 மணி முதல் 9.20 மணி வரை அவர் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். 9.15 மணிக்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் உள்ளிட்ட டாக்டர்கள் குழு, முதல்- அமைச்சர் கருணாநிதி உடல்நிலையை பரிசோதித்தனர். இதையடுத்து மரக்கட்டில் ஒன்று கொண்டு வரப்பட்டது.

நீண்ட நேரம் அமர்ந்திருந் தால் முதுகுவலி வரும். எனவே கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண் டனர். அதை ஏற்று 9.30 மணியளவில் முதல்- அமைச்சர் கருணாநிதி கட்டி லில் படுத்தார்.

அவர் அருகில் தயாளு அம்மாளும், ராஜாத்தி அம் மாளும், அமைச்சர் ஆற் காடு வீராசாமியும் அமர்ந் திருந்தனர். பல்வேறு கட்சித் தலைவர்கள், மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 
********************************************************************************
 
முதல்-அமைச்சர் கருணாநிதி உண்ணா விரதத்தை முடிக்கும் முன்பு வாசித்த அறிக்கை வருமாறு:-


1924ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 3ஆம் நாள் முத்துவேலர் என்கிற இசைத் தமிழ் தந்தைக்கும் - அஞ்சுகம் என்கிற அன்னைக்கும் திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, குவா குவா என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பிய அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து-பொருள்களைக் களவாடிய போது - அவர்களிலே யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தமிழ் என்கிற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது.

அதை உச்சரிப்பதற்கு - உயர்த்துவதற்கு - உலக மொழிகளில் - செம்மொழிகளில் ஒன்றாக ஆக்குவதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டுமென்று தமிழன்னை கருதினாள் போலும்! அதனால் நான் ஊர்ந்து தவழ்ந்து வளர்ந்து 13ஆம் வயதிலேயே தமிழ் எழுதவும் - கட்டுரைகள் தீட்டவும் - கதைகள் புனையவும் கற்கண்டு தமிழ் எனக்கு உதவிற்று. அந்நாளில் தான் 1938ஆம் ஆண்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் தமிழ்ப்புலவர் பெருமக்கள் தமிழ்க்காத்திடும் போரில் குதித்த வரலாறு தோன்றிற்று. அந்த வரலாற்றில் ஒரு துளியாக நான் இருந்தேன். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்களே, அப்படி இன்று கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நல் இதயங்களின் வாழ்த்துகளைப் பெறுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன்.

இந்த வளர்ச்சியும், வலிமையும் எதற்காக பயன்பட வேண்டும்? என் தமிழைக்காக்கவும் - என் தமிழர் எங்கெல்லாம் அல்லல் படுகின்றாரோ அவர்களைக்காக்கவும் - பயன்படாத இந்த உடல் இருந்து என்ன பயன்? உயிர் இருந்து தான் என்ன பயன்?

உடலில், முதுகில் அறுவை சிகிச்சை ஆயிற்றே, இந்த நிலையில் இலங்கைத்தமிழர்களுக்காக இப்படி ஒரு உண்ணா நோன்பு போராட்டம் என்றால் உடல் என்னவாகும்? உயிர் என்னவாகும்? எங்களுக்கு நீங்கள் வேண்டும் என்றெல்லாம் என் தமிழர்கள், என் உடன் பிறப்புகள் முழக்கமிடுகிறார்கள்; வேண்டுகிறார்கள்.

ஆமாம், அவர்களுக்கு நான் வேண்டும் - எனக்கு அவர்கள் வேண்டும் - என் தமிழ் வேண்டும் - என் தமிழன் காலமெல்லாம் நலமாக வாழ வேண்டும். அவனை அல்லலோ, அவதியோ அண்டவும் கூடாது. தமிழனுக்கு ஒரு காயம் என்றால், அந்தக் காயம் என் உள்ளத்தில் ஆகாய மளவு பரவி நிற்கிறது.

அதனால் தான் இலங்கையிலே வாடிக்கொண்டிருக்கின்ற - மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களை - தமிழ்த் தாய்களை - தமிழ்ச்சகோதரிகளை - தமிழ் மழலைகளை காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்தோடு வாடினேன், வதங்கினேன்.

நேற்றிரவெல்லாம் கண் விழித்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன்.

பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் சொன்னார்கள். நல்லதே நடக்கும் என்று தான் உறுதியளித்தார்கள்.

அதிகாலை 4 மணி வரையில் தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச்செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது.

அதற்குப்பிறகு 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து உண்ணா நோன்பைத்தொடங்கினேன்.

இதன் விளைவாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது என்பதோடு, இனி இலங்கை ராணுவம் இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் அளிக்கப்பயன் படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


*******************************************************************************


இலங்கையில் வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் விடுதலைப்புலிகளை அழிப்பதாக போரைக் காரணமாக காட்டி அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசி அழித்து வருகிறது.


இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்தது.

சட்டசபையில் தீர்மானம், மனிதச் சங்கிலிப்போராட்டம், வேலை நிறுத்தம் என்று பல வழிகளில் தி.மு.க. தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. என்றாலும் சிங்கள அரசு பிடிவாதமாக போரை நிறுத்த மறுத்து விட்டது. 2 சிறப்பு தூதர்கள் சென்று பேசிய பிறகும் இலங்கை அதிபர் ராஜபக்சே அசைந்து கொடுக்கவில்லை.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்வதாக தன்னிச்சையாக அறிவித்தனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஓரிரவு பொறுத்து இருந்து பார்ப்போம் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.

இந்த நிலையில் இன்று காலை முதல்- அமைச்சர் கருணாநிதி திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். காலை 6.10 மணிக்கு அவர் காரில் தன்னந்தனியாக புறப்பட்டார். மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்த அவர் இலங்கையில் தமிழர்களை காப்பாற்ற உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

அண்ணா சமாதி நுழைவு வாயில் அருகே வலது புறத்தில் அவர் தன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உண்ணாவிரதம் இருந்தார். முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கை அவர் குடும்பத்தினர், தி.மு.க. மூத்த தலைவர்கள் யாருக்கும் தெரியாது.

தலைவர் திடீரென உண்ணாவிரதம் இருக்கிறார் என்று தகவல்கள் பறந்தன. இதையடுத்து கனிமொழி எம்.பி. அண்ணா நினைவிடத்துக்கு விரைந்து வந்தார். அவரைத் தொடர்ந்து தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, தயாநிதிமாறன் ஆகியோரும் அங்கு வந்தனர்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, மேயர் மா.சுப்பிரமணியன், வட சென்னை மாவட்ட செய லாளர் வி.எஸ்.பாபு, வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங் கோவன், தென்சென்னை வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி, வசந்திஸ்டான்லி, சற்குண பாண்டியன், இந்திர குமாரி உள்பட தி.மு.க. தொண்டர்கள் அண்ணாநினைவிடத்தில் குவிந்தனர். தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் அண்ணா நினைவிடத்தில் ஆங்காங்கே அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

முதல்- அமைச்சர் கருணாநிதி திடீரென உண்ணாவிரதம் இருக்கும் தகவல் அறிந்ததும் பிரதமர் மன்மோகன்சிங், கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் போன் மூலம் முதல்-அமைச்சர் கருணாநிதியை தொடர்பு கொண்டு பேசினார்.

உண்ணாவிரதத்தை கைவிட கேட்டுக்கொண்டார். ஆனால் முதல்- அமைச்சர் கருணாநிதி அதை ஏற்கவில்லை.

இதற்கிடையே முதல்வர் உண்ணாவிரதத்தை அறிந்து தி.மு.க. தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன்பு குவிந்தனர். அவர்கள் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கோஷமிட்டபடி இருந்தனர்.

காலை 8.45 மணியளவில் டாக்டர்கள் குழு ஒன்று வந்து முதல்- அமைச்சர் கருணாநிதி உடல்நிலையை பரிசோதித்தது. வழக்கமாக காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாத்திரை சாப்பிடகூட முதல்- அமைச்சர் கருணாநிதி மறுத்துவிட்டார்.

அந்த சமயத்தில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வந்தார். அவர் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் உண்ணாவிரதத்தை கை விடுமாறு கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், ஜி.கே.வாசன், ஞானதேசிகன் ஆகியோரும் முதல்- அமைச்சர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினார்கள்.

பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தில் குமரி அனந்தனும் கலந்து கொண்டார்.

காலை 6 மணி முதல் 9.20 மணி வரை சுமார் 3 1/2 மணி நேரம் அவர் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். 9.15 மணிக்கு முதல்வரின் பிரத்யேக டாக்டர் கோபால், இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் உள்ளிட்ட டாக்டர்கள் குழு, முதல்- அமைச்சர் கருணாநிதி உடல் நிலையை பரிசோதித்தனர்.

நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் முதுகுவலி வரும். எனவே கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று 9.30 மணியளவில் முதல்- அமைச்சர் கருணாநிதி கட்டிலில் படுத்தார்.

அவர் அருகில் தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், அமைச்சர் ஆற்காடு வீராசாமி அமர்ந்திருந்தனர். பல்வேறு கட்சித் தலைவர்கள், நடிகர்- நடிகைகள், தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. உண்ணாவிரதத்தையொட்டி, அண்ணா நினைவிடம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.

நேரம் செல்ல, செல்ல அண்ணா நினைவிடம் நோக்கி வரும் தி.மு.க. தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு இலங்கையில் போர் நிறுத்தப்பட்டுவிட்ட தகவல் போன் மூலம் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து மதியம் 12.30 மணிக்கு அவர் அறிக்கை ஒன்றை படித்தார். இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக அதில் கருணாநிதி கூறினார்.

இதனால் தனது உண்ணாவிரதத்தை முடித்து கொள்வதாக முதல்- அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். 12.40 மணிக்கு அவர் அண்ணா நினைவிடத்தில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

முதல்- அமைச்சர் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தால் இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர். அகதிகள் முகாம்களில் தவித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
 
****************************************************************************
 
இதை நான்கைந்து மாதத்திற்கு முன்பு செய்திருந்தீர்கள் என்றால் ஆயிரக்கணக்கான உயிர்களைக்  காப்பாற்றி இருக்கலாமே ஐயா!


இருப்பினும் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு ஆதரிப்பதற்கு நன்றி!

தாங்கள் அமர்ந்து கொண்டு அமைச்சரவை சகாக்களை மட்டும் உண்ணா விரதத்தில் அமர வைத்திருக்கலாமே!


வயதான காலத்தில் உண்ணா நோன்பிருந்து தமிழர்களுக்காக கஷ்டப் படுவது வேதனை அளிக்கிறது.
 
இதுவரை ஈழத்தில் மரித்த குழந்தைகள், உடல் உறுப்புக்களை இழந்த குழந்தைகளுக்கு ஏதேனும் பதில் வைத்திருந்தால் சொல்லுங்களேன்!
 

Friday, April 10, 2009

கலைஞர் பேச்சும், கலங்கிய மனமும்


இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தக்கோரி சென்னையில் திமுக சார்பில் தமிழர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி, மன்றோ சிலையில் தொடங்கி, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது. பேரணியை பார்வையிட்டு முடிந்த பிறகு, இங்கு வந்த முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது.

இலங்கை அரசே! போரை நிறுத்து! என்று வலியுறுத்தி முழக்கமிட்டு லட்சக்கணக்கிலே பேரணியாக வந்த இந்த நிகழ்ச்சிக்கு நான் தலைமையேற்கின்ற வாய்ப்புப் பெற்றதை மகிழ்ச்சியாகக் கருதவில்லை - இருந்தாலும் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு உரையாற்றி இருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு உரையாற்றியவர்கள் எல்லாம் வழிசொல், வழிசொல் என்று எனக்கு ஆணையிட்டு இருக்கிறார்கள். எவ்வழியை நான் கண்டுப்பிடித்து சொல்வதென்று புரியாத நிலையில் குழம்பித் தவிக்கிறேன். ஏனென்றால், ஏறத்தாழ 50 அல்லது 60 ஆண்டு காலமாக, இந்த பிரச்சனை, அறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோருடைய காலத்தில் இருந்து ஈடுபடுத்தி கொண்டவன் என்ற முறையில் ஒவ்வொரு காலத்திலும் இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமைகளை கண்டிக்கும் நிலையிலும் - அங்கே விழுகின்ற தமிழர்களுடைய பிணங்களைப் பார்த்து, கண்ணீர் உகுக்கின்ற நிலையிலும், இலங்கையோடு எனக்கு தொடர்பு உண்டு.

இலங்கைக்கு நான் செல்வதற்கு அங்கேயிருந்த அரசுகள் தடை விதித்தபோதும், இலங்கையில் தமிழர்களுக்கு காவலர்களாக, தூதவர்களாக இருக்கின்ற நண்பர்களுக்கெல்லாம் நான் தோழனாக இருக்கிறேன். அந்த வகையில் இலங்கை பிரச்சனை எனக்கு புதிய பிரச்சனை அல்ல. நானும் பேராசிரியரும் இந்த இலங்கை பிரச்சனைக்கு எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்தோம் என்று இங்கே திருமாவளவன் குறிப்பிட்டார். ஆனால், இப்போது சிலபேர் ஏன் இலங்கை பிரச்சனைக்காக ஆட்சியை துறக்க கூடாது என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். ஆட்சியை துறக்காமல் இருப்பதற்கு காரணம் - எனக்காக துறக்காமல் இல்லை - கேட்பவர்களுக்காகத்தான் ஆட்சியை நான் துறக்காமால் இருக்கிறேன்.

நான் மாநில ஆட்சியை துறந்து, மத்திய அரசு, நேரடியாக தமிழகத்தை ஆளுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்குமேயானால் - குடியரசு தலைவருடைய ஆட்சி நேரடியாக ஏற்பட்டிருக்குமேயானால் இவர்கள் பேசுகின்ற பேச்சுகளுக்கு - இறையாண்மைக்கு விரோதமாக - திருமதி சோனியா காந்தியை இழித்தும் பழித்தும் பேசுகின்ற இந்த பேச்சுகளுக்கு எத்தனை ஆண்டுக்காலம் சிறைத்தண்டனை கிடைத்திருக்கும் என்பதையெல்லாம் நான் எண்ணிப் பார்கிறேன். எனவே இவர்களை காபாற்றுவதற்காகத்தான் நான் ஆட்சியை இழக்கவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இது ஒரு நிலை, இன்னொரு நிலை - இன்றைக்கு செத்து சுண்ணாம்பாக ஆகிகொன்டிருக்கிறார்களே, நச்சு புகை குண்டுகளை வெடித்து நம்முடைய இனத்தை அழிகின்றார்களே, இன்னும் இதை பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்று புலம்புவது எனக்கு புரிகிறது. அந்த புலம்பலின் தாத்பரியம் என்னைபோல் எல்லோருக்கும் இருப்பதையும் நான் உணருகிறேன்.

தமிழ் ஈழத்தின் தந்தை என்று புகழப்படுகிற மறைந்த செல்வநாயகம், 1974 -ம் ஆண்டு வாக்கில் தமிழகத்துக்கு வந்தார். அவரை நான் சந்தித்து எங்களால் இயன்ற உதவியை தமிழர்களுக்கு, தமிழ் ஈழத்திற்கு செய்வோம் என்று குறிப்பிட்டேன். பெரியாரிடம் சென்று, அதே விவரங்களை எடுத்துச் சொல்லி எங்களுக்கு உதவிட வேண்டுமென்று சொன்ன போது பெரியார் - நீங்களும் அடிமைகளாக இருக்கிறீர்கள், நாங்களும் அடிமைகளாக இருக்கிறோம், ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன உதவ முடியும் என்று சொன்னார். அது இன்றைக்கும் உண்மையாக இருக்கின்றது. நான் அந்த நிலையில் தான் இருக்கிறேன். நான் மாத்திரமல்ல, நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.

இன்றைக்கு உலக நாடுகள் எல்லாம் இலங்கையிலே போர் நிறுத்தபட வேண்டுமென்று உரக்க ஒலிக்கின்றன. நம்முடைய இந்திய பேரரசும் நம்முடைய குரலை மதித்து போரை நிறுத்த வேண்டுமென்று கேட்கிறது. அந்த குரல் இன்றைக்கு சோனியா காந்தியின் குரலாக ஒலிக்கிறது.

நாம் விரும்புவது - திருமாவளவன் போன்றவர்கள் விரும்புவது - அது திருமதி இந்திரா காந்தியின் குரலாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். மாமியாரின் குரலை மருமகள் பின்பற்ற வேண்டுமானால் - மற்ற நாடுகளின் நிலைமைகளை - மாமியார் காலத்திலேயே இருந்த உலக நிலவரம் - இன்று மருமகள் காலத்திலேயே இருக்கின்ற உலக நிலவரத்தையெல்லம் எண்ணிப்பார்த்து தான் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் எண்ணிப்பார்க்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் - விரைவில் எண்ணிப் பார்த்து முடிவு செய்து - எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று எனக்கு அவர் இளையவராக இருந்தாலும் கூட - "எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே" என்று சோனியா காந்தியை பார்த்து உங்கள் சார்பாக நான் கேட்டுகொள்கிறேன்.

இந்த போரில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் - ஒரு வேளை - ஏற்படாவிட்டால் - ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் என்ன முடிவாக இருக்கும்? அது இங்கே சட்டமன்றத்திலே சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாரே, அந்தத் தீர்மானத்தை போல பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிப்பதாக இருக்கும்.

இதைத்தான் ஜெயலலிதா, முதலமைச்சராக இருந்த போது தீர்மானமாக முன்மொழிந்து அதை நிறைவேற்றினார்கள். இந்த போரின் முடிவு நமக்கு தோல்வியாக இருந்தால் - பிரபாகரன் தலைமையிலே உள்ள புலிகளுக்கு தோல்வியாக இருந்தால் - ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானப்படி இங்கே பிரபாகரனை அழைத்து வந்து தண்டனை கொடுக்க வேண்டும். நான் இப்போதும் கேட்கிறேன். ராஜபக்சேவுக்கு சொல்கிறேன். சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள்.

இந்திய சரித்திரத்தில் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, அக்ரோணி கணக்கிலே சைனியங்களையெல்லாம் அழித்து பல நாடுகளை கவர்ந்து - பல பூமிகளை தன்னுடைய காலடியிலே போட்டு மிதித்து வந்த போது - போரஸ் மன்னன் எதிர்ப்பை துச்சமாக கருதி 'போரஸ்' என்று அழைக்கப்பட்ட புருஷோத்தமனை வென்றபோது - பெருந்தன்மையோடு கேட்டான் - உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று - அந்த நிலையிலும் போரஸ் மன்னன், "என்னை ஒரு மன்னனை போல் நடத்த வேண்டும்" என்று சொன்னான். அவனுடைய பெருந்தன்மைக்கு - அலெக்சாண்டர், போரஸ் மன்னனின் வீரத்தை பாராட்டி, தனக்கு நிகராக - தனக்கு சமமாக ஒரு மன்னனாக உட்காரவைத்தான்.

போரின் முடிவு எப்படியிருந்தாலும் - ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும் - நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன் - போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும் - பிரபாகரன் தோல்வியுருத்தாலும் - போரஸ் மன்னனை அலெக்சாண்டர் நடத்தியதைபோல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்.

இது தனிப்பட்ட ஒரு பிரபாகரனுக்கு சொல்லபடுவதல்ல - கடந்த காலத்திலேயே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மத்திய அரசு அண்மையிலே வெளியிட்ட கருத்துக்கள் - பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தானாலும், குடியரசு தலைவர் வெளியிட்ட கருத்தானாலும், அதைத்தொடர்ந்து சோனியா காந்தி வெளியிட்ட கருத்தானாலும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட கருத்தானாலும் - இந்த கருத்துக்கள் எல்லாம் தமிழர்களை - தமிழ் மக்களை சம அதிகாரம் கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலே சம சுதந்திரம் கொடுத்து அவர்களை நடத்த வேண்டும் என்ற கருத்துத்தான் - அந்த கருத்தின் அடிப்படையில் என்ன முடிவானாலும் அந்த முடிவை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ராஜபக்சே நடந்து கொள்வாரேயானால், சரித்திரம் அவரை மன்னிக்காது.

சரித்திர பள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் தான் அவர் தள்ளப்படுவார். அதைஞாபகத்திலே வைத்துக் கொண்டு தமிழன், தன்மானம் உள்ள தமிழனாக - தமிழன் தாரணி போற்றும் தமிழனாக சுயமரியாதை உள்ள தமிழனாக வாழ எங்களை அனுமதியுங்கள் என்று வீரசபத முழக்கமிட்டு பேரணியில் கலந்து கொண்ட லட்சோப லட்சம் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.








Saturday, April 4, 2009

திமுக வேட்பாளர்கள்!

திமுக வேட்பாளர்கள்!

வடசென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன் (மாணவர், வயசு கம்மிதானுங்க)

தென்சென்னை- வெற்றியழகன் (பேராசிரியரின் பேரன்)

மத்திய சென்னை- தயாநிதிமாறன் (கலைஞரின் பேரன்)

ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு (இராமர் பாலம் புகழ்)

திருவண்ணாமலை- ஸ்ரீதர் (நகரசபை தலைவர்)

நீலகிரி-ஆ.ராசா (இவர் ச்பெக்டாக்கில் போடுவதில்லை)

பொள்ளாச்சி- வி.பி. சந்திரசேகரன் அல்லது க.ரா.சுப்பையா (எந்த எலநி வெல பொரும்னு தெரியல!? )

நாமக்கல்- கே.பி.ராமலிங்கம் ( ஜெயலலிதாவை அடித்தவர்)

கிருஷ்ணகிரி- சுகவனம் (ஜெயலலிதாவைத் (தோற்)கடித்தவர்

தர்மபுரி- மனோகர் (எந்த மனநிலையில் நிக்கிறாரோ?)

கள்ளக்குறிச்சி- வேங்கடபதி(சட்டை பண்ணாத சட்ட அமைச்சர்) அல்லது ஆதிசங்கர் (எம்பி)

நாகை-ஏ.கே.எஸ்.விஜயன் (விஜயமுள்ளவர்)

தஞ்சை- பழனிமாணிக்கம் (கப்டனையே ரைடு பண்ணுனவர்)

கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன் (காங்கிரஸ் காரங்க என்ன பண்ணுவாங்களோ?)

மதுரை- மு.க.அழகிரி.(கலைஞரின் மகன் -நீதிக் கட்சியைச் சேர்ந்த அஞ்சாநெஞ்சன் அல்ல)

இவர்களெல்லாம் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என்று கொள்ளிமலை குப்பு நம்புகிறார்.

Monday, March 30, 2009

தமிழீழத்துக்கு கலைஞர் ஆதரவு, அடைந்தால் மகிழ்ச்சி

தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

இந்த தேர்தலில் எதிர்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். திமுகவும் காங்கிரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்கும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடெறாது.

இந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், இது தவிர்த்து மற்ற பிரச்சனைகள் குறித்தும் அண்ணா வகுத்து தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொற்பொழிவாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ய முற்படுவார்கள். அவற்றை முறியடிக்கும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். தமிழ் ஈழத்தை திமுக ஏற்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயல்கிறார்கள்.

ஜனநாயக ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.





மக்களை திசைதிருப்பவே ஈழப்பிரச்சனை

மக்களை திசைதிருப்பவே ஈழப்பிரச்சனை

மக்களை திசை திருப்புவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஈழப்பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கலைஞர், திமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்த தேர்தலில் மக்களை திசைதிருப்புவதற்காக ஈழப்பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன என்றும் குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டை சரி என்று ஏற்றுக் கொண்ட திரு கொள்ளிமலை குப்பு கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பிய "கட் கட" தந்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்!

அப்பட்டமான உண்மை!

தாங்களும் அதையே பின் பற்றுவது

வேதனையான உண்மை!

படிக்காத மக்களில் பலருக்கு இந்த நாடகங்கள் தெரியவில்லையே தவிர

மற்றவர்களுக்கு நன்கு புலப்படுகிறது.

கே கே





Friday, March 6, 2009

ஐயா சாமி! இலங்கைப் போரை ஒத்தி வைத்தால் ஆகாதா? வேண்டிக்குங்க அன்னையிடம்!!

ஐயகோ! ஐயகோ!! பாருடாய்யா நீலிக் கண்ணீர் வடிக்கிறத!

தேர்தல் நேரத்தில் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டாம். விஷப்பரீட்டையில் ஈடுபடுவதற்கு பதிலாக அதை ஒரு மாதம் ஒத்திவைக்கலாம். இதனால் எந்த நஷ்டமும் வந்து விடாது என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 16 முதல் மே 13 வரை நடைபெறும் என அறிவித்தது. இதே சமயத்தில் ஐபிஎல் சார்பில் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடப்பதாக இருக்கிறது.

இதையடுத்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கேட்டுகொண்டார். ஆனால், தொடரை மொத்தமாக தள்ளிவைக்க முடியாது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன் 48 மணி நேரத்துக்கு போட்டிகள் இல்லாமல் பார்த்து கொள்கிறோம் என ஐபிஎல் தலைவர் லலித் மோடி அறிவித்தார்.

இந்நிலையில் கிரிக்கெட் பிரியரான முதல்வர் கருணாநிதி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் ஐபிஎல் டுவென்டி-20 தொடரை நடத்தும் விஷப்பரீட்சையில் ஈடுபடக் கூடாது. கிரிக்கெட் உலகப் புகழ் பெற்ற விளையாட்டு. அதில் பங்கேற்கும் வீரர்களின் உயிர்கள் மட்டுமல்ல, அதைக் காண வரும் லட்சக்கணக்கான பொதுமக்களின் உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை.

இந்த நேரத்தில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலும் நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் இந்த தொடரை ஒரு மாதத்துக்கு தள்ளி வைத்து நடத்துவதால் எந்த நட்டமும் யாருக்கும் ஏற்பட்டுவிடாது.

அந்தந்த மாநில காவல்துறை தலைவரிடமிருந்து பாதுகாப்புக்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை மந்திரி தெரிவித்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் மாநிலங்கள் மாத்திரமல்ல, இந்திய அளவில் அச்சுறுத்தல் இருக்கும்போது இந்த விஷப் பரிட்சையில் ஈடுபடக்கூடாது என்பதே என் கருத்தாகும்.

நடைபெற்ற பின் வருந்துவதை விட வரும் முன் காப்பதே சால சிறந்ததாகும் என்றார் கருணாநிதி.

ஐயா சாமி! இலங்கைப் போரை ஒத்தி வைத்தால் ஆகாதா? வேண்டிக்குங்க அன்னையிடம்!!


அன்னையும் பிதாவும்(சோனியா+காந்தி) முன்னரி(முன் எச்செரிக்கையுள்ள நரி) தெய்வம்!



வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை