Thursday, May 28, 2009

சேது நாயகனைக் கவ்விய சூது - தஞ்சைக்கு விரைந்த டி.ஆர். பாலு


கருணாநிதி,கா.மு.செரீப்,துரைமுருகன்,டி.ஆர்.பாலு

திமுகவில் மத்திய அமைச்சர் பதவி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் குடும்ப நலன் மேலோங்கி தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த டி.ஆர்.பாலு தஞ்சை அருகே உள்ள தனது கல்லூரி விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கிறார். துணை சபாநாயகர் பதவியும் அவருக்கு தர மத்திய அரசு முன்வராதது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
.
மத்திய அமைச்சரவையில் தாங்கள் கேட்ட இடங்கள், இலாகாக்கள் கிடைக்காததால், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப்படும் என திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறி வந்தார்.

எனினும், தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து, காங்கிரஸ் பார்முலாவை ஏற்று கொண்டு மத்திய அமைச்சரவையில் இடம்பெற திமுக தலைவர் ஒப்புக்கொண்டார். இதன்படி, மு.க.அழகிரி உள்ளிட்டோருக்குப் பதவி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேற்று டெல்லிக்கு விரைந்தனர். ஆனால், நாடாளுமன்றக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு டெல்லிக்குச் செல்லாமல் திடீரென புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே புனர்குளத்தில் உள்ள அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் கிங்ஸ் பொறியியல் கல்லூரிக்கு வந்து தங்கியுள்ளார்.

அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படாததால், அதிருப்தி யடைந்த அவர் இங்கு தங்கியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அவருக்கு நெருக்கமான 2 நண்பர்களும், கல்லூரியின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அவரது செல்போன் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததுடன், யாரையும் சந்திக்க விரும்பாமல், யாரும் கேட்டால் தான் இல்லை என்று கூறும்படி கல்லூரிக்கு சம்பந்தப் பட்டவர்களிடம் அவர் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

டி.ஆர்.பாலுவுக்கு துணை சபாநாயகர் பதவியாவது தர வேண்டும் என்று திமுக கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அவையை நடத்துவதற்கு மிகுந்த பொறுமையும், சாதூர்யமும் வேண்டும். டி.ஆர்.பாலு கோபக்காரர் என்பதால் அவர் இப்பொறுப்புக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வ்வ்வும்!
இறுதியில் தர்மமே வெல்ல்ல்ல்லும்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
எல்லாம் அந்த ஸ்ரீமான் ராமன் அவர்களுக்கே வெளிச்சம்!
அண்ணா நாமம் வாழ்க!

பொறுப்புள்ள தமிழக முதல்வரின் பதில் என்ன?

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ராஜபக்சே அரசு பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது. நிராயுதபாணிகளாகத் தப்பியோடிய தமிழர்களை குண்டுவீசி தாக்கி படுகொலை செய்திருக்கிறது.

இந்தக் குற்றத்திற்காக ராஜபக்சே மீதும், அவரது சகாக்கள் மீதும் போர்க் குற்ற வழக்குத் தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு திரண்டு வருகிறது.

அதற்கு முதல் படியாக ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான விசாரணை தொடங்கியிருக்கிறது. கொலை வெறி பிடித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், தென்அமெரிக்க நாடுகளும் உலக அரங்கில் அணி திரண்டு நிற்கின்றன.

ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் நடக்கும் விசாரணையை முடக்கிப் போட்டுவிட வேண்டும் என்று இலங்கை பகீரத முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நமது பகை நாடுகளுடன் இந்தியாவும் கைகோர்த்துக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது.

இத்தகைய விசாரணை இப்போது தேவையில்லை என்கிற அளவுக்கு மனித உரிமை மன்றத்தின் முதல் நாள் விசாரணையில் இந்தியா வாதிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சே அரசின் துரோகத்திற்கு இந்தியா துணை போகக் கூடாது என்று உலகத் தமிழர்களெல்லாம் குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்கு வலிமை சேர்க்கும் வகையில், ஓங்கி குரல் எழுப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதலமைச்சருக்கு இருக்கிறது.

இலங்கை இறையாண்மை மிக்க நாடு; அதன் உள்விவகாரங்களில் தலையிடுவதன் மூலம், அதன் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதிக்கப்பட்டுவிடும் என்று இந்தியப் பேரரசு தொடர்ந்து சொல்லி வருவதை தமிழகத்தின் முதலமைச்சரும், எதிரொலித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.


ஈழத் தமிழர்களை ஈவு இறக்கமின்றிக் கொன்று குவித்தது தவறு என விசாரணை நடத்த வேண்டும் என்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும் என்றால், அதற்கு காரணமான போருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவியிருப்பது உள்விவகாரங்களில், தலையிட்டதற்கு ஒப்பாகாதா?


இந்தியா எங்களுக்கு உதவி வந்திருக்கிறது என்று இலங்கைத் தலைவர்கள் பலரும், பலமுறை பகிரங்கமாகவே அறிவித்து நன்றி தெரிவித்து வந்திருக்கிறார்கள். இன்றளவும் இது மறுக்கப்படவில்லை.

இனப் படுகொலைக்கு எதிரான விசாரணையை ஆதரிப்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது என்றால், அதற்கு உதவி இருப்பதும், உள்விவகாரங்களில் தலையிட்டதற்கு ஒப்பானதுதான் என்று இந்திய அரசுக்கு உணர்த்த தமிழகத்தின் முதலமைச்சருக்குத் தைரியம் இல்லாமல் போனது ஏன்?

மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை முடக்கிப் போட இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சி தமிழர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் நம்புகிறார்கள்;

தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களின் எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டு இலங்கைக்குத் துணை நிற்க வேண்டாம் என்று கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிற முதலமைச்சர், இப்போது ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரிந்து விட்டதற்குப் பின்னர் என்ன பரிகாரம் காணப்போகிறார்?’’ என்று தெரிவித்துள்ளார்.

இதை வெளியிட்டவரின் நம்பகத் தன்மை, கேள்வி கேட்கும் அருகதை போன்ற கேள்விகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு கொஞ்சம் சிந்தித்தால் உண்மை விளங்கும். இதற்கு பொறுப்புள்ள தமிழக அரசும் முதல்வரும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
கருணாநிதியை மதிக்கும் மத்திய அரசும், சோனியா-மன்மோகன் கம்பெனியும்?


இந்திய மற்றும் அனைத்துலக விமானங்களும், தொலைபேசி சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கும் இவ்விக்கேட்டான நிலையிலும் அந்த சேவைகள் வரும் வரை காத்திராமல், பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருக்கிறார்.

பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,
ஒரு புறத்தில் ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவது ஒரு நாட்டின் இறையாண்மை, எல்லை ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் என்றாலும் இலங்கையை ஒரு விசேஷ நிலையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளில் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு தாக்கல் செய்துள்ள நகல் தீர்மானம் இலங்கை தமிழர்கள் நலன்களுக்கு எதிரானது என்று உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் பரவலாக நம்புகிறார்கள்.

எனவே இலங்கை தமிழர்களின் உணர்வுகள் மற்றும் அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீங்கள் இந்த விஷயத்தில் தகுந்த முடிவு எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.


கருணாநிதியின் கடிதத்திற்கு மத்திய அரசு வழங்கிய மரியாதையைப் பாருங்கள்!


இந்தியா, சீனா, கியுபா,எகிப்து உட்பட 47 நாடுகள் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கை அரசை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதில் ஏனைய நாடுகள் தலையிடுவது இலங்கை அரச விருப்பத்தைப் பொறுத்தே அமைய வேண்டும் என்றும் இந்தியா உட்பட 26 நாடுகள் விருப்புத் தெரிவித்ததற்கிணங்க இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மனித உரிமை அமைப்புக்களையும், உதவி அமைப்புக்களையும் அனுமதிப்பது தொடர்பாக இலங்கை அரசு தேவைப்பட்டால் அனுமதி வழங்கலாம் எனவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முடியாதெனவும் இந்த நாடுகளின் பெரும்பான்மை வாக்குகளுக்கிணங்க தீர்மானிக்கப்பட்டது.

இனியும் பயனற்ற கடிதங்களை எழுதுவதை விடலாமே?


Wednesday, May 27, 2009

ஒப்புக்கு சப்பாணி ஊருக்கு கண்ணீர் விட்ட கதை தான் இது

ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்
இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில், ஈழத்தமிழர்களை காப்போம் என்னும் பெயரில் 1ந் தேதி சென்னை சைதாப்பேட்டை, 7 ந் தேதி திருச்சி, 13 ந் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் பேரணி நடத்துவது. இலங்கையில் உணவு, மருந்து இன்றி போராடி கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவிகள் செய்ய வேண்டும். ராஜபக்சேயை போர் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். தமிழக எம்.பி.க்கள் உள்ளடக்கிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி உண்மைகளை கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு போன்ற தமிழன் என்று சொல்லும் துரோகிகளிடம் கொடுப்பதை விட வட நாட்டானிடம் கொடுக்கலாம்.

தேர்தலுக்கு முன் இவர்களால் அல்லது இவர்களின் பெயரால் ஓட்டப் பட்ட சுவரொட்டி

போதுமைய்யா உங்க கூட்டமும் பேரணியும்!அதைத் தவிர உங்களால் வேறு என்ன செய்ய முடிந்தது!? அரசியலில் இருந்து...!?


தேர்தலுக்கு முன் உங்கள் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி தானே இது?
இப்போது உங்கள் சங்கத்தின் பெயரை மாற்றிக் கொண்டு விட்டீர்களோ?
வெளிய சொன்னா வெக்கம்! உள்ள சொன்னா துக்கம்!
விடுங்க போதும்! தாங்க முடியல!

கவிஞர் மேத்தா போன்றவர்களும் இந்த சங்கத்துளையா இருக்காங்க!?

நல்லா இருந்துட்டு போவட்டும்!Tuesday, May 26, 2009

மக்களைக் கெஞ்சும் கி.வீரமணி


இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சே மீது ஐ.நா. சபையில் விசாரணை நடத்துவதற்கு இந்திய உதவ வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் ராஜபக்சே அரசு தமிழர்களை படுகொலை செய்தது பச்சையான இனப்படுகொலையாகும். இது மிகப்பெரிய போர் குற்றமாகும்.
ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர ஆயத்தமாகி இருக்கிறது.
இந்த கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கை அரசை கண்டித்து வெளிப்படையாக எடுக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசும் ஏற்று ஆதரவு தர வேண்டும். ராஜபக்சே அரசை காப்பாற்ற முயல கூடாது.
பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளையே இலங்கை அரசு பெரிதும் நம்புகிறது. இந்த நாடுகளால் இந்தியாவுக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும்.

தமிழ் மக்களது அதிருப்தியை சம்பாதித்துள்ள மத்திய அரசு அந்த பழியை துடைக்க இதுவே நல்ல சந்தர்ப்பம். இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது.
மனித உரிமை மீறல் பிரச்சனைகளில் ஒரு தெளிவான திட்டவட்டமான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் அன்னை சோனியாவுக்கு ஓட்டு போட சொல்லி மக்களைக் கெஞ்சினீர்கள்!

இப்பவும் தமிழக மக்களைத் தான் கெஞ்சுகிறீர்களா?

இல்லை சோனியாவைக் கெஞ்சுகிறீர்களா?

கொஞ்சம் புரியாமத்தான் கேக்குறோம்!

கொஞ்சம் புரியிற மாதிரி கெஞ்சுங்க!Sunday, May 24, 2009

சிங்கப்பூர் பதிவர் சந்திப்பு 23.05.2009 - துருவ நட்சத்திரங்கள்தென்னந்தோப்புக்குள் பதிவர்கள் - சந்திப்பு, கலந்துரையாடல்


பதிவர் சந்திப்பு, அறிவிப்பை வெளியிட்ட திரு கோவி.கண்ணன் எதைப் பற்றி விவாதிக்க இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுகிறார் என்கிற கேள்வி பலருக்கு எழுந்து யூகங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் மனிதப் பேரவலம், உச்சக்கட்ட மனித உரிமை மீறல், மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐ.நா போன்றவற்றின் பாராமுகம், இந்திய அரசாங்கத்தின் மறைமுக மனித உரிமை மீறல், கண்ணீர் வடிப்பதை தவிர வேறேதும் செய்யமுடியாத உலகத் தமிழ் மக்களின் கையறு நிலை.

ஜெனரல் டையர் செய்த படுகொலையை வரலாறு புத்தகத்தில் படித்துப் படித்து வேதனைப் பட்டு இந்திய சுதந்திரக் கனலின் சூட்டைக் உணர்ந்து கண்ணீர் விடும் நாம், கைக்கெட்டும் தூரத்தில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல், கவலைப் படாமல் இருக்கிறோம். அது நமக்கு எந்த பாதிப்பையும் நேரடியாக ஏற்படுத்துவதில்லை என்கிற மொக்கை வாதத்தை துணைக்கழைத்துக் கொண்டு வாதிடுவது நமக்கு கை வந்த கலையாக இருக்கிறது.

இணையத்தில் எழுதி எதைக் கிழித்தீர்கள் நேரடியாக அங்கு போய் போரிட வேண்டியதுதானே என்கிற கருத்தும் வைக்கக் கூடிய சூழலில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அது நமக்குப் பழகிப் போய் விட்டது. இருப்பினும் ஒவ்வொரு தமிழரும் தான் சார்ந்திருக்கும் நிலையினூடாக செயலாற்றுவதில், பங்காற்றுவதில் உணர்வுகளைவிட உண்மையாய் இருப்பதில் தவறொன்றும் இல்லை என்று கருதுகிறோம்.

ஒரு பதிவர் சந்திப்பை இவ்வளவு சீரியஸாக வருணிக்க முடியும் என்பதற்கு இது எடுத்துக் காட்டாக அமைந்து விடக்கூடும். எடுத்துக்காட்டுகளையும், வரலாறுகளையும் தேதியிட்டு அடுக்கி வைத்துக் கொண்டு தமிழர்கள் செய்யும் நற்செயல்களையும், துரோகங்களையும் அன்றாடம் வேடிக்கை பார்த்து கை தட்டுவது நமது இயல்பாகப் போய் விட்டது. அதுவே நமக்கு நிம்மதியைத் தருகிறது.

பதிவர் சந்திப்பு நான்கு மணியளவில் தொடங்கி ஏழு மணியளவில் நிறைவடையும் என்று திரு கோவி.கண்ணன் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார். முதலில் வந்தமர்ந்து நிகழ்வுக்கு அடிக்கல் நாட்டியவர்கள் சமூக சேவகர் ஜோசப் பால்ராஜ், வெண்பாவில் விளையாடும் முகவை மைந்தன் இராம், கவிஞரும் "நாம்" இலக்கிய இதழின் ஆசிரியருமான நீதிபதி பாண்டித்துரை, வெண்பா சிற்பி அகரம் அமுதா ஆகியோர். சிங்கை ஹவ் காங் பகுதியைச் சேர்ந்த வலைப்பதிவு வாசகர்கள் இருவர் வந்திருந்தார்கள்.

அடுத்து பசிர் ரிஸ் வந்திறங்கிய போதே நிகழ்வின் ஏற்பாட்டாளர் மூத்த பதிவர் கோவியாருக்கு தொலை பேசிய போது, அவரது வீட்டிருக்கு வரச்சொல்லி அன்புக் கட்டளையிட்டார். மறுக்க முடியாமல், அங்கு செல்ல ஏதுவாக பெங்களூர் மதுர இராம் அவர்கள் என்னை அங்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கு கோவியார் தே அழியா(இஞ்சி தேநீர்) வழங்கினார். அதற்கு பின்னர் அங்கிருந்து மூவரும் பசிர் ரிஸ் கடற்கரை பூங்காவை அடைந்த போது கோவியாரைத் தொடர்பு கொண்ட வலைப்பதிவு வாசகர் திரு பிரகாஷ் அவர்கள் எங்களுடன் ஐக்கியமானார். அந்தக் கடற்கரையில் எழிலாய் அமைந்திருக்கும் தென்னந்தோப்பில் சந்திப்பை நிகழ்த்தலாம் என்று முடிவு செய்து அங்கு சென்று அமர்ந்து கொண்டோம்.

பின்னர் விருதுநகர் சென்று தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு வந்திருக்கும் ஆமத்தூர் திரு ஜெகதீசன் அவர்களும், திருச்சியில் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டுவிட்டு சிங்கை திரும்பியிருக்கும் திரு ஆ.ஞானசேகரன் அவர்களும் வந்து சேர்ந்தார்கள். திரு அப்பாவி முரு அவர்களின் நண்பர்கள் திரு சரவணனும், அவருடைய நண்பர்கள் இருவரும் அவரைப் பிரதிநித்து வந்திருந்தார்கள்.

இடையிடையே கலந்துரையாடல் செய்து கொண்டிருந்த போது, இயல்பாகக் கூட நேரத்தை கவனிக்க மறந்து போனோம்.
அடுத்ததாக இன்னொரு பதிவர் நீண்ட கொடையுடன்(குடை) வருவது தென்பட்டது. நெருங்கி வந்ததும் தெரிந்து கொண்டோம், அது மூத்தப் பதிவர் நண்பர் திரு குழலி அவர்கள் என்று.

பின்னர் புதிய பதிவர்கள் அறிமுகம் நடை பெற்றது. முந்தைய பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்ட பதிவர்களை மூத்த பதிவர் கோவியார் அறிமுகம் செய்துவைத்தார். காமிரா கவிஞர் இராம் துருவங்களை இணைத்து துலாபாரம் செய்துகொண்டிருந்தார்.

இது துருவங்கள் இணையும் பருவம், பதிவர்கள் குழலி - கோவி கண்ணன்

இந்த பதிவர் சந்திப்புக்கான கருப்பொருளை திரியிட்டு ஏற்றிவைத்தார் கோவியார்.நல்ல நோக்கமாக அமைந்திருப்பதால், அதனை செயல் படுத்த செயற்குழு அமைப்பது போன்றவற்றைப் பற்றி விவாதித்தோம். இது பற்றி பின்னர் விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்

இலங்கை இனப் படுகொலை, செயற்கை பேரிடர், மனித உரிமை மீறல் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகளும்,பதிவர்களின் ஆதங்கங்களும் கலந்துரையாடலில் இடம்பெற்றது.

கவிஞர் பாண்டித்துரை பேசும்போது பதிவர் சந்திப்பை மாதாந்திர வாசகர் வட்ட சந்திப்புடன் அங் மோ க்யோ நூலகத்தில், உள்ளரங்கத்தில் நடத்துவதற்கு ஏதுவாக ஏற்பாடுகளைச் செய்ய இயலும் என்றார். மேலும் அவர் கூறுகையில் இலக்கிய இதழ்களில் வரும் கதைகள், கட்டுரைகள்,கவிதைகள் போன்றவைகள் வாசகர் வட்டத்தில் அலசப்படுகின்ற விதத்தைப் பகிர்ந்தார். இது படைப்பிலக்கியத்தின் கூறுகளை பதிவர்கள் உள்வாங்க உறுதுணையாக இருக்கும் என்று கருத்துரைத்தார் முகவை இராம்.

சிறந்த கருத்துக் களமாகவும், பயிற்சி பட்டறையாகவும் இருக்கும் என்று கருத்துரைத்தோம்.

அகரம் அமுதனின் குறள், வடிவம் பெற்றிருப்பதை தெரிவித்து நெல்லை கண்ணன் கூட அவர் சொல்லைத் தட்ட மாட்டார் என்று உணர்த்தினார். தங்கமுனை பேனா விருதைப் பற்றி அகரம் அமுதனும், பாண்டித்துரையும் விவாதித்தார்கள்.

வழக்கமாக வெண்பா கவிஞர் அகரம் அமுதா தனது வீரியமான கருத்துகளை கூரிய தமிழில் எடுத்தாள்வது வழக்கம். இந்த சந்திப்பின் போது, வழக்கத்திற்கு மாறாக அனைவரும் இருந்ததைக் கவனிக்க முடிந்தது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகம் சென்று வந்திருக்கும் திரு குழலி தனது தேர்தல் அனுபவத்தை பகிர்ந்தார்.தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணிகள், ஒட்டுமொத்த தேர்தல் நிலவரம் முதல் பூத் நிலவரம் வரை புட்டு புட்டு வைத்தார்.

பேச்சினூடே மாணிக் தாகூர், இரவீந்திரநாத் தாகூர் போன்ற தேச பக்தி மிக்கவர்களை பற்றி கருத்துரைக்கப் பட்டது. பேசாத ஒரு விடயம் உண்டெற்றால் அது மாணிக் பாட்சா பற்றி மட்டுமே. இறையாண்மைக்கான டெபநிசன் தெரியாமல் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியது யார் என்கிற ரீதியில் கருத்துரைக்கப் பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டம், அதனால் சாதித்தது, மக்கள் விழிப்புணர்வு, இனி வரும் காலங்களில் தேர்தல்கள் எதை நோக்கி செல்லும் போன்றவற்றில் பதிவர்கள் கருத்துரைத்தார்கள்.

குறுகிய கால இடைவெளியில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தமையால் இன்னும் பல பதிவுலக நண்பர்கள் கலந்து கொள்ள இயலவில்லை என்று தொலைபேசியில் தெரிவித்தார்கள். அடுத்த சந்திப்பில் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

சொல்லி வைத்த படி ஏழு மணிக்கு கூட்டம் ஒரு நிறைவுக்கு வந்தது. இலியால் கடையில்(நாயர் கடை அல்ல) தேநீர் அருந்தாமல் சந்திப்பை முடிக்க மனம் இல்லாத பதிவர்கள் சந்திப்பின் தொடர்ச்சியை தேநீரினூடே புகைத்தோம். புகையோடு மட்டுமல்லாமல் நீரு பூத்த நெருப்பாய், இருப்பாய் நிறைவடைந்தது சந்திப்பு.

சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்த கோவியார், ஜோசப் பால்ராஜ், முகவை இராம் மற்றும் அனைவருக்கும் நன்றி!

Sunday, May 17, 2009

ஏ தாழ்ந்த தமிழகமே!

ஈழ மக்களின் பிணத்தில் பந்தையம் கட்டி வெற்றி பெற்ற இந்திய - இலங்கை கூட்டாட்சியும் அதன் தத்துவமும் மனிதத்தை மரிக்கச் செய்து கொண்டிருக்கிறது!

இந்திய தேசிய காங்கிரசின் வெற்றியை சிங்களவன் கொண்டாடுவது எதனால்?

ஆயிரக்கணக்கான மக்களை ஒரே நாளில் குண்டு போட்டு அழிக்கக் கூடிய சக்தியை சிங்களவனுக்குக் கொடுத்தது யார்?

அதற்கு தமிழர்கள் துணை போவது தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது!

வெளிநாட்டுத் தொலைக்காட்சியில் வெடிகுண்டுகளுக்கு இரையாகும் மக்களைப் பார்த்து வேதனை மட்டுமல்லாமல் விரக்தியாக இருக்கிறது!

Saturday, May 16, 2009

ஜீரோவைப் பெற்றுக் கொண்ட ஹீரோ -ஏறுமுகம் விஜயகாந்த்


இந்தத் தேர்தலில் ஜீரோவைப் பெற்றுக் கொண்ட ஹீரோ -ஏறுமுகம் விஜயகாந்த்


இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயித்தவர்களில் ஹீரோவாக இருப்பவர் விஜயகாந்த் மட்டுமே. கலைஞரையும்,ஜெயலலிதாவையும் ஆதரிக்க விரும்பாதவர்கள் இவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். பாரதீய சனதா கட்சியின் பொன் இராதா கிருஷ்ணன், திருநாவுக்கரசர், ம.ம.க, கொங்கு முன்னணி போன்ற கட்சிகள் இந்ததேர்தல் முடிவுகளை நிர்ணயித்திருக்கிறார்கள். கார்த்திக் பரவாயில்லை நிறுத்தப்பட்டிருக்கிறார் பதினேழாயிரத்துக்கு. விஜய டி.ராஜேந்தர் நின்றிருக்கிறார் மூவாயிரத்து சொச்சத்துக்கு. பா.ம.க ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாதது, அந்த கட்சியின் சந்தர்ப்பம் அறிந்து செயல்படும் நிலைக்கு கிடைத்த படிப்பினை. இரு முறை போட்ட கணக்குகள் சரியாக இருந்ததை நம்பியதால் வந்த வினை. இனியாவது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமா என்று தெரியாது.

முத்துக்குமார் யார் என்று கேட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நல்ல படிப்பினை.

ராஜபக்ஷே அவர்களை விருந்துக்கு அழைத்தவர், காவிரிப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் கர்நாடக எம்.பிக்கள் கிளப்பிய போது, தனது துறையின் நாடாளுமன்ற ஆலுவல் மானிய கோரிக்கைகள் இருந்தும் வராமல் புறக்கணித்து ஏமாற்றியவர் மணிசங்கரய்யர். அவருக்கு நல்ல படிப்பினை.

தினந்தோறும் ஈழம், இலங்கை சம்பந்தப் பட்ட பொய் அறிக்கைகளையும், புரட்டுகளையும் செய்துகொண்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு(கேவி) சரியான இடம் கொடுத்திருக்கிறார்கள்.

24 மணிநேரத்தில் இலங்கை அரசிடம் இருந்து (எந்த நல்ல செய்தியை எதிர்பார்த்தாரோ?) நல்ல செய்தி எதிர்பார்த்த ப.சிதம்பரத்துக்கு திணறல் - வெற்றியா தோல்வியா அந்த கடவுளுக்கே தெரியாது என்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் ஜீரோவைப் பெற்றுக் கொண்ட(தேர்தலில் மட்டும் தான் பெற்றுக் கொண்டது ஜீரோ) ஹீரோ விஜயகாந்துக்கு ஏறுமுகம்

யாருமே கொள்கைத் தங்கமாக இல்லாத போது இவர் பரவா இல்லை என்று மக்கள் நினைத்திருக்கக் கூடும்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்பார்த்தபடி மத்திய அரசில் அமைச்சர்,மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகியோருக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதுவே அவர்களுக்கு படிப்பினையாக அமையட்டும். இந்திய, தமிழக பிரச்சனைகள் மட்டும் அல்லாது இனியாவது ஈழத்தில் நம் உறவுகள் படும் துயரத்தை தங்களது துயரமாக நினைத்து செயல்பட வேண்டும் என்று விருபுகிறோம்.அன்புடன்,

ஜோதிபாரதி.

இந்தியப் பிரதமரை நிர்ணயிக்க ஆஸ்திரேலியாவும் முயற்சி

இந்தியப் பிரதமரை நிர்ணயிக்க ஆஸ்திரேலியாவும் முயற்சி


இந்தியப் பிரதமரை தேர்ந்தெடுக்க கோடிக்கணக்கான இந்திய மக்கள் ஓட்டு போட்டுவிட்டு எதிபார்த்துக் கொண்டு இருக்கும் போது,

இத்தாலியைச் சேர்ந்த சோனியா ஒரு புறமும்

மிக எளிதாக அமெரிக்கத் தூதர் ஒரு புறமும் முயற்சி செய்வது அனைவரும் அறிந்ததே.

அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் நமது எதிர்பார்ப்பை சிரமமாகக்  கருதி ஒரு பிரதமரைத் தன் பங்குக்குத் தள்ளி விடுகிறது. காணொளியைப் பாருங்கள்!

Friday, May 15, 2009

இரகசியம்-இரகசியம்-இரகசியம்இரகசியம் -இரகசியம்-இரகசியம்

அத்வானி - மாயாவதி ரகசிய சந்திப்பு

அந்தோனி - ஜெயலலிதாவை சந்திக்கிறார்

அம்பானி சோனியாவைச் சந்தித்தார்

அமெரிக்கத் தூதர் அத்வானி, சந்திரபாபு நாயுடு ஆகியோரைச் சந்தித்தார்

அமர்சிங் - அத்வானியுடன் சந்திப்பு

அமர்சிங்கை காங்கிரஸ் கூட்டணிக்குக் கொண்டுவர அம்பானி முயற்சி

சரத்பவார், ஜெயலலிதா மற்றும் மாயாவதியைத் தொடர்புகொண்டார்

சந்திரபாபு நாயுடு - ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு பேசினார்

ஜெயலலிதாவைத் தொடர்புகொண்டு பேசிய மோடி

பரதன், பிரகாஷ் காரத் ஜெயலிதாவுடன் சந்திப்பு

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரைத் தொடர்பு கொண்ட காரத்

அத்வானியை சந்திக்கும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சுரேஷ் சோனி

அத்வானி- ஓம் பிரகாஷ் சவுதாலா சந்திப்பு

அமர்சிங்கை சமரசம் செய்யும் பிரணாப் முகர்ஜி
கொசுறு:
முகத்தை மறைத்துக் கொண்டு போய் சோனியாவை சந்தித்த குமாரசாமி கொடை. கண்டுபிடித்த நிருபர்கள்! அம்பலப் படுத்திய காங்கிரஸ் கட்சி!

ஓட்டு போடுவது இந்திய மக்கள்!
பிரதமரை நிர்ணயிப்பது, அமெரிக்கா,அம்பானி,பணம்,பேரம்!
இது நம் சனநாயகம்!

இந்தியப் பிரதமரை நிர்ணயிப்பது யார்?
இந்தியப் பிரதமரை நிர்ணயிப்பது யார்?

பணம்
கூட்டணிக் கட்சிகள்
மக்கள்
அமெரிக்கா
தொழில் அதிபர்கள்
காங்கிரஸ்
பாரதீய சனதா கட்சி
கம்யூனிஸ்ட்வலது பக்கத்தில் உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவும்

Thursday, May 14, 2009

திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெல்லும்


மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என என்.டி.டி.வி நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் திமுக கூட்டணிக்கு மக்களிடையே 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. (2004ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் இருந்த பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை விலகி அதிமுகவில் இணைந்துவிட்டன).

திமுக இழக்கும் இந்த 15 சதவீத வாக்குகளில் அதிமுகவுக்கு வெறும் 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. மிச்சமுள்ள 10 சதவீத வாக்குகளை விஜய்காந்தின் தேமுதிக சுருட்டிவிட்டது.

இதனால் மொத்தத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 42 சதவீத வாக்குகளும், அதிமுக-பாமக-மதிமுக-இடதுசாரிகள் கூட்டணிக்கு 40 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

தேமுதிக 10 சதவீத வாக்குகளையும் மற்ற கட்சிகள் 8 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

இதன்மூலம் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் திமுக கூட்டணிக்கு 20 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும் என இந்த எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.

மீதமுள்ள ஒரு இடத்தில் வேறு கட்சி வெல்லும் என்று அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. இது எந்தக் கட்சி என்பதை தெரிவிக்கவில்லை.

இது பாஜகவாக இருக்கலாம் என்று தெரிகிறது. ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர், திமுக வேட்பாளர் ரித்தீஷ், அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோரை வெல்வார் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் தேமுதிக வுக்கு ஒரு இடமும் கிடைக்காது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக தேர்தல் களம் கண்ட தேமுதிக 8.33 சதவீத வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இம்முறை மேலும் கூடுதலாக 10 சதவீதம் வரை வாக்குளை அந்தக் கட்சி பெறும் என என்டிடிவி எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.

நன்றி: தட்ஸ் தமிழ்

திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெல்லும்

சிறுபான்மை சிறுபான்மை (மைனாரிட்டி ) என்று வாய் கிழியப் பேசும் ஜெயலலிதாவிற்கு வாய் அடைக்கப் படும்.

வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் காந்தியைச் சேரும் (சோனியா காந்தியைத்தான் சொல்றேன் நோட்டு பண்ணுங்க) .
கருணா நிதியையும் சேரும்


தமிழக வாக்குப்பதிவு விழுக்காடு(சதவீதம்) தொகுதி வாரியாக -பணமா? இனமா? பாசமா?

தமிழகம் முழுவதும் சற்றேறக்குறைய 68 விழுக்காடு ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

தென் சென்னை-54%,
மத்தியசென்னை-58%,
வட சென்னை-59%
காஞ்சிபுரம்-67%,
ஸ்ரீபெரும்புதூர்-65%,
திருவள்ளூர்-69%,
மதுரை-76.6%,
திண்டுக்கல்-68%,
தேனி-69.5%,
ராமநாதபுரம்-64.5%,
சிவகங்கை-65%,
விருதுநகர்-70%


பொள்ளாச்சி-65%,
கோவை-68%,
நீலகிரி-70%,
திருப்பூர்-74.32%,
நெல்லை-65%,
தென்காசி-63%,
நாகை-68.5%,
தஞ்சாவூர்-70%,
மயிலாடுதுறை-67.5%,
திருச்சி-70.5%


வேலூர்-66%
அரக்கோணம்-68.9%,
கன்னியாகுமரி-64%,
ஆரணி-59%,
கள்ளக்குறிச்சி-62%,
சிதம்பரம்-68%,
விழுப்புரம்-70.5%,
சேலம்-69%,
தர்மபுரி-70.53%,
நாமக்கல்-75.405,
ஈரோடு-72%,
திருவண்ணாமலை-60%,
கிருஷ்ணகிரி-70.13%,
பெரம்பலூர்-67%,
கரூர்-80%,
தூத்துக்குடி-69.8% ,

புதுச்சேரியில் -79.73விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.கிராம புரங்களை வெகுவாக உள்ளடக்கிய தொகுதிகளில் வாக்களிப்பு விழுக்காடு பெரும்பான்மையாக இருந்தால் அதிமுக கூட்டணி வெற்றி பெரும்.

நகர்புறங்களை வெகுவாக உள்ளடக்கிய தொகுதிகளில் வாக்களிப்பு விழுக்காடு பெரும்பான்மையாக இருந்தால் திமுக கூட்டணி வெற்றி பெரும்
என்பது எனது கணிப்பு.

இது முதன்மையான கட்சிகளின் வேட்பாளர்களை மட்டும் கருத்தில் கொண்டது.

நகர்புறங்களில் ஐம்பதில் இருந்து அறுபதுக்குள் இருந்தால் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

இருப்பினும்,பணப்பட்டுவாடா, அதற்கான நன்றிக் கடன்,மற்றும் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களையும் (வாக்குகளைப் பிரிப்பவர்கள்) பொருத்து இது அமையும்.

Wednesday, May 13, 2009

குசும்பு புடிச்ச நிருபர் - தாக்கிய விஜயகாந்த்
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், மத்தியில் யாருடன் கூட்டணி என்பதை 16ந் தேதி அறிவிப்பேன் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்..வாக்களித்து விட்டு வெளியே வந்த விஜயகாந்த் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

கேள்வி: இந்த தேர்தலில் தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?பதில்: தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கே: எத்தனை தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெறும்?
ப: 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

கே: எந்த அடிப்படையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறீர்கள்?
ப: மற்ற கட்சிகள் எந்தஅடிப்படை யில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார்களோ அதே அடிப்படையில் நானும் கூறுகிறேன் என்றாலும், நான் பிரச்சாரம் செய்த இடங்களில் பொதுமக்கள் உற்சாகமாக வந்து உங்களுக்குத்தான் ஓட்டு என்று கூறினார்கள். அதை வைத்தும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவேன் என்கிறேன்.

கே. தேமுதிக வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சி அமைக்க யாரை ஆதரிப்பீர்கள்?(குசும்பு புடிச்ச நிருபர் போலும்)
ப: 16ந்தேதிக்கு பின் என் முடிவை அறிவிக்கின்றேன்.
நிருபர் கேட்காத கேள்வி!
கே. உங்கள் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது பண்ணுருட்டி போன்ற திறன் வாய்ந்த அனுபவமுள்ள தலைவருக்குக் கொடுப்பீர்களா?

பதில் : 16 -ம தேதிக்குப் பிறகு முடிவு செய்வோம். 23 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் போது நாற்பது தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக ஏன் பிரதமர் பதவிக்கு ஆசைப்படக் கூடாது? ஏன்யா சிந்திக்காம கேள்வி கேக்குறீங்க. (நாக்கைத் துருத்திக் கொண்டு அடிப்பதற்கு கையை ஓங்குகிறார்) புள்ளி வெவரம் இல்லாம பேசிகிட்டு...! வந்துட்டாணுவ...!
சக நிருபர்கள்: சார் அடிக்காதீங்க, தெரியாம கேட்டுட்டார். இப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருக்கார். விட்டுருங்க பாவம்!கால வரையறையின்றி இன்றுடன் நின்று போன நாடகங்கள் -அடுத்த தேர்தலுக்கு தொடரும்...!நாப்பதுக்கு நாப்பது ->பெரும்பான்மை வெற்றி-> கலைஞர் அறிவிப்பு
முதல்-அமைச்சர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார். காலை 9.05 மணிக்கு அவர் ஓட்டுச்சாவடிக்கு வந்தார். அவருடன் தயாளு அம்மாள், அமைச்சர் மு.க. ஸ்டாலின், சாந்தா ஸ்டாலின், தயாநிதி மாறன், முரசொலி செல்வம் ஆகியோர் உடன் வந்தனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி 9.07 மணிக்கு தன் வாக்கை பதிவு செய்தார். பிறகு வெளியில் வந்த முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்:- வெற்றி உறுதி.

கேள்வி:- 40 இடங்களில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவீர்கள்?

பதில்:- மிகப்பெரும் பான்மையான அளவில் வெற்றி பெறுவோம்.

கேள்வி:- 85 வயதான தங்களுக்கு தேர்தலில் எத்தனையோ அனுபவங்கள் உண்டு. சட்டமன்றத்தில் பொன் விழா கண்டவர்கள் நீங்கள் எத்தனையோ சாதனைகளை செய்து குவித்து விட்டீர்கள். இதற்கு மக்கள் எத்தகைய வெற்றியை அளிப்பார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்?

பதில்:- மகத்தான வெற்றியை அளிப்பார்கள்.

கேள்வி:- அகில இந்திய அளவில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இது வரை நடந்த முடிந்த தேர்தல்களையொட்டி உங்களுடைய கணிப்பு என்ன?

பதில்:- டெல்லியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்.

கேள்வி:- காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி நீடிக்குமா?

பதில்:- நிச்சயமாக.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

கலைஞர் மு.கருணாநிதி -கொழுக்கட்டை-ஓட்டு-தொட்டி- அன்னை-கடிதம்


தமிழகம்-புதுவையில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் முதலமைச்சர் கருணாநிதி வாக்காளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உடன்பிறப்பே!
பழைமை வழக்கமாக நம் வீடுகளில் குழந்தைதவழும் பருவத்தில் பல் கொழுக்கட்டை விழா நிகழ்ச்சி ஒன்று நடத்துவார்கள்.

கூடத்தில் விளக்கேற்றி வைத்து -கோல மிட்டு -தரையில் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொழுக்கட்டை, வடை, நகை நட்டுகள், எழுதுகின்ற பேனா, சிறிய கத்தி முதலியவற்றை வைத்து அங்கே தவழ்ந்து செல்கின்ற குழந்தை அந்தப் பொருள்களில் எதை எடுக்கிறது என்று கவனிப்பார்கள்.

எனக்கு இப்படி குழந்தை பருவத்தில் பல் கொழுக் கட்டை நிகழ்ச்சியை என் வீட்டார் நடத்தியபோது - நான் ஊர்ந்து, நகர்ந்து, தவழ்ந்து குறிப்பிட்ட தாம் பாளத்தை அடைந்து -அதிலேயிருந்த பேனாவை எடுத்தேனாம்.

அன்னையர் தினம் கொண்டாடி அடுத்தடுத்த நாட்களில் அந்த நினைவு எனக்கு வருவது ஒரு சுவையான அனுபவம்!

அந்த நிகழ்ச்சியை என் வாயிலாக ஒரு முறை கேள்விப்பட்ட இளம் ஓவியர் ராஜபரணி என்பார், என்னை எழுதுகோலாகச் சித்திரித்து அன்னை அஞ்சுகம் அம்மையார் ஆட்டுகின்ற தொட்டிலையும் ஓவியமாகத் தீட்டி ஒரு அற்புதக் கற்பனையைச் செய்து தந்தார். அந்த ஓவியம் இன்னமும் என் வீட்டில் இருக்கிறது. அதுதான் இந்த ஓவியம்.

ஆனால், தொட்டிலில் ஆடும் பேனா தூங்கவே இல்லை. இன்னமும்; ஏழை எளியவர்களுக்காக -ஏதுமறியா பாமரர்களுக்காக - உடல் ஒடிய உழைக்கின்ற தொழிலாளர்களுக்காக -

உத்தம நெஞ்சம் கொண்ட உழவர் பெருமக்களுக்காக -அடித்தட்டு, அடித்தட்டு என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய அடித்தட்டு மக்களுக்காக -

என் மூச்சாக விளங்கும் தமிழ் மொழிக்காக - என் இதயத் துடிப்பாம் இன உணர்வுக்காக -

எங்கெங்கே தமிழர்கள் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் அவர்களின் உரிமைக்குப்போராடுவதற்காக -அன்னையார் முன்னிலையில் நான் எடுத்த பேனா இன்னமும் தன் அலுவலை முடித்துக் கொள்ளவில்லை.

கண்ணொளி இழந்தோர்க்கு கையெழுத்திட்டதும் - இந்தப் பேனாதான்! கையில் ஓடேந்தி பிச்சையெடுத்தோர்க்கு மறு வாழ்வளிக்க திட்டம் தீட்டியதும் - இந்தப் பேனாதான்!

மனிதனை வைத்து மனிதன் இழுக்கின்ற கைரிக்ஷா கொடுமை இன்னமும் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைநகரான கொல்கொத்தாவில் இருந்தும் -அதனை தமிழகத்தில் அறவே ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கிட கையெழுத்திட்டதும் -இந்தப் பேனாதான்!

குடிசை மாற்று வாரியம் கண்டதும் -இந்தப் பேனாதான்! குடிநீர் வாரியம் கண்டதும் - இந்தப் பேனாதான்!

ஊனமுற்றோர்க்கு திட்டம் தந்ததும் - இந்தப் பேனாதான்! குடியிருப்பு மனை சட்டம் கொணர்ந்ததும் - இந்தப் பேனாதான்!

உச்ச வரம்புச் சட்டம் உருவாக்கியதும் - இந்தப் பேனாதான்! உழவர்களுக்கும், நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கியதும் - இந்தப் பேனாதான்!

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தீட்டியதும் - இந்தப் பேனாதான்! பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைத்ததும் - இந்தப் பேனாதான்!

காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக சட்டம் ஆக்கியதும் - இந்தப் பேனாதான்! தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று சட்டம் ஆக்கியதும் - இந்தப் பேனாதான்!

அய்யன் திருவள்ளுவர்க்கு 133 அடி உயரத்தில் சூழும் தென் கடல் ஆடும் குமரி முனையில் அழகிய சிலையெடுக்க உத்தரவிட்டதும் - இந்தப் பேனாதான்!

இந்தியாவில் எங்குமில்லாத அளவிற்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு தர ஆணையிட்டதும் - இந்தப் பேனாதான்!

மகளிர் வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்கிட அனைத்துக் குடும்பங்களுக்கும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் இலவசமாக வழங்கிட செய்ததும் -இந்தப் பேனாதான்!

பதவிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே விவசாயிகளின் கூட்டுறவு கடன் 7000 கோடி ரூபாயை அறவே ரத்து செய்து ஆணையிட்டதும் - இந்தப் பேனாதான்!

ஏழை மகளிர் திருமணம் செய்ய ஏதுவாக இலவசமாக இருபதாயிரம் கொடுக்கும் திட்டத்திற்கு வித்திட்டதும் - இந்தப் பேனாதான்!

கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் வழங்கிட வழி செய்ததும் - இந்தப் பேனாதான்!

ஒரு கோடி ஏழை மக்கள் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததும் - இந்தப் பேனாதான்!

சிறுபான்மையோர் உரிமைக்கும்; சீர் பெறவே அருந் ததியர்க்கும்; செம்மொழியாம் தமிழுக்கும்; சேது சமுத்திரத் திட்டத்திற்கும் கையெழுத்திட்டதும் -இந்தப் பேனாதான்!

தேசத் தியாகிகளை மறவாமல் அவர்கள் செய்த தியாகத்தை மதித்து நினைவுச் சின்னங்களும், மணி மண்டபங்களும், சிலை களும் எழுப்பிட ஏற்பாடு செய்ததும் - இந்தப் பேனாதான்!

இவ்வாறு பல்லாயிரம் கோடி திட்டங்களை தீட்டுதற்கும் - பலகோடி மக்களின் பசிப்பிணி தீர்ப்பதற்கும் - என் அன்னையின் தாலாட்டை பெரும் பாராட்டாகக் கருதி பாடுபடுகிறவன்தான் இந்தப்பிள்ளை - ஆம், உங்கள் வீட்டுப் பிள்ளை.

அன்னையர் தினம் கொண்டாடி அகம் மகிழ்ந்துள்ள அருமைத் தாய்மார்களே! அவர் தம் குடும்பத்துப் பெரியோர்களே! பேனா முனையால் பெரும் பெரும் சாதனைகளை -திட்டங்களை -பெற்ற தாயும்

பிறந்த பொன்னாடும் மகிழ்ந்திட உற்ற உடன்பிறப்புகளின் துணையோடு -உழைத்து வரும் என் வேண்டுகோளை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்து

குழந்தை பருவத்தில் பேனாவை எடுத்தான்; அதனால் வீணாகப் போகவில்லை நாடும் நாமும்- என்ற நன்றியினைத் தெரிவித்திட வாய்த்திடும் நாள்தான், மே 13ஆம் நாள்!இவ்வளவும் செய்து இனியும் செய்யவிருக்கின்ற இந்தப் பேனாதான் -
அது!

Tuesday, May 12, 2009

வெற்றி பெரும் வேட்பாளர்கள் -யார் யார்? -கணிப்பு

இந்திய நாடாளுமன்ற தேர்தல் -தமிழக நிலவரம்

வெற்றி பெரும் வேட்பாளர்கள் -யார் யார்? -கணிப்பு

அதிமுக - 19
திமுக - 2
காங்கிரஸ் - 1
மதிமுக - 2
பா.ம.க - 5
சி.பி.ஐ (எம்) - 1
சி.பி.ஐ - 3
சமநிலை - 7
-----------
40
-----------


அதிமுக கூட்டணி வெற்றியாளர்கள்
(1) வட சென்னை
தா.பாண்டியன்- இந்திய கம்யூனிஸ்டு (அ.தி.மு.க. கூட்டணி)

(2) தென் சென்னை
சிட்லபாக்கம் ராஜேந்திரன்-(அ.தி.மு.க.)

(3) திருவள்ளூர் (தனி)
டாக்டர்வேணுகோபால்- (அ.தி.மு.க.)

(4) காஞ்சீபுரம்
டாக்டர்இ.ராமகிருஷ்ணன்- (அ.தி.மு.க.)

(5)ஸ்ரீபெரும்புதூர்
ஏ.கே.மூர்த்தி-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)

(6)அரக்கோணம்
அரங்கவேலு- பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)

(7)வேலூர்
எல்.கே.எம்.பி.வாசு- (அ.தி.மு.க.)

(8)கள்ளக்குறிச்சி
கோ.தன்ராஜ்-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)

(9)சேலம்
செ.செம்மலை- (அ.தி.மு.க.)

(10)தர்மபுரி
இரா.செந்தில்-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)

(11)கிருஷ்ணகிரி
கே.நஞ்ஜே கவுடு- (அ.தி.மு.க.)

(12)கோவை
பி.ஆர்.நடராஜன்- (மார்க்சிஸ்ட் கம்யூ.)

(13)திருப்பூர்
திருப்பூர் சிவசாமி - (அ.தி.மு.க.)

(14)நாமக்கல்
வெ.வைரம் தமிழரசி- (அ.தி.மு.க.)

(15)பொள்ளாச்சி
கே.சுகுமார்-(அ.தி.மு.க.)

(16)ஈரோடு
கணேசமூர்த்தி-ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)

(17)திருவண்ணாமலை
ஜெ.குரு- பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)

(18)ஆரணி
சுப்பிரமணி (அ.தி.மு.க.)

(19)கடலூர்
எம்.சி.சம்பத்- (அ.தி.மு.க.)

(20)மயிலாடுதுறை
ஓ.எஸ்.மணியன்- (அ.தி.மு.க.)

(21)கரூர்
மு.தம்பித்துரை- (அ.தி.மு.க.)

(22)விழுப்புரம் (தனி)
எம்.ஆனந்தன்- (அ.தி.மு.க.)

(23)நாகை (தனி)
எம்.செல்வராஜ்-இந்திய கம்யூனிஸ்டு (அ.தி.மு.க. கூட்டணி)

(24)சிவகங்கை
எஸ்.ராஜகண்ணப்பன்- (அ.தி.மு.க.)

(25)விருதுநகர்
வைகோ- (ம.தி.மு.க.)

(26)தேனி
தங்கதமிழ்ச்செல்வன்- (அ.தி.மு.க.)

(27)திண்டுக்கல்
பி.பாலசுப்பிரமணி- (அ.தி.மு.க.)

(28)நெல்லை
கே.அண்ணாமலை- (அ.தி.மு.க.)

(29)தூத்துக்குடி
டாக்டர் சிந்தியா பாண்டியன்- (அ.தி.மு.க.)

(30)தென்காசி
பொ.லிங்கம்- இந்திய கம்யூனிஸ்டு (அ.தி.மு.க. கூட்டணி)

திமுக கூட்டணி வெற்றியாளர்கள்

(1)மத்திய சென்னை
தயாநிதி மாறன் -(தி.மு.க.)

(2)மதுரை
மு.க.அழகிரி- (தி.மு.க.)

(3)புதுச்சேரி
நாராயணசாமி- காங்.


சமநிலையில் இருக்கும் வேட்பாளர்கள்

(1) சிதம்பரம் (தனி)
1. தொல்.திருமாவளவன்- விடுதலை சிறுத்தை (தி.மு.க. கூட்டணி)
2. பொன்னுசாமி- பா.ம.க.(அ.தி.மு.க. கூட்டணி)

(2) பெரம்பலூர்
1. து.நெப்போலியன்- (தி.மு.க.)
2. கே.கே.பாலசுப்பிர மணியன்-(அ.தி.மு.க.)

(3)தஞ்சை
1. எஸ்.எஸ்.பழனி மாணிக்கம்- (தி.மு.க.)
2. துரை.பாலகிருஷ்ணன்-ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)

(4)திருச்சி
1. சாருபாலா தொண்டமான்- காங்.
2. ப.குமார்- (அ.தி.மு.க.)

(5)ராமநாதபுரம்
1. கே.சிவக்குமார் என்கிற ஜெ.கே.ரித்தீஷ்- (தி.மு.க.)
2. வ.சத்தியமூர்த்தி- (அ.தி.மு.க.)

(6)கன்னியாகுமரி
1. ஜெ.ஹெலன் டேவிட்சன்- (தி.மு.க.)
2. ஏ.வி.பெல்லார்மின்- மார்க்சிஸ்ட் கம்யூ.(அ.தி.மு.க. கூட்டணி)
3.பொன்.ராதா கிருஷ்ணன் -(பா.ஜ.க.)
4. எஸ்.ஆஸ்டின்- (தே.மு.தி.க.)

(7 ) நீலகிரி (தனி)
1. ஆ.ராசா-(தி.மு.க.)
2. டாக்டர் கிருஷ்ணன்- ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)நன்றி: கொள்ளிமலை குப்பு அன் கோ

Monday, May 11, 2009

தியாகத் திருவிளக்கு சோனியா -கலைஞர் புகழாரம், கொள்ளிமலை குப்பு கேள்வி பதில்சென்னை தீவுத்திடலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
முன்பெல்லாம் திமுக கோஷமாக வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று இருந்தது. இப்பொழுது நம்முடைய சோனியா அவர்கள், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று நல்லாட்சி நடத்துவற்கு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு வழிகாட்டிய அமைந்துள்ள சூழ்நிலையில், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அந்த வாசகம் மாற்றப்பட்டு, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதற்கு பதிலாக அது அந்தக் காலம். வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது இது இந்தக் காலம்.


என்ன கொடுமை பாருங்க! அடிமைத்தளையை எதிர்த்து பன்னிரண்டு வயதில் கொடி பிடித்த தலைவர் சொன்னதா இது? ஐயகோ!


நம்முடைய அருமை அம்மையார், தியாக திருவிளக்கு சோனியா காந்தி அவர்களை நான் தியாக திருவிளக்கு என்று அடைமொழி கொடுத்து கூறுவதற்கு காரணம் உலகரிந்த உண்மை. நாடறிந்த செய்தி, நல்லோர் புரிந்துகொண்ட விவகாரம், அவரை பிரதமராக பொறுப்பேற்க வருக வருக என்று ராஷ்டீரிய பவன் அழைத்தபோது, நான் வரமறுக்கிறேன் என்று அந்த பதவியை தியாகம் செய்தவர் நம்முடைய சோனியா அவர்கள்.


அப்துல் கலாம் முடியாதுன்னுட்டார். அதனால ஒரு சோளக்கொல்லை பொம்மையை காவலுக்கு வச்சுட்டு இவங்க மேயுறாங்க(கொள்ளை). அதுதானே உண்மை!? இதுல வெள்ளி குத்துவெளக்கு எங்க வந்துச்சு? இத்தாலிய பெண்மணி இந்திய பிரதமர் பதவி வேண்டானுட்டா அது தியாகமா?நம்ம கொள்ளிமலை குப்பு இத்தாலிய அதிபர் பதவிய வேண்டானுட்டா அவர் தியாகியா!?வடநாட்டுல சிலபேரு தியாகின்னே பேரு வச்சுருக்காங்க. அந்தமாரி தியாகியா இருக்குமோ!? புரியல!?அவருக்கு இணையாக தலைமையை சொல்ல முடியாத அளவில், வந்த பதவி, கதவை தட்டிய பதவி, காலடியிலே வந்து விழுந்த பதவி இது வேண்டாம் என்று நான் மக்களுக்கு சேவை செய்கிறேன் என் கட்சியின் மூலமாக என்று தேர்ந்தெடுத்துக்கொண்ட அந்த சொக்கத் தங்கத்தை வரவேற்று மகிழ்கிறேன்.

ஆமாமா அந்த அன்னைக்கு இணையா யாரும் இந்தியாவுல தகுதியானவுக இல்ல.என்ன கொடுமை ஐயா இது!?


அடடடடா! சொக்கத்தங்கமுன்னு சொல்லி விசயகாந்துக்கு வேற இலவச வெளம்பரம் கொடுக்குறாரே தலைவர்! ஓட்டெல்லாம் அங்க போயிறப் போவுதே!?


நான் வடக்கு வழங்குகிறது என்று சொன்னேன். பாராளுமன்ற தேர்தல் என்றால், வடக்கை நோக்கி, டெல்லியை நோக்கி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள் பிரதிநிதிகளும், கட்சியினரும் தங்களது தேர்தல் அறிக்கைகள் மூலமாக தேவைகளை உணர்த்துவார்கள். அப்படி உணர்த்தப்பட்ட தேவைகள் பல நிறைவு செய்யப்படாமலே போயின என்றாலும் கூட, ஒரு சிலவற்றை இங்கே சொல்கிறேன்.


அது உண்மைதான்!நாம சொல்றத்த விட மக்கள் சொன்னா மகிழ்வா இருக்குமுல்ல!56,664 கோடி ரூபாய் தமிழகம் எங்கும் சாலைகள், மேம்பாலங்கள், துறைமுகப் பணிகள் வழங்கியிருக்கிறார்கள். 14,600 கோடி ரூபாய் சென்னை நகருக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கும், 2,427 கோடி ரூபாய்க்கு சேது சமுத்திட்டத்தை அனுமதித்துவிட்டுதான் இங்கே வந்திருக்கிறார்கள். ஒகேனக்கல் திட்டம், சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றிக்கு நிதி ஒதுக்கீடு, 50 பைசா செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி, தேசிய மோட்டடார் வாகன ஆராய்ச்சி கட்டமைப்பு மையம், சென்னைக்கு அருகில் கடல்சார் பல்கலைக்கழகம், தமிழ் செம்மொழி நிறைவேற்றம், சென்னையில் தமிழ் செம்மொழி நிறுவனம், திருச்சியில் இந்திய வேளாண்மை கல்வி நிறுவனம், மாணவர்களுக்கு கல்வி கடன், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், பொடா சட்டம் ரத்து ஆகியவற்றை தமிழகத்துக்கு செய்துவிட்டுதான் இங்கே வந்திருக்கிறார்கள்.


ஈழத் தமிழினப் படுகொலையும் சேத்துக்குவோமே!

ஆமா ஒகனேக்கல் திட்டம் கர்நாடக தேர்தலுக்கப்புறம் அன்னை நிறைவேத்துவாங்கன்னு சொன்னேளே, அது என்னாச்சு!? அதை இப்ப ஞாபகமூட்டலாமா?ஓ! அது சட்டமன்ற தேர்தல் இல்லியோ? நாடாளுமன்ற தேர்தலா? மன்னிக்கவும! அப்ப ஓ.கே தான்!


இவ்வளவும் சொன்னால், இங்கே உள்ள சிலர் இது நாடாளுமன்றத்திற்கு நடைபெறுகின்ற தேர்தல்தானே, திட்டங்களைப் பற்றித்தானே பேசவேண்டும் என்ற நிலையை மறந்துவிட்டு, திசைதிருப்பும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறார்கள்.


அப்படியா!ஈழத்தில் இந்தியா செய்யும் இரத்தக் களரி விளையாட்டைக் காட்டி திசை திருப்புறாங்க போலருக்கு!


இப்பொழுது மிகப்பெரிய பிரச்சனை. ஈழப்பிரச்சனை.

தாங்களும் அந்த பக்கமா திசை திருப்பித்தான் பாக்குறிய! தேர்தல வேற இப்ப வச்சுத் தொலைஞ்சுட்டாங்க!
அந்த தாயி தமிழ் ஈழம் பெற்றுத் தருவேன் என்று சொன்னதுக்கப்புறம், தாங்களும் தமிழீழம் பெறுவதற்கு முயற்சி செய்வேன்ன்னு சொன்னீர்களே!? அதுக்கு என்ன பொருள் சாமியோவ்!


நான் 3.11.07 அன்று தமிழ்ச்செல்வன் என்ற இலங்கையிலே பாலசிங்கத்தினுடைய ஆலோகனாக இருந்த ஒரு வாலிபரின் மறைவுக்காக ஒரு இரங்கல் பா எழுதினேன். இது 4.11.2007 அன்று பத்திரிகைகளில் வெளி வந்தது. உடனடியாக நம்முடைய தமிழகத்தினுடைய பிரதான எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) ஒரு அறிக்கை வெளியிடுகின்றார்.


ஜெயலலிதா இனவுணர்வு இல்லாதவராயிற்றே!விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கருணாநிதி அஞ்சல் கவிதை இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். பிரபாகரன் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு, ஒரு முதல்வர் அவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற ஒருவர் இனியும் ஒரு நிமிடம் கூட முதல்வராக நீடிக்க தகுதி இல்லை.
தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இரங்கல் பா எழுதியதற்காக கருணாநிதி முதலமைச்சராக ஒரு நிமிடம் கூட நீடிக்க தகுதியில்லை. அந்த உரிமையை கருணாநிதி இழந்துவிட்டார். அவர் தலைமையில் இருக்கும் திமுக ஆட்சியும் அந்த உரிமையை இழந்துவிட்டது. எனவே மத்திய அரசு உடனடியாக கருணாநிதியின் தலைமையிலான இந்த மைனாரிட்டி திமுக அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நீங்க எப்ப ஆட்சிக்கு வந்தாலும், அதை எப்படியாவது கலைச்சுப்புடனும்னு நிக்குதே அந்த தாயி! இது தகுமா? நியாயமா? நல்ல விடயங்களுக்கு கொள்கைகளை மாற்றிக் கொள்ளலாம்.பூமி தட்டையாக இருந்ததாக முதலில் சொன்னார்கள். பின்னர் உருண்டை என நிரூபிக்கப் பட்டபிறகு ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல் விதிகள் காலத்தால் மாறும். காலத்தின் கட்டாயமும் கூட.


அவர்தான் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திய அந்த எதிர்க்கட்சித் தலைவர்தான் இன்று தமிழ் ஈழம் பெற்று தருவேன் என்று குறிப்பிடுகிறார். என்னுடைய ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். அதே தமிழ் ஈழத்திற்காக போராடுகிறார் என்றால் இது எவ்வளவு வேடிக்கை, வினோதம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
சோனியா அவர்களும், பிரதமர் அவர்களும் இலங்கை பிரச்சனை பற்றி பேசவில்லை என்று சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியிலே ராகுல்காந்தி வார்த்தைக்கு வார்த்தை இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்று சொன்னார். நேற்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங், வரிக்கு வரி இலங்கையிலே போர் நின்று அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். ஜனநாயக வழியிலே இலங்கை பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அங்கு வாழுகின்ற இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை கிடைத்திட வேண்டும் என்று சொன்னார்கள்.

சொல்லுறாங்க, நல்லது செய்ய மாட்டேங்குறாங்களே சாமி! கெடுதல் இல்ல செய்யுறாங்க. ஏட்டு சொரைக்கா கறிக்கு ஒதவுங்க்லா சாமி?


இதுவெல்லாம் சரி சோனியா காந்தி சொன்னார்களா என்று கேட்டார்கள். 31.3.2009 அன்று அம்மையார்கள் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள். நான் பதிலுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. தேவைப்பட்டால் சொல்லுகிறேன். அது என் பழக்கமும் இல்லை.
பாம்பு கடித்தது என்பதற்காக, நாம் திரும்பவும் பாம்பை கடித்துவிட கூடாது என்பதை சொல்லி விடைபெறுகிறேன்.


உங்களுக்கு எழுதிய கடிதத்தில் போர் நிக்குமா? படுகொலை தடுக்கப் படுமா? கடிதம் மற்றும் தந்திகளின் முக்கியத்துவத்தை மக்கள் அறிவார்கள். அதனால் அனைவரும் அன்னை சோனியாவுக்கு ஓட்டு போடுவாங்க என்று நம்புறேங்க சாமியோவ்!நன்றி: கொள்ளிமலை குப்பு

Sunday, May 10, 2009

மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் மனித அரக்கன் மகிந்த

இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் நேற்று இரவு முழுவதும் இலங்கை ராணுவம் மிகக் கொடூரமான முறையில் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதில் 2000 அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அந்தப் பகுதியே ரத்த வெள்ளமாக காணப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான முறையில், மிகக் கொடூரமான முறையில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. சகல விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை இலங்கை ராணுவம் நடத்தியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று இரவு 7 மணிக்கு இலங்கைப் படைகள் தங்களது பீரங்கித் தாக்குதலை தொடங்கின.

பீரங்கிகள் மட்டுமல்லாமல், தங்களிடம் உள்ள அனைத்து விதமான கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது இலங்கை ராணுவம்.

இதில் பதுங்கு குழிக்குள் மறைந்து கொண்ட அப்பாவித் தமிழர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்த பலர் தூங்கிய நிலையில் பிணமானார்கள்.

பல உடல்களை எடுக்க முடியாத அளவுக்கு மண்ணுக்குள் புதைந்து போய் விட்டது. காயமடைந்தவர்கள் எங்கும் செல்ல முடியாமல் ஆங்காங்கே விழுந்து கிடக்கிறார்கள். காப்பாற்றுங்கள் என்று கோரி அவர்கள் அழுது புலம்பும் காட்சி இதயமற்றவர்களையும் இளக வைக்கும் வகையில் உள்ளது.

சாலைகள் அனைத்திலும் பிணங்களாக காணப்படுகின்றன. அவற்றை அப்புறப்படுத்தக் கூட முடியாத அளவுக்கு இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்று காலை வரை 1,112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் படிப்படியாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தாக்குதல் தொடர்ந்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவர்.

மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடல்களில் 67 பேர் சிறுவர்கள்.

ராணுவத் தாக்குலில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. இதனால் சிகிச்சை பெறவும் வழியில்லாத நிலை உருவாகி வருகிறது.

போரை நிறுத்த வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இதையடுத்து இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசியது. இதைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறினார்.

இதையடுத்து போர் ஓய்ந்து விட்டது என முதல்வர் கருணாநிதியும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறினார்கள். கருணாநிதியும் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ஆனால் எந்த வகையான ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். அதை யாரும் தடுக்க முடியாது என சில நாட்களுக்கு முன்பு கோத்தபாய ராஜபக்சே கூறியிருந்தார். மேலும், தமிழர்கள் மீது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி மொத்தமாக அழிக்க இலங்கை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், விடிய விடிய பீரங்கிகள் மற்றும் சகல விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி 2000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது இலங்கை ராணுவம்.


நன்றி:தட்ஸ்தமிழ் இணையதளம்

யார் அந்த முத்துக்குமார்? நக்கலா?யார் அந்த முத்துக்குமார்? நக்கலா?

உனது தோல்வியை நிர்ணயித்தவன்.

மறுமுறை படி! அவன் உனக்கு மரண உயில் எழுதி வைத்திருக்கிறான்!

யார் அந்த முத்துக்குமார் என்ற கேள்வியா? இன்னும் சில நாட்களில் யார் அந்த இளங்கோவன் என்று மக்கள் கேட்பார்கள்.

உங்கள் முகவரியைத் தொலைத்தது மறந்து போயிற்றா?

மறதி உள்ளவர்கள் தொலைப்பது இயற்கை தானே!

தொலைப்பவர்கள் மறதி உள்ளவர்கள் தானே

சரியாகத் தான் செய்கிறீர்கள்.

நீங்க பெரிய சா நக்கியர் தான் அதான் நக்கல் செய்கிறீர்கள்!
பெரியார் பேரன் என்ற பொய் விளம்பரம் வேறு! சம்பத் மகன், சுலோச்சனா சம்பத் மகன் என்று சொல்லி சந்தோழப்படு சாமியோவ்!

பெரியார் பேரன் என்ற பொய் வேண்டாம்!

பெரியாருக்கு ஏது பிள்ளைகள்? வளர்ப்புப் பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை வீரமணியைத் தவிர!

எடுப்பார் - நம்மிடம் வரி வாங்கும் அரசாங்கம், அரசாங்கத்தை நடத்தும் ஆளும் கட்சி

Friday, May 8, 2009

காங்கிரஸ் சுதர்சனத்திடம் கொள்ளிமலை குப்பு சரமாரி கேள்வி பதில்


ராமர் பாலத்தைக் காப்போம் என கூறி வரும் அதிமுக மதச்சார்பற்ற கட்சி அல்ல.
உங்க மத சார்பின்மையை நினைச்சு நாடே சிரிக்குது சாமியோவ்!
நீங்க இன சார்பின்மையும் கடை பிடிப்பதாகக் கேள்விப் படுறோம். அதான்...! தமிழின சார்பின்மை.

அக்கட்சியுடன் உறவு வைப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சொல்லவில்லை என்று தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார்.

அப்படியா?
நிறைய வாசியுங்கள்!
சுய நினைவோடு தான் சொல்றேளா? இல்ல உங்களுக்கு செலக்டிவ் அம்னீசியாவா?

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று மிகத் தெளிவாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கண்டிப்பா வெற்றிபெறும். வரும் உள்ளாட்சி தேர்தலிளில் காங்கிரசை உள்ளடக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி எதிர்க்கட்சிகளைத் தோற்கடித்து 40 கவுன்சிலர்களை வென்றெடுக்கும் என்பது திண்ணம். வேட்பாளர்கள் தங்களது சொந்த செல்வாக்கால் வெற்றி பெறுவார்கள். காங்கிரசால் அல்ல. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இதை வட நாட்டுக்காரன் ராகுல் சொன்னா நம்புவிய. நீங்க தமிழ் நாட்டுக் காரர் தானே உங்களுக்குத் தெரியாதா? இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியளா?
பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியபோதுதான், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கிறது என்று குறிப்பிட்டாரே தவிர, அ.தி.மு.க.வுடன் உறவு வைப்போம் என்று சொல்லவில்லை.
நீங்க யாரோடு வேணும்னாலும் உறவு வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன கணக்கா இருக்கு . ஆப்ட்ரால் நீங்க அரசியல் பிழைப்பு தானே நடத்துரிய!? உங்க கதவு திறந்து தான் இருக்கும்.

அதிமுக மதச்சார்பற்ற கட்சி என்று சொல்கிறார்கள். ராமர் பாலத்தை பாதுகாப்போம், சேது சமுத்திர திட்டத்தை நிறுத்துவோம் என்று ஜெயலலிதா கூறிவருகிறார். இதில் இருந்தே அ.தி.மு.க. மதசார்பற்ற கட்சி இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
உண்மையில் நீங்கதான் சாமி மத சார்புள்ள கட்சி. எங்களுக்கு செலெக்டிவ் அம்னீசியா கிடையாது. காங்கிரஸ் ஆட்சியில் நரசிமராவ் தலைமையில் எஸ்.பி.சவான் முன்னிலையில் பாபர் மசூதி இடிக்கப் பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை மறைக்காதீர்கள். பா.ச.க ஆட்சியில் பாபர் மசூதியும் இடிக்கப் படவில்லை. ராமர் கோவிலும் கட்டப் படவில்லை. இப்ப சொல்லுங்க யார் மதசார்புள்ளவர்கள்?அப்படியும் நாங்கள் மதசார்பற்றவர் என்று சொல்லிக் கொள்கிறீர்களா? ஏற்றுக் கொள்கிறோம். நீங்க கையாலாகாதவர்கள் என்று நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். பாபர் மசூதி இடிக்கப் படுவதை உங்களால் தடுக்க முடியவில்லையே?. உங்களால் முடியாது. உங்களுக்கு ஆட்சியெல்லாம் லாயக்கு பட்டு வராது சாமியோவ்!?

16 ஆண்டு பிரதமராக இருந்த நேருவுக்கே டெல்லியில் சொந்தமாக வீடு கிடையாது. இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராஜீவ்காந்திக்கும் டெல்லியில் சொந்த வீடு கிடையாது. சோனியா காந்தி அரசு வீட்டில் தான் இருக்கிறார்.
அவரது சொத்து கணக்கும் வெளியிடப்பட்டது.
அப்படியா?
நீங்கெல்லாம் ரொம்ப ஏழை என்று எங்கெளுக்கெல்லாம் தெரியும். பாவம் நீங்கள். அதை எங்க கையில சொல்லாதீங்க. சொல்லும் போது நீங்க வெக்கப் படுறது தெரியுது.
நீங்க சொல்றபடி நீங்க எல்லாம் தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தில் அரசாங்கத்து சொத்தில் தான் வாழுறிய! ஒத்துக்கிட்டதுக்கு நன்றி சாமியோவ்!

ஆனால், அதிமுக. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ, தேர்தல் பிரசாரத்தின்போது, எனக்கு எதுவும் இல்லை என்று கூறிவருகிறார். அவரது சொத்து கணக்கு எவ்வளவு என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
இதைக் கூட மக்களுக்கு எடுத்துச் சொல்ல உங்களுக்கு அலுப்பா? அதையும் மக்கள் தான் கண்டு பிடிக்கனுமா? இவ்வளவு அலுப்புப் படும் உங்களுக்கு எதுக்கு பதவி? மக்கள் பணி? பேசாம வூட்டாண்ட இருங்க சாமியோவ்!

அ.தி.மு.க.வில் வலுவான பிரசாரக்காரர்கள் இல்லை. அதனால், சினிமாக்காரர்களை வாடகைக்கு பிடித்து பிரசாரத்தில் ஈடுபடவைக்கிறார்கள்.
ஆமாமா! நீங்க சொல்றது சரிதான். காங்கிரசில் கூட நீங்க தொண்டர்களை வாடகைக்குதானே எடுக்குரிய! உங்கள்ட்ட ஏது தொண்டர்கள்?

அது மக்களிடம் எடுபடாது. தமிழர்கள் புத்திசாலிகள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
கண்டிப்பா! தமிழர்கள் நல்லா தெரிஞ்சு வச்சுருக்காங்க! நீங்க பண்ணுன இனப் படுகொலையையும்,துரோகத்தையும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 5 ஆண்டு கால சாதனைகளையும், தி.மு.க.வின் 3 ஆண்டுகால சாதனைகளையும் மனதில் வைத்து மக்கள் வாக்களிப்பார்கள் என்றார் சுதர்சனம்.
ஆம்...! நல்ல சாதனைகள் எல்லாம் மனசுல நிக்குது,
இலங்கை இனப் படுகொலை.
பீகார் கலவரம்,
மகாராட்டிர கலவரம்,
அசாம் கலவரம்

கர்நாடக கலவரம் பிளஸ் காவிரி துரோகம்.
பெரியாறு துரோகம்
ஒகனேக்கல் துரோகம்

அணு ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்தது,

இலங்கை அரசுடன் கள்ள உறவு கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்துக்குத் துரோகம்.

இப்படி நிறைய இருக்கு சாமியோவ்!நன்றி: கொள்ளிமலை குப்புThursday, May 7, 2009

கி.வீரமணி ஐயா எந்த விலையைக் கொடுக்கச் சொல்கிறார்?


இலங்கை‌யில் போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக‌த்‌தி‌ல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளா‌ர்.
இது குறித்து அவ‌ர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஏற்கனவே சேது கால்வாய் திட்டத்தில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவது தமிழக மக்களிடம் மிகுந்த கசப்புணர்வை உருவாக்கி உள்ளது.
தற்போது இலங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌‌ச்னை‌யி‌லு‌ம் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அலட்சியப்படுத்துவது தேர்தலில் மிகப்பெரிய விலையை தரவேண்டிய கட்டாயத்தை காங்கிரஸ் கட்சிக்கு உருவாக்கும்.
எனவே இனியாவது இலங்கை‌த் தமிழர் பிரச்னையை காங்கிரஸ் தலைவர் சோனியா கா‌ந்‌தி தெளிவுடன் புரிந்து செயல்பட வேண்டும்’ என்று ‌‌‌கி.வீரம‌ணி கூறியுள்ளார்.

சனவரி 6 2009 தேதியில் திரு கி.வீரமணி ஐயாவின் திருவாயால் சொன்னது.


திரு கி.வீரமணி ஐயா அவர்களே!

ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தாயிற்று.(காங்கிரஸ் கட்சி, இந்திய அரசு)

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய விலையைத் தருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

தோல்வியைத் தழுவ வேண்டுமா?

அல்லது

வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையெல்லாம் எடுத்து மக்களுக்குப் பட்டுவாடா செய்தும் தோற்றுப் போக வேண்டுமா?

இனப் படுகொலைக்குத் துணை போன காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று நீங்கள் பிரச்சாரம் செய்வது ஏன்?
காங்கிரஸ் கட்சி செய்யும் துரோகத்திற்கு நாம் துணை போகலாமா?
அல்லது

காலத்தின் கட்டாயமா?

நல்லா புரியல!


உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும்
கடைக்கோடி தமிழன் (அவனுக்கு இதுல மட்டும் தான் கோடி இருக்கு)வாங்க! வாங்க!! -என்ன முடிவெடுத்து வாரிய மன்மோகன் சிங் ஐயா?சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் கீழ்க்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல்காந்தி நாளை மாலை மதுரை வருகிறார்.
வாங்க வாங்க! ஈழப் பிரச்சனை வெறி சிம்பிள் என்று சொன்னவர் தானே நீங்கள்! உங்கள் அறிவு ஜீவித்தனம் பாராட்டத் தக்கது. தயவு செய்து தமிழர்களை ஏமாற்றாதீர்கள்.

பிரதமர் மன்மோகன்சிங் 9 ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்ய சென்னை வருகிறார்.
அட சோளக்கொல்லை பொம்மையை எல்லாம் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்துறாங்கப்பா! கண்டிப்பா காக்கா குருவி ஏன் ஈ கூட வராது.(நல்ல பொம்மையா இருந்தா இவையெல்லாம் கண்டிப்பா வராதுதானே)

முதல் அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார்.
எதுக்கு இவ்வளவு தூரம். ஒரு தந்தி அடிச்சு தகவல் பரிமாறிக்கலாமே!
உங்களை சந்திப்பதால் ஏற்படும் இழப்புகளில் இருந்து தப்பிக்கத் தான், ஐயாவே ஆசுபத்திரியில இருக்காரு. அவரைப் போய் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?. கலைஞரை யாரும் சந்திக்க வேண்டாம் என்று பேராசிரியர் சொன்னது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்கும் சேர்த்துதான்!(சோனியா,ராகுல் எல்லோருக்கும் சேர்த்துதான்) கொஞ்சம் நெலமைய புரிஞ்சுக்குங்க!

பத்திரிகையாளர்களையும் பிரதமர் சந்திக்கிறார்.
கண்டிப்பா! அவங்க மட்டும் தான் உங்க கூட்டத்துக்கு வருவாங்க!
அன்று மாலை பிரதமர் பிரசாரம் செய்கிறார். அவர் பேச இருக்கும் பொதுக் கூட்ட இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை
தேர்தலுக்கு பொறவாவது முடிவு பண்ணுங்க சாமியோவ்! இதுக்கு மூப்பனாரே பரவாயில்லையே!

டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் பிரதமர் பேச இருக்கும் இடத்தை தேர்வு செய்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடத்தை பார்வையிடுகிறார்கள். எந்த இடத்தில் பேசுகிறார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இன்னும் இந்தியாவில் பேச்சுரிமை இருக்கிறது. சும்மா எங்க வேணும்னாலும் பேசலாம், தைரியமாப் பேசுங்க. அன்னை ஒன்னும் சொல்லமாட்டாங்க. தனி பிரதமருக்கு பேச்சுரிமை இல்லையெனில் .....!

இது என்னா அநியாயமா இருக்கு, யாரும் கேட்பார் இல்லையா? கண்டிப்பா கூட்டம் நடக்குறத்துக்கு மூணு நாளைக்கு முன்னாடி அனுமதி வாங்கணும். உங்களுக்கு ஒரு சட்டமா?

கோர்ட்டும், தேர்தல் கமிஷனும்? தலை வுடுமா?

தேசத் தந்தையும், அன்னையும் யார்? - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதில் சொல்வாரா?

படம்: தமிழ் ஸ்கை நியூஸ்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்துவந்தார். அப்போது, ‘’பெரியாரின் உண்மையான பேரன் என்று சீமான் தன்னை சொல்லிவருகிறார்.

உண்மையில் நான் தான் உண்மையான பேரன். சீமான் அவர் தான் உண்மையான பேரன் என்று அப்படி சொல்வதை பார்க்கும் போது பெரியார் சின்ன வயதில் செய்த தவறு போலிருக்கு என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது’’என்று பேசினார்.

இளங்கோவனின் இத்தகைய பேச்சால் இளந்தமிழர் இயக்கத்தினர் கொந்தளித்து போய்விட்டார்கள். இந்த இயக்கத்தின் அமைப்பாளர் செந்தமிழன், ‘’பெரியாரை கொச்சைப்படுத்திய இளங்கோவன் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அப்படி கேட்கவில்லை யென்றால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம்’’ என்று அறிவித்துள்ளார்.

இதனால் போலீசார் இளந்தமிழர் இயக்கத்தினரை வலைவீசி தேடி கைதுசெய்துவருகின்றனர். ‘’கைது செய்தாலும் மிச்சம் இருப்போர் முற்றுகையிடுவோம்’’என்று மீண்டும் அறிவித்துள்ளார் செந்தமிழன்.

தனது தாய் திருமதி சுலோச்சனா சம்பத் அவர்களையே மதிக்கத் தெரியாதவர் எல்லாம் ஊருக்கு உபதேசம் செய்ய வந்துட்டார் . ஆபாசமாக பேசி பரபப்பை ஏற்படுத்தி இருப்பை வெளிப்படித்தக் கூடிய பப்ளிசிட்டி பரமசிவம் இந்த இளங்கோவன். பாவம் இவருக்கு இளங்கோவடிகளின் பெயரை வைத்திருக்கிறார் இவரது தந்தை ஈ.வி.கே.சம்பத்.


தேசத்தந்தை காந்தி தேசத்தில் உள்ள அனைவருக்கும் தந்தையா?
அன்னை இந்திரா, சோனியா போன்றவர்கள் அனைவருக்கும் அன்னையா? தாயா?
மாமா நேரு அனைவருக்கும் மாமாவா?
இதற்கெல்லாம் இந்த அறிவு ஜீவி பதில் சொல்வாரா?
அவசரமாக தவறாகப் புரிந்து கொள்வதில் அவரருக்கு நிகர் அவரே!
கொஞ்சம் சிந்திச்சு பாருங்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஐயா!
உங்க இனிசியலே ஒரு விளம்பரம் தான்!
உங்கள் வெற்றி உறுதியா? தெரியாமத்தான் கேக்குறேன்!?

பொய் பிரச்சாரத்தை நம்பாதீர்கள் - உடன்பிறப்புகளுக்கு கலைஞர் அறிவுரை

உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அபாயகரமான முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு ஆளாகி பிழைத்துக்கொண்டேன். இப்போது மீண்டும் இரண்டாவது கண்டம். இந்த கண்டத்திலும் உனை காணுகின்ற வாய்ப்பை மீண்டும் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

காரணம் நான் உன்னோடு இல்லாவிட்டாலும், நான் இருப்பதைப்போல எண்ணிக்கொண்டு நீ பணியாற்றுவாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பது ஓர் உயிர். அது போகப்போவது ஒரு முறை. ஆனால் அது நல்ல காரியத்துக்காக போகட்டுமே என்ற அண்ணாவின் பொன்மொழியை இருதயத்திலே தாங்கி இத்தனை ஆண்டு காலமாக பணியாற்றி வருகின்றவன் நான்.

தேர்தல் நாள் நெருங்கி விட்டது. தேர்தல் பணிகளில் நம்முடைய திமுக தோழர்களும், காங்கிரஸ் நண்பர்களும், அதேபோல விடுதலைச் சிறுத்தைகளும் பம்பரம்போல் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இவற்றை கேட்கும்போது மருத்துவமனையில் இருக்கும் எனக்கு மருந்தாக இருக்கிறது. அந்த மருந்தை தொடர்ந்து எனக்கு அளித்துக்கொண்டிருப்பாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாம் இலங்கையிலே வாழுகின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம்.
அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்பதை என்னை நம்பு என்னை மறவாதே நான் உன்னோடு என்றைக்கும் இருக்கின்றவன், எங்களுக்காக நீ, உங்களுக்காக நான் என்பதை மறந்துவிடாமல் இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம்.

யார் என்ன பொய் உரைத்தாலும், எத்தகைய பித்தலாட்ட பேச்சுக்களில் இறங்கினாலும், அவைகளையெல்லாம் நம்பாதே என்னுடைய அன்புக்கும் பண்புக்குரிய பேராசிரியர்களும், மூத்த வழக்கறிஞர்களும், மூத்த தமிழரிஞர்களும் வெளியிட்டுள்ள அறிக்கைகளை பார்த்து நடந்துகொள் என்று கேட்டு விடைபெறுகிறேன் என்று கூறினார்.


நன்றி:நக்கீரன்
Wednesday, May 6, 2009

சென்னையைத் தவிர்த்த அன்னையும் வெண்ணைகளும்


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சென்னை, புதுச்சேரி பிரசார பொதுக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டன.இத் தகவலை காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்தும் இன்று நடக்கவிருந்த பிரசாரக் கூட்டங்களில் பேச சோனியா திட்டமிட்டிருந்தார்.ஆனால், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதால் சென்னை கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டவும் சில அமைப்புகள் திட்டமிட்டிருந்தன.

திரையுலகினரும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்த இருந்தனர்.இந் நிலையில் சோனியா தனது ‌சென்னை, புதுச்சசேரி பிரசாரக் கூட்டங்களை திடீரென ரத்து செய்துள்ளார். இத் தகவலை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் உறுதி செய்தார்.

முன்னதாக சோனியா காந்தியின் வருகையையொட்டி புதுச்சேரியிலும், சென்னையிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை வர இருந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்லவும் அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் திரும்பி தீவுத்திடல் அருகே உள்ள ஐ.என்.எஸ். ஹெலிபேட் தளத்தில் இறங்கவும்,அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் தீவுத் திடல் மேடைக்கு வந்து தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.

தீவுத் திடலில் இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், பூவை ஜெகன்மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பேச இருந்தனர்.

இந் நிலையில் முதுகு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதி இன்று தான் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார்.எனவே அவரால் சோனியா காந்தி கூட்டத்திற்கு வர முடியாத நிலை உள்ளதாக காங்கிரசிடம் திமுக தரப்பு தெரிவித்தது.

இந் நிலையில் சோனியா காந்தியே தனது கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்.முன்னதா சோனியா காந்தியின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேடை அமைக்கும் பணி தொடங்கியதுமே தீவுத்திடல் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

செக்போஸ்ட் அமைக்கப்பட்டு தீவுத்திடலுக்குள் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.வெடிகுண்டு நிபுணர்கள் தீவுத்திடல் முழுவதும் சோதனை செய்து வந்தனர். மோப்பநாய்களும் மைதானம் முழுவதும் வலம் வந்து கொண்டே இருந்தன. ஏராளமான போலீசாரும், சிறப்பு பாதுகாப்பு படையினரும் தீவுத்திடலில் குவிக்கப்பட்டிருந்தனர்.


குற்றம் செய்த மனசு குறுகுறு என்றிருக்கு போலும்!?

கருணாநிதி மிகச் சிறந்த நடிகர்


இலங்கைப் பிரச்சனையில் உண்ணாவிரத நாடகம் நடத்தியதன் மூலம் முதல்வர் கருணாநிதி மிகச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து தாம்பரம் அருகே பிரச்சாரம் செய்த ராமதாஸ் பேசுகையில்,

திமுக அரசிடம் மது ஒழிப்பு நடவடிக்கை வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அரசு ஒரு மணி நேரம் மட்டும் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்தது. கல்விக்கூடங்களை தனியார்மயமாக்கிய அரசு மதுக்கடைகளை மட்டும் அரசுடமையாக்கியுள்ளது.

திமுக வேட்பாளர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள். டி.ஆர்.பாலு கப்பல் முதலாளி ஆவார். எங்கள் கட்சி வேட்பாளர்கள் சாதாரண பொறுப்பில் இருந்து மேல்நிலைக்கு வந்தவர்கள்.

தனி ஈழம் அமைத்துத் தருவதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் இதற்கு கருணாநிதி தனி ஈழம் எப்படி அமையும் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்தால் தனி ஈழம் உருவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை பிரச்சனை குறித்து கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காலையில் டிபன் சாப்பிட்டு முடித்துவிட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்வதற்காக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். தனது உண்ணாவிரத போராட்டத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிரந்தரமாக ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், அன்றைய தினமே 142 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

உண்ணாவிரதம் நடத்தி நாடகமாடியதன் மூலம் கருணாநிதி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார் என்றார் ராமதாஸ்.

நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, May 4, 2009

இந்தியா போர்நிறுத்தம் செய்யச் சொல்லவில்லை - கோத்தாபய ராஜபக்ஷே சொல்கிறார்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தவில்லை என்று அந் நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளரும் அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோதபய மீண்டும் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் கடந்த மாதம் இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். அதிபருடன் அவர்கள் பேச்சு நடத்தினர். அவருடன் நடத்திய பேச்சு குறித்து விவரம் எதுவும் அப்போது தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு கோதபய பேட்டி அளித்துள்ளார்.

அதில், கூட்டணிக் கட்சியான திமுகவின் நிர்பந்தம் காரணமாகவே இந்திய அரசு இலங்கைக்கு நெருக்குதல் அளித்து வருவதாக செய்திகள் வெளியாவது குறித்த கேளிவிக்கு பதிலளித்த அவர்,

சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் எங்களை வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தினர்

விடுதலைப் புலிகள் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் எவ்வித நெருக்குதலும் தரவில்லை. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவே அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

போர் பகுதியிலிருந்து, அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகள் இருவரும் அப்போது திருப்தி தெரிவித்தனர். மேலும் இந்தியா சார்பில் நிவாரண உதவியாக ரூ.200 கோடி அளிக்கப்படும் என்று உறுதியளித்தனர் என்றார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகளும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டே போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் அளிக்கின்றன. புலம்பெயர்ந்த மக்கள் அளிக்கும் நிதியை அந்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்கின்றன. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள் என்றார் கோதபய.

இதன்மூலம் நாராயணன், மேனன் ஆகியோரை வைத்துக் கொண்டு மத்திய அரசு போர் நிறுத்த விஷயத்தில் தமிழகத்தை ஏமாற்றி வருவது மீண்டும் தெள்ளத் தெளிவாகிறது.


நன்றி: தட்ஸ் தமிழ்

அழையா விருந்தாளி சோனியா - வரவேற்பு பா
இங்கு தொடங்கிவிட்டது

அக்கினி நட்சத்திரம்

வேனல் சூடு கனல்

வெந்து போய் விடும்

நீர் மட்டும்

கிடைக்கும் உனக்கு

கானல் நீர்

வேர் அறுக்கலாம் நீ

ஆணி இருக்கும் அப்படியே

கள்ள உறவாடலாம் நீ

கவனமாக இரு

சுண்ணாம்பை கண்ணில்

வைத்துப் பார்க்கச் சொல்கிறாய்

எரிகிறது

இந்தியா ஆங்கிலக் காலணிதான்

ஒரு காலத்தில்

இங்கு எளிய மக்களும் உண்டு

இமெல்டா மார்கோஸ்களும் உண்டு

சந்திப்பதற்கு முன்

சிந்தித்துக் கொள்

நாதியத்தவர்களிடம் வருவதை விட

பாதியில் போய் விடலாம் போ

உனக்கு கம்பளம் விரிப்பவர்கள்

கிம்பளம் வாங்கியதை

மறந்துவிடு

அவர்களை எங்களிடம் இருந்து

பிரிக்காதே

உனக்கு இரத்த வாடை வேண்டுமா

வங்கக் கரையோரம் வந்து நில்

கொத்துக் கொத்தாக

பிணங்களைப் பார்க்க வேண்டுமா

இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும்

திருப்தியில்லை என்றால்

திரும்பவும் எங்களிடம் வா

வாக்களித்து

வெற்றி பெற வைக்கிறோம்

ஆனால் பாவம்

உனக்கு மூலம்

ஆட்சிக் கட்டிலில்

அமர முடியாது

உனது கட்சிக்கு

நிர்மூலம்

தமிழகத்தில்

விழலுக்கு நீர்

இறைக்க வேண்டாம்

நீரும் வீண் விழலைப்போல்

இரண்டுக்கும் தோல்விதான்

எங்களுக்கு நீ

அழையா விருந்தாளியல்ல

பிழையான மருந்து


Sunday, May 3, 2009

கருணாநிதி வேதனை - தமிழ் நெஞ்சில் தைத்த ஆணிகள், இரத்தம் வழியும் காயங்கள்இலங்கை பிரச்சனை தொடர்பாக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருக்கிறார், அதை இங்கு தருகிறேன்

‘’விடியலுக்கு முன்பே திருச்சியிலிருந்து எழுதுகிறேன் இந்தக் கடிதம்- அந்த ஏப்ரல் 27 அதிகாலை ஐந்து மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து விட்டேன்.

அதுவரையில் நான் தூங்கிக் கொண்டிருந்தால் அல்லவா; எழுந்து உட்கார்ந்தேன் என்று சொல்ல முடியும். இரவு முழுவதும்தான் உறக்கம் கிடையாதே! இரவு 10 மணி அளவில் தொலைபேசி மணி அடித்தது. தம்பி கவிப்பேரரசு பேசினார்.

இலங்கையிலிருந்து ஏதாவது செய்தி உண்டா என்று கேட்டார். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்-இந்தப் பதிலுடன் நிறுத்தி விட்டேன். மீண்டும் இரண்டொரு செய்தியாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

நல்ல சேதியையே எதிர்பார்ப்போம் என்று ப.சிதம்பரம் சந்திப்புக்குப் பிறகு; நல்லதே நடக்குமென நம்புவோம் என்றீர்களே; அது என்ன ஆயிற்று? என்பதே தொடர்ந்து கேள்விகளாக ஒலிக்கத் தொடங்கின. இன்று ஓர் இரவு பொறுத்திருந்து பார்ப்போம் என்றேன்.

என் மனோநிலை இரவு உணவு எடுத்துக் கொள்ள இடந்தரவில்லை. சுருண்டு கொண்டு படுத்தேன். என் அவசர அவசிய உதவிகளுக்காக என்னுடன் இருந்த மருத்துவ நண்பர் ஜம்பு என் முகத்தைப் பார்த்து விட்டு; என்ன தலைவரே; இன்று காலை முதல் ஏதோ கவலையில் இருக்கிறீர்கள்? என்று கேட்டபோது "ஒன்றுமில்லை ஜம்பு- உடல் நிலையைப் பற்றிய வேதனைதான் என்று கூறி சமாளித்துக் கொண்டேன்.

ஆனால் என் காதுகளில் கடந்த காலத்தில் என்னுடன் நேச பாசத்துடன் பழகிய நண்பர்கள் சிலர் பொதுமேடைகளில் என்னைப் பற்றிப் புழுதி வாரித் தூற்றுகின்ற அந்த ஒலி முழக்கம்; ஓராயிரம் உளி கொண்டு தாக்குவது போலிருந்தது.

தமிழ்ப்பால் குடித்து வளர்ந்து, 13-ஆம் வயதிலேயே எனக்கும் என் போன்ற இளைஞர்கள் சிலருக்கும், தமிழ் வேல் வடித்துக் கொடுத்து;ஓடி வந்த கட்டாய இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!

வாருங்கள் எல்லோரும் இன உணர்வுப் போருக்குச் சென்றிடுவோம் வந்திருக்கும் இந்தித் திணிப்பை விரட்டித் திரும்பிடுவோம் என்று நான் இயற்றிய பாடலை நாள்தோறும், திருவாரூர் தெருக்களில் குழு முழக்கமாக (கோரஸ் பாட்டு) இசைத்துக் கொண்டு, புலி, வில், கயல் பொறித்த கொடிகளைத் தோளில் தாங்கி- இந்தி ஆசிரியரால் அடிபட்டு விரட்டப்பட்டு, அல்லற்பட்ட அந்தக் காலத்திலிருந்து பெரியாரின் பிள்ளையாக அண்ணாவின் தம்பியாக வளர்ந்து விட்ட எனக்கு;

அவர்கள் வழங்கிய வலிமையும், உறுதியும், வாய்மையும் எப்படி என்னை விட்டு அகன்று விடும்? பாலப் பருவம் கடந்தும் பல தடவை;

எனக்குப் பாலுடன் கலந்தூட்டிய என் தமிழுக்காக அளவிட முடியா அடக்கு முறைகளைத் தாங்கியிருக்கிறேன். பாதி இரவில் என்னைக் கைது செய்து, பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில்- மதுரை ராணுவ முகாமில் நான் நெஞ்சு வலியால் துடித்தபோது- சிகிச்சையளித்து, அந்த இரவோடு இரவாக பாளைச்சிறையில் கொண்டு போய்- அங்கே 24 கொட்டடிகள் காலியாக இருக்க - ஒரே ஒரு கொட்டடியில் என்னைத் தன்னந்தனியாக அடைத்து வைத்தார்கள்.

ரெயில் ஓட்டியவர் ஒருக்கணம் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருந்தால்-நானும், முல்லை சத்தியும், கஸ்தூரிராஜும், குழந்தைவேலனும், குமாரவேலனும் கல்லக்குடியில் தண்ட வாளத்தில் தசைக்குன்றுகளாகத்தான் காட்சியளித்திருப்போம்.

தமிழ்காத்திடத் தண்டவாளத்தில் தலை வைத்தமைக்காக அரியலூர் நீதிபதி அளித்த தண்டனை ஆறு மாதக் கடுங்காவல்.

இலங்கையில் 1956-ல் தந்தை செல்வா தொடங்கிய தமிழர் சமஉரிமைக் கானப் போராட்டத்திற்கு ஆதரவளித்து அண்ணா முன்னிலையில் சிதம்பரம் பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து, அதைப் பொன்னம்பலனார் வழிமொழிந்திட- அதனையொட்டி நான் செய்த அறப்போர் முழக்கம் இன்னமும் எல்லோரின் செவிகளிலும் எதிரொலித்துக் கொண்டு தானே இருக்கிறது?


1983-ல் குட்டிமணியைக் குருடாக்கி கொன்று குவித்தபோதும்-ஜெகன், தங்கதுரை போன்றோர் செத்தொழிந்த போதும்- அரை நாள் அறிவிப்பில் சென்னை குலுங்கிட ஆறு லட்சம் பேர் நடத்திய அணிவகுப்புக்குத் தலைமை தாங்கியதும்- அகில இந்தியத் தலைவர்கள் வாஜ்பய், என்.டி.ராமராவ், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங்,

ராச்சையா போன்றவர்களை மதுரை டெசோ மாநாட்டுக்கு அழைத்து, தமிழ் ஈழம் மலர்வதற்கு வலியுறுத்தியதும்- அதனைத் தொடர்ந்து போராளிகளுக்குள் ஏற்பட்ட பூசல்களால்; சபாரத்தினம் முதல் சமரச சன்மார்க்க சீலராம் அருமை நண்பர் அமிர்தலிங்கனார் வரையில் சவங்களாக்கப்பட்டதும்- இந்தத் தமிழ் நெஞ்சில் ஆணிகள் கொண்டு அடித்து இன்னமும் ரத்தம் வழியும் காயங்கள் அல்லவா?

இந்தியாவின் ஈடற்ற இளந் தலைவர் ராஜீவ் காந்தியை வீழ்த்தி சின்னாபின்னப்படுத்திய பிறகும் - அதற்கு முன்பே சட்டமன்றப் பதவிகளை இலங்கைப் பிரச்சினைக்காகத் துறந்த எனக்கும், எனதருமைப் பேராசிரியருக்கும் எத்தகைய துயரம் ஏற்பட்டு எங்களைத் துவள வைத்தது என்பதை யார் அறிவார்?

வெறுக்கத்தக்கதும்-வேண்டத் தகாததுமான இத்தனை கொடுமைகளுக்கும் "விடுதலைப் போர்'' என்று பெயரிட்டு அழைத்தாலும்-இலங்கையில் விடுதலைப் போர்- இங்கேயிருந்து ஆதரவு தரும் தமிழர்களுக்கு கெடுதலை உருவாக்கும் காரியமன்றோ செய்கின்றார்; களத்தில் நிற்போரிடம் கள்ள உறவு வைத்துக் கொண்டு!’’என்று குறிப்பிட்டுள்ளார்.

Saturday, May 2, 2009

கொடுமையை நிறுத்துங்கடா, பாவிகளா!

துயரத்தில் இருக்கும் ஈழத் தமிழரை துடைத்தொழிக்க வஞ்சக இந்திய காங்கிரஸ் அரசு, கள்ளத்தனமாக அனுப்பி வந்த ராணுவத் தளவாடங்களை இப்போதெல்லாம் வெளிப்படையாக அனுப்பத் தொடங்கிவிட்டது. 80 லாரிகளில் இலங்கைக்கு அனுப்புவதற்காக கொச்சி துறைமுகத்துக்கு அனுப்பப் பட்ட ஆயுதங்களை பவானி அருகே பொதுமக்கள் வழி மறித்திருக்கிறார்கள்.

உணர்வுள்ள ஒரே திராவிடர்கழகம் பெரியார் திராவிடர் கழகம் தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறது. அதன் தலைவர்களில் ஒருவரான திரு இராமகிருட்டிணன் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டிருக்கின்றனர். சன் தொலைக் காட்சியின் செய்தியாளரும், மற்ற செய்தியாளர்களும் தாக்கப் பட்டிருக்கின்றனர்.

இது பற்றிய செய்தி.

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை