Wednesday, April 29, 2009
ஆயுதம் கொடுக்கும் இந்தியாவுக்கு இலங்கை நன்றி சொல்கிறது
இரு நாடுகளும் தனித் தனியாக தங்களுக்கு பெரும் உதவிகளைச் செய்ததாகவும், நீடித்த, நிலையான உதவிகளாக அவை இருப்பதாகவும் கூறியுள்ளார் நாணயக்காரா.
இலங்கைக்கு இந்தியாதான் பெருமளவில் உதவிகள் செய்து வருவதாக ஆரம்பத்திலிருந்தே தமிழக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதை இந்திய அரசு மறுத்து வந்தது. நேற்று கூட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கைக்கு இந்தியா ராணுவ ரீதியாக எந்த உதவிகளையும் செய்யவில்லை என்று ரொம்ப உறுதியாக கூறியிருந்தார்.
ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் தனித் தனியாக தங்களுக்கு பேருதவி புரிந்துள்ளதாகவும், இதனால்தான் போரில் தங்களுக்கு வெற்றி கிடைத்ததாகவும் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் தெளிவாக்கியுள்ளார்.
இதுகுறித்து நாணயக்காரா கூறுகையில், எங்களுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் நிறையப் பயிற்சிகளை அளித்தன. இரு நாடுகளும் பெருமளவில் எங்களுக்கு உதவி புரிந்தன. நான் கூட இரு நாடுகளிலும் பயிற்சி பெற்றேன்.
எங்களது அதிகாரிகளை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் அனுப்பி வைத்து பயிற்சிகளைப் பெற வைத்தோம். அதி நவீனப் பயிற்சிகளை இரு நாடுகளும் எங்களுக்கு அளித்தன.
நான் இந்தியாவில் நான்கு பயிற்சி வகுப்புகளிலும், பாகிஸ்தானில் 3 பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டேன்.
கடைசியாக நான் ஆந்திர மாநிலம் செகந்தராபாத்தில் பயிற்சி பெற்றேன்.
இரு நாடுகளின் நவீன ராணுவ தொழில்நுட்பங்களை எங்களது அதிகாரிகள் கற்றுக் கொண்டனர், பெற்றுக் கொண்டனர்.
இந்தியாவும், பாகிஸ்தானும் எங்களுக்கு அளித்த அதி நவீனப் பயிற்சிகள், வழங்கிய ஆயுதங்கள்தான் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணம். அரசியல் தைரியமும், திறமையான ராணுவத் தலைமையும், கூடவே இந்தியா, பாகிஸ்தான் அளித்த பயிற்சி, கிடைத்த அதி நவீன ஆயுதங்கள் எங்களது வெற்றிக்கு முக்கிய காரணம்.
எங்களிடம் தற்போது அனைத்து வகை அதி நவீன ஆயுதங்களும் உள்ளன. சாதாரண ஹெல்மட், பூட்ஸ் முதல் எங்களுக்கு என்னவெல்லாம் தேவைப்பட்டதோ அத்தனையும் இந்தியா, பாகிஸ்தான் மூலம் கிடைத்துள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரிகள் என்பது தெரியும். ஆனால் அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எங்களது எதிரியை அழிக்க இரு நாடுகளும் தாராளமாக உதவியுள்ளன.
இரு நாடுகளும் எங்களுக்கு நண்பர்கள். எனவே யாருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
அதேபோல முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பலகல்லே கூறுகையில், எனது பதவிக்காலத்தில் 80 சதவீத பயிற்சியை நான் இந்தியாவில்தான் பெற்றேன். அதேபோல பாகிஸ்தானிலும் நான் பயிற்சி பெற்றேன்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எங்களது அதிகாரிகள் அடிக்கடி சென்று பயிற்சி பெற்று வருகின்றனர். எங்களுக்கு பயிற்சி அளிக்க இரு நாடுகளும் எப்போதும் தயாராகவே உள்ளன.
நான் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தபோது, எங்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் இந்தியாவுக்குப் பிரச்சினை இருந்தது. அந்த சமயத்தி்ல பாகிஸ்தான் எங்களுக்கு ஆயுதங்களை அளித்து கை கொடுத்தது.
சில முக்கிய சாதனங்களைத் தருவதில் கொள்கை ரீதியாக இந்தியா தயங்கியது. ஆனால் பாகிஸ்தான் தயக்கம் காட்டவில்லை. தாராளமாக உதவியது.
அதேபோல சீனாவிடமிருந்தும் நாங்கள் ஆயுதங்ளைப் பெற்று வருகிறோம். எங்களுக்கு முதலில் ஆயுதங்கள் தேவை, பிறகு பணம் தருகிறோம் என்று கூறினோம். அதை சீனா ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை அளித்தது. இருப்பினும் வாங்கிக் கொண்ட ஆயுதங்களுக்கு நாங்கள் பணம் செலுத்தி விட்டோம்.
அமெரிக்காவும் பயிற்சி அளித்தது..
அதேபோல அமெரிக்காவும் கூட எங்களுக்கு பயிற்சி அளிப்பதில் உதவியது. இருப்பினும் அவர்களின் பங்கு குறைவுதான். சில அதிகாரிகளுக்கு மட்டுமே அவர்கள் பயிற்சி அளித்தனர்.
வனப்பகுதிகளில் போர் புரிவது உள்ளிட்ட முக்கியப் பயிற்சிகளை நாங்கள் இந்தியாவில்தான் பெற்றோம். அங்கு எங்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தனர்.
அதேபோல, தற்போது நடந்து வரும் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக முக்கிய உளவுத் தகவல்களையும் எங்களுக்கு அவ்வப்போது அளித்து வந்தது இந்தியா.
இந்திய கடல் பகுதிகளில் இந்திய கடற்படையும் எங்களுக்கு உதவியது (இந்திய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் ஒருவர் கூட உருப்படியாக மீன் பிடிக்க இயலாத நிலை இருப்பது ஏன் என்பது இப்போதுதான் விளங்குகிறது).
எங்களுக்கு விடுதலைப் புலிகள் பெரும் மிரட்டலாக விளங்கினர். அவர்களது போர் உத்திகள் ஒரே மாதிரியாக இருக்காது. எனவேதான் நாங்கள் தடுமாறினோம். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் கொடுத்த பயிற்சியின் மூலம் அதை சமாளிக்கும் திறமை எங்களுக்குக் கிடைத்தது என்றார்.
நன்றி: தட்ஸ்தமிழ்
வெளிய தெரியாம எல்லா உதவிகளையும் செய்தது காங்கிரஸ் அரசாங்கம், அதை இந்திய ராணுவத் தளபதியே ஒத்துக் கொண்டிருக்கிறார், மத்திய அமைச்சர் பள்ளம் ராசு வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். இனி காங்கிரஸ்காரர்கள் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டு ஓட்டு வாங்க வந்தா, யாரு போடுவாங்க!???
போர் நிறுத்த புரளிகளுக்கும், பொய்யுரைகளுக்கும் வாக்குகள் கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்?!!!!
தற்போது கிடைத்த செய்தி!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவரும் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை சிங்களப்படையினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
அதிகாலை முதல் பிற்பகல் வரை சிங்களப் படையினர் நடத்திய எறிகணை மற்றும் கடற்படையினரின் பீரங்கித் தாக்குதல்களில் 58 சிறுவர்கள் உட்பட 278 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 298 பேர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது எறிகணைகள் வெடித்ததில் மட்டும் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
பலியானவர்களின் உடல்கள் பல பகுதிகளில் மீட்கப்படாமல் சிதறி கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Monday, April 27, 2009
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞருக்கு நன்றி!
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா இருவரும் தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவர்கள் இருவரும் கருணாநிதியுடன் கேட்டுக் கொண்டனர். அதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட முதல்- அமைச்சர் கருணாநிதி, ஈழத்தில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்களுக்காக என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், நீங்கள் (கருணாநிதி) உண்ணாவிரதம் இருக்கும் தகவல் கொழும்பு நகரை எட்டி விட்டது. இலங்கையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மீண்டும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதில் அளித்த முதல்- அமைச்சர் கருணாநிதி, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். அதில் ஒரு தீர்வு ஏற்படும் வரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.
முதல்- அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் தொடங்கு முன் உருக்கத்துடன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் சார்பாக இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களை பாதுகாக்க, காப்பாற்ற நான் உண்ணாவிரதத்தினை மேற்கொள்கிறேன்.
நேற்று வரையிலே நம்பிக்கை தருகின்ற அளவிற்கு இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும் என்ற நிலை, அதுமாறி, விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்த பிறகும், நாங்கள் அதை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு கூறிய காரணத்தால், நேற்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து ஒளிப் பேழைகளிலோ அல்லது வானொலியிலோ, பத்திரிகைக் செய்திகளிலோ செய்திகளை எதிர்பார்த்து இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய முன் வராத காரணத்தால், என்னையே நான் அர்ப்பணித்துக்கொள்ள, நம்முடைய தமிழர்களுக்காக என் உயிரையும் வழங்க, இலங்கை அரசு வாங்கிய பலிகளிலே ஒரு பலியாக நானும் அமைய, அடையாளபூர்வமாக எல்லாத் தமிழர்களின் சார்பாக இந்த உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கின்றேன்.
நான் ஒருவன் அதற்காக என்னையே பலி கொடுக்க தீர்மானித்திருக்கின்றேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
*****************************************************************************
முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை அறிந்து தி.மு.க. தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன்பு குவிந்தனர். அவர்கள் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கோஷ மிட்டபடி இருந்தனர். தொண்டர்கள் அமர துணி பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டன.
காலை 8.45 மணியளவில் டாக்டர்கள் குழு ஒன்று வந்து முதல்- அமைச்சர் கருணாநிதி உடல்நிலையை பரிசோதித்தது. வழக்க மாக காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாத் திரை சாப்பிடகூட முதல்- அமைச்சர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
அந்த சமயத்தில் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி வந்தார். அவர் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் உண்ணா விரதத்தை கை விடுமாறு கேட்டுக் கொண்டார்.
பிறகு அவர் நிருபர்களிடம் பேசுகையில், நீங்கள் (கருணாநிதி) உங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கான போராட்டத்தை வேறு விதமாக நடத்தலாம். நீங்கள் உத்தரவிடுங்கள், அதை நாங்கள் முன்நின்று நடத்துகிறோம் என்றார்.
காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், ஜி.கே.வாசன், ஞானதேசிகன் ஆகி யோரும் முதல்-அமைச் சர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினார்கள்.
காலை 6 மணி முதல் 9.20 மணி வரை அவர் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். 9.15 மணிக்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் உள்ளிட்ட டாக்டர்கள் குழு, முதல்- அமைச்சர் கருணாநிதி உடல்நிலையை பரிசோதித்தனர். இதையடுத்து மரக்கட்டில் ஒன்று கொண்டு வரப்பட்டது.
நீண்ட நேரம் அமர்ந்திருந் தால் முதுகுவலி வரும். எனவே கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண் டனர். அதை ஏற்று 9.30 மணியளவில் முதல்- அமைச்சர் கருணாநிதி கட்டி லில் படுத்தார்.
அவர் அருகில் தயாளு அம்மாளும், ராஜாத்தி அம் மாளும், அமைச்சர் ஆற் காடு வீராசாமியும் அமர்ந் திருந்தனர். பல்வேறு கட்சித் தலைவர்கள், மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
********************************************************************************
முதல்-அமைச்சர் கருணாநிதி உண்ணா விரதத்தை முடிக்கும் முன்பு வாசித்த அறிக்கை வருமாறு:-
1924ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 3ஆம் நாள் முத்துவேலர் என்கிற இசைத் தமிழ் தந்தைக்கும் - அஞ்சுகம் என்கிற அன்னைக்கும் திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, குவா குவா என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பிய அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து-பொருள்களைக் களவாடிய போது - அவர்களிலே யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தமிழ் என்கிற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது.
அதை உச்சரிப்பதற்கு - உயர்த்துவதற்கு - உலக மொழிகளில் - செம்மொழிகளில் ஒன்றாக ஆக்குவதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டுமென்று தமிழன்னை கருதினாள் போலும்! அதனால் நான் ஊர்ந்து தவழ்ந்து வளர்ந்து 13ஆம் வயதிலேயே தமிழ் எழுதவும் - கட்டுரைகள் தீட்டவும் - கதைகள் புனையவும் கற்கண்டு தமிழ் எனக்கு உதவிற்று. அந்நாளில் தான் 1938ஆம் ஆண்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் தமிழ்ப்புலவர் பெருமக்கள் தமிழ்க்காத்திடும் போரில் குதித்த வரலாறு தோன்றிற்று. அந்த வரலாற்றில் ஒரு துளியாக நான் இருந்தேன். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்களே, அப்படி இன்று கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நல் இதயங்களின் வாழ்த்துகளைப் பெறுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன்.
இந்த வளர்ச்சியும், வலிமையும் எதற்காக பயன்பட வேண்டும்? என் தமிழைக்காக்கவும் - என் தமிழர் எங்கெல்லாம் அல்லல் படுகின்றாரோ அவர்களைக்காக்கவும் - பயன்படாத இந்த உடல் இருந்து என்ன பயன்? உயிர் இருந்து தான் என்ன பயன்?
உடலில், முதுகில் அறுவை சிகிச்சை ஆயிற்றே, இந்த நிலையில் இலங்கைத்தமிழர்களுக்காக இப்படி ஒரு உண்ணா நோன்பு போராட்டம் என்றால் உடல் என்னவாகும்? உயிர் என்னவாகும்? எங்களுக்கு நீங்கள் வேண்டும் என்றெல்லாம் என் தமிழர்கள், என் உடன் பிறப்புகள் முழக்கமிடுகிறார்கள்; வேண்டுகிறார்கள்.
ஆமாம், அவர்களுக்கு நான் வேண்டும் - எனக்கு அவர்கள் வேண்டும் - என் தமிழ் வேண்டும் - என் தமிழன் காலமெல்லாம் நலமாக வாழ வேண்டும். அவனை அல்லலோ, அவதியோ அண்டவும் கூடாது. தமிழனுக்கு ஒரு காயம் என்றால், அந்தக் காயம் என் உள்ளத்தில் ஆகாய மளவு பரவி நிற்கிறது.
அதனால் தான் இலங்கையிலே வாடிக்கொண்டிருக்கின்ற - மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களை - தமிழ்த் தாய்களை - தமிழ்ச்சகோதரிகளை - தமிழ் மழலைகளை காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்தோடு வாடினேன், வதங்கினேன்.
நேற்றிரவெல்லாம் கண் விழித்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன்.
பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் சொன்னார்கள். நல்லதே நடக்கும் என்று தான் உறுதியளித்தார்கள்.
அதிகாலை 4 மணி வரையில் தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச்செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது.
அதற்குப்பிறகு 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து உண்ணா நோன்பைத்தொடங்கினேன்.
இதன் விளைவாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது என்பதோடு, இனி இலங்கை ராணுவம் இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் அளிக்கப்பயன் படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
*******************************************************************************
இலங்கையில் வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் விடுதலைப்புலிகளை அழிப்பதாக போரைக் காரணமாக காட்டி அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசி அழித்து வருகிறது.
இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்தது.
சட்டசபையில் தீர்மானம், மனிதச் சங்கிலிப்போராட்டம், வேலை நிறுத்தம் என்று பல வழிகளில் தி.மு.க. தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. என்றாலும் சிங்கள அரசு பிடிவாதமாக போரை நிறுத்த மறுத்து விட்டது. 2 சிறப்பு தூதர்கள் சென்று பேசிய பிறகும் இலங்கை அதிபர் ராஜபக்சே அசைந்து கொடுக்கவில்லை.
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்வதாக தன்னிச்சையாக அறிவித்தனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஓரிரவு பொறுத்து இருந்து பார்ப்போம் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.
இந்த நிலையில் இன்று காலை முதல்- அமைச்சர் கருணாநிதி திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். காலை 6.10 மணிக்கு அவர் காரில் தன்னந்தனியாக புறப்பட்டார். மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்த அவர் இலங்கையில் தமிழர்களை காப்பாற்ற உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
அண்ணா சமாதி நுழைவு வாயில் அருகே வலது புறத்தில் அவர் தன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உண்ணாவிரதம் இருந்தார். முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கை அவர் குடும்பத்தினர், தி.மு.க. மூத்த தலைவர்கள் யாருக்கும் தெரியாது.
தலைவர் திடீரென உண்ணாவிரதம் இருக்கிறார் என்று தகவல்கள் பறந்தன. இதையடுத்து கனிமொழி எம்.பி. அண்ணா நினைவிடத்துக்கு விரைந்து வந்தார். அவரைத் தொடர்ந்து தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, தயாநிதிமாறன் ஆகியோரும் அங்கு வந்தனர்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, மேயர் மா.சுப்பிரமணியன், வட சென்னை மாவட்ட செய லாளர் வி.எஸ்.பாபு, வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங் கோவன், தென்சென்னை வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி, வசந்திஸ்டான்லி, சற்குண பாண்டியன், இந்திர குமாரி உள்பட தி.மு.க. தொண்டர்கள் அண்ணாநினைவிடத்தில் குவிந்தனர். தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் அண்ணா நினைவிடத்தில் ஆங்காங்கே அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
முதல்- அமைச்சர் கருணாநிதி திடீரென உண்ணாவிரதம் இருக்கும் தகவல் அறிந்ததும் பிரதமர் மன்மோகன்சிங், கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் போன் மூலம் முதல்-அமைச்சர் கருணாநிதியை தொடர்பு கொண்டு பேசினார்.
உண்ணாவிரதத்தை கைவிட கேட்டுக்கொண்டார். ஆனால் முதல்- அமைச்சர் கருணாநிதி அதை ஏற்கவில்லை.
இதற்கிடையே முதல்வர் உண்ணாவிரதத்தை அறிந்து தி.மு.க. தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன்பு குவிந்தனர். அவர்கள் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கோஷமிட்டபடி இருந்தனர்.
காலை 8.45 மணியளவில் டாக்டர்கள் குழு ஒன்று வந்து முதல்- அமைச்சர் கருணாநிதி உடல்நிலையை பரிசோதித்தது. வழக்கமாக காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாத்திரை சாப்பிடகூட முதல்- அமைச்சர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
அந்த சமயத்தில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வந்தார். அவர் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் உண்ணாவிரதத்தை கை விடுமாறு கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், ஜி.கே.வாசன், ஞானதேசிகன் ஆகியோரும் முதல்- அமைச்சர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினார்கள்.
பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தில் குமரி அனந்தனும் கலந்து கொண்டார்.
காலை 6 மணி முதல் 9.20 மணி வரை சுமார் 3 1/2 மணி நேரம் அவர் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். 9.15 மணிக்கு முதல்வரின் பிரத்யேக டாக்டர் கோபால், இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் உள்ளிட்ட டாக்டர்கள் குழு, முதல்- அமைச்சர் கருணாநிதி உடல் நிலையை பரிசோதித்தனர்.
நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் முதுகுவலி வரும். எனவே கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று 9.30 மணியளவில் முதல்- அமைச்சர் கருணாநிதி கட்டிலில் படுத்தார்.
அவர் அருகில் தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், அமைச்சர் ஆற்காடு வீராசாமி அமர்ந்திருந்தனர். பல்வேறு கட்சித் தலைவர்கள், நடிகர்- நடிகைகள், தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. உண்ணாவிரதத்தையொட்டி, அண்ணா நினைவிடம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
நேரம் செல்ல, செல்ல அண்ணா நினைவிடம் நோக்கி வரும் தி.மு.க. தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு இலங்கையில் போர் நிறுத்தப்பட்டுவிட்ட தகவல் போன் மூலம் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து மதியம் 12.30 மணிக்கு அவர் அறிக்கை ஒன்றை படித்தார். இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக அதில் கருணாநிதி கூறினார்.
இதனால் தனது உண்ணாவிரதத்தை முடித்து கொள்வதாக முதல்- அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். 12.40 மணிக்கு அவர் அண்ணா நினைவிடத்தில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
முதல்- அமைச்சர் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தால் இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர். அகதிகள் முகாம்களில் தவித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
தாங்கள் அமர்ந்து கொண்டு அமைச்சரவை சகாக்களை மட்டும் உண்ணா விரதத்தில் அமர வைத்திருக்கலாமே!
வயதான காலத்தில் உண்ணா நோன்பிருந்து தமிழர்களுக்காக கஷ்டப் படுவது வேதனை அளிக்கிறது.
இதுவரை ஈழத்தில் மரித்த குழந்தைகள், உடல் உறுப்புக்களை இழந்த குழந்தைகளுக்கு ஏதேனும் பதில் வைத்திருந்தால் சொல்லுங்களேன்!
Sunday, April 26, 2009
நன்றி திரு இரவிசங்கர்
ஜெயலலிதா அம்மையாருக்கு நல்ல புத்தியைக் கொடுத்து, இப்படி பேசவைத்த திரு இரவிசங்கர் அவர்களுக்கு நன்றி!
ஜெயலலிதா அம்மையார் அவர்களின் பேச்சின் சாராம்சம் இங்கே!
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க. வேட்பாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஓட்டு சேகரிக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலம் சேலத்தில் இருந்து ஈரோடு வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டர் மாலை 5.15 மணிக்கு ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் தரை இறங்கியது. அங்கு ஜெயலலிதாவுக்கு ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தார்கள். வரவேற்பு முடிந்ததும் காரில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த ஜெயலலிதா, அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், சில நாட்களுக்கு முன்பு, இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர். இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கிறார்கள். எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் தேதியன்று நான் சென்னை வந்த போது, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் என்னை சந்தித்தார்.
அப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை டி.வி.டி.யில் எனக்கு திரையிட்டு காண்பித்தார்.
அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன். இதுவரை தெரியாத பல உண்மைகளை, வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரை காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப்போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.
அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய் பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன். உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை ராணுவம் உத்தரவிடுகிறது. அப்படி அவர்கள் வெளியேறவில்லை என்றால், வீட்டின் கூரையை ராணுவத்தினர் பிரித்து போட்டுவிட்டுப் போய்விடுகின்றனர்.
அதையும் மீறி அவர்கள் அங்கேயே இருப்போம் என்று சொன்னால், அவர்களை வெளியேற சொல்லி இலங்கை ராணுவம் கட்டாயப்படுத்துகிறது. வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது. நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள். இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றல் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன.
கைதிகளைப் போல் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அவர்கள் என்ன குற்றவாளிகளா? இது போன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது? குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக்கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக்கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?
இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான், கான்சென்டிரேசன் கேம்ப்ஸ் என்ற முகாம்களை நடத்தி, ïதர்களை கொடுமைப்படுத்தி அழித்த ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது. இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட, நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை, மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை, இரவோடு இரவாக, இலங்கை ராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர். வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், "எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்'' என்று மன்றாடி இருக்கிறார்கள். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது.
இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால், தீட்டப்பட்டு இருக்கும், மிக கொடுமையான திட்டம் இது. "முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்கள்,
பிச்சைக்காரர்களைப்போல், நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே, அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம், குருஜி அவர்கள் கேட்டதற்கு, "இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார். "இரண்டு மாதங்கள் கழித்தாவது, அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு, "அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கன்னி வெடிகள், வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்கு பிறகு தான், அங்கு அவர்களை அனுப்ப முடியும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடி அமர்த்தப்பட்ட சிங்களர்கள், வசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல், கன்னி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? அந்த கன்னி வெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா? சிங்களர்கள் நடந்தால் வெடிக்காதா?.
இலங்கை ராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல, அனுமதிக்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு இல்லை, என்பது தெளிவாகத் தெரிகிறது. எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை, அரசு நடத்தும் முகாம்களிலேயே, கைதிகளைப் போல், அடிமைகளைப் போல், அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது. உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை, அது வெறும் கண் துடைப்பு என்பது தெரிகிறது.
இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில், தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான், இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது. இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.
இந்திய அரசின் இரு தூதர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்? இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது? எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது. இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.
இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நான் அறிவேன். கடந்த 5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்த அவர் இந்த தொகுதி மக்களுக்கு செய்தது என்ன? ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? கடுமையான மின் தட்டுப்பாட்டு காரணமாக தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டபோது ஏதேனும் குரல் கொடுத்தாரா?.
அ.தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்தால் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையான சாயக்கழிவு, ஆலை கழிவுகளுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு குழாய் மூலம் கடலில் கொண்டு கலக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பனைமர தொழிலாளர்களின் கோரிக்கையான கள் இறக்குவதற்கு ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
எனது ஆட்சியில் கொண்டுவரப்பட்டு கிடப்பில் போடப்பட்டு இருக்கும் மஞ்சள் வணிக வளாகம், ஈரோடு -பள்ளிப்பாளையம் நகரங்களை இணைக்க புதிய காவிரி பாலம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். மின்சார தட்டுப்பாடு, குடிநீர் தட்டுப்பாடு நிறைவேற்றப்படும்.
மத்திய அரசிடம் தமிழகத்தை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். தமிழகத்துக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசிடம் போராடி வாங்கித்தருவேன். அதற்கு எனது கரம் வலிமையானதாக இருக்க வேண்டும். நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன். எனக்கு முழு வெற்றியை நீங்கள் தர வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியை நீங்கள் முழுமையாக 40 தொகுதிகளிலும் வெற்றியை தர வேண்டும். நீங்கள் எல்லாம்தான் எனது சக்தி. நான் குரல் கொடுக்க நீங்கள் உங்கள் சக்தியை கொடுத்தால்தான் நான் குரல் கொடுக்கும்போது அது ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக இருக்கும்.
40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியை அளித்தால் அது தமிழகத்தின் புதிய வரலாறாக இருக்கும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
Saturday, April 25, 2009
ப.சிதம்பரம்-கருணாநிதி கூற்று உண்மை? - இந்திய அரசின் கபட நாடகம்
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய இந்திய அதிகாரிகளான வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் வடக்கில் போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு கோரவே இல்லை என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு அகதிகளின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து இவர் விரிவாக கலந்துரையாடியதுடன் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது தொடர்பான திட்டமொன்றை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடியதாகவும் வீரதுங்க கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஏனைய நாடுகளில் யுத்தம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் பற்றியும் இந்திய அதிகாரிகள் எதனையும் பேசவில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளிமலை குப்பு : தேர்தல் ஸ்டண்ட், வேடிக்கை, வேதனை
மு.க.அழகிரி,தயாநிதி மாறன் சொத்து விபரம் - நடுத்தர ஏழை
மு.க.அழகிரியின் சொத்து விவரம்..
ரொக்கக் கையிருப்பு - ரூ. 1 லட்சம். மனைவியிடம் ரூ. 50 ஆயிரம். மகனிடம் ரூ. 25 ஆயிரம்.
வங்கி முதலீடுகள் - அழகிரிக்கு ரூ. 6.5 கோடி, மனைவிக்கு ரூ. 67.4 லட்சம், மகனிடம் ரூ. 2.3 கோடி.
நிதி நிறுவன முதலீடுகள் - அழகிரி ரூ. 96 லட்சம், மனைவியிடம் ரூ. 83.3 லட்சம், மகனிடம் ரூ. 1.06 கோடி.
அசையா சொத்துக்கள்
ரூ. 2.58 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மனைவிக்கு ரூ. 1.27 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மகனிடம் ரூ. 1.24 கோடி மதிப்பிலான விவசாய நிலம்.
வீடுகள்
மதுரை - ரூ. 60 லட்சம்.
அடுக்குமாடிக் குடியிருப்பு - ரூ. 34 லட்சம்.
ரூ. 2.09 கோடி மதிப்பிலான வர்த்தக கட்டடங்கள், பிளாட்டுகள்.
மொத்த சொத்து மதிப்பு - ரூ. 19.43 கோடி.
கொள்ளிமலை குப்பு:
இவருக்கு இவ்வளவுதானா சொத்து?!
கொஞ்சம் ஏழை இல்லை?
ரொக்க்க கையிருப்பு - ரூ. 49,711. மனைவியிடம் ரூ. 17,699.
வங்கி முதலீடுகள் - ரூ. 1.85 கோடி, மனைவியிடம் ரூ. 27.14 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 6.35 லட்சம்.
நிதி நிறுவன முதலீடுகள்
ரூ. 27.14 லட்சம், மனைவி பெயரில் ரூ. 3.68 லட்சம்.
நகைகள்
ரூ. 59,010 மதிப்பிலான 42 கிராம் தங்க நகை.
மனைவியிடம் ரூ. 52.15 லட்சம் மதிப்பில் 1745 கிராம் தங்க நகை, 18 கிலோ வெள்ளி, குழந்தைகள் பெயரில் 17.37 லட்சம் மதிப்பிலான 1205 கிராம் தங்க நகைகள்.
வாகனங்கள்
மெர்சிடிஸ் பென்ஸ் இ240, மாருதி ஜிப்சி, டயோட்டா இன்னோவா.
பிற சொத்துக்கள்
முரசொலி மாறன் அறக்கட்டளையில் ரூ. 8.80 லட்சம், மனைவியிடம் ரூ. 11 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 7.34 லட்சம் சொத்து.
அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் ரூ. 54 ஆயிரத்து 332 பங்கு, மல்லிகா மாறன் நல அறக்கட்டளையில் ரூ. 12,000 பங்கு. மனைவி பெயரில் பிற அசையும் சொத்துக்கள் ரூ. 13.90 லட்சம் மதிப்பில்.
தயாநிதி மாறன் பெயரில் அசையா சொத்து எதுவும் இல்லை. !!!
மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.55 கோடி.
கொள்ளிமலை குப்பு:
எல்லாம் பெரிய பணக்காரர் அப்படின்னாங்க!
இவரும் நடுத்தர எழை இல்லை?
குப்தா நம்பலாம் இந்த குப்பு நம்புவானா?
கலைஞர் பேட்டி-சொல்லிக் கேட்கவில்லை,இருப்பினும் நல்லதே நடக்கும்
அப்போது இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டியது தொடர்பாக இந்திய தூதர்கள் இலங்கை சென்று வந்தது பற்றி முதலமைச்சர் கருணாநிதியிடம் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் விவரமாக எடுத்துக் கூறினார்.
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்த பதில்களும்:
மத்திய மந்திரி சிதம்பரம் தெரிவித்த செய்தி உங்களுக்கு திருப்தி அளித்துள்ளதா?
திருப்தி அளிக்கிறது. நல்லதே நடக்கும் என்று நம்புவதாகச் சொன்னார். நானும் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.
வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கையிலே தமிழர்கள் பாதிப்பதாகத் தான் சொன்னதாகவும், போர் நிறுத்தம் பற்றி சொல்லவில்லை என்றும் ஒரு சிலர் கூறுகிறார்களே?
அப்படி யார் சொன்னது? தமிழர்கள் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது. ஆகவே, போரை நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார்கள். டெல்லியில் அறிக்கையே கொடுத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையில் நாங்கள் போர் நிறுத்தத்தை வற்புறுத்தி இருக்கிறோம் என்றே சொல்லியிருக்கிறார்கள்.
போர் நிறுத்தம் வேண்டும் என்று இந்திய அரசு பலமுறை கேட்டிருக்கிறது. ஆனால், அதை இலஙëகை அரசு கேட்கவில்லை. இந்தமுறை இலங்கை அரசு கேட்கும் என்று நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
நம்புகிறோம். அந்த நம்பிக்கை தனக்கும் இருப்பதாக இப்போது என்னிடம் தொலைபேசியில் பேசிய பிரதமரும் தெரிவித்தார். சிதம்பரம் எல்லா விஷயங்களையும் சொல்லியிருப்பாரே என்று கேட்டார். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
இலங்கை தமிழர் பிரச்சினை உங்களுடைய வெற்றியைத் தேர்தலிலே பாதிக்குமா?
நாங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தான் நேற்று தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்தோம். தேர்தலை மனதிலே கொண்டு செயல்பட்டவர்கள் யார் என்றும், அந்தப் பணிகளை ஆற்றியவர்கள் யார் என்றும் உங்களுக்குத் தெரியும். அதே நேரத்தில் இலங்கை தமிழர்களுக்காக நேற்று வேலைநிறுத்தம் செய்தவர்கள் யார் என்றும் உங்களுக்கே தெரியும்.
இலங்கையில் உள்ள அமைச்சர்கள் அவர்களுடைய நாட்டில் நடக்கும் பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது என்றும், அது மட்டுமல்ல, மற்ற நாடுகளும், தலையிடக்கூடாது என்றும், இது அவர்களுடைய நாட்டில் நடக்கும் தீவிரவாதம் என்று சொல்கிறார்களே?
சீனா என்ற கம்யூனிஸ்டு நாடு இருக்கிறதே, அது ஐ.நா. சபையிலேயே இப்பிரச்சினையை எடுக்கக்கூடாது என்றும், பேசக்கூடாது என்றும், இது தீவிரவாதம் என்றும், தீவிரவாதத்தை அடக்கியே தீர வேண்டும் என்றும் கம்யூனிஸ்டு ஆட்சி நடத்துகிற சீனா நாடு சொல்லி இருக்கிறது. இங்கேயுள்ள கம்யூனிஸ்டுகள் இலங்கை தமிழர்களுக்காக போராடுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
பெண்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே?
நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவர்களை கேட்டுக்கொண்டோம். எவ்வளவு கெஞ்சினோம். கேட்கவில்லை. உண்ணாவிரதமிருந்த ஐந்து பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆனதால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருக்கிறோம். மற்றவர்கள் தொடர் உண்ணாவிரதத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள்
கொள்ளிமலை குப்பு: ஓரளவுக்கு நல்லா புரியுதுங்க சாமியோவ்!
Friday, April 24, 2009
இப்ப நாம எந்த டிவியை போட்டு உடைக்கிறது - சொல்லுங்க பிளீஸ்
இனப் படுகொலை செய்திகளை இருட்டடிப்பு செய்யும் சில தொலைக்காட்சி ஒளி வ(வி)ழிகளை பகுத்தறிவைப் பயன்படுத்தி இனம் கண்டாயிற்று.
வாக்கு வங்கியும் வெற்றியின் ரகசியமும், அலையும் - கட்சிகள்
படுகொலை செய்தவர்களுக்கு எளவு வீட்டில் என்ன வேலை?
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலையை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் சென்னை பிலிம் சேம்பர் வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது.
இப்போராட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர், சசிகுமார், வி.சி.குகநாதன், முருகதாஸ், அமீர், வசந்த், மனோஜ்குமார், ஹரி, ஜீவன், வசந்தபாலன், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், ஆதி, சிவா, பாலுமகேந்திரா, வி.சேகர், வெற்றிமாறன், கே.எஸ்.அதியமான், எழில், கதிர். தங்கர்பச்சான், கிருஷ்ண குமார், தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், சோழா பொன்னுரங்கம், புலவர் புலமைபித்தன், நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, சேரன், மணிவண்ணன், கஞ்சா கருப்பு, கவிஞர்கள் மேத்தா, சினேகன், வசனகர்த்தா பிரபாகர், நடிகைகள் ரோகினி, புவனேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், மூத்த வழக்கறிஞர் கருப்பன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழருவி மணியன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் மற்றும் திரையுலகினர், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில் இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா உரையாற்றினார். அப்போது, 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' சார்பில் இரண்டு தீர்மானங்களை அவர் வெளியிட்டார்.
தீர்மானம் 1 :
மத்தியில் உள்ள ஆளும் கட்சியினர் இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த உத்தரவிட்ட பின்னர், தமிழகத்தில் வந்து வாக்கு கேட்பது தான் நியாயமானது. எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது. அதையும் மீறிவந்தால் எங்களது முழு எதிர்ப்பை காட்டுவோம். அப்போது, அவர்களது நிழல் கூட துணையாக நிற்காது விலகி விடும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். எனவே, எங்களது உணர்வுகளை புரிந்துகொண்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உடனடியாக உத்தரவிட வேண்டும்.
தீர்மானம் 2 :
மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசின் தமிழகத் தலைவர் தங்கபாலு போட்டியிடும் சேலம் தொகுதியிலும், உயர் பதவியில் போதுமான அதிகாரத்தில் இருந்தும் எதுவும் செய்யாமல் மவுனம் காத்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதியிலும், தமிழனப் படுகொலையை நியாயப்படுத்தி வரும் மற்றொரு மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடும் ஈரோடு தொகுதியிலும் உள்ள பொதுமக்கள், தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விதமாக இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த தொகுதிகளில் தமிழ் திரையுலகின் இன உணர்வுள்ள அத்தனை கலைஞர்களும் தங்கள் சொந்த பொறுப்பில் மக்களை சந்தித்து, இந்த 3 பேருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்வார்கள். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Thursday, April 23, 2009
தேர்தல், தமிழீழம் - கலைஞர் கருணாநிதியின் உணர்வுமிக்க கவிதை
உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றும் வாடினோம்
செல்வா காலம் முதல் சிங்களர் ஆதிக்கம் வீழ்த்த பரணி பாடினோம்
சிறைச்சாலை, சிம்மாசனம் இழப்பு என்று சித்ரவதை கண்டு வாடினோம்
ஈழ விடுதலைப் போருக்கு இந்திரா காந்தியும் ராஜீவும் இணக்கம் தந்தனர்
இந்தியாவில் மலைமுகடு, வன வனாந்தரங்களில் பாசறை அமைத்து
இடையறாப் பயிற்சியும் வழங்கி ஈழ விடுதலைப் போராளிகளாக்கினர் அந்த
விடுதலைத் தளகர்த்தர்க்கிடையே விரிசல் விரிசல் என்று வேறுபட்டு நின்று;
ஆளுக்கொரு ஆயுதம் ஏந்தி அவர்களை அவர்களே அழித்துக் கொண்டனர்
பிரித்தாளும் சூழ்ச்சியிலே பிரிட்டிஷாரையும் வெல்லுகின்ற
சிங்களத்து வெறியர்களால் சீரழிந்து போனதய்யா
சிங்கத் தமிழினத்தின் ஒற்றுமை
அதனாலே அங்கும் சகோதர யுத்தம்
அவர்களை ஆதரிக்கும் இங்கும் அந்தோ; அதே யுத்தம்
இரு தரப்பிலும் இக்குற்றம் சுமத்தி
இனியும் நாம் சும்மா இருக்க இயலாமல்
இனத்தால் தமிழர் புல் பூண்டும் அறவே செதுக்கப்படாமல் காப்பதற்கே
இன்றோர் வேலை நிறுத்த அறப்போரில் ஈடுபட அனைவரையும் அழைத்தோம்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி போர் நிறுத்த தீர்மானமுடன்
இந்திய அரசின் அமைச்சரவையும் கூடி அதே கருத்தை அறிவித்தமை கண்டோம்
இன்னும் இன்னும் வேகமாக நம் குரலை உயர்த்தி நடுவணரசை
முன்னுக்குத் தள்ளி முடிப்போம் இலங்கைப் போரை என்றால்
இங்குள்ள சில பேர் தடையாக இருந்து இராவணனுக்கு தம்பியாக
இழிதகை விபீஷணன் பாத்திரம் ஏற்கலாமா? இந்தத்
துரோகிகளின் சேட்டையினால் தூய தமிழினம் தோற்கலாமா?
கபட நாடகமென்று கதைப்போர் ஒலியை நம் காதுகளில் ஏற்கலாமா?
அதனாலே
அன்றும் என்றும் இன உணர்வு மிகுந்த தமிழரெல்லாம்
ஒன்றாய்க் கூடுவோம்! வென்றே தீருவோம்.
கொள்ளிமலை குப்பு : தேர்தலிலா?
நன்றி: கலைஞர் கருணாநிதி
Saturday, April 18, 2009
காங்கிரஸ்காரர்களால் தங்கபாலு மருவாதி செய்யப்பட்டார் - படம்
ஈழமக்கள் நிலை, உண்ணாவிரதம் - மூன்று பெண்கள் கவலைக்கிடம்
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் பெண்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் இன்று 6வது நாளாக நீடித்துள்ளது. இதில் 3 பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும் அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினர் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்
அதன்படி கடந்த 13ந் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த அவர்கள் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துகுமார் உடல் வைக்கப்பட்டிருந்த கொளத்தூருக்கு சென்றனர். அங்கு 20 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
அங்கு உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி மறுத்தனர். அதைத் தொடர்ந்து ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் 15ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதற்கு ஆதரவு தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வருகின்றனர்.
போராட்டம் தொடங்கி நேற்றுடன் 4 நாட்கள் ஆகிவிட்டது. இதனால் உண்ணாவிரதம் இருந்து வரும் 20 பெண்களும் சோர்வாக காணப்பட்டனர். இதில் சென்னையை சேர்ந்த கவிதா(வயது 30) தேனியை சேர்ந்த சித்ரா(40) காஞ்சீபுரத்தை சேர்ந்த சசிகலா( 30) ஆகிய 3 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பட்டது. போராட்டம் தொடர்ந்து நீடிக்குமானால் பலரது நிலைமை மிகவும் மோசமாக வாய்ப்பு உள்ளது.
தமிழக, இந்திய அரசின் தொடர் மௌனமும், பயனற்ற பேச்சுகளும், அறிவிப்புகளும், பேரணிகளும், அறிக்கைகளும், தந்திகளும், வேண்டுகோளும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது.
இக்கெட்டான துயர நிலையில் இருக்கும் ஏறக்குறைய மூன்று லட்சம் தமிழர்களை, காப்பாற்றுவது யார்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது? இதற்கு பதில் சொல்லவேண்டிய நிலையில், இந்திய அரசில் பணியாற்றும் தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதை விட, காலம் கடந்து விட்டதால் இந்த தேர்தலில் அவர்கள் இருக்கும் கூட்டணி முற்றிலும் புறக்கணிக்கப் படவேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பமும் கூட.
நாற்பதுக்கு நாற்பதா? யார் ஜெயிப்பார்? - வேட்பாளர்கள்
1. ஆர்.எஸ்.பாரதி-(தி.மு.க.)
வெற்றி பெறுபவர் சமநிலை
வட மொழி - தமிழ் மொழி
பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்
அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்
அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது
அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை
அகந்தை - இறுமாப்பு,செருக்கு
அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்
அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு
அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்
அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை
அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை
அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்
அக்கணம் - அப்பொழுது,அந்நொடி
அக்கரம் - எழுத்து
அட்சரம் - அழிவில்லாதது
அக்கியாணி - அறிவிலான்
அஞ்ஞானி - புல்லறிவாளன்
அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி
அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு
அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை
அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி
அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்
அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு
அங்குலம் - விறக்கட்டை,விரலளவு
அசத்தை,அசத்தியம் - பொய்
அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்
அசரீரி - வானொலி,உருவற்றது
அசித்து - பயனின்மை
அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை
அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை
அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்
அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்
அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்
அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்
அஞ்சிட்டம் - கதிரவன்
அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது
அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்
அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது
அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்
அட்டபந்தனம் - எண்புறக்கட்டு
அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்
அதமம் - கீழ்மை,கடைத்திரம்
அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்
அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்
அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்
அதிகாலம் - விடியற்காலம்
அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை
அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்
அநந்தகோடி - எண்ணத்தொலையாதன
அநந்தம் - அளவின்மை,முடிவில்லது
அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்
அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை
அநீதி - முறைகேடு
அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்
அநுசரணை - சார்பு,சார்பு நிலை
அநுசிதம் - பொய்,தகாதது
அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி
அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை
அனுமானப் புரமானம் - கருதலளவை
அநேகர் - பலர்
அந்தகன் - அழிப்போன்,குருடன்
அந்தகாரம் - இருள்,அறியாமை
அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்
அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை
அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்
அந்தி - முடிவு,மாலைக்காலம்
அந்திய கிரியை - இறுதிச் சடங்கு
அந்நியர் - பிறர்,அயலார்
அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்
அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்
அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு
அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு
அபிதானம் - பெயர்
அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்
அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு
அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு
அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்
அபேச்சை -அவா,விருப்பம்
அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை
அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி
அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று
அமரத்துவம் - அழிவின்மை
அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்
அந்நியர் - பிறர்,அயலார்
அதிகம் - மிகுதி,அளவின்மை
அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை
அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்
அம்பாரம் - குவியல்
அயோக்கியம் - தகுதியினமை,தகாதது
அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்
அரணியம் - காடு
அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு
அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி
அருவம் - உருவின்மை,அழகின்மை
அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு
அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்
அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு
அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை
அவகீர்த்தி - இழிவு,புகழின்மை
அவக்கியாதி - வசை,இகழ்ச்சி
அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு
அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை
அவதரித்தல் - பிறத்தல்
அவதாரம் - பிறப்பு,இறங்குகை
அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை
அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை
அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை
அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு
அவயவம்,அவையவம் - உறுப்பு
அவலன் - உடற்குறையன்,வீணன்
அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,
அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு
அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்
அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை
அனுதாபம் - இரக்கம்
அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு
அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை
அனேகம் - பல,எல்லாம்
அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை
அன்னம் - சோறு,உணவு,அடிசில்
அன்னியன் - பிறர்,அயலார்
அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்
ஆகம் -உடல்,மார்பு
ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி
ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்
ஆகாய விமானம் - வான ஊர்தி
ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு
ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்
ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்
ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி
ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு
ஆச சங்கை -ஐயம்
ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா
ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு
ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு
ஆசீர்வாதம் - வாழ்த்துரை
ஆசுவாசம் - இளைப்பாறுகை
ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு
ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது
ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்
ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை
ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை
ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்
ஆஞ்ஞை -ஆணை,கட்டளை
ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு
ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு
ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்
அந்நியர் - பிறர்,அயலார்
ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்
ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு
ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்
ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு
ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்
ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு
ஆத்துமா,ஆன்மா - உயிர்
ஆந்ந்தம் - இன்பம்
ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்
ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்
ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி
அபூர்வம் - வினைப்பயன்
ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்
ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு
ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு
ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்
ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்
ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு
ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்
ஆரணியம்,ஆரண்ணியம் - காடு
ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்
ஆரம்பம் - தொடக்கம்
ஆரம்பித்தல் - தொடங்கல்
ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்
ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்
ஆரோக்கியம் - நலம்,நோயின்மை
ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்
ஆரோபித்தல் - ஏற்றுதல்
ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்
ஆர்மோனியம் - இசைக்கருவி
ஆர்வம் - அன்பு,விருப்பம்
ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்
ஆலகம்- நெல்லிமரம்
ஆலம் - நஞ்சு
ஆலயம் - கோயில்
ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்
ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி
ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை
ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு
ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்
ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்
ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு
ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்
ஆன்மா - உயிர்
இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு
இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்
இச்சகம் - முகமன்
இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை
இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை
இட்டசித்தி - விருப்பப்பேறு
இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்
இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்
இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை
இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை
இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்
இந்து - நிலா,திங்கள்,அம்புலி
இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை
இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்
இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை
இரசாயனம் - பொருளியைபு
இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு
இரட்சை - காப்பு
இரணம்,ரணம் - புண்
இரதம்,ரதம் - தேர்
இரத்தம் - குருதி,செந்நீர்
இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி
இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்
இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு
இராகு - கருங்கோள்
இராக்கதர் - அரக்கர்
இராசசூயம் - அரசர் வேள்வி
இராசா - அரையன்,மன்னன்,அரசன்
இராச்சியம் - நாடு,அரசியல்
இராத்திரி - இரவு,கங்குல்
இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி
இதய கமலம் - நெஞ்சத்தாமரை
இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு
இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்
இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்
இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்
இலங்கணம் - பட்டினி
இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை
இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை
இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்
இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு
இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை
இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு
இலீலை,லீலை - விளையாட்டு
யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு
உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை
உஷ்ணம் - வெப்பம்,சூடு
உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு
உசிதன் - தக்கோன்
உச்சம் - உயர்ச்சி,சிறப்பு
உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்
உச்சரிப்பு - எழுத்தோசை
உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்
உச்சி - மேடு,முகடு
உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்
உதயன் - பகலோன்
உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று
உத்தமம் - உண்மை,மேன்மை
உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை
உத்தரவு - கட்டளை
உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்
உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய
உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்
உபதேசம் - அருண்மொழி,அறிவுரை
உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு
உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்
உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்
உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்
உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது
உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி
உருசி,ருசி - சுவை
உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி
உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்
உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு
உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி
உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு
உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்
ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு
ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு
எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி
எந்திரம் - பொறி
எமன் - கூற்றுவன்,மறலி
ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை
ஏகம் - ஒன்று,தனிமை
ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு
ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்
ஏடணை,ஏஷணை - விருப்பம்
ஐது,ஹேது - காரணம்
ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை
ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு
ஐதீகம்,ஐதிகம் - உலகுரை
ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்
ஓமம்,ஹோமம் - வேள்வி
ஒளடதம்,ஒளஷதம்- மருந்து
களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்
கடகம் - கைவளை,வளையம்
கடம் - கடம்,யானைக்கதுப்பு
கடாட்சித்தல் - அருளல்
கடாரம் - கொப்பரை,தேங்காய்
கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி
கடிகை - நாழிகை,தாழ்க்கோல்
கடினசித்தம் - வன்னெஞ்சம்
கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை
கடூரம்,கொடூரம் - கொடுமை
கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்
கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது
கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்
கணிகை - பொதுமகள்
கணிசம் - அளவு,மேம்பாடு
கணிதம் - கணக்கு
கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து
கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு
கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது
கதலி - வாழை
கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை
கனகம்,கநகம் - பொன்
கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை
கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை
கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்
கந்மம்,கருமம் - தொழில்,வினை
கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு
கபாலம் - தலையோடு,மண்டையோடு
கபோதி - குருடன்
கப்பம் - இறை
கமண்டலம் - நீர்க்குடுவை
கமலம் - தாமரை,நீர்
கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு
கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை
கரகம் - வட்டில்,நீர்க்குடுவை
கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்
கரணம் - கருவி,ஐம்பொறி
கரம் - கை
கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்
கருணை - அருள்,இரக்கம்
கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்
கர்ப்பவதி - சூலி
கர்ப்பாசயம் - கருப்பை
கர்வம் - செருக்கு,இறுமாப்பு
கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை
கலி - வறுமை,துன்பம்
கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி
கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்
கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்
கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்
கவி - செய்யுள்,புலவன்,பாட்டு
கவுளி,கெளளி - பல்லி
களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்
கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து
கனம் - சுமை,பளு,பளுவு
காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்
கசாயம்,கஷாயம் - காவி
காஞ்சிரம் - எட்டி மரம்
காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி
காதகன் - கொலையாளி
காயசித்தி - நீடுவாழ்ப் பேறு
காயம் - உடல்,யாக்கை,வான்
காரிய கர்த்தா - வினைமுதல்வன்
காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்
கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை
கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு
கிஸ்தி - திறை,வரி
கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்
கிரகஸ்தம் - இல்லற நிலை
கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு
கிரணம் - ஒளி,கதிர்
கிரந்தம் - நூல்,எழுத்து
கிரமம் - ஒழுங்கு,முறைமை
கிரயம் - விலை
கிராதன் - குறவன்,வேட்டுவன்
கிரி - மலை,பன்றி
கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு
கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு
கிரீடம் - முடி
கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை
கிலம் - கழிவு,அழிவு,சிறுமை
கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்
கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு
கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா
கீலகம் - ஆணி,பொருத்து
குஞ்சரம் - யானை
குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்
குணஷ்டை - தொல்லை,துன்பம்
குதர்க்கம் - அழிவழக்கு
குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு
குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்
குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்
கும்பம் - குடம்
குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை
குரோதம் - உட்பகை
குலாலன் - குயவன்
குலிசம் - வேற்படை
குன்மம் - சூலை,வயிற்று வலி
கேதம் - துன்பம்,இடர்,குற்றம்
கேவலம் - சிறுமை,தனிமை
கோகிலம் - குயில்
கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை
கோஷ்டி - கூட்டம்
கோடி - நூறு நூறாயிரம்
கோதண்டம் - வில்
கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்
கெளரவம் - மேன்மை,பெருமை
சக - கூட,உடன்
சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை
சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்
சகமார்க்கம் - தோழமை நெறி
சகலம் - எல்லாம்
சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு
சகா - தோழன்,துணை
சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு
சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை
சகி,சகீ - தோழி
சகிதம் - உடன்
சகுணம் - குணத்தோடு கூடியது
சகுந்தம் - கழுகு,பறவை
சகுனம் - குறி
சகோதரம் - உடன்பிறப்பு
சகோதரி - உடன்பிறந்தாள்
சக்கரம் - உருளை,வட்டம்
சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி
சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்
சங்கிதை - தொகுதி,வரலாறு
சடுதி,சடிதி - விரைவு
சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு
சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு
சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று
சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு
சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்
சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை
சதகோடி - நூறு கோடி
சதசு - அவை
சதம் - நூறு நிலை
சதானந்தம் - இடையறா வின்பம்
சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி
சந்தகம் - எப்பொழுதும்
சந்தானம் - வழி,வழித்தொடர்பு
சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்
சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்
சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்
சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து
சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்தேகம் - ஐயம்,ஐயுறவு
சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு
சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்
சந்நியாசம் - துறவு,துறவறம்
சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்
சபம்,ஜெபம் - உருவேற்றல்
சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா
சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்
சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்
சமஷ்டி - தொகுதி,எல்லாம்
சமதை - ஒப்பு
சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்
சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்
சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை
சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை
சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை
சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்
சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை
சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்
சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது
சமாராதனை - உளநிறைவு
சமி,ஷமி - பொறு
சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி
சமீபம் - அருகு,அணமை,மருங்கு
சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்
சமுதாயம் - குமுகம்,கூட்டம்
சமுத்திரம் - கடல்
சமை,ஷமை - பொறுமை
சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி
சம்பத்து - செல்வம்,பொருள்
சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்
சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை
சம்பு ரேட்சணம் - தெளித்தல்
சம்பூரணம் - நிறைவு
சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு
சம்ரஷணை - பாதுகாப்பு
சயம்,ஜெயம் - வெற்றி
சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி
சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்
சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்
சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்,யாக்கை,மெய்
சருமம்,சர்மம் - தோல்
சர்ப்பம் - பாம்பு
சர்வகலாசாலை -
பல்கழைக் கழகம்சலதளம்- அரசமரம்
சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு
சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை
சல்லாபம் - உரையாடல்
சவம் - பிணம்
சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்
சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு
செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்
சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை
சற்குணம் - நல்லியல்பு
சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு
சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை
சாகரம் - கடல்
சாகுபடி - பயிர் செய்தல்
சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்
சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை