Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Friday, October 16, 2009

எண்ணச் சிதறலில் தீபாவலி - ஈழமக்கள்




மாற்றுத்துணியில்லா
மண்ணின் மைந்தர்கள்
மறத்தை உரமாக்கி
மங்கிப் போன ஓவியங்கள்
பருக்கைகளுக்கு பகலிரவாய்
காத்திருக்கும் காவியங்கள்
குடி நீருக்கு
குடங்களுடன் மட்டுமல்ல
குற்றுயிருடன் விழிப்பு
குளிப்பதற்கு பிறவிப் பெருங்கடல்
இருந்தால் நீந்த முடியும்
அயலார் வருகையும்
வழமையான வினாக்களும்
தொடரும் கனாக்களும்
வேடிக்கை பார்க்க
வீணர்களின் வருகை
கிளிகளைக் கூண்டில் அடைத்து
ஆடச் சொல்லும் அவலம்
தினம் தினம் காணாமல் போகும்
உறவுகளால் மனவதை
பால் இல்லாப் பாலகர்கள்
பகலவன் வந்துபோவதை பார்த்து
பசியாற முடியுமா?
வல்லாருக்கு வாய் பிளக்கும்
வல்லாதிக்க வரைவுத்திட்டம்
இல்லாருக்கு இறங்குமா?
சொல்லார் சுயமாய்
உண்மை உரைப்பின்
உடுக்கை பறக்குமே
உயிர் போகும் வரை
பிழைத்துக்கொள்ள
உரிமை மறுப்பதேனோ?
வருகைக்காக ஏங்கும்
மண்புழுக்கள் எலிகள் நண்டுகள்
எருதுகள் எங்கோ?
பசுவின் பாலிற்கு ஏங்கும்
பாலகர்கள் செய்த பாவம்தான் என்ன?
மரித்துப்போன மனிதம்
மறுமுறை பிறக்கும் என்ற நம்பிக்கை
ஆள் அரவம் இல்லாத
குட்டிச்சுவர்கள்
வெளிச்சத்திற்காக
ஏக்கத்துடன்
முட்கம்பி வேலிக்குள் வாடும்
முல்லை மலர்கள்
தொடுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட
தீபாவலி








Saturday, October 10, 2009

முத்து வரிகளில் சொட்டு விடும் கண்ணீர்த் துளிகள்


எழுதாத வரிகள்

எழுதாதக் கவிதைகளை
கண்ணீரால்

இரட்டை வரிகளில் எழுதும்

உதிரும் கவிதைகள்

உதிரக் கவிதைகள்


அன்றும் இன்றும்

அன்று

எனக்கு நடக்க முடியாத போது

வேலி தாண்டிய

கண்ணுக்குட்டியை

பிடித்து கொண்டு வந்து கொடுத்தது

எங்கள் கறுப்பு நாய்

இன்று

எனக்கு கண் தெரியவில்லை

படுக்கையில் நான்

வெத்துலாக்குப் பொட்டி வேண்டும் எனக்கு

எலே நடுளவனே

இந்த வெத்துலாக்கு பொட்டிய

எடுத்துத் தாடா என்றேன்

நான் பக்கத்து வீட்டுப்பையன்

என்கிறான் பேரன்




ஆக்கிரமிப்பு

நம்ம அருணாச்சலம்

சீன மொழி கற்றுக்கொண்டிருக்கிறான்

வாருங்கள் நாம்

சிங்கள மொழியைக் கற்றுக்கொள்வோம்
அன்னை மொழி தவிர்த்து

அண்டை மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால்

அடிமை சாசனம் எனும் ஆசனம் உறுதியாம்

சென்னை டு திருப்தி எம்.பி எக்ஸ்பிரஸ் இலங்கை பயணம்




இலங்கைக்கு பயணம் செய்யும்
இன உணர்வுத் தங்கங்களே
வழி மாறி
திருப்பதிக்குச் சென்று
மொட்டை போட்டுக்கொண்டு
வந்து விடாதீர்கள்
நீங்கள் வரலாற்றுப் பிழை
மட்டுமல்ல
எழுத்துபிழையும் செய்வீர்கள்
”ப” உங்களுக்குப் பிடித்தமானதுதான்
அதற்காக அதை எடுத்துக்கொண்டு
இறுதியாக திருப்தி
என்று சொல்லிவிடாதீர்கள்
உங்களைக் கோமாளிகள் என்றதை
மனதில் நிறுத்துங்கள்
மனிதம் மரிப்பதை
நின்று பாருங்கள்
நிறுத்துப்பாருங்கள்
உண்மை பேசுங்கள்
நன்மை செய்யுங்கள்
உங்களுக்கு ரத்தினக்கம்பளம்
கூட விரிக்கப்படலாம்
அது உங்களை வீழ்த்தும் வலை
சிங்கள ரத்னா
கூட கொடுக்கப்படலாம்
அது உங்கள் சிறை
விருந்து
கூட வைக்கப்படலாம்
அது உங்களுக்கு மருந்து
தமிழே
நீ வாழவேண்டுமானால்
தமிழனை வாழ விடு

Saturday, August 29, 2009

இதைத் தட்டிக் கேட்க தமிழகத்தில் யார் உளர்?



இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.

திரிகோணமலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கப்பலை கோத்தபயா ராஜபக்சே தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், எஸ்.எல்.என்.எஸ். சயுரலா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலை வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையால், இரு நாடுகளின் உறவுகளும் மேம்படும் என்றார்.

இந்திய கடலோரக் காவல் படை இந்தக் கப்பலை விக்ரஹா என்ற பெயரில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்தது. மும்பையில் இந்தக் கப்பல் கட்டப்பட்டது. இதன் நீளம் 74.10 மீட்டராகும். அகலம் 11.4 மீட்டர். அதிகபட்சம் 21.5 நாட்ஸ் வேகத்தில் இது போகக் கூடியது.

கடல் கண்காணிப்பு ரேடார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இலங்கைப் போரில் இந்தியா பெருமளவில் உதவிகள் செய்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதை நியாயப்படுத்துவது போல பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜுவும் பேசியிருந்தார். இந்த நிலையில் இலங்கைக் கடற்படைக்கு நவீன ரோந்துக் கப்பலை இந்தியா வழங்கியுள்ளது.

இந்தக் கப்பலை வைத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கவும் தயங்க மாட்டார்கள் என்பது திண்ணம்.



இதைத் தட்டிக் கேட்க தமிழகத்தில் யார் உளர்?


நாதியத்த இனத்திற்கு

நரிகள் உதவின

பிணங்கள் மிச்சம்



நற்றமிழர் - அடிமை நாற்றம்

உன்னை நிர்வாணப்
படுத்திச் சுடுகிறார்கள்
என்னுறவே
உருக்குலைந்து
விட்டாய்
நிலை குலையாமல்
உனக்காக நாங்கள்
இங்கு எவ்வளவு காலம்
மௌன விரதம் இருப்போம்
மூஞ்சிக் கூடும்
மூக்குச் சரடும்
போடப்பட்ட உறவுகள்
விடுதலைக்குப் பின்னும்
அஞ்சடி அரசியல்
அடிமைகளாய்
வியர்த்தாலும்
துடைக்க முடியாமல்
நாற்றத்துடன்
நற்றமிழர்


இந்த கொடுமையைப் பாருங்கள் மனிதம் போற்றும் மானிடர்களே!

Saturday, August 1, 2009

அடிமை வாசம்

மின்சார

முள் வேலிக்குள்

விடுதலையை சுவாசிக்கும்

நீங்கள்

புரட்சிப் பூக்கள்

சுதந்திரக் காற்றை

சுவாசிக்கும்

எங்கள் வாசம்

அடிமை





Friday, June 19, 2009

தலையில்லாக் கோழிகள் - தலைவர்களே வாருங்கள்

தலைவர்களே வாருங்கள்
தமிழர்களைத் தரித்திரமாக்கி
சரித்திரம் எழுதலாம்
அதனை வாசிப்பதற்கு
வடக்கத்தியானை அழைக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
தனித்தமிழில் எழுதலாம்
அவர்களை படிக்கப் பழக்கலாம்
அடிமைத் தமிழரின்
பிரியாணிக்குக் கொடுக்கும்
பணத்தை மிச்சப் படுத்தி வைக்கலாம்

நீங்கள் எழுதும்
தமிழ் நூல்களை
அவர்களுக்குக் கொடுத்துவிட்டு
எடுத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
அடிமைகள் இல்லாத
நாட்டை உருவாக்க முனைந்து
அடிமையாக வாழலாம்

தலைவர்களே வாருங்கள்
தினந்தோறும்
தமிழ் பிணங்கள் விழுகின்றன
சிவலோக பதவிக்குப் பிறகும்
பதவியைத் தேடலாம்

தலைவர்களே வாருங்கள்
தொண்டைக் குழியைத் தாண்டிவிட்டால்
உண்ணும் அறுசுவை உணவும்
அருவெறுக்கத்தக்க மலமாகிப் போகும்
நாவால் சுவைத்துப் பிழைக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
பிணத்திடம் காசுகள் தலை வணங்கும்
பணம் வேறு வழியில் போகும்
அண்டாது
நடை பிணமாக இருந்து
பிழைத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
நடைபிணங்களை நாடாள
அழைப்போம்
அடிமைகளை அரசாள
கூப்பாடு போடுவோம்

தலைவர்களே வாருங்கள்
வேற்று கிரக
மனிதருக்கும் தமிழ்
கற்றுக் கொடுக்கலாம்

தமிழன் அழிந்த பின்னும்
பிழைத்துக் கொள்ளலாம்

தலைவர்களே வாருங்கள்
கல்லறைகள் உடைக்கப் பட்டதை
காவியமாக எழுதலாம்
கழிசடைத் தமிழன்
கடைசிவரை இருப்பான்
படிக்கச் சொல்லலாம்
வயிற்றுப் பிழைப்புக்கு ஆகும்

தலைவர்களே வாருங்கள்
புல் பூண்டு மண் மரம் மட்டை
எல்லாம் அழிந்தாலும்
மனிதன் பிறப்பான் என்ற
நம்பிக்கையோடு இருக்கலாம்

தலைவர்களே வாருங்கள்
பிழைப்பு நடத்தலாம்
கல்தோன்றி மண்தோன்றா
காலம் மீண்டும் வரும்
முதலில் தமிழன் பிறந்தால்
அவனிடம் தமிழை
விற்றுத் தீர்க்கலாம்






Tuesday, June 9, 2009

ஈழ மக்கள் எங்கள் இரத்தம் - இரத்தம் கொதிக்கிறது


ஈழத்தில் தமிழர்கள் படும் பாட்டையும், வேதனையையும் நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது என்று ராஜ்யசபாவில் பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் வேதனையுடன் குறிப்பிட்டார்.

ராஜ்யசபாவில் திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் சார்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து முக்கியமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் சார்பில் பேசிய ஜெயந்தி நடராஜன், ஈழத் தமிழர் நிலை குறித்து கவலை தெரிவித்தார். அதிகாரப்பகிர்வை இலங்கை அரசு செய்தே ஆக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதேபோல திமுக சார்பில் பேசிய கனிமொழியும், போர் முடிந்தும் கூட இலங்கையில் தமிழர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது வேதனை தருவதாக தெரிவித்தார்.

இவர்களை விட ஒருபடி மேலே போன பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ், நன்னெறியிலிருந்து ஒரு வாக்கியத்தை இந்தியில் குறிப்பிட்டு ஈழத் தமிழர் நிலையை நினைத்தால் ரத்தம் கொதிப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.

சுஷ்மா பேசுகையில், மனித உடலில் ஏதாவது ஓர் அங்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் கண்கள் கண்ணீர் விடுகின்றன.

இலங்கையில் வசிப்பவர்கள் இந்தியாவிலிருந்து தூரத்தில் இருக்கலாம். ஆனால், அவர்களது ரத்தமும், நமது ரத்தமும் ஒன்றுதான்.

அவர்கள் துன்பப்படுவதைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது. பெண்களும், சிறார்களும் பாதிக்கப்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.

இலங்கையில் தமிழ் சகோதர, சகோதரிகள் மீது நடத்தப்படும் தாக்குதலையும், குழந்தைகள் பசியால் தவிப்பதையும் பார்த்துக் கொண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? என்றார் சுஷ்மா.

பின்னர் நன்னெறியில் வரும் "பெரியவர்தம் நோய் போல் பிறர் நோய் கண்டுள்ளம்'' என்று தொடங்கும் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.

சொரணை குறைவான, ஜனநாயக பிறவிகளான தமிழக எம்.பிக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கும் தமிழர்களின் அன்பிற்குரிய தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ்!








Thursday, May 28, 2009

பொறுப்புள்ள தமிழக முதல்வரின் பதில் என்ன?

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ராஜபக்சே அரசு பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது. நிராயுதபாணிகளாகத் தப்பியோடிய தமிழர்களை குண்டுவீசி தாக்கி படுகொலை செய்திருக்கிறது.

இந்தக் குற்றத்திற்காக ராஜபக்சே மீதும், அவரது சகாக்கள் மீதும் போர்க் குற்ற வழக்குத் தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு திரண்டு வருகிறது.

அதற்கு முதல் படியாக ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான விசாரணை தொடங்கியிருக்கிறது. கொலை வெறி பிடித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், தென்அமெரிக்க நாடுகளும் உலக அரங்கில் அணி திரண்டு நிற்கின்றன.

ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் நடக்கும் விசாரணையை முடக்கிப் போட்டுவிட வேண்டும் என்று இலங்கை பகீரத முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நமது பகை நாடுகளுடன் இந்தியாவும் கைகோர்த்துக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது.

இத்தகைய விசாரணை இப்போது தேவையில்லை என்கிற அளவுக்கு மனித உரிமை மன்றத்தின் முதல் நாள் விசாரணையில் இந்தியா வாதிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சே அரசின் துரோகத்திற்கு இந்தியா துணை போகக் கூடாது என்று உலகத் தமிழர்களெல்லாம் குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்கு வலிமை சேர்க்கும் வகையில், ஓங்கி குரல் எழுப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதலமைச்சருக்கு இருக்கிறது.

இலங்கை இறையாண்மை மிக்க நாடு; அதன் உள்விவகாரங்களில் தலையிடுவதன் மூலம், அதன் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதிக்கப்பட்டுவிடும் என்று இந்தியப் பேரரசு தொடர்ந்து சொல்லி வருவதை தமிழகத்தின் முதலமைச்சரும், எதிரொலித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.


ஈழத் தமிழர்களை ஈவு இறக்கமின்றிக் கொன்று குவித்தது தவறு என விசாரணை நடத்த வேண்டும் என்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும் என்றால், அதற்கு காரணமான போருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவியிருப்பது உள்விவகாரங்களில், தலையிட்டதற்கு ஒப்பாகாதா?


இந்தியா எங்களுக்கு உதவி வந்திருக்கிறது என்று இலங்கைத் தலைவர்கள் பலரும், பலமுறை பகிரங்கமாகவே அறிவித்து நன்றி தெரிவித்து வந்திருக்கிறார்கள். இன்றளவும் இது மறுக்கப்படவில்லை.

இனப் படுகொலைக்கு எதிரான விசாரணையை ஆதரிப்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது என்றால், அதற்கு உதவி இருப்பதும், உள்விவகாரங்களில் தலையிட்டதற்கு ஒப்பானதுதான் என்று இந்திய அரசுக்கு உணர்த்த தமிழகத்தின் முதலமைச்சருக்குத் தைரியம் இல்லாமல் போனது ஏன்?

மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை முடக்கிப் போட இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சி தமிழர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் நம்புகிறார்கள்;

தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களின் எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டு இலங்கைக்குத் துணை நிற்க வேண்டாம் என்று கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிற முதலமைச்சர், இப்போது ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரிந்து விட்டதற்குப் பின்னர் என்ன பரிகாரம் காணப்போகிறார்?’’ என்று தெரிவித்துள்ளார்.

இதை வெளியிட்டவரின் நம்பகத் தன்மை, கேள்வி கேட்கும் அருகதை போன்ற கேள்விகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு கொஞ்சம் சிந்தித்தால் உண்மை விளங்கும். இதற்கு பொறுப்புள்ள தமிழக அரசும் முதல்வரும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?




கருணாநிதியை மதிக்கும் மத்திய அரசும், சோனியா-மன்மோகன் கம்பெனியும்?


இந்திய மற்றும் அனைத்துலக விமானங்களும், தொலைபேசி சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கும் இவ்விக்கேட்டான நிலையிலும் அந்த சேவைகள் வரும் வரை காத்திராமல், பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருக்கிறார்.

பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,
ஒரு புறத்தில் ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவது ஒரு நாட்டின் இறையாண்மை, எல்லை ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் என்றாலும் இலங்கையை ஒரு விசேஷ நிலையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளில் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு தாக்கல் செய்துள்ள நகல் தீர்மானம் இலங்கை தமிழர்கள் நலன்களுக்கு எதிரானது என்று உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் பரவலாக நம்புகிறார்கள்.

எனவே இலங்கை தமிழர்களின் உணர்வுகள் மற்றும் அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீங்கள் இந்த விஷயத்தில் தகுந்த முடிவு எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.


கருணாநிதியின் கடிதத்திற்கு மத்திய அரசு வழங்கிய மரியாதையைப் பாருங்கள்!


இந்தியா, சீனா, கியுபா,எகிப்து உட்பட 47 நாடுகள் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கை அரசை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதில் ஏனைய நாடுகள் தலையிடுவது இலங்கை அரச விருப்பத்தைப் பொறுத்தே அமைய வேண்டும் என்றும் இந்தியா உட்பட 26 நாடுகள் விருப்புத் தெரிவித்ததற்கிணங்க இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மனித உரிமை அமைப்புக்களையும், உதவி அமைப்புக்களையும் அனுமதிப்பது தொடர்பாக இலங்கை அரசு தேவைப்பட்டால் அனுமதி வழங்கலாம் எனவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முடியாதெனவும் இந்த நாடுகளின் பெரும்பான்மை வாக்குகளுக்கிணங்க தீர்மானிக்கப்பட்டது.

இனியும் பயனற்ற கடிதங்களை எழுதுவதை விடலாமே?


Wednesday, May 27, 2009

ஒப்புக்கு சப்பாணி ஊருக்கு கண்ணீர் விட்ட கதை தான் இது

ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்
இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில், ஈழத்தமிழர்களை காப்போம் என்னும் பெயரில் 1ந் தேதி சென்னை சைதாப்பேட்டை, 7 ந் தேதி திருச்சி, 13 ந் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் பேரணி நடத்துவது. இலங்கையில் உணவு, மருந்து இன்றி போராடி கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவிகள் செய்ய வேண்டும். ராஜபக்சேயை போர் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். தமிழக எம்.பி.க்கள் உள்ளடக்கிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி உண்மைகளை கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு போன்ற தமிழன் என்று சொல்லும் துரோகிகளிடம் கொடுப்பதை விட வட நாட்டானிடம் கொடுக்கலாம்.

தேர்தலுக்கு முன் இவர்களால் அல்லது இவர்களின் பெயரால் ஓட்டப் பட்ட சுவரொட்டி

போதுமைய்யா உங்க கூட்டமும் பேரணியும்!அதைத் தவிர உங்களால் வேறு என்ன செய்ய முடிந்தது!? அரசியலில் இருந்து...!?


தேர்தலுக்கு முன் உங்கள் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி தானே இது?
இப்போது உங்கள் சங்கத்தின் பெயரை மாற்றிக் கொண்டு விட்டீர்களோ?
வெளிய சொன்னா வெக்கம்! உள்ள சொன்னா துக்கம்!
விடுங்க போதும்! தாங்க முடியல!

கவிஞர் மேத்தா போன்றவர்களும் இந்த சங்கத்துளையா இருக்காங்க!?

நல்லா இருந்துட்டு போவட்டும்!



Tuesday, May 26, 2009

மக்களைக் கெஞ்சும் கி.வீரமணி


இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சே மீது ஐ.நா. சபையில் விசாரணை நடத்துவதற்கு இந்திய உதவ வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் ராஜபக்சே அரசு தமிழர்களை படுகொலை செய்தது பச்சையான இனப்படுகொலையாகும். இது மிகப்பெரிய போர் குற்றமாகும்.
ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர ஆயத்தமாகி இருக்கிறது.
இந்த கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கை அரசை கண்டித்து வெளிப்படையாக எடுக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசும் ஏற்று ஆதரவு தர வேண்டும். ராஜபக்சே அரசை காப்பாற்ற முயல கூடாது.
பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளையே இலங்கை அரசு பெரிதும் நம்புகிறது. இந்த நாடுகளால் இந்தியாவுக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும்.

தமிழ் மக்களது அதிருப்தியை சம்பாதித்துள்ள மத்திய அரசு அந்த பழியை துடைக்க இதுவே நல்ல சந்தர்ப்பம். இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது.
மனித உரிமை மீறல் பிரச்சனைகளில் ஒரு தெளிவான திட்டவட்டமான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் அன்னை சோனியாவுக்கு ஓட்டு போட சொல்லி மக்களைக் கெஞ்சினீர்கள்!

இப்பவும் தமிழக மக்களைத் தான் கெஞ்சுகிறீர்களா?

இல்லை சோனியாவைக் கெஞ்சுகிறீர்களா?

கொஞ்சம் புரியாமத்தான் கேக்குறோம்!

கொஞ்சம் புரியிற மாதிரி கெஞ்சுங்க!



Sunday, May 10, 2009

மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் மனித அரக்கன் மகிந்த

இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் நேற்று இரவு முழுவதும் இலங்கை ராணுவம் மிகக் கொடூரமான முறையில் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதில் 2000 அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அந்தப் பகுதியே ரத்த வெள்ளமாக காணப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான முறையில், மிகக் கொடூரமான முறையில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. சகல விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை இலங்கை ராணுவம் நடத்தியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று இரவு 7 மணிக்கு இலங்கைப் படைகள் தங்களது பீரங்கித் தாக்குதலை தொடங்கின.

பீரங்கிகள் மட்டுமல்லாமல், தங்களிடம் உள்ள அனைத்து விதமான கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது இலங்கை ராணுவம்.

இதில் பதுங்கு குழிக்குள் மறைந்து கொண்ட அப்பாவித் தமிழர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்த பலர் தூங்கிய நிலையில் பிணமானார்கள்.

பல உடல்களை எடுக்க முடியாத அளவுக்கு மண்ணுக்குள் புதைந்து போய் விட்டது. காயமடைந்தவர்கள் எங்கும் செல்ல முடியாமல் ஆங்காங்கே விழுந்து கிடக்கிறார்கள். காப்பாற்றுங்கள் என்று கோரி அவர்கள் அழுது புலம்பும் காட்சி இதயமற்றவர்களையும் இளக வைக்கும் வகையில் உள்ளது.

சாலைகள் அனைத்திலும் பிணங்களாக காணப்படுகின்றன. அவற்றை அப்புறப்படுத்தக் கூட முடியாத அளவுக்கு இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்று காலை வரை 1,112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் படிப்படியாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தாக்குதல் தொடர்ந்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவர்.

மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடல்களில் 67 பேர் சிறுவர்கள்.

ராணுவத் தாக்குலில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. இதனால் சிகிச்சை பெறவும் வழியில்லாத நிலை உருவாகி வருகிறது.

போரை நிறுத்த வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இதையடுத்து இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசியது. இதைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறினார்.

இதையடுத்து போர் ஓய்ந்து விட்டது என முதல்வர் கருணாநிதியும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறினார்கள். கருணாநிதியும் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ஆனால் எந்த வகையான ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். அதை யாரும் தடுக்க முடியாது என சில நாட்களுக்கு முன்பு கோத்தபாய ராஜபக்சே கூறியிருந்தார். மேலும், தமிழர்கள் மீது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி மொத்தமாக அழிக்க இலங்கை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், விடிய விடிய பீரங்கிகள் மற்றும் சகல விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி 2000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது இலங்கை ராணுவம்.


நன்றி:தட்ஸ்தமிழ் இணையதளம்

Thursday, May 7, 2009

கி.வீரமணி ஐயா எந்த விலையைக் கொடுக்கச் சொல்கிறார்?


இலங்கை‌யில் போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக‌த்‌தி‌ல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளா‌ர்.
இது குறித்து அவ‌ர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஏற்கனவே சேது கால்வாய் திட்டத்தில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவது தமிழக மக்களிடம் மிகுந்த கசப்புணர்வை உருவாக்கி உள்ளது.
தற்போது இலங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌‌ச்னை‌யி‌லு‌ம் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அலட்சியப்படுத்துவது தேர்தலில் மிகப்பெரிய விலையை தரவேண்டிய கட்டாயத்தை காங்கிரஸ் கட்சிக்கு உருவாக்கும்.
எனவே இனியாவது இலங்கை‌த் தமிழர் பிரச்னையை காங்கிரஸ் தலைவர் சோனியா கா‌ந்‌தி தெளிவுடன் புரிந்து செயல்பட வேண்டும்’ என்று ‌‌‌கி.வீரம‌ணி கூறியுள்ளார்.

சனவரி 6 2009 தேதியில் திரு கி.வீரமணி ஐயாவின் திருவாயால் சொன்னது.


திரு கி.வீரமணி ஐயா அவர்களே!

ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தாயிற்று.(காங்கிரஸ் கட்சி, இந்திய அரசு)

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய விலையைத் தருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

தோல்வியைத் தழுவ வேண்டுமா?

அல்லது

வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையெல்லாம் எடுத்து மக்களுக்குப் பட்டுவாடா செய்தும் தோற்றுப் போக வேண்டுமா?

இனப் படுகொலைக்குத் துணை போன காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று நீங்கள் பிரச்சாரம் செய்வது ஏன்?
காங்கிரஸ் கட்சி செய்யும் துரோகத்திற்கு நாம் துணை போகலாமா?
அல்லது

காலத்தின் கட்டாயமா?

நல்லா புரியல!


உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும்
கடைக்கோடி தமிழன் (அவனுக்கு இதுல மட்டும் தான் கோடி இருக்கு)







Wednesday, May 6, 2009

சென்னையைத் தவிர்த்த அன்னையும் வெண்ணைகளும்


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சென்னை, புதுச்சேரி பிரசார பொதுக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டன.இத் தகவலை காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்தும் இன்று நடக்கவிருந்த பிரசாரக் கூட்டங்களில் பேச சோனியா திட்டமிட்டிருந்தார்.ஆனால், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதால் சென்னை கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டவும் சில அமைப்புகள் திட்டமிட்டிருந்தன.

திரையுலகினரும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்த இருந்தனர்.இந் நிலையில் சோனியா தனது ‌சென்னை, புதுச்சசேரி பிரசாரக் கூட்டங்களை திடீரென ரத்து செய்துள்ளார். இத் தகவலை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் உறுதி செய்தார்.

முன்னதாக சோனியா காந்தியின் வருகையையொட்டி புதுச்சேரியிலும், சென்னையிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை வர இருந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்லவும் அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் திரும்பி தீவுத்திடல் அருகே உள்ள ஐ.என்.எஸ். ஹெலிபேட் தளத்தில் இறங்கவும்,அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் தீவுத் திடல் மேடைக்கு வந்து தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.

தீவுத் திடலில் இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், பூவை ஜெகன்மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பேச இருந்தனர்.

இந் நிலையில் முதுகு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதி இன்று தான் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார்.எனவே அவரால் சோனியா காந்தி கூட்டத்திற்கு வர முடியாத நிலை உள்ளதாக காங்கிரசிடம் திமுக தரப்பு தெரிவித்தது.

இந் நிலையில் சோனியா காந்தியே தனது கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்.முன்னதா சோனியா காந்தியின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேடை அமைக்கும் பணி தொடங்கியதுமே தீவுத்திடல் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

செக்போஸ்ட் அமைக்கப்பட்டு தீவுத்திடலுக்குள் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.வெடிகுண்டு நிபுணர்கள் தீவுத்திடல் முழுவதும் சோதனை செய்து வந்தனர். மோப்பநாய்களும் மைதானம் முழுவதும் வலம் வந்து கொண்டே இருந்தன. ஏராளமான போலீசாரும், சிறப்பு பாதுகாப்பு படையினரும் தீவுத்திடலில் குவிக்கப்பட்டிருந்தனர்.


குற்றம் செய்த மனசு குறுகுறு என்றிருக்கு போலும்!?

கருணாநிதி மிகச் சிறந்த நடிகர்


இலங்கைப் பிரச்சனையில் உண்ணாவிரத நாடகம் நடத்தியதன் மூலம் முதல்வர் கருணாநிதி மிகச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து தாம்பரம் அருகே பிரச்சாரம் செய்த ராமதாஸ் பேசுகையில்,

திமுக அரசிடம் மது ஒழிப்பு நடவடிக்கை வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அரசு ஒரு மணி நேரம் மட்டும் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்தது. கல்விக்கூடங்களை தனியார்மயமாக்கிய அரசு மதுக்கடைகளை மட்டும் அரசுடமையாக்கியுள்ளது.

திமுக வேட்பாளர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள். டி.ஆர்.பாலு கப்பல் முதலாளி ஆவார். எங்கள் கட்சி வேட்பாளர்கள் சாதாரண பொறுப்பில் இருந்து மேல்நிலைக்கு வந்தவர்கள்.

தனி ஈழம் அமைத்துத் தருவதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் இதற்கு கருணாநிதி தனி ஈழம் எப்படி அமையும் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்தால் தனி ஈழம் உருவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை பிரச்சனை குறித்து கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காலையில் டிபன் சாப்பிட்டு முடித்துவிட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்வதற்காக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். தனது உண்ணாவிரத போராட்டத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிரந்தரமாக ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், அன்றைய தினமே 142 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

உண்ணாவிரதம் நடத்தி நாடகமாடியதன் மூலம் கருணாநிதி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார் என்றார் ராமதாஸ்.

நன்றி: தட்ஸ்தமிழ்

Saturday, May 2, 2009

கொடுமையை நிறுத்துங்கடா, பாவிகளா!

துயரத்தில் இருக்கும் ஈழத் தமிழரை துடைத்தொழிக்க வஞ்சக இந்திய காங்கிரஸ் அரசு, கள்ளத்தனமாக அனுப்பி வந்த ராணுவத் தளவாடங்களை இப்போதெல்லாம் வெளிப்படையாக அனுப்பத் தொடங்கிவிட்டது. 80 லாரிகளில் இலங்கைக்கு அனுப்புவதற்காக கொச்சி துறைமுகத்துக்கு அனுப்பப் பட்ட ஆயுதங்களை பவானி அருகே பொதுமக்கள் வழி மறித்திருக்கிறார்கள்.

உணர்வுள்ள ஒரே திராவிடர்கழகம் பெரியார் திராவிடர் கழகம் தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறது. அதன் தலைவர்களில் ஒருவரான திரு இராமகிருட்டிணன் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டிருக்கின்றனர். சன் தொலைக் காட்சியின் செய்தியாளரும், மற்ற செய்தியாளர்களும் தாக்கப் பட்டிருக்கின்றனர்.

இது பற்றிய செய்தி.

Saturday, April 18, 2009

ஈழமக்கள் நிலை, உண்ணாவிரதம் - மூன்று பெண்கள் கவலைக்கிடம்



இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் பெண்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் இன்று 6வது நாளாக நீடித்துள்ளது. இதில் 3 பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும் அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினர் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்

அதன்படி கடந்த 13ந் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த அவர்கள் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துகுமார் உடல் வைக்கப்பட்டிருந்த கொளத்தூருக்கு சென்றனர். அங்கு 20 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

அங்கு உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி மறுத்தனர். அதைத் தொடர்ந்து ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் 15ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதற்கு ஆதரவு தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வருகின்றனர்.

போராட்டம் தொடங்கி நேற்றுடன் 4 நாட்கள் ஆகிவிட்டது. இதனால் உண்ணாவிரதம் இருந்து வரும் 20 பெண்களும் சோர்வாக காணப்பட்டனர். இதில் சென்னையை சேர்ந்த கவிதா(வயது 30) தேனியை சேர்ந்த சித்ரா(40) காஞ்சீபுரத்தை சேர்ந்த சசிகலா( 30) ஆகிய 3 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பட்டது. போராட்டம் தொடர்ந்து நீடிக்குமானால் பலரது நிலைமை மிகவும் மோசமாக வாய்ப்பு உள்ளது.

தமிழக, இந்திய அரசின் தொடர் மௌனமும், பயனற்ற பேச்சுகளும், அறிவிப்புகளும், பேரணிகளும், அறிக்கைகளும், தந்திகளும், வேண்டுகோளும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது.

இக்கெட்டான
துயர நிலையில் இருக்கும் ஏறக்குறைய மூன்று லட்சம் தமிழர்களை, காப்பாற்றுவது யார்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது? இதற்கு பதில் சொல்லவேண்டிய நிலையில், இந்திய அரசில் பணியாற்றும் தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதை விட, காலம் கடந்து விட்டதால் இந்த தேர்தலில் அவர்கள் இருக்கும் கூட்டணி முற்றிலும் புறக்கணிக்கப் படவேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பமும் கூட.

Thursday, April 16, 2009

தோல்வியுறப்போகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

ஆனால், காஞ்சிபுரத்துக்கு வேட்பாளரை இறுதி செய்வதில் சிக்கல்(சிக்கலுக்கு காங்கிரசில் குறைவா என்ன?) நிலவுவதால் அந்தத் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

வேட்பாளர்கள் விவரம்..

1. சேலம் - கே.வி. தங்கபாலு.
2. சிவகங்கை - ப.சிதம்பரம்.
3. ஈரோடு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
4. திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன்.
5. கோவை - ஆர்.பிரபு.
6. திருப்பூர் - கார்வேந்தன்.
7. ஆரணி- எம். கிருஷ்ணசாமி.
8. திருச்சி - சாருபாலா தொண்டைமான்.
9. தேனி - ஜே.எம். ஆரூண்.
10. மயிலாடுதுறை - மணிசங்கர அய்யர்.
11 நெல்லை - ராமசுப்பு.
12 விருதுநகர் - சுந்தர வடிவேல்.
13 தென்காசி - வெள்ளைப்பாண்டி.
14. கடலூர் - கே.எஸ்.அழகிரி.
15.புதுச்சேரி - நாராயணசாமி.

காஞ்சிபுரத்துக்கு வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

நமக்கு வியர்க்காததை மறந்த கவிஞர் வைரமுத்து


கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது.

இவ்விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

வைரமுத்து பேசும்போது, ‘’இந்த மேடையில் ஈழப்பிரச்சனையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது. ஆனால் என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது.

உலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை.

உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது. அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது அமெரிக்கா’’ என்று ஆவேசப்பட்டார்.

நன்றி: நக்கீரன் செய்தி


ஐயா, தமிழ் கவிஞன் என்ற வகையில் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கும் அப்படித்தான்!

உலக நாடுகள் கண்டித்தன. பட்சே கேட்கவில்லை. நல்லாத்தான் இருக்கு உங்கள் பேச்சும் வாதமும்!

தெற்காசியாவின் தலைவன் என்று பீத்திக்கொள்ளும் உங்கள் நாடு கண்டித்ததா, அதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. உங்கள் நாடு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று குறைந்த பட்சம் உங்களுக்குத் தெரியுமா? உங்கள் தமிழ் நாடு, நீங்கள் விருப்பும் தலைவர் என்ன சொல்கிறார், செய்கிறார் அதைத் தொடாமல் பேசினால் எந்தவகையான அம்னீசியா உங்களுக்கு? நமக்கே வியர்க்கவில்லை என்றால் உலக நாடுகளுக்கு ஏன் வியர்க்கப் போகிறது?




வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை